COD - பாகம் 4 கேள்விகளும் பதில்களும் Jeffersonville, Indiana, USA 62-0527 COD-16 1மாலை வணக்கம், நண்பர்களே, இன்றிரவில் இங்கிருப்பது அருமையானதாகும். ஆகவே நான்... இந்த விதமான இவை யெல்லாம் ஏன் என் மீது விழுந்ததென்றால், ஏனெனில் நான்... இக்காலை என் சகோதரனைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந் தேன், ஒரு நாளில் இரண்டு ஆராதனைகள் எடுப்பது எப்படிப்பட்ட ஒன்று என்பதையும் நானறிவேன். என்னுடைய தொண்டையில் சிறு “கரகரப்பு இருந்தது. நான் நிறைய பிரசங்கிக்கின்றேன். நான் நகரத்துக்குள்ளாக, இந்த பள்ளத்தாக்கில், வந்த உடனேயே, இங்கே என்னுடைய மேல் வாயில் ஒரு விதமான... அதுதான், அவர்கள் அதை... இங்கே இந்த பள்ளத்தாக்கில் உள்ள இந்த தட்பவெப்ப நிலையானது என் தொண்டையை மிக மோசமாக வீங்கி இருக்கும்படிக்குச் செய்து விடுகிறது. இதனால் நான் இந்த பள்ளத்தாகில் இருக்கும் வரைக்கும் விழுங்கிக் கொண்டே இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு நான் சென்று விட்டால் அது மறைந்து விடுகின்றது. திரும்பி வந்தால், அது மறுபடியுமாக வந்து விடுகிறது. 2சகோதரன் நெவிலுக்காக ஒருவித கனிவான உணர்ச்சியைக் கொண்டவனாக உள்ளேன், இங்கே இருக்கின்ற வாலிப பையன் களாகிய உங்களில் சிலரைக் காட்டிலும் நாங்கள் சற்று குறை வான தூரம்தான் பாதையில் செல்லப்போகிறோம் என்பதை அறிந்தவர்களாக உள்ளோம், ஆகவே நாங்கள் மற்றொரு வித மாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே இன்னும் அதிக மாக நாட்கள் வரத்துவங்குகையில், தீய நாட்களும் சமீபமாய் வருகையில் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒருவிதமான உணர்வைக் கொண்டவர்களாக இருக்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால், சரியாக இப்பொழுது நாங்கள் கடந்து செல்லப் போகிறோம் என்பதை அறிந்தவர்களாக இருக்கிறோம். அடுத்த ஞாயிறு இரவு சகோதரன் போசே இங்கு இருக்கப்போகின்றார் என்று நம்புகிறேன், உங்களுக்கு தெரியும் என்று நான் எண்ணினேன். நான்... உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? ஆம், அடுத்த ஞாயிற்றுக்கிழமை மாலை. அவர் தன்னுடைய அயல்நாட்டு ஊழியங்களைக் குறித்து வைத்துள்ள ஒரு படக்காட்சியை காண்பிக்க அவர் விரும்புகிறார்... சிக்கா கோவிற்கு வருவதைக் குறித்து அநேக ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ஒரு - ஒரு சொப்பனம் உண்டானது. பாவம், அந்த சிறு நபர் ஒரு முறை மிகவும் அமைதி குலைந்தது போல உணர்ந்தார், அவருடைய செய்தி நிறைவேறவில்லை எனக் கூறினார். அப்பொழுது நான், கர்த்தர் அதை ஏற்கெனவே நிறைவேற்றி விட்டார் என்று அவருக்கு விளக்கினேன். அப்பொழுது அவர் அதைப் புரிந்து கொண்டார். 3அப்பொழுது கர்த்தர் அவருக்கு வேறொரு சொப்பனத்தை அளித்தார். அப்பொழுது அவருக்கு வியாக்கியானம் வந்த போது, அவர் என்ன செய்ய வேண்டும் என்றும், எங்கு செல்ல வேண்டும் என்றும் அவருக்குக் கூறினேன். அப்பொழுது அவர் அங்கே சென்றார், என்னே, ஓ, என்னே, கென்யா, டாங்கான்ஷிகா மற்றும் உகாண்டா மற்றும் அங்கே உள்ள அந்த தேசங்கள் - அந்த ஊழியங்களில் தேவன் அவர்களுக்கு செய்தது மிகவும் அற்புத மான ஒன்றாகும். அங்கு இருக்கின்ற அந்த ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் மத்தியில் கர்த்தர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பதை காண்பிக்க, அந்த படக்காட்சியை அவர் காண்பிக்க விரும்புகிறார். கர்த்தருக்கு சித்தமானால், ஜனவரி மாதத்தில், நான் அங்கே சென்று அவரோடு இணைந்து கொள்ள விரும்புகிறேன்... அங்கே நான் மறுபடியுமாக ரோடேஷியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்குள் செல்லும் முன்னதாக அந்த பழங்குடியினர் மத்தியில் ஒரு கூட்டம் நடத்துவதற்காக... 4ஆகவே, நினைவில் கொள்ளுங்கள், இந்த வருகின்ற ஞாயிற்றுக்கிழமை. சகோதரன் ஜோசப்புகாக ஊக்கமாக ஜெபி யுங்கள், அவர் ஒரு அருமையான சகோதரனாவார். அவருடைய ஐக்கியம் மற்றும் இன்னும் பிற காரியங்களைக் குறித்து நான் அவரை அதிகமாகப் பாராட்டினேன். அடுத்ததாக, வருகின்ற இந்த வாரம் நாங்கள் புறப்படு கிறோம்... சதர்ன் பைன்ஸ், பிறகு தெற்கு கரோலினாவிலுள்ள கொலம்பியாவிற்கு செல்கிறோம்; பிறகு அங்கிருந்து மேற்கு கடற்கரை, கெள பேலஸ் செல்கிறோம், பிறகு கிராஸ் பள்ளத் தாக்கிற்கு செல்கிறோம்; அங்கிருந்து பிறகு வோர்ல்ட் ஃபேர் சென்று திரும்பி மறுபடியும் ஓரிகானுக்கு வருகிறோம்; பிறகு பிரிட்டிஷ் கொலம்பியாவிற்குச் சென்று இன்னும் பல இடத்திற்குச் செல்கிறோம். கர்த்தருக்குச் சித்தமானால், கர்த்தர் ஏற்பாடு செய்வாரானால், வருகின்ற கோடை காலத்தில் இங்கு கூட்டங்களை நடத்தலாம் என்று நாங்கள் நம்புகிறோம். 5நான் திரும்பிச் செல்லும் முன்னர் சில கேள்விகள் கேட்டால் நல்ல ஒரு காரியமாக இருக்கும் என்று நினைத்தேன். நீங்கள் கேள்விகள் கேட்கும்போது ஜனங்களின் இருதயங்களில் என்ன இருக்கிறது என்பதை கண்டு கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே அங்குள்ள இந்த சிறு மந்தையுடன் இருதயத்தோடு இருதய ஆலோசனையை, நம்முடைய மனதைத் திறந்து பேச, உங்களுடன் நான் இன்றிரவு பேசலாம் என்று எண்ணினேன். சில சமயங்களில் ஒரு பிரசங்கத்தை பிரசங்கம் செய்வதைக் காட்டிலும் இந்த விதமான ஒன்று- ஒருவரை யொருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுதல் போன்ற ஒன்று அதிக நன்மை பயக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த வாரம், ஜெபத்திற்கு அவர் பதிலளித்ததை நாம் கண்டதற்காக நாங்கள் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கி றோம், அது மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கடைசி காலம் மற்றும் நேரம் வந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் கண்டு, ஏதோ ஒன்று சம்பவிக்க இருக்கின்றது என்பதை அறிந்தவர்களாக இருக்கிறோம். ஒருவன் சிந்தனைவாதி யாக இருந்தாலொழிய, உண்மை என்பதை அறிய ஒருவனும் இல்லை. நாம் அறிந்துள்ளபடி, காலங்களினூடாக அதை நாம் நோக்கி பார்க்கிறோம், ஒவ்வொருவரும் அதை கவனித்துள்ளனர். ஆனால், இப்பொழுது மிக அதிகமான காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். அது சரி என்பதை நாம் அறிவோம், அது தொலைவில் இருக்க முடியாது. ஆகவே, இப்பொழுது இன்னும் சிறிது நேரத்தில் அதைக் குறித்து சிலவற்றை நான் ஒருக்கால் பேசலாம். 6ஆனால் இப்பொழுது நாம் அதைத் துவங்குவதற்காக, ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை நாம் சற்று தாழ்த்துவோமாக. நம்முடைய தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கையில், தேவனுக்கு முன்பாக நாம் ஜெபத்தில் நினைவுகூறப்பட விரும்பி நம்முடைய இருதயங்களில் ஏதோ ஒன்று இருக்குமா என்று நான் ஆச்சரிய முறுகிறேன். அப்படி இருக்குமானால் உங்கள் கையை மாத்திரம் உயர்த்துங்கள். அவர் புரிந்துகொள்வார். அதைக் குறித்த எல்லா வற்றையும் அவர் அறிந்திருக்கிறார். ''தேவனே, என்னை நினவு கூறும்'' என்று நீங்கள் கூற விரும்புகிற சில விண்ணப்பம் மாத்திரமே. கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப் பாராக. 7எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கும், அவருடைய கிருபைக்கும் முன்பாக தைரிய மாக வந்து எங்களுக்கு தேவையாயுள்ள எந்த ஒரு விண்ணப் பத்தையும் கேட்க நீர் தாமே கிருபை கூர்ந்து எங்களை கட்டளை யிட்டிருக்கின்றீர். அந்த கிருபாசனத்தை அணுகிக்கொண்டிருக் கிறவர்களாக இன்றிரவு நாங்கள் வருகிறோம். நாங்கள் இரண்டு பேராவது மூன்று பேராவது உம்முடைய நாமத்தினாலே ஒன்று சேர்ந்து கூடியிருக்கையில், எங்கள் நடுவிலே நீர் இருக்கின்றீர் என்று நீர் எங்களுக்கு கூறியுள்ளீர். ஆகவே நாங்கள் விரும்பு கிறவைகளை கேட்டு, அதை நாங்கள் பெற்றுக் கொள்வோம் - நாங்கள் அதைப் பெற்றுக் கொள்வோம் என்று நாங்கள் விசுவாசித்தால் மாத்திரமே அதை நாங்கள் பெற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இந்நாளின் நிலைமைகளையும், சபை மற்றும் மக்களின் நிலைமைகளையும், உம் முன்பு இருக்கின்ற எங்கள் விண்ணப்பங் களையும் நீர் அறிந்திருக்கிறீர். இப்பொழுது, கர்த்தாவே, நீர் தாமே கரங்களை கண்டீர். மக்களின் இருதயங்களையும், அவர்களுடைய விருப்பங்களையும், அவர்களுடைய தேவைகளையும் நீர் அறிந்திருக்கிறீர். அந்த நேரமானது கிட்டே நெருங்குகிறதென்று நாங்கள் காண்கிறோம், அது இப்பொழுது மிக அருகாமையில் ஒன்று சேர்ந்துக் கொண்டிருக்கிறது, அந்த மகத்தான மேகங்கள் நிலைகொள்கின்றன. அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீர்க்க தரிசிகள் உரைத்த காரியங்கள், இக்காலம் வரை அது சம்பவிக்க வில்லை என்று நாங்கள் பார்க்கிறோம், ஆனால் அது சரியாக எங்கள் நாட்களில் இங்கே நிறைவேறுவதை நாங்கள் காண்கிறோம். 8பிதாவே நாங்கள் கேட்கின்ற இந்த ஆசீர்வாதங்களை நீர் தாமே எங்களுக்கு அருள வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். வியாதியஸ்தரையும் உபத்திரவப்படுகிறவர்களையும் சுகப்படுத்தும். பரிசுத்த ஆவியின் ஜீவிக்கின்ற வல்லமையையும், நாங்கள் எதைக் கேட்கிறோமோ அதை விசுவாசிக்கின்ற ஜீவிக்கின்ற விசுவாசத் தை உம்முடைய சபைக்கு திரும்ப அளியும் கர்த்தாவே. அதைப் பெற்றுக்கொள்வோம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஏனெனில் நாங்கள் கேட்கிறதற்கு முன்னரே எங்களுக்கு அது கொடுக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய சித்தமா யுள்ளது என்று நாங்கள் விசுவாசிக்கின்றோம். நாங்கள் தவறாகக் கேட்கவில்லை, தேவனுடைய ராஜ்யத்தின் நிமித்தம் நாங்கள் கேட்கிறோம், நீர் தாமே அதை எங்களுக்கு அருளுவீர் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் கூடிவருதலையும், எங்கள் மேய்ப்பரையும், சபையின் வேலையை செய்பவர்களையும், ஒவ்வொரு நபரையும், இப்பொழுது இங்கிருக்கின்ற கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத் தினர்களையும் ஆசீர்வதியும். கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத் தினர்களாக இல்லாமல், இன்று வேறெங்காகிலும் பாதுகாப் பிடத்திற்காக நோக்கிக் கொண்டு, வீட்டின் பின்புறத்தில் குண்டு வெடிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு இடத்தை வாங்குகிற வர்களாக இருப்பார்களாயின், தேவனே, அவர்கள் தாமே, இந்த வாழ்க்கையானது முடிவுறும் போது இதற்கு அப்பால் ஒரு வாழ்க்கை உள்ளதென்று அறிந்து, கர்த்தராகிய இயேசுவின் பாது காக்கும் புகலிடத்துக்கு வருவார்களாக. அந்த வாக்குத்தத்தத் திற்காக உமக்கு நன்றி. இன்றிரவு இந்த கேள்விகளுக்கான பதிலை எங்களுக்குத் தாரும், அதினாலே நாங்கள் உம்முடைய வார்த்தையைக் கொண்டு ஒவ்வொரு இருதயத்தையும் நாங்கள் திருப்தி செய்ய ஏதுவாயிருக்கும். இயேசுவின் நாமத்தில் இதை நாங்கள் கேட்கிறோம். ஆமென். 9கர்த்தருடைய வருகையின் நேரமானது அணுகிக் கொண்டிருப்பது, அது என்ன மகத்தான ஒரு நம்பிக்கை! சற்று நேரத்திற்கு முன்னர் நான் பேசிக்கொண்டிருந்தேன், யாரோ ஒருவர் ஆயுள் காப்பீடு (Insurance) செய்தல் ஒன்றைக் கூறிக்கொண்டிருந்தார், நான் சிறிது காலத்துக்கு முன்னர் வணிகர்கள் ஐக்கியத்தினரின் கன்வென்ஷன் கூட்டங்கள் ஒன்றில், சர்வதேச கன்வென்ஷன் கூட்டத்தில் கலந்து கொண்டேன். நான் ஒரு பிராந்திய கூட்டத்தில் மாத்திரம் இருந்தேன். உலகெங்கிலும் உள்ள முழு சுவிசேஷ வணிகர்கள் ஐக்கியத்தின் கூட்டங்களில் நான் பேசுவேன். இந்த கன்வென்ஷன் கூட்டமானது மேற்கு கடற்கரை பிரதேசத்தில் நடந்தபடியால், அங்கே உலக முழுவதிலும் மிருந்து புகழ்வாய்ந்தவர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். மிக நேர்த்தியாக உடையுடுத்தி மிகவும் மதிப்பு வாய்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து ''யாரோ ஒருவர் உங்களை 'சங்கை ரெவரெண்ட்' என்று அழைத்ததை நான் கேட் டேன்“ என்று கூறினார். நான் “ஆம், ஐயா'' என்று கூறினேன் 'நீர் ஒரு பிரசங்கியா?'' என்று கேட்டார். நான் ”ஆம், ஐயா'' என்றேன். 'இந்த வியாபரம் செய்வர்களிடம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். ''நானும் கூட ஒரு வியாபாரிதான்“ என்றேன். 'ஓ? எந்த விதமான வியாபாரத்தில் நீர் ஈடுபட்டிருக் கின்றீர்?'' என்றார். நான் “நம்பிக்கை (Assurance)'' என்றேன். அவர் என்னை தவறாகப் புரிந்து கொண்டார், நான் ஆயுள் காப்பீட்டைக் (Insurance) குறித்து கூறினேன் என்று நினைத்துக் கொண்டார். ஆகவே அவர் என்னிடம், ''நீங்கள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்?'' என்று கேட்டார். நான், “பரலோக நிறுவனம்'' என்று கூறினேன். ''அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் உள்ளதென்று எனக்கு தெரிந்திருக்குமா என்று எனக்கு நம்பிக்கை இல்லை'' என்றார். நான் கூறினேன்- ''எந்த - எந்த விதமான காப்பீட்டை (Insurance) நீங்கள் விற்பனை செய்கிறீர்கள்?'' ''நான் ஒருக்காலும்... நான் காப்பீடு (Insurance, இன்சூரன்ஸ்) என்று கூறவில்லை, நான் 'நம்பிக்கை ' (Assurance,) என்று தான் கூறினேன்“ அவர் “என்ன கூற விழைகிறீர்கள்?'' என்று கேட்டார். நான் கூறினேன். இயேசு என்னுடையவர், அது ஆசிமிக்கும் உறுதியாகும் ஓ, தெய்வீக மகிமையின் என்னே ஒரு முன்ருசி அது இரட்சிப்பின் வாரிசு, தேவன் கிரயத்திற்குக் கொண்டதால் அவர்தம் ஆவியால் பிறந்தேன், இரத்தத்தால் கழுவப்பட்டேன். அந்த இரவு, நான் வானொலி நிகழ்ச்சிக்காக அறிமுகப் படுத்தப்பட்ட போது, நான் அந்த நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினேன், ''இப்பொழுது, இங்கே இருக்கின்ற அல்லது தேசம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு ஒரு காப்பீட்டு பத்திரம் (Policy) தேவைப்படுமானால், என்னிடம் காப்பீட்டு பத்திரங்கள் இருக் கின்றன, ஆராதனை முடிந்தவுடன் நான் உங்களிடம் அதைக் குறித்துப் பேசுவேன். நம்பிக்கை, ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை (Blessed Assurance)'' என்று கூறினேன். 10இப்பொழுது, இந்த கேள்விகள் கேட்கப்படுகையில், இது தாமே உங்களுடைய சிந்தையை நான் கண்டுகொள்ள ஒரு சிறு அணுகுமுறையை எனக்கு அளிக்கும் என்று நான் நினைத்தேன். என்னிடம் இரண்டு கேள்விகள் உள்ளன. நான் கதவிற்குள் வருகையில் இன்னும் அநேகம் இருப்பதாக பில்லி கூறினான், ஆனால் அதைப் பார்க்க எனக்கு தருணம் கிடைக்கவில்லை. அதற்கு பதலிளிக்கும் முன்னர் நான் வேதப்பூர்வமாக சரியாக பதிலளிக் கிறேனா என்று நிச்சயம் கொள்ள விரும்புகிறேன், ஏனெனில் நீங்கள்... அதற்கு பதில் கொடுக்கும் முன்னர், அந்த விதமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகவே ஒருக்கால் சிலவற்றை பதிலளிக்காமல் மற்றொரு சமயத்திற் கென்று நான் எடுத்து வைத்துவிடுவேன். இப்பொழுது ஒன்றில்.... நினைவில் கொள்ளுங்கள், இந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக் கையில் என்னால் முடிந்த வரையில் அதற்கு பதலளிக்கச் செய்கிறேன். ஆராதனைகளில் நான் கேள்விகளுக்கு பதிலளிப்பது கிடை யாது. ஒரு சமயம் அவ்வாறு நான் முயற்சி செய்து தொல்லையில் அகப்பட்டுக் கொண்டேன். அவர்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டனர். அது திரு. ஆலனைக் குறித்த ஒன்று அல்லது கரங்களில் மற்றும் முகத்தில் இரத்தம் மற்றும் எண்ணை காணப்படுவது, பரிசுத்த ஆவிக்கான அடையாளம் என்பதைக் குறித்த ஒன்று. நான், “நல்லது, அதைக் குறித்து எனக்குத் தெரியாது. அதைக் குறித்த ஒன்றையும் வேதாகமத்தில் நான் கண்டதில்லை'' என்றேன். மேலும் ''ஆனால் நான் நம்புவது என்னால்... இவ்விதமாக பிரசங்கம் செய்ய முடியும், சகோதரனே, நான் உணர்ச்சிவசங்களின் பேரிலே சார்ந்திருக்க மாட்டேன். நான் சுவிசேஷத்தை மாத்திரம் பிரசங்கிக்கிறேன்” என்று கூறிக் கொண்டிருந்தேன். 11''அருமை சகோதரன் பிரன்ஹாம்...'' என்று சர்வதேச அளவில் அவர்கள் கடிதம் அனுப்பிவிட்டனர். ஆகவே அது எல்லா இடங்களுக்கும் சென்றது. அவர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டனர். ஆகவே நாங்கள் அவர்களுக்கு அந்த ஒலி நாடாக்களை அனுப்பினோம், அவர்கள் தாமே அதைப் போட்டுக் கேட்டு நான்... அவர்கள், ''அந்த மனிதனை நான் கடிந்த கொண்டேன்'' என்று கூறியிருந்தனர். நான்- நான் அவ்வாறு செய்யவில்லை. நான் எந்த ஒரு சகோதரனையும் கடிந்து கொண்டது கிடையாது. சிலசமயங்களில் நான் அவர்களுடன் ஒத்துப் போகாமல் இருக்க முடியும், ஆனாலும் அது நட்பின் அடிப் படையில் தான் இருக்கும். மேலும் சிறிது காலத்துக்கு முன்னர் இந்த மனிதனைக் குறித்து ஒரு மனிதன் பிசாசுகளை கடித்தல் என்று ஒரு புத்தகத்தை எழுதினார். அப்பொழுது இது ஒருக்கால் கவனிக்க வேண்டிய அல்லது அவர் அறிந்து கொள்ள வேண்டிய நேரமாக இது இருக்கலாம் என்று நான் எண்ணினேன். அந்த புத்தகத்தை எழுதின அந்த மனிதன் என்னைத் தவிர களத்தில் இருந்த ஒவ்வொரு சுவிசேஷகனையும் குற்றங்கண்டு கண்டித்திருந்தார், அவர் என்னுடைய கூட்டத்தில் உட்கார்ந்திருந்தார், ஆகவே நான், ''அந்த குற்றங்கண்டுபிடிப்பை ... நான் பாராட்டுவது கிடையாது, ஆனால்...' என்றேன். அந்த சகோதரன் கிறிஸ்டியன் டைஜஸ்ட் பத்திரிக்கையில் வெளிப்படையாக அதைப் பாராட்டினார். நான் ஒருவன்தான் காணிக்கை எடுப்பதில்லை மற்றும் மக்களிடம் பணத்திற்காக கெஞ்சுவதில்லை என்றும் மற்றவைகளையும் அவர் கூறியிருந்தார், அவர் அதை பாராட்டியிருந்தார். ஆகவே அந்த மனிதன் அங்கே உட்கார்ந்திருந்தார். சகோதரன் ஆலனைக் குறித்து அந்த மனிதன் கூறியிருந்த ஒன்று சரியானதல்ல என்பதை நான் தற்செயலாக அறிந்து கொண்டேன். அவர், ''ஏ.ஏ. ஆலன் பிசாசுகளை கடித்தல் என்ற இந்த புத்தகத்தை எழுதினார்'' என்று கூறினார். இப்பொழுது, ஏ.ஏ. ஆலன் அந்த புத்தகத்தை எழுதவில்லை. அந்த புத்தகத்தின் எழுத்தாளனை நான் அறிவேன். நான் கூறினேன், ''இப்பொழுது, இந்த புத்தகத்தை எழுதின அந்த மனிதன், சகோதரன் ஆலனை விமர்சனம் செய்வதற்கு முன்னர், அந்த புத்தகத்தை எழுதியது யார் என்பதை அறிந்து கொள்ள உத்தமமாக முயற்சிக்காததால், அவருடைய மற்ற விமர்சனங்கள் இந்த சகோதரருக்கு பொருந்தாது.'' பாருங்கள்? எனக்காக பேசின அந்த மனிதன் சரியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். நீங்கள் பாருங்கள், பிசாசுகளை கடித்தல் என்ற புத்தகத்தை சகோதரன் ஆலன் எழுதினார் என்பது அவருடைய கருத்து தவறான ஒன்று என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவ்விதம் கூறினேன். 12இப்பொழுது இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது, என்னால் முடிந்த வரைக்கும் சிறந்த விதத்தில் செய்வேன். மேலும்... நான் அவைகளுக்கு வேத வசனங்களைக் கொண்டே பதிலளிக்க முயற்சிப்பேன். இப்பொழுது முதலாவது கேள்வி 1 கொரிந்தியர் 7ஆம் அதிகாரம் 15 ஆம் வசனத்தில் காணப்படுகிறதென்று நான் நம்புகிறேன். ஆகவே நாம் அந்த வேத வசனத்திற்குச் சென்று, அது எந்தவிதமாக உள்ளதென்றும், மற்றும் இந்த கேள்வியைக் கேட்கின்ற இந்த விலையேறபெற்ற நபருக்கு நம்மால் உதவ முடியுமா என்றும் நாம் பார்க்கலாம். இப்பொழுது, 1கொரிந்தியர், 7ஆம் அதிகாரம், 15 வது வசனம். அந்த நபர் இப்பொழுது இங்கிருக்கின்றார் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது இந்த விதமாகத்தான் இது காணப்படுகின்றது: ஆகிலும் விவாகமில்லாதவர்கள் பிரிந்து போனால், பிரிந்து போகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரி யாவது அடிமைப்பட் டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். 131கொரிந்தியர் 7வது அதிகாரம், 15 ஆம் வசனம். இப்பொழுது அவர்கள் கேட்டுள்ள கேள்வி: சகோதரன் பிரன்ஹாம், ஒரு சகோதரியோ அல்லது சகோதரனோ மறுபடியுமாக விவாகம் செய்து கொள்ள தடையில்லை என்று இது குறிப்பிடுகிறதா? இல்லை பாருங்கள், இவர் என்ன கூறுகிறார் மற்றும் இவருடைய கேள்வியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் விவாகம் செய்யமுடியாது. பாருங்கள், அது வேதாகமத்தில் முரண் பாட்டைக் கொண்டு வரும், வேத வசனங்கள் ஒன்றுக் கொன்று முரண்பாடானது அல்ல. புரிகின்றதா? இப்பொழுது, நாம்... நீங்கள் வேதாகமத்தை (ஒரு வசனத்தை வாசிப்பதனால் மாத்திர மே) அது என்ன கூறவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த விதமாகவே உங்களால் செய்யமுடியும் - உங்கள் கருத்துக்கு பொருத்தமான விதத்தில் பொருந்தும்படியாக. ஆனால் அவை எதைக் குறித்து பேசுகின்றதோ அந்த கருத்தைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். இந்த விதமாக இருக்கலாம்- நான் சகோதரன் நெவிலுடன் பேசிக் கொண்டிருக்கையில் நான் போர்ட் (Board) என்னும் வார்த்தையை கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு நீங்கள் திரும்பிச் சென்று “அவர் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று உங்களுகத் தெரியுமா? இன்றிரவு நாம் அவரை சோர்ந்து போகும் அளவு ”போர்“ (Bored) அடித்து விட்டோமா'' என்று கூறுவீர்கள். பாருங்கள்? ஆனால் மற்றொரு நபரோ, ''நீ கூறுவது தவறு, அவர் என்ன கூறமுற் பட்டார் என்றால், மரப்பலகை (Board, போர்ட்) கட்டணம் அவர் செலுத்த வேண்டுமாம், அவர் அதற்கான பணத்தை செலுத்தப் போகிறார்” என்று கூறுவார். இன்னொரு நபர், “ஓ, இல்லை, அவர் அதை அர்த்தம் கொள்ளவில்லை, வீட்டின் பக்கவாட்டில் உள்ள அந்த தடித்த அட்டையைத் தான் (போர்ட், board) குறிப்பிட்டார்” என்று கூறினார். அடுத்த நபரோ, ''இல்லவே இல்லை, என்னவென்று நான் உங்களுக்கு கூறுகிறேன், அவர் துளையிட்டு (boring, போரிங்) ஒரு ஓட்டையை போடுவதைக் குறித்து அவர் விளக்க முயற்சித்துள்ளார் என்று நான் நம்புகிறேன்'' என்று கூறினார். பாருங்கள்? பாருங்கள்? 14நீங்கள் உரையாடலை கவனிக்க வேண்டும், அப்பொழுது தான் நீங்கள் எதைக் குறித்து பேசுகிறீர்கள் என்பதை அறிந்தவர் களாயிருப்பீர்கள், ஏனெனில் இங்கே பவுல் சில சமயங்களில் அவர்களுடைய கேள்வியையே பதிலாக அளிக்கின்றான். சில சமயங்களில் அவர்கள், “வேதாகமம் தனக்குத் தானே முரண்பாடாக அமைந்துள்ளது'' என்று கூறுகிறார்கள். நான் அதைப் பார்க்க விரும்புகிறேன். அவ்விதமாக அது முரண்பாடாக இல்லை. முப்பத்திரண்டு வருடங்களாக இந்த பிரசங்க பீடத்தின் பின்னால் நான் நிற்கின்றேன், இன்னும் ஒரு முரண்பாட்டைக் கூட நான் காணவில்லை. பாருங்கள்? அது தனக்குத்தானே முரண் பாடாக அமையவில்லை! அது... அதை முரண்பாடாக ஆக்குவது நீங்கள்தான், பாருங்கள். அதை புரிந்து கொள்வதில்லை. பரிசுத்த ஆவியானவர் தாமே வார்த்தைக்குரிய வெளிப்பாட்டை வெளிப் படுத்துபவர் ஆவார். ஆதலால் அந்த முரண்பாடு... பாருங்கள், பவுல் அவர்களுக்கு எழுதுகின்றான், ''நீங்கள் இந்த - இந்த காரியத்தை கேட்டீர்கள்“ என்கின்றான். நீங்கள் கேட்டீர்கள் என்று மாத்திரம் அவன் கூறவில்லை, அவன் அதையே கூறுகின்றான். பிறகு அவன் திரும்பவுமாக அவர்களுக்கு பதிலளிக்கின்றான், அது அவர்கள் கேட்டதற்கு முரண்பாடாக இருந்தது. 15அவர்கள், ''நாங்கள் இதை, இதை மற்றதை செய்கின்றோம்'' என்று கேட்டனர். பவுல் திரும்பி ஏதோ ஒன்றைக் கூறுகிறான், பாருங்கள், அது ஒரு முரண்பாடு போலக் காணப் படுகிறது. அது அப்படி அல்ல. நீங்கள் முழு வசனத்தையும் முழு அதிகாரத்தையும், வாசிப்பீர்களானால், அவர்கள் அவனுக்கு என்ன எழுதினார்களோ அதற்கு அவன் விளக்கம் அளிக்க முயற்சிப்பதை நீங்கள் காண்பீர்கள். இப்பொழுது, இதை நாம் பார்ப்போமாக, அது... அந்த விதமாகத்தான் நீங்கள் வேதாகமத்தில் முரண்பாடுகளாக புரிந்து கொள்கிறீர்கள், ஆனால் அது அவ்விதமாக அல்ல. இப்பொழுது இங்கே, அந்த நபரானவர் தெரிந்து கொள்ள விரும்புகிற, அல்லது அவர்கள் எதை அறிந்து கொள்ள விரும்புகின்றனரோ அதைப் பற்றிய ஒரு கேள்வி: கர்த்தருக்குள்ளாக இருக்கின்ற ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ, மறுபடியும் மறுவிவகாம் செய்ய தங்கள் துணையை விட்டுவிட்டு, விவாகம் அல்லது மறுவிவாகம் செய்துகொள்ளலாமா? செய்யக் கூடாது இப்பொழுது நாம்... 10வது வசனத்திலிருந்து ஆரம்பிப் போம்: விவாகம் பண்ணிக் கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே (பாருங்கள்?) கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக் கூடாது: (பாருங்கள்) பிரிந்து போனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. (அதுதான் கர்த்தருடைய கட்டளைகள், பாருங்கள்) மற்றவர்களைக் குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: (பாருங்கள்) சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாய் இருந்தும்... இப்பொழுது, அவனுடைய பொருளைக் கவனியுங்கள், பாருங்கள். நீங்கள் இதற்கு முன்பிருந்து, அல்லது அதிகாரம் முழுவதுமாக நீங்கள் வாசித்துப் பார்த்தால், ''நாம் ஒரு மனைவியை மணந்து, அவள்... நாம்... நான் விவாகம் செய்து, பிறகு நான் ஒரு விசுவாசியாகும் போது, என் மனைவியும் ஒரு விசுவாசியாக இல்லையெனில், நான் அவளைத் தள்ளி விடுவேனாக“'. ஓ, இல்லை. அது அவ்வாறாக இல்லை. அவ்விதமாக நீங்கள் செய்யவே கூடாது. பாருங்கள்? புரிகின்றதா? ...சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளி விடாதிருக்கக்கடவன். (அது, விவாகத்தின் காரணத்தால் அல்ல, அது அவிசுவாசத்தின் காரணத்தால். திரும்பவும் ''மறுவிவாகம் செய்ய அல்ல. பாருங்கள், அவளுடனே தரித்திருத்தல்) அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன் (அது சரியே! பாருங்கள்) (ஆங்கில வேதாகமத்தில், அவள் அவனை விட்டுப் பிரிந்து செல்லாதிருக்கக்கடவள், Let her not leave him என்று இருக்கிறது - தமிழாக்கியோன்) என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான், அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன. ஆகிலும் அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்து போகட்டும்... இப்பொழுது, அந்த அவிசுவாசி, ''இனிமேல் உன்னோடு நான் வாழப்போவதில்லை, நீ ஒரு கிறிஸ்தவனாகிவிட்டாய்'' என்று கூறினால், ஒரு மனிதன் தன்னுடைய மனைவியிடம், ''நீ இரட்சிக்கப்பட்டு, ஒரு காலத்தில் நாம் இருந்த உலகத்தை விட்டு நீ வெளியே செல்லப் போவதால், நான் உன்னை விட்டு பிரிந்து செல்லப்போகிறேன்'' என்று கூறுவானானால், அதைக் குறித்து உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது. அவன் பிரிந்து செல்லட்டும். பாருங்கள்? 16அல்லது அந்த பெண் தன்னுடைய கணவனிடம் ''நான் அந்த உருளும் பரிசுத்தர் கூட்டத்தினருடன் சேரமாட்டேன். நான் அதைச் செய்ய மாட்டேன்! நான் உங்களை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறேன்'' என்று கூறுவாளானால், நீ சபையை விட்டு விடாதே, அவள் பிரிந்து செல்ல விட்டுவிடு. பாருங்கள்? இந்த விதமான ஒரு விஷயத்தில் ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ அடிமைப்பட்டவர்கள் அல்ல, அது என்ன வெனில், உங்களுடைய துணை அதற்காக உங்களை தள்ளிப் போட்டு, பிரிந்து போக விரும்புவது. நீங்கள் இன்னுமாக அவர்களைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் உங்களை விட்டு பிரிந்து போக விரும்புவது, கிறிஸ்துவின் காரணமாக உங்களை அவர்கள் விட்டுவிடப் போகிறார்களென்றால், அவர்கள் செல்லும்படிக்கு விட்டு விடுங்கள். ஆனால் நீங்கள் மறுவிவாகம் செய்துக் கொள்ளக் கூடாது! ''ஆனால் சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத் திருக்கிறார்''. பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் திரும்பவுமாக மறுவிவாகம் செய்து கொள்ளலாம் என்றல்ல, அவன் ஏற்கெனவே அதைக் கூறிவிட்டான், ஆனால் நீங்கள் ஒரு அவிசுவாசிக்கின்ற புருஷனோ அல்லது அவிசுவாசிக்கின்ற மனைவியோ அவர்களுக்கு வாழ விருப்பமில்லையெனில், நீங்கள் அவர்களுடன் வாழ வேண்டிய அவசியம் இல்லை. 17அவர்கள் உங்களுடன் வாழ விரும்பி “பாருங்கள், நீங்கள் சபைக்குச் செல். அங்கே செல்ல நீங்கள் விரும்பினால், அது உன் காரியம். உங்கள் சபைக்கு நீங்கள் செல்ல விரும்பினால், நீ செல். என்னைப் பொறுத்தவரையில் நான் அதை விசுவாசிப்பில்லை. மேலும் நான் உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன், நான் உங்களுடைய வழியில் குறுக்கே நிற்கமாட்டேன், நீ சபைக்கு செல்” என்று கூறுவார்களானால், அப்பொழுது நீங்கள் அப்படியே வாழ வேண்டும், ஏனெனில் உங்களுடைய பரிசுத்த மாக்கப்பட்ட ஜீவியம் அந்த விசுவாசியை (believer) பரிசுத்தப் படுத்தி, அவர்கள் விசுவாசிக்கும்படிக்குச் செய்யும். பாருங்கள்? மனிதனோ அல்லது ஸ்திரீயோ அது இரண்டு பக்கங்களிலும், பாருங்கள். நீங்கள்... ஆனால் இப்பொழுது நீங்கள், ''நான்... சகோதரன் பிரன்ஹாம், நான் விவாகம் செய்து கொண்டேன். என்னுடைய மனைவி ஒரு அவிசுவாசியாயிருக்கிறாள், ஆனால் நான் விவாகம் செய்யத்தக்கதாக ஒரு சகோதரி இங்கே இருக்கின்றார்கள். நான் இந்தப் பெண்னை விட்டுவிட்டு அந்த பெண்னை விவாகம் செய்யப் போகிறேன்'' என்று கூறலாம். ஓ, இல்லை! நிச்சயமாக கூடாது! மரணம் உங்களைப் பிரிக்கும்வரை என்று தான் உங்களுடைய வாக்கை நீங்கள் அளித்திருக்கிறீர்கள், உங்கள் வாழ்க்கைத் துணை மரிக்கும் வரைக்கும் (வேதாகமத்தில்) நீங்கள் மறுவிவாகம் செய்து கொள்ள உங்களுக்கு அனுமதி ஒன்று கூட இந்த உலகத்தில் கிடையாது. அது சரியே. இருக்கின்ற ஒரே அடிப்படை! வாழ்க்கைத் துணை மரித்தால் தவிர மறுவிவாகம் செய்து கொள்வது என்பது எங்குமே கிடையாது. அவ்வளவுதான். பாருங்கள்? 18வேதாகமத்தை தனக்குத் தானே முரண்பாடாக ஆக்க உங்களால் முடியாது. ஆகவே வசனங்களை முன்னும் பின்னுமாக வாசியுங்கள், அப்பொழுது அவன் எதைக் குறித்துப் பேசுகிறான் என்பதை நீங்கள் கிரகித்துக் கொள்வீர்கள். இப்பொழுது, இது என்னவென்றால்... பாருங்கள்: அப்படியென்றால் ஒரு சகோதரியோ அல்லது ஒரு சகோதரனோ மறுவிவாதம் செய்து கொள்ளலாமா? இல்லை ஐயா. பாருங்கள் அவன் அதை முதலில் விளக்கினான். பாருங்கள்: ... விவாகம் பண்ணிக் கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது; மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக்கூடாது. பிரிந்து போனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்... (பாருங்கள்?) ஒரு விசுவாசி திரும்பவுமாக மறுவிவாகம் செய்யும்படிக்கு உயிரோடிருக்கின்ற வாழ்க்கை துணையுடன் ஒப்புரவாகுதல் என்பதைப் போன்ற காரியங்கள் கிடையவே கிடையாது. இப்பொழுது இங்கே மற்றொன்று உள்ளது. இரண்டாவது இவ்விதமாக உள்ளது: 19பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில், கடைசி உயிர்த்தெழுதலில் அக்கிரமக்காரர் எந்த விதமான சரீரத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்? அந்தப் பாவி எந்த சரீரத்தில் பாவத்தைச் செய்தானோ, அந்த சரீரத்தில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக உயிர்த்தெழுதலில் உயிரோ டெழுவான். உயிர்த்தெழுந்து நியாயந்தீர்ப்பில் அவன் நிற்க வேண்டியவனாக இருக்கிறான். உயிர்த்தெழுதல் என்பது பதிற்பொருளாய் (Replacement) என்பதல்ல, அது ''கீழே சென்ற அதை மேலே கொண்டு வருதல்“' என்பதே. இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த போது, கீழே சென்ற அதே சரீரமாக அவர் இருந்தார், அதே சரீரத்தில் அவர் உயிர்த்தெழுந்தார். எந்த சரீரத்தோடே கீழே செல்கிறோ மோ அதே சரீரத்தில் நாம் உயிரோடெழுகின்றோம்; அது ஒரு உயிர்த்தெழுதல், ஒரு பதிற்பொருளாய் வைக்கப்படுதல் அல்ல. இப்பொழுது, வேதாகமம் கூறுகிறது அந்த... சரீரத்தில் செய்யப்பட்ட பாவங்களின்படியே நாம் நியாயந்தீர்க்கப்படு வோம். ஆகவே அக்கிரமக்காரன் உயிரோடெழும் போது, அவன் எந்த சரீரத்தைக் கொண்டு பாவம் செய்தானோ அதே சரீரத்தில் அவன் நியாயந்தீர்க்கப்படுவான், அதே காரியத்தில். 20“பின்னும் ஆதாம் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; (ஆங்கில வேதத்தில் and என்றும் இணையிடைச் சொல் (conjuction) உள்ளது - தமிழாக்கியோன்) (இணையிடைச் சொல்) அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று.'' நீங்கள் போதிக்கும் எல்லாவற்றையும் நான் விசுவாசிக்கிறேன், ஆனால்... எப்படி... and என்னும் அந்த இணையிடைச் சொல் காரணமாக, ஆதாம் அவளை அறிந்த பிறகு அவள் கர்ப்பந்தரிக்கவில்லை என்று கூறுகின்றவர்களுக்கு எவ்விதம் நான் பதிலளிக்க வேண்டும். இப்பொழுது பெரியவர்களாகிய நமக்கு ''அறிந்தான்'' என்பது எதைக் குறிக்கிறது என்றறிவோம். இப்பொழுது இந்த கேள்வி இணையிடைச் சொல் (conjuction) என்பதைக் குறித்த ஒன்றாக இருக்கிறது. நண்பர்களே இப்பொழுது நீங்கள் கவனிப் பீர்களானால், பாருங்கள், வேதாகமம் ஒரு காரியத்தை ஒரு இடத்திலும் வேறொன்றை வேறொரு இடத்திலும் கூறும்படிக்கு உங்களால் செய்ய முடியாது. எல்லா சமயத்திலும் அது அதே காரியத்தை மாத்திரமே கூற வேண்டும். அது இங்கே ஒரு காரியத்தை கூறும்படிக்குச் செய்து பிறகு இங்கே வேறெதோ ஒரு காரியத்தை கூறும்படிக்குச் செய்தால், அப்படியானால் உங்களு டைய வியாக்கியானம் தவறானதாகும். பாருங்கள்? உங்களால் அவ்விதமாகச் செய்யமுடியாது. சர்ப்பமானது ஏவாளை வஞ்சித்தது, பிறகு வேறொரு இடத்தில் அவள் மறுபடியுமாக வஞ்சிக்கப் பட்டதாக உங்களாலே காணவே முடியாது. பாருங்கள்? அவள் கர்ப்பந்தரித்தபோதுதான் அவள் முதல் முறையாக வஞ்சிக்கப் பட்டாள். நீங்கள் அவள் இரண்டு முறை வஞ்சிக்கப்பட்டா ளென்று உங்களாலே காண்பிக்க முடியாது. 21இணையிடைச் சொற்களை (conjuctions) நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். வேதாகமத்தை வாசிக்கையில் நீங்கள் காண் கின்ற இணையிடைச் சொற்கள் எவ்வாறாக செல்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம். இணையிடைச் சொல் ஒரு வாக்கியத்தை பிணைக்கிறது. பாருங்கள்? இப்பொழுது இதைக் கவனியுங்கள். இப்பொழுது, ஆதியாகமம் 1:26ல் இந்த இணை யிடைச் சொல்லை கவனியுங்கள், பிறகு நீங்கள் இதை விளக்குங்கள், அதன் பிறகு நான் உங்களுக்கு கூறுகிறேன் எப்படி அவன்... ஆதாம் தன்னுடைய மனைவியை அறிந்தபோது. ஆதியாகமம், 1ஆம் அதிகாரம் 26வது வசனம் முதல் - இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். தேவன் இப்பொழுது தம்முடைய சிருஷ்டிப்பை உண்டாக்கினார், பூமியானது ஊரும் சகல பிராணிகளை பிறப்பிக்கவும் செய்தார்- பூமியானது பிறப்பித்த எல்லா காரியங்களும் இப்பொழுது 26வது அதிகாரம்... ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்தின் 26வது வசனம்: பின்பு தேவன்: நமது சாயலாகவும் நம்முடைய ரூபத்தின்படி யேயும் மனுஷனை உண்டாக்குவோமாக... அவர்கள் (மனுஷன்)... (அவன் என்றல்ல; 'அவர்கள் பாருங்கள், பன்மை) சமுத்திரத்தின் மச்சங்களையும் (and) ஆகாயத்துப் பறவைகளையும் (and) மிருக ஜீவன்களையும் (and)... (ஆங்கில வேதாகமத்தில் இடையே இணையிடைச் சொல்லான (and) காணப்படுகிறதுதமிழாக்கியோன்)... (பாருங்கள் மற்றும், மற்றும், மற்றும்'' [and, and, and) ஒன்றாக இணைக்கின்றன)... பூமியனைத்தையும் பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்மித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; (and) ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். (ஆணும் and) பெண்ணுமாக) பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, (and) பூமியை நிரப்பி (and) அதைக் கீழ்ப்படுத்தி... தம்முடைய சிருஷ்டிப்பிற்கு பிறகு தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். இணையிடைச் சொல் பிறகு இணையிடைச் சொல்... மனுஷன் பூமியை நிரப்பி. (and, பிறகு, இணையிடைச் சொல்) பலுகிப் பெருகி, அதன்பின் பூமியைக் கீழ்ப்படுத்துதல்; அது நேராக ஆயிர வருட அரசாட்சிக்குள்ளாக செல்கிறது. பாருங்கள்? அது சரி, ''பூமியைக் கீழ்ப்ப டுத்தி.'' அது சரி: ... (and) சமுத்திரத்தின் மச்சங்களையும், (and) மற்றும்) ஆகாயத்துப் பறவைகளையும் (and மற்றும்) பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள். 22இப்பொழுது, தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார், சிருஷ்டித்து, அவர்கள் (அந்த மனுஷன்) பூமியின் மீது ஆளுகை செய்து அதைக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் செய்ய விட்டார். அவர்கள் இதைச் செய்ய, அவர்கள் மச்சங்கள் மீது ஆளுகை செய்ய விட்டார். அவர் உண்டாக்கின எல்லாமும். மேலும் நாம் ஆதியாகமம் 2:7ல் காண்பது இதைக் கவனியுங்கள். தேவன் பூமியை உண்டாக்கின பிறகு, மனுஷனை உண்டாக்கின பிறகு, பூமியின் மீதான ஆளுகையை அவனுக்கு அளித்து, அவனுக்கிருந்த எல்லாவற்றையுமே அவனுக்கு அளித்தார், தேவன் அவர்களை சிருஷ்டித்தார், அவர்கள் பெருகி... பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படிக்கு அவர்களுக்கு கூறினார். அவர் வானமும் பூமியும் மற்றும் எல்லாக் காரியமும், அவர் செய்து முடித்திருந்து எல்லா காரியங்களுக்குப் பிறகு - அந்த ஏழு வசனங்களுக்குப் பிறகு, ''and தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கி'' “And” இங்கே அவர் “(and ” இணையிடைச் சொல்) (ஆங்கிலத்தில் ஆதி 2:7 வசனம் And என்று துவங்குகிறது - தமிழாக்கியோன்) அவர் ஏற்கெனவே உண்டாக்கி யிருந்த மனுஷனை உருவாக்குகின்றார். பாருங்கள்? ஒரு மனுஷனை உருவாக்குகின்றார். and (ஆங்கிலத்தில் உள்ளவாறே - தமிழாக்கியோன்) .... தேவன்... மனுஷனை பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் (அந்த மூச்சு) மனுஷன் ஜீவாத்துமாவானான் 23இப்பொழுது, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! ஆதியாகமம் 1:26லிருந்து 28க்குள் அவர் மனுஷனை (பெண் மற்றும் ஆண்) உண்டாக்கின பிறகு, அவர் மனுஷனை தம்முடைய சாயலாக உண்டாக்கினார், அவனை சிருஷ்டித்து, அவனுக்கு அளித்தார். ராஜ்யங்களை கீழ்ப்படுத்தி, இந்த அதிகாரங்களையும் மற்ற எல்லாவற்றையும் அளித்தார், ஆனால் இன்னுமாக அவர் மனுஷனை உண்டாக்கவேயில்லை. பாருங்கள், சாத்தான் ஏற்கெனவே ஏவாளை வஞ்சித்தான். ஆதாம் அவளை அறிந்தான் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவள் ஏற்கெனவே வஞ்சிக்கப்பட்டிருந்தாள். ஏனெனில் சரியாக அங்கே அவன்.... அவர்கள். அவர்கள் வருவதற்கு முன்னர்... அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு வந்தபோது, தேவன் அவர்களை ஒன்றாக நிற்க வைத்து, “இதைச் செய்தது யார்?'' என்றார். அவர்களை நோக்கி கேள்வி கேட்டார். ஆதாம், ''நீர் எனக்குத் தந்த ஸ்திரீயானவள்'' என்று கூறினான். அந்த ஸ்திரீ, ''சர்ப்பம் என்னை வஞ்சித்தது'' என்று கூறினாள். 56. ஆகவே தேவன் அவர்கள் மீது சாபத்தை - அதைப் போன்ற தை எல்லாம் வைத்தார்- அதன் பிறகு ஆதாம் தன்னுடைய மனைவியை அறிந்தான், பாருங்கள், அவள் ஏற்கெனவே வஞ்சிக் கப்பட்டு ஒரு தாயாகியிருந்தாள். இங்கே ஆதியாகமம் 1: 26ல் தேவன் மனுஷனை உண்டாக்கியிருந்து, ஆனாலும் இன்னு மாக அவன் உருவாக்கப் படாதிருதந்தது போலவே. பாருங்கள்? அது சரி. 24இப்பொழுது கவனியுங்கள் இப்பொழுது நாம் இங்கே திருப்பி இதையும் வாசிப்போமாக: ஆதாம் தன் மனைவிக்கு... ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில் அவள் ஜீவனுள்ள காரியங்களுக்கு தாயானாள் எல்லா... அல்லது ஜீவனுள்ளளோருக்கெல்லாம் தாயானாள். அந்த ஸ்திரீயை மனைவி என்று அழைத்தான். ஏனெனில் அவள்... அல்லது அந்த ஸ்திரீ ... ஜீவனுள்ள காரியங்கள் எல்லாவற்றிற்கும். தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும், தோல் உடைகளை உண்டாக்கி அவர்களை மூடத்தக்கதாக... இப்பொழுது, இப்பொழுது இங்கே ஆதியாகமம், 1:21ல் மறுபடியும் கவனியுங்கள், தேவன் மச்சங்களை சமுத்திரத்திலே சிருஷ்டித்தார். அவர் எல்லாவற்றையும் செய்து முடித்திருந்தார், பிறகு சிருஷ்டிப்பைச் செய்தார், மனிதனை தமது சொந்த சாயலில் உண்டாக்கினார். மனிதனை உண்டாக்கினார், “ஒரு” மனிதனை அல்ல, முழு மனிதன்- இவை எல்லாவற்றையும் தம்முடைய சொந்த சாயலில். பாருங்கள்? அவர் அவர்களை தேவனுடைய சாயலின்படியே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக இரண்டைப் போலவே அவனை சிருஷ்டித்தார். 25ஆகவே இப்பொழுது நாம் இங்கே காண்பதென்ன வெனில், அவர் மனிதனை தம்முடைய சொந்த சாயலிலே சிருஷ்டித்த பிறகு, இங்கே அவனை ஆணும் பெண்ணு மாக சிருஷ்டித்த பிறகு, இங்கே பூமியின் மண்ணிலிருந்து அவர் மனிதனை உண்டாக்குகிறார். பிறகு, அவர் அதைச் செய்த பிறகு, அவனை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கின பிறகு, அவனை ஏற்கனவே உண்டாக்கின பிறகு, அவர் இங்கே திரும்பவுமாக வந்து அவனுக் காக ஒரு மனுஷியை உண்டாக்குகிறார். பாருங்கள்? இதோ அந்த இணையிடைச் சொல் அந்த வாக்கியத்தை ஒன்று சேர்க்கிறது. அது முன்பு செய்த விதமாகவே இங்கும், ''தேவன் தம்முடைய மனுஷனைச் சிருஷ்டித்தார், தம்முடைய ரூபத்தின்படியேயும் அவர் அவனை சிருஷ்டித்தார்''. இது தேவன் தம்முடைய சிந்தையில் கொண்டிருந்தது, தேவன் தம்முடைய சிந்தையில் எதைக் கொண்டிருந்தாரோ அது. தேவன் தம்முடைய சிந்தனைகளில் பேசுதல். இங்கே தான் அவர் சரியாக கிரியையைச் செய்திருந்தார். இயேசு தாமே உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப் பட்ட ஆட்டுக் குட்டி. அவர் நாலாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அடிக்கப்படவில்லை. புரிகின்றதா? 26ஆகவே சர்ப்பம் ஏவாளை வஞ்சித்தது. அது உண்மை யானதே. தீர்ப்பு கொடுக்கப்பட்டப் பிறகு, ஆதாம் தன்னுடைய மனைவியை அறிந்தான். அப்பொழுது அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள், அது காயீன். உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? பாருங்கள், ஆதாம் செய்ததை இணையிடைச் சொல் அப்படியே தொடர்ச்சியாகக் கொண்டுச் செல்கிறது. ஆதாமுக்கு முன்னர் நடந்தவை இணைக்கப்படவில்லை. இப்பொழுது இங்கே பாருங்கள், நீங்கள் அதைத் தொடர்ந்து பார்க்க விரும்பினால், இங்கே அந்த மகத்தான வாக்குமூலத்தில், பார்க்கலாம். அது இங்கே... இங்கே 4 வது அதிகாரத்தில், அது அதில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆதாம் தன் மனைவியாகிய ... அறிந்தான்; (and, இணையிடைச் சொல் - ஆங்கில வேதத்தில் உள்ளவாறு) அவள் கர்ப்பவதியாகி காயீனைக் பெற்று, (and, இணையிடைச் சொல்) கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள் (And Adam knew... his wife; and she conceived, and bare Cain, and (a conjuction) said, I have gotten a man from the LORD.) (ஆங்கில செய்தியில் உள்ளவாறே - தமிழாக்கியோன்) அப்படியானால் அது சரியாக அது ஆதாம் அல்ல, அதன்படி பார்த்தால் அது தேவனுடைய குமாரன் என்றிருக்கிறது. புரிகிறதா? புரிகிறதா? அந்த இணையிடைச் சொல்லை நீங்கள் பொருத்த விரும்பினால், பாருங்கள் (“and”, மறுபடியுமாக) ''தேவனால் ஒரு மனுஷனைப் பெற்றேன்.'' அப்படியானால் அந்த வேறுபாடான காரியமான காயீன் என்றழைக்கப்பட்ட அதை தேவன் தனக்கு கொடுத்தார் என்று அவள் கூறுகிறாளே? காயீன் கொண்டிருந்த அந்த மதிகேடான, அசுத்தமான காரியங்கள் எல்லாவற்றின் மூலக்காரியம் செயல்திறன் எங்கிருந்து வந்தது, தேவனிடத்திலிருந்தா வருகின்றது? அப்படி இருக்குமா! பாருங்கள்? அவள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டாள், அந்த சர்ப்பம்... அவள் ஏற்கெனவே தாயாகி விட்டாள். பிறகு ஆதாம் அவளை அறிந்தான், நிச்சயமாக அவன் செய்தான், அவன் மனைவியுடன் ஜீவிப்பது போல அவளுடனே சென்று வாழ்ந்தான், ஆனால் அவளோ ஏற்கெனவே இந்தப் பிள்ளையின் தாயாக இருந்திருந்தாள். பிறகு முடிவில் ஆதாமுடைய குமாரன் பிறந்த போது, அவன் ஆதாமைப் போலவே, மென்மையான, இனிமையான, தாழ்மையான, எளிமையான நபராக இருந்தான். 27ஆனால் இவனோ, அந்த பச்சைப் பொய் (pure lying)... அந்த பாவம் எங்கிருந்து வந்தது? இந்த ஆள், காயீன், இந்த கொலைக் காரன் எதிலிருந்து வந்தான்? வேதாகமம், ''பிசாசானவன் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்'' என்று கூறுகிறதே. ஆகவே அந்தப் பொய் எங்கிருந்து வருகின்றது? (பிசாசானவன்தான் பொய்க்குப் பிதாவாயிருக்கிறான்; அவன் ஒரு பொய்யன் மற்றும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான்.) அது தேவனுக்கு புறம்பே இருக்கின்ற ஒரு மூலக் காரியத்திலிருந்து வந்திருக்க வேண்டியதாக இருக் கின்றது. ஆகவே காயீன்தான் அந்த பொல்லாங்கன், அவனு டைய தகப்பன் சாத்தான்; அவன்தான் இந்த பொல்லாங்கனைக் கொண்டு வந்தான். பிறகு, ஆதாம் தன்னுடைய மனைவியை அறிந்தான் - நிச்சய மாக. ஆகவே, ஆமாம், ஒருக்கால் இந்த விதமாக நீங்கள் இதைக் கூறியிருந்தால்... நான் என்னையே எடுத்துக் கொள்வேனானால், நான் கூறுவதன்னவெனில், நல்லது, இப்பொழுது, ரெபெக்காள் பிறந்தாள், அதற்குப் பிறகு சிறிது... 28ஒரு நாள் யோசேப்பின் சம்பவத்தைக் குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன், யோசேப்பின் சம்பவ விவரத்தைக் குறித்து வாசித்த போது மிக நான் எழுச்சியூட்டும் ஒன்றாக இருந்தது. அங்கே அது மின்னிபோலிசில், நான் ஒரு சிறிய தனி அறையில் சென்று முழங்காலிட்டு “கர்த்தராகிய தேவனே, யோசேப்பென்ற மனிதனாகிய ஒருவனுக்காக எவ்வளாவாக உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன்!'' என்று கூறினேன். அப்பொழுது நான், ''நான்.... அந்த மகத்தான சிறப்பு வாய்ந்த குணவியல்பு வாய்ந்த 'ஜோசப்' என்ற பெயரை பில்லி பாலுக்கு நான் வைத்திருக் கலாமே'' என்று நினைத்தேன். வேதாகமம் முழுவதுமாக அவனுக்கு எதிராக ஒரு கறை கூட இல்லை, ஒவ்வொரு விதத்திலும் கிறிஸ்து வின் பரிபூரணமான எடுத்துக்காட்டாக அவன் இருந்தான். ”எப்படியாக நான் நேசிக்கிறேன்...'' என்றேன், “ஓ, எனக்கு ஒரு மகன் பிறப்பானென்றால் அவனுக்கு 'ஜோசப்' என்று பெயரிடுவேன்” என்று நினைத்தேன். அப்பொழுது கட்டிடத்தில் அந்த ஒளியானது அசைந்து உள்ளே வந்து, “உனக்கு ஒரு குமாரன் பிறப்பான். அவனை 'ஜோசப்' என்று பெயரிட்டு கூப்பிடு'' என்று கூறினது. நான் என் மனைவியை அறிந்தேன், அவள் சாராளைப் பெற்றாள். பிறகு நான் என் மனைவியை அறிந்தேன், அப்பொழுது (and- இணையிடைச் சொல்லை தீர்க்கதரிசி கூறுகிறார் - தமிழாக்கி யோன்) அவள் ஜோசப்பை பெற்றாள். நான் என்ன கூறு விழை கிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா? பாருங்கள், முதலில் உள்ளதற்கு இதனுடன் எந்த விதத் தொடர்பும் கிடையாது. தேவனுடைய வாக்குறுதி. ''ஜோசப்'' என்பதுதான் நடுவாக சாராள் வந்தாள். நான் சாராளை அந்த விதமான சிக்கலான சூழலில் வைக்கிறேன் என்றல்ல, ஆனால் நான் என்ன கூற வருகிறேன் என்பதை உங்களுக்கு காண்பிக்கவே இதைக் கூறுகிறேன். பாருங்கள்... சாராளும் தேவனால் அனுப்பப்பட்டவளே. ஆகவே இப்பொழுது நாம் அதை அறிந்து கொள்கிறோம். 29இப்பொழுது பாருங்கள். ஆதாம் மற்றும் ஏவாளின் மீது தேவன் தீர்ப்பை அளித்தபோது, அவர் தீர்ப்பை அளிக்கு முன்னரே அவள் ஏற்கெனவே அந்த பாவத்தை செய்திருந்தாள். ஆகவே கவனியுங்கள், உலகத்திலே பிறந்த முதல் குழந்தை, ''பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிற தாய் உலகத்துக்கு வந்தது“ என்பது உங்களுக்குத் தெரியுமா? முதல் முதலில் பிறந்த குழந்தை அந்த விதமாகத்தான் பிறந்தது, ஏனெனில்..... ''அப்படியானால் ஆதாம், ஏவாளைக் குறித்து என்ன?'' அவர்கள் பிறக்கவேயில்லை. அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டார்கள். புரிகிறதா? ஆகவே முதன் முதலாக வந்த குழந்தையானது பாவத்தில் பிறந்த ஒன்றாக இருந்தது, ஆகவே அது அந்த வழியின் படியே தான் இருக்கும். ''ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்''. அவன் பாவத்தில் பிறந்திருக்கிறான். அதன் காரணமாக்கத்தான் அவன் ஆவியினாலே மறுபடியும் பிறக்க வேண்டியவனாக இருக்கிறான்: ஒரு ஆவிக்குரிய கருத்தினால் அல்ல; ஆவிக்குரிய பிறப்பினால். பாருங்கள், அது அவனை திரும்பவும் உருவாக்குகிறது, அவனை ஒரு புது சிருஷ்டியாக ஆக்குகின்றது. முதலில் பிறந்த மனிதனானவன் பாவத்தில் பிறந்தவனாக இருந்தான். 30ஆகவே, இனச்சேர்ககை இல்லாமல் ஒருவர் வரவேண்டிய தாயிருந்தது. இப்பொழுது ஆண் பெண் பாகுபாடு முதலாவதாக இல்லாதிருந்ததென்றால், அவர்களுக்கு ஏன் ஒருவர் பாலினத்தில் வந்து முழு மானிட வர்க்கத்தையும் மீட்க வேண்டியதாயிருக்க வேண்டும்? ஏன் அவர் ஒரு நடைப் பாதையை அமைத்து அதைக் கீழே கொண்டு வந்து “இதோ சரியாக சிந்திக்கும் அந்த நீதி யுள்ளவர்'' என்று கூறியிருக்கலாமே? ஆகவே அது மனித இனத்தின் மூலமாகவே வரவேண்டும், ஒரு ஸ்திரீயின் மூலமாக வரவேண்டும், ஏனெனில் முதல் நிலையில் அவ்விதமாகத் தான் வந்தது. பாலினத்தின் மூலமாகத்தான் அநீதி கொண்டு வரப் பட்டது; பாலினத்தின் மூலமாகத்தான் நீதியும் கொண்டு வரப் பட்டது. பாருங்கள்? தேவன், விபச்சாரம் இல்லாமல், பாலுறவு இச்சையில்லாமல், மாசற்ற கருத்தரிப்பினால் இயேசு கிறிஸ்துவை கொண்டு வந்தார். மரியாளை நிழலிட்டு பாலினம் மூலமாகவே வந்த இந்த குழந்தையாகிய அதை அவளுக்குள் உண்டாக்கினார். பாருங்கள்? ஆகவே அந்த விதமாகத்தான் இருக்க வேண்டியதாயிருந்தது, அதற்கு வேறெந்த வழியும் இல்லை. ஸ்திரீயினால் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரணத்தை நோக்கி பிரயாணித்துக் கொண்டிருக்கிறான், அவன் பிறக் கையிலே மரித்திருக்கிறான். அது சரியே. அதின் காரணமாகத்தான், நாம் இப்பொழுது அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையை கொண்டவர்களாக இருக்கின் றோம் என்று முன்னொரு நாளில் நான் பேசினேன். 31இஸ்ரவேல்... அது... ஒன்றுமே இல்லாத அநேக காரியங்களை நான் பேசுகிறேன், ஆனால் சில சமயங்களில் கர்த்தர் எனக்கு சிலவற்றை அளிப்பார், அது என்னை அப்படியே மெய்சிலிர்க்க வைத்துவிடும். ஆகவே அவர் எனக்கு அதை அளித்த போது, அநேக வருடங்களாக நான் பெற்றிருந்ததை விட அது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அன்றொரு நாள் அவர் எனக்கு அதை அளித்த போது, இஸ்ரவேலை (ஒரு அடிமை) நான் பார்த்தபோது, தேவனுடைய பிள்ளைகளாகிய அவர்களுக்கு வீடு கூட இல்லாதிருந்தது. அவர்களுக்கு தேவையாயிருந்த எந்த ஒன்றும்! அழுகின அப்பத்தை போட்டார்கள், அவர்கள் அவர்களுக்கு ஓ, அவர்களுக்கு.... அவர்கள், சமாதானமாக வாழ ஒரு வீடு இருந்து, தங்களுடைய முகத்தின் வியர்வையால் தங்கள் ஜீவனத்திற்காக சம்பளத்தை பெறும்படியாக இருக்குமானால்! ஆகவே, ஒரு நாள், அக்கினி ஸ்தம்பத்தால் வழிநடத்தப் பட்டு வனாந்திரத்திலிருந்து வந்த ஒரு தீர்க்கதரிசி, ஒரு வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைக் குறித்து அவர்களிடம் கூறினான். அந்த இடத்திற்கு யாருமே சென்றதில்லை, அதைக் குறித்து ஒன்றுமே அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அது ஒரு வாக்குத் தத்தமாக இருந்தது. அதன் பேரில் அவர்கள் விசுவாசித்து அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் அருகாமையில் செல்லும் வரைக்கும் அந்த தீர்க்கதரிசியை அவர்கள் பின்பற்றினர். 32“யேகோவா- இரட்சகர்” என்னும் அர்த்தமுடைய யோசுவா என்றழைக்கப்பட்ட ஒரு சாட்சி அங்கே இருந்தான். அவன் யோர்தானைக் கடந்து அந்த தேசத்துக்குள் சென்று, சரியாக அந்த தீர்க்க தரிசி கூறினபடியே, தேவனுடைய வார்த்தையின்படியே இருந்த அந்த தேசத்தை குறித்த அத்தாட்சியுடன் திரும்பி வந்தான். இரண்டு மனிதர் தூக்கி வரவேண்டியதாக இருந்த அந்த திராட்சைக் குலையை கொண்டு வந்தனர், அந்த தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அசலான பழத்தை அவர்களால் ருசி பார்க்க முடிந்தது. அந்த தேசம் அங்கே இருந்தது என்பது யாருக்குமே தெரியாது, அவர்கள் அதை அப்படியே விசுவாசித்தனர். அவர்கள் விசுவாசத்தால் வெளியே நடந்து வந்து அதை விசுவாசித்தனர். இப்பொழுது, அவர்கள் அந்த தேசத்தை சுதந்தரித்த போது, அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள்! ஒவ்வொரு வரும் சமாதானத்தோடு வாழ ஏதுவாயிருந்தது, ஒவ்வொருவரும் தன்னுடைய சிறு தோட்டத்தை உடையவனாக இருந்தான், அவர்கள் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் எல்லாவற்றையும் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால், முடிவாக முதிர் வயது அவனை அடைந்தது, மரணம் அவனை சுற்றி வளைத்து அவனை எடுத்துக் கொண்டது. பிறகு பரலோக நடைபாதையிலிருந்து கீழே, ஒரு ஸ்திரீயின் மூலமாக மற்றொரு மகத்தான மாவீரர், அவர்களெல் லாரிலும் பெரியவர், இயேசு கிறிஸ்து வந்தார். தேவன் தம்மைத் தாமே மாம்சத்தில் வெளியாக்கிக் கொண்டார். அவர் இஸ்ரவே லிடம், அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மத்தான மக்களாக இருந்தனர் என்று கூறினார். ஆனால் மரணம் அவர்களை நோக்கி இருந்தது, அவர், ''ஆனால் நான் உங்களுக்கு வேறொரு தேசத் தைக் குறித்து கூறு கிறேன். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப் பேன். நீங்கள் உங்கள் தேசத்தில் சந்தோஷமாயிருக்கிறீர்கள், உங்களுக்கு உங்கள் வீடுகள் உள்ளன, உங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரையும் அங்கே அடக்கம் பண்ணுகிறீர்கள், அது தான் முடிவு என்பது போலத் தெரிகிறது“ என்று கூறினார். 33யோபு அதைக் கண்டான், “ஒரு மரம் மரித்தாலும் திரும்பத்தழைத்து வாழும். ஆனால் மனுஷன்படுத்துக்கிடக் கிறான், மனுபுத்திரன் ஜீவித்துப் போன பின் அவன் எங்கே? அவன் பிள்ளைகள் அவனை கனம் பண்ண வந்தாலும் (His Sons come to honour him - ஆங்கில வேதாகமத்தில் உள்ளபடி - தமிழாக்கி யோன்) அதை அவன் கவனியான். ஓ, நீர் என்னை பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் இரகசிய இடத்தில் என்னை மறைத்து ...!'' என்று கூறினான். ”மனுஷன் செத்தபின் பிழைப் பனோ ?'' என்றான். அதற்கு நாலாயிரம் வருடங்களுக்கு முன்னதாக, அந்த கல்லறைக்கு அப்பாலே ஏதோ ஒன்றுக்காக அவர்கள் நோக்கிக் கொண்டிருந்தார்கள். தேவன் அவர்களுக்கு ஒரு வீடு, குடும்பம் மற்றும் பிள்ளைகள், மற்றும் ஒரு சபை தீர்க்கதரிசிகள், மற்றும் இந்த காலம் வரைக்கும் மகத்தான மனிதர் மகத்தான காரியங்கள் போன்றவை அளித்தார். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் மரித்து தங்களுடைய கல்லறைக்கு சென்றனர். ஆனால் இங்கே ஒருவர் வந்து “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, நான் சென்று ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்” என்று கூறுகிறார். 34யோசுவாவைப் போல, அவன் தன்னுடைய காதேஸ் பர்னேயாவை சந்தித்தான். இஸ்ரவேல் காதேஸ் பர்னேயாவிற்கு வந்த போது... அக்காலத்தில் காதேஸ் உலகத்தின் நியாயஸ் தலமாக இருந்தது - ஒரு பெரிய நீரூற்றிலிருந்து ஏழு நீரூற்றுகள், அதற்கு நியாயத்தீர்ப்பு என்று அர்த்தம் - தேவனுடைய வீடு மற்றும் அதிலிருந்து வெளியே புறப்பட்டுச் செல்லுகின்ற சபை களைப் போன்று. ஆகவே யோசுவா, அத்தாட்சியைக் கொண்டு வருவதற்காக காதேஸ் பர்னேயாவிலிருந்து கடந்து வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் சென்றான். இப்பொழுது, இயேசுவும் தம்முடைய காதேஸை சந்தித்தார். அது என்னவாயிருந்தது? நியாயஸ்தலம்! அது எங்கே இருந்தது? கல்வாரியில், அங்கேதான் தேவன் அவரை உலகத்தின் பாவங் களுக்காக நியாயந்தீர்த்தார். அவர்கள் என்ன செய்தனர்? தேவனுக் கான பாவநிவிர்த்தியாகிய மரணத்தை அவர் சந்தித்தார். பாவிகளை தேவனிடம் ஒப்புரவாக்கத்தக்கதாக அவர் மரணத்தை அடைந்து யோர்தான் நதியைக் (மரணம்) கடந்தார். அவர்கள் அவரை அடக்கம் செய்தனர். அவர் மரித்தார், சந்திரனும் நட்சத்திரங்களும் தங்களுக்கு அவமானம் என்று நினைத்துக் கொள்ளும் நிலைக்குச் சென்றன. அவர் மரித்தார், பூமிக்கு நரம்புத்தளர்ச்சி உண்டானது. அது அதிர்ந்ததால் கற்கள் மலைகளிலிருந்து உருண்டோடின. அது அதிர்வுற்றுதால் நட்சத்திரங்கள் பிரகாசிக்க முடிமாற்யோயிற்று, சந்திரனால் பிரகாசிக்க முடியவில்லை, பகலின் நடுவேளையிலே சூரியன் மறைந்தது. அவர் மரித்தார்! ஒரு ரோமன் பத்து பவுண்ட் எடையுள்ள ஈட்டியை எடுத்து அதை அப்படியே அவருடைய இருதயத்திற்குள் முழுவதுமாக குத்தி அழுத்தித் திணிக்கும் அளவிற்கு அவர் மிகவுமாக மரித்துக் கிடந்தார்; தண்ணீரும் இரத்தமும் வந்தன. அவர் மரித்திருந்தார். அவர் யோர்தானைக் கடந்தார். அவர்கள் அவரை ஒரு கல்லறைக்குள் வைத்து நூற்றுக் கணக்கானோர் ஒரு கல்லைப் புரட்டி வைத்து அதை அடைத்தனர், அவர் மரித்திருந்தார்! அதற்கு மேலாக ஒரு ரோம் முத்திரையை அவர்கள் போட்டனர். 35ஆனால் ஒரு ஈஸ்டர் காலையில் அவர் யோர்தானைக் கடந்து திரும்பவுமாக வந்து ''மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்!'' என்று கூறினார். அவர்களில் சிலர், ''நாம் ஒரு ஆவியைக் காண்கிறோம்'' என்றனர். அவர், “என்னைத் தொட்டுப்பாருங்கள். எனக்கு மாம்சமும் எலும்புகளும் இருக்கிறது போல ஒரு ஆவிக்கு இருக்குமா?'' என்றார். மேலும், ”புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடம் உண்டா? எனக்கு ஏதேனும் ஒன்றைக் கொண்டு வாருங்கள்'' என்றார். அவர்கள் மீன்கண்டத்தையும் அப்பமும் அவருக்கு கொடுத்தார்கள். அவர் அதை புசித்தார். அவர் ஒரு மனிதனாக இருந்தார்! அவர் என்னவாக இருந்தார்? நாம் செல்லப்போகின்ற ஒரு தேசம் உள்ளது என்பதற்கான அத்தாட்சியை அவர் திரும்பக் கொண்டு வந்தார். அவர் என்ன செய்தார்? யோசுவாவைப் போல அதற்குரிய அத்தாட்சியை அவர் கொண்டு வந்தார். அவர், ''இப்பொழுது, அதற்கான அத்தாட்சி உங்கள் தேவையாயிருக்கிற தென்றால், 'நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப் புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெறு வீர்கள்? என்னை உயிரோடெழுப்பினது அந்த அத்தாட்சிதான். உங்களுடைய சுதந்தரத்தின் அச்சாரத்தை நான் உங்களுக்குத் தருவேன்'' என்று கூறினார். அப்பொழுது என்ன சம்பவித்தது? பெந்தெகொஸ்தே நாளிலே பரிசுத்த ஆவியானவர் விசுவாசியின் மீது வந்தார். நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, நம்மை நாமே மரித்தவர்களாக எண்ணி ஞானஸ் நானத்தில் அவருடன் அடக்கம் பண்ணப்பட்டு, அவருடைய உயிர்த்தெழுதலில் அவருடன் எழுப்பப்பட்டோம். எதற்காக? ''உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரத்தக்கதாக''. இன்றிரவு அங்கேதான் நாம் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் (சரீரப்பிர காரமாக அல்ல) ஆவிக்குரிய பிரகாரமாக, நம்முடைய சிந்தை கள், நம்முடைய நினைவுகள், நம்முடைய ஆத்துமாக்கள் உலகத்தின் கவலையிலிருந்து சரியாக இப்பொழுதே அப்பாற் பட்டிருக்கிறது. நாம் எங்கேயுள்ளோம்? ''கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே''. அதற்குள்ளாக நாம் எப்படிச் செல்கிறோம்? ''ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்''. காணப்படாத தேவனுடைய ராஜ்யம்! 36நாம் அதற்குள்ளாகச் சென்று திரும்பி பார்த்து நாம் எப்படி யெல்லாம் பொய் சொல்லுகிறவர்களாக, திருடுபவர்களாக, ஏமாற்றுபவர்களாக, புகை பிடிப்பவர்களாக, தவறான காரியங் களை செய்பவர்களாக இருந்தோம் என்பதைக் காண்போம். நாம் அதிலிருந்து எழுப்பப்பட்டுள்ளோம். நாம் உன்னதங்களிலே இருக்கிறோம். அது என்ன? அவருடைய சொந்த மகிமையின் சரீரத்தைப் போலவே ஒரு நாளிலே நாமும் ஒன்றைப் பெற்றிருப் போம் என்பதற்கான அத்தாட்சி. அதுவே, அது உயிர்த்தெழு தலின் சரியான அத்தாட்சியாகும், ஏனெனில் இயல் திருமுறை யிலே (Potentially) நாம் ஏற்கெனவே அவருடனே எழுந்து விட்டோம், இயல் திறமுறையிலே நாம் ஏற்கெனவே மரித்து விட்டோம். வழக்கம் போல ஜீவிக்கும் வில்லியம் பிரன்ஹாம் இப்பொழுது இல்லை, அவர் சுமார் முப்பதிற்கு மேலான வருடங்களுக்கு முன்னர் மரித்து விட்டார். இப்பொழுது அது புதிய சிருஷ்டியாக உள்ளது. வழக்கம் போல இருந்த ஆர்மன் நெவில் இப்பொழுது இல்லை, அநேக வருடங்களுக்கு முன்னர் அவர் மரித்து விட்டார். இப்பொழுது இருப்பது புதிய சிருஷ்டி யாகும். ஆர்மன் நேவில் மரித்து விட்டார், அந்த குதிரைப் பந்தயம் செல்பவர், சூதாட்டம் ஆடினவர், அல்லது என்னவா யிருந்தாலும் சரி, ஒருகாலத்தில் இருந்த அந்த மனிதன் மரித்து விட்டார். சகோதரன் நெவில் அப்படிப்பட்டவர் அல்ல; எனக்குத் தெரியாது. அவர் எப்படிப்பட்டவராயிருந்திருந்தாலும், அவர் எல்லாவற்றிலும் குற்றவாளி. ''ஒன்றில் தவறினால் எல்லா வற்றிலும் குற்றவாளியாயிருப்பான்''. எப்படிப் பட்டவனாக இருந்தாலும் சரி, நீ ஒரு பாவிதான், அப்படித்தான் நீங்கள் இருந்தீர்கள். நீங்கள் மரித்திருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் உலகத்தின் காரியங்களில் அன்பு கூருகிறீர்கள். நீங்கள் இங்கே இருப்பதாக எவ்வளவாக அறிக்கையிட்டாலும் அதனால் ஒரு உபயோகமும் இல்லை, நீங்கள் உலகத்தை இன்னுமாக நேசிக்கின்ற வரையில் நீங்கள் இங்கே மேலே இல்லை, நீங்கள் இன்னுமாக கீழாக அங்கே தான் இருக்கிறீர்கள். “ஒருவன் உலகத்திலும் உலகத்திலுள்ள வைகளிலும் அன்பு கூர்ந்தால் தேவனுடைய அன்பு அவனுக் குள்ளாக இன்னுமாக பிரவேசிக்கவேயில்லை.'' 37ஆனால் நீங்கள் அதற்கு மேலே உன்னத காரியங்களுக்காக கடந்து சென்று மேலே உள்ள காரியங்களின் பேரில் உங்கள் அன்பு இருக்குமானால், எந்த ஒரு காரியமும் உங்களுக்கு தீங்கு செய்யாது என்ற நிச்சயமிருக்கட்டும், எந்த ஒரு காரியமானாலும், மரணம் கூட... உங்களுக்கு ஒன்றுமே செய்யாது ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடனே எழுந்து இப்பொழுது நீங்கள் உன்னதங் களில் அவரோடு அமர்ந்திருக்கிறீர்கள் நீங்கள் ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் நங்கூரமிடப்பட்டிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை, அந்த அச்சாரம், கிரயம் ஏற்கனவே செலுத்தப்பட்டாயிற்று, நீங்கள் அதை ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? அவருடன் கூட உயிர்த்தெழுதலில் எழுந்து விட்டீர்கள். நான் எங்கிருந்தேன் என்பதை திரும்பிப் பார்த்தால், இப்பொழுது இதற்கு மேலாக நான் இருக்கிறேன். எப்படி? அவர் தம்முடைய கிருபையினால் என்னை மேலே தூக்கி எடுத்தார், ஆகவே இப்பொழுது நான் கிறிஸ்துவுக்குள்ளாக உன்னதங்களில் அமர்ந்திருக் கிறேன். ஓ, என்னே! உங்களுக்கு புரிகின்றதா. அப்பொழுது வேதாகமம் உங்களுக்கு புதிய புஸ்தகமாகின்றது. அப்பொழுது நீங்கள் அதை ஆவிக்குரிய கண்களாலும் ஆவிக் குரிய புரிந்து கொள்ளுதலாலும் வாசிக்கின்றீர்கள். அப்பொழுது நீங்கள் பெயற்சொல்களையும், (nouns) பிரிதி பெயர் சார்ந்த சொற் களையும் (Pronouns) மற்றும் சந்திப்புகளையும் (junctions)... மற்றும் இணையிடைச் சொற்களையும் (conjuctions) இன்னும் மற்றவை களையும் வேதாகமத்தில் நீங்கள் காண்பீர்கள். ஓ, அது கூறுவதெல்லாமே... சிலர் ''அது தனக்குள்ளாக முரண்பாட்டைக் கொண்டிருக்கிறதே“ என்று கூறலாம்; அப்படி யென்றால் நீங்கள் இங்கே இந்த பகுதியை வாசிக்கின்றீர்கள். சற்று மேற் பகுதிக்கு வந்து அதை வாசித்துப்பாருங்கள், அப்பொழுது அது வித்தியாசமாக இருக்கும். புரிகின்றதா? நிச்சயமாக அது உண்மை. நீங்கள் ஆவிக்குள்ளாக அதை வாசித்தால் அது முழுவதுமாக ஒரு புதிய காரியமாக இருக்கும். ஆம். இதோ இந்த கேள்வி ஒரு கேள்வியாக இருக்கவில்லை, அது கூறுவது: 38நான் கர்த்தரைக் கண்ட வரைக்கும் அநேக வருடங்களாக நான் பாவத்தில் வாழ்ந்தேன். சகோதரன் பிரன்ஹாம், தயவு செய்து... நான் மறுபடியும் பாவம் செய்தேன். ஆகவே இந்த பரிசுத்த ஸ்தலத்தில் உங்களுக்கு முன்பாக வருவதற்கு நான் தகுதியற் றவன். மறுபடியும் முழுவதுமாக திரும்பவும் புதிய வாழ்க் கைக்கு நான் கொண்டுவரப்படமுடியுமா என்று எனக்கு தயவு செய்து கூறுங்கள். சகோதரன் பிரன்ஹாம், தயவு செய்து எனக்கு உதவுங்கள், எனக்குள்ளாக ஒரு பிசாசு இருக்கிறது. எனக்கு உதவி செய்யுங்கள்! நீர் தாமே என் மீது கைகளை வைத்து என்னைத் திரும்பவுமாக கொண்டு வருவீர்களா? இதோ, ஒரு கேள்வி இருக்கிறது, சற்று முன்னர் அதை வாசித்த போது அதை நான் கவனிக்கவில்லை. இதோ ஒரு கேள்வி. இப்பொழுது அந்த நபர் இங்கே இருப்பாரானால்... இதை நான் உங்களுக்கு வாசிக்கட்டும்: நான் கர்த்தரை கண்ட வரைக்கும் அநேக வருடங்களாக நான் பாவத்தில் வாழ்ந்தேன். தயவு செய்து சகோதரன் பிரன்ஹாம்... (பாருங்கள்?)... நான் மறுபடியும் பாவம் செய்தேன். ஆகவே இந்த பரிசுத்த ஸ்தலத்தில் உங்களுக்கு முன்பாக வருவதற்கு நான் தகுதி யற்றவன். மறுபடியும் முழுவதுமாக திரும்பவும் புதிய வாழ்க்கைக்கு நான் கொண்டு வரப்பட்ட முடியுமா என்று எனக்கு தயவு செய்து கூறுங்கள். ஆம். நீங்கள் பாவம் செய்யவில்லை (என் நண்பரே) தேவனுக்குள் இருக்குமட்டும் நீங்கள் புதிய வழிக்கு திரும்பக் கொண்டுவரப் படமுடியும். புதிய வாழ்க்கைக்கு திரும்பக் கொண்டுவரப் படமுடியாதபடிக்கு அந்த நிலைக்கு நீங்கள் பாவம் செய்திருப் பீர்களானால், நீங்கள் திரும்பக் கொண்டுவரப்பட் (restore) விரும்ப மாட்டீர்கள். பாருங்கள்? பாருங்கள்? ஆனால் உங்கள் இருதயத் துடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒன்று இருக்கும்வரைக்கும், நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படும் பாதையில் இன்னுமாக இருக்கின்றீர்கள். ''சிறிய ஒன்றுக்கு குற்றவாளி முழுவதற்கும் குற்றவாளி யாயிருக்கிறான்''. நான் அநேக முறை பாவம் செய்திருக்கிறேன், நாம் செய்ய விரும்பாத அநேக காரியங்களை நாம் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நாளும் செய்கின்றோம். 39நம்முடைய இருதயத்தில்..... நீங்கள் அவ்விதமாக இருக்க விரும்பவில்லை. இல்லையென்றால் நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டிருக்கமாட்டீர்கள். பாருங்கள்? இதுவே தேவன் உங்களுடன் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி யாகும். (ஒருக்கால் நீங்கள் பயந்து போயிருப்பீர்கள், நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படமுடியாது என்று சாத்தான் உங்களிடம் கூறிக்கொண்டிருந்திருப்பான். அவன் பொய் சொல்கிறான், நிச்சய மாக அவன் பொய்யைக் கூறுகிறான்). ஏனெனில், கவனியுங்கள், கூப்பிடுகின்ற ஒரு ஆழம் இருக்குமானால், அதற்கு பதிலளிக்கிற ஆழம் ஒன்று இருந்தேயாக வேண்டும். ஏதோ ஒன்றிற்காக ஒரு பலி இருக்குமானால், அந்த ஏதோ ஒன்று எங்கோ ஓரிடத்தில் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் நீங்கள் அதற்கான பசி உங்களிடம் இருக்காது. பாருங்கள்? அநேக முறை நான் கூறியிருப்பது போல், ஒரு மீனுக்கு அதனுடைய முதுகில் நீந்த பயன்படும் உறுப்பு இருக்கும் முன்னர், அது நீந்தத்தக்கதாக முதலாவதாக தண்ணீர் இருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த மீனுக்கு அந்த நீந்த உதவும் உறுப்பு இருக்கவே இருக்காது. பூமியிலே ஒரு மரம் இருப்பதற்கு முன், ஏன்? அந்த மரம் வளரவேண்டுமாயின், அதற்கு முன்பே ஒரு பூமி இருக்க வேண்டும். 40இப்பொழுது, ஒரு சிருஷ்டிப்பிற்கு முன், அந்த சிருஷ்டிப் பைச் சிருஷ்டிக்க ஒரு சிருஷ்டிகர் இருந்தாக வேண்டும். நான் என்ன கூற முயல்கிறேன் என்பதைக் காணமுடிகிறதா? நீங்கள் தேவனிடம் திரும்புவதற்காக விருப்பமும் பசியும் கொண்டிருக் கிறவர்களாக இருக்கும் பட்சத்தில், உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் தேவன் எங்கோ இருக்கின்றார், பாருங்கள், இல்லையென்றால் நீங்கள் பசி, வாஞ்சையுடைவர் களாய் இருக்கமாட்டீர்கள். ஒரு சிருஷ்டிகர் இருக்கின்றார்! இப்பொழுது, நீங்கள்... நீங்கள் திரும்பவும் வரமுடியாத படிக்கு நீங்கள் கடந்து செல்கிற ஒரு இடம் இருக்கிறது, நீங்கள் முன்பிருந்த நிலைக்கே மறுபடியுமாக சென்று விடுகின்ற நிலைதான் அது. அது எதைக் காண்பிக்கிறதென்றால் நீங்கள் கிருபை யிலிருந்து விழுந்து போனீர்கள் என்பதே. பின்மாற்றம் இழந்து போகப்பட்ட நிலை அல்ல. பின்மாற்றமடைதல் இழந்த ஒரு நிலை என்பது எங்குள்ளது என்றும் அதை யாராவது வேதப்பூர்மாக என்னிடமாக கூறி நிருபிக்க நான் விரும்புகிறேன். இஸ்ரவேலர் பின்மாற்றமடைந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் உடன்படிக்கையை இழக்கவில்லை, அவர்கள் தங்கள் துதிகளையும் சந்தோஷத்தையும் இழந்தனர். உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை தாவீது எடுத்துக் கொண்ட போது தாவீது இரட்சணியத்தின் (Salvation) சந்தோஷத்தை இழந்தான், ஆனால் தன்னுடைய இரட்சணியத்தை (Salvation) இழக்கவில்லை. “என் இரட்சணியத்தை (Salvation) திரும்பவும் எனக்குத் தந்து'' என்று அவன் ஒருக்காலும் கூறவில்லை. அவன் ”என் இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்கு தந்து'' என்று தான் கூறினான். 41ஓ, இன்றைக்கு பிரமாணத்தை மீறி அனுசரித்தல் கொள்கை (legalism) போன்றவை மிக அதிகமாக உள்ளது, ''தொடாதே, ருசிபாராதே'' போன்றவை. நீங்கள் காரியங்களை சரியான அனுசரிப்பின்படியே (Legalism) செய்வதில்லை. நான் சபைக்கு இன்றிரவு முழுவதும் சரியான அனுசரித்த லோடு வரவில்லை. நான் களைப்புற்றிருக்கிறேன், நான் நரம்புத் தளர்ச்சியுற்றவனாக இருந்திருக்கிறேன், வெளியே எனக்காக இருக்கின்ற ஏதோ ஒன்றிற்காக நான் ஆச்சரியத்துடன் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன், என் இருதயம் எரிந்து கொண் டிருக்கிறது, என் இருதயம் விரைவாக துடிக்கின்ற அளவிற்கு காரியம் இருக்கிறது. சரியாக இந்த நிமிடத்தில் எனக்கு வலியும், மேலும் கீழும் முன்னும் பின்னும் வலியெடுக்கும் தசைப்பிடிப்பு இங்கே இருக்கிறது. பலவீனம், நரம்புத்தளர்ச்சி, நடுக்கம்; இங்கே பிடித்துக்கொண்டு பிழிகின்றது; என் காலணிகளில் என் கால்விரல் வலிக்கின்றது. எல்லா வலியும் இருந்தது. ஆனாலும் இங்கே வந்து விட்டேன். அப்படியானால் நான் ஏன் இங்கு வந்துள்ளேன்? ஏனெனில் நான் தேவனை நேசிக்கிறேன். வாழ் வோ அல்லது சாவோ, அவருக்காக நான் இங்கே நிற்க வேண்டும். நான் அப்படியாக செய்ய வேண்டும் என்பதனால் அல்ல. நான் செய்தேனா அல்லது செய்யவில்லையா என்று அவருக்கு ஒரு பொருட்டல்ல. நான்... எப்படியாயினும், நான் மரித்தால் நான் பரலோகம் செல்வேன். நான் இங்கே வருகின்றேன். ஏனென்றால் நான் அவரை நேசிக்கின்றேன். நீங்கள் தேவனை நேசிப்பதால் தான் அவருக்கு ஊழியம் செய்கிறீர்கள், நீங்கள் அதை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. ஏனென்றால் அவ்வளவாக அவரை நீங்கள் நேசிப்பதால் தான்! 42என் மனைவி என்னை விவாகரத்து செய்து விடுவாளோ என்ற பயத்தில் நான் என் மனைவிக்கு உண்மையாயிருக்கிறேன் என்றல்ல. நான் அவளை நேசிப்பதால் நான் அவளுக்கு உண்மை யாயிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அவளைத் தவிர உலகத்தில் வேறெந்த ஸ்திரீயும் தெரியாது. அதன் காரணமாகத்தான் நான் அவளுக்கு உண்மையாயிருக்கிறேன். நான் ஒரு தவறு செய்து, நான் ஏதோ தவறு செய்து விட்டேன் என்று அவர்கள் நினைக்கும் போது, நான் இவளிடம் வந்து, “மேடா, தேனே, அவ்விதமாக நான் செய்ய வேண்டும் என்று விழையவில்லை'' என்று கூறும் போது அவள் அதை மன்னித்து விடுவாள், அவள் அவ்விதமாகச் செய்வாள் என்று நான் அறிவேன். நான் அவளை மன்னித்து விடுவேன்; நான் அவளை நேசிக்கிறேன். நானும் அவளை மன்னிப்பேன்; அவளும் என்னை மன்னிப்பாள். ஆனால் நான் அந்த விதமாக தவறு செய்யமாட்டேன், ஏனெனில் அவளை நான் மிகவுமாக நேசிக்கிறேன். ஆதலால் நான் செய்ய மாட்டேன். அவள் என்னை மன்னிப்பாள் என்று நான் நினைக்காத்தால் அல்ல, அவளை நான் மிகவுமாக நேசிப்பதாலே நான் முதலாவதாக அவ்விதமாக செய்யவில்லை. நான் அந்த விதமாக அவளை நேசிக்கின்ற வரையில், நான் அந்த தவறைச் செய்யமாட்டேன்; அவள் என்னிடமாக அன்பு கூரவேண்டிய விதத்தில் அவள் என்னை நேசித்தால் அவளும் கூட அவ்விதமாக செய்யமாட்டாள். ஆகவே நீ கர்த்தரை உன் முழு இருதயத்தோடு அவரை நேசித்தால் இந்த காரியங்களைக் குறித்து நீ கவலைப்பட வேண்டிய அவசியம் உனக்கு இல்லை. நீங்கள் தவறு செய்யும் போது, நீங்கள் மனப்பூர்வமாக பாவம் செய்யவில்லை, நீங்கள் தவறான ஏதோ ஒன்றை செய்துவிட்டீர்கள். பாருங்கள், நீங்கள் பின்னாலே சென்றுவிட்டீர்கள். உண்மையாக, நீங்கள் இங்கே மேலே ஐக்கியத்தில் இருந்தீர்கள், இங்கிருந்து மறுபடியுமாக நீங்கள் இந்த தாறுமாறுக்குள் கீழ் நிலைக்கு சென்று விட்டீர்கள். 43ஆனால் அது என்ன? அது ஒரு கழுகு போல. ஒரு சமயம் நான் கண்ட... இங்கே சின்சின்னாட்டி மிருகக் காட்சி சாலையில், நான் சாராளை அழைத்து அதில் சென்று கொண்டிருந்தேன். நான் ஒரு காட்சியைக் கண்டு அது என்னை பாதிப்படையச் செய்யு மானால், அது மிருகங்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பதே ஆகும். ஒரு கூண்டுக்குள் எந்த ஒன்றும் அடைக்கப்பட்டிருப்பதை நான் காணும் போது என்னால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியாது - சிறு பறவைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் கூட. பெண்களாகிய நீங்கள் அதைப் போன்ற சிறு பறவைகளை வைத்திருக்கிறீர்கள் என்பதை நானறிவேன், நீங்கள் அவைகளை வெளியே விட்டு விடுங்கள். நான் ஒரு சிறு பையனாக இருக்கையில், “எனக்கு ஒரு தருணம் கிடைக்குமானால், நான் ஒரு மனிதனாக ஆகும்போது, நான் ஒவ்வொரு வீட்டிற்குள் மெதுவாக நுழைந்து அந்த சிறு உயிரினங்களை வெளியே எடுத்து விட்டு விடுவேன்” என்று கூறுவதுண்டு. ஆம், ஐயா. நான் கூறினேன். அங்கே சூரிய உஷ்ணத்தில் அவை இருக்கின்றன, இவர்கள் அதைப் பார்த்து 'ஹா, ஹா, ஹா“ என்று சிரிக்கின்றனர். அங்கே ஒரு பெண் ஒரு முன் தாழ்வாரத்தில் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருப் பாள், பாவம் அந்த சிறு பறவை அங்கே வெப்பத்தில் பொசுக்கப்பட்ட நிலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும். அந்த பறவையால் ஒன்றுமே செய்யமுடியாது, அது அங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கத்தான் முடியும். அது அதற்காக பிறக்கவில்லை! நான் ”உம், நான் மாத்திரம் மெதுவாக நுழைந்து அதை வெளியே திறந்து விட முடியுமானால், அது நீண்ட காலம் அதில் இருக்காது'' என்று நினைத்தேன். பாருங்கள்? 44கூண்டில் அடைக்கப்பட்ட எந்த ஒன்றையும் பார்க்க எனக்கு விரும்பமில்லை. ஒரு மனிதன் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொண்டு பிறகு ஏதோ ஒரு சபைக் கோட் பாட்டிற்குள் அடைபட்டுக்கிடப்பதை காண்பது எனக்கு வெறுப் பாக இருக்கிறது “என்னால் ஆமென் என்று சொல்ல முடியாது. அதில் எனக்கு விசுவாசம் கொள்ள முடியவில்லை. 'அதை விசுவாசிக்காதே' என்று போதகர் கூறுகிறார்”'. ஓ, என்ன, அது! நீ சுதந்தரமாய்ப் பிறந்த ஒருவன். அப்படியானால் ஒரு பெரிய கழுகைக் குறித்தென்ன? அது ஒரு உன்னதப் பறவையாகும். அது மேலே மேகங்களுக்கு மேலே வாழ்கின்ற ஒன்று. ஒரு காலையில் அது அங்கே தான் செல்கின்றது. மிக உயரத்தில் அது பறக்கும். வேறெதுவுமே அதைப் பின் தொடர்ந்து பறக்க முடியாது! எந்த ஒரு பறவையும்... அந்த கழுகைப் பின் தொடர்ந்து பறக்க முயலுமானால் அது சிதறிப் போய்விடும். அது விசேஷமாக உருவாக்கப்பட்ட பறவை யாகும். அந்த கழுகை யாரோ சிலர் மனிதனால் உண்டாக்கப்பட்ட கண்ணியில் சிக்க வைத்து, இந்த பெரிய கழுகைப் பிடித்து இந்த கூண்டிற்குள் அடைத்துப் போட்டனர். பாவம், இந்த பரிதாபத் திற்குரியது. நான் அதை நோக்கிப் பார்த்தேன், என் இருதயம் அப்படியே எரிந்தது. அது வேறு பக்கமாக திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த கூண்டிலிருந்து எப்படி வெளியே செல்ல வேண்டுமென்று அதற்குத் தெரியாதிருந்தது. அது அப்படியே அங்கே... எப்படி மேலே எழும்ப முடியும் என்பதுதான் அதற்கு தெரியும். அது தன் இறக்கைகளை அடிக்கும். மேலே எழும்பும், நேராக இரும்பு கம்பிகளில் தன் தலையை மோதும். அதன் இறக்கைகளிலிருந்து சிறகுகள் விழும், இறக்கைகளை விரித்து அசைக்கும், அது தன் தலையில் இரத்தம் வடியும் அளவிற்கு அவ்விதமாக செய்து கொண்டிருக்கும். அது மேலே உள்ள இரும்புக் கம்பியில் வேகமாக மோதி அப்படியே வேகமாக கீழே விழும். அது அப்படியே இருந்து அதன் சோர்ந்து போயிருக்கின்ற கண்களை உருட்டி வானத்தை நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கும், ''நான் அதோ அந்த இடத்தைச் சேர்ந்தவன். அதோ என் வீடு. அந்த இடத்திற்காகத்தான் நான் பிறந்திருக்கிறேன். ஆனால், பார், எனக்கும் அதற்கும் நடுவில் ஒரு கூண்டு இருக்கிறது. ஆம், எனக்குத் தெரிந்த ஒன்றேயொன்று என் சிந்தையை அதற்கு நேராக வைப்பதேயாகும், இதோ நான் வருகிறேன்.'' அப்பொழுது அது எழும்பும். ''படார்'' என்று மோதும் சத்தம் கேட்கும், திரும்பவும் அது கீழே விழுந்து விடும். 45'ஓ, என்னே , அது பயங்கரமாயிருக்கிறதே!'' என்று நான் நினைத்தேன். ''அவர்கள் அதை எனக்கு விற்றால் நலமாயிருக்கும். நான் என் ஃபோர்ட் காரை அடகு வைத்து அதை வாங்கி அதை சுதந்தரமாக விட்டு விடுவேன்'' என்று நினைத்தேன். பாருங்கள்? ஓ, அந்த காட்சி என்னை வேதனையுறும்படிக்குச் செய்தது. அந்த பரிதாபத்திற்குரிய பெரிய பறவை, அது சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தது.... ''நான் கண்டதிலேயே மிகப் பயங்கரமான காட்சி இதுதான்'' என்று நான் நினைத்தேன். இல்லை, நான் அதைத் திரும்ப பெற்றுக்கொள்கிறேன், நான் கண்டதிலேயே மிகப்பயங்கரமான காட்சியானது தேவனுடைய குமாரனாக இருக்க ஒரு மனிதன் பிறக்கிறான். ஆனால் பிறகோ அவன் ஏதோ ஒரு கோட்பாடு என்னும் கூண்டுக்குள் அடை பட்டுப் போகிறான். அங்கேயிருந்து அவன் மேலே நோக்கிப் பார்த்து தான் உண்மையாகவே ஊழியம் செய்ய விரும்புகிற ஒரு தேவனைக் காண்கிறான். ஆனால் அவனால் அதைச் செய்ய முடிய வில்லை. அவ்விதமாகச் செய்ய அவனை அவர்கள் விடமாட்டார் கள். பாருங்கள், அவன் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறான். அது ஒரு மோசமான காரியமாகும். 46ஆம், ஆம், சகோதரியே, சகோதரனே, இதை எழுதின யாராயிருந்தாலும் சரி, நீங்கள் இங்கே விழுந்து போயிருப்பீர் களானால், அதனாலே நீங்கள் இழந்து போகப்பட்டீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள், ஒரு கூண்டிற்குள் சென்றிருக்கின்ற ஒரு கழுகுதான், அவ்வளவே. நீங்கள் இங்கே மறுபடியுமாக பாவத்தில் மேலும் கீழுமாக அடைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதிலே இருக்க உங்களுக்கு விருப்பமில்லை, அதன் காரணமாகத்தான் நீங்கள் மேல் நோக்கிப் பார்க்கிறீர்கள். இதோ உங்கள் நிலை ''ஓ, சகோதரன் பிரன்ஹாம், ஒரு காலத்தில் நான் அங்கே மேலே ஜீவித்துக் கொண்டிருந்தேன், இங்கிருந்து வருவதற்கு ஒரு வழி இருக்கிறதா?'' ஆம். ஒரு நாளில் நான் (ஓ, ஒரு சிறு பையனாக இருக்கையில்) ஒரு பண்ணைக்கு பின்புறமாக நடந்து சென்றது என் நினைவிற்கு வருகிறது, இங்கே... யாரோ ஒருவர் ஒரு காகத்தை அந்த தானியப் பயிரிடம் செல்ல முடியாதபடிக்கு கட்டி வைத்திருந்தார். அந்த பரிதாபமான காகம் ஏறக்குறைய மரிக்கும் நிலையில் இருந்தது. அந்த விதமாக கேவலமான காரியத்தை செய்யும் நிலைக்கு நான் மட்ட மானவன் அல்ல. அவன் அந்த பரிதாபமான காகத்தின் ஒரு காலைக் கட்டியிருந்தான், அந்த காகத்திற்கு தின்பதற்கென எல்லாமே அதைச் சுற்றிலுமிருந்தன, ஆனால் அந்த காகத்தால் எதையுமே சாப்பிட முடியவில்லை. அந்த விவசாயி அதை அப்படியே விட்டுச் சென்றுவிட்டான். அந்த காகம் எழுந்திருக்கவே முடியாமல் மிகப்பரிதாபமான நிலையில் காணப்பட்டது. அதனால்... மற்ற காகங்கள் பறந்து வந்து “கா, கா, கா'' என்று இந்த காகத்தின் மேலிருந்து கூறினது. வேறுவிதமாகக் கூறினால், ''எழும்பி வா, ஜானி காகமே! குளிர் காலம் வருகின்றது, நாம் தென்பாகம் சென்று விடுவோம்'' என்பதே. ஆனால் அந்த காகத்தால் எழும்பவே முடியவில்லை, அது கட்டப்பட்டிருந்தது. 47ஒரு நாளிலே ஒரு குறிப்பிட்ட ஆள் அங்கே வந்து அந்த பரிதாபமான காகத்தைக் கண்டான். ஆகவே அவன் அதனிடம் சென்று அதைப் பிடித்து அதைக் கட்டவிழ்த்து “ஓ, பையனே, நீ விடுதலையாயிருக்கிறாய்' எழும்பிச் செல்” என்றான். பாருங்கள்? ஆகவே அப்பொழுது, முதலாவதாக என்னவென்று உங்களுக்கு தெரியுமா, அந்த காகம் சுற்றுமுற்றும் நடந்து கொண்டிருந்தது. அங்கே திரும்பவுமாக அந்த காகங்கள் வந்து “ஜானி காகமே! எழும்பி வா, கா, கா, கா! நாம் தென் பாகம் சென்று விடுவோம், குளிகாலம் வருகின்றது. இல்லையென்றால் நீ குளிரில் உறைந்து போய் மரித்துவிடுவாய்'' என்று கூக்குரலிட்டன. இந்த காகமோ, “என்னால் அப்படிச் செய்யமுடியவில்லை'' என்றது. பாருங்கள், கட்டப்பட்ட நிலையில் இருந்தே அதற்கு பழகிவிட்டது, பாருங்கள், அது தான் இன்னுமாக கட்டப்பட்டுத் தான் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்தது. இந்த கேள்வியை எழுதின சகோதரனே, சகோதரியே, நீங்கள் கட்டப்பட்டிருக்கிறீர்கள் என்று ஒருக்கால் நீங்களும் கூட நினைக்கலாம். பிசாசு உங்களை அங்கே கட்டிப்போட்டிருக்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அவன் பொய் சொல்கிறான். ஒரு காலத்திலே பூமிக்கு ஒரு மனிதன் வந்தார், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து, அவர் உங்களை கட்டவிழ்த்து விட்டார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களல்லவா, நீங்கள் இன்னுமாக அங்கேயே இருக்க வேண்டியதில்லை, தேவையில்லை, இல்லை, ஐயா, நீங்கள் விடுதலையாகிருக்கிறீர்கள். அது சரி. உங்கள் பாவங்களை எடுத்துப் போட உங்களுடைய இடத்தில் அவர் மரித்தார். நீங்கள் அவர் பேரில் விசுவாசத்தை வைத்து, உங்கள் இறக்கைகளை அடித்து அந்த மற்றவர்களோடு பறந்து செல்லுங்கள். அந்த பிசாசினு டைய பள்ளத்தில் தங்கிவிடாதீர்கள். கூடாது ஐயா. 48இப்பொழுது, நீர் தாமே என் மீது கைகளை வைத்து அதிலிருந்து என்னை விடுவிப்பீர்களா? அருமை சகோதரியே அல்லது அருமை சகோதரனே, நிச்சயமாக, நான் உங்கள் மீது கைகளை வைப்பேன், ஆனால் அது உங்களை விடுதலையாக்காது. உங்களை விடுவிப்பது எதுவென்றால், நீங்கள்... நீங்கள் ஏற்கெனவே விடுதலையாயிருக்கிறீர்கள் என் பதை புரிந்து கொள்கிறதினாலே. நீங்கள் ஏற்கெனவே கட்ட விழ்க்கப்பட்டிருக்கறீர்கள். விடுதலையாயிருக்க வேண்டுமே என் பதை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, நீங்கள் ஏற்கெனவே விடுதலையாகியிருக்கிறீர்கள்! இயேசு உங்களை விடு வித்துவிட்டார். நீங்கள் மறுபடியுமாக அடிமைத்தனத்தின் நுகத்திலே சிக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் சுதந்திரமாக இருக் கிறீர்கள். நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என் கைகளை உங்கள் மீது வைப்பது ஒரு வழக்கமேயாகும். நாங்கள் அதைச் செய்யலாம். அது என்னால் அதைச் செய்யக் கூடும், ஆனால் அவர் உனக்காக செய்துள்ளதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்வரை கைகளை வைப்பது உங்களை விடுதலையாக்காது; “கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று நான் மாத்திரமே கூறிக்கொண்டிருப்பேன். 49ஆம், நீங்கள் விசுவாசத்தாலே அவர் மீது உங்கள் கைகளை வைத்து ''கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன்'' என்று கூறுங்கள், மேலே எழும்புங்கள். அது சரி, உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். பாருங்கள், ''தன் பாவங்களை மறைத்து வைக்கிறவன் வாழ்வடையமாட்டான், தன் பாவங்களை மறைக் கிறவன். தன் பாவங்களை அறிக்கை செய்கிறவன்...'' நீங்கள், ''நான் பாவம் செய்துவிட்டேன், நான் தவறாயிருக்கிறேன்'' என்று கூற விரும்புகிற போது அதில்தான் நீங்கள் விடுதலையும் நீதிமானாக்கப்படுதலையும் பெறுகிறீர்கள். அதைத் தான் நீங்கள் இங்கே கூறியிருக்கிறீர்கள்: நான் விழுந்துபோய் விட்டேன், நான் பாவம் செய்தேன். நான் பயங்கர தவறாயிருக்கிறேன்! நான் மறுபடியுமாக முழுவதுமாக சரியாவதற்கு ஒரு வாய்ப்பு எனக்கு இருக்கிறதா? நிச்சயமாக! நீங்கள் அதை வாஞ்சித்த அந்த நிமிடத்தி லேயே, அது உங்களை மேலே தூக்கியெடுக்க உயிர்காக்கும் மிதவைப் பொருள் கட்டப்பட்டுள்ள கயிறை தேவன் உங்களிடம் கீழே விட்டிருக்கிறார் என்பதை இது காண்பிக்கின்றது. ஜெபம் மற்றும் விசுவாசம் என்னும் அவருடைய கயிற்றைக் கொண்டு மேலே வந்து, நேராக மற்ற கழுகுகளைச் சென்றடையுங்கள், சிறகடித்துச் செல்லுங்கள். அது சரி. 50ஆம், கைகளை மேலே வைத்தல், அது - அது ஒரு மகத்தான காரியமாகும், அதை நான் விசுவாசிக்கிறேன். கைகளை வைத் தலில் எனக்கு விசுவாசம் உண்டு, நிச்சயமாக நான் விசுவாசிக் கிறேன். ஆனால் அதுதான் காரியங்களைச் செய்கின்றது என்ப தல்ல. நான் வாரம் முழுவதும் வாரத்திற்குப் பிறகும் நான் ஜனங் களின் மீது கைகளை வைக்கலாம், ஆனால் கிறிஸ்து உங்களுக்காக செய்ததை நீங்கள் ஏற்றுக்கொள்கின்ற வரையிலும் அது உங்களுக்கு ஒரு நன்மையும் செய்யாது. கைகளை வைத்தல் என்பது நான் செய்யும்படிக்கு எனக்களிகப்பட்ட அதிகாரமாகும். அவர்கள் மூப்பர்கள் மீது கைகளை வைத்தார்கள். அவர்கள் அந்தக் காரியங்களைச் செய்தனர். தேவனுக்கு முன்பாக அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரமாகும், அதற்கு தங்கள் விசுவாசத்தை செலுத்தினர், அதற்கு தங்களுடைய நம்பிக்கையை அளித்தனர். பாருங்கள்? சில சமயங்களில், காரியங்கள்... அநேக முறை நான் மிகவுமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளேன். நான் நான்... கடந்த இரவு. நான் கருத்துக்களுக்கு நடுவாக நிறுத்திக்கொள்கிறேன், எந்த வழியாக நான் திரும்ப வேண்டுமென்று என்று எனக்குத் தெரியவில்லை. நானும் கூட, நான் கருத்துக்கு இடையில் இருக்கிறேன், என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. இது இங்கே சரீரப்பிர காரமாக சபை அல்லது ஆவிக்குரிய சபை இங்கே இருக்கிற தென்று நான் நம்புகிறேன், இதை அவர்கள் பதிவு செய்யவில்லை யென்று நான் யூகிக்கிறேன். ஆகவே நான் விரும்புவதை கூறுவேனாக. அவர்கள்... 51நான் உங்களிடம் மனம்விட்டு பேச வேண்டுமென்று விரும்பினேன், எப்படியாயினும் நான் அதை கூறுவேன் என்று விசுவாசிக்கிறேன். வேத வசனத்தோடே ஒரு குறிப்பையும் நான் இங்கே எழுதி வைத்திருந்தேன், அது... அப்படி இல்லையென்றால், முடிவு கால சுவிசேஷகம் என்பதன் பேரில், முடிவு கால சுவிசேஷகம் என்றால் என்ன என்பதைக் குறித்து பேசுவதாக இருந்தேன். இன்னொரு நாளிலே அதை பேச நான் வைத்து விடுகிறேன். என் இருதயத்திலிருந்து, என் இருதயத்தின் ஆழத்திலிருந்து உங்களிடம் பேச நான் விரும்புகிறேன். நான் கருத்துக்களின் நடுவில் இருக்கிறேன், எந்த வழியாக திரும்புவது என்பது எனக்குத் தெரியவில்லை. உங்கள் ஜெபம் எனக்குத் தேவை. நான் உங்களிடம் சில நிமிடங்கள் பேசுவதற் கான தருணத்தைப் பெறுவதற்காகவே. உங்களிடம் நயமாக இக்காரியங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் வேறொரு காரியத்தை கூற நான் விரும்புகிறேன், பாருங்கள். நாம் ஏதோ ஒன்றிற்கு மிக அருகாமையில் இருக்கிறோம் என்று நான் உணருகிறேன். இப்பொழுது, நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம், அதைச் செய்ய வேண்டாம். பாருங்கள்? 52அன்றொரு நாள் என்னிடம் ஒரு மனிதன் வந்து, என்னை மிகவுமாக வருத்தமாய் உணரும்படிக்குச் செய்தார். (“நிச்சயமாக நான் போதனை செய்யும் போது அந்த விதமாக தெளிவற்ற விதத்தில் நான் பேசவில்லையே'' என்று நான் எண்ணினேன். பாருங்கள்?) அவர், ''சகோதரன் பிரன்ஹாம், குறிப்பிட்ட நாட் களுக்கு பிறகு எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது, அடுத்த பதினைந்து, இருபது நாட்களுக்குப் பிறகு” என்று கூறினார். மேலும், ''இயேசு இங்கிருப்பார், ஆதலால் எனக்கு அந்த அறுவை சிகிச்சையும் தேவைப்படாது என்று நீங்கள் நினைக் கிறீர்களா?'' என்றார். பாருங்கள்? நீங்கள் பாருங்கள், நீங்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம்! பாருங்கள், அவ்விதமாகச் செய்ய வேண்டாம். ஒருக்கால் இன்னும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு இயேசு வராமலிருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனாலும் இன்னுமாக இன்றிரவே அவர் இங்கு இருக்கலாம். அவர் நாளையும் கூட வரலாம். அவர் எப்பொழுது வரப்போகிறார் என்று எனக்குத் தெரியாது, அது எவருக்குமே தெரியாது. வெளிப்படையாகக் கூறுவோமானால், அவருக்கே அது தெரியாது. அவ்வாறு தான் அவர் கூறுகிறார். அது யாருக்குமே தெரியாது. அவர் வருவார் என்று பவுல் அவருக்காக ஒவ்வொரு நாளும் காத்திருந்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பத்மூ திவிலிருந்த யோவான் அதைக் காணும்படிக்கு உயிர்வாழ்வான் என்று நினைத்திருந்தான். நிச்சயமாக அவர் தன்னுடைய நாட்களில் வருவார் என்று ஐரேனியஸ் நினைத்திருந்தார். காலங்களினூடாக எல்லாரும் பாலிகார்ப், பரிசுத்த மார்டீன், மற்றும் எல்லாரும் நினைத்தனர். ''நிச்சயமாக அது தான்'' என்று லூத்தரும் நினைத்தார். “இதுதான் அந்த சமயம்'' என்று வெஸ்லி கூறினார். ''இதுதான் அந்த நேரம் ” என்று சார்லஸ் ஃபின்னி, ஜான் நாக்ஸ், கால்வின் ஸ்பர்ஜியன், மற்றும் அவர்களில் எல்லாரும் கூறினர். பில்லி சண்டேயிலிருந்து சரியாக இந்த நாள் வரைக்கும் ஒவ்வொரு வரும் “இதுதான் அந்த நேரம்!” என்று கூறுகின்றனர். 53நாமும் அதற்காக பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த நேரம் எப்பொழுது இருக்கும் என்பது நமக்கு தெரியாது. அது இந்த காலத்தில் தான் என்று நான் விசுவாசிக்கின்றேன், தீவட்டியை நான் பிடித்து வெளிச்சத்தை மேலே உயர்த்த நான் விரும்புகிறேன். ஆகவே கவனியுங்கள், நான்... சரியாக இதைப் பிடித்துக் கொள்ளுங்கள்! அடுத்த நிமிடத்திலே அவருக்காக நான் எதிர் பார்த்திருக்கிறேன் என்ற விதத்தில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுதும் நான் வாழ விரும்புகிறேன், ஆனால் இப்பொழுதிலிருந்து அது சம்பவிக்க பத்தாயிரம் ஆண்டுகள் ஆகும் என்கின்ற விதமாக நான் தொடர்ந்து என் ஊழியத்தை செய்து கொண்டிருக்க விரும்புகிறேன். இன்னுமாக நான் விதை களை விதைத்து அறுவடையை செய்ய விரும்புகிறேன். நான் சுவிசேஷத்தை பிரசங்கித்து நான் எப்பொழுதும் செய்த விதமாகவே தொடர்ந்து ஊழியம் செய்து கொண்டிருக்கவே விரும்புகிறேன். அதைப் போலவே என் கண்களை மேலே நோக்கியவாறே, கவனித்துக்கொண்டே இருப்பேன்; அந்த நெற்கட்டை இழுத்து... தானியக் கதிர்க்கட்டையும், அந்த நெல்லையும் எடுப்பேன். அதன் பிறகு அடுத்த ஆண்டில் மறுபடியுமாக நான் விதைத்து பயிர் செய்வேன், “கர்த்தாவே, கடந்த ஆண்டு நீர் இங்கே இருப்பீர் என்று நான் நம்பினேன், ஆனால் நீர் வரவில்லை யென்றால், இந்த வருடமும் நீர் வரலாம். ஆகவே என் பிள்ளைகளை வளர்க்கத்தக்க தாக நான் பயிர் செய்வேன். நீர் தாமதித்தால், உண்பதற்கென அவர்களுக்கு ஏதாவது இருக்கும்; நீர் வரவில்லையென்றாலும், நான் உமக்காக நோக்கிக் காத்திருப்பேன்.'' புரிகின்றதா, பாருங்கள், இயல்பாக பணிகளை செய்து கொண்டேயிருங்கள். 54காலையில் அவர் வரப்போகிறார் என்று நான் எண்ணினாலும், இன்றிரவு இப்பொழுது நான் பிரசங்கித்துக்கொண்டிருக்கும் இதே செய்தியை நான் பிரசங்கித்துக் கொண்டிருப்பேன். அவர் காலையில் வரப்போகின்றார் என்று நான் நம்புகிறேன் என்றாலும், நான் வெளியே சென்று என் காரை விற்கமாட்டேன், இதை, அதை அல்லது மற்றதை நான் செய்யமாட்டேன். நான் சாதாரண மாக இருக்கின்றது போல அப்படியே நான் சென்று கொண்டிருப் பேன். ஏனெனில் அவர் வருவார் என்று ஒவ்வொரு கணநேரமும் நான் காத்திருக்கிறேன். ஏனெனில் அவர் உங்களுக்காக மாத்திரமே வரலாம், இன்றிரவு உங்களுடைய மணி நேரமாக இருக்கலாம். ஒருக்கால் இன்றிரவு என்னுடைய மணி நேரமாக இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் அவைகளில் ஒன்று நம்முடைய மணி நேரமாக இருக்கப் போகின்றது. நான் இங்கே ஜீவித்துக் கொண்டிருந்தாலோ அல்லது அங்கே வெளியே நான் அடக்கம் பண்ணப்பட்டிருந்தாலும் கூட அது எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்குமா? ஏற்கெனவே எனக்காக மரணத்துக்கான தண்டனை செலுத்தப்பட்டாயிற்று என்றிருக்குமானால், ஜீவித்துக் கொண்டிருக்கின்ற எந்த ஒரு மனிதனுக்கு முன்னதாகவே நான் அங்கே இருப்பேன். அது சரி. ''நான் இதைச் சொல்கிறேன்,'' எதெசலோனிக்கேயர், 5ஆம் அதிகாரம், கர்த்தரின் கற்பனைகளை முன்னிட்டு நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது, கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோ டிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வ தில்லை அல்லது தடை செய்வதில்லை. ஏனெனில் தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்'' , மரித்தவர்கள், சிலாக்கியம் பெற்றவர்கள் முதலில் வருவார்கள். அதன் மூலமாகத்தான் அக்காரியமானது அருகில் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம், பாருங்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, ஒரு நிமிஷத்திலே, ஒரு கண் (eye) இமைப்பொழுதிலே (ஆங்கில வேதத்தில் உள்ள வாறே - தமிழாக்கியோன்) மறுரூபமாக்கப்பட்டு, அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.'' ஆகவே நான் நோவாவின் காலத்தில் மரித்திருந்தாலும், ஆபிரகாமின் காலத்தில் நான் மரித்திருந்தாலும், அப்போஸ்தலர் காலத்தில் நான் மரித்திருந்தாலும், இரண்டு வாரங்களுக்கு முன்ன தாக நான் மரித்திருந்தாலும், அல்லது சரியாக இப்பொழுதே அது இருந்தாலும் என்ன வித்தியாசத்தை அது உண்டுபண்ணுகிறது? அது என்ன வித்தியாசத்தை உண்டாக்குகிறது? ஒரு நிமிஷத்திலே, ஒரு கண்ணிமைப் பொழுதிலே நான் அங்கே இருப்பேன், அந்த நேரம் வரைக்கும் நான் இளைப்பாறிக்கொண்டிருக்கிறேன். 55இப்பொழுது, கர்த்தரோடு அந்த ஒன்று கூடுதல் இருக்கும். யாக்கோபு 49வது அதிகாரத்தில், அவன், ''சமாதான கர்த்தர் வருமளவும்.. நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்“'. அவன்- யூதாவைக் குறித்து பேசுகையில் இவ்விதம் கூறுகின்றான். இப்பொழுது அநேக மக்கள், ஒரு சபை, ஒரு ஸ்தாபனம், சபை பிரமாணம், ஒரு பெரிய மக்கள் கூட்டம் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக ஒன்று சேர்க்கப்பட்டு எடுக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அது அவ்வாறாக அது இருக்காது. அது அல்லவே அல்ல. ஜனங்கள் ஒன்று கூட்டப்படுவது, தேவன் தம்முடைய மந்தையை ஒன்று கூட்டும் போது, அவர் ஜெபர்சன்வில்லில் இருந்து இரண்டு பேரையும், கெண்டக்கியிலிருந்து இரண்டு பேரையும், மிஸ்ஸிசிப்பியிலிருந்து இரண்டு பேரையும் எடுக் கலாம். சரியாக அவ்விதமாகத்தான் அவர் கூறியிருக்கிறார்; அந்த சொற்களல்ல, ஆனால் அவர், ''இரண்டு பேர் வயலில் இருப் பார்கள்'' என்று கூறியிருக்கின்றார், இப்பொழுது பகல் நேரமாக இருக்கின்றது, ''நான் ஒருவனை எடுத்துக் கொள்வேன், மற்றொரு வனை விட்டுவிடுவேன். படுக்கையில் இரண்டு பேர் இருப் பார்கள்“ பூமியின் மற்றொரு பகுதியில் இரவு நேரமாக இருக்கும், ”நான் ஒருவனை எடுத்துக் கொண்டு ஒருவனை விட்டு விடுவேன்''. பாருங்கள்? 56மக்கள் ஒன்று கூட்டப்படுவது, இங்கே ஒரு குழுவாக எடுப்பதற்கு, கோத்திரத்தின்படி பிரிவாக இருக்காது. அது ஒரு உலகளாவிய உயிர்த்தெழுதலின் ஒன்று கூடுதலாக இருக்கும், எடுத்துக் கொள்ளப்படுதலும் அதே விதமாக வரும். ஏனெனில் அவர், ''ஒருவன் அந்த மணி நேரத்தில் நித்திரையடைந்தான், மற்றொருவன் இந்த மணி நேரத்தில் நித்திரையடைந்தான்... அப்படியே ஏழாம் மணி வரைக்கும் இருந்தது. அதன் பிறகு மணவாளன் வந்த போது, அவர்களெல்லாரும், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் கடைசி வரைக்கும் உள்ள அவர்கள் எல்லாரும் விழித்தெழுந்தனர். (Awaked) உள்ளே பிரவேசிக்க ஆயத்தப் படத்தக்கதாக அவர்கள் ஒவ்வொருவரும் விழித்தெழுந் தனர், (Awakened) அது சரி“ என்று கூறினார். இப்பொழுது நீங்கள் பாருங்கள், அவருடைய வருகையின் போது மரித்தோர் எல்லாரும் கல்லறையிலிருந்து எழுவார்கள் என்பதை அவர் காண்பிக்கின்றார், நீதிமான்கள், மணவாட்டி, கல்லறையில் நித்திரையில் இருந்தவர்கள் உயிர்த்தெழுதலில் எழுந்திருப்பார்கள். பிறகு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள், இந்த இடத்திலிருந்து ஒருவர், அங்கிருந்து ஒருவர் என சேர்க்கப்படுவர் என்று அவர் காண்பிக்கின்றார் - ஒரு மக்கள் குழு ஒரு சிறிய குழுவாக ஒன்று கூட்டப்படமாட்டார்கள். ''வயலில் ஒருவன் இருப்பான் அல்லது இருவர் வயலில் இருப்பார்கள், நான் ஒருவனை எடுத்துக் கொண்டு மற்றவனை விட்டு விடுவேன்''. சபையைச் சார்ந்து ஒருவர் பகல் வெளிச்சத்திலிருந்து வருவார். பூமயின் மறுபுறத்திலிருந்து, “படுக்கையில் இரண்டு பேர் இருப் பார்கள், நான் ஒருவனை எடுத்து ஒருவனை விட்டு விடுவேன்''. அது சரிதானே? 57நான் ஜெபர்சன்வில்லில்லோ, அல்லது நான் ஸ்வீடன் நாட்டிலோ, அல்லது நான்... எங்கேயிருந்தாலும் ஒன்று கூட்டப் படுதலானது கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும், எந்த இடமாக இருந்தாலும் சரி, அந்த மேய்ப்பனுக்குள்ளாக ஒன்று கூட்டப் படுதலானது இருக்கும். பாருங்கள்? உயிருடன் இருப்பவர் உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் வருவார்கள். கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்பதற்காக உயிர்த்தெழுதலுடன் நாமும் ஒன்றாக மேலே எடுக்கப்படுவோம். மரித்துப் போயிருக்கின்ற மக்கள் எழுந்திருப்பார்கள். கூடவே சபையும் (ஒன்றாக) கர்த்தரை ஆகயாத்தில் சந்திக்கத்தக்கதாக எடுத்துக் கொள்ளப்படும், பாருங்கள்? அவருடைய வருகையானது உலகளாவிய ஒன்றாக இருக் கலாம். லூயிவில்லுக்கு மாத்திரம் வருகின்ற ஒன்றாக அது இருக்காது. பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன் மாத்திரமே வருகின்ற ஒன்றாக அது இருக்காது. அது “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனை தரிசிப்பார்கள்” என்பதாக இருக்கும், ஆகவே உயிர்த் தெழுதலும் மற்றும் ஒன்று கூட்டப்படுதலும் எல்லா இடங் களிலும் இருந்து வருகின்றதாக இருக்கும். மேலும், அது எப்பொழுது சம்பவிக்கும்? ஒருக்கால் இன்றிரவாக இருக்கலாம், ஒருக்கால் நாளைய தினத்தில் இருக் கலாம், ஒருக்கால் நூறு வருடம் கழிந்து இருக்கலாம், ஒருக்கால் மேலும் ஆயிரம் வருடங்கள் பிறகு இருக்கலாம். எனக்கு தெரியாது. யாருக்குமே தெரியாது. ஆனால் நீங்கள் மற்றும் நான், இன்றிரவு அது சம்பவிக்கப் போவது போல நாம் ஜீவிப்போமாக. 58ஆனால், இப்பொழுது, ''எனக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கின்றது'' என்று நீங்கள் கூறுவது போல. நல்லது, உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி இருக்க, விடுதலைக்கென உங்களுக்கு விசுவாசம் இல்லாதிருக்கும் பட்சத்தில் உங்களுக்கான அறுவைச் சிகிச்சையைச் செய்துக் கொள்ளுங்கள். நான் ஒன்றை வாங்க வேண்டியவனாக இருப்பேனானால்... யாரோ ஒருவர் வந்து அன்றொரு நாளிலே ஒரு குறிப்பை எனக்கு எழுதினார், ஒரு- ஒரு பெரிய கடிதம், இவ்விதமாக கூறினார், ''சகோதரன் பிரன்ஹாம், நான் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நானும் என் மனைவியும் எங்களால் முடிந்த வரைக்கும் தேவனுக்கு மிகவும் உத்தமமாக இருந்து வருகிறோம். எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்த்துள்ளோம். இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் பணம் சேமித்து ஒரு பண்ணையை வாங்கியுள்ளோம். அதை எவ்வளவாக நாங்கள் நேசிக்கிறோம் தெரியுமா! அங்கே பண்ணையில் ஒரு நீரூற்று உள்ளது; அந்த நிலம் முழுவதுமாக ஒரு நீரோடை ஓடுகிறது. ''அது அங்கே ஓரிகானில் இருக்கின்றது. மேலும் அக்கடிதத்தில், ''நீங்கள் ஓரிகானுக்கு வருவதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். என்ன செய்யவேண்டுமென்று நாங்கள் தீர்மானித்துள்ளதை நான் உங்களிடம் கூறுகிறேன். நாங்கள்... பிள்ளைகளுக்கு பண்ணை உபயோகமாக இருக்குமென்று எண்ணி சேமித்து வாங்கினோம், ஏனெனில் அவர்களில் யாருமே கிறிஸ்த வர்கள் அல்ல. இப்பண்ணையை பிள்ளைகளுக்கு வைத்துப் போகலாம் என்று எண்ணினோம். ஏனெனில் அவர்கள் இப்பூமியி லேயே இருந்து உபத்திரவத்துக்குள்ளாக வருவதற்கு பிள்ளை களுக்கென சேமித்து வைத்தோம், ஏதோ ஒன்று அவர்களுக்காக இருக்கட்டும் என்று நாங்கள் பார்த்தோம், ஏனெனில் நாங்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் இருப்போம் என்று விசுவாசிக் கிறோம். ஆகவே அதைக் குறித்து என்ன செய்தென்று எங்களுக்கு தெரியவில்லை, ஆகவே நீங்கள் வரும் போது நீங்கள் பார்க்கத்தக் கதாக பண்ணையை உங்களுக்கு திறந்து விடுகிறோம், நீங்கள் பாருங்கள், பிறகு அதைக் குறித்து நீங்கள் எது வேண்டுமானாலும் கூறலாம்'' என்று எழுதப்பட்டிருந்தது. நான் திரும்பி பதில் எழுதினேன், ''உங்கள் பிள்ளைகளைக் குறித்து இவ்வளவு அக்கறையுள்ளவர்களாக இருப்பது எவ்வளவு நலமான ஒன்று'' என்று எழுதினேன். “நானும் தாயும் மாலை வேளையில் அங்கே செல்கிறோம். நான் ஓய்வு பெற ஆயத்தமாக இருக்கிறேன், எங்களுக்கு இருக் கின்ற அருமையான மகிழ்ச்சி மிக்க தருணங்கள், பண்ணையில் நடந்து செல்வது, நீரூற்றை பார்த்துக் கொண்டிருப்பது, அங்கே நின்று கொண்டு தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டிருப்பது என்பது” என்று கடித்தில் இருந்தது. நான், 'அவ்விதம் தொடர்ந்து செய்து கொண்டேயிருங்கள், சரீரப்பிரகாரமாகவும், பொருள் பிரகாரமாகவும் அந்த விதமாகவே ஜீவியுங்கள். அவர் வந்து முன் தோன்றுகின்ற வரையிலும் அப்படியே செய்து கொண்டேயிருங்கள்'' என்றேன். திட்டமிடுங்கள், தொடர்ந்து செய்யுங்கள், அதைச் செய்யுங் கள், ''கர்த்தருக்கு சித்தமானால்! கர்த்தருக்கு சித்தமானால்! இதை நான் செய்வேன், கர்த்தருக்கு சித்தமானால்.'' அந்த நேரத்திற்கு முன்னதாகவே அவர் வரலாம் (ஒலி நாடாவில் காலியிடம்- ஆசி) அப்படியே தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.... ஆனால் உங்கள் ஆத்துமாவை சீர் நிலையில் ஒழுங்குப்படுத்தி வைத்திருங் கள், ஏனெனில், எந்த நிமிடத்திலும் அவர் வரலாம். பாருங்கள், ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் பாருங்கள், அவர் உங்களுக்காக எந்த ஒரு நிமிடத்திலும், எந்த நொடியிலும், அடுத்த இதய துடிப்பின் போது, அடுத்த மூச்சின் போதும் வரலாம், அவர் உங்களுக்காக வரலாம். நீங்கள் செய்ய விரும்பும் எதையும் தொடர்ந்து செய்து கொண்டேயிருங்கள், அது உண்மை யானதாகவும், வரம்பு மீறாத ஒன்றாகவும், நேர்மையுடைய தாகவும் இருக்குமானால் தொடர்ந்து அதைச் செய்யுங்கள். 59இப்பொழுது, நாம் ஏதோ ஒன்றை எதிர் நோக்கி இருக்கின்றோம் என்று நாம் அறிவோம். அது எனக்குத் தெரியும்; அது உங்களுக்கும் தெரியும். எந்த விதமாகத் திரும்புவதென்று எனக்குத் தெரியவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சிக்கா கோவிலே ஒரு நாள் கர்த்தருடைய ஆவியானவர் என் மீது வந்தார். அப்பொழுது நான் “இதுதான் அது! அந்த எழுப்புதல் முடிந்து விட்டது, அமெரிக்கா தனக்கு அளிக்கப்பட்ட தருணத்தை மறுதலித்து தள்ளி விட்டது” என்று கூறினது உங்களுக்கு நினைவில் இருக்கின்றதா அது ஒலிநாடாவில் இருக்கின்றது. “இனிமேல் ஒன்றும் இருக்காது. அவளுக்கு அளிக்கப்பட்ட கடைசி தருணம், அவள் அதை ஏற்க மறுத்து நிராகரித்தாள்” நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்த ஒலி நாடாவின் தேதி என்ன என்பது யாருக்காவது தெரியுமா? எங்களுக்கு கிடைத்துவிட்டது. லியோ மற்றும் ஜீன் குடும்பத்தார் அதை வைத்திருக்கின்றனர். சிறிது காலத்திற்கு முன்னர் நான் அதைக் கேட்டேன். போஸ் தன்னுடைய காகிதத்தில் அதை எழுதிக் கொண்டார். அதிலிருந்து என்ன சம்பவித்தது என்பதைக் கவனித்துப் பாருங்கள், பாருங்கள், எழுப்புதல் நின்றுபோனது. 60அன்றொரு இரவு புளூ லேக்கில் இதை நான் கூறினேன், அடுத்த நாள் காலை ஒரு சிறிய நபர் எழுந்து வந்து, “பெந்தெ கொஸ்தே அதைக் கொண்டிருக்கிறது, ஆனால் நான் அல்ல என்று சகோதரன் பிரன்ஹாம் ஒருக்கால் கூறலாம்! தேவனுக்கு மகிமை! அல்லேலூயா'' என்று இப்படியாக கூறிக் கொண்டிருந்தார். பாருங்கள், ஆனால் அந்த சிறிய நபர் எக்காளத்தின் எந்த முனையிலிருந்து ஊதுகின்றார் என்பதை அறியாதவராக இருக் கிறார். பாருங்கள், அவருக்கு புரியவில்லை. பாருங்கள், அவருக்குத் தெரியவில்லை. அது பரிபூரணமாக சரி, அது சரி - உணர்ச்சியார்வம் கொள்வது. ஆனால் சுற்றுமுற்றும் பாருங்கள்! அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? ஜனங்களுக்கு என்ன சம்பவித்துள்ளது? எழுப்புதலுக்கு என்ன ஆயிற்று? பில்லி கிரஹாம், ஓரல் ராபர்ட்ஸ், இன்னும் மற்ற எல்லாரும்- என்ன ஆயிற்று? அது முடிந்து போயிற்று! எல்லாம் அணைந்து போய்விட்டது. விதைகள் விதைக்கப்பட்டன. கூட்டம் முடிந்து விட்டது. தீக்கள் எரிந்து அணைந்து விட்டன. (பழைய ரோம் ஆலயத்தில், ரோம் மரபு பெண் தெய்வத்தண்டை, இங்கே பீடத்தில் எரிகின்ற தீ அணைந்த போது வியாபாரிகள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்) எழுப்புதல் இப்பொழுது தொடர்ந்து இல்லை என்பதை நாம் காணலாம். அந்த உணர்ச்சி ஆர்வம் இப்பொழுதில்லை. 611936ல் நதியண்டை நடந்ததைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கிறேன், அவர் கூறினதை நான் நினைவு கூறுகிறேன். அங்கே சம்பவித்தது என்ன? உங்களில் அநேகர் அறிவீர்கள். நான் ஒரு பையனாக இளம் வயதுடையவனாக மாத்திரம் இருந்தேன், என் முதல் ஞானஸ்நானத்தை நான் கொடுத்துக் கொண்டிருந்த போது, நான் எங்கே நின்று கொண்டிருந்தேனோ அங்கே கர்த்தருடைய தூதனானவர் கீழே வந்து நின்று கொண்டிருந்தார். சில மக்கள் 'நீங்கள் அதைக் காணவில்லை'' என்றனர். அது அவ்விதமாகத் தான் என்று விஞ்ஞானம் அப்பொழுது நிருபித்தது. பாருங்கள்? பாருங்கள்? ஆனால் அவர் அங்கே என்ன கூறினார்? ''கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டது போல, உன்னுடைய செய்தியும் இரண்டாம் வருகைக்கு முன்னோடும்'' என்றார். அதை நான் பூமி நெடுகிலும் கண்டிருக்கிறேன், அது உலக முழுவதுமாக சுற்றிலும் சென்றது. ஏறக்குறைய முழு அளவில் எல்லா இடங்களிலும் எழுப்புதல்கள் உண்டாயின. எழுப்புதல் தீக்கள் எல்லா இடங்களிலும் எரிந்து கொண்டிருந்தன, நாம் அறிந்ததிலேயே மகத்தான எழுப்புதல்கள் எழும்பி நடந்தன. இதற்கு முன்னர் ஏதாவதொன்று இதைப் போன்று இருந்த துண்டா? ஒன்று கூட இல்லை! அந்த எழுப்புதலுக்கு இரண்டு வாரத்திற்கு முன்னர், ஒரு நபர் நியூ ஆல்பனியில் ''மக்கள் பில்லி சண்டே மற்றும் அதைப் போன்ற எழுப்புதலைக் குறித்த கீழ்த்தர மான ஆரவார பிரச்சாரத்தை மக்கள் விசுவாசிப்பதுண்டு. அதைத் தவிர வேறொன்றும் கிடையாது என்று எங்களுக்குத் தெரியும், மக்களுக்கு தெளிவான ஆதாரம் தேவைப்படுகிறது. எழுப்புதல் என்ற ஒன்று கிடையவே கிடையாது!'' என்று ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார் என்று நான் கேள்விப்பட்டேன். அவர்கள் தான் அந்த பெரிய அளவிலான கீழ்த்தர பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருந்த போது, அதே நேரத்தில், ஆரம்ப நூற்றாண்டுகள் முதல் நாம் கொண்டிருந்த எழுப்புதலை விட மகத்தான எழுப்புதலை தேவன் வெடித்தெழும்பச் செய்துக் கொண்டிருந்தார், அநேக மக்கள் (இலட்சக்கணக்கானோர்) இரட்சிக்கப் பட்டனர். 62ஒரு மனிதனின் செய்தி மூன்று வருடங்களுக்கு மாத்திரமே நிலைத்து நிற்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன, பிறகு தேவன் அவனை அழைக்கும் வரை அவன் தன்னுடைய புகழின் பேரிலே வாழ்கின்றான். அது கிறிஸ்துவின் முதற்கொண்டே அவ்விதமாகத் இருந்து வருகிறது, அவருடையது மூன்றரை வருடமாகும், பாருங்கள். அதற்கு பின்பு அவ்விதமாகத்தான் இருக்கின்றது, ஸ்பர்ஜன், நாக்ஸ், கால்வின், அதற்கு பிறகு... அவனுடைய தீ எரிந்து போகிறது, அவன் தன்னுடைய கடந்த கால புகழின் பேரிலே வாழ்கின்றான். அவன் தீயவனாக இருந்தா னெனில் அவனுடைய கிரியைகள் அவனைப் பின் தொடரும்; அவன் சரியான ஒருவனாக இருந்தானெனில் அவனுடைய கிரியைகள் அவனைப் பின்தொடரும். அவ்வளவு தான். அப்படியானால் அது எதைக் குறிக்கிறது? ''மகத்தான ஒன்று வருகின்றது என்று நான் விசுவாசிக்கின்றேன்'' என்று உங்களிடம் கூறி வருகிறேன், இந்த சபைக்கு நான் பிரசங்கித்து வருகிறேன். நான் விசுவாசித்து, உங்களிடம் ''கடைசி சபை காலத்தின் செய்தி யாளன் ஒருவன் இருப்பான் என்று வேதவசனங்கள் கூறி ஆதரிக் கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்று உங்களிடம் கூறியிருக்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன். அந்த மனிதன் தோன்றுவதற்காக நான் நோக்கிப் பார்த்திருக்கிறேன், நான் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். 63ஒரு மனிதன் எழும்புவதை நான் பார்க்கிறேன், அவனைக் குறித்து நான் கேள்விப்படுகிறேன், ஒரு மகத்தான மனிதன் ஊழியத்தை வேகமாக பரந்தகன்று செய்ய ஆரம்பிக்கிறான், அவனுடைய செய்தியானது வேதாகமத்தை விட்டு மிகவும் அப்பால் உள்ளதை நான் கவனிக்கிறேன். பிறகு அவன் ஒரு மூலைக்கு பறந்து சென்று விடுவதை நான் காண்கிறேன். பாருங்கள்? மற்றுமொருவன் எழும்புவதை நான் கவனிக்கின் றேன், அவன் மேலே எழும்பிப்பறக்கின்றான், ஆனால் அவன் கழுகுகளின் மத்தியில் செல்வதில்லை, அவன் ஸ்தாபன காகங் களின் மத்தியில் நின்று தங்கி விடுகின்றான். அவனுடைய ஸ்தாபனமாகிய இங்கே அவன் தங்கி விடுகிறான், மற்று மொருவன் அதிக அங்கத்தினர்களையும் மற்றதையும் கொண்டு வருகிறான். அதை நான் கவனிக்கின்றேன், அது மரித்து கீழே போவதை நான் காண்கிறேன். நான் “தேவனே, பிதாக்களுடைய விசுவாசத்தை பிள்ளை களிடத்திற்கு திரும்ப அளிக்கப் போகும் அந்த ஒருவன் எங்கே? அந்த விதைகள் எப்பொழுது நடப்படப்போகின்றன? எங்கே அது இருக்கும்? என்ன நடக்கப்போகின்றது?'' என்று நினைப்பேன். 64இப்பொழுது இதுவாக அது இருக்கும். அந்த நாளிலே நதியண்டையிலே வந்த அந்த செய்தியானது, அதுதான் இது என்றால், கர்த்தருடைய வருகையானது சமீபமாக இருக்கிறது, வரவிருக்கின்றது. அப்படியாக இல்லை என்றால், புயலுக்கு முன்னர் ஒரு அமைதி நிலவுகின்றது. நான் அதை அறியேன். அவர் அதை எனக்கு இன்னும் வெளிப்படுத்தவில்லை. ''அந்தச் செய்தி தான் அவருடைய அதிகாரப்பூர்வமான செய்தியா? நான் அவ்வளவுதான் கூற வேண்டும் என்று அவர் விரும்பினாரா? அவர் எனக்கு கட்டளை அளித்து ஊழியத்தில் அமர்த்தினபோது அவ்வளவேதானா அது? அது அவ்வளவேதானா? அவ்வளவு தான் என்றால், நாம் மிக, மிக அருகாமையில் இருக்கின்றோம். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் கால தாமதமாகிவிட்டது. அப்படி யில்லை என்றால் புயலுக்கு முன்பாக ஒரு அமைதி நிலவுகிறது.'' 65இங்கே சில நாளுக்கு முன்பாக யாரோ ஒருவர் எனக்கு கடிதம் எழுதி என்னிடம் 'சபை உபத்திர காலத்தினூடாக செல்லும் என்று நீங்கள் விசுவாசிக்காவிடில், வெளிப்படுத்தல் 13ஐக் குறித்தென்ன, ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தம் நான் ஆச்சரியப்படுகிறேன் மற்றும் தங்கள் சாட்சியினாலே எப்படி அவர்கள் ஜெயங்கொண்டார்கள்?'' என்று கேட்டார். இந்த கேள்வியை அந்த நபர் கேட்டார். வெளிப்படுத்தலின் முதல் மூன்று அதிகாரங்கள் சபையின் காலத்தில் இருக்கின்ற சபையைக் குறித்து கூறுகின்றன என்று நீங்கள் உணருகிறீர்களா? அது உபத்திரவத்தின் கால மாகும், சபையின் காலம் அல்ல; 4வது அதிகாரத்தில் சபை எடுத்துக் கொள்ளப்பட்டு மேலே செல்கிறது, 19ஆம் அதிகாரத்தில் அது இயேசுவுடன் திரும்பி வரும் வரையில் அது மறுபடியுமாக வருவதே இல்லை. அது சரியே. அது உபத்திரவ காலத்திலாகும், சபையுடன் அதற்கு எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. 66வேதாகமத்தில் நீங்கள் கண்டிருக்கின்ற மகத்தான காரியங் களைக் குறித்த இந்த எல்லா மகத்தான வாக்குத்தத்தங்கள் யாவும், என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைக் குறித்தது, அது யூதருடைய ராஜ்யத்தில் நடைபெறுபவை ஆகும். இங்கே புறஜாதிகள் மத்தியில் அல்ல. மக்களின் விசுவாசத்தை திரும்ப அளிக்க வரவிருக்கின்ற, வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுடன் அவர்கள் கேலிக் கூத்து செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். அதை நான் புரிந்துகொள்ள இருக்கின்ற ஒரே வழி, ஏனென்றால் அவர், ''இந்த செய்திக்கு பிறகு உடனடியாக பூமியானது வெப்பத்தினாலும் அக்கினியாலும் சுட்டெரிக்கப் படும்'' என்று கூறியிருக்கிறார். நாம் இங்கே இருக்கையில் நான் இதை வாசித்து காண்பிப்பேன், அது என்ன கூறுகிறது என்பதை கவனியுங்கள். இராஜ்யத்தின் இந்த சிறிய செய்தி, ஒருக்கால் கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த ஞாயிறு காலை நான் அதைப் பிரசங்கிப் பேன், பாருங்கள் கர்த்தருக்கு சித்தமானால். 67இப்பொழுது இங்கே கவனியுங்கள், இங்கே யோவானின் வருகையைக் குறித்து இருக்கிறது, மல்கியா 3: இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக் கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார், இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3 உங்களால் காணமுடிகிறதா? இப்பொழுது மத்தேயு, கவனியுங்கள் மத்தேயு 11வது அதிகாரம், இதை கவனித்துக் கேளுங்கள், 6வது அதிகாரம். இப்பொழுது நாம் இதை வாசிப்போம் மல்கி... மத்தேயு 11, இயேசு பேசுகின்றார். இப்பொழுது 11வது அதிகாரத்திலிருந்து துவங்குவோம். இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளை கொடுத்து முடித்த பின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப்போனார். அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியை களைக் குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து; வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். அந்த தீர்க்கதரிசியின் தெளிவற்ற நிலைமையைப் பாருங்கள்? ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகின்றது என்று அவன் அறிந்திருந்தான், ஆனால் அது எங்கே இருக்கிறது என்று அவன் நிச்சயமற்றவனாக இருந்தான். பாருங்கள்? என்ன நடந்து கொண்டிருந்தது என்று பாருங்கள், அவன் அவருடைய வருகையை அறிவித்த பின் “வருகிறவர் நீர்தானா?” என்றான். இயேசு அவர்களுக்குப் பிரிதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்: குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிஷேம் பிரசங்கிக்கப்படு கிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக் குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்... (இப்பொழுது கவனியுங்கள்!) எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? இல்லை, அது யோவான் அல்ல, யோவானிடம் சமரசம் செய்வது என்பது கிடையாது. எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனை யோ? (வேறு விதமாகக் கூறினால் சட்டையின் கழுத்துப் பட்டை திருப்பி வைத்துக் கொண்டிருப்பவர்கள், என்று நீங்கள் அறிவீர்கள். மேதாவிகள், அறிவாளி மனிதன் மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள் (அந்த நபர் குழந்தைக்கு முத்தமிடுபவர், இளம் வயதினருக்கு விவாகம் செய்பவர், மரித்தோரை அடக்கம் பண்ணுபவர் மற்றும் உங்களுக்கு தெரியும் அல்லது ஆங்காங்கே சுற்றிக் கொண்டு....?... அவ்வித மானவர், அவ்விதமானவர் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை கையாள்பவர்கள் அல்ல, புரிகின்றதா?) எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் ஒரு மனிதனையும் அவனுடைய ஆடைகளையோ? ....மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந் தரித்திருக்கிறவர்கள் அரசர் அரண்மனைகளில் இருக்கிறார்கள். அல்லவென்றால் எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 68கவனியுங்கள்! ''அதெப்படியெனில்...'' இப்பொழுது கவனியுங்கள், இது இயேசுவின் சொந்த வார்த்தைகள். அதெப்படியெனில்: இதோ நான் என் தூதனை என் விசுவாசத் திற்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே போய் உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத் தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். இப்பொழுது மல்கியா 3ஐ கவனியுங்கள்: இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான். (மல்கியா 3, மல்கியா 4 அல்ல ) இப்பொழுது மல்கியா 4 ஐ கவனியுங்கள்: இதோ, சூளையைப் போல எரிகிற நாள் வரும்: அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரம் செய்கிற யாவரும் துரும்புகளா யிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (பாருங்கள் அது வரவிருக்கின்ற உபத்திரவம் மற்றும் அழிவைக் குறித்த தாகும்) ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும் (கர்த்தருடைய வருகை) நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய்... நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய் கொழுத்த கன்று களைப் போல வளருவீர்கள். (அது ஒரு புல் வெளியின் மேல் நடந்து செல்வது என்பதாகும்) துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 69இவ்வாறாக கூறுவோமானால், நீதிமான்கள் கிறிஸ்துவோடு பூமிக்கு திரும்ப வருகையில், அந்த சாம்பல்களின் மேல் நடப்பார்கள். நீங்கள் இந்த மக்கள், இறுமாப்பு கொண்டவர் களாவும், வீம்புமிக்க திமிர் கொண்டவர்களாகவும், இழிவாக கருதுபவர்களாகவும், வட்டமிட்டு ஒட்டுப்பார்த்து திருட்டுத் தனமாக வேவு பார்ப்பவர்களுமாகவும் இருந்து கொண்டு அதே நேரத்தில் தங்களை கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோரும் இவர்கள், இவர்கள் சாம்பல்கள் தவிர வேறொன்றும் கிடையாது. அவ்வளவுதான். அதைத்தான் வேதாகமமும் கூறுகிறது. பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள். இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்பு கிறேன். அந்த நாளுக்கு (கர்த்தரின் திரும்பி வருதல்) சற்று முன்னே , முதலாவதாக எலியா வருவான். 70சரி, நினைவில் கொள்ளுங்கள், பின்னர். அது யோவானின் வருதலாக இருந்திருக்க முடியாது. யோவான் அந்த எலியாவாக இருந்தான், ஆனால் அவன் ஐந்து முறை வருகிறான். இயேசு (J-e-s-u-s) விசுவாசம் (f-a-j-t-h), கிருபை (g-r-a-c-e). பாருங்கள், ஐந்து என்பது “கிருபையின்' எண்ணாகும். எலியா ஐந்து தோன்று தல்களைச் செய்கின்றான்: ஒரு முறை எலியாவாகவும், எலிசா வாகவும், யோவானாகவும், புறஜாதிகளின் முடிவிலும், பிறகு யூதர்களுக்கு மோசேயோடும் தோன்றுகிறான். பரிபூரண எண், பரிபூரண தீர்க்கதரிசி, பரிபூரண செய்தியாளன், கண்டிப்பானவன், தைரியமானவன். புரிகின்றதா? கவனியுங்கள். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள், அந்த நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதிரி சியை அனுப்புகிறேன்: நான் வந்து பூமியை சங்காரத்தால் அடிக்காதபடிக்கு அவன் பிதாக்களுடைய இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும் பிள்ளை களுடைய இருதயங்களை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்பு வான். 71பாருங்கள், அறிமுகப்படுத்தலின் முதல் வருகை அல்ல; அது யோவான் ஆகும், ஏனெனில் பூமி அப்பொழுது ஒரு துரும்பைப் போல் எரிக்கப்படவில்லை, நீதிமான்கள் அக்கிரமக் காரரின் சாம்பலின் மேல் நடக்கவில்லை. ஆனால் இது நடந்தேறும் முன்னர் எலிசா வருவான். அவன் என்ன செய்வான்? பிள்ளை களின் விசுவாசத்தை பிதாவினிடத்திற்கு, வேதாகமத்தின் மூல விசுவாசத்திற்குத் திருப்புவான். ஒரு மனிதன் வருவதை நான் காணும் போது, ''அது அவனாகத்தான் இருக்கும். அங்கே ஒரு மனிதன் பேர் பெற்று வளருகிறான், அவனைப் பார், சபைகளும் போகின்றன'' என்று நான் நினைப்பேன். ஆனால் அவன் செய்வதென்ன? வேதாகமத்தி லிருந்து ஆயிரம் மைல்கள் அப்புறமாகச் செல்கிறான். அவன் என்ன செய்கிறான்? சுற்றித்திரிகிறான், பிறகு காற்று வெளியேறி விடுகிறது. அவன் கீழே இறங்கி விடுகிறான். பவுல், “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலித்தல், விசுவாசத்தை மறுதலித்தல்' என்று கூறுகிறான். வேதாகமத்தில் விசுவாசம் கொண்டிராமல், ஸ்தாபனங்களை, கோட்பாடுகளை பிடித்துக் கொண்டு, அதைக் கூறிக்கொண்டு, ஸ்தாபன பிள்ளை களைப் பெற்றுக் கொள்ளுதல். அது விழத்தான் வேண்டும். அதோ அவன் பின்பாகச் சென்றுவிடுகிறான். 72கடைசிக்கால சபைக்கென அந்த விதையை விதைக்கப் போகின்ற அந்த ஒருவன் எங்கே? அந்த முதிர்ந்த விதை, வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட எலியா எங்கே? அவனுடைய நாட்களுக்குப் பிறகு உடனே அந்த மகா பெரிய உபத்திரவம் வந்து பூமியைச் சட்டெரித்துப் போடும். பிறகு சபை மற்றும் அந்த மணவாட்டியின் திரும்ப வருதலில், அக்கினியால் சுத்தமாக்கப்படுகின்ற போது, ஆயிர வருட அரசாட்சியில், மணவாட்டியும் கிறிஸ்துவும் அவர்களுடைய சாம்பலின் மீது நடப்பார்கள். அங்கே அவர்கள் அரசாட்சி செய்வார்கள். சுவிசேஷத்தை கேட்டிராத அஞ்ஞானிகள் அந்த சமயத்தில் எழுப்பப்படுவார்கள், தேவனுடைய குமாரர் வெளிப்படுத்தப்படுவர். அவன் அரசாட்சி செய்ய வேண்டு மெனில், அரசாட்சி செய்யப்படுவதற்கென ஒன்றை அவன் கொண்டிருக்க வேண்டும், அவனுக்கு ஒரு ஆட்சி எல்லை இருக் கின்றது. ''அவர்கள் கிறிஸ்துவோடு அரசாட்சி செய்து ஆளுகை செய்தனர்''. கிறிஸ்து தேசங்களை இருப்பு கோலால் ஆளுகை செய்தார். அப்பொழுது சுவிசேஷம். அப்பொழுது வெளிப்படுத்தப் பட்ட தேவ குமாரர், அவர் பூமியில் இருந்தபோது எந்த விதமான அதிகாரத்தை உடையவராக இருந்தாரோ அதே அதிகாரத்தை உடையவர் களாக, அந்த அரசாட்சியில், ஆயிரவருட அரசாட்சியில் வருவார்கள், பாருங்கள், சாம்பலின் மீது நடப்பார்கள். 73ஆகவே ஏதோ ஒன்றிற்காக நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அது தாழ்மையில் அமைதியாக நம்மண்டை வந்து கவனத்தைக் கோராமல் சென்று அதை நாம் காணாமல் தவற விட்டு விட்டோமா? அது கடந்து சென்று சபையானது தன்னுடைய பாவங்களில் அப்படியே விடப்பட்டு விட்டதா? அப்படியானால், நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. அப்படி இல்லையென்றால், சரியாக வேதாக மத்தின் பேரில் இருக்கின்ற ஒரு செய்தியுடன் ஒருவர் வருகின்றார், அந்த அதிசீக்கிர கிரியை பூமியை சுற்றி வரும். முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்தானது அதைக் கேட்கும் வரைக்கும், விதைகள் செய்தித்தாள்களிலும், வாசிக்கப்படும் புத்தகங்களிலும் புறப்பட்டு ஓடும். பிதாவானவர் இழுத்துக் கொள்ளாவிட்டால் யாருமே வரமாட்டார்கள், பிதாவானவர் இழுத்திருக்கின்ற ஒவ்வொருவர் அதைக் கேட்டு வருவார்கள். அவ்வித மாகத்தான் இருக்கும், முன்குறிக்கப்பட்ட வித்து வார்த்தையைக் கேட்கும். 74அது சம்பவிக்கையில், அது ஒரு ஒன்று கூட்டப்படுதலாக இருக்கும். அப்பொழுது இயேசு தோன்றுவார், அப்பொழுது உலகம் முழுவதும் இருக்கின்ற சபை, உயிர்த்தெழுதலுடன் அங்கே மேலே செல்லும். யோவான் வந்த விதமாக அது இருக்குமா, தெரிந்து கொள்ளப்பட்ட சீஷர்கள் கூட அதை அறியாமல் இருந்தனரே? அவர்கள் ''அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி?'' என்று கூறினர். அதற்கு அவர், ''அவன் ஏற்கெனவே வந்தாயிற்று. உங்களுக்கு அது தெரியவில்லை'' என்றார். மேலும் அவர், ''அவனை என்ன செய்வார்கள் என்று கூறினார்களோ அதை தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்'' என்று கூறினார். அவனு டைய செய்தியானது மிக வேகமாக இருந்தது, எல்லா இஸ்ரவே லருக்கும் சென்றது, அது ஒரு சிறிய இடத்தில்... இரண்டு சிறிய இடத்தில், எருசலேமுக்கு சற்று தள்ளி அங்கே அது...?... யோவான் ஞானஸ்நானம் கொடுக்கச் சென்ற இடம், அவன் நதியில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த இடத்தில். நதியின் தண்ணீர் குறைந்து வறண்டதாயிருந்தது. அந்த இடத்தில், ஆறே மாதத்தில் மேசியாவின் முழு அறிமுகமானது வந்து சேர்ந்தது. பாருங்கள்? 75நாம் ஏதோ ஒன்றை கண்டும் காணாமல் விட்டுவிட்டோ மா? நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டதா? இது இப்பொழுது இருதயத்தோடு - இருதயம் மனம் விட்டு பேசும் ஒன்றாகும். இன்றிரவு இது, இது... ஆமாம், இது இங்கே சாதாரண ஒரு பேச்சாகும். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதாகி விட்டதா? அங்கே அந்த நாளில் நதியண்டை வந்த அந்த செய்தி சரியாக அதுவாகத்தான் இருக்குமா? அது யாருக்கும் தெரியாமல் கடந்து மக்கள் அதைக் காணத் தவற விட்டு விட்டனரா? அது அதுதானா? அப்படியானால் நாம் நினைப் பதைக்காட்டிலும் காலதாமதமாகிவட்டதா? அது எப்பொழுது இருக்கும்? எனக்குத் தெரியாது. ஒருக்கால் இன்றிர வாக இருக்கலாம். இன்னும் ஐம்பது வருடங்கள் இருக்கலாம். அது எப்பொழுது என்று எனக்குத் தெரியாது, இப்பொழுது நான் இருப்பது போல தொடர்ந்து நான் சென்று கொண்டே இருப்பேன். சரி, அது என்ன? ஏதோ ஒன்றை நான் எதிர்நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேனா? 76கடந்த இரவு நான் ஒரு வினோதமான சொப்பனம் கண்டேன், நாள் முழுவதும் அது என்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. வழக்கமாக நான் அதிகமாக சொப்பனம் காண்பதில்லை. ஆனால் ஒரு சொப்பனம் எனக்கு உண்டா யிருந்தது.... நான் எல்லா இடங்களிலும் செல்கிறேன், நான் வழக்கமாக செய்வது, அந்தச் செய்தியை நான் பெருஞ்சத்தத்தோடு முழங்கு வேன், இங்கே ஒருவர் அங்கே ஒருவர் அதை பிடித்துக் கொள்வதை நான் காண்பேன். நான் திரும்பவுமாகச் சென்று அந்த செய்தியை பெருஞ்சத்தத்தோடு முழங்குவேன் அவர்கள் முகத் தைத் திருப்பிக் கொண்டு நடந்து சென்று விடுவார்கள். காரியம் என்ன? தங்கள் கிருபையின் நாளை அவர்கள் பாவத்தினாலே தள்ளி விட்டார்களா? கடைசி நபர் உள்ளே வந்து விட்டாரா? அது முடிந்து விட்டதா? அழிவுக்காக நாம் காத்துக் கொண்டிருக்கி றோமா? எல்லாம் தயாராகிக் கொண்டிருப்பது போல அதினாலே தான் இந்த சிறு யுத்தங்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றனவா? ஏதோ ஒன்று சம்பவிக்கவிருக்கின்றது. அது நடப்பதற்கு முன்னர் சபை சென்றுவிட்டிக்கும். சபை உபத்திரவத்தில் இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொள்வதே கிடையாது! ஒரு எதிர் மறையான ஒன்றிலிருந்து இயல்பான ஒன்றை உங்களால் எப்படி உருவாக்க முடியும்? பாருங்கள்? ஒரு சொட்டு தண்ணீர் கீழே விழுவதற்கு முன்னரே நோவா பேழைக்குள் இருந்தான். அக்கினி விழுவதற்கு முன்னதாகவே லோத்து சோதோமை விட்டு வெளியே இருந்தான். 'அவர்கள் நாட்களில் இருந்தது போலவே மனுஷகுமாரனின் வருகையிலும் இருக்கும்'' என்று இயேசு கூறினார். சபை நியாயந்தீர்ப்பில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை, அது ஏற்கெனவே கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கிறது. நமக்கு தேவையானது என்னவென்றால் பரிசுத்தவான் களின் பரிபூரணப்படுதலேயாகும். பரிசுத்தவான்கள் புரிந்து கொள்வதில்லை, அவர் பெறுகின்றனர்... என்ன சிந்திப்பது என்பது அவர்களுக்குத் தெரியாது, பாருங்கள் இப்பொழுது நாம்.... அது சரியாக... அப்படியில்லையெனில், ஏதோ ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது, ஒரு வெடிமுழக்கம் இருக்கும். நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன், எந்த வழியாக திரும்ப வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. 77கடந்த இரவு நான் ஒரு சொப்பனம் கண்டேன் (பிறகு நான் முடிக்கப் போகிறேன்). நான் ஒரு சொப்பனம் கண்டேன், வினோதமான ஒன்று... அன்றொரு நாள் நான் படுத்துக் கொண்டு என் மனைவி யுடன் பேசிக்கொண்டிருந்தேன், வரவிருக்கின்றது. குறித்து. அப்பொழுதுதான் நாங்கள் ஜெபித்தோம், நான்.... டல்லாசி லிருந்து யாரோ ஒருவர் தொலை பேசியில் அழைத்து அவருடைய காதில் ஏதோ ஒன்று சிக்கிக்கொண்டிருக்கிறது என்று கூறினார், நான் உள்ளே சென்றேன்... இரத்தம் வடிந்து கொண்டிருந்தது, அவர் மருத்துவரிடம் ஓட வேண்டியதாயிற்று. ஜெபிக்க நான் உள்ளே சென்றேன், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், “எல்லாம் சரியாக உள்ளது” என்று கூறினார். பாருங்கள்? அவர் இங்கு வந்தார். எல்லாம் சரியாகிவிட்டது. மருத்துவர், ''உங்களுக்கு காதில்.... உங்களுடைய காது செவிப்பறையை (ear drum) நீர் காயப்படுத்திவிட்டீர், அது கிழிந்து போய், அதிலிருந்து இரத்தம் வெளியே வழிந்தோடிக் கொண்டிருக்கிறது, ஆகவே உங்கள் காதுக்கு பாதிப்பு இருக்கும் என்று நினைத்தேன்...'' என்றார். அவ்வளவுதான்... அடுத்த முறை நாங்கள் திரும்பிச் சென்றோம், அவர் அதைக் குறித்து ஒன்றுமே சொல்லவில்லை. காதில் தொற்றுகிருமிகள் இல்லை, எதுவுமே இல்லை, என்ன ஆயிற்று என்று அவருக்குத் தெரியவில்லை. பாருங்கள்? பிறகு யாரோ ஒருவர் தொலைபேசியில் அழைத்தார், நான் அறைக்குள்ளே சென்று ஜெபிப்பேன். பிறகு இன்னொரு நாள் அவர்கள் தொலைப்பேசியில் அழைத்து, ''எல்லாம் முடிந்து விட்டது. அருமையாக இருக்கிறார், நலமாக இருக்கிறார்'' என்று கூறுவர். 78நான் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தேன், நான், ''தேனே, கடந்த ஒரு வருடம் நான்கு மாதங்களாக எந்த வழியாக அசைவது என்றே எனக்குத் தெரியவில்லை. என்ன என்றே தெரியவில்லை'' என்றேன். அவள் கூறினாள்.... அசைவைக் குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். நான் “என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை, நான் நின்று கொண்டிருக்கிறேன், யோசித்துக் கொண்டிருக்கிறேன். நாம் எதிர்நோக்குவது... தேவனுடைய அந்த மகத்தான தீர்க்கதரிசி, காரியத்தை பெருத்த சத்தத்தோடே முழங்கச் செய்ய காட்சியில் வருகின்றாரா? அது வெளிப்படையாக அறியப்படுமா?'' என்றேன். நான் “அது வேதாகமத்திற்கு முரணான ஒன்று, ஏனெனில், 'நீங்கள் நினையாத மணி நேரத்திலே அவன் வருவான்' என்றிருக் கிறதே” என்று நினைத்தேன். பாருங்கள்? என்ன செய்வ தென்றே எனக்குத் தெரியவில்லை. நாம் அதைக் கண்டும் காணாமல் விட்டு விட்டோமா? ''இங்கே வீட்டிலே படுத்துக் கிடக்க எனக்கு விருப்பமில்லை'' என்று நினைத்தேன். நான்... இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படவில்லை என்று நான் நம்புகிறேன்; அப்படி யென்றால் ஒலிநாடாவை கிழித்து விடுங்கள் அல்லது ஓரத்தில் வைத்து விடுங்கள். பாருங்கள்? இப்பொழுது அவன், ... நான், ''இதுதான் அது என்றால், நாம் நினைப்பதைக் காட்டிலும் அருகாமையில் இருக்கிறோம்'' என்று கூறினேன். 79ஒரு காரியம் நடந்தேறியாக வேண்டியிருக்கிறது. இப்பொழுது ஏதோ ஒன்று எனக்கு நடக்க வேண்டியதாக இருக்கிறது. வேறு ஏதோ ஒன்று செய்யப்பட வேண்டி இருப்ப தால்தான். அன்றொரு நாள் நான் அந்த நீண்ட இருக்கையில் இருந்த போது அவர் என்னைப் போக விடவேயில்லை, பாருங்கள், ஏன்? ஏன் நான் செல்லவில்லை? என்ன சம்பவித்தது? செய்யப்பட வேண்டிய வேறொன்று இருக்கிறதா? நான் ''சரி, அது என்னு டைய செய்தியாகத்தான் இருக்குமென்றால், மக்கள் தங்கள் முகத்தை அதற்கு நேராக திருப்புவார்கள்“ என்று எண்ணினேன். பிறகு, வெளிநாட்டு ஊழியக்களங்களுக்கு ஏதோ ஒன்று என்னை அழைக்கின்றது. கடலுக்கு அப்பால், மற்றும் எல்லா விடங்களிலிருந்தும் அழைப்பு விடுக்கப்படுவதை என்னால் கேட்கமுடிகின்றது. 80டர்பன் நகர கூட்டத்தைப் பற்றி ஒரு புத்தகத்தை சகோதரன் லிக்கர் எழுதுகிறார் என்று முன்பொரு நாளிலே எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவர், ''அந்த கூட்டத்திற்கு ஒத்திட்டுப் பார்க்க வேறொரு கூட்டம் இருந்ததே கிடையாது. ஆப்பிரிக்கா இப்படிப் பட்ட ஒரு குலுக்குதலைக் கொண்டிருந்ததே கிடையாது. இந்த இருண்ட ஆப்பிரிக்கா தேசத்திலே அந்த ஒரே இரவு பொழு தினால், அவர்களுடைய வாழ்விலேயே கண்டிராத ஒரு குலுக் குதலை அவர்கள் பெற்றனர்'' என்று கூறியிருந்தார். அது சரியே, அந்த அஞ்ஞானிகளின் மத்தியில் அது நிகழந்தது. அங்கே நான் நோக்கிப் பார்த்த போது, அங்கே அந்த விலையேறப் பெற்ற ஏழை நீக்ரோ கறுப்பர் இனமக்களை நான் கண்டேன் அவர்கள் அந்த நீக்ரோக்களை அடிமைகளை விட மோசமாக நடத்திக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அங்கே பரிதாபமான பையன் ஒருவன்... நான்.... அங்கே அவன் வேலை செய்து கொண்டிருந்தான், நான் கூறினேன். அந்த பையன்... பெண்களாகிய நீங்கள் எவ்வளவு கடினமாக பிரயாசப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களில் எவ்வளவு செய்வீர்களோ அதை அந்த பையன் ஒரு நாளிலே செய்தாக வேண்டியிருந்தது. அங்கே அந்த பழைய சிறிய கழிவறை (சுமார் நான்கு அடி நீளம் மற்றும் நான்கு அடி அகலம் இருக்கும்) அருகில் வெளியே ஒரு மரத்துண்டில் அவன் உறங்குவான், தன் உடலை வளைத்து சுருட்டிக்கொண்டு படுத்துக்கிடப்பான். அவனுக்கு மாதம் ஒரு பவுண்ட் சம்பளம் கிடைக்கும், அது இரண்டு டாலர்கள் எண்பது செண்டு என்றிருக்கும். மேஜையிலிருக்கும் துணிக்கைகள் கூட அவனுக்கு கிடைக்காது, ஒரு பக்கெட் பழைய ஆகாரம். அதில் மூன்றில் ஒரு பங்கு காலை ஆகாரத்திற்கு; அதில் மூன்றில் ஒரு பங்கு மாலை ஆகாரம்; மற்றைய பங்கு அன்றிரவு ஆகாரமாக இருக்கும். பத்து அல்லது பதினொன்று அல்லது பன்னிரண்டு மணி வரை வேலை செய்வான்; அடுத்த நாள் காலையில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும், மற்ற வேலை களையும் செய்ய வேண்டும், படிக்கட்டுகளுக்கு பாலிஷ் போட்டு விட்டு, எஜமானனின் காரைத் துடைக்க வேண்டும். அங்கே இருக்கும் அந்த பெரிய தடித்த தாய் ஒன்றுமே செய்யமாட்டாள், ஆனால் அங்கே உட்கார்ந்துக் கொண்டு அவளுடைய நகங்களை உராசிக் கொண்டு டீ குடித்துக் கொண்டு ஒன்றிற்க்கும் உதவாத சோம்பேறி பெண்ணாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். 81அந்த ஏழைப் பையன் எல்லா வேலையையும் செய்ய வேண்டியவனாக இருந்தான். அவனுக்கு இருமல் வந்து கொண்டிருந்தது, ''அவன் தொடர்ந்து இரும்பிக் கொண்டே யிருந்தான், அவனுக்கு மிகவுமாக ஜலதோஷம் பிடித்திருந்தது. ஒரு நாள் அங்கே நான் எட்டிப்பார்த்து ''நீங்கள் அந்தப் பையனை... அவனை நீங்கள் கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வரலாமல்லவா?'' என்று கூறினேன். அதற்கு அவர்கள் ''அவன் ஒரு காஃபீர் (Kafir) இனம்'' என்றனர். (தென் ஆப்பிரிக்க பண்டு (Bantu) இனத்தை சேர்ந்தவன் - தமிழாக்கியோன்) (ஒலி நாடாவில் காலியிடம் - ஆக்கியோன்) அப்படியென்றால் ஒரு 'போக்கிரி'' என்று அர்த்தம். அந்த விதமான பெயரைக் கண்டால் அமைதியிழந்து கோபப்படு வார்கள், நானும் கூட. ஆனால் அந்த மனிதனோ என் சகோதரன். அதோ அவன் அங்கே இருக்கிறான். அவன் ஒரு அடிமை அல்ல. அவன் கறுப்பு இனம் என்பதால் அவன் அடிமை என்பதல்ல. அவன் என்னுடைய சகோதரன். ஆனால் அவன் அங்கே அந்நிலையில் இருந்தான். நான் அங்கே நடந்து சென்று அவனை ''தாமஸ்'' என்றழைந்தேன். அந்தப் பையனால் மூன்று மொழிகள் பேச முடிந்தது. நான் 'தாமஸ்“ என்று அழைத்தேன். அவன் திரும்பி முழங்காலில் விழுந்து தன் கைகளை மேலே உயர்த்தி, “ஆம் எஜமானே'' என்றான். நான், ''எழுந்து நில். நான் உன் எஜமான் அல்ல, நான் உன் சகோதரன்“ என்றேன். நான் என் கையை அவன் தோளின் மீது போட்டு அணைத்தேன். அவன் என்னை இந்த விதமாக நோக்கிப் பார்த்தான், அவன் கன்னங்களில் அதிகமாக கண்ணீர் வழிந் தோடிக் கொண்டிருந்தது. நான் ''தாமஸ்'' என்றேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வந்தார். அப்பொழுது ஒரு தரிசனம் உண்டானது. நான் அவனிடம் ஒன்றைக் கூறினேன். அதற்கு அவன் “ஆம் எஜமானனே, அது உண்மை . அவ்விதமாகத் தான் அது இருந்தது” என்றான். நான், ''தாமஸ், அந்த இருமல் உன்னை விட்டு போய்விட்டது, இனிமேல் உனக்கு அது வராது'' என்றேன். அப்பொழுதிலிருந்து அவனுக்கு இருமல் வரவில்லை. என் சட்டைப் பைகளில் மக்கள் பணத்தை போட்டனர், என்னிடம் சுமார் நூற்றெண்பது பவுண்ட் பண நோட்டுகள் இருந்தன. (அதன் மதிப்பு இரண்டு டாலர்கள் எண்பது செண்டு கள் ஆகும்) அதை அவனிடம் கொடுக்க நான் பயந்தேன், அவனு டைய எஜமான் அவன் பணம் வைத்திருப்பதைக் கண்டால், அவன் பணத்தை திருடியுள்ளான் என்று முடிவு செய்து அவனை அடித்து கொன்று போடுவார்கள். அப்பொழுது நான் அவன் எஜமானிடம் “நான் அந்தப் பையனை நேசிக்கிறேன். அவனுக்கு சிறிது பணத்தைக் கொடுக்க எனக்கு அனுமதியுங்கள்'' என்றேன். அதற்கு அவர், “ஓ, கூடாது, வேண்டாம்! நீங்கள் அவனைக் கெடுத்து விடுவீர்” என்றார். அதற்கு நான் ''நீங்கள் தான் கெட்டுப் போய் தாறுமாறாய் உள்ளீர்கள். நீங்கள் அங்கே படுத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு வேலை கூட செய்வதில்லை. எல்லா வேலைகளையும் அந்தப் பையன்தான் செய்கின்றான், மேலும் அவன் பட்டினியாக இருக்க விட்டு சாகவும் விட்டு விட்டிருக்கிறீர்கள். அவனுக்கு ஒரு விதவைத் தாயும் வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கின்ற ஒரு சகோதரியும் இருக்கின்றனர், ஒரு மாதத்திற்கு இரண்டு டாலர் எண்பது செண்டுகள் மாத்திரமே கொடுக்கின்றீர்“ என்றேன். பாருங்கள். மேலும் நான் ''நீங்கள் அவ்விதம் செய்வதால் அச்செயலின் பலனை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்! இருபது இலட்சம் வெள்ளையர்களும் சுமார் நூறு கோடி கறுப்பு இன மக்களும் இருக்கின்றனர். உங்கள் நாட்டில் ஒரு கிளர்ச்சி உண்டாகும்'' என்று கூறினேன். அதற்கு அவர், “இதை நீங்கள் அமெரிக்காவிலும் கூறலாம் அல்லவா, அங்கே மட்டும் சம்பவித்துக் கொண்டிருப்பது என்ன? என்றார். அதற்கு நான், ''அமைதியாக இரு என்று என்னிடம் கூறப்போவது யார்? தேவன் மாத்திரமே. அவ்விதமாக நடத்தப் படுகிறார்கள் என்று மக்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளதில் வியப்பொன்றுமில்லை“ என்றேன். (ஓலி நாடாவில் காலியிடம்- ஆசி) உங்களுக்கு புரிகின்றதா. நான் அவர்களுக்காக பேசினேன். 82ஒரு நாள் இரண்டு போதகர்கள் தங்கள் சட்டைக் கழுத்துப் பட்டையை திருப்பி விட்டுக் கொண்டு, சிறிய மீசையுடைய வர்களாக, ரோடேஷியாவிற்கு (Cஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர்- தமிழாக்கியோன்) வந்தனர். ஒரு பச்சை விமானத்தில் விமானி நான் சென்ற விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார், விமானம் நேராக நேராக ஒரு வெப்ப மண்டல பகுதிக்கேயுரிய புயல்களில் ஒன்றைப் போலிருந்த புயல் மண்டலத்திற்குள் சென்று விட்டது, சுமார் இரண்டு மைல்களுக்கு பறந்தது. மேலே உயரத்தில், மேலும் கீழும் விமானம் ஆடியது. விமானத்தில் நாங்கள் தலை கீழாக இருந்தோமா என்று எங்களுக்குத் தெரியவில்லை; விமானம் மேலும் கீழும் திரும்பிக் கொண்டேயிருந்தது. முடிவில் அது ... விமானம் மேலே செல்கிறதா அல்லது கீழே செல்கிறதா என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. முடிவாக அது எங்களைப் புயல் மண்டலத்திற்கு மேலே தள்ளி விட்டது. நாங்கள் தரையிறங்கின போது என் வயிறு மிக மோசமான நிலையில் குமட்டுகின்றதாய் இருந்தது! அந்த இரண்டு போதகர்கள், பெந்தெகொஸ்தே போத கர்கள், ஒரு காரை எடுத்துக் கொண்டு என்னை பிரிமேடாரி யாவிற்கு காரில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தனர். நான் தெற்கு ரோடேஷியாவிலிருந்து வந்து கொண்டிருந்தேன்; அங்கே நான் இறங்கினேன். எனக்கு உடல் நலமில்லாதிருந்தது. அங்கே சகோதரன் பாக்ஸ்டர் அமர்ந்திருந்தார், அவருக்கும் உடல் நலமில்லாதிருந்தது, பில்லி பாலுக்கு உடல் நலமில்லாமல் இருந்தது. ஆகவே அங்கே ஒரு வளாகத்தின் வழியாக அந்த போதகர் காரை ஓட்டிக்கொண்டிருந்தார்; அங்கே கறுப்பு நிற இனமக்கள், ஒரு குலமர (tribal) பாவம் போன்ற ஏதோ ஒன்றை செய்திருப்பவர்கள், தங்கள் பழங்குடி குல மக்களை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு, அந்த வளாகத்தில் வந்து தங்கிக் கொண்டிருந் தனர். அம்மக்கள் நகரத்துக்குள்ளாக அனுமதிக்கப்படுவதில்லை; ஆதாலால் ஒரு தகர டப்பி (tin) அல்லது அவர்களால் செய்ய முடிந்த ஏதோ ஒன்றைக் கொண்டு அதில் வாழ்ந்து கொண்டிருந் தனர்- மிக மிக அழுக்கானவைகள் மற்றவைகள்- அது உண்மை . ஆகவே காரை அந்த வளாகத்துக்குள் செலுத்திக் கொண்டிருந் தனர், அங்கே ''மணி இருபது மைல் வேகம்'' என்ற வேகக் கட்டுப்பாடு அறிவிப்பு பலகையை நான் கண்டேன். ஆனால் அந்த மனிதனோ காரை மணிக்கு அறுபத்தைந்து மைல் வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தார். அங்கே இருந்த பரிதாபமான ஏழை தாய்கள் ஓடி வந்து அங்கே இருந்த தங்கள் சிறு குழந்தைகளை வேகமாகப் பிடித்து இழுத்துக் கொண்டார்கள், உடம்பில் துணியே இல்லாத மிகச் சிறிய குழந்தைகள் அங்கே தெருவில் இருந்தனர், சுமார் இரண்டு வயது முதல் ஐந்து அல்லது ஆறு வயது வரை குழந்தைகள் இருந்தன; அத்தாய்மார்கள் கூக் குரலிட்டுக் கொண்டு ஓடி வந்து அந்த சிறு பிள்ளைகளை பிடித்து இழுத்துக் கொண்டனர். ஒரே சமயத்தில் அக்குழந்தைகள் நான் கை ஏறக்குறைய கொன்று போடுகின்ற விதத்தில் காரை மிக அருகாமையில் ஓட்டிக் கொண்டிருந்தார். 83நான் அவர் தோளில் தட்டி, “ஏய்! உனக்கு என்ன ஆயிற்று?'' என்றேன். அவர் திரும்பி என்னை நோக்கி, ''நீங்கள் என்ன கூறினீர்கள்?'' என்றார். ''உனக்கு என்ன ஆயிற்று? காரின் வேகத்தை குறை'' என்று கூறினேன். ''அங்கே நேரத்தோடு வரவேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார். ''நான் உனக்கு உத்தரவு கொடுக்கிறேன், காரை நிறுத்து'' என்றேன். அதற்கு அவர் மேலும் நான், 'நீங்கள் அந்த மக்களுக்காக இரக்கம் காட்டி அவர்களை ஒரு பொருட்டாக எண்ணுவதே இல்லையா?'' என்று கூறினேன். அவர், “எந்த மக்களுக்கு?'' என்று கேட்டார். நான், “அங்கே வெளியே இருந்த அப்பிள்ளைகளை, காரை ஏற்றி ஏறத்தாழ கொன்று போட்டிருப்பீர்களே, அந்த பிள்ளைகளைக் குறித்து தான்” என்றேன். அதற்கு அவர், ''அம்மக்கள் காஃபீர்கள் (kafir)“ என்றார். நான் ''உங்களை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்கிறீர்களே, அவ்விதம் கூற உங்கள் வெட்கமில்லையா, வெட்கக்கேடு!'' என்றேன். மேலும் நான், ''நீங்கள் அந்த குழந்தையை காரை ஏற்றிக் கொன்று போட்டிருந்தால், உங்கள் தாய் உங்களைக் குறித்து எவ்விதமாக நினைத்திருப்பார்களோ, அதே போன்றுதான் அத்தாயும் தன் குழந்தையைக் குறித்து நினைத் திருப்பாள் அல்லவா? அவள் படிப்பறிவு இல்லாதவளும் அறிவின்றியும் இருந்திருக்கலாம், ஆனால் ஒரு தாயின் அன்பு தன்னுடைய குழந்தைக்காக கூக்குரலிடுகின்றது. நீங்கள் அந்த விதமாக ஒரு காரியத்தை செய்வதென்பது, அது கூடவே கூடாது. இருப்பினும் உங்களை நீங்கள்... என்று அழைத்துக் கொள் கிறீர்கள்'' என்றேன். மேலும் நான், மற்றுமொரு காரியம், அந்த வேகக்கட்டுபாடு பலகை மணிக்கு இருபது மைல் வேகம் என்று கூறுகிறது. என் வேதாகமம், 'இராயனுடையதை இராயனுக்கு செலுத்துங்கள்' என்று கூறியிருக்கிறது'' என்றேன். அவர் தன் தலையை குனிந்தார். மேலும் நான், ''நீங்கள் மணிக்கு இருபது மைல் வேகத்திற்கு குறைத்து அம்மக்களை உங்கள் சகோதரனைப் போன்று அவர்களைப் பாவித்து நடத்துங்கள். அந்த விதமாக நீங்கள் இனியும் செய்வீர்களென்றால் உங்களுக்கு அவமானக் கேடு'' என்றேன். ஓ, என்னே, அவருக்கு கோப் மூண்டது. ஆனாலும் நான் அதைப் பொருட்படுத்தவில்லை, நான் நேரடியாக அவரிடம் அது தவறு என்று ஆணித்தரமாகக் கூறினேன். அங்கே நான் சுற்றிலும் சென்றேன், மக்களுக்கு நான் அவர்களுக்கு சுவிசேஷத்தின் செய்தியை கொண்டு வர அவர்களுக்காகத் தான் நான் வந்துள்ளேன் என்று அறிந்திருந்தனர். அங்கே தேவனும் வருவார். அவர்களை ஒன்றாகச் சேர்த்து, வெள்ளையரை ஒரு பக்கத்தில் உட்கார வைத்து விட்டு, கறுப்பு இன மக்களை அங்கே உட்கார வைத்தால், அந்த கறுப்பு இன மக்கள் அந்த வெள்ளையரோடு ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள், ஒன்றுமே செய்ய மாட் டார்கள். பரிசுத்த ஆவியானவர் அந்த கறுப்பு இன மக்களிடையே சென்று அவர்கள் மத்தியிலிருக்கும் வியாதியஸ்தர்களையும் அவதிப்படுகிறவர்களையும், முடவர்களையும் வெளியே கொண்டு வந்து அவர்களைச் சுகப்படுத்தி இங்கே இந்த வெள்ளையரோடு உட்காரும்படிக்குச் செய்வார், அவர்கள் தாழ்வு மனப்பான் மையை அதிகமாக வளர்த்துக் கொண்டவர்களாக இருந்தனர். இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களிடம் தேவன் எவ்வாறு ஈடுபடுகின்றார் என்பதைக் அது காண்பிக்கின்றது. 84இப்பொழுது, அந்த நபர் இன்னுமாக செய்தியைப் பெற்றுக் கொள்ளவே இல்லை. ஆனாலும் அவர் அந்த புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது, நான் செய்ய வேண்டியது என்ன? அந்த காரியம், நான் என்ன.... நான் அங்கே திரும்பவும் செல்ல வேண்டியனாக இருக்கின்றேனா? இப்பொழுது, தேவன் என்னை சுவிசேஷத்திற்கு அழைக்கிறாறென்றால் அப்படியானால் நான் ஒரே சமயத்தில் அவருடைய தீர்க்கதரிசியாகவும் சுவிசேஷகனாகவும் இருக்க முடியாது. நீங்கள் அதை... அந்த அலுவல்கள் ஒன்றுக்கொன்று கலவாது, நான் ஒரு... என்னவென்று அறியாதிருக்கின்ற ஒரு போராட்டத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். நான் ஒரு சுவிசேஷகனாக இருக்கப் போகிறேனென்றால், நான் ஒரு சுவிசேஷகனாகத்தான் இருந்தாக வேண்டும். நான் அவருடைய தீர்க்கதரிசியாக இருக்கப்போகிறேனென்றால், நான் எங்காவது மலைகளில் சென்று அங்கேயே இருந்து விடுவேன்; நான் கர்த்தரிட மிருந்து வார்த்தையை கேட்கும் வரைக்கும் சபையில் இருக்க மாட்டேன், சபையோரிடமும் இருக்க மாட்டேன்; வார்த்தையை பெற்ற உடன் வேகமாக வருவேன், அதை அளிப்பேன், திரும்பி வேகமாகச் செல்வேன். பாருங்கள்? அவைகளில் ஒரு காரியம், அது எவ்வகையிலும் இல்லாமல் சம நிலையில் உள்ளது. அல்லது அது முடிவு பெற்றிருக்கக் கூடும். அந்த மூன்று காரியங்களில் ஒன்றாக அது எனக்கு இருக்க வேண்டும். செய்தி முடிந்திருக்க வேண்டும் அல்லது அந்த இரண்டு காரியங்களில் ஒன்றை நான் பெற்றாக வேண்டும். என்ன செய்வதென்று எனக்குத் தெரிய வில்லை . 85கடந்த இரவு நான் ஒரு சொப்பனம் கண்டேன், நான் ஒரு கூட்டத்திற்குச் செல்வது போல சொப்பனம் கண்டேன், அப்படிப் பட்ட ஒரு மக்கள் குழுவை நான் கண்டதில்லை! என்னால் பார்க்க முடிகின்ற அளவிற்கு மக்கள் கூடியிருந்தனர். ஏதோ ஒரு பெரிய விளையாட்டு அரங்கம் போன்ற ஒன்றில் அவர்கள் கூடியிருந்தனர். யாரோ ஒரு நபர் என் பின்பாக வந்தார், அவர் பில்லியைப் போல் இருக்கவில்லை, அவர் என்னை கீழே அழைத்துச் சென்றார். நான் அந்த அறையில் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன், நான் அபிஷேகத்துக்குள்ளானேன், இருதயங்களைப் பகுத்தறிவுதல் என் பதற்கு தயாராக ஆகின்ற ஒரு நிலைக்கு வந்தேன், நீங்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக அவ்வாறு கூறினேன். சாலையில் ஒரு ஆள் என்னிடம் பேச ஆரம்பித்தான். அவன் பேச ஆரம்பித்த போது இருதயங்களை பகுத்தறியும் அந்த நிலை என்னை விட்டுச் சென்று விட்டது. அதை என்னால் உணர முடியவில்லை. அந்நிலைக் குள்ளாகச் திரும்பிச் செல்ல நான் முயற்சி செய்தேன்; அவ்வித மாக என்னால் செய்ய முடியவில்லை. என்னால் முடியவேயில்லை. நான் சோர்ந்து போனேன். அவர்கள் என்னை மேலே அழைத்துச் செல்கையில் நான் மக்கள் கூட்டத்தை நோக்கிப் பார்க்க ஆரம்பித்தேன், நான் பார்த்த போது, ''நல்லது, என் மனதில் பிரசங்கத்திற்கான பொருளை வைத்திருக்கிறேன், இந்த ஸ்தாபனங்களையும் நான் அறிவேன், இந்த மக்களை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் நான் அறிவேன், ஆகவே அந்த சுவிசேஷத்தை என்னால் முடிந்த வரைக்கும் மிக ஆணித்தரமாக நான் பிரசங்கிக்கப் போகிறேன்“ என்று கூறிக் கொண்டேன். நான் பிரசங்க மேடைக்கு நடந்து சென்ற போது அது என்னை விட்டுச் சென்று விட்டது. இருதயத்தைப் பகுத்தறிதலும் இல்லை, அந்த செய்திகள் ஒன்று கூட என்னிடம் இருக்கவில்லை; நான் அங்கே நின்றேன், மக்கள் அங்கு நின்று காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது, “நான் என்ன செய்ய வேண்டும்?'' என்றேன். அப்பொழுது ஏதோ ஒன்று தொடர்ந்து சென்று கொண்டே யிரு. தொடர்ந்து சென்று கொண்டே இருப்பார்'' என்று கூறினது. நான் அங்கே செல்லும் போது அது எனக்கு அளிக்கப்படும். ''அப்படியே சென்று கொண்டே இரு''. பாருங்கள்? அப்பொழுது நான் நேராக அங்கே பிரசங்க மேடையில் இருந்தேன்.... சொப்பனம் கலைந்து நான் விழித்துக் கொண்டேன். 86ஒருக்கால் நான் அதைக் குறித்தே நினைத்துக் கொண்டிருந்த தால், இப்படிப்பட்ட ஒரு சொப்பனம் எனக்கு வந்திருக்கலாம். அவ்விதமாக அது இருக்கலாம். அந்த சொப்பனம் ஒருவேளை ஆவிக்குரியதாகவும் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. அதைக் குறித்த வியாக்கியானமும் என்னிடம் இல்லை, அது எதைக் குறிக்கிறதென்றும் எனக்குத் தெரியவில்லை. அதை என்னால் உங்களுக்குக் கூறமுடியவில்லை, அது என்னவென்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னவாயிருந்தாலும் சரி, என் வாழ்க்கயிைன் முக்கியமான ஒரு கட்டத்தில் எங்கேயோ நான் இருக்கிறேன். பாருங்கள்? எங்கேயோ ஏதோ ஒன்று, ஏதோ ஒன்று இருக்கின்றது. ஆனால் ஒன்று என்னால் கூறமுடியும், நான் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறேன். அல்லது இந்த விதமாக, என்னை... அது இந்த விதமாக அல்லது அந்த விதமாக இருக் கின்றது, வேறொருவர் மற்றொரு விதமாக ஏற்றுக் கொள்கிறார். அதன் காரியம் என்னவெனில், ஒரு கருத்திற்கு நேராக கூறப்படும் போது ஒருவர் இந்த விதமாக அதைக் கேட்பார், அதை அவர் மற்றொவரிடம் கூறி, அக்கருத்தினின்று சிறிது அகன்று சென்று அதைச் சார்ந்து கொள்வார். அடுத்த நபர் இன்னும் சிறிது அகன்று சென்று அதைச் சார்ந்து கொள்வார், அடுத்தவர் இன்னும் சிறிது அகன்று செல்வார், பிறகு காரியத்தை விட்டு அப்படியே வெளியே சென்று விடுவார்கள். ஒரு அதை இந்த விதமாக கூறிக் கேட்பார், அவர் இந்த விதமாகச் செல்வார், அந்த விதமாகச் செல்வார், மற்றொரு விதமாக செல்வார். பாருங்கள், நீங்கள் அகன்று சென்று விடுவீர்கள். கூட்டங்களில் சரியாக ஒரு காரியத் தை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, கேட்பவர்கள் அந்த வித்தியாசப்பட்ட கருத்துக்களினூடாகச் சென்று விடுகிறார்கள். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அந்த குறிப்பிட்ட காரியத்தை கேட்கிறார்கள். அந்த காரியத்தை புரிந்தும் கொள் கிறார்கள்! அவர்கள் அதை அறிந்து கொள்கின்றார்கள். ஏனெனில், சரியாக அதன் அர்த்தம் என்னவென்பதை நான் அப்படியே கூறிவிடுகின்றேன் (புரிகின்றதா?) செய்தியை அப்படியே சரியாகக் கூறுகிறேன். 87இப்பொழுது, இதைத் தான் நான் கூறுகின்றேன். ஆனால் காலமுழுவதுமாக அதிகமான தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல் தான் தொடர்ந்து காணப்படுகின்றது. அது என்ன? விதைக்கப்பட வேண்டிய எல்லா விதமான விதைகளையும் நான் விதைத்து விட்டேனா? அந்நேரமானது மிக அருகாமையிலுள்ளதா? அந்த மகத்தான செய்தியாளன் சரியாக இப்பொழுது காட்சியில் அடியெடுத்து வைக்க தயாராக இருக்கிறாரா? கர்த்தருடைய வருகை அருகாமையிலுள்ளதா? இந்த தேசத்திலிருந்து மற்றொன்றுக்கு அழைக்கப்படுதலாக அது இருக்குமா? அவர் என்னை சுவிசேஷ ஊழியத்திலிருந்து அழைத்து விட்டாரா? நினைவில் கொள்ளுங்கள், நான்... அதை நான் மனைவியிடம் திரும்பக் கூறினேன். உங்களில் அநேகர் அந்த புத்தகத்தை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், அங்கே சரியாக அந்த மூலையில், நான் அடித்தளக்கல்லை நாட்டின அந்த நாளில், அதில் என்ன இருக்கிறதென்றால்... அக்காலை அவர் என்னை உறக்கத் தினின்று எழுப்பின போது, அங்கே அந்த அறையில் நான் உட்கார்ந்துக் கொண்டிருந்தேன். எனக்கு திருமணம் ஆவதற்கு முன்பாகவே, ஒரு மிக இளவயது பிரசங்கியாக நான் இருந்தேன், அவர், “ஒரு சுவிசேஷகனின் வேலையைச் செய். நீ ஒரு சுவிசேஷகன் அல்ல, ஆனால் அப்படிப்பட்ட ஒரு வேலையைச் செய்'' என்றார், ஒரு வேதவசனத்தை எனக்கு மேற்கோள் காட்டினார். நான் ஓடிச் சென்றேன். அந்த இரண்டு மரங்களைக் கண்டேன், ஒன்றை இங்கே உடைத்தேன். ஒருத்துவம் மற்றும் திரித்துவம். அவைகளை கலப்பினம் செய்யவில்லை, அவைகளை அப்படியே நான் விதைத்தேன். அப்பொழுது அந்த பழம் என் கரத்தில் விழும்படிக்கு அவர் பார்த்துக் கொண்டார். அப்பொழுது நான் கல்வாரிக்கு ஓடும்படிக்குச் செய்தார். இப்பொழுது கவனியுங்கள், அவர், ''நீ இதிலிருந்து வெளியே வந்தவுடன் பதீமோத்தேயு 4, 1தீமோத்தேயு 4ஐ வாசி'' என்று கூறினார். 88நான் அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கையில் அது என்னை விட்டுச் சென்றது. அது தரிசனமா என்று கூட எனக்குத் தெரியவில்லை. அதை என்ன என்று அழைப்பது என்று கூட அப்போது எனக்குத் தெரியாதிருந்தது. நான் அங்கே அடித்தளக் கல்லை (அந்த நாளின்) நான் நாட்டிக் கொண்டிருந்தேன். இப்பொழுது அந்த மூலைக்கல்லில் அது எழுதப்பட்டிருக்கின்றது, அது கூறுகிறது: ...சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறை வேற்று. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல் செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக் கேற்ற போதகர்களை தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு சத்தியத்திலிருந்து விலக்கப்பட்டு கட்டுக் கதைகளுக்கு திருப்பப்படுவார்கள். (அதுதான் ஒருத்துவமும் திருத்துவமும், அவர்கள் அதை இழந்து...) இப்பொழுது அவர் ''நீ ஒரு சுவிசேஷகன்'' என்று கூறவேயில்லை, அவர், ''அப்படிப்பட்ட ஒரு வேலையைச் செய்'' என்று கூறினார். புரிகின்றதா? இப்பொழுது அந்த நேரம் வந்து விட்டதா? அதை நான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதா அல்லது வேறே ஒன்றிற்கான நேரமானது வந்து விட்டதா? அது எனக்குத் தெரியாது. 89நான் இதைத் தான் செய்ய வேண்டுமென்று விரும்பினேன், உங்களிடம் ஒளி மறைவற்ற ஒரு சம்பாஷணையை நான் செய்ய வேண்டுமென்று விரும்பினேன். கூட்டத்தை முடித்து உங்களை அனுப்பி விட வேண்டிய நேரத்தையும் கடந்து நான் பேசி விட்டேன். உங்களை இவ்வளவு நேரமாக கூட்டத்தில் வைத்துக் கொண்டதற்காக நான் வருந்துகிறேன். ஆனால், கர்த்தருக்குச் சித்தமானால், ஞாயிறன்று சகோதரன் போசே வருவதற்கு முன்னர் போதகரே, அது உமக்குப் பிரிதியாயிருந்தால், ஞாயிற்றுக்கிழமை காலை நான் ஒருக்கால் இங்கே வந்து சாயங்கால நேர சுவிசேஷகம் அல்லது அதைப் போன்ற ஒரு பொருளின் பேரில் பேசுவேன், (சகோதரன் நெவில், “அருமையானது! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்'' என்கிறார்ஆசி) அது கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு காலை. இன்றிரவு நான் அதன் பேரில் தான் பேசலாம் என்றிருந்தேன், அது கர்த்தருடைய சித்தமாயிருக்குமானால் மற்றொரு நாள் ஒளி மறைவின்றி விவரமாக பேசலாம். ஒருக்கால், இந்த விதமாக அது இருப்பது நல்லது என்று நான் உணருகிறேன். பாருங்கள். 90நான் உங்களுக்காக ஜெபிக்கின்றேன். நீங்களும் எனக்காக ஜெபியுங்கள். ''சகோதரன் பிரன்ஹாம், நான் ஜெபிப்பேன்'' என்று கூற மாத்திரம் செய்யாதீர்கள், அதை நீங்கள் செய்யுங்கள்! பாருங்கள்? ஜெபத்தின் பேரில் தான் நான் சார்ந்திருக்கிறேன். அவரால் நான் வேறொரு இடத்திற்கு தள்ளப்படுவேனானால், ஜெபமானது எனக்குத்தான் தேவைப்படுகின்றது. நான் ஒரு மானிடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் தேவன் அல்ல. நானும் உங்களைப் போலவே ஒரு மானிடப் பிறவியே. தேவனுடைய சித்தம் என்ன என்றும், அதை அறிந்து அதற் குள்ளாக நடக்க அதை அறிய நான் முயற்சித்துக் கொண்டிருக் கிறேன். யாருமே அதை... “ஒருவன் ஞானத்தில் குறைவுள்ள வனாயிருந்தால்.... தேவனிடத்தில் கேட்கக்கடவன்.'' அதைத் தான் நான் செய்கின்றேன், தேவனிடத்தில் கேட்கின்றேன். என் சபையாகிய உங்களிடம் ஒளிவு மறைவு இன்றி இதை நான் கூறுகிறேன். நாம் என்ன, எங்கே இருக்கிறோம்? நாம் எதில் நின்று கொண்டிருக்கிறோம்? எந்த மணி நேரத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்? நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் சரியாக இங்கே முடிவில் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, அது ஒரு வழியாக அல்லது மற்றொரு வழியாக அது செல்லலாம். ஆகவே நீங்கள்.... ஒருக்கால் என்னுடைய வேலை முடிந்து விட்டிருக்கலாம் அல்லது வெளி நாடுகளில் ஊழியக்களத்திற்கு நான் அழைக்கப்படலாம், அல்லது அவர் என்னை ஒரு சுவிசேஷகனாகவோ அல்லது ஒரு ஞானதிருஷ்டிக்காரனாகவோ (seer) ஆக்கலாம். நான் முடிவில் இருக்கின்றேன். ஆகவே, அவைகளில் ஒன்று சம்பவித்தே ஆக வேண்டும். என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எந்த வழியாக செல்ல வேண்டுமென்றும் எனக்குத் தெரியவில்லை. அவைகளைக் குறித்து குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டங்களில், நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். நான், ''கர்த்தாவே, நான் செய்துக் கொண்டிருக்கின்ற விதமாகவே நான் செய்யப் போவதில்லை. அங்கே முன்பு நான் செய்தது போலவே இக்கூட்டத்தை நான் அணுகப்போகிறேன். நான் என்ன செய்ய வேண்டியவனாக இருக்க வேண்டும் என்று நீர் எனக்கு அழைப்பு கொடுக்கும் வரையிலும் நான் அந்த சுவிசேஷ ஊழியத்தின் பேரில் சார்ந்து அதையே செய்து கொண்டிருப்பேன்'' என்று ஜெபித்தேன். 91இப்பொழுது நான் விதையை எல்லா இடங்களிலும் விதைத்துவிட்டேன். ஒலி நாடாக்கள் உலககெங்கிலும் சென்றிருக் கின்றன. என் செய்திகள் உலகத்தைச் சுற்றிச் சென்றுள்ளது. எல்லா இடங்களிலும், அதைக் குறித்து எல்லா சபைகளுக்கும் முழுவது மாக - தெரியும். பிதாவானவர் எதையெல்லாம் தெரிந்து கொண் டுள்ளாறோ அதை அவர் அழைப்பார். பாருங்கள்? ஆனால் இப்பொழுதோ இச்செய்தி அவர்களுக்கு ஒரு சட்ட விரோத செயல்போல குற்றமான ஒன்றாக ஆகிவிட்டது. ஓ, அதனுடன் எந்த வித தொடர்பையும் கொண்டிருக்க அவர்களுக்கு விருப்பமில்லை. இல்லை, ஐயா. நான் சென்று வியாதியஸ்தருக்காக ஜெபித்து, அதைக் குறித்த ஒரு எளிய செய்தியை அளித்துபரிசுத்த ஆவியானவர் எந்த விதமாக வழி நடத்துகின்றார் என்று நான் பார்க்கட்டுமா? அவர் இன்னுமொரு அழைப்பு எனக்கு அளிக்கும் வரையில் இதைச் செய்ய வேண்டும் என்றுதான் என் மனதில் இருக்கின்றது. ஏனென்றால் என்ன செய்ய வேண்டு மென்று தேவனிடம் ஒரு மனிதன் புரிந்து கொள்ளும் வரை, அதை நீங்கள் உடையதாயிருக்கும் வரையிலும் தான் என்ன செய்ய வேண்டுமென்று அவனுக்குத் தெரியாது. நான் வீட்டிலேயே இருக்க எனக்கு விருப்பமில்லை. இச்செய்தி என் இருதயத்திலேயே உள்ளது. மக்கள் மரித்துக் கொண்டிருக்கின்றனர், விழுந்து கொண்டிருக்கின்றனர், நித்தியத் திற்குள் செல்லாமல் வெளியே சென்று கொண்டிருக்கின்றனர். நான் என்ன செய்வது? என்னால் முடிந்த வரையிலும் செய்தியை நான் எல்லா இடங்களிலும் வெடி சத்தம் போல முழங்கி, காரியத்தை அவர் மாற்றும் வரைக்கும் நான் கர்த்தராகிய இயேசுவைக் குறித்து சொல்வேனாக. எனக்காக நீங்கள் ஜெபியுங்கள், நானும் உங்களுக்காக ஜெபிப்பேன். நீங்கள் ஜெபிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். 92இப்பொழுது, புதன் இரவு ஜெப கூட்ட ஆராதனையும், மற்றும் வெள்ளி இரவு ஆண்கள் கூட்டத்தையும் நினைவில் கொள்ளுங்கள். அது நடக்கவிருக்கின்றதா? ஒருக்கால் உங்கள் எல்லோரையும் சந்திக்க நான் வருவேன், ஒரு வெள்ளி இரவு உங்களை சந்திக்க நான் வருவேன் என்று உங்களிடம் நான் கூறியுள்ளேன். சரி, அப்படியானால் ஞாயிறு காலை கர்த்தருக்குச் சித்தமானால் சாயங்கால நேர சுவிசேஷகம் என்பதன் பேரில் நான் பேசப் போகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால்; அதை மாற்ற லாம், அது எனக்குத் தெரியாது. சாயங்கால நேரத்தில் எந்த விதமாக சுவிசேஷகர்கள் வருவார்கள் என்பதைக் குறித்து சரியாக இப்பொழுது அதைத்தான் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு ஞாயிறு இரவு, சகோதரன் போசேயின் படக் காட்சி - அதை இப்பொழுது நினைவில் கொள்ளவும். கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த வாரத்திற்கு நாங்கள் அறுவடைக்களத்தில் அறுப்போம், எங்களுக்காக ஜெபியுங்கள். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! நீங்கள் அவருக்கு ஊழியம் செய்வீர்களா? ஆமென்! நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென்! ஆமென், ஆமென்! அவர்தான் பிதா. ஆமென்! அவர்தான் குமாரன். ஆமென்! அவர்தான் பரிசுத்த ஆவி. ஆமென்! ஆமென், ஆமென். இன்னும் பாடுங்கள். ஆமென்! ஆமென்! ஆமென்! ஆமென், ஆமென்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! அவர் வருகின்றாரா? ஆமென்! நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? ஆமென்! ஆமென், ஆமென்! இன்றிரவாக இருக்கலாம், நீங்கள் ஆயத்தமா? ஆமென்! காலையாக இருக்கலாம், நீங்கள் ஆயத்தமா? ஆமென்! எந்நேரமாகவும் இருக்கலாம், நீங்கள் ஆயத்தமா? ஆமென்! ஆமென், ஆமென்! இன்னுமாக பாடுங்கள். ஆமென்! இனனுமாக சத்தமிடுங்கள். ஆமென்! இன்னுமாக ஜெபியுங்கள். ஆமென்! ஆமென், ஆமென்! கர்த்தராகிய இயேசுவே வாரும். ஆமென்! உங்கள் சபையை ஆயத்தப்படுத்துங்கள். ஆமென்! நாம் ஆயத்தமாகின்றோம். ஆமென்! ஆமென், ஆமென்! என் தாயைக் காண விரும்புகிறேன். ஆமென்! என் தந்தையைக் காண விரும்புகிறேன். ஆமென்! என் இரட்சகரைக் காண விரும்புகிறேன். ஆமென்! ஆமென், ஆமென்! ஓ, நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! நீங்கள் அவருக்கு ஊழியம் செய்வீர்களா? ஆமென்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! ஆமென், ஆமென்! 93எங்கள் பரலோகப் பிதாவே, இது எங்களுடைய ... ஒரு சிறு ஆமென் பாட்டு ஆகும். உம்முடைய போதனையை நாங்கள் நேசிக்கிறோம், நாங்களெல்லாரும் ''ஆமென்“ என்று கூறுகி றோம்! ஆவியானவரை நாங்கள் நேசிக்கிறோம், ''ஆமென்!'' அவர் வருகின்றார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், ''ஆமென்!'' கர்த்தாவே, உம்முடைய வேதாகமத்தில் நீர் உரைக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும், நாங்கள் ''ஆமென்” என்று அழுத்தமாய்க் கூறுகிறோம். வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையும் நாங்கள் விசுவாசிக்கிறோம். எங்களுக்குத் தெரிந்த வரையிலும், வேதத் துள்ள எல்லாவற்றையும் அது எழுதப்பட்ட விதமாகவே, ஒவ்வொரு நிறுத்தற் குரியும், ஒவ்வொரு சிறு கோடும் (hyphen), எங்களுக்கு தெரிந்த வரையிலும் ஒவ்வொரு கால்புள்ளியும் கூட, அது எவ்வாறு எழுதப்பட்டுள்ள தோ அதை அப்படியே, அவ்விதமாகவே நாங்கள் போதிக்கின்றோம். ஓ, தேவனே, எங்களை திரும்பக் கொண்டு செல்லும், கர்த்தாவே, வானங்களில் அல்லேலூயா பாடலோடு தூதர்களின் முழக்கங்களோடு வருவதை ஒரு நாளிலே நாங்கள் கேட்போம், அப்போது இயேசு அங்கே தோன்றுவார். அப்போது சபை மேலே எடுத்துக் கொள்ளப்படும் என்று. நாங்கள் பேராவல் கொண்டுள்ள அந்த மகத்தான மனநிறைவு அளிக்கின்ற விருப் பத்தை எங்களுக்குத் தாரும். அவிசுவாசிகள், ''என்ன ஆயிற்று, அந்த மக்களுக்கு என்ன ஆயிற்று? அவர்கள் எங்கே சென்றனர்?'' என்று வியப்படை வார்கள். ஓ தேவனே, அவர்கள் அதை புரிந்து கொள்ளமாட்டார் கள். அவரை அவர்கள் காணவும்கூட மாட்டார்கள். ஆனால் வெளியே அழைக்கப்பட்டவர்கள், தெரிந்து கொள்ளப்பட்ட வர்கள், மறுபடியும் பிறந்தவர்கள் போன்றோர் கொண்ட அவர்கள் காணாமற்போவார்கள். சபையோ அவரைக் காணும். இம்மக்கள் எங்கே சென்று விட்டனரென்று மற்றவர்களுக்குத் தெரியாது. அவர்கள் காணாமல் போய்விட்டனர் என்று மாத்திரமே அறிந்து கொள்வார்கள்; ஆனால் இவர்களோ தங்கள் கர்த்தரோடே இருப்பார்கள். அந்த நேரத்தில், கர்த்தாவே, இங்கேயே விடப்படுவது இரட்சிப்பின் காலமானது கடந்து சென்று விட்டது என்று அறிந்து கொள்வது பயங்கரமான ஒரு காரியமாக இருக்குமல்லவா? மீட்கப்படுதல் என்பது இனியும் இருக்காது! ''அசுத்தமாயிருக் கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; பரிசுத்தமில்லாதவன் இன்னும் பரிசுத்தமில்லாதவனாயிருக்கட்டும்' என்று வேதாகமம் கூறியிருக்கிறது. ஓ, அது எப்படிப்பட்ட ஒரு மணி நேரமாக இருக்கும்! 94கர்த்தாவே! இப்பொழுது நாங்கள் ஆயத்தமாகட்டும். பிதாவே, உம்மை நாங்கள் சந்திக்க எங்களை நாங்கள் ஆயத்தப் படுத்துவதென்பது, மற்றும் அனுதினமும் எங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்துவது என்பது எவ்வளவு அற்புதமான ஒரு சமயமாக இருக்கும் கர்த்தாவே. இன்று இந்த ஏழை ஆத்துமா எழுதிக் கேட்ட இந்த கேள்வியைப் போல், நாங்கள் ஒரு தவறைச் செய்து விழுவோமானால், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவத்தையும் கழுவுகின்றது என்பதை அவர்கள் அறியட்டும். கேள்வியை கேட்ட அந்த நபர் அவ்வாறே செய்ய வேண்டும் என்று கேட்க வில்லை, கர்த்தாவே, அவர்கள் பசி தாகம் கொண்டு ஆவியானவருடைய ஐக்கியத்துக்குள்ளாக திரும்ப வரும்படிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தவே அவர்களை மேலே கொண்டு வாரும். இந்த இருளடைந்த, வருத்தத்தால் நிறைந்த உலகத்திலிருந்து அவர்கள் மேலே எழும்பட்டும்; அங்கே சூரிய ஒளியானது அவர்கள் ஆத்துமாக்களின் மீது மறுபடியுமாக பிரகாசிக்க ஏதுவாக இருக்கும். அவர்கள் தாமே அந்த மகத்தான வான விளிப்பினின்று - இருளான மேகங்களுக்கு கீழாக திடு மெனக் கீழே விழுந்து விட்டார்கள். அவர்கள் நேராக அழுக்கிற் குள்ளாக, நேராக கீழே பாவத்துக்குள் விழுந்து விட்டார்கள். ஆனால் ஒரு காலத்திலே அவர்கள் அங்கே மேலே சூரிய ஒளியில் வாழ்ந்தார்கள். கர்த்தாவே அவர்கள் திரும்பவுமாக செல்ல விரும்புகிறார்கள். கர்த்தாவே இன்றிரவு அவர்களை மறுபடியுமாக சேர்த்துக் கொள்ளும். அங்கே மேலே இருப்பதை கண்டிராத வர்கள் யாராவது ஒருவர் இங்கே இருப்பார்களானால்.... இங்கே இருக்கின்ற எல்லாம், ஏவுகணை மற்றும் எல்லாம் சரியாக உமது வார்த்தையின் பிரகாரமாகவே இருக்கின்றது, சரியாக எப்படி நடந்தேறப் போகின்றதோ அதே விதமாகவே காரியங்களும் இருக்கின்றன. இன்றைக்கு உலக சபையானது என்ன செய்துள்ளனர் என்று நாம் காண்கிறோம். நோவாவின் நாட்களில் எவ்வாறிருந்ததோ, சோதோமின் நாட்களில் எப்படி காண்கிறோம், என்ன நடக்கும் என்று இயேசு கூறியுள்ளாறோ சரியாக அதே விதமாக இருப்பதை நாங்கள் காண்கிறோம். நில நடுக்கத்தால் கடலில் உண்டாகும் ஆழிப் பேரலைகள்; எவ்வித மாக பெண்கள் நடப்பார்கள், ஆடை உடுத்துவார்கள், மற்றும் எவ்விதமாக அவர்கள் பிறர் விவகாரங்களில் எப்பொழுதும் தலையிடுபவர்களாக இருப்பார்கள், மற்றும் அவர்கள் எவ்விதமாக தாங்கள் விரும்புகிற விதமாக நடப்பது, மினுக்கி மற்றும் முறுக்கி நடப்பது மற்றும்... சரியாக அந்த தீர்க்கதரிசி கூறின விதமாகவே உள்ளன. ''இரும்பும் களிமண்ணும் ஒன்றுக்கொன்று ஒவ்வாது'' என்று தானியேல் கூறியிருந்தான். ஆகவே, ஓ, ஒவ்வொரு காரியமும், கர்த்தாவே, அது நிறைவேறிவிட்டது. நாங்கள் சரியாக கடைசி காலத்தில் இருக்கின்றோம். கர்த்தாவே, நிழல்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. சிகப்பு விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன, மணிகள் அடித்துக் கொண்டிருக்கின்றன. 95ஓ தேவனே, சீக்கிரத்தில் அந்த தூதன் தன் காலை நிலத்தின் மீதும் சமுத்திரத்தின் மீதும் வைத்து தன் கைகளை மேலே உயர்த்தி ''இனி காலம் செல்லாது!'' என்று கூறுவார் என்பதை உம்முடைய மக்கள் உணரட்டும். அப்போது ஓ, எப்படிப்பட்ட ஒரு அழுகையும் துக்கிப்பும்; இழக்கப்பட்டவர்களிடம் தங்கள் முடிவானது எடுத்துக் கூறப் படும்போது; அது எவ்விதமான அழுகையும் பற்கடிப்புமாயிருக்கும் அவர்கள் பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கிக் கதறுவார்கள், அவர்கள் ஜெபிப்பார்கள், ஆனால் அந்த ஜெபம் மிகவும் காலதாம தமான ஒன்றாயிருக்கும். இப்பொழுதே இரட்சிப்பின் நாளாகும். “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்''. கர்த்தாவே, இதை அருளும். அந்த எடுத்துக்கொள்ளப்படுதலின் நாளிலே இங்கே ஒரு நபர் கூட அதை தவற விட வேண்டாம். காத்துக் கொண்டிருப் பவர்களோடு எங்களையும் சேர்த்து பரிசுத்த ஆவியானவர் மேலே எடுத்துக் கொள்ளும் வரையிலும் அல்லது எங்கள் சுதந்தரவீதத்தில் இளைப்பாறச் செல்லும் வரையிலும் நாங்கள் தாமே தேவனுடைய அன்பிலும் மற்றும் தேவ ஆவியிலும் மிகவுமாக நிறையப்பட்டிருப்போமாக. நீர் தானியேலிடம் ''தானியேலே, நீயோவென்றால் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, அந்த நாளிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்“ என்று கூறியுள்ளீரே. ஓ தேவனே, ''அநேகரை பாவத்திலிருந்து நீதிக்குட்படுத்து கிறவர்கள் நட்சத்திரங்களை விட என்றென்றைக்கு முள்ள சதா காலங்களிலும் பிரகாசிப்பார்கள்'' என்று நீர் கூறியிருக்கிறீர். அது எப்படிப்பட்ட ஒரு நாள்! ஆனால் அந்த துன்மார்க்கர் அழிவுக் குள்ளாக திருப்பித் தள்ளிவிடப்படுவார்கள். ஓ தேவனே, மனிதர் இப்பொழுது தங்களுடைய வாழ்க்கையின் நிலைமையை உணர்ந்து கொள்ளும்படிக்குச் செய்யும். அதனால் என்றென்றைக் கும் முடியாத ஒரு சூழ்நிலைக்கு முன்னதாகவே அவர்கள் தாமே நீதியுள்ளவராகிய அவரிடமாக திரும்புவதற்கு ஏதுவாக இருக்கும். இதை அருளும் பிதாவே. 96சற்று நேரத்திற்கு நம்முடைய தலைகள் தாழ்த்தியிருக்க, முடிவு ஜெபத்திலே, “சகோதரன் பிரன்ஹாம், நான் என்னுடைய கரத்தை உயர்த்துகிறேன், உங்களிடம் நோக்கி அல்ல. ஆனால் தேவனிடமாக உயர்த்துகிறேன். தேவன் தாமே என்னிடமாக இரக்கமாயிருக்கட்டும். அதினாலே ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினாலே கழுவப்பட்டு அந்த நாளிலே நான் இருப் பேனாக'' என்று கூறி ஜெபத்திலே நினைவுகூறப்பட வேண்டு மென்று யாராவது இருக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. தேவன் உங்களை, உங்களை, உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக, அநேக கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பொழுது, பரலோகப்பிதாவே, தேவனே, ஒவ்வொரு வரையும், ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். அவர்களுடைய கரங்களை நீர் தாமே கண்டீர். அவர்களுடைய இருதயங்களை நீர் அறிவீர். கர்த்தாவே, நாங்கள் உணர்வது என்னவென்றால், ஏதோ ஒன்று சம்பவிக்க இருக்கின்றது. உலகம் அதை அறியும், அவர்கள் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றனர், தொலைக்காட்சிகளில் இயல்பு மீறிய உணர்ச்சியுள்ள நகைச்சுவைகளும் பாடல்களும் நிரம்பி காணப்படுகின்றன. அவர்கள் செய்து கொண்டிருப்பது என்ன? ஒரு சிறு பையன் இருட்டில் ஒரு கல்லறையைக் கடக்கும் போது விசில் அடித்துக்கொண்டு செல்வது போல, அவன் மிகவும் பீதியுற்ற நிலையில் உள்ள அவன், விசில் அடித்து தன்னுடைய பயத்தைப் போக்க, தன்னுடைய நடுக்கத்தை போக்க முயற்சிக்கின்றான். அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான். ஆகவே இந்த தேசமானது சிரிப்பின் மூலமாகவும் நகைச்சுவையின் மூலமாகவும்..?..! வேதாகமம் கூறுகின்ற விதமாகவே, ஒரு காலமானது வரும். அப்பொழுது அவர்கள், ''சத்தியத்திலிருந்து விலகி கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து போகும் காலம் வரும்'' என்கின்ற விதமாகவே செயல்படுவார்கள். மேலும் ''கடைசி நாட்களில் பரியாசக்காரர் மற்றும் சிரித்து ஏளனம் செய்பவர்கள் வந்து“' என்றிருக்கிறதே, கடைசி காலத்தில் இக்காரியங்கள் எவ்விதமாக இருக்கும், '' துணிகரமுள்ளவர் களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவபக்தியின் வேஷத்தை தரித்து சத்தியத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள்'' என்று அது சரியாக அவ்வாறிருப்பதை இப்பொழுது நாம் காண்கிறோம். 97ஓ தேவனே, மக்களை விழிப்பூட்டும்! சரியாக இப்பொழுதே அவர்கள் மரணத்தினின்று ஜீவனுக்கு கடந்து விட்டனர் என்ற ஒரு உறுதியை அவர்கள் பெறலாம் என்று உணரும்படிக்குச் செய்யும். நாம் கிறிஸ்துவை, அந்த பரிசுத்த ஆவியைப் பெறுகையில் நாம் உலகத்தினின்று சற்று மேலாக உயருகிறோம். நாம் ஏற்கெனவே அவருடன் உயிர்த்தெழுந்துவிட்டோம் என்று நாம் அப்பொழுது அறிந்து கொள்வோம், நாம் அந்த மாற்றத்திற்காக மாத்திரமே காத்துக் கொண்டிருக்கிறோம். அது மரணம் நின்று போய் இந்த மரித்துப்போகத்தக்கதான பரிமாணங்கள் (இங்கே நம்முடைய புலன்களில் சுழன்று கொண்டிருக்கின்ற இந்த மரித்துப் போகப்போகின்ற ஜீவனின் சிறு சக்கரங்கள்) மீட்கப்படும். ஓ தேவனே! அப்பொழுது நாங்கள் அவரைப் போன்ற சரீரத்தை நாங்கள் கொண்டிருந்து அந்த மகத்தான வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்தில், அவருடன் நித்தியமாக நாங்கள் இருப்போம், அதன் அத்தாட்சியை நாங்கள் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, ஒருவரும் அதைத் தவற விட வேண்டாம். தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளவர்கள் இன்றிரவு இராஜ்யத்திற் குள்ளாக வேகமாகச் செல்வார்களாக. ஒருக்கால் அவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது, ஒருக்கால் ஒரு மனிதன் தன்னுடைய மனைவியிடம் ''அருமையானவளே, இன்றிரவு ஏதோ ஒன்று என்னை தொட்டது“ என்பார்; அல்லது மனைவி கணவனிடம் ”தேனே, நான் வழக்கத்துக்கு மாறான ஒரு உணர்ச்சியை கொண்டிருந்தேன்'', என்பாள். ''ஆம், அருமையானவளே, இங்கே கட்டிலின் பக்கத்தில் நாம் முழகாற்படியிடுவோம். முன்பு நாம் இதைச் செய்ததில்லை, ஆனால் இன்றிரவு நாம் ஜெபிப் போம். தேவன் நம்மிடம் இரக்கமுள்ளவராயிருந்து நம்மை சேர்த்துக் கொள்ள அவரைக் கேட்போம். இருதயத்திற்கு இனியவளே, நான் உன்னை நேசிக்கிறேன்.'' 98மற்றொரு நாள், அந்த ஆண் பெண்ணிடம் கூறினார்- அவர் கள் எவ்வளவாக ஒருவரையொருவர் நேசித்தனர்- ''உன்னுடன் நானும் பரலோகத்தில் இருக்க விரும்புகிறேன். அதை நான் தவற விட விரும்பவில்லை. ஒரு நாளிலே நாம் பரமவீட்டில் வரவேற் கப்படும் போது நான் உன் கையை என்னோடு கோர்த்துக் கொண்டு அந்த மகத்தான நடைக் கூடங்களினூடாகவும் நித்தி யத்தின் தோட்டங்களிலும் அழைத்து கொண்டு நடப்பேன். அதில் ஆட்டுக்குட்டியும் சிங்கமும் ஒன்றாகப் படுத்துக் கிடக்கும், நரியும் மாடும் ஒன்றாக படுத்துக் கொண்டிருக்கும். அங்கே இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது. அங்கே அவைகளினூ டாக நாம் நடந்து செல்லும் போது தேவ தூதர்களின் சங்கீதங்கள் இன்னிசை களாக ஒலித்துக் கொண்டிருக்கும், தூதர்கள் நம்மை பரவீட்டிற்கு வரவேற்கும் போது நமக்கு மேலே பாடப்படுகின்ற பாடல்கள் பாடப்படுகையில், அருமையானவளே அங்கே நான் உன்னோடே கூட இருக்க விரும்புகிறேன். நான் உன்னை நேசிக்கிறேன்.'' ஒருக்கால் உங்களுக்கு வயதாகிக் கொண்டிருக் கலாம். ''உன்னை நான் விவாகம் செய்த போது உன்னுடைய சிறிய அழகிய முகத்தை நான் நினைவுகூருகிறேன்'' ''நீங்களும்தான், அருமையானவரே, நீங்கள் ஒரு திடகாத்திரமான வாலிப மனிதனாக இருந்ததையும் நான் நினைவுகூறுகிறேன்.'' 99ஆனால் இவை எல்லாமும் திரும்ப அளிக்கப்படும். ஒரு காலத்தில் உங்களுடைய அழகிய முகத்தை வரைந்த அவர் அதனு டைய ஓவியத்தை தம்முடைய சிந்தையில் கொண்டிருக்கிறார். அங்கே மறுகரையில் அவர் அதை மறுபடியுமாக வரைவார். அங்கே அது மங்கிப் போகவே போகாது. ஓ தேவனே, அது ஒரு புராணக் கதை போன்ற கனவு அல்ல என்றும் இது உண்மை யானது என்றும் பரிசுத்த ஆவியானவராகிய தேவன் அது உண்மை என்று சாட்சி கொடுக்க இங்கே இருக்கின்றார் என்று மக்கள் அறிந்து கொள்ளுபடிக்குச் செய்யும். அவருடைய வார்த்தை காலங்களினூடாக அதைக் குறித்து உரைத்துள்ளது. நாம் திரும்பிப் பார்த்து, உற்று நோக்கி நம்முடைய வரலாற்றைப் படிப்போமாக. பூமியிலே நல்ல ஒரு காரியத்தைச் செய்த எந்த ஒரு மனிதனும் தேவனுக்கு பயந்த மனிதனாக இருந்தான், நம்முடைய ஜனாதிபதிகளாகிய வாஷிங்டன், லிங்கன் போன் றோர் கூட, யோசுவாக்கள் மற்றும் இன்னும் பிற... மோசேக்கள், உலகத்தின் மகத்தான மனிதர் அதை விசுவாசித்த மனிதராய், தங்களுடைய சாட்சியை முத்திரையிட்டு உயிர்த்தெழுதலுக்காக அங்கே காத்துக் கொண்டிருந்தனர். அந்த அச்சாரமாகிய அதனு டைய முதல் கனிகளை நாம் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நீர் தாமே என்னுடைய ஜெபத்தின் மூலமாக இம்மக்களை தங்களுடைய ஜெபத்தோடு கூட பெற்றுக்கொண்டு ராஜ்யத்துக்குள்ளாக இவர்களை எடுத்தக் கொள்ள வேண்டுமென்று நான் ஜெபிக்கின்றேன். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கின்றோம். ஆமென். 100தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களிடமாக இரக்கத் தில் ஐசுவரியமுள்ளவராக இருப்பாராக, அவருடைய முகத்தைத் தாமே உங்கள் மீது பிரகாசிக்கச் செய்வாராக, உங்களைக் காத்து, எல்லா பரலோக ஆசீர்வாதங்களுக்குள்ளாக உங்களை ஆசீர்வதிப் பாராக. இப்பொழுது நான் இதை, கொடூரமாக அல்ல, ஆனால் அன்பினாலே இதைக் கூறுகிறேன். அவரை அறியாதிருக்கிறவர் களாகிய உங்களுக்கு, மெதுவாக வெளியே சென்று எங்கேயாவது ஓரத்தில் ஒதுங்கி ''கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்'' என்று நீங்கள் கூறும் வரை உங்கள் தலையணை மிகவும் கடினப்பட்டு இனிமேல் நீங்கள் உறங்க முடியாதபடிக்கு ஆகட்டும், இனிமேல் நீங்கள் உணவு உண்ணாத படிக்கு உங்கள் ஆகாரம் மிகவும் கெட்டுப்போய் துர்நாற்றமாகட்டும் என்று நான் ஜெபிக்கிறேன். உங்களுக்கு தவறு நேரிடவேண்டும் என்கின்ற விதத்தில் கூறவில்லை, சகோதரனே, சகோதரியே, அது உங்களுடைய நன்மைக்காகவே. அது அந்த விதமாகவே உங்களுக்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே நான் ஜெபிக் கின்றேன். நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை (நாம் சந்திக்கும் வரை!) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உம்முடன் இருப்பாராக. நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உம்முடன் இருப்பாராக. தம்முடைய ஆலோசனையின் வழிநடத்துதலால், உம்மை தாங்கிப் பிடிப்பாராக, உன் முன் இருக்கும் மரண அலைகளை அடிப்பாராக; நாம் சந்திக்கும் வரை தேவன் உம்மோடு இருப்பாராக... 101இப்பொழுது பழங்கால வழக்கத்தின்படியே நாம் வேறொருவருடன் கைகளைக் குலுக்குவோமாக. (இந்த மூன்று சரணங்கள் பாடப்படுகையில் சகோதரன் பின்ஹாம் மக்களுடன் கைகளைக் குலுக்குகிறார் - ஆசி) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை; (நாம் சந்திக்கும் வரை!) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உம்மோடு இருப்பாராக! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை; (நாம் சந்திக்கும் வரை!) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உம்மோடு இருப்பாராக! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை; (நாம் சந்திக்கும் வரை!) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உம்மோடு இருப்பாராக! 102அந்தப் பாடல்களை நாம் பாடுவோமே, உங்களுக்கு நினைவிருக்கிறதா? நாம்... அநேக வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தப் பாடலையும் கூட நாம் பாடுவதுண்டு. அப்பாடல் இங்கே இருக்கின்றதா என்று எனக்குத் தெரியவில்லை. இங்கே மண் தரையில் ஒரு பழைய அடுப்பைச் சுற்றி நாம் கைகளைக் இணைத்துப் பிடித்துக் கொண்டு பாடுவோமே. உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? நாம் பாடுவோம்: நாம் சீயோனுக்கு அணிவகுத்துச் செல்கிறோம் அழகிய, அழகிய சீயோனுக்கு; நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்துச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு ஆயிர வரட அரசாட்சியில் சீயோன் எப்படி இருக்கப் போகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? சீயோனின் மீது ஒரு ஒளி இருக்கும், இரவில் இருக்கின்ற ஒளியைப் போல் பகலின் சீயோனிலிருந்து ஒரு நிழல் இருக்கும். ஏனெனில் அங்கே இரவு என்பது கிடையாது. ஓ, என்னே ! அந்த மலையின், சீயோனின் வயல்களில் ஆயிரம் புனித இனிப்புகள் விளைகின்றன அந்த பரலோக சிங்காசனத்தை நாம் அடையுமுன்னர், அந்த பரலோக சிங்காசனத்தை நாம் அடையுமுன்னர், அல்லது பொன் வீதிகளில் நடக்கையில் அல்லது பொன் வீதிகளில் நடக்கையில் இப்பொழுது எல்லோரும் சேர்ந்து பாடுவோமாக: நாம் சீயோனுக்கு அணிவகுத்துச் செல்கிறோம் அழகிய, அழகிய சீயோனுக்கு; நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்துச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரத்துக் 103அது எனக்கு மிகவும் பிடிக்கும், அது அழகாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்த பழங்கால பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமல்லவா? இன்று பாடல்கள் என்று அழைக்கப்படுகின்ற இந்த துண்டு துண்டாக்கப்பட்ட பாடல்களை விட அந்த பழங்கால பாடல்கள் மிக அருமையானதாக இருக்கின்றதென்று நான் நினைக் கிறேன். நான் அதை மிகவுமாக விரும்புகிறேன். சபையில் ஒரு பழைய பாடலைப் பாடுவேனே, அது உங்களுக்கு நினைவிருக் கிறதா: அறை, அறை, ஆம் அங்கே ஒரு அறை உள்ளது, அங்கே ஊற்றண்டையில் ஓர் அறை உள்ளது. ஓ, என்னே! அந்த அருமையான, பழைய பாடல்கள், அப்பாடல்களை எழுதினவர்கள், அந்த எழுதுகோல் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட்டது என்று நான் விசுவாசிக் கிறேன். உம்மண்டை தேவனே நான் சேரட்டும் சிலுவை சுமந்து நடப்பினும் என்றுமே உம்மண்டை தேவனே நான் சேர்வதே. 104இருப்பினும், சார்லஸ் வெஸ்லி மற்றும் அந்த மகத்தான ஆக்கியோன்கள், அந்த கவிஞர்கள் இது போன்ற பாடல்களை இயற்றினர். அது அழகானது, அப்பாடல்கள் மிக அருமை யானதாக இருக்கின்றது என்று நான் எண்ணுகிறேன். ஆகவே நாங்கள்... அதை நினைவில் கொண்டுள்ளீர்களா: ஓ பியூலா தேசம், இனிய பியூலா தேசம், உயர்ந்த மலையில் நான் நிற்கையில், கடலை கடந்து அப்புறம் காண்கிறேன், நீர் எனக்கு ஆயத்தப்படுத்தியுள்ள மாளிகைகள் இருப்பதை அங்கே நதியில் முதல் முறையாக கர்த்தருடைய தூதன் தோன்றினது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்பொழுது நாம் பாடிக் கொண்டிருந்தோம். புரண்டோடும் யோர்தானின் கரையில் நான் நின்று, என் ஆவலுள்ள பார்வையை செலுத்தினேன், என் சுதந்தரங்கள் இருக்கின்ற அந்த சந்தோஷ, அருமையான கானானை நோக்கி நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்படபோகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். 105இந்தப் பாடலை நாம் பாடிக் கொண்டிருக்கையில், வானத்தி லிருந்து ஒரு சத்தம் கூக்குரலிட்டது. அப்பொழுது அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பம் சுழன்று கொண்டே கீழே வந்து, ''அவருடைய முதலாம் வருகைக்கு யோவான் ஸ்நானன் முன்னோடியாக அனுப்பப்பட்டது போல இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக யிருக்கும் ஒரு செய்தியை நீ கொண்டிருக்கிறாய்'' என்று கூறினது. அப்பொழுதிலிருந்து அது எங்கு சென்றது என்று பாருங்கள். அது முப்பத்தொன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அதிலிருந்து அது எங்கே சென்றது என்று பாருங்கள், ஒரு எழுப்புதல் அக்கினியாக உலகம் சுற்றிலும் சென்றது. இப்பொழுது அது அமைதியாக இருப்பதை நாம் காணலாம். காலம் சமீபமாக இருக்கின்றது. இப்பொழுது நம்முடைய தலைகளைக் தாழ்த்துவோம், அறிவிக்கப்பட்ட எல்லா அறிவிப்புகளையும் நினைவில் கொள்வோ மாக. என்றாவது ஒரு நாளிலே வரப்போகின்றார் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மந்தையின் பிரதான மேய்ப்பரே, அவரை நாங்கள் காணப்போகும் அந்த மணி நேரத்திற்காக எங்கள் இருதயங்கள் பேராவல் கொண்டுள்ளன. ஒரு நாளிலே நீர் மலையின் மேல் உட்கார்ந்து உம்முடைய ஜனங்களுக்கு நீர் போதித்தீர், ''நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாகவது'' என்று நீர் கூறினீர் (சகோதரன் பிரன்ஹாம் மற்றும் சபையார் ஒன்று சேர்ந்து ஜெபிக்கிறார்கள்.) .... பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முயைட நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத் திலே செய்யப்படுகிறது போது பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும் எங்களுக்கு விரோமாக தப்பிதம் செய்கிறவர்களை நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் தப்பிதங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. 106“அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டை பாடின பின்பு புறப் பட்டுப் போனார்கள்” என்று வேதாகமம் கூறுகின்றது. இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், துயரமும் துன்பமும் கொண்ட பிள்ளையே; அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும், எங்கு சென்றிடினும் அதைக் கொண்டு செல். விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம் ஓ என்ன இனிமை! (எவ்வளவு இனிமை!) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். அப்பாடல் மிக அழகாக தொனிக்கிறதல்லவா? நாம் அதை இங்கொன்றாக அங்கொன்றாகப் பாடி, அதைப் பாடும்போது மறுபடியுமாக அதை கவனிப்போம். இயேசுவின் நாமத்தில் தாழக் குனிந்து, அவருடைய பாதத்தண்டையில் விழுந்து பணிவோமாக (பாருங்கள்?) நம் பிரயாணம் முடிவுறும்போது பரலரேகத்தில் இராஜாதி ராஜாவாக அவருக்கு முடிசூட்டுவோமாக ஓ, அது அழகான ஒன்றல்லவா? நாம் பாடுவோமாக: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக; உன்னைச் சுற்றிலும் சோதனைகள் சூழும்போது, அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. (பாருங்கள்?) ஓ விலையுயர்ந்த நாமம்! அதை நாம் பாடுவோமாக: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக உன்னைச் சுற்றிலும் சோதனைகள் சூழும் போது அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. ஓ விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்!) ஓ என்ன இனிமை (ஓ என்ன இனிமை!) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். விலையும் யர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை! (எவ்வளவு இனிமை!) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தும்போது, நம்முடைய மேய்ப்பர் ஜெபம் செய்து கூட்டத்தை முடித்து வைப்பார். சகோதரன் நெவில், தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. ***** முத்திரைகள் மீதுள்ள கேள்விகளும் பதில்களும் Cod-17 Jeffersonville, Indiana, USA 63-0324M 1(ஒரு சகோதரன் அன்னிய பாஷையில் பேசுகிறார். அதற்கு வேறொரு சகோதரன் வியாக்கியானம் செய்கிறார். சபையார் சத்தமாக ஜெபிக்கின்றனர்-ஆசி) எங்கள் பரமபிதாவே, தேவனுடைய சமூகத்தில் மீண்டுமாக தேவனுடைய வார்த்தையின்மீது நாங்கள் ஐக்கியம் கொள்ளும் இந்த நேரத்திற்காக உண்மையிலேயே நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். இந்தக் காலையிலே எங்களுக்கு உதவிசெய்யவும், எங்களை ஆசீர்வதிக்கவும், நீர் எங்களுடன் இருப்பதற்காக நாங்கள் அதிக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். எங்களுடைய விளக்குகள் எண்ணெயினால் நிரப்பப்பட்டதாகவும், திரி வெட்டப்பட்டு எரிகிறதாய் இருக்கவும், உம்முடைய மகத்தான நாமம் கனமடைய நீர் எங்களை இப்பொழுது உபயோகப்படுத்தும். எங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுகிறோம். தேவனுடைய நேசகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக் கொள்ளுகிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 2செய்தி போய்க்கொண்டிருக்கும்போது, நான் உள்ளே வந்துக் கொண்டிருந்தேன். ஆகவே நான்... நம்முடைய விளக்குகள் நிரப்பப்பட்டதாய் வைத்திருக்கவேண்டியது அவசியமாய் இருக்கிறது என்பது உண்மையாகும். இப்பொழுது செய்துக்கொண்டிருப்பது போலவே நீங்கள் செல்ல முடியாது; கவனியுங்கள். ஏனென்றால் எண்ணெய் எரியும்போது திரியில் கரி உண்டாகிறது. ஆகவேதான் திரி வெட்டப் படவேண்டும். திரியின் முனையில் உள்ள கரியின் நிமித்தம் உங்கள் விளக்கின் திரி வெட்டப்பட்டதாய் இருக்கட்டும். என்னுடைய வயதுள்ள அநேக மக்கள், நிலக்கரியின் எண்ணெய் விளக்குகளை நாங்கள் உபயோகப்படுத்தியிருக்கிறோம். அது-அது-அது - எரியும்போது திரியின் முனையில் கரி உண்டாகும். அப்பொழுது அது வெளிச்சத்தை பாதிக்கிறதாய் இருக்கும், ஆகவே, ''கிறிஸ்துவுக் குள்ளிருக்கும் உன்னத அழைப்பின் இலக்கை நோக்கி முன்னேற,'' திரியின் முனையில் உள்ள கரியைத் துண்டித்தவர்களாக இருக்க வேண்டும். இப்பொழுது, ஈஸ்டர் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் உள்ளும், புறமும் இப்பொழுது இது ஒரு வெகு அருமையான காலை நேரமாக இருக்கிறது. 3ஆகவே, கர்த்தருக்குச் சித்தமானால் இன்றிரவு கடைசி முத்திரைக்கு வருவோம். அது ஒரு மிக, மிக இரகசியமான முத்திரையாய் இருக்கிறது... ஏனென்றால், அதை அறிந்துக்கொள்ளத்தக்கதாக வேதத்தில் எந்த இடத்திலும் அடையாளங் களினாலுங்கூட கூறப் படவில்லை. அது பரலோகத்திலிருந்து நேரடியாக வரவேண்டும். இது எனக்கு ஒரு கடினமான வேளையாக இருக்கிறது. இது ஒரு வாரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நான் என்று. நான் ஒரு அறையிலேயே அடைந்திருப்பது இன்றைக்கு எட்டாவது நாள். இங்கே அநேக வேண்டுதல்கள் இருப்பதைக் காண்கிறேன். இவர்களில் அநேகர் நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறார்கள். நானும் அதை விரும்புகிறேன். நான் அவ்வித சந்திப்பை அளிக்க விரும்புகிறேன். ஆனால், இப்பொழுதே உடனடியாக அதை செய்யமுடியாது. அது ஏன் என்பதை நீங்கள் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். இப்பொழுது கர்த்தருடைய சித்தத்தின் வெளிப்படுத்தலை அறிந்துக்கொள்ள நாம் முயற்சி செய்துக்கொண்டிருக்கிறோம், நீங்கள் பாருங்கள். இப்பொழுது, நேரில் சந்திக்கும் சந்திப்பை வைத்துக் கொள்ளுவோமானால் நம்மை அது வேறு திசைக்குக் கொண்டு சென்று விடும். பாருங்கள்! வியாதியஸ்தர்களுக்காக ஜெபத்தில் இருப்பது முற்றிலும் வேறொரு காரியமாயிருக்கிறது; நீங்கள்... தரிசனங்களையும், அதற்குரிய காரியங்களையும் போதிப்பது வேறொரு காரியமாக இருக்கிறது. அப்பொழுது நீங்கள் வேறுவிதமாக அபிஷேகிக் கப்படுகிறீர்கள். ''நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம்' என்று வேதம் கூறுகிறது. ''நீர்க்கால்கள்'' - பாருங்கள்! ஒரே தண்ணீர் இந்த வழியாக, இந்த வழியாக, இந்த வழியாக வெவ்வேறு வாய்க்கால்களின் வழியாக செல்லுகிறது. தண்ணீரை எந்த வாய்க்காலின் வழியாக பெறுகிறோம் என்பதின் மேல் சார்ந்திருக்கிறது - எல்லாம் ஒரே ஆவிதான். 4பவுல், 1 கொரிந்தியர் 12-ல், ''வரங்கள் அநேகம், ஆனால் ஆவியோ ஒன்று என்று கூறியுள்ளார்.'' ஆகவே, நீங்கள் ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்துவிட்டு, மற்றொரு காரியத்திற்கு வரும்போது ஆவியின் வித்தியாசமான நடத்துதலைப் பார்க்கிறோம், நான் என்ன கூற நினைக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் வார்த்தையை போதிக்கும்போது, மக்கள் அதைப் புரிந்துக் கொள்ளும்படி செய்கிறீர்கள். இப்பொழுது அவர்களுடைய இருதயமெல்லாம் 'முத்திரைகள் என்றால் என்ன?'' என்பதில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இரவின்பின் இரவாக நான் இங்கு வரும்போதெல்லாம் ஒரே இறுக்கமாக (Tension) இருப்பதால், ஒரு அமைதியான சூழ்நிலை வரும் வரை நான் ஏதோ ஒன்றை பேசவேண்டியதாய் இருக்கிறது. அதன் பிறகு பரிசுத்த ஆவியானவர் முத்திரையை உடைக்கிறார். ஆகவே அப்பொழுது அப்பொழுது நான், ஒவ்வொரு இரவும் அதைப் போன்றிருக்க வேண்டியதாயுள்ளேன். இவ்விதமாக மக்களின் இருதயம் ஒரு காரியத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும்போது, அவர்களை திடீரென்று வேறொரு காரியத்திற்கு திருப்புவது கடினமாக இருக்கிறது. 5அப்பொழுதுகூட உங்கள் மத்தியிலேயே நடந்துக் கொண்டிருக்கும் காரியங்களை உங்களால் காணமுடிவதில்லை என்பதை நான் அறிவேன். நீங்கள் அதை அறிந்துக் கொள்ளவில்லை என்பதை நான் நிச்சயம் அறிவேன். பாருங்கள்? ''சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அவ்விதம் கூறுவது ஒரு கடினமான காரியம்“ என்று நீங்கள் கூறலாம். அது அவ்விதம்தான் என்பதை நான் அறிவேன். ஆனால் பாருங்கள். இப்பொழுது நான் இதை மாத்திரம் உங்களுக்குக் கூறட்டும். இந்த ஒலி நாடாக்கள் நமக்கு மாத்திரம் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அதைக் கூறட்டும். பாருங்கள் நீங்கள் அதை... நீங்கள் இதை புரிந்துக் கொள்ள முடியாது என்று நான் கூறுகிறேன். ஆகவே எதற்கும் உங்கள் சொந்த வியாக்கியானத்தைக் கொடுக்கவேண்டாம். பாருங்கள்? அவ்விதமாகச் செய்யும்போது நீங்கள் சத்தியத்தை விட்டு தூரமாகப் போய்விடுவீர்கள். உங்கள் கண்களில் தேவன் எனக்கு தயவு கிடைக்கும்படி செய்திருந்தால், இப்பொழுது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களென்றால் என்னுடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுங்கள். 6நீங்கள் அந்த வெளிப்படுத்தல்களையும், மற்ற காரியங்களையும் நான் நீண்ட காலமாக இங்கே உங்களோடு இருந்து வருகிறேன். இந்த வெளிப்படுத்தல்கள் எப்பொழுதுமே உண்மை யானவைகளாக இருந்திருக்கிறது என்பதை அறிவீர்கள். இப்பொழுது இந்த வெளிப்படுத்தல்கள் வார்த்தையோடு பொருந்துவதால் இரட்டிப்பாக நிரூபிக்கப்படுகிறது. பாருங்கள்? ஆகவே இது 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதாக அமைந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது சரி. பாருங்கள்? அது உங்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது என்னை உங்கள் சகோதரனாக பாவித்து என்னுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள். எதற்கும் உங்கள் சொந்த வியாக்கியானத்தைக் கூறவேண்டாம். ஒரு நல்ல கிறிஸ்தவ ஜீவியம் செய்ய முயலுங்கள். ஏனென்றால் நீங்கள் அப்படி வியாக்கியானம் செய்யும் போது உண்மையான காரியத்தைவிட்டு விலகிப்போய்விடுவீர்கள். பாருங்கள்? நீங்கள் அப்படிச் செய்யும் போது உண்மையான காரியத்தைவிட்டு மறுபடியும் விலகிப் போய் விடுவீர்கள். 7ஆகவே, நீங்கள் எல்லோரும் சுயஉணர்வு உள்ளவர்களாக இருந்து, ஏதோ ஒரு இரகசியமான காரியம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்கள். அது நடந்து கொண்டிருக்கிறது, அது என்ன என்பதை நான் அறிந்திருக்கிறேன். இப்பொழுது, நான் அதை கூறப்போவதில்லை. அது என்ன என்பதை நான் அறிந்துக்கொள்ளச் செய்ததே தேவனுடைய கிருபையாகும். அது ஏதோ ஒரு மிகப்பெரியதாக இருக்கிறது. அது இப்பொழுதே நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அதை கண்டுக் கொள்வதற்கு உலகத்திலே ஒரு வழியும் இல்லை. அது... நான்... அது என்னவென்பதை நான் அறிவேன் என்று வேதத்தை என் கையில் பிடித்தவனாகக் கூறுகிறேன். இது முன்னமே உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, எந்த வியாக்கியானமும் கொடுக்காமல் என்னை உங்கள் சகோதரனாக விசுவாசியுங்கள். பாருங்கள்? நாம் ஒரு மகத்தான நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் வசிக்கும் இக்காலத்தில்..... நல்லது, நாம்... இப்பொழுது, நீங்கள் உண்மையாக தாழ்மையுள்ளவராகவும், ஒரு கிறிஸ்தவனாகவும், தேவனுக்காக ஜீவிக்கவும், உங்களுடைய உடன் வாழும் மக்களுடன் உண்மையுள்ளவராகவும், உங்களை நேசிக்காதவர்களை, நீங்கள் நேசிக்கிறவர்களாகவும் வாழ முயற்சிக்கவும்; நீங்கள் அதைச் செய்ய... நீங்கள் பாருங்கள், நீங்கள் ஏதாவது ஒன்றைச் செய்ய முற்பட்டால், நீங்கள் மர்மமான ஒன்றைச் செய்ய முற்படுகிறீர்கள். அதனால் தேவனுடைய உண்மையான திட்டத்தைக் குழப்பிவிடுகிறீர்கள். பாருங்கள்? 8நேற்று பிற்பகல் என்னுடைய அறையில் ஏதோ ஒன்று சம்பவித்தது. என்னால் - என்னால் அதிலிருந்து விலகவே முடியவில்லை. நீங்கள் பாருங்கள் இரண்டு வாரத்திற்கு முன் ஏதோ ஒன்று நடந்தது. நான் இந்த உலகத்தில் ஜீவிக்கும் வரைக்கும் நான் - என்னால் அந்த அனுபவத்திலிருந்து விலகவே முடியாது. இங்கிருக்கும் சபையானது இவைகளை அறிந்துகொள்ள வேண்டியதில்லை. ஆகவே எதைக் குறித்தும் வியாக்கியானம் கூற வேண்டாம். பாருங்கள்? உங்களுக்கு என்ன அறிவிக்கப்பட்டதோ அதை நினைத்துக்கொண்டு ஒரு கிறிஸ்தவ ஜீவியம் செய்து முன்னேறுங்கள். உங்கள் சபைக்குச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கே ஒரு உண்மையான ஒளியாக இருங்கள். கிறிஸ்துவுக்காக வாஞ்சையுள்ள வர்களாய் இருந்து, நீங்கள் எவ்வளவாய் அவரை நேசிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குக் கூறுங்கள். எப்பொழுதும் உங்கள் சாட்சியை அன்புடன் மக்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பாருங்கள்? மாற்றி கூறுவீர் களானால், நீங்கள் பாதையை விட்டு விலகினவர்களாய் இருப்பீர்கள். பாருங்கள்? ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைச் செய்ய முயற்சித்த போது வழிவிலகினீர்கள். பாருங்கள்? ஆகவே, வியாக்கியானம் செய்ய முயலவேண்டாம். முக்கியமாக இன்றிரவு, அந்த முத்திரை உங்கள் முன்பாக திறக் கப்படும்போது, பாருங்கள், அதை வியாக்கியானிக்க முயற்சி செய்ய வேண்டாம். பாருங்கள்? தாழ்மையாக இருந்து எளிமையான செய்தியுடன் முன்னேறுங்கள். ''சகோதரன் பிரான்ஹாமே, நாங்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபையாக அவ்விதம் செய்யக்கூடாதா?'' என்று நீங்கள் கூறலாம். இல்லை. இப்பொழுது, வேண்டாம். 9நான் உங்கள் நன்மைக்காகவே இதைக் கூறுகிறேன் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேன். இப்பொழுது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களானால், நான் சொல்வதற்குச் செவிசாயுங்கள். பாருங்கள்? பாருங்கள்? இப்பொழுது இங்கே, ஒலி அலைகளை இழுக்கும் ரேடியோவின் கம்பம் ஒன்று இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம். அதை, உங்கள் கரத்தில் இருக்கும் ஒரு பட்டயத்தை சரியான முறையில் உபயோகிக்க வேண்டியதுபோல் உபயோகிக்க வேண்டியதாய் இருக்கிறது. அது செய்தியையோ அல்லது தீமையான காரியங்களையோ இழுத்துக் கொடுக்கக்கூடும். இப்பொழுது, உதாரணமாக, சாதாரண மக்கள் மத்தியில் ஆவி சற்று ஊற்றப்படும்போது அவர்கள் மதப்பாகுபாடுகளை உண்டாக்கிக் கொண்டு, தங்களுக்கென்று சிறு அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் அவ்விதம் செய்ய வேண்டாம். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் இருக்கிறவண்ணமாகவே இருக்க நினைவிருக்கட்டும். 10“நல்லது, கர்த்தர் காண்பிக்கிறது...'' என்று நீங்கள் கூறுவீர்கள். இல்லை, இப்பொழுது ஜாக்கிரதையாய் இருங்கள். பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். ஏதோவொன்றை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். பாருங்கள் இதே நேரத்தில் இந்த அறையில் பத்தாயிரக்கணக்கான ஓசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) மக்களின் உண்மையான ஓசைகள் மின் அலைகளாக வந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் ஏன் அவைகளை கேட்க முடிவதில்லை? அவைகள் ஓசைகள். அது சரிதானே? (“ஆமென்''). இதே நேரத்தில் அவைகள் இங்கே அலைகளாக மிதந்துக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த அறையில் மனித உருவங்கள் அசைந்து கொண்டிருக்கின்றன. அது சரிதானே? (ஆமென்). அப்படியென்றால் நீங்கள் ஏன் அவைகளைப் பார்க்க முடியவில்லை? பாருங்கள்? என்னுடைய சத்தத்தைப் போலவே அவைகளும் உண்மையான சத்தங்கள். நல்லது, அப்படியென்றால் நீங்கள் ஏன் அவ்வோசைகளைக் கேட்க முடியவில்லை? பாருங்கள்? அவைகள் வெளிப்படுவதற்கு முன்பு அவ்வொலியின் அலைகள் ஏதோ-ஒன்றின் மீது படவேண்டியதாய் இருக்கிறது. பாருங்கள்? இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? (''ஆமென்'') 11இப்பொழுது ஒன்றுக்கும் வியாக்கியானம் கூறவேண்டாம். நீங்கள் எதையாகிலும் அறிந்து கொள்ளவேண்டும் என்று தேவன் விரும்புவாரானால் அதை உங்களுக்கு அனுப்புவார். பாருங்கள்? ஆகவே, இப்பொழுது உண்மையாகவே அமைதியாயிருங்கள். ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. இப்பொழுது நீங்கள் உண்மையாக... நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்-ஆசி) நீ ஒரு கிறிஸ்தவனாக இருக்க உன்னை ஒரு வித்தியாசமானவனாக்கிக் கொள்ள முயலாதே. ஏனென்றால், உன்னையே நீ தேவனை விட்டு புறம்பாகக் கொண்டு போய்விடுவாய். ஆகவே, நீங்கள் - நீங்கள் - நீங்கள்... நீங்கள் புரிந்துகொள்ளக் கூடுமானால், இதுதான் மூன்றாவது இழுப்பு. பாருங்கள்? நீங்கள் - நீங்கள் இதை அந்நாளிலேயே கண்டு பிடித்திருக்க வேண்டும். பாருங்கள்? மற்ற இரண்டு இழுப்புகளினால் போலியான காரியங்கள் உண்டானதுபோல் இதில் இருக்காது என்பதை நினைவுகூருங்கள். பாருங்கள்! அதுதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது. இந்த அறையிலே இப்பொழுது ஏதோ ஒன்று நடந்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது நினைவிருக்கட்டும். இந்த அறையில் ஏதோ ஒன்றுள்ளது. இந்த அறையில் உண்மையிலேயே தேவதூதர்களும், தேவனுடைய சத்தமும் இருக்கின்றன. பாருங்கள்? ஆனால் நீங்கள் எப்படி... உங்களால் முடியாது... இயற்கையான சத்தத்தை ஒரு கருவியின் மூலமாக அனுப்பினாலன்றி அதை நீங்கள் கேட்க முடியாமலிருக்க, ஆவிக்குரிய சத்தத்தை எப்படிக் கேட்க முடியும்? 12இங்கில்லாத யாரோ ஒருவர் பாடுகிற இந்த குறிப்பிட்ட பாட்டின் ஓசைகள் இப்பொழுது இங்கிருப்பதை நீங்கள் நம்பத்தக்கதாக நிரூபிக்கக்கூடும். பாருங்கள்? அலைகளை இழுக்கக்கூடிய கருவியின் மேல் அவ்வலைகள் படும்போது, அது உண்மையான வியாக்கியானத்தை அளிக்கும். உருவங்கள் திரையின் மீது காணப்படுவது இதை உறுதிப்படுத்துகிறது, நான் என்ன கூற விரும்புகிறேன் என்பதை அறிந்து கொண்டீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்- ஆசி). இப்பொழுது, தேவ ஆவியானவர் உண்மையான வார்த்தையின் மூலமாக பேசும்போது, அது சரியென்று தன்னைக் காண்பிக்க தன்னைத் தானே நிரூபிக்கின்றது. இப்பொழுது புரிந்துக் கொண்டீர்களா? (சபையார் 'ஆமென்“ என்கின்றனர் - ஆசி) அது சரிதான். இப்பொழுது மீண்டுமாக ஜெபிப்போம். 13பரம பிதாவே, எங்களுக்கு ஆவிக்குரிய பரிமாணத்தை திறந்திருப்பதற்கு எடுத்துக்காட்டாக நாங்கள் இப்பொழுது இயற்கையான காரியமாக இந்த புத்தகத்தை திறக்கப் போகிறோம். தேவனே, இந்த கேள்விகளுக்கு சரியான விடையளிப்பதனால் அது மக்களுக்கு பிரயோஜனமாக இருந்தது என கூறத்தக்கதாக இப்பொழுது எனக்கு உதவிசெய்யும். இவைகளை அவர்கள் புரிந்துகொள்ளுவதற்கு ஏதுவாக இருக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக தேவனுக்கு கனமும் மகிமையுமாக நாங்கள் ஒருமித்து வாழ்வதற்கு மக்கள் அறிந்துகொள்ள, நான் அதை புரிந்துகொண்டு, பிறகு மக்களுக்கு அதை அளிக்க அருள் செய்தருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! ஆமென்! 14இப்பொழுது, நான் அதை மாத்திரம் கூறிட விரும்பினேன். இங்கிருக்கும் இக்கருவி ஒலிப்பதிவு செய்வதைக் கட்டுப்படுத்துகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இங்கிருக்கும் இது சாய்வு மேஜையின் விளக்காய் உள்ளது. ஒலிப்பதிவு செய்வதைக் கட்டுப் படுத்தும் கருவி இங்கிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஒலிப்பதிவு செய்வதை எப்பொழுது நிறுத்தவேண்டும், எப்பொழுது நிறுத்தக்கூடாது என்பதை ஒலிப்பதிவு செய்யும் அறையில் உள்ள சகோதரர்களுக்கு நான் சைகைக் காட்டவேண்டும் என்று எனக்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது. பாருங்கள், ஒலி நாடாக்கள் உலகம் முழுவதும் செல்லும் ஒரு ஊழியமாக இருக்கிறது. இது எல்லாவிதமான மொழிகளிலும் எல்லா விடங்களுக்கும் செல்லுகிறது. இங்கு சொல்லப்படும் சில காரியங்கள் மற்ற இடங்களில் சொல்ல முடியாது. ஆகவேதான் ஒலிப்பதிவை சிறிது நேரம் நிறுத்த வேண்டியதாய் இருக்கும். 15இப்பொழுது கேள்விகளுக்கு விடையளிப்பது ஒரு முக்கியமான காரியமாய் இருக்கிறது. ஆகவே, நான்.. நான்... இப்பொழுது.... சில கேள்விகள் செய்தியோடே - முத்திரைகளோடே சம்பந்தமற்றவைகளாய் இருக்கின்றன. நான் அவைகளுக்கு பதிலளிக்க முயற்சிப்பேன். அவர்களுக்கு கூறப்பட்டபடியே இக்கேள்விகளுக்கெல்லாம் நான் அவர்களுக்கு பதில் அளிக்கக் கொடுத்திருக்கிறார்கள். அநேக விண்ணப்பங்கள் வியாதியஸ்தர்களுக்காகவும், மற்ற காரியங்களுக்காகவும் ஜெபிக்கும்படி கேட்கும் வேண்டுதல்களாக இருப்பதால், அவைகள் பதில் அளிப்பதற்குரிய கேள்விகளாக இல்லையென்று எனக்கு அறிவிக்கப்பட்டது. இன்னும் சில விண்ணப்பங்கள் மற்ற வேதவார்த்தைகளைக் குறித்த கேள்விகளாக இருக்கின்றன. நேரமிருந்தால் எவ்வளவு சிறந்த முறையில் அவைகளுக்குப் பதில் அளிக்க முடியுமோ, அவ்வளவாகச் செய்யலாம். இப்பொழுது நான் ஒரு தவறு செய்வேனென்றால் தவறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்வதில்லை. ஆகவே, எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) ஆமென். கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் உன்னதங்களைக் குறித்துப் பேசும்போது அவ்விதமாகத்தான் இருக்கும்! என்னே! அற்புதமான இடம். என்னே! அற்புதமான நேரம். 16இக்கூடாரத்தின் பிரசங்க பீடத்தின் பின்னாக நான் நின்று செய்தி கொடுத்த எல்லா காலத்திலும், இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளாகிய தேவனுடைய பரிமாணங்களுக்குள்ளும், ஆவிக்குரிய பரிமாணத்திலும் இருப்பதுபோல் இதற்கு முன்னதாக எப்பொழுதுமே என்னுடைய ஊழியத்தில் இருந்ததே கிடையாது. என்னுடைய ஊழியத்தில், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எப்பொழுதாவது நிகழ்ந்த எல்லாவற்றைக் காட்டிலும் இது அதிக மேலானதாக இருக்கிறது. மற்றக் காரியங்கள் எல்லாம் சுகமளித்தலுக்குரியவைகள். ஆனால், இவைகள் அதே ஆவியானவரால், தேவ இரகசியங்களை வெளிப் படுத்துவதாகும். ஆகவே நான்-நான் ஒரு இடத்தில் தங்கி இருக்கிறேன்; சாப்பிடுவதற்கு வேறொரு இடத்திற்கு செல்லுகிறேன். நான் தனிமையாகவே இருக்கிறேன். ஆகவே, இது ஒரு மகத்தான நேரமாகவே இருக்கிறது. ஆகவே இப்பொழுது, நான் இன்று காலையிலோ அல்லது அடுத்த நாள் காலையிலோ நான்.... இக்கேள்விகளுக்கு விடை அளிப்பது அதிக நேரம் நீடிக்காவிடில், இப்பொழுதே இக்காலையில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பேன். 17ஆதலால் சிறிது நேரம் நான் - நான் இக்காரியங்களிலிருந்து சற்று விலகியிருக்க வேண்டியதாயிருக்கிறது. பாருங்கள்? மனித சிந்தை இவ்வளவுதான் தாங்கக்கூடும். பாருங்கள்? அக்கினிஸ்தம்பம் உனக்கு முன்பாக நின்றுக் கொண்டிருக்கும்போது ஒருமணி நேரம் தேவனுடைய பிரசன்னத்தில் அமர்ந்திருப்பது ஒரு எளிதான காரியமல்ல. நீங்கள் பாருங்கள்? அவ்விதமான சூழ்நிலையில் அதிகமான நேரம் இருக்க முடியாது என்பதை அறிவீர்களா? மனிதன் அதைத் தாங்க முடியாது. ஆகவே இப்பொழுது, இங்கிருக்கும் இக்கேள்விகள் உண்மையிலேயே அருமையானவைகள். மக்களுக்கு இதைக் குறித்து இருக்கும் ஞானத்தை நான் பாராட்டுகிறேன். இப்பொழுது முதலாவது கேள்வி... அக்கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சிக்கிறேன். நான் அதைச் சரியாக அளிக்காவிட்டால் என்னை மன்னிப்பீர்களா? 18வேறு வியாக்கியானம் உங்களுக்கு இருந்து அது சரியென்று விசுவாசிப்பீர்களானால், நல்லது, அவ்வண்ணமாக முன் செல்லுங்கள். அது பாதிக்காது. இரட்சிப்புக்குரிய காரியங்களில் ஒன்றோ அல்லது இரண்டோ ஒத்துச்செல்லக்கூடும். அநேகக் கேள்விகள் சபை எடுக்கப்படுதலைக் குறித்தவைகளாக இருக்கின்றன. இனி வரும் காலங்களில் நடக்கப்போகும் காரியங்களைக் குறித்தும் கேள்விகள் உள்ளன. ஏனெனில் இந்த புஸ்தகத்தில் உள்ள உள்ள நம்முடைய போதகங்களில் நாம் இப்பொழுது சபைக் காலத்திற்கு அப்பால் கடந்து வந்தவர்களாயுள்ளோம். 1,44,000 பேர்கள் அழைக்கப்படும் காலத்தையும் கடந்தவர்களாக இருக்கிறோம். இப்பொழுது முதலாவதாக: மத்தேயு 25-ல் கூறப்பட்டிருக்கும் ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் மணவாட்டிக்கு ஊழியம் செய்பவர்களா? அல்லது அவர்கள் மணவாட்டியா? இவர்கள் மணவாட்டிக்கு பணிபுரிகிறவர்கள் என்றால், மணவாட்டி எங்கே இருக்கிறாள்? 19பாருங்கள், இப்பொழுது, நான் சிறந்த முறையில் புரிந்து கொண்டபடி இந்த ஐந்து கன்னிகைகள்... பத்து கன்னிகைகள் புறப்பட்டு சென்றார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். பாருங்கள். இது ஒரு அடையாளமாகவோ அல்லது உவமையாகவோ கூறப்பட்டுள்ளது என்று கூறிடவே நான் விரும்புகிறேன். பாருங்கள், அவர்கள் பத்துபேர் இருந்தனர். பத்து பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள். ஆனால் இங்கே ஒரு எண்ணிக்கையாக அது கூறப்பட்டுள்ளது. புத்தியுள்ள கன்னிகைகள் தங்கள் தீவட்டியிலே எண்ணெய் வைத்திருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டியிலே எண்ணெய் இல்லாதவர்களாக இருந்தார்கள். மத்தேயுவில் பத்து பேரில் ஐந்து பேர் மாத்திரமே உள்ளே சென்றதுபோல், ஐந்துபேர் மாத்திரமே எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லுவார்களா என்பதுதான் அந்த நபர் கேட்ட கேள்வியாகும். இல்லை, அது அவ்வண்ணமல்ல. தங்கள் தீவட்டியில் எண்ணையுடன் சென்றவர்கள் மணவாட்டியின் அங்கத்தினர்களுக்கு இவர்கள் எடுத்துக்காட்டாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் பாருங்கள்? அவர்கள் மணவாட்டியின் ஒரு பாகமாக இருக்கிறார்கள். என்னுடைய புரிந்து கொள்ளு தலின்படி... இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், இவர்கள்தான் கடைசி ஜாமத்தின் கன்னிகைகள். ஏழு ஜாமங்கள் இருக்கின்றன. நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் ஏழாம் ஜாமமாகிய நடு இரவிலே இந்தக் கன்னிகைகள் எழுந்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தம் செய்துக் கொண்டு உள்ளே பிரவேசித்தார்கள். ஆனால் உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகளோ... இப்பொழுது இங்கே ஐந்து கன்னிகைகளைக் குறித்து பொருள் என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஏழாயிரம் பேரைக் குறித்தும் அநேகக் கேள்விகள் இங்கே கேட்கப்பட்டுள்ளன. அது உண்மையானவைகளின் ஒரு அடையாளமாக மாத்திரம் உள்ளன. இந்தக் கடைசிக் காலமாகிய ஏழாம் ஜாமத்திலே ஐந்து பேர்தான் உறக்கத்தினின்று விழித்துக்கொண்டு மறுரூபமாக்கப்பட்டு மணவாளனுடன் சென்றார்கள்? இப்பொழுது அவர்கள்... 20எடுத்துக் கொள்ளப்படப் போகிறவர்கள் ஐந்து பேர் மாத்திரம் என்பது அதன் அர்த்தமல்ல. ஏனென்றால், இந்த வாரம் நாம் பார்த்த வண்ணம் அவர்கள், சபையின் காலங்களிலெல்லாம் நித்திரை செய்துக் கொண்டிருக் கிறார்கள். எபேசு சபையின் தூதனாகிய பவுலின் நாட்களில், பவுல் அந்த சபையின் செய்தியாளனாக இருந்ததினால், அந்தச் சபையை ஏற்படுத்தினான். பவுல் எபேசு சபையை ஏற்படுத்தினதினால், அந்தச் சபைக்குச் செய்தியாளன் ஆனான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அக்காலத்தில் இருந்த ஆவி சிங்கத்தின் ஆவியாக இருந்தது. சிங்கமென்று சொல்லும்போது அது யூதா கோத்திரத்து சிங்கமாகிய கிறிஸ்துவையே குறிக்கிறது. கிறிஸ்துவே அந்த வார்த்தை. பவுல் அக்காலத்திற்குரிய வார்த்தையுடன் வந்தான். அந்த யுகத்திலே ஆயிரமாயிரமானவர்கள் நித்திரை யடைந்தார்கள். அது சரிதானே? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி). 21அதற்குப் பிறகு அடுத்த யுகம் வந்தது. இருண்ட யுகத்திற்குள் சபை சென்றபோது காளையின் ஆவி புறப்பட்டுச் சென்றது. காளையானது உழைப்புக்கும், பலிக்கும் உரிய மிருகமாக இருப்பதுபோல, ஆயிரமாயிரமான பேர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தார்கள், நித்திரையடைந்தார்கள். அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவீர்கள். அடுத்தபடியாக சீர்திருத்த யுகமாகிய லூத்தரின் யுகம் வந்தது. அப்பொழுது சாமர்த்தியமுள்ள, மனித ஞானமுள்ள ஆவி சென்றது. நீங்கள் கவனிப்பீர்களானால், அவன் அதனுடன், தன்னுடைய ஞானத்தையும் சேர்த்து, மற்றொரு பங்கினுடன் (ஸ்தாபனத்துடன் - தமிழாக்கியோன்) விவாகம் செய்துக் கொண்டான், பாருங்கள். பாருங்கள்? இந்த யுகத்திலே மனிதன் தன் ஞானத்துடன் சென்றான். சீர்திருத்தம், தேவஞானத்தோடே மக்களை பிரித்துக் கொண்டு வருவதுடன் இருந்து விட்டிருந்தால் நலமாயிருந்திருக்கக்கூடும். ஆனால் அவன் என்ன செய்தான்? செய்தியைக் கொண்டு வந்த மனிதனாகிய லூத்தரின் மரணத்திற்குப் பிறகு, அவர்கள் லூத்தரன் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். 22வெஸ்லியின் மரணத்திற்குப் பிறகு மெத்தோடிஸ்ட் ஸ்தாபனத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்பதை அறிவீர்கள். பாருங்கள்? இவ்விதமாக சென்று கொண்டேயிருந்தனர். அது... அதுதான் அதைச் செய்கின்றது. இப்பொழுது, நீங்கள் இதைக் கவனிக்கவேண்டும் என விரும்புகிறேன். மூன்றாவது யுகமாகிய பெந்தெகொஸ்தே யுகத்தைக் குறித்து சிலர் கேட்கலாம். நீங்கள் பாருங்கள், ஒவ்வொரு யுகத்திலும் பரிசுத்த ஆவிக்குள் ஒரு மூழ்குதலை பெற்றார்கள். நீதிமானாக்கப்படுதல் பரிசுத்த ஆவியின் ஒரு கிரியையாகும். பரிசுத்தமாக்கப்படுதல் பரிசுத்த ஆவியின் ஒரு கிரியையாகும். ஆனால் ஞானஸ்நானம் என்பது பரிசுத்த ஆவியியாய் இருக்கிறது. ஆகவேதான் ஒரு முன்னுணர்ந்துரைக்கிற (prophetic) ஒரு தீர்க்கதரிசி (Prophet) வரவேண்டியதாக இருந்தது. செய்தியாளன் அல்ல. பரிசுத்த ஆவியானவரே, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மூலமாக தாமே தம் முழுமையில் வந்தார். 23ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் செய்தியாளன் அனுப்பப்பட்டு குழப்பங்களை அகற்றி ஒழுங்குபடுத்தி சபையை அதன் நிலையில் நிறுத்தினான். கடைசியாக சபைக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறது. சூரியன் அந்தகாரப்பட்டு, சந்திரன் இரத்தம் போலாவது.... போன்ற காரியங்களை மக்கள் புரிந்துக் கொள்ளாமல் சபையின் காலங்களில் இவைகளை இணைத்திருக்கிறார்கள். நம்முடைய கர்த்தரை, அவருடைய சீஷர்கள் மூன்று கேள்விகளை கேட்டபோது, அவர் தந்த பதில்களை மக்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். இப்பொழுது கடந்த இரவு எந்த கேள்வியும் கேட்கவில்லையென்று நினைக்கிறேன். எல்லாக் கேள்விகளையும் எடுத்து முத்திரைகளின் கீழ் வைத்திருக்கிறோம். முத்திரைகள் ஒரு முழு புஸ்தகமாக இருக்கிறது. டாக்டர், நீர் அதை விசுவாசிக்கிறீரா? (ஒரு சகோதரன் “ஆம்” என்கிறார் - ஆசி) 24பாருங்கள், எல்லாம் ஒன்றாக இணைக் கப்பட்டிருக்கிறது. இயேசு இங்கே என்ன கூறினாரோ, அதை நாம் பார்த்தோம். இயேசுவினிடத்தில் மூன்று கேள்விகளை அவர்கள் கேட்டார்கள்! ''இது எப்போது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கு அடையாளம் என்ன? உலகத்தின் முடிவிற்கு அடையாளம் என்ன?'' அவர் கொடுத்த விடைகளில், ... நாம் அதன் கீழாக எல்லாவற்றையும் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தோம், ஆனால் ஒன்றைத் தவிர, அது என்ன? ஏழாம் முத்திரை. அது என்னவென்று இன்னும் தெரியவில்லை. அதுவேதான். எல்லாம் சரியாக பொருந்தினது. அவைகளை முன்னும், பின்னுமாக ஜோடியாக இணைத்துக் காட்டினேன். ஆகவே, நான் திரும்பவும் சென்று என்னுடைய பழைய குறிப்புகளை எடுத்து பார்த்தபோது அவைகளை அதனதன் இடத்தில் சரியாகப் பொருத்தாமல், ஒரு காரியத்தை மற்றொரு இடத்திலும், மற்றொன்றை வேறோரு இடத்திலும் தவறாகப் பொருத்தியிருந்தேன். இவ்விதமாகத்தான் செய்திருந் தேன். நீங்கள் இதை கிரகித்துக் கொண்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அதைக் கிரகித்துக் கொண்டீர்களா? பாருங்கள்? 25நான் எங்கே குறிப்பை எழுத வேண்டுமென்றிருந்தேனோ, அதை இந்தப் பக்கத்தில் எழுதி வைத்துவிட்டேன். அவைகள் இரண்டையும் 9, 11 அல்லது 9,6 அல்லது 6-ம் 11-ம், 9-ம் 11-ம் என்று எழுதி வைத்து விட்டேன். அது அவ்விதம் அல்ல. அந்தக் குறிப்பு மாற்றி எழுதி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது அடுத்து வசனத்தில் இருந்தது. பாருங்கள்? அதனுடைய பதில் பஞ்சங்களுக்கும் யுத்தத்திற்கும் இடையில் இருந்தது. (சகோதரன் பிரான்ஹாம் தான் அங்கே மத்தேயு 24, வெளி. 6ல் நான்காவது முத்திரையை ஒப்பிட்டுக் காட்டியதைக் குறிப்பிடுகிறார். ஆறாவது முத்திரை, 166 முதல் 174 பத்திகளைக் கவனிக்கவும் - தமிழாக்கியோன்.) ஆகவே, நான் மிகவும் மகிழ்ச்சியாயிருந்தேன். வெளிப்படுத்தலினால் வரும் புத்துணர்வை ரசித்துக் கொண்டேயிருந்தேன். அங்கே உட்கார்ந்து கொண்டு பென்சிலையோ அல்லது பேனாவையோ வைத்துக் கொண்டு இரண்டு பக்கங்களிலும் 11 என்று குறிப்பெழுதினேன். அது அவ்விதம் அல்ல. அது 11க்குப் பதிலாக 9 என்று இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கொள்ளைநோய், யுத்தங்கள் போன்ற காரியங்களை எடுத்து அவைகளை எப்படிப் பொருத்துவது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ, எல்லாம் ஒழுங்காக ஜோடியாக அமைந்திருப்பதை நீங்கள் கண்டீர்களா? இப்பொழுது ஆறாம் முத்திரைவரை ஒழுங்காக பொருத்தப்பட்டு நின்றுவிட்டதை நீங்கள் மறந்து விட வேண்டாம். ஆறாவது முத்திரைவரை முத்திரைகள் திறக்கப்பட்டு, இப்பொழுது “பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதலில் நின்றிருக்கிறது.'' ”அரைமணி நேரம் அமைதல்'' என்று மாத்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது. 26இப்பொழுது பாருங்கள், நான்... இக்கேள்விகளுக்கு நான் துரிதமாக பதில் அளிக்க வேண்டியவனாக இருக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு பதிலும் நான்கு வாரத்தில் கொடுக்கும் செய்தியின் நீளத்திற்கு உள்ளது. நான் அவ்விதம் செய்யாமல் ஒவ்வொருவரின் கேள்விக்கும் என்னால் முடிந்தவரை பதில் அளிக்க விரும்புகிறேன். இந்த கன்னிகைகள், பாருங்கள், அவர்கள். அந்த காலத்தில் அவர்கள் ஒரு பாகமாயிருந்தனர். பாருங்கள்? ஒவ்வொரு காலமும் கன்னிகைகளைக் கொண்டிருந்தன. பாருங்கள்? ஒரு - ஒரு முத்திரை... தூதன் சபைக்கு வருகிறான்: “எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்னவெனில்'' என்று கூறுவதை கவனிக்கவும். 27எபேசு சபைக்கு எழுதப்பட்டிருப்பதை வாசித்த பிறகு (மீண்டும் அதை ஒப்பிட்டுப் பார்க்கவும்) ஒரு முத்திரை திறக்கப்படுகிறது. கர்த்தருக்குச் சித்தமாயிருப்பின், இவ்விதமாகத்தான் எல்லாம் உங்களுக்கு அளிக்க நாங்கள் முயற்சிக்கிறோம். நான் என்ன கருதுகிறேன் என்பதை அறிந்து கொண்டீர்களா? முதலில் நாம் எதைப் பெற்றோம்? சபையின் காலங்கள். அது சரி தானே? அதற்குப் பிறகு, சபையின் காலங்களுக்குரிய செய்திகள். இப்பொழுது இது எல்லோருக்கும் தெளிவாக இருக்கிறதா? பாருங்கள்? 28முதலில் சபையின் காலங்களும், சரித்திரமும் நமக்கு கொடுக்கப்பட்டது. நிசாயா ஆலோசனை சங்கம், நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு முந்தின காலங்கள், மற்றும் இவை போன்ற காரியங்களை சரித்திரத்தில் நாம் கண்டுபிடிக்க முடிந்தவைகள். அதன் பிறகு, வார்த்தையின் உண்மையான வியாக்கியானம் சரித்திரத்தோடு இணைந்து செல்லுகிறதைக் கண்டோம். இவ்விதமாக லவோதிக்கேயா காலமாகிய இக்கால மட்டும் கொண்டு வரப்பட்டோம். இக்காலத்திற்குரிய சரித்திரம் நமக்கு கொடுக்கப்படவில்லை. இதுதான் சரித்திரம் எழுதப்படுவதாகும் என்பதை கவனிக்கவும். பாருங்கள், இதோ இருக்கின்றது. இக்காலத்தில், காரியங்கள் எப்படியிருக்கும் என்பதுதான் காட்டப்பட்டுள்ளது. 29நாம் இப்பொழுது முத்திரைகளுக்கு வந்து அந்த முத்திரையைத் திறக்கின்றோம். தேவன் நமக்கு அந்த முத்திரையைத் திறக்கிறார். அது என்ன? முதலில் ஒரு சபையின் செய்தியாளன். சபையின் காலம், அதற்குப் பிறகு ஏழு முத்திரைகள். இப்பொழுது, ஏழாம் சபையின் காலத்தில் வரும் சீர்கேட்டை கவனிப்போம்... ஆனால் ஏழாம் முத்திரையில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவிக்கவில்லை என்பதை அறியவும். பாருங்கள், ஏனென்றால், இந்தச் சபையின் காலத்தின் முடிவில் இவைகளை வெளிப்படுத்த ஒரு தீர்க்கதரிசன வரம் வரவேண்டும். பாருங்கள்? நீங்கள் இதை புரிந்து கொண்டீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அது சரி. முத்திரைகள் ஒவ்வொன்றும். எவ்வாறு... 30அதன்பின் நான் இவ்விடம் வந்து... முத்திரைகள் ஒவ்வொன்றும், இயேசு கிறிஸ்துவிடம் கேட்ட மூன்று கேள்விகளின் விடைகளோடு பொருந்துவதை கண்டோம். ''இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி எப்பொழுது இடிக்கப்படும்? உலகத்தின் மதத்திற்கு மையமான இடமாக வேறொரு இடம் எப்பொழுது ஸ்தாபிக்கப்படும்? பாருங்கள்? அந்திக்கிறிஸ்து எப்பொழுது வருவான்? பாருங்கள்? அவனை எதிர்க்க என்ன சென்றது? - வார்த்தை. வார்த்தைக்கு எதிராக வார்த்தை. 31அதன் பிறகு அது அரசியலுக்குள்ளும் மற்ற எல்லாக் காரியங் களிலும் விழுந்தது. அப்பொழுது காளை புறப்பட்டு சென்றது. பாருங்கள்? அதுதான் இரண்டாவது முத்திரை. இயேசு, மத்தேயு 24ல் அவ்விதமே கூறியுள்ளார், பாருங்கள். அதன் பிறகு அதிலிருந்து சீர்திருத்தக்காரரின் ஞானத்திற்கு வருகிறோம். அப்பொழுது மனித முகம் கொண்ட ஜீவன் புறப்பட்டுச் சென்றது. அதுதான் நடந்தேறியது. அதற்குப் பிறகு நான்காவது முத்திரைக்கு வரும்போது, மற்ற மூன்று முத்திரைகளின் காலத்தில் கிரியை செய்த அந்திக்கிறிஸ்துவின் வல்லமைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும்போது, அவனுக்கு “மரணம்” என்னும் பெயர் கொடுக்கப்படுகிறது. இப்பொழுது இயேசு என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: “அவளை அக்கினியில் எரித்து அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்.'' இது தான் மரணம் சவாரி செய்வதாகும். பிராடெஸ்டண்டாரும், கத்தோலிக்கரும் - அவர்கள் ஒவ்வொருவரின் மீதும் மரணத்தின் அடையாளம் காணப்படுகிறது - பாருங்கள்? ''அவளும் அவளுடைய பிள்ளைகளும் அழிக்கப்படுவார்கள்.'' ஆகவே, நீங்கள் உங்கள் ஸ்தாபனத்தின் மீது சார்ந்திருப்பீர்களானால், இப்பொழுதே அதை விட்டு வெளியே வாருங்கள். 32ஆகவே பிறகு ஏழாம் முத்திரைக்கு வரும்போது இயேசு அங்கே நிறுத்திவிட்டார். ''சந்திரன் இரத்தமாகும், அந்தகாரம், மற்றும் நடக்கப் போகும் காரியங்களை'' அறிவிப்பதினால் அவர் ஆறாம் முத்திரையைத் திறந்தார். நாம் இங்கே வந்து ஆறாம் முத்திரையைத் திறந்தோம். ஆறாம் முத்திரையைத் திறந்தபோது, அதே காரியத்தைக் காண்பிக்கிறது. வேதத்தில் மூன்று வெவ்வேறான இடங்களில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள், வெளிப்படுத்தலுடன் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்தீர்களா? கவனியுங்கள். வேதத்தில் இயேசு அவ்விதம் கூறின இடம், உலகத் தோற்றமுதல் மறைக்கப்பட்டிருந்ததை அவர் புஸ்தகத்தை திறந்து காட்டிய இடம், மற்றும் இந்த நாளுக்குரிய வெளிப்படுத்தல் ஆகிய இம்மூன்றும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மூன்று சாட்சிகள் ஒருமித்துக் கூறும்போது அது உண்மையாக இருக்கிறது. அது முற்றிலும் உண்மையாக இருக்கிறது. 33இப்பொழுது, இந்த நித்திரை அடைந்த கன்னிகைகள்தான் எல்லாம் ஒன்றாக சேர்ந்து முழுசரீரமாக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் புத்தியுள்ள கன்னிகைகள். புத்தியில்லாத கன்னிகைகள், அந்திக் கிறிஸ்து, புத்தியுள்ள கன்னிகைகள் தொடங்கினபோதே தொடங்கினார்கள். எண்ணெய் வாங்க முயற்சித்தவர்கள் இவர்களே. 34இப்பொழுது இங்கே கவனியுங்கள். எல்லாம் ஒழுங்காக பொருந்துவதைக் கவனியுங்கள். அந்த அறையில் வெளிப்படுத்தப் பட்டவைகளை இங்கே நின்று கூறுவேனானால் உங்களுக்கு தலையே சுற்றிவிடும். அப்படியானால் எல்லாவற்றையும் கூறும்போது என்ன செய்யப்போகிறீர்கள்? ஆகவே, அதன் பிறகு, மக்களை விட்டு பிரிந்து போகும்போது தேவ இரகசியங்கள் திறக்கப்படுகிறது. மக்களுக்குக்கூட அறிவிக்கப்பட முடியாத காரியங்கள் வெளிப்படுகிறது. ஏனென்றால் நீங்கள் பாருங்கள், அவர்கள் சிறு உபதேசங்களை உருவாக்கிக் கொள்ளுவார்கள். சுகமளிக்கக்கூடிய இச்சிறு வரத்தை கவனியுங்கள். அது எவ்வளவாக சபையைக் குழப்பத்துக்குள்ளாக்கிவிட்டது. மக்கள் இதைக் கண்ட போது, ஒவ்வொருவரும் ஒருவித உணர்வு பெற்று ஒவ்வொருவரும் இதைச் செய்ய ஆரம்பித் துவிட்டார்கள். அது தவறு என்று என்னுடைய இருதயத்தில் அறிவேன். இது உண்மையென்று தேவன் அறிவார். ஏனென்றால் தேவன் என்னிடம் அவ்விதம் கூறினார். பாருங்கள்? இது வெறும் போலியான காரியங்கள். இது மக்களை சிதறடிப்பதாகும். இப்பொழுது அது சரிதான். இப்பொழுது அக்காரியங்களை கூற முடியாது. அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. 35மூன்றாவது இழுப்பைக் குறித்து யாருக்கும் சொல்லவேண்டாம்'' என்று அறிவிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். அது என்னவென்று கூறினேன்? அது எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது? நிச்சயமாக. அந்த தரிசனத்திலே நின்று கொண்டு அந்த சிறிய பாதரட்சை (Shoe)க்கு லேஸ் போட முயற்சித்துக் கொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ''நீ பெந்தெகொஸ்தே பிள்ளைகளுக்கு இயற்கைக்கு மேலான காரியங்களைக் கற்றுக்கொடுக்க முடியாது'' என்று அவர் கூறினார். இது மூன்றாவது இழுப்பாக இருக்கும். இதை அறியமுடியாது. ஆகவே தேவனுடைய கிருபையால் எனக்கு உதவி செய்யும் என்று கேட்டேன். நாம் இப்பொழுதே கடைசி நேரத்தில் இருக்கிறோம். கிருபாசனம் நியாயாசனமாக மாறுவதற்கு அதிக நேரமாகாது. இப்பொழுது ஏற்கெனவே நீங்கள் உன்னதங்களில் கூட்டி சேர்க்கப்படாதிருந்தால், இக்காரியங்கள் நிகழ்வதையும், இந்த மக்கள் உள்ளே வருவதையும் காணும்போதே, நீங்களும் உள்ளே வருவது மேலானதாக இருக்கும். பாருங்கள்? 36இப்பொழுது, 'உன்னதங்களில் கூட்டிச் சேர்க்கப் படுதல்' என்பது, இது வெறும் மகிழ்வதைக் காட்டிலும் மேலானதாக இருக்கிறது. நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளே உன்னதங்களிலே உண்மையாக கூட்டப்பட்டிருப் பீர்களானால் இது ஒரு பயத்திற்குரிய காரியமாகும். கர்த்தருடைய தூதனானவருக்கு பக்கத்தில் நின்று கொண்டு ஆனந்த சத்தமிட்டு துதித்துக் கொண்டிருக் கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அது அவ்வண்ணமல்ல. அது அநேகமாக மரணத்துக்குள்ளாக் கும் பயமான ஒரு காரியமாகும். பாருங்கள்? ஆகவே, உள்ளம் பொங்க மனமகிழ்ச்சியினால் நடனம் ஆடுவது சரிதான். ஆனால் இதற்கும் உண்மையான காரியத்திற்குள் வருவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும். பாருங்கள்? பாருங்கள்? பயம் என்பதே அங்குதான் உள்ளது. இது ஒரு பயத்திற்குரிய காரியமாகும். நீங்கள் இழந்து போனதாக கருதும் பயம் அல்ல. ஆனால் அங்கே நின்று கொண்டிருக்கும் தேவதூதனுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முன்பாக உண்மையிலேயே நின்றுகொண்டிருப்பதுதான் பயத்துக்குரியதாக இருக்கிறது. 37இப்பொழுது, அது (கன்னிகைகள்- தமிழாக்கியோன்) மணவாட்டியின் ஒரு பாகமாக இருக்கும். நித்திரை செய்துக் கொண்டிருப்பவர்களுடன் இவர்களும் சேர்க்கப்படுவார்கள். நம்மால் அதை முற்றிலுமாக... (ஒலிநாடாக்கள் பதிவு செய்யும் முறையில் கோளாறு ஏற்படுகிறது. ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி)... இங்கே உள்ளே கைகுட்டைகளின் மூலம் இந்த ஜனங்களுக்கு சுகமளிக்கும்படி இப்பொழுது ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென். இப்பொழுது, அது சரியாகிவிட்டதா? (ஒரு சகோதரர் 'ஆமென்' என்று கூறுகின்றார் -ஆசி) உங்களுக்கு நன்றி. யாராவது ஒருவர் எதின் மீதாகிலும் மிதித்தார்களா? (ஒரு சகோதரன், 'இங்கு அநேக ஒலிப்பதிவு செய்யும் கருவிகள் உள்ளன,' என்று கூறுகிறார்) அநேக ஒலிப்பதிவு கருவிகள் இருப்பதால், அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பாருங்கள்? சரி, அது அதைத் தாக்குகிறது. இப்பொழுது அடுத்த கேள்வியைக் கவனிப்போம். 38சுவிசேஷகர்கள் வயலில் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டுமா? “இந்த வேளையில்” என்று சொல்ல கருதுகிறார்கள். நிச்சயமாக எந்த விதத்திலும் அவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்யவேண்டும். ஒரு காரியத்தையும் மாற்றவேண்டாம். இக்காலையில் இயேசு வருவதாக இருந்தாலும், இன்றையிலிருந்து பத்து வருடங்களுக்குப் பிறகு அது இருப்பது போல பிரசங்கம் பண்ணு. ஆனால் இந்த மணிவேளையில் இருப்பது போல ஜீவி. இப்பொழுது குழப்பமாக்கிக்கொள்ள வேண்டாம். அதைக் குறித்துதான் உங்களை எச்சரிக்க முயற்சிக்கிறேன். விசித்திரமாக இருக்க வேண்டாம். எதையும் மாற்ற வேண்டாம். ஆனால் நீங்கள் ஏதாகிலும் தவறோ அல்லது தீமையோ செய்துக் கொண்டிருப்பீர்களானால், மனந்திரும்புங்கள். தேவனிடம் திரும்புங்கள். நீங்கள் எப்பொழுதும் செய்தது போல சுவிசேஷ ஊழியத்தை தொடர்ந்து செய்யுங்கள். 39நீங்கள் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தால், தொடர்ந்து செய்யுங்கள். இயேசு நாளை வருவாரென்றால் உங்கள் கடமையில் உண்மையுள்ளவர்களாகச் காணப்படத்தக்கதாக இருங்கள். நீங்கள் உங்கள் சபையைக் கட்டிக் கொண்டிருந்தால் அதைத் தொடர்ந்து செய் யுங்கள். என்னுடைய பாக்கெட்டில் பணம் வைத்திருப்பதைப் பார்க்கிலும் அவ்விதமான வேலைக்கு செலவழிப்பதையே நான் தெரிந்துக் கொள்ளுவேன். பாருங்கள்? ஆகவே, நீங்கள் இருக்கிறவண்ணமாகவே தொடர்ந்து முன் னேறுங்கள். இப்பொழுது ஒவ்வொருவரும் புரிந்து கொண்டீர்களா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) சரியானதை தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் இருக்கிறவண்ணமாகவே செல்லுங் கள். இப்பொழுது எதையும் நிறுத்தவேண்டாம். கர்த்தருக்கு ஊழியம் செய்துக் கொண்டிருப்பது போலவே தொடர்ந்து செய்யுங்கள். இப்பொழுது உதாரணமாக, நீங்கள் ஒரு மனிதனிடத்தில் வேலை செய்வீர்களானால், எல்லாம் முடிந்து போவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கும்போது, ''நல்லது இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் இருக்கிறது. ஆகவே நான் அங்குச் சென்று உட்கார்ந்துகொள்ளுவேன்'' என்று கூறுவாயானால், அந்த பதினைந்து நிமிஷத்திற்கு உன்னுடைய கூலி குறைக்கப்படும். நீங்கள் கோதுமையைப் பயிரிட்டுக் கொண்டிருந்தால் கோதுமையைப் பயிரிடுங்கள். நீங்கள் உருளைக்கிழங்குகளை தோண்டிக் கொண்டிருந்தால், அவைகளைத் தோண்டிக் கொண்டிருங்கள். ''அவைகளை தின்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்'' என்று கூறி எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்கவேண்டாம். எப்படியாகிலும் தோண்டிக்கொண்டே இருங்கள். பாருங்கள்? ஆம். நீங்கள் இருக்கிறவண்ணமாகவே தொடர்ந்து இருங்கள். 40அன்றொரு நாள் யாரோ ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவர்களுக்கு யாரோ ஒருவர் இவ்விதம் கூறியிருக்கிறார்: ''நல்லது காலம் சமீபமாக இருக்கிறது, பண்ணையை விற்றுவிடுங்கள். ஆயிரவருட அரசாட்சி ஆரம்பிக்கப்போவதால் உங்களுக்கு பண்ணையிலிருந்து வரும் உணவு தேவைப்படாது; ஆகவே அதை விற்றுவிடுங்கள். உம்முடைய பிள்ளைகள் இரட்சிக்கப்படாதவர்களாய் இருப்பதால் உபத்திரவ காலத்தில் அவர்கள் இருக்கும் பண்ணையின் பலனை புசிக்கட்டும். நீங்களோ, உங்கள் பண்ணையை விற்றுவிடுங்கள்.'' இவ்விதமாக ஏதோ ஒன்றைக் கூறினர். ஓ, அவர்கள்... நான் “ஓ, என்னே!'' என்றேன் 'அவர் நாளை வருவார் என்று எனக்கு தெரிந்திருக்கிறதென்றாலும் நான் ஒரு விவசாயியாக இருந்தால், இன்றைக்கு என்னுடைய பயிரை நான் நடுவேன். நிச்சயமாக. அவர் என்னை ஒரு விவசாயியாக உண்டாக்கி இருந்தால், என்னுடைய வேலையிலேயே நான் இருப்பேன். அது உண்மை . நான் ஒரு 'மெக்கானிக்காக இருந்தால் அவ்வண்ணமே இருப்பேன்' 41அன்றொரு நாள் யாரோ ஒருவர் வந்து இவ்விதம் கூறியதாக என்னிடம் கூறினார். ''நான் ஒரு புதிய காரை வாங்கி இருக்கிறேன். அதற்குரிய இன்னொரு சாவிக்கொத்தை உங்களிடம் கொடுக்கப் போகிறேன். ஏனென்றால் எடுத்துக் கொள்ளப்படுதல் வரப்போகிறது. ஆகவே அது எனக்கு தேவைப்படாது'' என்று தன்னுடைய மேய்ப் பரிடம் கூறினாராம். “இன்னொரு சாவிக் கொத்தை உங்களிடம் கொடுத்து விடுகிறேன், ஏனெனில் எடுத்துக் கொள்ளப்படுதல் வருகின்றது, இனிமேல் எனக்கு அது தேவைப்படாது'' என்றார். அவருடைய மேய்ப்பர் எடுத்துக்கொள்ளப்படுதலை இழந்துவிடப் போகிறார். ஓ, அதுதான் ஆயத்தமாவதாகும். இல்லையா? சரி. அது அவ்விதமாகத்தான் இருக்கும். நாம் அவ்விதம் இருக்க வேண்டியதில்லை. நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, தெளிந்த சிந்தையுள்ள கிறிஸ்தவனாக இருக்கவேண்டும். பாருங்கள்? கடைசி நிமிடம் வரை ஊழியம் செய்வதற்காக நான் இங்கே நியமிக்கப்பட்டிருக்கிறேன். நான் செய்யவேண்டிய ஒரு வேலை உண்டு, நான் என்னுடைய கடமையில் உண்மையுள்ளவனாக காணப்படுவதையே விரும்புகிறேன். அவர் இந்தக் காலை வருவாரென்றால், நான் இந்த பிரசங்க பீடத்தருகினில் நின்றுக்கொண்டிருக்க விரும்புகிறேன். 42நீங்கள் இவ்விதம் கூறலாம்; ''சகோதரன் பிரான்ஹாமே, அவர் இக்காலை வருவாரென்றால் நீங்கள் அங்கே வெளிய இருக்கவேண்டுமல்லவா?'' இல்லை, ஐயா. இதுதான் என்னுடைய கடமையை நிறை வேற்றக்கூடிய இடம். அவர் வரும்போது, இங்கே நின்றுக்கொண்டு, நான் பிரசங்கித்துக் கொண்டிருப் பவைகளையே பிரசங்கித்துக் கொண்டிருப்பேன். அப்பொழுது அவர் வரும்போது அவருடனே சென்று விடுவேன். பாருங்கள்? உருளைக்கிழங்கு தோட்டத்தில் களையை பிடுங்கிக் கொண்டிருந்தால், என்னால் எவ்வளவாய் பிரயாசப்பட முடியுமோ அவ்வளவாய் பிரயாசத்தோடே களை பிடுங்கிக் கொண்டிருப்பேன். அவர் வரும்போது, களை பிடுங்க உபயோகிக்கும் மண்வெட்டியை போட்டுவிட்டு எடுத்துக் கொள்ளப்படுவேன். யூபிலி வருஷத்திலேயே களை பிடுங்குகிறவர்கள் களைகளை பிடுங்கிக்கொண்டே இருக்க வேண்டும். யூபிலி வருஷத்திற்கு இன்னும் பத்து நிமிஷம் இருந்தாலும், யூபிலி வருஷத்தில் எக்காளம் தொனிக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து வைக்கோலை பொறுக்கியெடுத்துக் கொண்டோ அல்லது வேறெந்த வேலையையோ செய்துக்கொண்டேயிருந்தார்கள். எக்காளம் தொனிக்கும்போது வேலை செய்துக்கொண்டிருக்கிறவர்கள் தங்கள் கவைக் கொம்புகளை எறிந்து விட்டு விடுதலையாகி சென்று விடுவார்கள். பாருங்கள். எக்காளம் தொனிக்கும் வரை உங்கள் வேலைகளை செய்துக் கொண்டிருங்கள். சரி. (அருகிலிருந்து ஒரு சத்தம் கேட்கப்படுன்றது-ஆசி) கேள்வி, “அது திறந்ததின்படி...'' ஏதாவது சம்பவித்ததா? ஊம்? அது இங்கே சத்தத்தை உண்டாக்கியது. கேள்வி. 43ஐந்தாம் முத்திரையின் வெளிப் படுத்தலின்படி மோசேயும், எலியாவும் மரிக்கவேண்டும்; அப்படியானால் ஏனோக்கை குறித்து என்ன? எனக்கு தெரியாது. பாருங்கள்? நான்- நான்... எனக்கு தெரியவில்லையென்றால் எனக்கு தெரியாது என்று சொல்லப்போகிறேன். பாருங்கள்? எனக்கு எல்லா விடைகளும் தெரியாது. மக்களே, எனக்கு தெரியவில்லையென்றால் எனக்குத் தெரியாது என்று சொல்லுவேன். எனக்குத் தெரியும்வரை அதைச் சொல்லமாட்டேன். பாருங்கள். ஆனால் எனக்குத் தெரியாது. 44அடிக்கடி நானே அதைக்குறித்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அங்கே ஏனோக்கு இருந்தான்... மோசேயும், எலியாவும் திரும்பவும் வந்து கொலை செய்யப்படுவார்கள் என்பதை நான் கண்டேன். பாருங்கள் ஆனால் ஏனோக்கு காலத்திற்கு முன்னமே எடுத்துக்கொள்ளப்பட்டான். “நல்லது'' அடிக்கடி நான் அதைக் குறித்து நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ”அதைக் குறித்து என்ன?'' என்றார். ஆனால் இங்கே ஆறுதலாக ஒரே ஒரு காரியத்தை சொல்லுவேன். இப்பொழுது கவனியுங்கள் மோசே தேவனுக்கு நாற்பது வருஷம் மாத்திரம் சேவை செய்தான். பாருங்கள்? அவன் நூற்றிருபது வருஷம் இருந்தான். ஆனால் இருபது வருடங்கள்... முதல் நாற்பது வருஷம் அவன் கல்வியைக் கற்றான். அது சரியா? இரண்டாம் நாற்பது வருஷம் தேவன் அதை அவனிடத்திலிருந்து எடுத்துப் போட்டார். மூன்றாம் நாற்பது வருஷம் அவன் தேவனுக்குச் சேவை செய்தான். பாருங்கள்? அது சரிதான். ஆனால், ஏனோக்கு தேவனோடு ஐந்நூறு வருஷம் சஞ்சரித்து குற்றமில்லாதவனாகக் காணப்பட்டான். பாருங்கள்? பாருங்கள்? ஆகவே மோசேயும், எலியாவும் இன்னும் சிறிதுநேரம் ஊழியம் செய்யத் திரும்ப வருவார்கள். இப்பொழுது இதுதான் சரி என்று நான் கூறவில்லை. பாருங்கள், இதை தியானிப்பதற்காக உங்களுக்குத் தருகிறேன். பாருங்கள், அங்கே என்ன நடந்தது என்றோ, அல்லது தேவன் என்ன செய்யப்போகிறார் என்றே நான் சொல்ல முடியாது. 45வெளிப்படுத்தல் 3:12ல் உள்ள மக்களுக்கு என்ன நாமம் கொடுக்கப்படும்? எனக்கு - எனக்குத் தெரியாது. ஆம் அவர்களுக்கு ஒரு புதிய நாமம் கொடுக்கப்படுவதாக அவர் கூறினார். அது என்னவென்று எனக்கு எனக்கு எனக்குத் தெரியவில்லை. பாருங்கள். ஒரு வேளை நாம் அங்கு செல்லும்போது அது அறிவிக்கப்படும். ஆனால் அது என்னவென்று இப்பொழுது எனக்குத் தெரியவில்லை. பாருங்கள். அவர் அதைச் செய்யப் போகிறார். பாருங்கள்? பெறுகிறவர்கள் மாத்திரமே அதை அறிந்துக் கொள்ளத்தக்கதான ஒரு புதிய நாமத்தை அவர் கொடுப்பார். பாருங்கள்? 46சகோதரன் பிரான்ஹாமே, விவாகரத்துக்குப் பிறகு திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்க ஏதாகிலும் வேத வாக்கியம் உண்டா? இது அதிக முக்கியமானதாகும். இது “முக்கியமானதென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லது... ஆகவேதான் இது முத்திரைகளோடு சம்பந்தப்பட்டதல்ல. என்னுடைய சகோதரனோ, சகோதரியோ, இதை எழுதியவர் யாராயிருந்தாலும், எனக்கு தெரிந்தவரை உன்னுடைய கணவனோ அல்லது மனைவியோ மரிக்கும்வரை நீங்கள் மறுபடியும் திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கும் வசனம் எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் கட்டப்பட்டு இருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்? ஏதாகிலும் வேதவாக்கியம் உண்டா என்றுதான் கேட்கப்பட்டுள்ளது. பாருங்கள்? நான் அறிந்தவரை எதுவும் இல்லை. திருமணமானவர்களில், ஒருவர் மரிக்கும்போதுதான் மற்றவர் கர்த்தருக்குள் இருக்கும் வேறு யாரையாகிலும் மணந்துக்கொள்ளலாம் என்று பவுல் கூறியுள்ளார். ''மரணம் நம்மை பிரிக்கும் வரை'' என்றுள்ளது. அதுவேதான். இவ்வண்ணமாகத்தான் நீங்கள் வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் பாருங்கள்? ஆகவே இதை அனுமதிக்க எந்த வசனமும் இல்லை. இதற்கேற்ற வார்த்தையை நீங்கள் கண்டிருந்தால் நல்லதுதான். ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கு ஒன்றும் தெரியாது. 47வெளிப்படுத்தல் 6:6ல் எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே'' என்பது எதைக் குறிக்கின்றது? அது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. பாருங்கள்? ஏற்கெனவே அதைக் குறித்து பார்த்திருக்கிறோம். சிலசமயங்களில் யாராவது செய்திக்குச் சற்று தாமதமாக வரும்போது இங்கு சொல்லப்படும் காரியத்தை இழந்துவிடுகிறார்கள்... ''எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே“' எண்ணெயும் திராட்சரசமும் எதைக் குறிக்கிறது? எண்ணெய், பரிசுத்த ஆவிக்கு அறிகுறியாக உள்ளது என்பதை நாம் அறிவோம். பாருங்கள்? வேதாகமத்தில் ஆராதனைக்குரிய காரியங்களில், திராட்சரசமும் எண்ணெயும் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன. பாருங்கள்? திராட்சரசம் எழுப்புதலை உண்டாக்குகிறது என்னும் எண்ணம் எனக்கு உண்டாயிற்று. திராட்சரசம் எழுப்புதலை உண்டாக்குகிறது. வெளிப்படுத்தலினால் வரும் எழுப்புதலுக்கு இயற்கையான திராட்சரசம் மாதிரியாக வைக்கப்பட்டிருக்கிறது. 48சபையை எது எழுப்புதலடையச் செய்கிறது என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்? - எழுப்புதல். பாருங்கள்? ஆகவே, திராட்சரசம், புதிய திராட்சரசம்... இப்பொழுது கவனியுங்கள். பலியிடுவதிலும், சபையின் ஆராதனையிலும் எண்ணெயும், திராட்சரசமும் ஒன்றாக இணைந்திருப்பதை கவனிக்கவும். இப்பொழுது கவனியுங்கள். அவைகள் இரண்டும் இணைந்துள்ளன, தொடர்பு கொண்டுள்ளன. க்ருடன்ஸ் ஒத்துவாக்கிய புத்தகத்திலோ (Cruden's Concordance) அல்லது வேறெந்த ஒத்துவாக்கிய புத்தகத்திலோ பார்ப்பீர்களானால், திராட்சரசமும் எண்ணெயும் ஆராதனை முறைமைகளில் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இப்பொழுது இதைக்குறித்து கவனியுங்கள். எண்ணெய் எப்பொழுதும் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. எசேக்கியலிலும் மற்றும் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டின் முழுமையிலும் இதைக் காண்கிறோம். 49வியாதியஸ்தரை ஏன் எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுகிறோம்? அவர்கள் மீது ஊற்றப்படும் பரிசுத்த ஆவியை அறிகுறியாக எடுத்துக்காட்டுவதற்காகத்தான் வியாதியஸ்தரை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுகிறோம் என்பதைக் கவனியுங்கள். பாருங்கள்? புத்தியுள்ள கன்னிகைகள் எண்ணெயை பெற்றிருந்தார்கள், புத்தியில்லாதவர்கள் எண்ணெயை பெறவில்லை. ஆவி, அதுதான் எண்ணெய். எண்ணெய் தேவனைக் குறிக்கிறதென்றால், தேவன் ஆவியாய் இருக்கிறார். தெரியுமா? தேவன் வார்த்தையாய் இருக்கிறார். “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை மாம்சமானார். அதுதான் தேவன்”. இப்பொழுது, வார்த்தை இயற்கையான உருவத்தில் அமர்ந்திருக்கிறதென்றால்... விசுவாசியை எழுப்புதலடைய செய்யும் வார்த்தையின் வியாக்கியானத்தை வெளிப்படுத்தும் வெளிப்படுத்தல் போல, திராட்சரசம் தண்ணீரைக் குறிக்கிறது. என்னே! “இதற்கு முன்பு நான் இவ்விதம் காணவே இல்லை! என்னே! மகிமை!'' அது என்ன? - பாருங்கள்? வெளிப்படுத்தலினால் வரும் எழுப்புதல். அன்று நான் உட்கார்ந்துக் கொண்டிருக்கும்போது பெற்ற வெளிப்படுத்தலுக்கு முன்பு நான் அதை அறியவில்லை. பாருங்கள்? இப்பொழுது, “எண்ணெயும் திராட்சரசமும் எதைக் குறிக்கிறது... ”அது தான், நீ அதை சேதப்படுத்தாதே,'' மூன்றாம் சபையின் காலமாகிய இருண்ட யுகத்தில் கறுப்புக் குதிரையின் மீது அவன் சவாரி செய்தான். கவனிக்கவும். அதில் சிறிதுதான் விடப்பட்டிருக்கிறது. சிறிது மட்டுமே விடப் பட்டுள்ளது. அதைச் சேதப்படுத்தாதே. அதைச் சேதப்படுத்தாதே என்று சொல்லப்பட்டதைக் குறித்த சரியான விளக்கம் விடப்பட்டிருக்கிறது. மூன்றாம் முத்திரையின் ஒலி நாடாவை வாங்கி கேட்பீர்களானால் நாம் அதில் தெளிவாக விளக்கியிருப்பதைக் காண்பீர்கள். 50சகோதரன் பிரான்ஹாமே, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகமும்; ஜீவ புஸ்தகமும் ஒரே புத்தகமா? நிச்சயமாக. இந்தப் புஸ்தகத்தில்தான் மீட்புக்குரிய எல்லா காரியங்களும் எழுதப்பட்டிருக்கிறது. பாருங்கள்? அவர்கள் பெயர்கள் யாவும் அதில் உள்ளன. “நல்லது, சகோதரன் பிரான்ஹாமே, நம்முடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது, அன்றொரு இரவு என்னுடைய பெயர் அதில் எழுதப்பட்டது''. இல்லை, உன்னுடைய பெயர் இப்பொழுது எழுதப்படவில்லை. அந்த இரவுதான் உன்னுடைய பெயர் அதில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டாய். ஏனென்றால் உலகத்தோற்றத்திற்கு முன்பே பெயர்கள் அதில் எழுதப்பட்டிருக்கிறது. பாருங்கள்? எல்லாம் ஒரே புஸ்தகம் என்பதை அறிந்து கொள்ளவும். பாருங்கள். 51சகோதரன் பிரான்ஹாமே, கிறிஸ்து வந்த பிறகு பிறந்த ஒவ்வொரு யூதனும் இரட்சிக்கிப்படுவான் என்பது உண்மையா? 1,44,000 பேர் யார்? பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்படுவதற்காக முன் குறிக்கப்பட்டவர்கள் இவர்களா? அவர்களுடைய ஊழியம் என்ன? இங்கே, ஒரே கேள்வியில் மூன்று கேள்விகள் உள்ளன. முதல் கேள்வியானது: கிறிஸ்து வந்த பிறகு பிறந்த ஒவ்வொரு யூதனும் இரட்சிக்கப்படுவானா? இல்லை, யூதனோ, அல்லது புறஜாதியானோ, உலகத்தோற்றத்திற்கு முன் யாருடைய பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப் பட்டிருக்கிறதோ, அவர்கள் மாத்திரமே இரட்சிக் கப்படுவார்கள். பாருங்கள்? அவ்வளவுதான். மற்றவர்கள் இரட்சிக்கப்படுவதில்லை. அந்தப் புஸ்தகத்தில்தான் தேவரகசியம் அடங்கியிருக்கிறது. அந்தப் புஸ்தகம் திறக்கப்பட்டு இப்பொழுது, இரகசியம் வெளிப்படுவதினால், ஒவ்வொருவருடைய பெயரும் வெளிப்படுவதில்லை. ஆனால் அவர்களுடைய பெயர்கள் அழைக்கப்படுகிறது. அதை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? பாருங்கள்? 52'லீ வேயில், அல்லது ஓர்மன் நெவில் அல்லது யாராகிலும் ஒருவர் இந்தச் சபையின் காலத்தில் இரட்சிக்கப்பட வேண்டும்'' என்று அந்தப் புஸ்தகம் கூறுவதில்லை. அவ்விதம் அது கூறுவதில்லை. என்ன இரகசியம் என்பதை அது வெளிப்படுத்துகிறது. ஆனால் நாமோ, அவைகளை வெளிப்படுத்தலினால் விசுவாசிக் கிறோம். இதைத்தான் நான் அன்றிரவு கூறினேன். “ஜெபர்சன்வில்லில் ஒருவர்தான் இரட்சிக்கப் படுவார் என்று சகோதரன் பிரான்ஹாம் கூறினார். ஆகவே நான் முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்று ஒருவர் சொன்னார். பாருங்கள்? இப்பொழுது அது ஒரு உவமையைக் காண்பிக்கிறது. அது -அது-அதுவல்ல, அதுஅதுவல்ல. ஆயிரம் பேர் இரட்சிக்கப்படலாம். எனக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படலாம். ஆனால் அது எனக்குத் தெரியாது. ஆனால் “அந்த ஒருவன் நான்தான்” என்று இவ்விதமாகத்தான் நான் விசுவாசிக்க விரும்புகிறேன். நீங்களும் அவ்விதமே விசுவாசியுங்கள். நீங்கள் அவ்விதம் விசுவாசிக்கவில்லையென்றால் உங்கள் விசுவாசத்தில் ஏதோ ஒரு தவறு உண்டு. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதைக் குறித்து நீங்கள் நிச்சயமற்றவர்களாய் இருக்கிறீர்கள். 53நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களோ, அல்லது இல்லையோ என்பதை நிச்சயமாக நீங்கள் அறியாதிருக்கும்போது எப்படி நீங்கள் மரணத்தை சந்திக்கச் செல்லுவீர்கள்? பாருங்கள்? கால்களை மடக்கிக் கொண்டிருக்கும் ஒரு குருடனான முடவனிடம் சென்று அவனைப் பார்த்து, ''கர்த்தர் உரைக்கிறதாவது: எழுந்திரு. இதோ இயேசு கிறிஸ்து உன்னை முற்றிலும் சுகமாக்கிவிட்டார்'' என்று எவ்விதம் சொல்லுவாய்? மணிக்கணக்காக மரித்து, குளிர்ந்துபோய் விறைத்துக் கிடக்கும் பிணத்திற்கு முன்பாக நின்றுக்கொண்டு, “கர்த்தர் உரைக்கிறதாவது: நீ எழுந்து காலூன்றி நில்'' என்று எப்படிச் சொல்லுவாய்?... நீ எதைக் குறித்து பேசுகிறாய் என்பதை அறிந்தவனாக இருக்கவேண்டும். பாருங்கள்? 54நல்லது, ''மரணம் எல்லாவற்றையும் பறித்துக் கொள்ளுகிறது. எல்லாம் நடந்தேறிவிட்டது'' என்று நீங்கள் கூறலாம். ஆம். ஆனால் தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்படும்போது, அது தேவன் என்று நீ அறிவாய். அதுவே காரியங்களை மாற்றியமைக்கின்றது. அது சரி. இப்பொழுது எல்லா யூதர்களும் இரட்சிக்கப்பட மாட்டார்கள். இல்லை, ஐயா! எல்லோரும் இரட்சிக்கப்படுவதில்லை. யூதர்கள் என்பது அவர்கள் எருசலேமை விட்டு வெளியே போனபோது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும். நேபுகாத்நேச்சார் அவர்களை அவ்விதம் அழைத்தான் என்று நான் நினைக்கிறேன். யூதா கோத்திரத்தார் அப்பொழுது கொண்டு போகப்பட்டதால் முதலில் “யூதர்கள்'' என்னும் பெயர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இப்பொழுது அவர்கள் யூதேயாவிலிருந்து வந்ததினால் அவர்களுக்கு யூதர்கள் என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 55ஆனால், இஸ்ரவேல் என்பது வித்தியாசமானதாகும். இஸ்ரவேல், யூதர்கள் என்னும் பெயர்கள் முற்றிலும் வித்தியாசமானவைகள். ஒவ்வொரு யூதனும் ஒரு இஸ்ரவேலன் அல்ல என்பதை கவனிக்கவும். இல்லை, அவன் ஒரு வெறும் யூதன்... எல்லா யூதர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்று பவுல் கூறவில்லை. ''எல்லா இஸ்ரவேலரும் இரட்சிக்கப் படுவார்கள்'' என்று அவன் கூறினான். ஏன்? ஆதியிலிருந்து இஸ்ரவேல் என்பது மீட்புக்குரிய பெயராகும். பாருங்கள். எல்லா இஸ்ரவேலர்களும் இரட்சிக்கப்படுவார்கள். ஆனால் எல்லா யூதர்களும் இரட்சிக்கப்படுவதில்லை. பாருங்கள். ஆயிரமாயிரமான புறஜாதியின் மக்கள் லட்சக்கணக்கான ஸ்தாபன சபைகளில் இருந்து கொண்டே தங்களை கிறிஸ்தவர்கள் என்றும், கிறிஸ்துவின் சபையென்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இது ஒன்றுமே கிடையாது. இது, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பதல்ல. “நீங்கள் இந்த ஸ்தாபனத்தையோ அல்லது அந்த ஸ்தாபனத்தையோ அல்லது ஏதாகிலும் ஒரு ஸ்தாபனத்தையோ சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உங்களுடைய பெயர் எங்களுடைய புத்தகத்தில் இல்லையென்றால் நீங்கள் இழக்கப்பட்டவர்கள்'' என்று மக்கள் கூறுகிறார்கள். அதுதான் மார்க்க பேதங்களைக் கொண்டுவந்து ஸ்தாபனங்களை உருவாக்குவதாகும். பாருங்கள்? 56நீங்கள் இரட்சிக்கப்பட ஒரே ஒரு வழி உண்டு. “அது விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.'' தேவன், தம்முடைய முன்னறிவினால் தம்முடைய மகிமைக் கென்று ஒரு சபையை முன் குறித்தார். அவர்கள்தான் இரட்சிக்கப்படுவார்கள். இதுதான் சரியான காரியம். இப்பொழுது உன்னுடைய விசுவாசம் அங்கேதான் நங்கூரமிடப்பட்டிருக்கின்றது. “என்னுடைய விசுவாசம் அங்கே நங்கூரமிடப்பட்டிருக்கிறது'' என்று நீ கூறலாம். ஆனால், நீ எவ்வித ஜீவியம் செய்கிறாய் என்று பார். நீ அதற்கு தகுதியற்றவன் என்று காட்டுகிறது. உன்னுடைய நங்கூரம் தவறானதாக இருக்கிறது. அது, கற்பாறையின் மீது நங்கூரமிடப்படாமல் மணலின்மீது போடப்பட் டிருக்கிறது. ஒரு சிறு அலை அதை தூரே எறிந்துவிடும். ஊம். 57வார்த்தையானது வெளிப்படுத்தப்படும்போது, “என்னுடைய சபை அதை போதிப்பதில்லை!'' என்று கூறுவாயானால், உன்னுடைய நங்கூரம் பாறையின் மீது போடப்படாமல் மணலின் மேல் போடப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஊ..ஊ... அது உண்மையே. ஆகவே, இப்பொழுது நீங்கள் அதைக் காண்கிறீர்கள். 1,44,000 பேர்கள் முன் குறிக்கப்பட்டவர்களா? ஆம் ஐயா! அவர்கள் இஸ்ரவேலர் - ஆவிக்குரிய இஸ்ரவேலர். அங்கே லட்சக்கணக்கான மக்கள் இருப்பார்கள் என்பதை நினைவு கூருங்கள். இப்பொழுது எத்தனைப்பேர் அங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஒரு முழு கூட்டமே என்று நான் யூகிக்கிறேன். ஆனால் அவர்கள் யூதேயாவில் இருப்பதினாலாயே எல்லோரும் இரட்சிக்கப் படுவதில்லை. பாருங்கள்? இப்பொழுது, எத்தனைப் பேர் அங்கிருக்கிறார்கள் என்பதைக் குறித்து ஒரு எண்ணம் உண்டா ? எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த உபத்திரம் துவங்குவதற்கு முன்பு... ஒருவேளை பெருகக்கூடும். இவைகளைக் குறித்த ஒலி நாடா ஒன்று என்னிடம் உண்டு. என்னுடன் மேற்கிற்கு எடுத்துச் சென்று, இப்பொழுது அது -அதுஅந்த-அந்த-அந்த உடன்படிக்கை சபை... 58அங்கே லட்சக்கணக்கான மக்கள் இருப்பார்கள் என்பதை நினைவு கூருங்கள். இப்பொழுது எத்தனைப்பேர் அங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஒரு முழு கூட்டமே என்று நான் யூகிக்கிறேன். ஆனால் அவர்கள் யூதேயாவில் இருப்பதினாலாயே எல்லோரும் இரட்சிக்கப் படுவதில்லை. பாருங்கள்? இப்பொழுது, எத்தனைப் பேர் அங்கிருக்கிறார்கள் என்பதைக் குறித்து ஒரு எண்ணம் உண்டா ? எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த உபத்திரம் துவங்குவதற்கு முன்பு... ஒருவேளை பெருகக்கூடும். இவைகளைக் குறித்த ஒலி நாடா ஒன்று என்னிடம் உண்டு. என்னுடன் மேற்கிற்கு எடுத்துச் சென்று, இப்பொழுது அது -அதுஅந்த-அந்த-அந்த உடன்படிக்கை சபை... 59அது சற்று பழமையான... ஓ, இப்பொழுது அது எனக்கு ஞாபகமில்லை. அது ஆரம்பித்தது. ஆப்பிரிக்காவில் டட்சு சீர்திருத்த சபையில் அந்த உடன்படிக்கை இருக்கிறது. அவர்களில் யாராவது இப்பொழுது இங்கே உட்கார்ந்துக் கொண்டிருப் பார்களானால், அது எப்படி என்பதைக் கூறுவேன். நீங்கள் இன்னும் அந்தப் பழைய “ஐடல் பெர்க் மதபோதனைகளை'' (Heidelberg catechism) பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதன் காரணமாகத்தான் நீங்கள் இன்னும்... டச்சு சீர்திருத்தச் சபையை சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் வெளிப்புறத்தில் அமெரிக்கப் பெயரை வைத்திருந்தாலும் அந்தப் பழைய ஐடல் பெர்க் மத போதனைகளையே போதிக்கிறீர்கள். இது சரியா இல்லையா என்று உன்னுடைய மேய்ப்பரைக் கேட்டுப்பார். ஆகவே, இந்த 1,44,000 பேர் பரிசுத்த ஆவியினால் முத்திரைப் போடப்படுவதற்கென்று முன்குறிக் கப்பட்டவர்களா? ஆம் ஐயா! அது சரியாக அப்படித்தான். அது சரி. இப்பொழுது ஏதாவது.. இப்பொழுது நான்.... இது உங்களுக்கேற்றவாறு பதில் அளிக்கப்படவில்லை என்றால், ஒருவேளை நான் தவறாக இருக்கக்கூடும். இது, சிறந்த முறையில் நான் அறிந்துக்கொண்டவாறு அளிக்கப்பட்டிருக்கிறது. 60சகோதரன் பிரான்ஹாமே, சர்ப்பத்தின் வித்து என்னும் செய்தியைக் குறித்து நீங்கள் அதிகக் கடினமாக பிரயாசப்பட்டதினால்... (ஓ. நான் இதைக் காணவே இல்லை. இது என்னைவிட்டு நழுவிப்போனது)... இந்த வாரத்தில் சர்ப்பத்தின் வித்தைக் குறித்து, இந்த கேள்வியைக் கேட்பது சரியாக இருக்குமா? என்னுடைய நண்பர்கள் ஆதியாகமம் 4:1ஐ விளக்கும்படி கேட்டார்கள், என்னால் அது முடியவில்லை. நீர் எனக்கு உதவி செய்வீரா? இது இப்பொழுது பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயத்திற்கு புறம்பாக இருக்கிறது. ஆனாலும் தேவனுடைய ஒத்தாசையினால் என்னால் என்னால் என்னால் முடிந்தவரை முயற்சிக்கிறேன். இப்பொழுது கவனிப்போம். அதைக் குறித்து நான் சற்று சரிசெய்துக் கொள்ளட்டும். ''நான் கர்த்தரிடமிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன்'' என்று அவள் அங்கு கூறினாள் என்று நினைக்கிறேன்... ஏவாள் அதைக் கூறினாள் என்று நினைக்கிறேன். 61அன்றொரு இரவு ஏழாயிரத்திற்கு பதிலாக ஏழு... அதற்கு... ஏழு நூறு என்று சொல்லி விட்டேன். ஆகவே இது சரியா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ள விரும்புகிறேன். இது என்னை பயமுள்ளவனாக்குகிறது. (nervous) சத்துரு எப்பக்கமும் சூழ்ந்திருப்பதால் அதை உணர்ந்து நீங்கள் விழிப்புடன் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். ஆமாம், அப்படித்தான். ''ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி; காயீனைப்பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்“ இப்பொழுது என்னுடைய சகோதரனோ, அல்லது சகோதரியோ, நான் இப்பொழுது உங்களுடைய கேள்விக்கு பதில் அளிக்கப் போகிறேன். இதை உங்கள் மீது வீசி எறிவதல்ல. நான் உங்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். இதில் குற்றம் கண்டு பிடிப்பவராக இருப்பவரை நான் நேசிக்கிறேன்; ஆனால் இவர் குற்றம் கண்டு பிடிப்பவர் என்று நான் நினைக்கவில்லை. ''எனக்கு உதவி செய்யும்'' என்று கேட்டிருக்கிறார். மக்கள் இதை விசுவாசித்த போதிலும் கேள்வி கேட்பவர்களுக்குச் சரியான முறையில் பதில் உரைக்க ஆவியானவர் அவர்களை நிலை நிறுத்தாததினால் இவ்விதம் கேட்டிருக்கிறார்கள். பாருங்கள். 62கேள்வி என்ன? “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்று ஏவாள் கூறினாள்'' என்பதை அவர்கள் கூறுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. காரியம் சரியோ அல்லது தவறே, ஜீவன் தேவனிடத்திலிருந்து வரவில்லையென்றால் அது எங்கிருந்து வரும் என்று நினைக்கிறீர்கள்? யூதாஸ்காரியோத்தை உலகத்திற்கு அனுப்பினது யார்? அதை எனக்கு சொல்லுங்கள். அவன், ''கேட்டின் மகனாக பிறந்தான் என்று வேதம் கூறுகிறது. எலுமிச்சம் பழத்தில் புழு இருப்பது போல - இவ்விதமாக அவர்களைக் கேட்கும்பொழுது. பாருங்கள்? பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அவர்களால் முடியாது - முடியாது. அது இருக்கின்றது. 63கவனியுங்கள். இதை இன்னும் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டுமென்றால், இங்கே எழுதியிருக்கிறவண்ணமாகப் பார்க்கும் போது, இது ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைக்கப்பட் டிருக்கிறது. இங்கே போதிக்கப்பட்டிருக்கிறபடி ஏவாள் தேவனிடத்திலிருந்து தான் இந்த குமாரனை பெற்றாள் என்று தோன்றுகிறது. அவர் ஒரு ஆவியாக இருக்கிறார், அவர் அதைச் செய்யமுடியாது, கவனித்தீர்களா? இப்பொழுது கவனியுங்கள், “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்'' என்பதைக் கவனிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இதற்கு சரியான ஒரு வியாக்கியானம் இருக்கவேண்டும். ஆமாம், ஐயா. இல்லை யெனில், அப்பொழுது ஆவி... நாம் எப்பொழுதும் நம்முடைய பெற்றோரின் தன்மையைப் பெற்றுக்கொள்கிறோம். நீங்கள் அதை அறிவீர்கள். குழந்தையின் சுபாவத்தைக் கவனியுங்கள். ஆதாம் தேவனுடைய குமாரன், ஏவாள் தேவனுடைய குமாரத்தி, இவர்கள் தேவனுடைய சிருஷ்டிப்பின் முதன்மையானவர்களாக இருந்ததால், அவர்களில் சிறிதேனும் தீமை இருக்க வில்லை. தீமை அப்பொழுது காணப்படவும் இல்லை. அப்படி இருக்கும்போது, காயீன் எப்படி ஒரு பொய்யனும், கொலைக்காரனுமாய் இருந்தான்? இவைகள் எங்கிருந்து வந்தன? அதைக் குறித்து உங்களையே நீங்கள் கேட்டுப் பாருங்கள். அதுதான் சர்ப்பத்தின் வித்து. பாருங்கள்? அவ்விதம் வேதாகமம் கூறவில்லையா? அவனுக்கு பிறகு வந்த அவனுடைய சந்ததியைக் கவனித்துப் பாருங்கள். 64இந்த உலகம் யாரை சேர்ந்ததாக இருக்கிறது? - பிசாசை. இப்பொழுது இதை ஆட்கொண்டிருப்பது யார்? - பிசாசு. முற்றிலும் சரி. பிசாசு உலகத்தை அடக்கி ஆண்டுக்கொண்டிருக்கிறான். அவன், இயேசுவுக்கு இதின் எல்லா மகிமையையும், அழகையும் காண்பித்து, 'நீர் என்னை பணிந்துக் கொண்டால், இதை உமக்கு கொடுப்பேன்'' என்று கூறினான். அவன் அதை அடக்கி ஆண்டுக்கொண்டிருக்கிறான். இப்பொழுது அவன் அதைச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள். பிசாசின் பிள்ளைகள் உலக ஞானமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். காயீனுடைய பிள்ளைகளின் வம்ச வரலாறுகளை கவனிப்பீர்களானால் அவர்களில் ஒவ்வொருவனும் சாதுரியமுள்ளவன் என்பதை அறிந்து கொள்வீர்கள். 65அவன் ஆபேலை கொலை செய்தபோது, தேவன் அவனுக்குப் பதிலாக சேத்தைத் தந்தார். மரித்துப்போன நீதிமான்கள் மீட்கப்படும்போது அவர்கள் உயிர்த்தெழுவதற்கு சேத் ஒரு மாதிரியாக வைக்கப்பட்டிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள், இயற்கையான வித்துக்களின் முதல் வித்து மரிக்கவேண்டும். இப்பொழுது உங்களுடைய சிந்தை திறக்கப்பட்டிருக்கிறதா? பாருங்கள்? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர்- ஆசி) இயற்கையான வித்துக்களின் முதல் வித்தாகிய ஆபேல், இப்பொழுதிருக்கும் சபைக்கு மாதிரியாக இருக்கிறான். அந்த சந்ததி காக்கப்படுவதற்கு மற்றொருவன் எழும்பத்தக்கதாக ஒருவன் மரிக்க வேண்டியதாய் இருந்தது. இது மீண்டும் மறு பிறப்பாக இருக்க வேண்டியதாய் உள்ளது. நீங்கள் இதைப் பிடித்துக் கொண்டீர்களா? (”ஆமென்'') இது அவ்வண்ணமாகத்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாருங்கள். பாருங்கள்? இது ஒரு பூரணமான 'மாதிரியாக உள்ளது. ஆகவே, ஆதாமுக்கு பிறந்த இயற்கையான மனிதன்கூட அந்த இயற்கையான போக்கை காண்பிக்கிறான். இது கிரியைச் செய்யாது. இயற்கையான மனிதன் தேவ னுடைய காரியங்களைப் புரிந்துக்கொள்ளுவதில்லை. ஆகவேதான் இது மீண்டும் திருப்பப்படுவதற்காக (to restore) ஒரு மனிதன் (A Man) இயற்கையாக வந்து மரிக்க வேண்டியதாய் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக, ஆபேல் மரித்தபோது அவன் ஸ்தானத்தில் சேத் வரவேண்டியதாய் இருந்தது. 66அவனில் இருந்த ஆவி எவ்விதமான மக்களை கொண்டு வந்தது என்பதைக் கவனியுங்கள். பயிர் செய்கிறவர்களும், ஆடு மேய்ப்பவர்களுமாகிய எளிமையான மக்கள்தான் அவனில் இருந்து தோன்றினார்கள். இந்த உலக ஞானத்தில் இருந்து கொண்டுவரப்படுகிறது எதுவென்பதை கவனித்துப்பாருங்கள். சாதுரியமானவர்களையும், கட்டடம் கட்டுகிறவர்களையும், உலோகங்களினால் சிறந்த வேலை செய்கிறவர்களையுமே உலக ஞானம் பிறப்பித்திருக்கிறது. அவர்கள் எங்கே முடிகிறார்கள் என்பதை கவனியுங்கள். தேவன் தாழ்மையுள்ளவர்களை இரட்சித்து மற்றெல்லோரையும் அழித்துப்போட்டார். ''சாந்தகுணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்'' என்று இயேசு மத்தேயு 5ல் கூறவில்லையா? ஆகவே, கவலைப்படவேண்டாம்; அவர்கள் நிற்பதற்கு ஒரு அடி இடம்கூட இருக்காது. பாருங்கள்? அது காயீனுடைய குமாரனாக இருக்கும் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை. இதைக்குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருக்கும் ஒலிநாடா நம்மிடம் இருக்கிறது. பாருங்கள்? இல்லை , ஐயா. 67ஏவாள் புசித்தது ஒரு ஆப்பிள்பழம் அல்ல அது ஒரு “ஏப்ரிகாட்'' என்னும் பழம் என்று விஞ்ஞானம் நிரூபிக்கப் போவதைக் குறித்த ஒரு துண்டு செய்தித்தாளை அவர்கள் வைத்திருந்ததை நான் கண்டேன். பாருங்கள்? அந்த செய்தித்தாள் இப்பொழுது என்னுடைய வீட்டில் இருக்கிறது. ”அது ஒரு ஏப்ரிகாட்“ என்னும் பழம் என்றெல்லாம் சொல்லுவது மாம்சீக சிந்தையே. மற்றும் மோசே தண்ணீரை கடக்கவில்லையென்றும், சவக்கடலுக்கு மேற்கு கரையில் நாணல் நிறைந்திருக்கும் தரை வழியாகவே இஸ்ரவேலரைக் கொண்டு வந்தார். ஒரு சமயம் தண்ணீரால் நிறைந்திருந்த இடம் இப்பொழுது நாணல்களால் நிறைந்திருக்கிறது. மோசே குறுக்கு வழியாகச் செல்ல அந்த வழியாகச் சென்றார் என்றெல்லாம் சொல்லுவது மாம்சீக சிந்தையே. இதுதான் உண்மையென்று வைதீகமான சபைகள் இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். 68ஓ, மனிதனே, சர்ப்பத்தின் வித்து -அந்திகிறிஸ்து மற்றும் எல்லாக் காரியங்களும் அங்கிருப்பதை உன்னால் காணமுடியவில்லையா? நிச்சயமாக ஆமாம், ஐயா. சகோதரன் பிரன்ஹாமே, ப்ளூ (Flu) ஜூரத்தினால் அதிக சுகவீனமாக இருக்கும் என்னுடைய பேரனுக்காக தயவு செய்து ஜெபிக்கவும். (இது ஒரு ஜெப விண்ணப்பமாக இருக்கிறது) அவன் இப்பொழுது ரிவர்வியூ ஓட்டலில் இருக்கிறான். கர்த்தராகிய இயேசுவே, இந்த எளிமையான நபர் இதை வீணாக எழுதவில்லை. அன்றொரு இரவு ஒரு சிறு பையனுக்கு இருந்த வாத ஜூரத்தை நீர் நீக்கினதை அவள் கண்டிருக்கிறாள். நீர் மகத்தான தேவன் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். அந்தச் சிறு பையனுக்காக நாங்கள் எங்கள் ஜெபத்தை ஏறெடுக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் அவன் சுகமடைவானாக. ஆமென். யாராகிலும் ஒன்றை எழுதும்போது அது வீணாகப் போவதில்லை. அது எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அதன் மறைவில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவும். அந்த சகோதரி... அந்தச் சிறுபையன்... ஏதோ ஒன்று. 69யூதர்களுக்கு பிரசங்கிக்க வரும் எலியா, உலகத்தில் வாழ்ந்த அந்த உண்மையான மனிதனா, அல்லது எலியாவின் ஆவி மற்றொரு மனிதனுக்குள் வருவதா? இப்பொழுது அதைக் குறித்து... நான் இதைக்கூற பயப்படுகிறேன். இது எனக்கு தெரியாது பாருங்கள். நான் மறுபடியும் அதை படிக்கட்டும் யூதர்களுக்கு பிரசங்கிக்க வரும் எலியா (ஓ, ஆமாம்.) உலகத்தில் வாழ்ந்த அந்த உண்மையான மனிதனா, அல்லது எலியாவின் ஆவியை பெற்றிருக்கும் வேறொருவனா? இதற்கு நான் சரியாக பதில் கூறுவேனானால், ஏனோக்கைக் குறித்து கூற முடியும். பாருங்கள், ஆனால் நான்- நான் அதைச் செய்ய முடியாது. பாருங்கள். வேதம் என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் நான் அறிந்திருக்கிறேன். இப்பொழுது நான் அதை இவ்விதம் கூறட்டும். ஒலி நாடாவை கேட்கும் சகோதரர்கள் இதைப் புரிந்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அது அந்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதன் என்று நான் விசுவாசிக்க முற்படுகிறேன். ஏனென்றால் எலிசாவின்மேல் எலியாவின் ஆவி அமர்ந்ததாக கூறவில்லையா? பாருங்கள், “எலியாவின் ஆவி'' எலியா செய்தது போலவே அவனும் செய்தான். பாருங்கள்? ஆனால் இதுதான் உண்மையென்று நான் கூற முடியாது. எனக்கு தெரியாது. பாருங்கள், நான் உங்களோடு உத்தமமாய் இருக்கிறேன். எனக்குத் தெரியாது. 70சகோதரன் பிரான்ஹாமே, ஞானஸ்நானத் தைக் குறித்து நீர் எனக்கு தயவு செய்து பதில் உரைப்பீரா? மத்தேயு 28:19 பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று போதிக்கிறது; பேதுரு, அப்போஸ்தலர் 2:38ல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் என்று போதிக்கிறார். அப்போஸ்தலர் நடபடிகளில் எப்பொழுது இந்த மாறுதல் வந்தது? இப்பொழுது நான் கர்த்தராகிய இயேசுவில் விசுவாசிக்கிறேன். நல்லது, இதை எழுதியது சகோதரனோ அல்லது சகோதரியே, யாராயிருந்தாலும், இதிலே எந்த மாறுதலும் வரவில்லை. இயேசு எதை செய்யச் சொன்னாரோ அதைத்தான் பேதுரு செய்தார். இப்பொழுது யாராகிலும் ஒருவர் வந்து பட்டப்பெயர்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதை உபயோகப்படுத்துங்கள் என்று கூறுவார்களானால்; தேவன் எதைச் செய்யவேண்டாம் என்று கூறினாரோ, பேதுரு எதைச் செய்யக் கூடாது என்று கூறினாரோ அதையே செய்தார்கள். பாருங்கள்? இயேசு கூறினது... 71நான் உங்களுக்கு ஒரு காரியத்தை காண்பிக்க விரும்புகிறேன். கவனியுங்கள். இப்பொழுது அந்த நபர் இங்கிருப்பாரானால், இப்பொழுது கவனியுங்கள். நான் உங்களுக்கு முன்பாக மூன்று பொருட்களை வைக்கப் போகிறேன். இப்பொழுது கவனியுங்கள் (எடுத்து காட்டாக மூன்று பொருட்களை சகோ. பிரான்ஹாம் அங்கே வைக்கிறார் - ஆசி). திரித்துவ மக்கள் மூன்று தனித்தனியான ஆட்களில் விசுவாசம் கொண்டிருப்பதுபோல இதுதான் பிதா, இதுதான் குமாரன், இதுதான் பரிசுத்த ஆவி என்று வைத்துக் கொள்ளுவோம். அவர்கள் இவ்விதமாகத்தான் மூன்று நபர்களாக விசுவாசிக்கிறார்கள் என்பதை அறிவீர்களா? நல்லது அதன்பின், நான்... அப்படியென்றால்... மத்தேயு 28:19ல் ''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' இல்லை, என்னை மன்னியுங்கள்; அப்போஸ்தலர் 2ஐ கூறுகிறேன் என்று நினைக்கிறேன்-இல்லை, லூக்கா 24:49. நான் அதைப் புரிந்துக்கொள்ள மீண்டும் அதைப் படிக்கட்டும்; ஏனென்றால் அன்றொரு நாள் ஒரு காரியத்தை சொல்வதற்குப் பதிலாக நான். இதைச் சரியாக சொல்ல விரும்புகிறேன். நீங்கள் சொல்லுவதன் தலைப்பை நான் அறிவேன். ஆனாலும் அவர் என்ன சொன்னார் என்பதைக் கவனிக்க விரும்புகிறேன், 29-ம் அதிகாரம் 16-ம் வசனத்திலிருந்து வாசிப்போம். “பதினொருவரும் அமர்ந்து போஜனம் புசிக்கையில்.....'' பதினொரு சீஷர்களும்....., கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்து கொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் (“வானங்களிலும், பூமியிலும் சகல வல்லமையும் (All Power heavens and earth) என்று சகோதரன் பிரான்ஹாம் வாசிக்கிறார் - தமிழாக்கியோன்). பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 28:16 72இப்பொழுது தேவனுடைய வல்லமை எங்கிருக்கிறது? தேவன் எங்கிருக்கிறார்? வானத்தில் உள்ள எல்லா அதிகாரமும், பூமியில் உள்ள சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கும்போது, தேவன் எங்கிருக்கிறார்? அவர் அங்கேதான் இருக்கிறார். பாருங்கள். உங்களுடன் பேசிக் கொண்டிருப்பவர்தான் அவர் என்பதை கவனியுங்கள். சரி. ''ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதாவின் நாமத்திலும், குமாரன் நாமத்திலும் பரிசுத்த ஆவியின் நாமத்திலும் அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து...'' இப்பொழுது திரித்துவக்காரர்கள் எல்லையாவது, “நான் உங்களுக்கு பிதாவின் நாமத்திலும், குமாரனின் நாமத்திலும், பரிசுத்த ஆவியின் நாமத்திலும் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்.'' இது பரிசுத்த வேதாகமத்தில்கூட இவ்விதமாக இல்லை. கவனித்தீர்களா? ஒவ்வொரு பெயருக்கும் பின்னாக 'நாமத்திலும்' என்று சொல்லாமல், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்' என்றுதான் அவர் கூறினார். ஒரே நாமம். இங்கே கவனியுங்கள். நாமங்களில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்று சொல்லாமல் - நாமம் (N-a-m-e) என்று ஒருமையிலே- பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே, என்றுதான் கூறினார். பாருங்கள்? 73இப்பொழுது பிதா என்பது ஒரு நாமமா என்று உங்களை கேட்க விரும்புகிறேன். (சபையார் ''இல்லை'' என்று பதிலுரைக்கிறார்கள்) குமாரன் என்பது ஒரு நாமமா? (சபையார் ''இல்லை'' என்று பதிலுரைக்கிறார்கள்) எத்தனை பிதாக்கள் இங்கிருக்கிறீர்கள்? உங்களில் எத்தனைப் பேர் பிதா என்று அழைக்கப்படுகிறீர்கள்? எத்தனைக் குமாரர்கள் இங்கிருக்கிறீர்கள்? எத்தனை மனிதர்கள் இங்கிருக்கிறீர்கள்? பாருங்கள்? உங்களில் எத்தனைபேர் “பிதா, குமாரன், அல்லது மனிதன்'' என்று அழைக்கப்படுகிறீர்கள்? பாருங்கள்? ஒருமுறை ஒரு ஸ்திரீ என்னைப் பார்த்து, “சகோதரன் பிரான்ஹாமே, பரிசுத்த ஆவி என்பது ஒரு பெயர்; அது ஒரு ஆள்'' என்று கூறினதுபோல் இது இருக்கிறது. “ஆமாம் ஐயா. நான் ஒரு ஆள், ஆனால் என்னுடைய பெயர் ஆளல்ல'' என்று நான் கூறினேன். நான் ஒரு ஆள் என்பதை அறிவீர்கள். என்னுடைய பெயர் வில்லியம் பிரான்ஹாம், ஆனால் நான் ஒரு ஆள். பரிசுத்த ஆவி ஒரு ஆள். அவர் அதுவாகத்தான் இருக்கிறார். அது ஒரு பெயரல்ல; அது. ஒரு ஆளாக இருக்கும் தேவனின் ஒரு பட்டப் பெயர் என்பதைக் கவனிக்கவும். தேவனுடைய ஆள் தத்துவத்தின் ஒரு பட்டப் பெயராகும்-அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இப்பொழுது - இப்பொழுது.... “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளுக்கும் போதித்து அவர்களுக்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று அவர் சொன்னது-பிதாவின் நாமத்திலும், குமாரனின் நாமத்திலும், பரிசுத்த ஆவியின் நாமத்திலும் என்று சொல்லாமல்; மற்றும், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமங்களில் என்றும் சொல்லாமல்; பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் என்றுதான் சொன்னார். பிதா என்பதும், குமாரன் என்பதும், பரிசுத்த ஆவி என்பதும் நாமமில்லையென்றால்; நாமத்தில் என்று சொல்லும் போது, அது எதைக் குறிக்கின்றது? 74இவைகளில் “எதை நாமம் என்று அழைக்கப்போகிறீர்கள்?'' - எந்த நாமம் அது? பட்டப்பெயர்தான் நாமம் என்று சொல்லுவீர்களானால் எந்தப் பட்டப்பெயரினால் ஞானஸ்நானம் கொடுக்கப்போகிறீர்கள்? - பிதாவின் நாமத்திலா அல்லது குமாரனின் நாமத்திலா? நாமம் என்று ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். நாம் இப்பொழுது பார்த்துக்கொண்டிருப்பது மத்தேயுவின் புத்தகத்தின் கடைசிப் பகுதியாகும். இதை நான் எப்பொழுதுமே விளக்கியிருக்கிறேன். “ஜானும் மேரியும் அதற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்ந்தார்கள்'' என்று ஒரு காதல் கதையின் கடைசிப் பகுதியை படித்துவிட்டு சொல்லுவீர்களானால்; ஜானும் மேரியும் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேயில்லை. நீங்கள் மறுபடியும் கதையின் முதல் பாகத்திற்குச் சென்று ஜானும் மேரியும் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் இதைத்தான் மத்தேயுவில் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்புத்தகத்தின் கடைசிப் பகுதியை மாத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். காரியம் என்னவென்பதை அறிந்துகொள்ள மத்தேயுவின் முதல் பகுதிக்கு மறுபடியும் சென்று படியுங்கள். அது மத்தேயு புத்தகத்தின் கடைசி அதிகாரத்தின், கடைசி வசனங்கள் ஆகும். 75இது நீங்கள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, “ஜானும் மேரியும் அதற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்ந்தார்கள்'' என்று மாத்திரங்கூறுவது போல் இருக்கிறது. அது ஜான் ஜோன்சும், மேரியும் அல்லது அது ஜான் ஹென்றியும் வேறொருத்தியும்; இது ஜானும் மற்றொருவளும் என்று இவ்விதமாக கூறுவீர்களானால், நீங்கள் அதை இன்னும் புரிந்து கொள்ள வில்லை. நீங்கள் அதை தெளிவாக அறிந்துக்கொள்வதற்கு அந்த புத்தகத்திற்கு மறுபடியும் சென்று முதலில் இருந்து படிக்க வேண்டும். இங்கே ஒரு சிறிய பகுதியை மாத்திரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை சரியாகப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மத்தேயுவின் சுவிசேஷத்தில் முதலாம் அதிகாரத்தை வாசிப்பீர்களென்றால் : 18-ம் வசனத்தில் இருந்து வம்ச வரலாறு கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனிப்பீர்கள். ''இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமானது. இது சரியா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) இப்போது, உங்களை ஒன்று கேட்கப்போகிறேன். இப்பொழுது மறுபடியும் கவனியுங்கள். (சகோதரன் பிரான்ஹாம் எடுத்துக்காட்டாக வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளையும் சுட்டிக்காட்டுகிறார்) இது யார்? தேவனாகிய... ('பிதா'' என்று சபையார் பதிலுரைக்கிறார்கள்-ஆசி). தேவனாகிய... ('குமாரன்'') தேவனாகிய... ( 'பரிசுத்த ஆவி“ இபபொழுது இது யார்? ('பிதா'') இது யார் ('பரிசுத்த ஆவி'') இது யார்? ('குமாரன்''). குமாரன். சரி. எல்லாம் சரியாய் இருக்கிறது. இப்பொழுது நாம் அதைப் புரிந்து கொண்டோம். இது யார் என்று கூறினீர்கள்? - இது தேவனாகிய யார்? ('பரிசுத்த ஆவி'') பரிசுத்த ஆவி, சரி. இப்பொழுது சரி. 76இயேசு கிறிஸ்துவினுடைய ஜெந்தத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப் பட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே , அவள்... கர்ப்பவதியானாள் ('பரிசுத்த ஆவியினாலே'' என்று சபையார் பதிலுரைக்கிறார்கள்ஆசிரியர்). தேவன் தாம் அவருடைய பிதா என்று நீங்கள் கூறினீர்கள் என்று நினைத்தேன். இங்கே ஏதோ தவறு இருக்கிறது. அவருக்கு இரண்டு பிதாக்கள் இருக்கமுடியாது. நீங்கள் இதை அறிவீர்கள். பாருங்கள்? இங்கே ஏதோ தவறு இருக்கிறது. இவர்கள் மூன்று ஆட்கள் என்றால், இவர்களில் யார் அவருடைய பிதா? ''அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள்'' என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. இதற்கும் தேவனாகிய பிதாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தேவன்தாம் தம்முடைய பிதா என்று இயேசு கூறினார். தேவன் தாம் அவருடைய பிதா என்பதை நாம் அறிவோம். அப்படியென்றால் அவருக்கு இரண்டு பிதாக்கள் இருக்க வேண்டும். அப்படியென்றால் அவர் முறை தவறிப் பிறந்தவராக காணப்படுகிறார், இப்பொழுது நீங்களே உங்களை எங்கு கொண்டு வந்து விட்டீர்கள் என்பதை உணரமுடிகிறதா? இப்பொழுது... ''அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில்...'' 77அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தான் என்பதை நினைவு கூருங்கள். இப்பொழுதே கர்த்தருடைய கரம் சமீபமாயிருக்கிறது. முன் குறிக்கப்பட்ட மக்கள் இதை பிடித்துக்கொள்வார்கள். பாருங்கள்? ''அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு ; உங்கள் வேதாகமத்தில் தொடர்ந்து கவனிக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் -ஆசி) சரி. தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது தேவனால் உண்டானது.“ 'தேவனாகிய பிதா'? நான் இதைத் தவறாகப் படித்தேனா? (சபையார் ''ஆமாம்'' என்று கூறுகின்றனர் -ஆசி). நான் இதைத் தவறாகப் படித்தேன். இவளுக்குள் கர்ப்பம் தரித்திருப்பதற்கும், தேவனாகிய பிதாவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது-அது பரிசுத்த ஆவியானவர். அது சரியா? (“ஆமென்'') அப்படியானால் அது என்ன? - பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஆவியே. இப்பொழுது நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்கள். பாருங்கள்? 78தேவனாகிய பிதாவும், பரிசுத்த ஆவியானவரும் ஒரே ஒரு ஆளாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு இரண்டு பிதாக்கள் இருக்கவேண்டும்; அப்படியென்றால் எந்தவிதமான ஆளை நீங்கள் ஆராதிக்கிறீர்கள்? இப்பொழுது எந்தவிதமான தேவனை பெற்றிருக்கிறீர்கள்? கவனியுங்கள். கவனியுங்கள். பரிசுத்த ஆவியாகிய தேவனும் பிதாவாகிய தேவனும் ஒரே ஒரு ஆள்தான். “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்.......... (இந்த ஆள் இங்கே இருக்கிறார்).......அவருக்கு........ என்று பேரிடுவாயாக........ என்ன? (சபையார் இயேசு என்று கூறுகின்றனர் -ஆசி) அவருடைய பெயர். இயேசு: இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.... (யாருக்கு வார்த்தை வருகிறது)..... அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.'' 79தேவனுடைய நாமம் என்ன? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் என்ன? (சபையார் “இயேசு” என்று கூறுகின்றனர் -ஆசி) அவருடைய பெயர் இயேசு என்று வேதம் கூறுகிறது. இதைக் குறித்து விவாதம் செய்வதற்கு இக்கூடாரத்திற்கு வந்தி ருந்த ஒருவர் இவ்விதம் கூறினார். ''சகோதரன் பிரான்ஹாம் மற்றெல்லாவற்றையும் தெளிவாக்கி விட்டார். ஆனால் இதை அவரால் செய்ய முடியாது. இங்கே இவர்கள் மூன்று ஆட்கள் என்று தெளிவாக கூறுகிறது. மத்தேயு 3-ம் அதிகாரத்தில் யோவான் இங்கே நின்றுக்கொண்டிருக்கிறார். பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். குமாரன் ஞானஸ்நானம் பெறுவதற்கு இங்கே வருகிறார். அவர் தண்ணீருக்குள் சென்றார், யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்; தண்ணீரிலிருந்து கரையேறினபோது வானம் அவருக்கு திறக்கப்பட்டது. வானத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல இறங்கி வந்தார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, 'இவர் என்னுடைய நேசக்குமாரன் இவரில்'....... என்று கூறிற்று''. ஒரே நேரத்தில் மூன்று வித்தியாசமான ஆட்கள். ஓ, என்னே! 80ஆம், பரிசுத்த ஆவியை பெறாதவர்களும், தேவனால் அழைக்கப்படாதவர்களும் பிரசங்க பீடத்தண்டைக்கு போகக்கூடாது என்பதை இது மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. அது சரி. தேவனுடைய ஒத்தாசையினால் இப்பொழுது அந்த மனிதனை எடுத்து அவருடைய தலையே சுற்றும்படியாக எல்லாவற்றையும் சேர்த்து ஒரு முடிபோட்டுவிட முடியும். கவனியுங்கள், எனக்கு எதைப் பற்றியும்.. நான் அவ்விதம் நினைக்கவில்லை. இவ்விதம் கூறினது சரியில்லை. என்னை மன்னிக்கவும். நான் அவ்விதம் நினைக்கவில்லை. கர்த்தாவே, நான் அவ்விதம் நினைக்கவில்லை. அவர் இதைக் குறித்து என்னை எச்சரிப்பதை உணர்ந்தேன். நான் அவ்விதம் கூற நினைக்கவில்லை. நான் வருந்துகிறேன். பரிசுத்த ஆவியானவர் அவருக்கு சில இரகசியங்களை வெளிப்படுத்தக் கூடும் என்று விசுவாசிக்கிறேன். -அதுதான் சரியென்று தோன்றுகிறது. 81ஒரு இசைக்கருவியை சுருதி கூட்டும்போது, ஏதாகிலும் தவறு செய்யும்போது நீங்கள் அதை உணரமுடியும். அதுதான் கிறிஸ்தவனுக்குரிய பண்பாகும். நீங்கள் சில தவறானதை சொல்லும்போது அதை அவர் விரும்புவது இல்லை. நான் அவ்விதம் கூறினபோது என்னை அங்கு நுழைக்கப்பார்த்தேன். பாருங்கள்? நான் அந்தக் காட்சியில் இருக்கவில்லை. நான் அந்தக் காட்சியில் இருக்க விரும்பவில்லை; அதைச் செய்கிறவர் அவர். அவரே அந்த வேலையைச் செய்யட்டும். எக்காளத்தை தொனிக்கச் செய்கிறவர் அவர். எக்காளங்கள் தானாகவே தொனிக்கமுடியாத ஊமையான கருவிகள், அதற்குப் பின்னாக இருக்கிறவரின் சத்தம் தான் அதை தொனிக்கச் செய்கிறது. இப்பொழுது இங்கே கவனியுங்கள். மனிதன் தவறான முறையில் வார்த்தையை வியாக்கியானம் செய்கிறான். வார்த்தையானது ''கல்வி மான்களுக்கும், ஞானிகளுக்கும் மறைக்கப்பட்டு பாலகர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கே பூமியின் மீது இயேசு கிறிஸ்து ஒரு ஆளாக நின்றுக் கொண்டிருக்கிறார். வானம் நமக்கு மேலிருக்கும் ஆகாயமாகும். இப்பொழுது கவனியுங்கள். யோவான் இதற்கு சாட்சியாக இருக்கிறான்....... “பிதாவாகிய தேவன் இங்கிருக்கிறார். தேவனாகிய பரிசுத்த ஆவி புறாவைப்போல இங்கே இருக்கிறார். தேவனாகிய குமாரன் இங்கே இருக்கிறார்' என்று அந்த மனிதன் மூன்று ஆட்களாக சொல்லி இருக்க வேண்டும்.'' அது தவறாகும். 82அங்கே நின்றுக் கொண்டிருந்த யோவானுக்கு இது அந்த ஆட்டுக் குட்டியானவர் என்பது தெரியும். “தேவனுடைய ஆவியானவர் ஒரு ஆட்டுக்குட்டியாக இருப்பதைக் காண்பதாக யோவான் சாட்சி கூறினான். தேவனாகிய ஆவியானவர். ஒரு புறாவைப்போல, என்று நான் நினைக்கிறேன். அன்றிரவு இதேப்போல கூறினேன், எழுநூறு என்பதற்கு பதிலாக. பாருங்கள்? தேவனுடைய ஆவியானவர்-இங்கே இந்த ஆட்டுக்குட்டி. தேவனுடைய ஆவியானவர்-தேவன் புறாவாக வந்தார். தேவனுடைய ஆவியானவர் வானத்திலிருந்து இறங்கி வரும்போது, ”இவர் என்னுடைய நேசக்குமாரன், நான் இவரில் வாசம் பண்ண விரும்புகிறேன்'' என்னும் சத்தம் வானத்திலிருந்து வந்தது. வானத்திலும், பூமியிலும் சகல வல்லமைகளும் என் கரத்தில் எனக்குக் கொடுக்கப்பட்டிருகிறது. பாருங்கள்? பாருங்கள்? பாருங்கள்? அதுதான் அவர். இப்பொழுது அவருடைய நாமம் என்ன? (''இயேசு'' என்று சபையார் பதிலுரைக்கிறார்கள்- ஆசிரியர்). உண்மையாகவே. பாருங்கள்? 83திரித்துவக்காரரின் மூன்று வெவ்வேறான தெய்வங்கள் என்னும் தத்துவமானது அஞ்ஞானிகளுடைய உபதேசமாகும். வேதாகமத்தில் அவ்விதம் கூறப்படவில்லை. சிங்கத்தினுடைய செய்தியில் இது கூறப்படவில்லை. இது அந்திக்கிறிஸ்துவிலிருந்து உண்டான ஒரு காரியமாகும். எந்த ஒரு வேத சாஸ்திரியையும் கேட்டுப்பார். நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கையினால்தான் இது பிரவேசித்திருக்கிறது. ஆகவே தான் அது மார்டின் லூத்தருடனும் வந்தது. ஆகவேதான் அது ஜான் வெஸ்லியுடனும் வந்து, பெந்தெகொஸ்தே மக்களிடத்திலும் ஊற்றப்பட்டிருக்கிறது. பெந்தெகொஸ்தே மக்கள் வந்தபோது “இயேசு மாத்திரமே'' என்னும் கூட்டத்தினரும் வந்தனர். இது மறுபடியும் தவறானதொன்றாகும். இயேசுவே எப்படி தம்முடைய பிதாவாக இருக்கமுடியும்? பாருங்கள்? ஆகவே இது அதையும் வீழ்த்திவிடுகிறது. ஆனால், கழுகின் காலமொன்று வரவேண்டியதாயிருக்கிறது. பாருங்கள்? அந்த காலத்தில்தான் எல்லா இரகசியங்களும் தெளிவாக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. பாருங்கள்? 84''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி“ இவைகள் எல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பட்டப் பெயர்களாய் இருக்கின்றன. அந்த மூன்று பேரையும் கவனித்துப் பாருங்கள். ”பிதா, குமாரன், பரிசுத்த ஆவியென்று“ மத்தேயு கூறுகிறார். ''கர்த்தராகிய இயேசு கிறிஸ்து'' என்று பேதுரு கூறுகிறார், பிதா யார்? கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, ''என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும்” என்று கூறினார். அது சரியா? பிதா, குமாரன்-இயேசு, பரிசுத்த ஆவி-தேவனிடத்திலிருந்து புறப்பட்ட 'லோகாஸ்' என்னும் வார்த்தை . “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்பது தேவனுடைய ஆள் தத்துவத்தை மூன்று வித்தியாசமான வழிகளில் வெளிப்படுத்தும் மூன்று பட்டப் பெயர்களாகும்; அல்லது ஒரே ஒரு ஆளுக்குரிய மூன்று லட்சணங்களாகும். இதைச் சரியாகப் புரிந்துக்கொள்ள முடியாதவர்களுக்குஇவைகள் ஒரே தேவனின் மூன்று அலுவல்களாக இருக்கிறது. ஒரே தேவனின் மூன்று பண்புகள். மூன்று வித்தியாசமான யுகங்களில் தம்முடைய பிதாவின் தன்மையையும், குமாரனுக்குரிய தன்மையையும், பரிசுத்த ஆவிக்குரிய தன்மையையும் வெளிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். தேவன் மூன்றில் பரிபூரணப்படுகிறார். அந்திக்கிறிஸ்துவின் இலக்கம் நான்கு என்பதை நினைவுகூறுங்கள். பாருங்கள்? “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்பது முற்றிலுமாக ''கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிப்பதாகும். “இயேசுவின் நாமத்தில் மாத்திரம் ஞானஸ்நானம் கொடுப்பதும் தவறானதாகும். ”வெறும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பது“ முற்றிலும் தவறாகும். அநேக இயேசுக்களை நான் அறிந்திருக்கிறேன். 'லத்தீன்' (Latin) நாடுகளில் அநேக இயேசுக்கள் இருக்கிறார்கள். ஆனால் இது 'கர்த்தராகிய இயேசுகிறிஸ்து!'' இது யார் என்பதை தெளிவாகக் கூறுகிறது. அநேக பிரான்ஹாம்கள் இருக்கிறார்கள். நீங்கள் என்னுடன் நேரடியாக பேசவேண்டுமானால், நான் ஒருவனே வில்லியம் மரியன் பிரான்ஹாம். அதுதான் நான். ஆனால் வேறு அநேக வில்லியம் பிரான்ஹாம்கள் இருக்கிறார்கள். ஆனால் அபிஷேகம் பண்ணப்பட்டவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பவர் ஒருவர்தான் என்பது தெளிவாக உள்ளது. அவர் ஒருவரே. அதுதான் சரி. இதற்கும் மேலாக ஏதாகிலும் இருக்குமாயின், கடிதம் எழுதி நான் மற்ற கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அனுப்பலாம். வியாதியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வியாதியஸ்தருக்கு ஜெபிக்கவேண்டியவனாகவும் இருக்கிறேன். 85சகோதரன் பிரான்ஹாமே, இந்தக் கேள்வி இதில் பொருந்தவில்லை என்றால்... பதில் கூறவேண்டாம். (அது நல்லது, நான் அதைப் பாராட்டுகிறேன்) மிகவும் சிறியவர்களாகிய பிள்ளைகள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்களா? உமக்கு நன்றி. அவர்கள் கையொப்பம் இடவில்லை. இப்பொழுது இல்லை யென்றால், பரவாயில்லை. ஆனால் கவனியுங்கள், உலகத்தோற்றத்திற்கு முன் தேவன் ஒரு பெயரை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கும் போது, உலகத்தில் உள்ள எதுவும் அதை அழித்துப்போட முடியாது. ஏனென்றால் அது கிறிஸ்துவின் இரத்தமாகிய மையினால் எழுதப்பட்டிருக்கிறது. அது இவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது அவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது அவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது எதுவாக இருந்தாலும், அது ஒன்றுபோலவே செல்லுகிறது. பாருங்கள். எல்லா பிள்ளைகளும், எல்லா சபையும், அங்கிருக்கும் ஒவ்வொன்றும்... தேவன், தம்முடைய முன்னறிவினால்... 86இப்பொழுது, நமக்கு ஒன்றும் தெரியவில்லை. ''சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அங்கிருந்ததை நிரூபிக்கமுடியுமா?'' என்று நீங்கள் கூறலாம். இல்லை, ஐயா. நான் அதை நிரூபிக்க முடியாது. தேவன் என்னை வேறொரு காரியத்திற்கு கருவியாக உபயோகப்படுத்தக்கூடும், உங்களையும் அவ்விதமாகவே உபயோகப்படுத்துவார். ஆனால் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன். அறிவினால் நான் இரட்சிக்கப்படாமல் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். அவ்விதமாகத்தான் நீங்களும் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்விதமாகத்தான் நாமெல்லோரும் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம். ஆனால், தேவன் எல்லைக்கப்பாற்பட்டவர் என்பதை நினைவு கூறுங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ஆமென் என்று கூறுகின்றார்கள் - ஆசி) - எல்லைக்கப்பாற்பட்டவர். நல்லது. எல்லைக்கப்பாற்பட்டவராய் இருப்பதால், அது அவரை சர்வஞானியாக்குகிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ('ஆமென்') சர்வஞானியென்றால் அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்பதாகும். எல்லைக்கப்பாற்பட்டவராக இல்லாமல் அவர் சர்வஞானியாக இருக்க முடியாது. பாருங்கள்? அவர் அறிந்திருப்பதேயல்லாமல் வேறெதுவும் இருந்ததில்லை. பூமியின் மீது இருக்கும் ஒவ்வொரு கொசுவையும் அவர் அறிந்திருந்தார். ஒவ்வொரு கொசுவும் எத்தனை முறை தன் கண்ணை சிமிட்டும் என்றும், ஒவ்வொன்றிலும் எவ்வளவு கொழுப்பு இருக்கும் என்றும், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்தால் எவ்வளவாய் இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். நீங்கள் சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசத்தையும், உங்கள் நுரையீரலில் அது எவ்வளவு ஆழமாகச் செல்லும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதுதான் வரம்பிற்கப்பாற்பட்டவர் என்பதாகும். 87அவர் வரம்பிற்கப்பாற்பட்டவராக இருப்பது அவரை சர்வஞானியாக்குகிறது. அது சரியா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர்ஆசி) அவர் சர்வஞானியென்றால் அது அவரை சர்வ வியாபியாக்குகிறது. ஏனென்றால் அவர் நிமிஷத்தையும், மணியையும், நேரத்தையும் ஒரு வினாடியில் 55,000த்தில் ஒருபாக அளவிற்கும் சரியாக அறிந்து, அது எப்பொழுது நடக்கும் என்பதையும் அறிவார். பாருங்கள்? இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? (''ஆமென்'') அப்படியென்றால் எல்லாவற்றையும் அறிவார். ஆகவேதான் அவர் சர்வவல்லமை உள்ளவராக இருக்கிறார். எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், எல்லாவற்றையும் செய்கிறவராய் இருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள். தேவனால் முன்குறிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும்... இயேசு எப்பொழுது... வேதம் கூறுகிறது. இயேசு கி.பி.30ல் அடிக்கப்பட்டார் என்பதை நாம் அறிவோம். அது சரியா? கி.பி.30ம் ஆண்டின் மத்தியிலே என்று நினைக்கிறேன். 88இப்பொழுது ஆனால் அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னால் அடிக்கப்பட்டார் என்று வேதம் கூறுகிறது, உங்களுடைய பெயர்கள்... ஆட்டுக்குட்டியின் புஸ்தகத்தின் போது... இந்த புஸ்தகத்தை மீட்டுக் கொள்ள ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது... இங்கே ஒரு மகத்தான காரியம் இருக்கிறது. அது உற்சாகத்தை எழுப்பக்கூடும். கவனியுங்கள்! ஆட்டுக்குட்டியானவர். ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகம் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே எழுதப்பட்டது என்று வேதம் கூறகிறது என்பதை நினைவு கொள்ளுங்கள். அந்த புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிருக்கும் ஒவ்வொருவரும், மீட்கப் படுவதற்காக உலகத் தோற்றத்திற்கு முன்பாக ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது, உங்களுடைய பெயரும் அதில் எழுதப்பட்டது. பாருங்கள், நீங்கள் அதை இப்பொழுது புரிந்துக்கொண்டீர்களா? பாருங்கள், ஒழுங்கில்லாமல் எதுவுமில்லை. கடிகாரம் சுற்றிக் கொண்டிருப்பதுபோல்- தேவனுடைய பெரிய கடிகாரம் வேலை செய்வதுபோல இது இயங்கிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்? உலகத் தோற்றத்திற்கு முன்பாக உங்களுடைய பெயர் அங்கு எழுதப்பட்டது - அந்த புஸ்தகத்தில் உள்ளவர்களை மீட்பதற்காக ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட் டபோது, இப்பொழுது, அவர் தாம் மீட்டவர்களை பெற்றுக் கொள்வதற்காக அவர் முன்வந்து, புஸ்தகத்தை எடுக்கிறார். இப்பொழுது நான் இன்னும் தொடர்ந்து போக விரும்பவில்லை; இன்றைக்கு இன்னொரு கேள்விக்கு விடையளிக்க முடியாமல் போய்விடும். எல்லாம் சரி. . 89நரகமும், அக்கினியும் கந்தகமும் எரியும் கடலும் ஒன்றா? இல்லை. வேதாகமத்தில் நரகத்திற்கு என்ன மொழிப் பெயர்த்திருக்கிறார்களோ, நான் அதை விசுவாசிக்கிறேன். இப்பொழுது இங்கே பண்டிதர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை கனப்படுத்த விரும்புகிறேன். சகோதரன் ஐவர்சன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், சகோதரன் வேயில் மற்றும் உண்மையான வேத பண்டிதர்களாகிய சகோதரர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நரகம் தான் ''பாதாளம்'' என்று மொழிப்பெயர்க் கப்பட்டிருக்கிறது. அது சரியா? இதுதான் பாதாளத்திற்குரிய கிரேக்க பதமாகும். ஆனால் அக்கினிக்கடல் என்பது வேறொன்றாகும். ஏனென்றால் வெளிப்படுத்தின விசேஷத்தில் நரகமும் மற்றெல்லாமும் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டன என்று பார்க்கிறோம். பாருங்கள்? எல்லாம் சரி, இப்பொழுது கவனிப்போம். 90இல்லையென்றால் அக்கினிக்கடலாகிய நரகம் நித்தியமானதா? இல்லை, ஐயா. இல்லை, ஐயா. சிஷ்டிக்கப்பட்டதொன்றும் நித்தியமானதல்ல, இல்லை, சிருஷ்டிக்கப்பட்டதெல்லாம்... ஆகவேதான் நித்திய நரகம் என்பது ஒன்று இருக்க முடியாது. நீங்கள் ஒரு நித்திய நரகத்தில் வேகப் போகிறீர்கள் என்று யாராகிலும் சொன்னால், எனக்கு அதற்குரிய வேதவாக்கியத்தைக் காட்டுங்கள். பாருங்கள்? அவ்விதமான காரியம் ஒன்றுமில்லை. நரகமானது, பிசாசுக்கும் அவனது தூதர்களுக்கும், அந்திக் கிறிஸ்துவுக்கும், அவனது மக்களுக்கும் சிருஷ்டிக்கப்பட்டது. அதுதான் மாம்ச சரீரத்தில் தோன்றும் பிசாசு. அழிக்கப்படுவதற்கென்றே அது சிருஷ்டிக்கப்பட்டது. முழு உலகத்திலும், எல்லா இடங்களிலும் ஒன்றே ஒன்றுதான் நித்தியமானதாக இருக்கிறது. அதுதான் தேவன். ஒரு அணுவோ, அல்லது எலக்ட்ரானோ, அல்லது காஸ்மிக் ஒளியோ (cosmic light), அல்லது மற்றெதுவோ உண்டாவதற்கு முன்னமே அவர் தேவனாக இருந்தார். அவர் சிருஷ்டி கர்த்தர். 91நீ நித்தியமாயிருப்பதற்கு ஒரே ஒரு வழி, நீ நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுதலாகும். அதற்குத்தான் 'சோ' (Zoe) என்னும் கிரேக்க வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். 'சோ' -அது சரியில்லையா? சோ. சோ. கலியாண வாக்குப்படி உன்னுடைய தகப்பனார் உன்னுடைய தாயின் மூலம் தன்னுடைய ஜீவனை உனக்குள் அளித்திருப்பதுபோல தேவன் அந்த ஜீவனை உனக்களிக்கிறார். அவன் அவ்விதம் தன் ஜீவனை ஒரு குமாரனுக்காக அளிக்கும் போது மகிழ்ச்சியுறுகிறான் (joy of imparting)... (என்னைப் புரிந்துக் கொண்டீர்களா?). அவ்விதமாகவே தேவன் தம்முடைய ஜீவனை ஒரு குமாரனுக்கு அளிக்கும் போது மகிழ்ச்சியுறுகிறார். பாருங்கள்? அப்பொழுது நீ 'சோ' என்னும் தேவனுடைய சொந்த ஜீவனைப் பெற்று, அவருக்குள் ஒரு பாகமாக மாறிவிடுகிறாய். “நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்.'' “கடைசி நாட்களில் அவர்களை எழுப்புவேன்.'' இந்த ஒரே விதமாகத்தான் நீங்கள் நித்திய ஜீவனை பெற்றிருக்கிறீர்கள்; அந்த நித்திய ஜீவன் வெளிப்படுவதற்கு, தான் எந்த சரீரத்திற்குள் வரவேண்டும் என்பதை அறிந்திருக்கிறது. அது வெறுமையாக அங்கு கிடக்க முடியாது. தேவனுடைய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, அந்த மகத்தான நாளிலே அந்தச் சரீரத்தின் மேல் அசைவாடினபோது, அது (சரீரம்தமிழாக்கியோன்) மறுபடியும் எழுந்திருக்கும் என்று அறிந்திருந்ததைப் போல, பரிசுத்தவான்களும் தங்கள் சரீரம் மறுபடியும் எழுந்திருக்கும் என்று அறிந்துள்ளார்கள். 92இயேசு மரித்தபோது, அவர் நரகத்திற்கு செல்லவேண்டியதாக இருந்ததால், அவர் அங்கு சென்றார் என்பதை இப்பொழுது நினைவு கூருங்கள். அவர்தான் பாவத்தின் தடையரண் (sin-barrier). “'நோவாவின் காலத்தில் மனந்திரும்பாமலிருந்த ஆத்துமாக்களுக்கு பிரசங்கிப்பதற்காக அவர் நரகத்திற்குச் சென்றார்” அது சரிதானா? அவர் நரகத்திற்குச் சென்று, தேவனிடத்திலிருந்து தங்களை பிரித்துக் கொண்டிருந்த ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தார். மரணம் என்பது பிரிவினையாகும். அவர்கள் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்தார்கள் - மீண்டும் திரும்ப போகமுடியாது. ஸ்திரீயின் வித்து என்று கூறப்பட்டவர் அவர் தான் என்று சாட்சி பகர இயேசு அங்குச் சென்றார். சர்ப்பத்தின் வித்து... சர்ப்பத்தின் வித்து என்ன செய்தது என்பதைக் கவனித்தீர்களா? சிவப்புக் குதிரை. அந்திக்கிறிஸ்து - பிரிவினையாகிய மரணத்தோடு முடிவடைகிறான். ஸ்திரீயின் வித்து-ஜீவனானது வெண்மையான குதிரையுடன் முடிவடைகிறது-இயேசு கிறிஸ்து. அது என்னவென்பதைப் புரிந்து கொண்டீர்களா? - ஒருவருக்கு விரோதமாக மற்றொருவர்-ஸ்திரீயின் வித்துக்கு விரோதமாக சர்ப்பத்தின் வித்து. இப்பொழுது அறிந்துக் கொண்டீர்களா? ஓ, இதைக் குறித்து இன்னும் சற்று சிந்தித்தால் அது நன்றாக இருக்குமல்லவா? ஆனால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம். 93சகோதரன் பிரான்ஹாமே, முதலாம் முத்திரையில், முதலாம் குதிரையின் மீது ஏறியிருந்தவன் 2 தெசலோனிக்கேயரில் (2ம் அதிகாரம்) உரைக்கப்பட்டுள்ளபடி, பாவ மனுஷனின் வெளிப்பாட்டின் நிறைவேறுதலா? ஆம், அது சரி. அதன் நிறைவேறுதல்தான். அது சுலபமானது. அது பாவமனுஷன் தான். இதே மனிதன் தான் மரணம் என்னும் மங்கின நிறமுடைய குதிரையின் மீது ஏறுகிறவரைக்கும் பல கட்டங்களில் குதிரையின் மீது ஏறியிருக்கிறவனாய் காணப்படுகிறான். கிறிஸ்துவோ நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக் கப்படுதல் என்பவைகளோடு வெள்ளைக் குதிரைக்கு வருகிறார். அவர்தான் அந்த ஜீவன். பாருங்கள். 94கிறிஸ்துவின் மணவாட்டியில் இல்லாமல் பலவித ஸ்தாபனங்களிலிருக்கும் மறுபடியும் பிறந்த விசுவாசிகளுக்கு என்ன நேரிடும்? அவர்களுக்கு என்ன நேரிடும்? நல்லது, சற்று நேரத்திற்கு முன்பாக அதை விவரித்தோம் என்று நினைக்கிறேன். பாருங்கள்? அவர்கள் உபத்திரவத்திற்குள் பிரவேசிக்கிறார்கள். அவர்கள் உபத்திரவ காலத்தில் இரத்த சாட்சிகளாக மரிக்கிறார்கள். அவர்கள் கடைசியில், ஆயிரம் வருஷ அரசாட்சிக்குப் பின், தங்களுடைய நியாயத்தீர்ப்புக்காக வருகிறார்கள். பாருங்கள்? ஏனெனில் வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. உயிருடன் இருப்பவர்களில் மீதியாக இருப்பவர்கள்... ''மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடிவடையும் வரைக்கும் உயிரடையவில்லை. அதற்குப் பிறகு நீதிமான்களும், அநீதியுள்ளவர்களும் வந்து கிறிஸ்துவினாலும், மணவாட்டியினாலும் நியாயம் விசாரிக்கப்படுவார்கள். அவர் பத்தாயிரம் மடங்கு பத்தாயிரமான தமது பரிசுத்தவான்களோடு பூமிக்கு வந்தார். அது சரிதானா?-அவருடைய மணவாட்டி. நியாயசங்கம் உட்கார்ந்தது. புஸ்தகங்கள் திறக்கப்பட்டன... புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவபுஸ்தமாகிய மற்றொரு புஸ்தகம் திறக்கப்பட்டது. அவர் அங்கு செம்மறியாடுகளையும், வெள்ளாடு களையும் பிரித்தெடுக்கிறார். அது சரிதானா? அதற்கும் மணவாட்டிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவள் அங்கு நியாயத் தீர்ப்பில் நின்று கொண்டிருக்கிறாள், அவளுடைய ராணி... ராணியும் ராஜாவுமாக ஒன்றாக இருக்கிறார்கள். ''அவர் தம்முடைய பரிசுத்தவான்களோடு வந்தார்; பத்தாயிரம் மடங்கு பத்தாயிரமானவர்கள் அவருக்கு ஊழியம் செய்தார்கள்.'' அவருடைய மனைவி. பிறகு நியாய சங்கம் உட்கார்ந்தது. அதற்குப் பிறகு செம்மறியாடுகள், வெள்ளாடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. அன்றிரவு நான் கொண்டு வந்த அந்த சிறு தியானத்தை நினைவு கூருங்கள், அப்போது உங்களுக்கு விளங்கும். மாட்டிடையனைப் பற்றிய தியானம். பாருங்கள்? அதோ, நீங்கள் புரிந்து கொண்டீர்கள். 95சபை, ஸ்தாபனத்திலிருக்கும் மக்கள், சுத்தமான கிறிஸ்தவர்கள், செய்தியைப் பெற்றுக் கொண்டவர்கள். அவர்கள் ஒருபோதும் அதைப் பார்க்க மாட்டார்கள். அது ஒருபோதும் அவர்களுக்குப் போதிக்கப்பட மாட்டாது. பலதிறத்தாரும் கலந்திருக்கும் கூட்டத்திலிருப்பவர்கள், இச்செய்தி பிரசங்கிக்கப் படுபவர்கள் அவர்கள் பேரானது ஆட்டுக்குட் டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந் தாலொழிய, மற்றபடி இச்செய்தியானது அவர்கள் தலையின் மேலாகக் கடந்து செல்லும். ஆம். ஆனால் அவர்கள் அருமையான மக்கள். அவர்கள் மறுபடியும் எழுப்பப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்குப் பிரசங்கித்த அதே கூட்டத்தாரால் அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். ''பரிசுத்தவான்கள் பூமியை நியாயந்தீர்ப்பார்களென்று அறியாதிருக்கிறீர்களா?'' அவர்களுக்குப் பிரசங்கிக்கப்படும், பாருங்கள்? அதிலிருந்து (கலப்படமான கூட்டத்திலிருந்து, ஸ்தாபனங் களிலிருந்து - தமிழாக்கியோன்) “வெளியே வரும்படியாக செய்தியைக் குறித்து சாட்சி பகர்ந்த அதே மக்களால் பிரசங்கிக்கப்படுவார்கள். அது விளக்கப்பட்டுவிட்டதென்று நான் நினைக்கிறேன். என்னிடம் இங்கே அநேக கேள்விகளிருக்கின்றன. 96சகோதரன் பிரான்ஹாமே, எலியாவின் ஆவியைப்பெற்ற ஏழாம் தூதனும், எடுக்கப்படுதலுக்குப் பிறகு உள்ள மூன்றரை வருடங்களில் 1,44,000 யூதர்களிடத்திற்கு அனுப்பப்படும் எலியாவும் ஒரே மனிதன்தானா? எங்களில் சிலர் இதைக் குறித்து குழப்பத்தில் இருக்கிறோம். இல்லை, இவர் அவர் அல்ல; பாருங்கள்? இருவரும் வெவ்வேறான மனிதர்கள். எலியாவைப் போன்ற தோற்றத்தில் வரும் எலிசா எலியாவல்ல. யோவான்ஸ்நானன் என்று அழைக்கப்பட்ட மனிதன் மீது வந்த எலியாவின் ஆவி எலியாவல்ல. லவோதிக்கேயா சபையின் கடைசிக் காலத்தில் தோன்றும் செய்தியாளனாகிய ஏழாம் தூதனாகிய மனிதன் உண்மையான எலியா அல்ல. அவர் தன்னுடைய ஜனங்களாகிய புறஜாதியாரிடத்தில் அனுப்பப்படும் ஒரு புறஜாதி மனிதனாயிருப்பார். எலியா.... எலியாவின் ஆவி மக்களுக்குள் அங்கு வரும்பொழுது அவன் ஒரு யூதனாயிருப்பான். ஏனெனில் அவர்கள் (தீர்க்கதரிசிகள்தமிழாக்கியோன்) தங்கள் சொந்த ஜனத்தினிடத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். அதுதான் எனக்குக் கிடைத்த வெளிப்பாடு. ஏனென்றால் நானும்... டாமி ஆஸ்பர்ன் அவர்களும்; நாங்கள் அதைப்பற்றி அப்போது பேசியபொழுது (டாமியும் நானும்) நான் அதை ஒரு போதும் அறியவில்லை. நான் வியாதியஸ்தருக்காக மட்டும் ஜெபித்துக் கொண்டு இருந்தேன். 97நான் அங்கு வந்தபொழுது, ஃபோர்ட் வெயின் சுவிசேஷ கூடாரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, அயல் நிலங்களில் பணிபுரியும் ஒரு சுவிசேஷகி வந்திருந்தார்கள். அவர்களுடைய மார்பகங்கள் இவ்வளவு பெரிதாக இருந்தன.- புற்றுநோயால் அரிக்கப்பட்டு விட்டிருந்தது; அவர்கள் அந்தத் தெருவிலுள்ள நாங்கள் வசித்த வீட்டில் இருந்தார்கள். நான் அந்த அருமையான சகோதரிக்காக ஜெபித்தேன். அவர்கள் சுகமாக்கப்பட்டு ஊழியத்திற்குத் திரும்பினார்கள். அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தபோது-அங்கு பணிபுரியும் கிறிஸ்தவ சுவிசேஷ குழுக்களைப் பற்றிய ஒரு புத்தகத்தை விட்டுச் சென்றிருந்தார்கள். நானும், ''நல்லது, சுவிசேஷகர்கள் அருமையானவர்கள்'' என்று எண்ணினேன். நான் சுவிசேஷகர்களைக் குறித்து ஒரு போதும் அதிகமாய் சிந்தித்ததில்லை. 'நல்லது, அந்த வெளியிடங்களிலே அது தேவனுடைய ஒரு காரியாலமாகும். அதுபோல இங்கு பென் தெருவில் எட்டாம் நம்பர் இடம் (Eighth and Penn Street) என்னுடைய ஸ்தானமாயிருக்கிறது என்று எண்ணினவனாய் என்னால் முடிந்தவரை சிறப்பாக ஊழியம் செய்து வந்தேன். 98ஆனால் ஒருநாள் என்னுடைய படிக்கும் அறையில் நான் உட்கார்ந்துகொண்டு நான் அந்தப் புத்தகத்தை எடுத்தேன். அதில் நீக்ரோ வகுப்பினரின் படம் ஒன்று இருந்தது. ஒரு வயது முதிர்ந்த தந்தை தலையில் நரைத்த முடியுடன் அதில் காட்சியளித்தார். அந்த படத்தின் கீழ் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது! “வெள்ளை மனிதனே, வெள்ளை மனிதனே, உன்னுடைய தந்தை எங்கேயிருந்தார்? பாருங்கள்? நான் இப்போது வயோதிபனும் சிந்தை மழுங்கினவனுமாயிருக்கிறேன். என்னால் இப்போது சரிவர புரிந்துக் கொள்ள முடியவில்லை. நான் வாலிபனாயிருந்தபோது இயேசுவை அறிந்திருப்பேனானால் நான் அவரை என் ஜனங்களிடத்திற்கு கொண்டு சென்றிருப்பேன்.”' ஆக, நான் அதைப் படித்தேன். “திரும்பவும் அதைப்படி, திரும்பவும் அதைப்படி” என்று ஏதோ ஒன்று சொல்லிக் கொண்டேயிருந்தது. நான் படித்துக் கொண்டிருந்தேன்..... ஓ, பாருங்கள்! உங்களுக்கும் அந்த அனுபவம் வந்திருக்கும்- ''படித்ததையே திரும்பவும் திரும்பவும் படிப்பது. அதில் ஏதோ ஒன்றிருக்கிறது.'' நான் அன்று க்ரீன் மில் என்னும் உயரமான இடத்தில், அந்தக் குகையை விட்டு வெளியே வந்தபோது, மக்கள் எப்படி அன்னிய பாஷை பேசியும், உண்மையான பரிசுத்த ஆவியைப் பெற்றும் ஆர்ப்பரித்தும் கூட அந்திக் கிறிஸ்துவாகயிருக்க முடியும் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை-உண்மையான பரிசுத்த ஆவியைக் கொண்டு அன்னிய பாஷைகள் பேசி, பல பாஷைகளைப் பேசினாலும் கூட இன்னும் சாத்தானாகயிருக்கிறார்கள். ஆம், அது சரிதான்! நான் அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்ட முடியும். ஆம், நிச்சயமாக! அவர்கள் அதைச் செய்தபோது... கவனித்துப் பாருங்கள். 99ஆகவே அன்னிய பாஷைகள் பேசுவது பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கு அத்தாட்சியல்ல, அது பரிசுத்த ஆவியின் வரங்களில் ஒன்றாகும். பாருங்கள்? அவருடைய வரங்களில் ஒவ்வொன்றையும் பிசாசானவன் போலியாகச் செய்து காண்பிக்கக்கூடும். தெய்வீக சுக மளித்தல் மற்றும் ஒவ்வொரு வரத்தையும். ''அந்நாளில் அநேகர் என்னை நோக்கி,“ கர்த்தாவே, பிசாசுகளைத் துரத்தினேன் அல்லவா; நான் செய்தேனல்லவா...'' அது சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதாகும். ”... உம்முடைய நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோமல்லவா, இந்த எல்லாக் காரியங்களையும் அக்கிரமச் செய்கைக்காரர்களே, நான் உங்களை அறியவும் இல்லை'' என்று கூறுவார். “ஒரே மழையானது நீதிமான்கள் மேலும், அநீதியுள்ளவர்கள் மேலும் விழுவதாக” வேதாகமம் கூறுகிறது. கோதுமை நிலத்தில் வளர்ந்திருக்கும் களையும் அதே மழையைப் பெறுவதனால், அந்த ஒரே மழையினால் சந்தோஷத்தைப் பெற்று கூச்சலிடக் கூடும்; “ஆனால் அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்!'' அச்சிறு களையானது, கோதுமை பெருமளவிற்கு அதே மழையைப் பெற்று, நின்று குதூகலித்து, கூச்சலிடக்கூடும். 100அங்கேதான் புரிந்து கொள்கிறோம். ஆகவே அவர்கள் கூச்ச லிடக்கூடும். அன்னிய பாஷைகளில் பேசக்கூடும். அவர்கள் விரும்பும் ஒவ்வொன்றையும் போலியாகச் செய்து காட்டக்கூடும், ஆனால் அந்த நாளிலே, “அக்கிரமச் செய்கைகாரர்களே'' என்று அழைக்கப்படுவார்கள். நான் சற்று நேரத்திற்கு முன்பு சொன்னதுபோல, நான் சொல் வதற்கு செவி சாயுங்கள்; கூர்ந்து கவனியுங்கள்! உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து வார்த்தையோடு உங்களையே சோதித்துப் பாருங்கள். நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். குட்டையான முடியை உடைய பெண்களே, அதை வளர விடுங்கள். நீங்கள் அரைக்கால் சட்டை அணிந்திருப்பீர்களானால் அவைகளைக் களைந்து விடுங்கள். ஒரு பெண்மணியைப் போல நடவுங்கள். ஆண்களாகிய நீங்கள் இன்னமும் சிகரெட் புகைத்துக் கொண்டும், கேளிக்கைகளில் ஈடுபடுவீர்களானால், அதைக் நிறுத்துங்கள்! நீங்கள் அதைக் குறித்து எவ்வளவு பேசுகிறீர்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. நீங்கள் இன்னமும் அந்த சங்கங்களைக் பிடித்துக்கொண்டு, “இதுதான் அது'' என்றும் அதுதான் இது'' என்றும் கூறிக்கொண்டிருப்பீர்களானால் நீங்கள் நிறுத்திக் கொள்வது நல்லது. திரும்பிப் பார்த்து வார்த்தையோடு பரிசோதித்துப் பாருங்கள். நாம் கடந்து போகிறோம்...... குட்டையான முடி, இந்த காலத்திற்குரிய மற்ற எல்லாக் காரியங்களுக்கும் அப்பாற்பட்டு நாம் ஜீவிக்க வேண்டும். நாம் இப்போது வேறு செய்தோம்.'' நான் (இயேசு) சொல்லுவேன், ''என்னைவிட்டு அகன்று போங்கள், எதற்குள்ளாகவோ வந்து விட்டபடியால் தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்பாக அந்தப் புஸ்தகத்தில் மறைத்து வைத்திருந்த இரகசியங் களையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தச் சிறிய காரியங்களில் கீழ்ப்படிகிறவர்களே, இந்த மற்ற காரியங்களையும் பிடித்துக் கொள்வார்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லையென்றால், கிழக்கும் மேற்குக்கும் இருக்கிற தூரமாக அது உங்கள் தலையின் மேலாகக் கடந்து போகும். அது அப்படியே.... 101கிதியோன் தன் மனிதர்களைப் பிரித்தது போல-ஆயிரமாயிரமானவர் அங்கே இருந்தனர். “அது மிகவும் அதிகம். அவர்களை மறுபடியும் பிரித்தெடு” என்று தேவன் கூறினார்; அவர்களுக்கு மற்றொரு சோதனையைத்தந்து, அவர்களை மறுபடியுமாக பிரித்தெடுத்தார் - அவர்களை மறுபடியுமாக பிரித்தெடுத்து, கடைசியாக அவனிடம் கையளவே உள்ள ஆட்கள் இருக்கும் வரை பிரித்தெடுத்தார். “இந்த வேலையை செய்ய நான் விரும்பும் கூட்டம் அது தான்'' என்றார். உண்மையில் நடந்தது அதுதான். பெந்தெகொஸ்தே ஸ்திரீகள், முன்னும் பின்னுமாக போவது, அங்கே உட்கார்வது, கேட்பது, வார்த்தையின்படி தவறாகும். அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை ஐயா! ஒவ்வொரு வருடம் நான் கடந்து செல்லும்போதும், நான் இதைக்குறித்து போதிக்க ஆரம்பித்தபோது இருந்ததைக் காட்டிலும் அதிகமான பெண்கள் தங்கள் முடிகளை குட்டையாக வெட்டிக் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். “அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்... நீங்கள்...'' என்கிறார்கள். யாரோ ஒருவர் சொன்னார், ''நல்லது, சகோதரன் பிரான்ஹாமே, மக்கள் உங்களை ஒரு தீர்க்கதரிசியாக கருதுகின்றனர்'' என்று. நான் ஒரு தீர்க்கதரிசி என்று நான் கூறுகிறதில்லை. நான் அவ்விதம் கூறுவதை நீங்கள் யாரும் கேட்டிருக்கமாட்டீர்கள். அவ்விதம் நீங்கள் கேட்டிருப்பீர்களானால், அவ்விதம் கருதுவீர்களானால்... ''நீங்கள் ஏன் பரிசுத்த ஆவியை எவ்விதம் பெற்றுக்கொள்வது என்று மக்களுக்கு போதிக்கக் கூடாது? இதை எவ்விதம் பெறுவது, பரிசுத்த ஆவியின் வரங்களை எவ்விதம் பெறுவது போன்ற காரியங்களைப் போதித்து சபைக்கு ஏன் உதவக்கூடாது?'' என்று கூறினார்கள். அவர்கள் தங்கள் ஏ,பி,சி (A B C)களை கற்றுக் கொள்ளக்கூட தங்கள் செவியை சாய்க்காதிருக்கும்போது, நான் எவ்விதம் அவர்களுக்கு அல்ஜீப்ரா (Algebra) கற்றுத்தர முடியும்? அது சரிதான். நீங்கள் இந்தச் சிறிய காரியங்களை சரி செய்யுங்கள். இங்கே கீழே இறங்கி வந்து, சுத்தி செய்து கொண்டு, சரியாக துவங்குங்கள். ஆமென். அது சரி. 102நான் எதைக்குறித்து பேசிக் கொண்டிருந்தேன்? நான் பேசிக் கொண்டிருந்த பொருளைவிட்டு விலகிச் செல்ல நினைக்கவில்லை; என்னை மன்னியுங்கள், பார்த்தீர்களா? நல்லது. “எங்களில் சிலர் குழப்பமடைந் திருக்கிறார்கள். எலியா ஒரே ஆள்தானா..?'' என்ற கேள்விதான். ஆமாம், ஊம், அது உண்மை . இல்லை. புறஜாதிகளுக்கு வரும் இந்த எலியா அந்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட புறஜாதி மனிதனா யிருப்பார். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் குழப்பத்திலிருந்து தம் பிள்ளைகளை வெளியே கொண்டுவர தேவன் அதே ஆவியை உபயோகிக்கிறார். அது அவருடைய நோக்கத்தை நன்றாக நிறைவேற்றுகிறது. ஆகவே அந்த ஆவி மறுபடியும் கீழிறங்கி வந்திருக்கிறது, ஏனென்றால், பாருங்கள்.... அதிக மெருகேற்றப்பெற்ற, கல்வியறிவு பெற்றவர்களை அவர் உபயோகிக்கக் கூடுமானால்-அத்தகைய இனத்தைச் சேர்ந்தவர்தான் அதைப்பிடித்துக்கொள்வர். தன்னுடைய அச்சரங்களை (A B C)க்கூட சரியாக அறிந்திராத, தன்னுடைய வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத்தெரியாத, அப்படிப்பட்ட ஒரு மனிதனை அவர் கொண்டுவருகிறார். வனாந்தரங்களிலிருந்து யாராவது ஒருவரை எங்காவது கொண்டுவந்து எளிய சிந்தை உள்ள மக்களிடம் அனுப்பி அவர்களுக்குப் புரிய வைத்து, அவர்களை எடுத்துக் கொள்கிறார். (சகோதரர் பிரான்ஹாம் தன் விரலை ஒருமுறை சொடுக்குகிறார்-ஆசி) அவ்விதமாக அவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள், பாருங்கள். அது மெருகேற்றப்பட்டதாக வருமானால்... 103பவுல் கூறியதுபோல, “நான் கல்வியின் மெருகோடு உங்களிடம் வரவில்லை; நான் உயிர்த்தெழுதலின் வல்லமையில் உங்களிடம் வருகிறேன்'' என்றார். அவருடைய கல்வியை அவரிடமிருந்து எடுத்துப் போட, அரேபியாவில் தேவன் மூன்றரை வருடம் எடுத்துக் கொண்டார். மோசேயிடமிருந்து அதை எடுத்துப்போட 40 வருடம் எடுத்துக் கொண்டார். பாருங்கள்? ஆகவே அதுதான் விஷயம். கல்வியறிவு இல்லாமையை நான் ஆதரிக்கவில்லை. கல்வியறிவு தேவையில்லை என்பதை உங்களுக்கு கூற முயற்சிக்கிறேன். இந்த உலகத்தின் ஞானம் மாறுபட்டதாயிருக்கிறது. சுவிசேஷம் பரவுவதற்கு கல்வியானது மிகப்பெரிய தடையாக இருந்திருக்கிறது. கல்வி அறிவு இல்லாமலிருந்தால், இந்தப் பெரிய வேத பாடசாலைகள் முதலியவைகள் இல்லாமலிருப்போம். மக்கள் எளிய மனதுள்ளவர்களாக தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுப்பார்கள்; ஆனால் அவர்களோ அவ்வளவாக மெருகேற்றப்பட்டவர்களாக குழப்பப்பட்டு, அங்குள்ள எல்லாவித ஸ்தாபனங்களோடும் இறுக இணைக்கப்பட்டவர்களாய் அங்கேயே தங்கிவிடப் போகிறார்கள். அவ்வளவுதான், அவர்கள் அந்த ஆவியை பெற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் எப்போதாவது ஒரு நல்ல ஸ்திரீயை மிகவும் கீழ்த்தரமான மனிதனுக்கு மணம் முடித்திருக்கிறீர்களா? ஒன்று அந்த கீழ்த்தரமான மனிதன் அந்த ஸ்திரீயைப்போல நல்லவனாவான். அல்லது, அந்த ஸ்திரீ அவனைப்போல் கீழ்த்தரமானவளாவாள். பாருங்கள்? அது சரிதான். “அவர்களை விட்டு வெளியே வாருங்கள். நான் எடுத்துக் கொள்ளப்படுதலை நிகழ்த்த ஆயத்தமாகிறேன்'' என்று அவர் சொன்னதற்கு அதுதான் காரணம். உங்களை இங்கிருந்து கொண்டு போய் விடத்தக்கதான ஒரு வகையான விசுவாசம் உங்களுக்கிருக்க வேண்டும். 104தானியேல் 9:27ல் உள்ள உடன்படிக்கை எப்போது ஒரு வாரத்திற்கு உறுதிப்படுத்தப்பட்டது? இயேசுகிறிஸ்து பூமியின் மீது யூதர்களுக்கு பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, உடன்படிக்கையில் பாதி வாரம் உறுதிப்படுத்தப்பட்டது. அவர் புறஜாதி மக்களிடம் செல்லவே இல்லை. அவர் தம்முடைய சீஷர்களுக்கு, “புறஜாதியாரிடத்திற்கு செல்ல வேண்டாம்” என்று கூறினார்; அது யூதர்களுக்கு மாத்திரமே. பாருங்கள்? அவர் மூன்றரை ஆண்டுகள் பிரசங்கித்தார். அதாவது எழுபது வாரங்களில் பாதி; அவர் செய்வார் என்று தானியேல் கூறினதுபோல். அவர் யூதர்களுக்கு உறுதியாக உறுதிப்படுத்தப்பட்டார் என்பதை நினைவு கூருங்கள். இந்த புறஜாதியாரின் காலத்தை இங்கு நுழைக்க அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டிருந்தது. அந்த முழு திட்டத்தையும் உங்களால் காணமுடிய வில்லையா? கவனியுங்கள். அவர் தம்மை ஒரு தீர்க்கதரிசியாக நிரூபித்தார், தீர்க்கதரிசி என்ன செய்வாரோ அதை அவர் செய்தார், தீர்க்கதரிசிகளின் அடையாளங்களைக் காண்பித்தார். ''ஒருவன் தன்னை ஒரு ஞானதிருஷ்டிக்காரன் என்றோ அல்லது ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லிக்கொள்வான் என்றால், அவன் சொல்லுவதைக் கவனித்துப் பாருங்கள், அவன் கூறியவைகள் நிறைவேறும் போது, அவன் கூறியது தொடர்ந்து நடந்து கொண்டே வரும் என்றால்....', என்று உங்கள் சொந்த வேத வாக்கியமே கூறுகின்றது. 105“தட்டுங்கள். அப்பொழுது திறக்கப்படும், தேடுங்கள்... கண்டடைவீர்கள், கேளுங்கள். கொடுக்கப் படும்.'' என்று வேதம் கூறுவதை நீங்கள் காண்பீர்களானால்... ”தட்டுங்கள்“ என்று சொல்லும்போது, தொடர்ச்சியாக தட்டுங்கள் என்பதைக் கவனியுங்கள். (இதை உதாரணமாக காட்டுவதற்கு, சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மீது இருபத்து மூன்றுமுறை தட்டுகிறார் -ஆசி). அங்கே உறுதியாய் இருங்கள். அந்த அநீதியுள்ள நியாயாதிபதி அந்த ஸ்திரீக்கு பதிலளிக்காமல் இருந்ததுபோல, அவள் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தாள். ”நான் உன் பக்கமாக இருக்கிறேன்'' என்று கூறிக்கொண்டு அவன் கதவை தட்டிக்கொண்டே இருந்தாலும் (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுவதை நிறுத்துகிறார் -ஆசி) ஒரு நீதிபதி பதிலுரைக்க மாட்டான். ''கர்த்தாவே, நான் இதை பெறவிரும்புகிறேன். ஆமென்.'' என்று அவரை தேடி கூறுவீர்களென்றால், அது மாத்திரம் போதாது, நீங்கள் அதை பெறும் வரைக்கும் அங்கேயே உறுதியாய் தரித்து நில்லுங்கள். அது வரும் என்று நீங்கள் அறிவீர்கள். அவர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதை பற்றிக்கொண்டு அங்கேயே உறுதியாக நில்லுங்கள். பாருங்கள்? இப்பொழுது, இப்பொழுது, சபையானது எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகுள்ள உபத்திரவ காலம்தான் எழுபதாவது வாரத்தின் கடைசிப் பாகமாகும். இங்கே மூன்றரை ஆண்டுகள் மறுபடியும் தீர்க்கதரிசிகளால் உறுதிப்படுத்தப்பட கொடுக்கப்படும் புரிந்துக்கொண்டீர்களா? மோசேயும், எலியாவும் வெளிப்படுத்தல் 11. இப்பொழுது, இது என்ன என்பதை நாம் பார்க்கட்டும். 106நீங்கள் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் ஒருவராயிருப் பீர்களானால், மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படும்போது அதில் போவீர்களா? ஆம், ஆம், ஐயா, அது சுலபமானதாயிருக்கிறது 107சகோதரன் பிரான்ஹாமே, பாகாலுக்கு தங்கள் முழங்கால்களை முடக்காதவர்கள் ஏழாயிரம் என்று சொல்ல நினைத்தீர்களா, அல்லது எழுநூறா? ஏழாயிரம் என்று சொல்ல நினைத்தேன். அதற்காக என்னை மன்னியுங்கள், பாருங்கள். அது ஒரு பேசும் தோரணையாயிருந்தது. நான் சற்று நேரத்திற்கு முன்பு சொன்னதுபோல... நான் இங்கு நின்றதைக் கவனித்தீர்களா? “ஆட்டுக்குட் டியானவரைக் கண்டதற்கு அவர்கள் சாட்சி கொடுக்கிறார்கள்...' என்று கூறினேன். பார்த்தீர்களா? பாருங்கள்? ஆட்டுக்குட்டியானவர் பூமியில் இருந்தார்-பாருங்கள்? ”தேவனுடைய ஆவியானவர் ஆட்டுக்குட் டியானவர் மீது வந்ததைக் கண்டதற்கு சாட்சி கொடுக்கிறார்கள்.'' 108இப்போது, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்'' என்று கூறப்பட்டிருக் கிறது. நீங்கள் பார்த்தீர்களா? அது சரியான கிரேக்க பாஷையின் முறைப்படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் கவனிப் பீர்களானால், அது இவ்விதமாக இருக்கும்... இப்போது வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள்..... பரிசுத்த யாக்கோபின் மொழி பெயர்ப்பில் ''நான்-நான்-நான்-வாசம் பண்ணபிரியமாயிருக்கும் என்னுடைய நேசகுமாரன் இவர்” என்பதாக வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில், நாம் இன்று சொல்வதுபோல சொல்வோமென்றால்; ''நான் உள்ளே வாசம் பண்ண பிரியமாயிருக்கும் என்னுடைய நேசக்குமாரன் இவர்“ என்று கூறுவோம் - அதைத் திருப்பி விடுவோம், பாருங்கள். ''நான் வாசம் பண்ண பிரியமாயிருக்கும் என்னுடைய நேசகுமாரன் இவர்” பாருங்கள்? இப்போது, இன்றைக்கு நாம்: “நான் உள்ளே வாசம்பண்ண பிரியமாயிருக்கும் என்னுடைய நேசகுமாரன் இவர்” என்று கூறுவோம்-அதே வார்த்தை வித்தியாசமாய் பொருத்தப்பட்டிருக்கிறது. பாருங்கள்? 109இப்போது, ஆம், நான் கருதியது... தயவாக என்னை மன்னியுங்கள். சகோதரர்களே, தூர இடங்களில் இந்த ஒலி நாடாவைக் கேட்கிறவர்களே, நண்பர்களே, கேளுங்கள்: நான் அதை அவ்விதம் சொல்ல நினைக்கவில்லை. நான் சுவிசேஷத்தின் ஒரு ஊழியக்காரன்; அதை எத்தனை முறை பிரசங்கித்திருக்கிறேனோ, அத்தனை முறையும் அது ஏழாயிரம் என்பதை அறிந்திருந்தேன். நான் எழுநூறு என்று சொல்ல நேர்ந்தது. எழுநூறு என்று நான் நினைக்கவில்லை, நான் கருதினது... நான் அதை வேதத்திலிருந்து படிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருக்கும்போது என் மனதில் அவ்வண்ணம் வந்தது. ஏழாயிரம் என்பதற்குப் பதிலாக எழு நூறு என்று கூறிவிட்டேன். அத்தகைய தவறுகளை நான் எப்போதும் செய்கிறேன். நான் நிச்சயமாக ஏதும் அறியாதவன், ஆகவே நீங்கள் என்னை மன்னித்துவிடுங்கள். பாருங்கள்? அப்படிச் செய்ய நான் நினைக்கவில்லை. 110கிறிஸ்துவின் மணவாட்டியும், கிறிஸ்துவின் சரீரமும் ஒன்று தானா? ஆமாம், ஐயா! பாருங்கள்? இப்பொழுது இங்கே கவனியுங்கள், நான் இதை ஆரம்பிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அதன் மீது நான் ஒரு பிரசங்கமே செய்யக்கூடும். ஆனால் அதைச் செய்யமாட்டேன், ஆனால் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். தேவன், ஆதாமுக்கு அவனுடைய மணவாட்டியை அவனுடைய விலாவிலிருந்து கொடுத்த போது, அவன், “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்'' என்றான். அது சரிதானே? தேவன், கிறிஸ்துவுக்கு அவருடைய மணவாட்டியை கொடுத்த போது, ஆவியானவர் மணவாட்டியாகிய மாம்சத்தை தந்தார். அவருடைய இருதயத்திற்கு கீழாக அவர் குத்தப்பட்டார், தண்ணீரும், இரத்தமும், ஆவியும் புறப்பட்டு வந்தன; அதுதான் “அவருடைய மாம்சத்தில் மாம்சமும், அவருடைய எலும்பில் எலும்புமாக'' உருவாக்கப்பட்டது. மணவாட்டிதாமே, கிறிஸ்துவின் எலும்பும் மாம்சமாகவும் இருக்கிறோம் நிச்சயமாக. அவர்கள் அவ்விதமாகத்தான் இருக்கிறார்கள். அதுதான் அவரது மணவாட்டி. 111எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு கிறிஸ்துவின் மணவாட்டிக்கு ஊழியம் இருக்குமா? நிச்சயமாக, இப்பொழுது நேரடியாக அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் மணவாட்டி, நிச்சயமாக! அதுதான் ஏற்ற வேளையின் செய்தி-கிறிஸ்துவின் மணவாட்டி. நிச்சயமாக, அவள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், சுவிசேஷகர்கள், மற்றும் மேய்ப்பர்களை உடையவளாய் இருக்கிறாள். அது சரியா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் -ஆசி) அதுதான் கிறிஸ்துவின் மணவாட்டி. நிச்சயமாக, அவளுக்கு ஒரு ஊழியம் உண்டு. ஒரு மகத்தான ஊழியம்-இந்த காலத்திற்குரிய ஊழியம், அது மிகவும் எளிமையானதாக இருக்கும். 112இப்பொழுது நினைவுகூருங்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் கூட்டத்தில் நான்... இருந்தீர்கள்? நான் எதைக் குறித்து பிரசங்கித்தேன் என்று நினைவிருக்கிறதா? எளிமை. ஓ! அதை மறந்து விட வேண்டாம். அதைக் குறித்து மறுபடியும் எச்சரிக்க ஒரு நிமிஷம் நிறுத்தப்போகிறேன். ஏதாகிலும் ஒரு மகத்தான காரியம் நடக்கப்போவதாக தேவன் முன்னுரைக்கும்போது, மக்கள் தங்கள் ஞானத்தினால், என்ன நடக்கிறதோ அதை இழந்து போகும்வரை, வெகு தூரத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவன் ஒரு காரியத்தை மகத்தானது என்று கூறும்போது, உலகம் அதைக் குறித்து நகைத்து, “ஓரு கூட்டம் அறிவில்லாதவர்கள்'' என்றுரைக்கிறது. அது சரி. மகத்தான உலகமும், மிக மகத்தான சபையும், “சிறுவனே, அது மகிமையானது!'' என்று சொல்லும்போது, தேவன் அவர்களைப் பார்த்து, ''ஒரு கூட்டம் அறிவில்லாதவர்கள்'' என்று கூறுகிறார். ஆகவே, நீங்கள் விழிப்பாய் இருக்கவேண்டும்.... அது ஒருவேளை அவ்விதமாகத்தான் இருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை. சரியாக அதே வழிதான், ஆனால் அந்த வழியில்தான் அது அமைந்திருக்கிறது. கவனியுங்கள்! இங்கே மகத்தான, பரிசுத்த வைதீக சபை ஒன்று இருந்தது, ''நமக்கு வார்த்தை தெரியும்; நமக்கு பள்ளிகள் உண்டு; நமக்கு வேதப்பள்ளிகள் உண்டு. நம்மிடம் மெருகேற்றப்பெற்ற மனிதர்கள் உண்டு. நூற்றுக்கணக்கான வருடங்களாக யேகோவாவுக்கு உத்தமமாய் இருந்து வந்திருக்கிறோம். நாம் தான் 'சபை'; நாம் தான் ஆலோசனை சங்கம், பரிசேயர்களும், சதுசேயர்களும் மற்றும் எல்லா ஸ்தாபனங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் சபைகளின் ஐக்கியம் நமக்குண்டு. நாம் பெற்றுக்கொண்டிருப்பதுபோல. சபையின் ஆலோசனை சங்கமாக நாமெல்லாரும் ஒன்றாக இருக்கிறோம். இங்கே நாம்தான் பெரிய மனிதர்கள். நாம் அந்த வேதவாக்கியங்களை அறிந்துள்ளோம். நதிக்கரையிலே ஆட்டுத்தோல் உடையணிந்து தாடியுடன் நின்றுக் கொண்டிருக்கும் அந்த எளிமையில் உள்ள அறிவில்லாதவனைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்'' என்று கூறினதைக் கவனியுங்கள். நிச்சயமாக அவர்கள் அதற்கு செவிசாய்க்கமாட்டார்கள். 113ஆனால், வேதாகமம் மல்கியா 4ல்... அல்லது 3-ம் அதிகாரத்தில், “இதோ, நான் என் செய்தியாளனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்'' என்று கூறுகிறது. இதற்கு ஏழுநூற்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யோவான்... ஓ, அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய ஏசாயா அங்கு நின்றுக்கொண்டு, ”கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைப் பண்ணுங்கள் என்றும். வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று“ என்று கூறினான். அது சரி, ”ஓ, எல்லா உயர்ந்த இடங்களெல்லாம் தாழ்த்தப்படும். இதைக்குறித்து அநேக மக்கள் பேசினார்கள். ஓ, ''இந்த மனிதன் வரும்போது தன்னுடைய விரலை சுட்டிக்காட்டி கட்டளையிடும்போது, மலைகள் அகன்று போய்விடும், ஓ, பள்ளமான இடங்களெல்லாம் உயர்த்தப்படும். கரடுமுரடான இடங்களெல்லாம் சமமாக்கப்படும். சகோதரனே, இங்கிருக்கும் வயல்களிலெங்கும் தானியத்தை பயிர் செய்யலாம். ஓ, இந்த மனிதன் வரும்போது நாம் மகத்தான காரியங்களை செய்யப்போகிறோம்'' என்று அநேகர் கூறினார்கள். பாருங்கள்? 114தேவன் ஒரு இயந்திரக்கைப்பிடியை சுழற்றி, ஒரு தாழ்வாரத்தை கீழே இறக்கி அதிலிருக்கும் மனைதனைப் பார்த்து, “என்னுடைய மேசியாவின் மகத்தான முன் தூதனே, வெளியே வாரும்'' என்று கூப்பிடுவா ரென்றும், அதற்குப் பிறகு அவன் போனபிறகு அவர்கள் அதை மறுபடியும் இழுத்து, அவனுடைய ஊழியம் முடிந்தபிறகு மறுபடியும் இயந்திர கைப்பிடியை சுழற்றி அதை கீழே இறக்கி வேதப்பள்ளியின் பக்கத்தில் வைத்துவிட்டு, ”நல்லது, என்னுடைய நேசக்குமாரனே, வெளியே வந்து அவர்களுக்கு அறிவியும்'' என்று கூறுவார் என்றும் அவர்கள் எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாருங்கள்? ஓ, என்னே! அவன் வந்தபோது என்னென்ன நடந்தது என்பதைக் கவனித்தீர்களா? “அவர்கள், பள்ளிக்கூடங்களில் படிக்காத ஒருவன் இங்கிருக்கிறான்-அவனிடத்தில் ஐக்கியத்தின் அட்டைகூட இல்லை-ஓ, அவனிடத்தில் எந்தவிதமான அத்தாட்சிக் கடிதமும் இல்லை. இல்லை. அவனுடைய வாழ்க்கையிலேயே ஒரு நாளாகிலும் பள்ளிக்கூடத்திற்கு சென்றதாக கூறுவதற்கும் ஒருவருமில்லை. அவனுடைய பேச்சைப் பார்த்தால் கூட அவன் பள்ளிக் கூடத்திற்கு போகாதது போலிருக்கிறது. மத சம்பந்தமான வார்த்தைகளைக்கூட அவன் பேசவில்லை. அவன், விரியன் பாம்பு, கோடாரி, வனாந்தரம், மரம் போன்ற வார்த்தைகளைத்தான் பேசினான். அந்த நாளிலோ, அல்லது இந்த நாளிலோ, அல்லது எந்த நாளிலோ இருந்த மதசங்கத்தின் அமைப்புகளுக்குரிய வார்த்தைகளையே அவன் பேசவில்லை .'' 115அவன் ஒரு அநாகரிக மனிதனாகக் காணப்பட்டான். எங்கோ இருந்த ஒரு புதரிலிருந்து வெளியே வந்தான். அவன் சவரம் செய்துக் கொள்ளாதவனும், தன் தலையின்மீது படியாமல் நின்றுக்கொண்டிருக்கும் மயிரை உடையவனாகவும் வந்தான். இரண்டு மாதத்திற்கொரு முறையோ, அல்லது மூன்று மாதத்திற்கொருமுறையோ மாத்திரம் குளித்தவனாக இருந்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். சரி. இரவில் அவன் ''பைஜாமா'' போடாதவனாய் இருந்தான். அவன் எந்த விதமான காரிலும் செல்லாதவனாகவும் இருந்தான். அவன் தன் பற்களை 'பிரஷ்ஷினால் சுத்தம் செய்யாதவனுமாயிருந்தான்- உண்மையில் இல்லை. ஓ, இவன் எப்படிப்பட்ட மனிதனாயிருந்தான். இதோ அவன் வனாந்தரத்தில் தடியை ஊன்றி நடந்து வந்து, ''கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்றும், அவருக்கு பாதையைச் செவ்வைப்படுத்துங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனின் சத்தமாய் இருக்கிறேன்!'' என்று கூறினான்.... போதகர்களில் சிலர் அங்கு நின்று கொண்டு, “ஊ! உன்னிடத்தில் இருக்கிறதா... இந்த பெருங்கூட்டத்தில் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம், நாங்கள் அதைச் செய்ய முடியாது. நல்லது, உன்னுடைய அடையாளச் சீட்டு எங்கே?'' என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டதை அவன் பொருட்படுத்தவில்லை. அவன் ஒரு செய்தியைக் கொண்டு வந்திருந்தான். அதையே அவன் பிரசங்கித்தான். 116அவர்கள், “ஆ, சற்று பொறுங்கள், நாங்கள் பேராயரை (Bishop) கொண்டு வருகிறோம். அவர் அதைக்குறித்து என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். நாங்கள் அங்கே செல்லுகிறோம். அதுதான் சபையின் தலைமைஸ்தலம். இதைச் சபையின் தலைவர்தான் அங்கீகரிக்க வேண்டும். இவன் தேவனிடத்தில் இருந்து வந்திருப்பானானால் இவன் நம்முடைய பேராயரை அங்கீகரிப்பான்,'' என்று கூறினார்கள். அங்கு ஆசனங்களைப்போட்டு மரியாதைக்குரிய பெரியோர்களை உட்கார வைத்திருப்பார்கள். அவன், ''விரியன் பாம்புக்குட்டிகளே, புல்லின்கீழ் இருக்கும் சர்ப்பங்களே'' என்று கூறினான். தங்களுடைய காலர் பட்டையை உயர்த்தி போட்டுக் கொண்டிருக்கும் பரிசுத்த பிதாக்களையும் மற்றவர்களையும். ''வரும் கோபத்திற்கு தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? உங்களுடைய நேரம் சமீபமாய் இருக்கிறது. நீங்கள் இதை சிந்திக்கவில்லையா?...'' நீங்கள், “அவன் இதை சேர்ந்தவன் அல்லது அதை சேர்ந்தவன்'' என்று கூறலாம். ''நான் உங்களுக்கு சொல்லுகிறேன்: நான் ஆராதிக்கும் தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார்” என்றான். ஓ, என்னே! இப்பொழுது, மதத்தலைவர்களைப்போல அவன் பேசாமல் அதற்கு விரோதமாகப் பேசினான். “கோடாரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது! ஆகையால் நல்ல கனி கொடாத மரமெதுவோ அது வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படும்! ஓ, நான் உங்களுக்கு தண்ணீரினால் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் கொடுக்கிறேன். ஆனால் எனக்குப் பின்னால் அவர் வருகிறார்; சந்திரன் இரத்தம் போலாகும் மற்றும்...'' ஓ! ''அவர் தம்முடைய களத்தை நன்றாய் விளக்கி, பதரை அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார். கோதுமையையோ களஞ்சியத்தில் சேர்ப்பார். அவர் களையையும், கோதுமையையும் தனியே பிரிப்பார்.'' ஓ! என்னே ஒரு செய்தி! 117அவர்கள் “ஊ! இந்த மனிதனா! இவன் என்ன சொல்லுகிறான்?இது-இது-இது என்ன சமயம்? ஓ, படிப்பறியாதவன். நமக்கு அங்கு ஒரு மனிதன் இருக்கின்றார். சகோதரன் ஜோன்ஸ் இருக்கிறார். இந்த நாட்களில் யாராகிலும் எழுப்பப்பட வேண்டுமானால் அது இவராகத்தான் இருக்க முடியும். பேராயர் இன்னார் இன்னார்தான் இதைச் செய்ய முடியும். பரிசுத்த பிதாவாகிய இன்னார் இன்னார்தான் இதைச் செய்ய முடியும்'' என்று கூறினார்கள். ஓ, என்னே ! பாருங்கள்? தேவன் எளிமையில் மறைந்திருந்து, எளிமையில் கிரியை செய்கிறார். புரிகின்றதா? ஒருநாள் அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவன் “ஆமாம், அவர் உங்கள் மத்தியிலே நின்றுக் கொண்டிருக்கிறார்'' என்றான். அவன்தான் அந்த முன்னோடி என்பதை அவன் நிச்சயமாக அறிந்திருந்தான். அவன், தான் யார் என்பதை அறிந்திருந்தான். ஆகவே தான் அவர்களை அவன் அவ்விதம் அசைத்தான். ''பயப்படாதிருங்கள், தொடர்ந்து நன்மையான காரியங்களைச் செய்து முன்னேறுங்கள். இராணுவ வீரர்களாகிய நீங்கள், உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படியுங்கள், தீமை ஏதாகிலும் செய்திருந்தால் நற்சீர் பொருந்துங்கள்...' என்றான். ''நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் இவ்விதமான காரியங்களை செய்வதை விட்டுவிடட்டுமா? நாங்கள் இதை நிறுத்தி விடட்டுமா?'' அவன், ''நீங்கள் இருக்கிறவண்ணமாகவே முன்னேறிச் செல்லுங்கள், முன்னேறுங்கள்; நீங்கள் உருளைக் கிழங்கை பயிர் செய்தால், தொடர்ந்து பயிர் செய்யுங்கள். இராணுவவீரர்களே, கொடுமை செய்யாதீர்கள், நீங்கள் எவ்விதம் இருக்கிறீர்களோ அவ்விதமாகவே தொடர்ந்து செல்லுங்கள். உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.'' ''ரபீ, நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' ''நீங்கள் இருக்கிற வண்ணமாகவே முன்னேறி செல்லுங்கள், நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் மத்தியிலே இருக்கிறார்.'' அவன் தன்னுடைய செய்தியின் நேரத்தை அறிந்திருந்தான். அவன் அந்த நபரை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருந்தான். அவர் அங்கிருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். ''ஒருவர் உங்கள் மத்தியில் இருக்கிறார்; நீங்கள் அவரை அறியவில்லை. நடந்துக் கொண்டிருக்கும் காரியங்களை நீங்கள் அறிந்துக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்'' என்றான். ''ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது'' என்றான். “அவர் இங்கிருப்பார், நான் அவரை அறிந்துக் கொள்ளுவேன்.'' 118கடைசியாக ஒருநாள் அவன், “இதோ அவர் இங்கிருக்கிறார். இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி'' என்றான். ''என்னுடைய நேரம் இப்பொழுது வந்திருக்கிறது. நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நான் இப்பொழுது சிறுக வேண்டும்; நான் இந்தக் காட்சியை விட்டுச் செல்ல வேண்டும். இங்கிருந்து அவர் தொடர்ந்துகொண்டு செல்லுவார்.'' “இப்பொழுது ஆயிர வருட அரசாட்சி தொடங்க வேண்டியதாய் இருக்கிறது, காலம் சமீபமாய் இருக்கிறது'' என்றான். அவர் வரும் போது... “அவர் எல்லோரையும் அசைத்து, கோதுமையை பதரிலிருந்து பிரித்தெடுப்பார். அவர் பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பார். அவர் தம்முடைய களத்தை நன்றாக விளக்குவார். நூற்றுக் கூடை அவர் கையில் இருக்கிறது'' என்று யோவான் கூறினான். ஆனால் அவர் யார்? - அந்தச் சிறிய..... 119இப்பொழுது, அவர்கள் இவ்விதமாக திட்டம் தீட்டி வைத்திருந்தனர். “ஓ! மனிதனே! அவர் வரும்போது ஒருமைல் நீளத்திற்கும் மேலான ஈட்டியை அவர் பெற்றிருப்பார். அவர் பாலஸ்தீனாவில் நின்று கொண்டு, தம்முடைய வெண்மையான மேகங்களில் ஒன்றின்மீது நின்றுக் கொண்டு, இந்த எல்லா ரோமர்களையும் பொறுக்கியெடுத்து அவர்களை நரகத்தில் போட்டு விடுவார். - எல்லோரையும் அழிக்கும் வரை இவ்விதமாகச் செய்வார்.'' இவ்விதமாகத்தான் அவர்கள் எல்லோரும் மேசியாவின் வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவ்விதமான வேளையில்தான், ஒரு சிறு ஆட்டுக்குட்டி, சாந்தமும், மனத்தாழ்மையுமாய் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தள்ளிவிட்டுக் கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது.255. அவர் அவ்வளவு எளிமையாக வந்திருந்ததால் யோவானுக்கும் சந்தேகமுண்டாகி, ''நீங்கள் அவரிடத்தில் போய் வருகிறவர் நீர் தானா?'' என்று கேட்கும்படி அனுப்பினான். அவ்வளவாக எளிமையில் வந்திருந்ததால் அந்த தீர்க்கதரிசியும்'' வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரவேண்டுமா?'' என்று கேட்கும்படி ஆட்களை அனுப்பியிருந்தான். 120இப்பொழுது அவர் மத்தேயு 11ல் அந்தச் சீஷர்களுக்கு படிக்கும்படியாக ஒரு புஸ்தகத்தை அளிக்கவில்லை. யோவானின் சீஷர்கள் அவரிடத்தில் வந்து கேட்டபொழுது... யோவான் சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது 'அவனுடைய கழுகின் கண்கள் திரையிடப்பட்டுவிட்டிருந்தன'' என்று பெம்பர் கூறினார் என்று நினைக்கிறேன். அவன் ஆகாயத்தில் இருந்தான். ஆனால் அவனுடைய தீர்க்கதரிசனம் முடிந்தவுடன் அவன் மறுபடியும் பூமியில் விழுந்து கிடந்தான். ஏனென்றால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். நீங்கள் பாருங்கள், இப்பொழுது அவனுடைய பெரிய செட்டைகள் அவனுக்கு அவசியப்படவில்லை. ஆகவே, அவைகளை அங்கே மடக்கி வைத்திருந்தான். ஆனாலும், மற்றவர்களைக் காட்டிலும் அவன் உயர பறந்திருந்தான். 121நான் ஒன்றை சொல்லட்டும். தேவன் அவனை உபயோகப்படுத்தினார். இயேசு அதை அறிந்திருந்தார். ஏனென்றால் அவர் மாம்சத்தில் வந்த தேவனாயிருந்தார். பாருங்கள்? ஆகவே, அவர்-அவர் அங்கே கூறினார், அவர் கூறினார்... அவன் சிறையில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று அறிந்துக்கொள்ள அவனுக்கு ஒரு புத்தகம் கொடுக்கப்படவில்லை. ''இப்பொழுது ஒரு நிமிஷம் பொறுத்திருங்கள். நான் ஒரு கட்டுரை எழுதப்போகிறேன். நீங்கள் அதைக் கொண்டுபோய் அவன் சிறையில் இருக்கும்போது என்னிமித்தமாக எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள யோவானிடம் கூறி இதை அவனிடம் கொடுங்கள்'' என்று அவர் கூறினாரா? பாருங்கள்? இல்லை, அவர் ஒருபோதும் அவ்விதம் கூறவில்லை. ''அவன் வெளியே வருவதற்கு முன் வேத பாண்டியத்தில் தன்னுடைய டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று யோவானிடம் போய்ச் சொல்லுங்கள்'' என்று இவ்விதமாக அவர் கூறவில்லை. பாருங்கள்? வேண்டுமானால் அவனும் மற்றவர்களுடன் சேர்ந்துக் கொண்டு ஒரு புறக்கணிக்கிறவனாக இருந்திருக்கக்கூடும். யோவான் ஒரு உத்தமனாக இருந்து ஒரு கேள்வியைக் கேட்டான். 122''கூட்டம் முடியும் வரை காத்திருந்து, என்ன நடந்ததோ அதை யோவானுக்குக் காண்பியுங்கள். அப்பொழுது அவன் அறிந்துக்கொள்வான். என்ன நடக்கின்றது என்று நீங்கள் அவனுக்குக் கூறினால், அப்பொழுது அவன் அறிந்துக்கொள்வான்'' என்று அவர் கூறினார். பாருங்கள்? பாருங்கள்? 'அவனிடம் போய்.. அவனிடம் கூறுங்கள். அவனிடம் இது... அவன் சிறையில் இருக்கிறான், அவன் இங்கிருக்க முடியவில்லை, நீங்கள் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள், என்ன நடந்ததோ அதைக் கண்டிருக்கிறீர்கள். நீங்கள் போய்ச் சொல்லுங்கள்,'' என்றார். அப்பொழுது அந்த சீஷர்கள் ''நல்லது, ஆண்டவரே'' என்று கூறினார்கள். அவர்கள் மலையைக் கடந்து சென்றார்கள். பாறையின் மீது இயேசு உட்கார்ந்துக்கொண்டு அவர்கள் கடந்து செல்லும் வரைக்கும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் - அவர்கள் மலை மீது ஏறி செல்லும் வரைக்கும். அவர் திரும்பி, சபையாரைப் பார்த்து, “யோவான் காலத்தில் யாரைப் பார்க்கப் போனீர்கள்? பாருங்கள்? எதைப் பார்க்கப் போனீர்கள்? தன்னுடைய 'காலர் பட்டையை அணிந்து' மெல்லிய வஸ்திரத்தை அணிந்திருக்கும் நன்றாகப் படித்த, மெருகேற்றப்பட்ட மனிதனையா பார்க்கச் சென்றீர்கள்? அவ்விதமான மனிதனையா நீங்கள் காணச்சென்றீர்கள்?'' ”இல்லை, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர்கள் குழந்தையை முத்தமிட்டு, அரசனின் அரண்மனையில் வசிக்கிறார்கள். யோவான் அவ்வண்ணம் இருக்கவில்லை.'' “அப்படியானால் நீங்கள் ஏன் சென்றீர்கள்? தன்னுடைய ஊழியத்தை ஒரு ஸ்தாபனத்தோடு இணைத்துக்கொண்டு, எல்லாரோடும் கைகளைக் குலுக்கிக் கொண்டிருக்கும் மனிதனையா பார்க்கச் சென்றீர்கள்? ஒருத்துவக்காரர் வேண்டாம் என்று சொல்லும்போது திரித்துவக்காரரிடம் ஐக்கியம் கொள்ளுவதற்காக அவர்களிடம் செல்வதும்; திரித்துவக்காரர்கள் வேண்டாம் என்று சொல்லும்போது 'தேவனுடைய சபை' என்று அழைக்கப்படும் ஸ்தாபனத்திற்கோ அல்லது வேறெங்கேயோ செல்லுகிறார்கள். காற்றினால் அசையும் நாணலை போலிருக்கும் மனிதனையா பார்க்கச் சென்றீர்கள்?'' என்று கேட்டார். ”ஓ, இல்லை!-யோவான் அவ்விதமாக இல்லை.'' “அப்படியென்றால் எதைப் பார்க்கச் சென்றீர்கள்? - ஒரு தீர்க்கதரிசியை'' என்று அவர் கூறினார் ”அதுதான் சரி என்று கூறுகிறேன், ஆனாலும் நீங்கள் அறிந்திராத ஒன்றைச் சொல்லப் போகிறேன், அவன் ஒரு தீர்க்கதரிசியிலும் மேலானவனாக இருந்தான். அவன் மேலானவன்...'' என்று அவர் கூறினார். ''நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வேதாகமத்தில் மல்கியா 3ல் இதோ எனக்கு முன்பாக நான் என் செய்தியாளனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று சொல்லப்பட்டிருப்பவன் இவனே'' என்றார். பாருங்கள்? 123அவர்கள் அதைப் புரிந்துக்கொள்ளவில்லை. சீஷர்களும் அதைப் புரிந்துக்கொள்ளவில்லை, பாருங்கள். அது சரி, ஓ! எளிமை- தாழ்மையுடன் இருங்கள். தேவன், மகத்துவமானதொன்றை வாக்குரைக்கும் போது-அது அவருடைய பார்வையில் மகத்துவமானதாகக் காணப்படுகிறது. இப்பொழுது, நீங்கள் எப்பொழுதும் இதை மனதில் வைத்திருக்க விரும்பினால், நான் விரும்புகிறேன். இதை மனதில் வையுங்கள்! இது நடக்கும்போது, அப்பொழுது நீங்கள் இதை மாற்றிக்கொள்ளலாம். வசந்த காலத்தில் பூக்கும் சிறிய மலர்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது ஒரு சிறிய புல்லை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, இப்பொழுது இதைப் பிடித்துக்கொண்டு “ஏதோ எளிமையானதொன்று இதைச் செய்திருக்கிறது; சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பி இருக்கும் அந்த மூளை இந்தச் சிறிய புல்லை செய்யமுடியுமா என்பதைக் காண விரும்புகிறேன்'' என்று சொல்லுங்கள். அதை நீங்கள் எப்பொழுதும் பெற்றிருப்பீர்கள். நீங்கள் அதன் மீது உறுதியாய் சார்ந்திருக்கலாம்; நீங்கள் அதை எப்பொழுதும் பெற்றிருக்கலாம், பாருங்கள்? புல்லின் இலை தன்னில் ஜீவன் உள்ளதாய் இருக்கிறது. அது மிகவும் எளிமையானதாகவும், தாழ்மையானதாகவும் இருக்கிறது... ஒரு மனிதன் பெரிய மனிதனாக இருப்பது சரிதான்; ஆனால் அவன் தன்னை எளிமையுள்ளவனாக்கிக் கொள்வதற்கு அவ்வளவு பெரியவனாக இருப்பானென்றால், அவன் தேவனைக் காண்பான். ஆனால் அவன் எளியவனாகவில்லையென்றால் அவன் அவரைக் காணவே முடியாது. நீங்கள் எளிமையுள்ளவர்களாக வேண்டும். இப்பொழுது... 124வெளிப்படுத்தல் 5,9 வசனங்களில் ஆட்டுக்குட்டியானவர் ... கையிலிருந்து புஸ்தகத்தை வாங்கும்போது பாடிக் கொண்டிருப்பவர்களாகக் காணப்படுவர் எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களா? இல்லை, வெளிப்படுத்தல் 6:5,9 வசனங்கள் இல்லை. நீங்கள் கவனிப்பீர்களானால், இவர்கள் பரிசுத்தவான்களல்ல. அவர்கள்.... அவர் இன்னமும் தமது உரிமையைச் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. பாருங்கள்? இவர்கள் பரிசுத்தவான்கள் அல்ல. கவனித்தீர்களா, அவர்கள். மூப்பர்களும் ஜீவன்களும், அவர்கள் பாடுகின்றார்கள். 125அதை நாம் படிப்போம். அப்பொழுது அந்த நபர் .... அதன் பின்பு நான் முயற்சி செய்வேன்... இன்னுமாக அரை டஜன் கேள்விகள் உள்ளன. அதை சில நிமிடங்களில் முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். வெளிப்படுத்தல் 5:9. அதைச் சற்று படிக்கலாம்..... இந்த மனிதர் உத்தமமாக இதைக் கேட்டிருக்கிறார். அதை அவர் அறிய ஆவலுள்ளவராய் இருக்கிறார். கவனியுங்கள். “அந்த புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, (எடுத்த பொழுது) அந்த நான்கு ஜீவன்களும் இருபத்து நான்கு மூப்பர்கள் தங்கள் சுர மண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து : தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் (எடுக்கவும் - take) அதின் முத்திரைகளை உடைக்கவும் (பாருங்கள்) பாத்திரராயிருக்கிறீர்;..... என்று புதிய பாட்டைப் பாடினார்கள். (பாருங்கள், பாருங்கள்) தேவரீர் எங்களை மீட்டுக்கொண்டு, எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்“ 126அது பரலோகத்திலுள்ள குழு— மீட்கப்பட்டவர்கள் அல்ல சரி. இப்பொழுது... சகோதரன் பிரான்ஹாமே. எல்லா... சற்று பொறுங்கள்- (சகோதரன் பிரான்ஹாம் சிறிது நேரம் நிறுத்துகிறார்-ஆசி) நான் நினைக்கிறேன்... என்னை மன்னியுங்கள். சகோதரன் பிரான்ஹாமே, தேவபக்தியுள்ள அனைவரும் (ஆம்)தேவபக்தியுள்ள அனைவரும் எடுத்துக்கொள்ளப்படுதலில் சென்றுவிட்டால், எலியாவும் மோசேயும் எங்கிருந்து வருவார்கள்? 127ஏதோ தவறுள்ளது. ஏதோ தவறுள்ளது. அவ்வளவுதான் அதற்குள்ளது. ஏதோ ஒன்று நிகழந்துவிட்டது. பாருங்கள்? எங்கேயோ தவறு நேர்ந்திருக்கிறது. எல்லோரும் நல்லுணர்வுடன் இருக்கின்றீர்களா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி) வியாதி வேறொன்றும் இல்லையே? (சபையிலுள்ள ஒருவர் வெளிப்படுத்தல் 5:9ஐ மறுபடியும் படிக்கும்படி வேண்டுகிறார்) வெளிப்படுத்தல்... எந்த பாகம், சகோதரனே? ('5“) 5. ('5') ஓ, அந்தக் கேள்வி! ஓ, விடையளிக்கப்பட்ட அந்த கேள்வி. இப்பொழுது அதைப் பார்க்கலாம். ''நீர்...'' அந்த சரியான இடம். அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, (எடுத்த பொழுது-taken) அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய்விழுந்து: தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் (எடுக்கவும்-take) அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீ அடிக்கப்பட்டு... இங்குள்ளது! இங்குள்ளது! நான் தவறாகக் கூறிவிட்டேன். பாருங்கள் சகல கோத்திரங்களிலும்..... எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு ... என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.'' 128அது சரி. அதைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஓ, பரிசுத்த ஆவியின் பிரசன்னம் மாத்திரம் இங்கில்லாதிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? அவர் அனுமதிக்கவில்லை.... பாருங்கள், அந்த வாக்கியத்தின் முதல் பாகத்தை மாத்திரமே நான் படித்தேன். பாருங்கள், இங்கு ஒன்று எழுதப்பட்டிருந்தது. கடிகாரத்தைப் பார்த்துவிட்டு... அதை துரித மாக முடிக்க எண்ணினேன், பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கு நிறுத்துவதைக் கண்டீர்களா? மகிமை! பாருங்கள். அதன் மற்ற பாகத்தை நான் படிக்கவில்லை. பாருங்கள். நான் இங்கு வைத்திருக்கிறேன். பாருங்கள். ''அவர்கள் புதிய பாட்டைப் பாடினார்கள்'' என்று படித்து விட்டு நிறுத்திவிட்டேன். பாருங்கள். ஆனால் இங்கு பாருங்கள், “ஏனெனில்..... சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை மீட்டுக்கொண்டு”. நிச்சயமாக. அவர்தாம் அது... என்னே, ஓ! என்னே! ஓ, என்னே! ஓ, என்னே! பாருங்கள். வேறொரு கேள்வியும் இங்கு உள்ளது. 129வெளிப்படுத்தல் 6:11ல் வெள்ளை அங்கி கொடுக்கப்பட்டவர்களுடன் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்கள் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர்களை ஒப்பிட முடியுமா? இப்பொழுது இதைப் பார்க்கலாம். வெளிப்படுத்தல் 6... ஜனங்களே, நான் துரிதமாகச் செல்லமுடியாது. அவ்வளவுதான்.... பாருங்கள், ஏனெனில் நான் தவறாகப் பதில் கூற நேரிடும். இப்பொழுது அப்படி நான் செய்ய அவர் விரும்பவில்லை. அது உண்மை . எனவே எனக்கு உதவி செய்யும். அது உண்மையென்று தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் அறிவார். பாருங்கள் நான் ஏதோ... ஒன்று... நான் கடிகாரத்தைப் பார்த்தேன். 11-30 ஆகியிருந்தது. ''நான் துரிதமாகச் செல்லாவிட்டால், வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்ய முடியாது'' என்று எண்ணினேன். அதை நான் பெற்றுக்கொள்ள முயல்கிறேன். ஏனென்றால் நான்... என் சிந்தை... என்னால் முடியவில்லை. நீங்கள் யோசித்துப் பாருங்கள், இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது நான் ஒரு மனிதன் பாருங்கள், அங்கு நான் ஏழு நாட்கள் இருந்திருக்கிறேன். இன்று மத்தியமும் எனக்கு வேறேயுள்ளது. நான் தேவனிடத்தில் அறிந்துகொள்ளவேண்டும். 130நான் அந்த தவறைச் செய்யக் கூடாது என்று அவர் தீர்மானம் செய்திருந்தப்படியால், அந்த வாக்கியத்தில் எஞ்சியுள்ள பாகத்தை நான் மறுபடியும் படிக்கக் கட்டளையிட்டார். என் மீது ஏதோ ஒன்று உருண்டு, ''திரும்பிச் செல்; திரும்பிச் செல்!'' என்று கூறினது. நான், “எதற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்? இப்பொழுது நிறுத்தி விட்டு, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க வேண்டுமா? இது என்ன? நான் என்ன செய்து விட்டேன்?'' என்று நினைத்துக் கொண்டன். நான் அந்த வசனத்தை எடுக்கவேண்டும் என்று நினைத்த அதே சமயத்தில் யாரோ ஒருவர், ''அந்த வசனத்தை மறுபடியும் படியுங்கள்“ என்றார். அதை நான் படித்தபோது, அந்த கேள்வியின் கடைசி பாகத்தின் விடை காணப்பட்டது. பாருங்கள், ”வெளிப்படுத்தல் 6'' பாருங்கள், அதை நான் முதலில் படித்தபோது, அது அவ்விதம் தோன்றவில்லை ''அவர்கள் புதிய பாட்டைப் பாடினார்கள்'' ஆனால் அதற்குக் கீழுள்ளது என்ன? -அதற்கு அடுத்து வருவது, “எங்களை மீட்டுக் கொண்டீர்''. நிச்சயமாக அது மணவாட்டி - எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள். ”உங்களால்“. இங்கு... நிச்சயமாக ஆட்டுக்குட்டியானவர் புஸ்தகத்தை கையில் வைத்திருந்தார். அவர் அப்பொழுது மத்தியஸ்த கிருபையின் சிங்காசனத்தை விட்டு வந்து விட்டார். பாருங்கள்?. பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கவனித்து வருகிறார் என்பதைப் பார்த்தீர்களா? அதையேதான் நான் அன்றிரவும் கூறினேன். 131அவர் என்னுடன் அறையில் பேசி முடித்தவுடன், நான் இங்கு வந்து உங்களிடம், ''ஆட்டுக்குட்டியானவர் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு வந்தபோது'' ஓ, என்னே! என்று எல்லாவற்றையும் பிரசங்கித்தேன். அதையே ஒரு பொருளாகக் கொண்டு பேசலாம் என்று நம்புகிறேன். பாருங்கள், “ஆட்டுக்குட்டியானவர் தமது சிங்காசனத்தை விட்டு புறப்பட்டு வந்து விட்டார்...'' அந்த ஒளி, கிறிஸ்து, அவர் அங்கு பிரசன்னமானபோது, நான் எழுந்து நின்றேன். அவர் பிரசன்னமான போது என்னிடம் அதைக் கூறினார். மத்தியஸ்தராயிருந்த ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டவுடன், இங்கு கீழே வருகிறார், சபைக்கு மீட்பின் நாள் முடிவடைகின்றது. 132திறக்கப்படும் அடுத்து மீட்பு யூதர்களுக்கு, 1,44,000 பேர்களுக்கு. அது சரியா? ஏனெனில் அவர் மரத்தை வெட்டப் போவதாக வாக்களித்துள்ளார். உங்களுக்கு தெரியும். இப்பொழுது இங்கு அவர் ஆட்டுக்குட்டியானவர்- புறப்பட்டு வருகிறார். பின்பு மீட்பின் நாள் முடிவடைகின்றது. மீட்கப்பட வேண்டியவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்ட புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ளனர். அவர் இங்கு புஸ்தகத்தைத் திறக்கிறார். சரி! ஓ, நன்றி கர்த்தாவே, பாருங்கள்? ஒன்றைத் துரிதமாக முடிக்க முயன்ற உம் நடுக்கமுள்ள ஊழியக்காரனை மன்னிப்பீராக! இப்பொழுது, வெளிப்படுத்தல் 6:11ல் அங்கிகள் கொடுப்பட்டவர்களுடன் ஒப்பிடமுடியுமா? அதைப் பார்க்கலாம் (6:11) சரி, எதைக் குறிப்பிடுகிறார்? அவர் வெள்ளை அங்கிகள்... ஆம், பீடத்தின் கீழுள்ள உயிர்த்தியாகம் செய்தவர்கள்? காலத்திற்கிடையேயுள்ள யூதர்கள், “அவர்களுக்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டன.'' வெளிப்படுத்தல் 7:11ல் கூறப்பட்டுள்ள, தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்களுடன்..... 133இல்லை, அவர்கள் வித்தியாசமானவர்கள், நிச்சயமாக, ஏனெனில் அவர்களுக்கு ''வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டதாக அங்கு பார்த்தோம். அவர்களுக்கு கிருபையாக வெள்ளை அங்கிகள் அளிக்கப்படுகின்றன. இவர்களோ தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தனர். இவர்கள்தாம் 'சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜாதிகளிலுமிருந்து வந்து, தேவனுக்கு முன்பாக உள்ள திரளான கூட்டம்'. அது சரி. ஆனால் இவர் களோ இரத்த சாட்சிகளாக மரித்த யூதர்கள், நீங்கள் பாருங்கள். இப்பொழுது, இது சரியாக உள்ளது. இப்பொழுது, 134சகோதரன் பிரான்ஹாமே, தேவபக்தியுள்ள அனைவரும் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்று விட்டால், எலியாவும் மோசேயும் எங்கிருந்து வருவார்கள்? அவர்கள் யூதர்களாயிருப்பார்களா? அல்லது எங்களுக்கு அளிக்கப்பட்ட எலியா அவர்களுடன்கூட இருப்பாரா? இல்லை, புறஜாதிகளை அழைப்பதற்கென இந்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட புறஜாதி மனிதன் எடுக்கப்படுவார். ஏனெனில் முழு சபையும்- எல்லாருமே எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். 11-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் அப்பொழுது கீழே கொண்டு வரப்படுகின்றனர். புறஜாதியாருக்கு கிருபையின் காலம் முடிவடைந்து, அது யூதர்களுக்கு அனுப்பப்படுகின்றது. இல்லை, இவ்விருவரும் ஒரே மனிதன் அல்ல என்று நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். இது என்னுடைய அறிவுக்கு எட்டினவரை, என்று நினைவு கூருங்கள். இது என்ன சொல்லுகிறதென்று பார்ப்போம். கேள்வி “கோதுமையும் திராட்சரசமும்” ஓ, அதுவா...'' கோதுமை. இல்லை, “அது என்ன..'' என்று நான் யூகிக்கிறேன். ''என்ன'' என்பது அங்கே இல்லை. அது இதைத்தான் கூறுகின்றது. 135வெளிப்படுத்தல் 6:6ல் உள்ள கோதுமையும் திராட்சரசமும்... அந்த வேதவாக்கியத்தைப் படிக்கும்போது, அது என்னவென்பதை அறிந்து கொள்ளலாம். ''அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமை யென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமை யென்றும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும் நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.“ அவர்கள் “கோதுமையையும் திராட்சரசத்தையும் குறிப்பிடுகின்றனர் போலும்! அது ஒன்றோடொன்றுள்ள தொடர்பு அது. கொரிந்தியர் 11:24ல் கூறப்பட்டுள்ள இராப்போஜனம் மேசையில் நாம் அருந்தும் திராட்சரசத்துக்கு அடையாளமாயுள்ளதா? இல்லை. ஒன்று ஆவிக்குரிய அடையாளம், மற்றொன்று தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டைக் குறிக்கின்றது. 136நாம் கர்த்தருடைய சரீரத்தை நிதானித்து அறியாததே அநேகர் வியாதியுள்ளவர்களாக இருப்பதற்கு காரணமாயிருக்கலாம் அல்லவா? (உண்மை) ஆறாம் முத்திரை திறக்கப்பட்டதால் அது இப்பொழுது வெளிப்பட்டுள்ளதே... இப்பொழுது இதைப் பார்க்கலாம், இதைப் புரிந்துகொள்ள முடியுமா என்று நான் பார்க்கட்டும். நீங்களல்ல, நான் தான். நீங்கள் சரியாகத்தான் அதை எழுதியிருக்கிறீர்கள்; நான் தான். நாம் இதுவரை கர்த்தருடைய சரீரத்தை சரிவர நிதானித்து அறியாததே அநேகர் வியாதியுள்ளவர்களாக இருப்பதற்கு காரணமாயிருக்கலாம் அல்லவா? (அதன் முடிவிலே ஒரு கேள்விக்குறி உள்ளது.) சரி, “கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், அநேகர் வியாதியுள்ளவர்களும் பலவீனருமாயிருக்கிறார்கள்'' என்று வேதவாக்கியம் கூறுகின்றது. அது முற்றிலும் சரி. ஏனெனில், கர்த்தருடைய சரீரம் என்பது மணவாட்டியாகும், பாருங்கள்? அநேகர் வழிதவறிச் சென்றுவிடுகின்றனர். அதனுடன் அவர்கள் செல்வதில்லை. அது உண்மை. பாருங்கள், எவ்விதம் நடந்துகொள்ள வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையும் வாழ்ந்துவிட்டு, இராப்போஜனத்தில் பங்குகொள்கின்றனர்-அது சரியல்ல, பாருங்கள்? பொய் சொல்பவரும், களவு செய்பவரும், மது அருந்துபவரும் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளும்போது... அது மிகவும் பயங்கரம். நீங்கள் அப்படிச் செய்யக்கூடாது, பாருங்கள்? 137...ஆறாம் முத்திரை திறக்கப்பட்டதால் அது இப்பொழுது வெளிப்பட்டுள்ளதே. ''ஆறாம் முத்திரை திறக்கப்படுதல்.'' இதை நாம் பார்க்கலாம். இல்லை, இப்பொழுது ஆறாம் முத்திரை திறக்கப்பட்டபோது அது யூதர்களுக்கென்று நாம் பார்த்தோம். பாருங்கள்? சபை ஏற்கனவே சென்று விட்டது. அது உபத்திரவ காலம். எனவே அது ஒன்றாயிருக்காது. இல்லை, இல்லை. இவையிரண்டும் ஒன்றில்லை. ஒன்று ஆவிக்குரிய திராட்சரசம்-அதுதான் தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுதல். தேவனுடைய வார்த்தை வெளிப்படுவதனால் விசுவாசி ஊக்கமடைகிறான். மற்றொன்று இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் அடையாளமாயுள்ளது. அது கர்த்தருடைய இராப்போஜன மேசையில் அருந்தப்படுகின்றது. எனது புரிந்துகொள்ளுதலின்படி, இதுவே சரியான விடையாகும். 138முன்குறிக்கப்படாத எவராவது கர்த்தரை ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படிச் செய்தால், அவர்கள் விழுந்து போவார்களா? அவர்கள் முன்குறிக்கப்படாதிருந்தால் முடியாது; இல்லை பாருங்கள், அவர்களால் முடியாது. 139கத்தோலிக்க மார்க்கம் யூதர்களை ஏமாற்றி அவர்களுடைய செல்வத்தை எடுத்துக்கொள்ளும் என்று காண்பிக்கும் வேதவாக்கியம் எங்குள்ளது? இப்பொழுது “மிருகம் செல்வத்திற்காக ஏமாற்றும் என்று எங்கு கூறப்பட்டுள்ளது?'' அது அவ்விதம் உரைக்கவில்லை. ஆனால் நாங்கள் அவ்வாறு ஊகிக்கின்றோம். அன்றிரவு, உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா.. ஒலி நாடாவைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் அதைத்தான் செய்வார்கள் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. நான் கூறினேன். பாருங்கள், கத்தோலிக்கர்கள் உலகத்திலேயே அதிகச் செல்வம் படைத்த குழு- அவர்களைப்போல் யாருமில்லை. அவர்களிடம் இல்லாதவை, யூதர்களிடம் உள்ளன. இன்று நாட்டின் பொருளாதாரமே அங்குதான் இருக்கின்றது. 'லைஃப் லைன்' என்னும் செய்தித்தாளின்படி, நாம் இப்பொழுது வரிப் பணத்தைக் கொண்டு ஜீவனம் செய்துகொண்டு வருகிறோம். (வாஷிங்டன் டி.சியிலிருந்து வரும் வரிப்பணத்தைக் கொண்டு) அது இன்னும் நாற்பது வருடங்களில் திரும்பச் செலுத்தப்படவேண்டும். அதைத்தான் இப்பொழுது நாம் செலவு செய்துக்கொண்டு வருகிறோம். அவ்வளவு பின்னால் நாம் இருக்கிறோம்... இன்னும் நாற்பது வருடங்களில் செலுத் தப்படவேண்டியவைகள். நாடு பணமற்று விட்டது. 140இப்பொழுது, காஸ்ட்ரோ (Castro) செய்த புத்திசாலித்தனம் என்னவெனில், அவன் பணநோட்டுகளை அச்சடித்து, அதைக்கொடுத்து, பாண்டு (Bond) பத்திரங்களைத் திரும்பி வாங்கிக்கொண்டு அதை எரித்துப் போட்டு, இவ்விதம் நோட்டுகளை மாற்றிக்கொண்டான். அது ஒன்றே அவனால் செய்ய முடிந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் செய்ய வேண்டியதும் ஒன்றே ஒன்றுதான். இது வில்லியம் பிரான்ஹாம் பேசுவது என்று ஞாபகங் கொள்ளுங்கள். இது என்னுடைய கருத்து. இயற்கையாக ஆலோசிப் போமானால், அது ஒருக்கால் லட்சக்கணக்கான மைல்கள் விலகியிருக்கலாம்-அந்தப் பணத்தில்.. என்று நம்புகிறேன்... பொருளாசை எல்லாத்தீமைக்கும் வேராயிருக்கிறது. அதுதான் காரியங்களைத் தொடங்கிவிடும் என்று நம்புகிறேன். இப்பொழுது கத்தோலிக்க சபை, ஆராதனை (Mass) போன்றவைகளுக்காக பணம் வாங்குகின்றது. உலகத்தின் செல்வத்தை அதனிடம் வைத்துள்ளது. ''அவள் ஐசுவரியமுள்ளவள்“ என்று வேதம் கூறுவது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? ஒரு தேசத்தில் மாத்திரமல்ல, வானத்தின் கீழுள்ள எல்லா தேசங்களிலும் அவள் ஐசுவரியமுள்ளவளாயிருக்கிறாள். அவள் பரவியிருக்கிறாள். அவளிடம் செல்வமுள்ளது. அவளிடம் இல்லாதது, யூதர்களின் ஆதிக்கம் கொண்ட 'வால் தெருவில் (Wall Street) உள்ளது. 141இப்பொழுது, யாக்கோபு திரும்பி வந்தபோது அவனிடம் பணமிருந்தது என்று சென்ற இரவு நாம் பார்த்தோம். அவன் இஸ்ரவேல் ஆனான்-அவனிடம் உண்மையாகவே பணம் இருந்தது. அனால் அவன் ஏசாவிடம் அதன் மூலம் எதையும் பெறமுடியவில்லை. ஏசாவிடம் பணம் இருந்தது பாருங்கள், முன்னடையாளமும் அதன் நிறைவேறுதலும் பிழையின்றிப் பொருந்துகின்றது. இப்பொழுது இங்கே கவனியுங்கள். அவர்கள் பணத்தையெல்லாம் ஒன்றாகச் சேர்க்க விரும்புவார்கள் என்றும், ரோம ஆதிக்கம் உடன்படிக்கையை முறித்துப் போட்டு, யூதர்களின் பணத்தை அபகரிக்கும் என்றும் கூறினேன். ஒருக்கால் அப்படி நிகழாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் உடன்படிக்கையை முறித்துப் போடுவார்கள் என்று மாத்திரம் எனக்குத் தெரியும். என்ன காரணத்தினால் என்று எனக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு வெளிப்படுத்தப் படவில்லை. ஆனால், கவனியுங்கள். இன்றைக்கும். நாம் இன்றைக்கு செய்ய வேண்டிய ஒரே காரியம் ... நாம் வரிப்பணத்தை எடுத்துக் கொண்டு.. அது நாற்பது வருடத்தில் அது திரும்பச் செலுத்தப்படவேண்டுமென்று... பாருங்கள், நம்முடைய தங்கம்... அதை நாம் செலவழித்து விட்டோம். நாம் திவாலாகி விட்டோம். நம்மிடம் பணமில்லை. நம் முடைய முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டே நாம் வாழ்ந்து வருகிறோம். 142சபையும் அதையே இன்று செய்து வருகின்றது- மணவாட்டியல்ல. சபையும் சிங்கத்தின் காலத்தின் ஊழியத்தில் பெற்ற ''நாங்கள் சபை, நாங்கள் தாய் சபை, நாங்கள் தொடங்கினோம்.''... அது உண்மை, பாருங்கள்? அது முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டு வாழத்தலைப் படுகின்றது. மெதோடிஸ்டுகளும் அவ்வாறே முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பாப்டிஸ்டுகளும் முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பெந்தெகொஸ்தரும் தங்கள் “தேவனுக்கு மகிமை'' என்பதனால் வாழத்தலைப்படுகின்றனர். அநேக ஆண்டுகளுக்கு முன்பு, பரிசுத்தவான்கள் ஆவியில் நடனமாடுவார்கள். ''கர்த்தர் இதைச் செய்தார், அதைச் செய்தார்' என்றெல்லாம் சாட்சியாகக் கூறுவார்கள். அவை முன்காலத்தில் நிகழந்தவை. ”இப்பொழுது நாம் பெரியவர்களாகிவிட்டோம். சகோதரனே'' ஓ என்னே! பாருங்கள்? - எல்லாம் முன்காலத்தில் பெற்றிருந்த நன்மதிப்பு. 143இந்த தேசமும், அதன் முற்பிதாக்கள் என்னவாயிருந்தனர் என்னும் முன்காலத்து நன்மதிப்பைக்கொண்டே வாழ்ந்து வருகின்றது. அதன் காரணமாக அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று நினைக்கின்றனர். இஸ்ரவேலர் முன்காலத்தில் என்னவாயிருந்தனர். என்பதற்கு தேவன் மதிப்பு கொடுக்கவில்லை. அக்காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதையே அவர் பார்த்தார். கவனியுங்கள், இதுதான் நடக்கும் என்று நினைக்கிறேன். ஒருக்கால் அது அப்படியில்லாமலிருக் கலாம். இந்தப் பிரச்சனையை, நினைக்கிறேன் நாம் பண நோட்டுகளை மாற்றுவதற்குப் பதிலாக... அது 'பிலிப மாரிஸ்'ஸுக்கு என்ன செய்யும்? விஸ்கி கம்பெனிகளுக்கு அது என்ன செய்யும்? எஃகு தொழிலுக்கு அது என்ன செய்யும்? வணிகத்துறை அனைத்திற்கும் அது என்ன செய்யும்? அது அவர்களை உடைத்துப் போடும். அவர்கள் பணமற்றவர்களாகி விடுவார்கள். “அப்பொழுது நாம் அந்தப் பணத்தை கடன் வாங்கினால்”... அவன் எவ்வளவு சாமர்த்திய முள்ளவன், பாருங்கள்? அப்பொழுது தேசமானது சபைக்கு விற்கப்படும். சபையும், தேசமும் மறுபடியுமாக இணைக்கப்படுகின்றது. அங்கேதான் அவள் (கத்தோலிக்க சபை - தமிழாக்கியோன்) வருகிறாள். பாருங்கள்? அதுவே தான். கவனியுங்கள். சரி. இப்பொழுது, இதில். 144ஒருவன் நமது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தாபனத்தில் இருந்து கொண்டே, அவனுடைய மன சாட்சி கூறுபவைகளை அல்லது இக்கடைசி கால சத்தியத்தை எடுத்துரைத்தால், அவன் “வேசியாகக்” கருதப்படுவானா? ஒருவன்... ஸ்தாபனத்தில் இருந்து கொண்டே ... இப்பொழுது நாம் பார்ப்போம், சரி, ஸ்தாபனங்கள், பாருங்கள்... ஸ்தாபனங்களுக்கு பேச்சுரிமை அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ளது. பாருங்கள்? அதற்கும் ஒருவனுடைய இருதயத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. பாருங்கள்? ஒருவன் உண்மையான விசுவாசியாக, தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறந்தவனாக இருந்தால், என்றாவது ஒரு நாள் அவன் பேசக் கூடாதப்படி தடை பண்ணப்படுவான். பாருங்கள்? அது அவ்வளவு வெளிப்படையாக இருப்பதால், அவனால் அதைக் கண்டு கொள்ளாமலிருக்க முடியாது. 145இப்பொழுது நண்பர்களே, நீங்கள் இதை நினைவில் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். எனக்குத் தெரிந்தவரைக்கும், தேவன் எக்காலத்திலும்... ஒன்றைச் செய்ததில்லை... பாருங்கள். கவனியுங்கள், இயேசுவே அதற்கெல்லாம் பிரதானமாயிருந்து வந்துள்ளார். ஏனெனில் அவர் தேவன். அவர் மாம்சரூபம் கொண்ட இம்மானுவேல். இப்பொழுது, இந்த நபர் இயேசுவைப் பாருங்கள். அவர் இவ்வுலகிற்கு வந்தபோது- நான் நினைக்கிறேன்-இவ்வுலகிலிருந்த பத்தில் ஒரு பாகம் பேர்கூட அவர் இவ்வுலகிலுள்ளதை அறிந்துக் கொள்ளவில்லையென்பது உங்களுக்குத் தெரியுமா? மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், மற்றவையெல்லாம் சம்பவிக்கும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட முன்னோடி இவ்வுலகில் தோன்றினபோது, இஸ்ரவேல் ஜனத்தொகையில் நான் நினைக்கிறேன், நூறில் ஒரு பாகம்கூட அதை அறிந்துக் கொள்ளவில்லை யென்பது உங்களுக்குத் தெரியுமா? அது விசித்திரமாயில்லையா? 146ஏன், யூதர்களும் இதர ஜனங்களும் உலகம் முழுவதும் அப்பொழுது இருந்தனர். இவ்வுலகின் இரட்சகர் அவர் என்று சாட்சி கொடுக்க இயேசு தோன்றினார் என்பது நினைவிருக்கட்டும். அது சரியா? ஏன் ஜனங்களுக்குப் பின் ஜனங்கள், ஜாதிகளுக்கு பின் ஜாதிகள் அநேகர் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. ஆயினும் இவ்வுலகில் அது நடந்து கொண்டேயிருந்தது. பாருங்கள்? அவர் ஏன் மற்றவர்கள் அதை அறிந்து கொள்ளச் செய்யவில்லை? அவர் வந்தார்; நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவர் மாத்திரமே அவரை ஏற்றுக் கொண்டனர். மற்றவர்களுக்கு இதைக் குறித்து அறிவிப்பதால் எவ்வித உபயோகமுமில்லை. ஏனெனில் அவர்களை அவர் மீட்டிருக்க முடியாது; அவர்கள் மீட்கப்படத்தக்கவர்கள் அல்ல. ஏன் அந்த ஆசாரியர்கள் அங்கு நின்று கொண்டிருந்தபோது... அவர் ஏன் அந்த இடத்திற்கு வரவேண்டும்? ஏனெனில் முன்குறிக்கப்பட்டவர்கள் அங்கு சுற்றிலும் இருந்தனர். எனவே ஒரு குழுவுக்கு அவர் பிரசங்கம் செய்ய நேர்ந்தது. அவர் யாரென்பதை அறிந்திருக்க வேண்டிய மகத்தான பண்டிதர்கள், “இந்த மனிதன் பெயல்செபூல். இவன் எங்கள் மேல் ஆளுகை செய்வதையும், மற்றவைகளையும் விடமாட்டோம்'' என்றெல்லாம் கூறினர். ஆனால் ஒரு சிறிய வேசி- அவளுக்குள் ஜீவன் இருந்தது, அவள் நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவளாயிருந்தாள். அவளுடைய பெயர் அழியமுடியாததாய் இங்கே தேவனுடைய வார்த்தையில் இருந்தது. தேவனுடைய வார்த்தை அவளிடம் நடந்து சென்றபோது, அவளுக்குள் இருந்த வித்தின் மேல் முதன்முறையாக வெளிச்சம் பட்டது. அவள் உடனே அறிந்துக் கொண்டாள். (சகோதரன் பிரான்ஹாம் தன் விரலை ஒருமுறை சொடுக்கினார் - ஆசி) 147கவனியுங்கள், அந்த மீன்பிடிப்பவன் அங்கு வந்தான். இயேசு அங்கு அநேக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து அநேகருடைய இருதயங்களிலுள்ள இரகசியங்களையறிந்து கூறி, தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆகவே, என்னே, அங்கே பரியேசர்கள் நின்று கொண்டிருந்தனர். “இந்த மனிதன் பெயல்செபூல்'' என்றனர். அவர்கள் சபையோருக்கு அவர்கள் பதில்கூற வேண்டியவர்களாயிருந்தனர். சபையார் அங்கு நின்று கொண்டு, ''டாக்டர் ஜோன்ஸ் அவர்களே, அங்கு சென்று இந்த மனிதன் கூறுவதைக் கேட்பீர்களா? அவர் என்ன பேசுகிறார் என்பதை அறிந்தவராக இருக்கிறார். அவர் ஒரு சாதாரண மனிதனைப்போல் பேசவில்லை'' என்றனர். “அவர் பேசுவதை நான் கேட்பேன்” அவர் அங்கு நடந்து சென்றார். பாருங்கள், ஆம். தேவன் அப்படிப்பட்டவருக்குள் வரமுடியாது. இயேசு அங்கு நின்று கொண்டு, அவர் கூறினார். அவர்கள், 'பாருங்கள், பாருங்கள் அங்கு ஒரு மனிதன் வருகிறான்... அதோ அவருடைய சீஷர்களின் ஒருவன்... அங்கு ஒரு மனிதன் வருகிறான். அவன் பெயர்.... அந்திரேயா.. அங்கிருக்கும் செம்படவர்களை உங்களுக்குத் தெரியுமல்லவா? பாருங்கள்? அது அவர்கள்தான். ஆம், அது அவனுடைய சகோதரனாகிய சீமோன். அவர்கள் அந்த வயோதிப யோனாவின் குமாரர்கள். கவனியுங்கள். அவன் வேறுயாரையே அவரிடத்தில் கொண்டு வருகிறான். அது யார்? ஆம். அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்! அடுத்த படியாக ஒருவன் அவர் அருகாமையில் வருகிறான்“ என்றார்கள். அவர், ”உன் பெயர் சீமோன்; நீ யோனாவின் குமாரன்“ என்று கூறினார். 148ஆனால் பரிசேயர் போன்றவர்களோ, ''இந்த மனிதன் பெயல்செபூல். பாருங்கள்? அவன் மீது ஒருவகையான ஆவி தங்கியுள்ளது. அவன் விசித்திரமானவன். பாருங்கள்? அவன் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டாம். அதைவிட்டு அகன்றுச் செல்லுங்கள். அவன் நடத்தும் வேறு எந்த கூட்டத்துக்கும் நான் இனிமேல் வரமாட்டேன். இது முடிந்தவுடன் நாம் இங்கிருந்து சென்று விடுவோம். நாம் மறுபடியும் இங்கே வரவே மாட்டோம்'' என்றெல்லாம் கூறினர். பாருங்கள்? ஏன்? அவ்விதமாகவே அவர்கள் அவரைக் கருதினர். பாருங்கள், அவர் யாரிடம் வந்தாரோ அவர்கள்தான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். பாருங்கள்? ஆனால் எல்லாரும் உதைத்துத் தள்ளிய வேசி அங்கிருந்தாள். நான் வேசித்தனத்தை ஆதரிப்பதாக எண்ணவேண்டாம். இல்லவே இல்லை. முன்குறிக்கப்பட்ட வித்தை நான் உங்களுக்கு எடுத்துக் காண்பிக்கிறேன். 149இந்த மீன் பிடிப்பவனைப் பாருங்கள். அவன் படிப்பறியாதவன் என்று வேதம் உரைக்கின்றது. அது சரியா? அது மாத்திரமல்ல. அவன் பேதைமையுள்ளவன்! அது சரியா, தவறா? நாம் அறிந்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அநேக காரியங்களைக் குறித்து நாம் மாத்திரம் பேதமையுள்ளவராயிருந்தால்! பாருங்கள்? சரி பாருங்கள்? அவன் பேதமையுள்ளவனும் படிப்பறியாதவனுமாயிருந்தான்! அவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சமூகத்திற்கு நடந்து சென்றான். அவன் யாரென்று இயேசு பகுத்தறிந்து கூறினார். அந்த நேரத்திலேயே அது முடிவு பெற்றது. இப்பொழுது அதைக் குறித்து தர்க்கம் செய்யும் மற்றவனைக் கவனியுங்கள். ''பாருங்கள், அவன் விசுவாசித்தான். அவன் யாரென்று கவனியுங்கள். அவன் யார் தெரியுமா? நல்லது, அந்த மனிதன் ஒரு போதும்... அவன் ஒரு செம்படவன். அவனுக்கு மொழியின் முதல் அட்சரங்களாகிய ABC கூட தெரியாது. அவனிடம் நான் மீன் வாங்கியிருக்கிறேன். ரசீதில் கையொப்பமிடக்கூட அவனுக்கு தெரியாது. அப் படிப்பட்டவர்கள்தான் இத்தகைய காரியங்களுக்கு செவிகொடுப்பார்கள்.'' கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென். பாருங்கள்? ''அவனுக்கு... அவனுடைய தகப்பனாரைப் பாருங்கள். அவனும் பேதமையுள்ளவன். அவன் மகனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேயில்லை'' ஆனால் அப் படிப்பட்ட ஒருவனை தேவனே தம் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி, அவர் விரும்பும் முறையில் அவனைப் படிக்க வைக்கிறார். 150பள்ளிக்கூடத்திற்குப் போகாதிருப்பதை நான் ஆதரிக்கவில்ல. நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என்ற நம்புகிறேன். அந்த பள்ளிக் கூடங்களில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதைக் குறித்து அதை உதாரணமாக மாத்திரம் கூறுகிறேன். பாருங்கள், அத்தகைய காரியங்கள்-அது அவர்கள் தலைகளுக்குமேல் செல்வதன் காரணமும் அதுவேதான். உங்களுக்குத் தெரியுமா? நாட்டில் இருந்த யூதர்களில் மூன்றில் ஒருபாகம்கூட அவர் வந்திருப்பதை குறித்து அறிந்திருக்கவில்லை. அந்த மூன்றில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகம் மாத்திரமே அவருடைய பிரசங்கங்களைக் கேட்டனர். அந்த ஐந்தில் ஒரு பாகத்தில் நூறில் ஒருபாகம் மாத்திரமே அதை ஏற்றுகொண்டனர். அவருக்கு எத்தனைப்பேர் இருந்தார்க ளென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அனைவரிலும் பன்னிரண்டு பேர் மாத்திரமே அவருக்கு சிலுவையினண்டையில் இருந்தனர். மற்ற வர்கள் எங்கே? பாருங்கள்? அந்த எழுபது பேர் சென்று விட்டார்கள். 151இப்பொழுது அவர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தி தமது போதகத்தைக் குறித்து ஒன்றும் சொல்லாமலிருந்த சமயங்களில்... அவர் வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தினவராய் சுற்றித் திரிந்தார். ஓ, என்னே! அது அவர் மேல் தங்கியிருந்த தேவனுடைய ஆவியாகும். அதை நீங்கள் நம்புகிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் -ஆசி) அவர் வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தினபோது, ”அற்புதம்'' என்று எல்லோரும் பாராட்டினார்கள். “ரபீ, அது மிகவும் மகத்தான காரியம். சகோதரரே, நீங்கள் அவரை உங்கள் சபைக்கு அழைக்கவேண்டும். வல்லமையைக் குறித்து நீங்கள் பேசினால், அந்த மனிதன் உண்மையாகவே வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தும் வல்லமை கொண்டிருந்தார்” என்றெல்லாம் அவரைப் பாராட்டினார்கள். சரி, போலியாட்கள் எழும்பத்தான் செய்வார்கள். இதோ அவர்கள் வருகிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு குழுவும் உங்கள் சொந்த மனிதரைக் கொண்டிருக் கவேண்டும். இதோ அவர் வருகிறார். முதலாவது நடந்தது என்னவென்றால், ஒருநாள் அவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். ''ரபீ, நாங்கள் உம்முடன் வர மனதாயிருக்கிறோம்.' 152“சரி, உட்காருங்கள். நாம் போகலாம்.'' அவர் எழுபது பேர்களை அனுப்பினார். ஒருநாள், ஒரு மகத்தான அற்புதத்தை அவர் செய்த பின்பு, அவர் உட்கார்ந்து அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை விவரிக்கத் தொடங்கினார். ''ஏழாம் தூதனின் சத்தத்தின்போது...'' சரி, அவர் அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை-சத்தியத்தை எடுத்துரைக்கத் தொடங்கினார். அவர்கள், ''ஆ ஆ ஆ சற்று பொறுங்கள் இதைக் குறித்து எனக்குத் தெரியாது. இது எங்கள் போதங்களுக்கு முரணாய் அமைந்துள்ளது'' என்றனர். அவர்கள் மேலும், “சரி, நாம் தேவாலயத்தை விட்டு விட்டு (Synagogue) வந்தோம். சகோதரரே, ஒருக்கால் நாம் தவறு செய்திருக்கக் கூடும். நாம் திரும்பச் சென்று விடுவது நல்லது. ஏனெனில் இந்த மனிதன் புதிர் போட்டு பேசுகிறார். அவர் ஒரு விசித்திரமான மனிதன். அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை'' என்றனர். பாருங்கள்? அது என்ன? -ஆரம்பத்திலேயே அந்த வித்து முன் குறிக்கப்படவில்லை. அது உண்மை . முதலில் அவர்கள் செய்தது என்னவென்றால், அவர்கள் போதகர் குழு ஒன்றை அமைத்து, அந்த போதகர்களிடம் பேசினார்கள். அவர்கள், “ஆ ஆ ஆ, உம்ம்ம்ம் , நாம் திரும்பி போய்விடுவது நல்லது. நாம் திரும்பிச்சென்று நமது ஸ்தாபனங்களை அடைந்து, நமது பத்திரங்களை மீண்டும் எடுத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட ஒரு மனிதனை யார் புரிந்துகொள்ளக்கூடும்? இங்கு ஒருவிதமாகவும் அங்கு ஒருவிதமாகவும் அவர் கூறுகிறார்'' என்றார்கள். 153அவர்கள் (மற்றவர்கள்) அதை அவ்விதமாகப் புரிந்து கொள்ளவில்லை. சிலரிடம் அவர் உவமைகளாகப் பேசினார். மற்றவர்களிடம் அல்ல . எனவே அவர்கள் சென்று விட்டார்கள். அப்பொழுது அவர் திரும்பி, அங்கு நின்றுகொண்டிருந்த பன்னிருவைரையும் நோக்கி, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?'' என்று கேட்டார். இப்பொழுது கவனியுங்கள், பேதுரு, “உங்களுக்குத் தெரியுமா? அந்த இடத்தில் நான் சென்றிருந்தேன். நான் வேறு எங்கு செல்ல முடியும்? உலகில் வேறெந்த இடத்திற்கு நான் செல்ல முடியும்? உலகத்தின் குப்பைகள் நிரம்பிய அந்த குப்பை களத்திற்கு நான் மறுபடியும் செல்ல முடியாது. பாருங்கள்? வேறெங்கு நான் செல்வேன்? என்னால் முடியாது” என்றான். அப்பொழுது இயேசு, “அப்படியானால் சரி, என்னுடன் வா'' என்றார். பார்த்தீர்களா? இருபத்தைந்து லட்சம் மக்களிடையே பன்னிரண்டு பேர் மாத்திரமே. கோடிக்கணக்கான மக்களுள்ள உலகத்திற்கு இரட்சகர், ஆனால் இன்னும் தாழ்மையுள்ளவர். பாருங்கள். தாழ்மை யுள்ளவர்களாயிருங்கள்; தாழ்மையில் நிலைத்திருங்கள், கவனியுங்கள், இப்பொழுது பரிசேயர் அனைவரும் இருந்தபோதிலும், அந்த வேசி அங்கு வந்து ''நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வருவாரென்று அறிவேன். அவர் வரும்போது இவைகளைச் செய்வார்“ என்றாள். இயேசு, ''நானே அவர்'' என்றார். அவள், ''ஆம், அது உண்மை '' என்று கூறிவிட்டு சென்று விட்டாள். அவளை ஒருமுறையாவது நிறுத்திப்பாருங்கள்; உங்களால் முடியாது. 154சகோதரன் பிரான்ஹாமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல்கள். மத்தேயு 22:11ல் உள்ள மனிதன் யாரென்பதை விளக்கமாய்க் கூறுங்கள் - அதாவது கலியாண வஸ்திரம் தரிக்காத மனிதன்..... கல்யாண வஸ்திரமில்லாமல் இந்த மனிதன் பரலோகத்திற்குச் செல்ல முடியாது என்று நானறிவேன். அவன் விருந்தாளியென்று எனக்குத் தெரியும்: மணவாட்டியல்ல. ஆம் அது சரி, அவன் என்ன நடக்கின்றதென்பதைக் காண மெல்ல உள்ளே நழுவிச் சென்றான். பாருங்கள்? கவனியுங்கள், அதைக் குறித்து ஒரு முழு பிரசங்கமே செய்யலாம். வியாதியஸ்தர்களுக்கு ஜெபம் செய்து முடிக்க எனக்கு பத்து நிமிடங்கள் மாத்திரமேயுள்ளது. நான் இன்னும் கேள்விகளில் பாதிகூட முடிக்கவில்லை. கவனியுங்கள். இந்த கேள்விகளுக்குப் பின்பு மற்றெல்லாவற்றையும் துரிதமாக முடிக்கப் போகின்றேன். பாருங்கள்? 155இதுதான் நடந்தது, நீங்கள் கிழக்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்களை அறிந்திருப்பீர்களானால், பாருங்கள்? ஒரு மணமகன் தன் விவாகத்திற்காக அநேக அழைப்புகளை அனுப்புகிறான். அவன் அனுப்பியுள்ள ஒவ்வொரு அழைப்பிற்கும், அவன் ஒரு ஆளை ஒரு அங்கியுடன் கதவண்டையில் நிற்கக் செய்கிறான் அழைப்புக்கிணங்கி வருபவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் ஏழையாயிருந்தாலும், பணக்காரராயிருந்தாலும், யாராயிருந்தாலும் அவர்கள் அனைவருமே அந்த கலியாண வஸ்திரத்தை தரித்துக் கொள்ளவேண்டும். அந்த ஆட்கள் கதவண்டையில் நின்றுகொண்டு, கலியாணத்துக்கு வருபவர்களுக்கு அங்கியை உடுத்துவித்தனர். அவனுடைய வெளிதோற்றத்தை அது மறைத்து. அவன் கோடீசுவரனாக இருந்தாலும் சரி, ஒன்றுமேயில்லாத மிகவும் ஏழ்மையானவனாக இருந்தாலும் சரி, விவசாயியாக இருந்தாலும் சரி, குழி வெட்டுபவனாயிருதாலும் சரி, இராஜகுடும்பத்து தனவந்தனாயிருந்தாலும் சரி (Plutocrat) அவர்களெல்லாரும் அந்த அங்கியை அணிந்தவராக இருந்தனர். வாசலில் நுழையும் முன்பு, அது அவனுக்கு அணிவிக்கப்படுகிறது. 156இப்பொழுது யோவான் 10-ம் அதிகாரத்தைப் பாருங்கள், அந்த அதிகாரம்தான் என்று நினைக்கிறேன். “நானே வாசல்” என்று அவர் அங்கு கூறியுள்ளார். பாருங்கள்? (யோவான் 10:9) “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால்...'' கலியாணத்திற்கு வருபவன் வாசலண்டை நிற்கிறான். அங்குள்ள மனிதன் அவனுக்கு அங்கியைபரிசுத்த ஆவியை - அணிவிக்கிறான். அவன் நுழையும்போது நீதியின் வஸ்திரத்தை அவனுக்குத் தருகிறான். இப்பொழுது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் மனிதன் ஏதோ ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவன். அவன் பக்கவழியாக நுழைந்துஜன்னலின் வழியாகவோ அல்லது நுழையக்கூடிய ஒரு துவாரத்தின் வழியாகவோ நுழைந்து - மேசையை அடைந்து அங்கு உட்கார்ந்துவிட்டான். மணவாளன் இங்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்தபோது... வித்தியாசமான வாத்துக்கள் முன்புண்டாயிருந்தன. இப்பொழுது இவன் வித்தியாசமான வாத்தாக இருக்கிறான். பாருங்கள்? “பரிசுத்த ஆவியின் அபிஷேகம், இன்னும் மற்றவை, இல்லாமல் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்? நீ எப்படி உள்ளே வந்தாய்?'' என்று கேட்கிறான். எப்படியோ அவன் பக்கவழியாக நுழைந்து வந்தான். சரியான அழைப்பில்லாமல் அவன் வந்துவிட்டான். பாருங்கள்? அவன் கல்விமுறை போன்ற வழியில் வந்து உள்ளே நுழைந்துவிட்டான். “அவனைக் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள்'' என்று அவர் கட்டளையிட்டார். பாருங்கள்? அவன் உபத்திரவகாலத்திற்குள் சென்று விடுகிறான். பாருங்கள்? அவன் வாசலின் வழியாக உட்பிரவேசிக்கவில்லை. ஆகவே, சரி. கேள்வி: 157மல்கியா 4ல் கூறப்பட்ட எலியாவும். வெளிப்படுத்தல் 11:3ல் உரைக்கப்பட்ட எலியாவும் ஒருவரா? மற்ற இரண்டு சாட்சிகளும் வெவ்வேறு நபர்களா? ஆம். மல்கியா 4-ன் எலியா மல்கியா 3-ன் எலியாவல்ல. அதை நாம் நேற்றிரவு பார்த்தோம். ''மற்ற இரண்டு சாட்சிகளும் வெவ்வேறு நபர்களா?'' ஆம் ஐயா, இரண்டு பேர்களும், எனக்குள்ள வெளிப்பாட்டின்படி அவர்கள் மோசேயும் எலியாவும்; இதில் அதிக நேரம் நிலைத் திருக்க விரும்பவில்லை. 158இராஜாக்கள் 19 - (சகோதரன் பிரான்ஹாம், நான் நம்புகிறேன்)பாகாலுக்கு முன்பாக முழங்காற் படியாதவரின் எண்ணிக்கை... ஆம் அது சரி. நன்றி, எழுநூறு பேருக்கு பதிலாக... உமக்கு நன்றி. அது சரியாக உள்ளது. ஏழாயிரம் பேருக்கு பதிலாக எழுநூறு... “சகோதரன் பிரான்ஹாம்...'' எழுநூறுக்குப் பதிலாக ஏழாயிரம் இப்பொழுது அதை கவனித்தீர்களா? 159பாருங்கள் ஒரு மனிதன் எவ்விதம் பிரசங்கம் செய்ய வரும்போது... நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். எலியா வனாந்திரத்திலிருந்து வந்தபோது, அவனிடம் ஒரு செய்தி உண்டாயிருந்தது. அவன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு நேரடியாக ராஜாவினிடம் சென்று, “என் வாக்கின்படியே அன்றி வானத்திலிருந்து பனியும் கூட பெய்யாதிருக்கும்'' என்றான். அந்த வார்த்தையே அவனுக்கு உண்டாயிருந்தது. அதைக் கூறிவிட்டு மற்ற யாரிடமும் வேறொன்றையும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டான். பாருங்கள். வேறொரு செய்தி அவனுக்குண்டானபோது, அவன் புறப்பட்டு வந்து, அந்தச் செய்தியை உரைத்துவிட்டு திரும்பவும் வனாந்திரத்துக்கு சென்று விட்டான். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், நான் இந்த கூடாரத்திற்கு மூலைக்கல்லை நாட்டினபோது அவர், ''ஒரு சுவிசேஷகனுடைய ஊழியத்தைச் செய்'' என்று கூறினார். அந்த ஊழியம் என்னை விட்டு எடுக்கப்பட்டு, வேறொன்று நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றது. நான் இங்கு வந்து... பாருங்கள், சுவிசேஷகனின் ஊழியத்தை செய்து, மற்ற ஏதோ ஒன்றைச் செய்து, நீங்கள் எதுவரைக்கும் வந்திருக்கிறீர்கள் என்று கண்டு கொண்டிருக்கிறேன்! பாருங்கள்? நீங்கள்... ஓ, இதை புரிந்துகொள்ள சபை போதிய அளவுக்கு ஆவிக்குரியதாயிருக்குமென்று எதிர்பார்க்கிறேன். 160சகோதரன் பிரான்ஹாமே, எலியா மூன்று முறை வர வேண்டுமென்று அறிகிறேன். அவன் ஏற்கனவே இரு முறை வந்து விட்டானென்றும், அவன் மறுபடியும் வருவானென்றும் நீர் கூறுகின்றீர். அந்த எலியாவின் ஆவியைத் தன்மீது கொண்டுள்ளவன், இரண்டு பேர்களாகிய மோசே, எலியா என்பவர்களில் ஒருவனாக இருப்பானா? இல்லை, இல்லை, அவன் புறஜாதி சபைக்கு அனுப்படும் புறஜாதியாயிருப்பான், பாருங்கள். தேவன் தமக்கு சொந்தமானவர்களிடமே எப்பொழுதும் அனுப்புகிறார் பாருங்கள் “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.'' அவர் எப்பொழுதும் அந்நேரத்தின் செய்தியையே அனுப்புகிறார் தேவன் யூதர்களுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எந்த புறஜாதி தீர்க்கதரிசியும் அப்பொழுது தோன்றவில்லை. அவ்வாறே தேவன் புறஜாதிகளுடன் தொடர்பு கொள்ளும்போது, யூத தீர்க்கதரிசிகள் வருவதில்லை. தேவன் மறுபடியுமாக யூதர்களிடம் திரும்பும்போது, புறஜாதி தீர்க்கதரிசிகள் இருக்கமாட்டார்கள். பாருங்கள்? நான் கூறுவது புரிகின்றதா? சரி. எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழ்ந்த பின்பு..... ஆம். ஒன்றிலிருந்த மற்றொன்றிற்கு மாறுவதற்கு முன்பாக ஒரு இடை சமயம் உண்டாயிருக்கும் - ஒரு செய்தியிலிருந்து வேறொரு செய்திக்கு போவதற்கு முன்பு நான் உங்ளுக்கு ஏற்கனவே விவரித்துக் கூறினவிதமாக! பவுல் புறஜாதிகளிடம் சென்றது போன்று. சரி 161எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழ்ந்த பின்பு, எடுத்துக்கொள்ளப்படுதலில் பங்கு கொள்ளாத சபை ஏதாவது முடிவில் இரட்சிக்கப்படுமா? இல்லை, ஊஹும், ஏனெனில் இரத்தம் போய்விட்டது. பாருங்கள். அப்பொழுது பரிந்து பேசுதல் இராது - புறஜாதியாரின் காலம் முடிவடைந்து விட்டது, எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழ்ந்த பின்பு, எந்த ஒரு சபையும் இரட்சிப்படைய முடியாது. ஊஹும் சபை... 'அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.'' பாருங்கள்? சபை எடுக்கப்பட்ட பின்னர் அப்படியொன்றும் நிகழாது. 162சகோதரன் பிரான்ஹாமே, முதலாம் முத்திரையின் பிரசங்கத்தில் தானியேலின் எழுபது வாரங்களைக் குறித்து நீங்கள் குறிப்பிடுவதை நான் கவனித்தேன். தானியேலைக் குறித்த ஒலிநாடாவில், சுவிசேஷம் யூதர்களிடம் திரும்பும்போது, எழுபது வாரங்கள் தொடங்கும் என்பதாக அறிகிறேன். யூதர்களுக்கு ஒரு வாரம்- ஏழு வருடங்கள் விடப்பட்டுள்ளதா? அல்லது வாரத்தின் பாதி மாத்திரமே - மூன்றரை ஆண்டுகள் - விடப்பட்டுள்ளதா? 163சகோதரன் பிரான்ஹாமே, வியாதியஸ்தர்களுக்காக இவ்வாரம் நீங்கள் ஜெபம் செய்யாததால், நீங்கள்..... அது ஒரு வேண்டுகோள். 164சகோதரன் பிரான்ஹாமே, ஆராதனைக்குப் பிறகு என்னைச் சற்று காண்பீர்களா? அது ஒரு வேண்டுகோள். 165சாத்தான் ஆயிர வருஷம் கட்டப்பட்டு, வெளிப்படுத்தல் 20:8ல் கூறப்பட்டுள்ள யுத்தத்திற்காக அவிழ்த்து விடப்படுவதைக் குறித்து தயவுசெய்து விவரிக்கவும். இதற்கும் நான்காம் முத்திரையில் கூறப்பட்டுள்ள அர்மெகதோன் யுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்? புதிய பூமியிலுள்ள மனிதர்களிலிருந்து கோகும் மாகோகும் சேர்க்கப்படுவார்களா? நல்லது, இது நீண்ட ஒன்றாகும். நான் அதை ஆணித்தரமாகக் கூறவேண்டும். ஒருக்கால் என்னால் சரிவர இதை விவரிக்கக்கூடாமல் இருக்கலாம். என்னால் இயன்றவரை விவரிக்கிறேன். சாத்தான் ஆயிர வருஷம் கட்டப்பட்டு, வெளிப்படுத்தல் 20:8ல் கூறப்பட்டுள்ள யுத்தத்திற்கு அவிழ்த்து விடப்படுவதைக் குறித்து தயவு செய்து விவரிக்கவும். 166அது அர்மெகதோன் யுத்தம் அல்ல. அந்த யுத்தம் இந்தப் பக்கத்தில் நடக்கிறது (அதாவது ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு என்று குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்) - உபத்திரவ காலம் முடிவடைந்தவுடன். கோகு மாகோகு யுத்தத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. ஒன்று ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு, மற்றொன்று ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பின்பு. நான்காம் முத்திரையில் கூறப்பட்டுள்ளபடி, புதிய பூமியில் வாழும் மக்களினின்று கோகும் மாகோகும் சேர்க்கப்படுவார்களா? சாத்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பொல்லாதவர் அனைவரையும் ஒன்று கூட்டி இந்த இடத்திற்கு அழைத்து வர புறப்பட்டுச் செல்கிறான், தேவன் அப்பொழுது வானத்திலிருந்து அக்கினியையும் கல் மழையையும் வருஷிக்கச் செய்கின்றார்: அவர்கள் எரிந்து போயினர் ஆக மொத்தம் இரண்டு யுத்தங்கள். கேள்வி: 167ரோமன் கத்தோலிக்க சபையினரால் கொல்லப்பட்ட ஆறு கோடியே எண்பது இலட்சம் பேர், சரித்திரத்தில் எந்த சமயத்தில் கொல்லப் பட்டனர்? அது எவ்வளவு காலம் நீடித்தது? ஸ்மக்கர் என்பவர் எழுதியுள்ள 'மகிமையான சீர்திருத்தம்'' என்னும் புத்தகத்தை வாசியுங்கள். சில கல்விமான்கள் அதை வைத்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன். அது சபையின் சரித்திரமாகும். அது எந்தப் பக்கத்திலுள்ளது என எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அது ஆப்பிரிக்காவிலுள்ள ஹிப்போ நாட்டவரான பரி. அகஸ்டின் என்பவரால் தொடங்கப்பட்டு சபைக்கு அளிக்கப்பட்டது. அது கி.பி. 354ல் தொடங்கி கி.பி 1850 வரை, அயர்லாந்தில் நேர்ந்த படுகொலை வரை நீடித்தது. அது அதனுடைய காலம் கி.பி.33 அல்லது கி.பி.30... 354. இப்பொழுது நான் அதைச் சரியாகக் கூறட்டும். கி.பி.3-5-4லிருந்து கி.பி.1-8-5-0, 1850 வரை. ரோமாபுரியுடன் போப்பாண்டவருடன் இணங்காத காரணத்திற்காக ஆறு கோடியே எண்பது இலட்சம் பிராடெஸ்டுண்டுகள் கொல்லப்பட்டனர் என்று ரோமரால் 'இரத்தச் சாட்சிகளின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இது சரித்திரமாகும். அது தவறென்று நீங்கள் கூறமுற்பட்டால், நீங்கள் ஜார்ஜ் வாஷிங்டன் அல்லது லிங்கன் என்பவர்கள் இல்லவே இல்லை என்றும்கூட கூறலாம். ஏனெனில் அதைக் காண நாம் அப்பொழுது பிறக்கவில்லை. அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தனர் என்று நம்புகிறேன். அவர்கள் இருந்தார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. 168சகோதரன் பிரான்ஹாமே, 1 இராஜாக்கள் 19:18ம் வசனத்தில் “ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம் பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்” என்று எழுதப்பட்டுள்ளதே! அந்த எழுநூற்றைக் குறித்து தயவுசெய்து விவரிக்கவும். அது ஏழாயிரம்தான், பாருங்கள். அவர்கள் “பாகாலை முத்தம்'' செய்வதில்லை. இங்குள்ள உங்களில் எத்தனை பேர் முன்பு கத்தோலிக்கராயிருந்தீர்கள்? நிச்சயமாக. பாருங்கள்? நீங்கள் சிலைகளை முத்தம் செய்திருப்பீர்கள்? பாருங்கள்? 169பாபிலோன், நேபுகாத்நேச்சார் காலத்தில், புறஜாதி ராஜ்யம் உண்டாயிருந்தபோது, ஒரு மனிதனை வழிபடும் வழக்கம் இருந்து வந்தது. நேபுகாத்நேச்சார் ஒரு மனிதனின் சொரூபத்தை உண்டாக்கினான். உங்களுக்கு ஆவிக்குரிய சிந்தை இருக்குமானால்... இந்த வெளிப்பாட்டை கவனமாய்க் கேளுங்கள். அவன் தனக்குக் கிடைத்த வெளிப்பாட்டின்படி தானியேலின் சொரூபத்தை உண்டு பண்ணினான். பக்தியுள்ள ஒரு மனிதனை வழிபடுதல். பார்த்தீர்களா? ஏனெனில் தானியேலுக்கு அவன் பெல்தெஷாத்சார் என்று பெயர் சூட்டினான் அல்லவா? அதுவே அவனுடைய தெய்வத்தின் நாமமாயிருந்தது. அந்த தெய்வத்துக்கு அவன் சொரூபத்தை உண்டு பண்ணினான்-அதுவே தானியேலின் சொரூபமாகும். தானியேல் தன் சொந்த சொரூபத்துக்கு முன்பாக வணங்க மறுத்தான். பாருங்கள்? பாருங்கள்? அதே வழக்கம் மறுபடியும் நம்மிடையே உள்ளது. இப்பொழுது கவனியுங்கள். நேபுகாத்நேச்சார் என்னும் அரசனின் மூலமாய் பாபிலோனின் நாட்களின் புறஜாதி ராஜ்யம் தோன்றினது. இந்த அரசன் பரிசுத்தமுள்ள மனிதன் ஒருவனின் சிலையை உண்டு பண்ணி, ஜனங்களெல்லாரும் அதை வணங்கவேண்டுமென்று நிர்ப்பந்தம் செய்து, சபையையும் அரசாங்கத்தையும் ஒருங்கே இணைத்தான். புறஜாதி ராஜ்யம் சொரூபத்தின் பாதங்களில் முடிவடைகிறது. கையெழுத்து சுவரில் தோன்றினது. அப்பொழுது அரசியல் ஆதிக்கம் சபையையும் அரசாங்கத்தையும் ஒன்றுபடுத்தி சிலைகளை முத்தம் செய்ய நிர்ப்பந்தம் செய்தது - பரிசுத்த மனிதனின் சிலை, உண்மையாக. 170சகோதரன் பிரான்ஹாமே, எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும்போது, சரியானவைகளுக்கும் தவறானவைகளுக்கும் வித்தியாசம் அறியாத இச்சிறு பிள்ளைகள் அதில் செல்வார்களா? அவர்களுடைய பெயர்கள் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால், அதுசரி. பாருங்கள்? சரி. 171சகோதரன் பிரான்ஹாமே, எலியாவின் பிரசங்கத்தின் மூலம் எழுநூறு பேர் இரட்சிக்கப்பட்டனர் என்று சென்ற இரவு கூறினீர்கள். நீங்கள் அர்த்தம் கொண்டது ஏழாயிரம் பேர் அல்லவா? ஆம், அது சரி. அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். அது சரி. நான் அவ்விதம் கூறினேன். சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் வியாக்கியானம்... நீங்கள் திறந்த பிறகு... சகோதரன் பிரான்ஹாம் காலம்... மன்னிக்கவும், “காலமானது...'' இப்பொழுது இது உங்களுக்கல்ல. இது எனக்கு, பாருங்கள். 172சகோதரன் பிரான்ஹாமே நீங்கள் ஏழாவது முத்திரையைத் திறந்த பிறகு, கிருபையின் காலம் முடிவு பெறுமா? இல்லையென்று நம்புகிறேன். இல்லை, இல்லை. நண்பர்களே, அவ்விதக் கருத்தை உங்கள் சிந்தையில் கொள்ளவேண்டாம். பாருங்கள்? நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். உருளைக் கிழங்கு தோண்டுங்கள். சபைக்குச் செல்லுங்கள். இவ்விதம் தொடர்ந்து சென்றுக் கொண்டிருங்கள். அது இன்று காலை சம்பவிக்குமானால் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிருப்பவர்களாக காணப்பட வேண்டும். ஆரம்பிக்க வேண்டாம்... அவ்விதம் நீங்கள் வியாக்கியானம் செய்தால், அது எதற்கென்று குறிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை அவமாக்குபவர்களாவீர்கள். அதைப்பற்றிச் சில விசித்திரமான உங்கள் சொந்த கருத்துக்களை உண்டாக்கிக் கொள்ளவேண்டாம். நீங்கள் அமர்ந்திருந்து அத்தகைய காரியங்களைக் கேட்கும்போது, ''நன்றி, கர்த்தாவே, நான் இன்னும் சற்று அருகாமையில் உம்முடன் நடக்கப் போகிறேன்“ என்று கூறுங்கள். பாருங்கள்? நீங்கள் செய்யும் வேலையிலிருந்து நின்று விட்டு, ''நான் எல்லாவற்றையும் விற்றுவிடப் போகின்றேன்” என்று கூற வேண்டாம். நாங்கள் இங்கிருந்து செல்வதற்குச் சற்று முன்பாக, ஒருநாள் வடக்கு கரோலினாவிலிருந்து ஒரு மனிதன் என்னிடம் ஓடோடி வந்து, “தேவனுக்கு மகிமை! அந்த மகத்தான இன்னார் எங்கிருக்கிறார் என்று தெரியுமா?'' என்று வினவினார். நான் ”எனக்குத் தெரியாது,'' என்று விடையளித்தேன். 173“ஓ, ஆம் ஐயா. அவர் ஆடியோ மிஷன் (Audio mission) நிர்வாகத்தின் தலைவர்'' என்றார் அவர். நான், “எது?'' என்று கேட்டேன். அவர், ”ஆடியோ மிஷன்“ என்றார். நான் ”எனக்குப் புரியவில்லை'' என்றேன். அவரோ, “ஓ, இந்த மனிதர் அதற்குத் தலைவர்'' என்றார். நான் “அவருடைய பெயர் என்னவென்று சொன்னீர்கள்?'' என்று கேட்டேன். அவர், ''ப்ரெளன் (Brown) அல்லது பிரான்ஹாம் (Branham) என்று நம்புகிறேன்'' என்றார். “என்னுடைய பெயர்தான் பிரான்ஹாம்'' என்று பதிலளித்தேன். ''நீங்கள் ஆடியோ மிஷனின் தலைவரா'' என்று அவர் கேட்டார். நான், 'இல்லை, ஐயா'' என்றேன். அவர், 'இப்பொழுது ஆயிரம் வருட அரசாட்சி எங்குள்ளது?'' என்று வினவினார். நான், 'எனக்குத் தெரியாது' என்று விடையளித்தேன். அவர், “அது இப்பொழுது இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதை அறியாமலிருக்கிறீர்கள்' என்றார். நான், ''இல்லை, ஐயா எனக்குத் தெரியாது'' என்று கூறினேன். அவர், “தேவனுக்கு மகிமை, சில நண்பர்கள் என்னிடம் வந்து அதைக் குறித்துக் கேட்டனர். நான் வேலையை விட்டுவிட்டேன்.'' அவர் இன்னும் வேலை உடையை அணிந்திருந்தார். ''சகோதரனே, எனக்கு ஆயிரம்வருட அரசாட்சி தேவை'' என்றார். நான், ''நீங்கள் சற்று குழப்படைந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படித்தானே, சகோதரனே?'' என்று கேட்டேன். அந்தச் சமயத்தில் ஒரு வாடகை கார் வந்தது. அதனுள் அமர்ந்திருந்த பெண்மணி. ''நிறுத்து, நிறுத்து நிறுத்து“ என்று ஓட்டுநரிடம் கூறினாள், ஒரு சிறு பெண்மணி காரை விட்டு வெளியே வந்து என்னிடம், ”நீங்கள் என் கணவருக்காக இப்பொழுது ஜெபிக்க வேண்டும்'' என்றாள். நான், “சரி அம்மா, அவருக்கென்ன?'' என்றேன். அவள், ''நல்லது உங்களைப் பேட்டி கண்டு ஜெபம் செய்து கொள்ள வேண்டுமானால், ஒரு மாத காலம் செல்லும் என்று கேள்விப் பட்டேனே?'' என்றாள். நான், “என்ன?” என்று கேட்டேன். அவள், “ஆம், ஐயா நான் பதட்ட நிலையிலிருக்கிறேன். நீங்கள் கண்டிப்பாக என் கணவருக்காக ஜெபம் செய்யவேண்டும்” என்றாள். நான், 'நிச்சயமாக. அவர் எங்கிருக்கிறார்? அவரைக் கொண்டு வாருங்கள்“ என்றேன். இந்த மனிதன் அங்கு நின்றுகொண்டு நடந்தவைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் என்னிடம், “நீங்கள் வியாதியஸ்தருக்காகவும் ஜெபிப்பதுண்டா ?'' என்று கேட்டார். நான், 'ஆம், ஐயா'' என்று பதிலளித்தேன். “உங்கள் பெயர் என்னவென்று கூறினீர்கள், பிரான்ஹாம் அல்லவா? உங்களுக்கு ஆயிரம் வருட அரசாட்சியைக் குறித்து ஒன்றும் தெரியாதா?'' என்று அவர் கேட்டார். நான், ''சரி நான் ... இல்லை, எனக்குத் தெரியவில்லை. வேதத்திலிருந்து அதை என்னால் சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை'' என்றேன். அவரோ, ''அது இங்கே இருக்கின்றது. ஜனங்கள் எல்லாவிடங்களிலுமிருந்து வந்திருக்கின்றனர்“ என்றார். நான், “எந்த இடத்தில் அது இருக்கின்றது?” என்று கேட்டேன். அவர், ''இங்குதான் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லில் அந்த பாலத்தின் கீழ்'' என்று பதிலுரைத்தார். “ஐயா, நீங்கள் என்னை திகைக்க வைத்துவிட்டீர்கள். எனக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியாது. நாம் உள்ளே போய் சற்று அமருவோம். வேண்டுமானால் நாம் இதைக் குறித்து பேசலாம்” என்றேன். நண்பர்களே, நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் ஒருக் காலும் ஒரு ஊழியத்திற்காக ஆசைப்படவேண்டாம். பாருங்கள்? நான் கூறுவது உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் இருக்கும் இடத்திலேயே மிகவும் மகிழச்சியுள்ளவர்களாயிருப்பீர்கள். பாருங்கள்? நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். 174மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்டபிறகு, உபத்திரவத்தின் வழியாக போக வேண்டியுள்ள சபையானது எப்போது நியாத்தீர்ப்பு பெறுகிறது? (அது நியாயத்தீர்ப்புக்கு வருவதில்லை). அது ஆயிர வருஷ அரசாட்சிக்கு முன்பா அல்லது அதற்குப் பிறகா? ''சபைக்கு.'' ஓ, என்னை மன்னியுங்கள் யார் இதை எழுதினீர்களோ, அவர்கள் என்னை மன்னிக்கவும். ''சபையானது எப்போது...'' மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, உபத்திரவத்தின் வழியாக போக வேண்டியுள்ள சபையானது எப்போது நியாயத்தீர்ப்பு பெறுகிறது? அது ஆயிர வருஷ அரசாட்சிக்குப் பிறகா அல்லது அதற்கு முன்பா? பிறகு. மணவாட்டியோடு செல்லாதவர்கள், ''மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.'' நாம் பார்ப்போம். 175கம்யூனிஸம் (பொது உடைமைக் கொள்கையானது) நேபுகாத்நேச்சார் இராஜாவைப் போல, தேவனால் தம்முடைய நோக்கம் நிறைவேறத்தக்கதாக எழுப்பப்பட்டதென்று நீங்கள் அநேக முறை சொல்லியிருக்கிறீர்கள். கடைசியில் உண்டாகப்போகும் உலக நிலையில் கம்யூனிஸம் எந்த ஸ்தானத்தில் பொருந்தும்? அது எவ்விதம் முடிவடைகிறது? வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வட திசை இராஜ்ஜியங்களாகிய கோகும் மாகோகும் இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம் பண்ணப் போகும் என்று அநேக கல்விமான்கள் நம்புகிறார்கள். (அது என்ன வென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆம், ஆம்). கம்யூனிஸம் கடைசியில் கத்தோலிக்க ஸ்தாபனத்தை அல்லது வாடிகனை (ரோமாபுரியில் போப் வசிக்கும் அரண்மனையை, ஆட்சி முறையை - தமிழாக்கியோன்) வெடியினால் அழிக்கும் என சில ஒலிநாடாக்களில் நீங்கள் கூறியிருக்கிறீர்களென நம்புகிறேன். இது சரியா? ஆம். வெளிப்படுத்தின விசேஷம் 16, 18:8லும் 12-ம் அதிகாரத்திலும் நீங்கள் இதைக் காணலாம். இதை எழுதினவர் இங்கிருப்பாரானால், இங்கு அதைக் குறித்து உள்ள காகிதக் துண்டை எடுத்துக் கொள்ள விரும்புவாரானால்- நீங்கள் அதைக் காணலாம். ஆம் பாருங்கள்? ''ஆம்... ஐயையோ! மகா நகரமே... ஒரே நாழிகையிலே இவள் பாழாய்ப் போனாளே.'' பூமியின் வர்த்தகர்களும் மற்றவர்களும் அவளுக்கு சரக்குளை கொண்டு வந்திருந்தனர். அது அப்படியிருக்கும். அது சரி. கம்யூனிஸத்தைக் குறித்து மறந்துவிடுங்கள். பாருங்கள்? அது தேவனைப் பற்றிய எண்ணமில்லாத காட்டுமிரண்டித்தனமான ஒரு கூட்டமேயன்றி, உலகத்தில் வேறொன்றுமல்ல. அது ஒரு அமைப்பாகும்... அது எவ்வளவு சுலபம் என்பதைக் காட்ட, நான் உங்களுக்கு சிலதைக் காட்டட்டும். ஏன், முழு ரஷ்யாவிலுமே நூற்றில் ஒரு பங்கு மக்களே இந்த கம்யூனிஸத்தை (பொது உடைமைக் கொள்கையை) ஆதரிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு செய்தியாளன் தேவைப்படுகிறது. பாருங்கள்? ஒரே ஒரு சதவிகிதம்-அப்படியானால் இன்னமும் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் மக்கள் கிறிஸ்தவர்கள் பக்கம். ஒரே ஒரு சதவிகிதம்; ஒரு சதவிகிதம் ஜனங்கள் எவ்விதம் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் மக்களைக் கட்டுப்படுத்தக் கூடும்? இதுவே உங்களுக்குக் காரியத்தை விளங்க வைக்க வேண்டும். தேவன் அதை அனுமதிக்க வில்லையென்றால், அவர்கள் அநேக வருடங்களுக்கு முன்பாகவே அக்கொள்கையை வெளியே தூக்கி எறிந்திருப்பார்கள். பாருங்கள்? நிச்சயமாக. 176சகோதரன் பிரான்ஹாமே, கடைசி மூன்றரை வருடங்களில் ரோமாபுரியானது யூதர்களின் அரசாங்கத்தை எடுத்துக்கொள்ளும் என்று கூறினீர்கள். அது... உபத்திரவ காலத்தின் முதல் மூன்றரை வருடங்களா அல்லது கடைசி மூன்றரை வருடங்களா? இது சரியா? அது கடைசி மூன்றரை வருடங்களே, அது சரிதான், முதல் மூன்றவரை வருடங்களல்ல, ஏனென்றால் அது ஏற்கனவே கடந்து விட்டது. (இதற்குப் பிறகு இன்னொரு கேள்வியையும் பெற்றுள்ளேன்). 177எனது அருமை சகோதரனே, 1 இராஜாக்கள் 17 அதிகாரத்தில் எலியா தீர்க்கதரிசி செய்ததாகச் சொல்லப்பட்டிருப்பது போல மல்கியா 4:5ல் குறிப்பிடப்பட்டிருக்கும் எலியா தீர்க்கதரிசியும் வனாந்திரத்திற்குச் செல்வாரா? நல்லது, அவர் வனாந்திரத்திற்குப் போவார் என்று திட்டவட்டமாக கூறமாட்டேன். ஆனால் அவர் இவ்விதமாய் இருப்பார். பாருங்கள். அவர்... எலியாவும் எலிசாவுமாக இருந்தார். நீங்கள் கவனித்தீர்களா? அதைப் போன்ற மனிதர்கள் பெரும்பாலும் ஒதுங்கியே இருக்கிறார்கள் அவர்கள் மனிதர்களிடமிருந்து தள்ளியே ஜீவிக்கிறார்கள். அவர்களோ விநோதமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஜனங்களோடு அதிகம் கலவாதிருக்கிறார்கள். எலிசாவும், எலியாவும், யோவான் ஸ்நானனும் எப்படியிருந்தார்களென்றும் அவர்களிலிருந்த ஆவியின் தன்மையையும் கவனித்தீர்களா? அந்த மனிதன் வனாந்தரத்தை விரும்புகிறவனாக இருப்பான் என நம்புகிறேன். அவன் ஒருவேளை வனாந்தரத்தில் தங்குகிறவனாயிருக்கக்கூடும். அவன் ஒரு துறவியாக வனாந்திரத்திலேயே வாழ்பவனாக இருப்பானோ என்பதைக் குறித்து எனக்குத் தெரியாது. சில சமயங்களில் அவர்கள் அவ்விதம் வாழ்ந்தனர். எலிசா அவ்விதம் வாழவில்லை. ஆனால் எலியாவோ அவ்விதம் வாழ்ந்தான். பிறகு யோவானும்கூட வனாந்திரத்திலே வாழ்ந்தான். 178இந்த மற்ற தீர்க்கதரிசிகள் யூதேயாவிலிருந்து வரும்போது அவர்கள் எங்கே தங்குவார்கள் என்பது தெரியவில்லை. அதைச் சொல்வது கடினமான காரியம். அவர்கள் எங்காவது குன்றுகளில் தற்காலிகமாக தங்கக்கூடும். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைக்கின்ற அந்த நாட்களில் என்ன செய்வார்களென்று தெரியவில்லை. நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்றால், இதுதான் இருக்குமா... ''அவர்கள் வனாந்தரத்திலே வசிப்பவர்களாக இருப்பார்களா?'' என்று கேட்கப் பார்க்கிறார்கள். நல்லது, எங்காவது போதுமான காடுகளுள்ள வனாந்தரத்தை வசிப்பதற்கென்று தேடுவார்களென்றால், அவர்கள் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிற்குத்தான் போகவேண்டும். பார்த்தீர்களா? ஆகவே அது யாராவது... வனாந்தரங்களெல்லாம் அழிக்கப் பட்டுவிட்டன. பாருங்கள்? அதிகமான காடு விடப்படவில்லை. ஆகவே ஒரே காரியம், அவர்கள் வனாந்தரத்தை விரும்புகிறவர்களாகவும் ஒருவேளை அதிகமாக வனாந்தரத்தில் தங்குகிறவர்களாகவும் இருக்கக்கூடும். மேலும் அவர்கள்... அவர்களுடைய இயற்கைக் குணத்தைக் கவனிப்பீர்களானால், அவர்கள் விட்டுக் கொடுக்காதவர்களாக இருப்பார்கள். அது வரும்போது நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள். பாருங்கள்? நீங்கள் விழித்திருப்பீர்களானால் நீங்கள் அதைக் காண்பீர்கள். 179இப்பொழுது, இங்கே ஒரு கேள்வியிருக்கிறது. அதை எப்படி அணுகுவதென்று தெரியவில்லை. இன்னும் ஒரு கேள்வி என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்பிறகு ஒலி நாடாவை (ஒலிப்பதிவு செய்வதை) நிறுத்தச் சொல்லப் போகிறேன். தேவன் ஒரே ஆள் தத்துவம் உள்ளவராயிருந்தால், மறுரூபமலையில் அவர் ஏன், எப்படி தம்மிடமே பேச முடியும்? நல்லது, நான் இப்போதுதான் அதை விவரித்தேன். பாருங்கள்? நான் உங்களிடம் இதைக் கேட்க விரும்புகிறேன். நான்... இயேசுவானவர் பிதாவிடம் ஜெபித்தபோது, பார்த்தீர்களா... (சபையிலுள்ள ஒரு சகோதரனுடன் சகோதரன் பிரான்ஹாம் பேச ஆரம்பிக்கிறார் - ஆசி) நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இல்லையா, சகோதரனே? நீங்கள் ஒரு நிமிடம் எழுந்து நிற்கமாட்டீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவியின் ஆபிஷேகத்தை பெற்றிருப்பதாக உரிமை கொண்டாடுகிறீர்களா? (அந்த சகோதரன் 'ஆம் ஐயா'' என்று கூறுகிறார் - ஆசி) நானும் அப்படித்தான். அப்படியானால் அது என்ன? இந்த இரகசியங்களை வெளியாக்க என்னில் தானே வல்லமையை உடையவனாக இருப்பதாக நான் உரிமை கொண்டாடவில்லை. பிணியாளியை சுகமாக்கும் வல்லமை என்னிலே இல்லை. அது தேவன். (சகோதரன் பிரான்ஹாம் சபையிலுள்ள அந்த சகோதரனிடம் தொடர்ந்து பேசுகிறார் -ஆசி) நீங்கள் ஒரு ஊழியக்காரர் என்று நம்புகிறேன். நான் தவறாகக் கூறாவிட்டால், நீங்கள் ஆர்கன்ஸாஸிலிருந்து வருகிறீர்கள். நல்லது இப்பொழுது, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமென்னும் வாஞ்சை உங்களிலுள்ளது. சாதாரணமாக, நீங்கள் ஒரு பண்ணையிலும் அதைச் சுற்றியுள்ள இடத்திலும் வளர்க்கப்பட்டீர்கள். உங்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமென்று ஏதோ ஒன்று உங்க ளுக்குள் வந்தது. அது நீங்கள் ஆவியானவர் என்று அழைக்கப்படும் இன்னொருவர், அது சரியா? (ஆம், ஐயா) சரி. 180(சகோதரன் பிரான்ஹாம் சபையிலுள்ள அந்த சகோதரனிடம் தொடர்ந்து பேசுகிறார் - ஆசி). இப்போது உங்களைக் கேட்க விரும்புகிறேன். அந்த பரிசுத்த ஆவியானவர் உங்ளுக்குள்ளே வாசம் பண்ணுகிறார். அது சரிதானா? (அந்த சகோதரன், “அது சரி'' என்கிறார்) நீங்கள் அவருடன் பேசுகிறீர்களா? (”ஆம், ஐயா') சம்பாஷிக்கிறீர்களா? அவரிடம் ஜெபிக்கிறீர்களா? நல்லது அவ்வளவுதான் நான் விரும்பியது..... உங்களுக்கு மிக்க நன்றி, பாருங்கள்? இப்போது அதைப் புரிந்துகொண்டீர்களா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) உங்களை ஒன்று கேட்பேன்: ''பரலோகத்திலிருந்து இறங்கினவரும், பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனெயல்லாமல்'' என்று யோவான் 3-ம் அதிகாரத்தில் இயேசு எவ்வாறு கூறினார்.... (பாருங்கள்?) பரலோகத்தில் இருக்கிறார். இப்பொழுது பூமிக்கு வருவார்' பாருங்கள்? இப்பொழுது பரலோகத்தில் இருக்கிறவரான மனுஷகுமாரன்' என்று அவர் கூறியபோது இங்கே அந்த நபருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். இப்போது, நீங்கள் அதற்கு எனக்கு பதில் சொல்லுங்கள். இயேசுவும், பிதாவும் ஒரே நபர்தான். பரிசுத்த ஆவியானவர் என்னிலும் இருக்கும் விதமாகவே இயேசுவும் பிதாவானவரும் ஒரே ஆளாயிருந்தார். நான் பிரசங்கிப்பதை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது நானல்ல, ஒரு வார்த்தையைப் பேசி... உங்களுக்குத் தெரியும். ஒரு மிருகத்தை வரவழைக்கக் கூடியது நானல்ல; அங்கே உட்கார்ந்துக் கொண்டு அதைப் பார்த்து அம்மிருகத்தைக் கொன்று அதைப் புசிப்பது; அது சிருஷ்டிக்கும் வல்லமை; அது மனிதர்களிலே கிடையாது. 181மருத்துவர்களால் தன் முதுகின் மீது கிடத்தப்பட்டு இன்றிரவு இருதயக் கோளாறுடன் இருக்கும் ஒரு சிறு பையனை எடுத்துக்கொண்டு, 'வில்லியம் பிரான்ஹாம் உரைப்பதாவது' என்று என்னால் கூற இயலாது. இல்லை! 'கர்த்தர் உரைக்கிறதாவது', அது முடித்துவிட்டது. அவனை மறுநாளில் மருத்துவர்களிடம் அழைத்துக்கொண்டுச் செல்லும்போது வியாதி முற்றிலுமாய்ப் போய்விட்டிருக்கிறது. இரத்தத்தில் புற்றுநோயுடன் ஒரு சிறு பிள்ளை, கண்களெல்லாம் வீங்கிப் பெருத்துவிட்டிருந்தது. உடலெல்லாம் மஞ்சளாகி விட்டிருந்தது. வயிறும் கூட....அந்தப் பிள்ளையை இங்கு கொண்டு வருவதற்கும்கூட அதை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இரத்தம் கொடுப்பது முதலிய காரியங்களைச் செய்யவேண்டியிருந்தது! ஐந்து நிமிடம் கழித்து, சாப்பிடத் தனக்கு ஒரு ஹாம்பார் (ஒருவகைத் திண்பண்டம்-தமிழாக்கியோன்) வேண்டுமென அது அழுதது. அடுத்த நாள் அப்பிள்ளையை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது அதன் அடையாளம்கூட காணப் படவில்லை. அது வில்லியம் பிரான்ஹாம் உரைப்பதாவது' என்பதா? அது 'கர்த்தர் உரைப்பதாவது' என்பதாகும்! ஆனாலும் அவர் என்னிடத்திலும் வித்தியாசப்பட்ட ஒரு தனி நபராயிருக்கிறார். ஆயினும் அவர் தெரிவிக்கப்படும் ஒரேவழி என் மூலமாகும் ஓ. பாருங்கள்? அவ்வண்ணமாகவே இயேசுவும் பிதாவும்; 'கிரியைகளை நடப்பிக்கிறது நானல்ல, என்னில் வாசம் பண்ணும் பிதாவே இவைகளைச் செய்கிறார்“ என்று இயேசு கூறினார். இப்போது, ''பரலோகத்திலிருந்திறங்கினவரும், பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.'' பாருங்கள்? அது என்ன? அவர் சர்வவியாபியாயிருந்தார். ஏனென்றால் அவர் தேவனாயிருந்தார். 182இப்போது, இந்த மற்றொரு கேள்வி, நான்... (சகோதரன் பிரான்ஹாம் தன் விரலை ஒருமுறை சொடுக்குகிறார் -ஆசி) நான் இந்த வார்த்தைகளைக் கூறிட விரும்புகிறேன். நீங்கள் பேசிக்கொண்டிருந்ததைப்பற்றி விளக்கிக் கூறுங்கள்... (ஒலி நாடாவில் காலியிடம். சபையில் ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார்.) நன்றி பிதாவாகிய தேவனே- தேவரீர் ஆவியானவராக இங்கிருப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பிதாவே, ஒரு சமயம் சத்துருவானவன் வந்து கொண்டிருந்தபோது ஆவியானவர் ஒரு மனி தன் மீது வந்திறங்கி அவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்துக் கூறினார் என்று எங்களுக்கு உரைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் எவ்விதம் சென்று எதிரியை முறியடிப்பதென்றும், எதிரியை எங்கே கண்டுபிடிப்பதென்றும் அறிந்து கொண்டபடியினால் அது காரியங்களை ஒழுங்குபடுத்திற்று. 183பிதாவே, தேவரீர் எப்போதும் போலவே தேவனாகவே இருந்து வருவதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். தேவரீர் இன்னும் அதேவிதமாகவேயிருக்கிறீர். நாங்கள் மாறிப் போகிறோம், யுகங்கள் மாறுகின்றன. காலங்களும் மாறுகின்றன. ஜனங்களும் மாறுகிறார்கள். ஆனால் தேவரீர் ஒரு போதும் மாறுவதிலை. உம்முடைய முறைமைகள் மாறாதவைகளாயிருக்கின்றன. உம்முடைய கிருபையும் மாறாததாயிருக்கின்றது: உம்முடைய கிரியைகளும் மாறாதவைகளாயிருக்கின்றன. ஏனெனில் அவை அற்புதமானவைகளும், மனிதன் புரிந்துகொள்ளக் கூடாதபடி அவனுடைய எத்தகையை அறிவுக்கும் அப்பாற்பட்டவைகளுமாயிருக்கின்றன. ஆகவே, கர்த்தாவே, உம்முடைய இரகசியங்கள் உம்முடைய ஊழியக்காரர்களின் இருதயங்களில் மறைக்கப்பட்டிருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். அதற்காக, கர்த்தாவே, நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம். உமக்குரிய ஒவ்வொரு மீனையும் பிடிக்கும் நிச்சயத்துடன் ஒவ்வொருவரையும் கொண்டு வரத்தக்கதாக அன்புடன் பிரயாசப்படவும் நாங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பிரகாசிக்கும் விளக்குகளாகச் செல்லட்டும். தம்முடைய மணவாட்டியை ஆட்டுக்குட்டியானவர் எப்போதும் தம் பக்கத்திலிருக்கத்தக்கதாக, கொண்டு செல்வார். அந்த நேரத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம். ஆமென். 184எத்தனைபேர் வியாதியுள்ளவர்களாய் இங்கு உள்ளே இருக்கிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்ப்போம்? நல்லது, ஏறக் குறைய... உங்கள் கரங்களை மறுபடியும் உயர்த்துங்கள்.- ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரெண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது... (உயர்த்தப்பட்டுள்ள கரங்களை, சகோதரன் பிரான்ஹாமும் இன்னொரு வரும் தொடர்ந்து அமைதியாக எண்ணுகிறார்கள் - ஆசி) ஏறக்குறைய நாற்பத்து ஏழு பேர். சரி. இப்போது மணி 11-30 ஆகிறது. வியாதியஸ்தர்களுக்காக நாம் இப்போது ஜெபிக்கலாம். இரவு... நாம் அப்படிச் செய்வதை நீங்கள் விரும்புகிறீர்களா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் -ஆசி) 185நாம் அவ்விதம் ஜெபிக்க இதுவே நல்ல தருணம் என்ற நம்புகிறேன். ஏனென்று உங்களுக்கு கூறுவேன், பரிசுத்த ஆவியானவர் இங்கே உள்ளே நின்றுகொண்டு, அபிஷேகித்துக் கொண்டிருக்கிறார். இப்போது, நாம் அந்த ஆவியானவருக்குள், ஊடுருவிச் சென்றிருக்கும் வரை, ஏதோ ஒன்று இருப்பதைப் பார்க்கிறீர்கள், அந்த ஏதோ ஒன்றை நீங்கள் அறிவீர்கள். ஏதோ ஒன்று இங்கேயிருக்கிறது. நீங்கள் எப்பொழுதாவது விசுவாசிக்க கூடுமானால் இப்பொழுதுதான் விசுவாசிக்க வேண்டும். பாருங்கள்? நீங்கள் எப்பொழுதாவது விசுவாசிக்கப் போகிறீர்களென்றால், அது இப்பொழுதுதான். இப்பொழுது, நீங்கள் உண்மையிலேயே அமைதியாக வர விரும்புகிறோம். அந்த உட்பாதையில் அங்கேயிருப்பவர்கள், தங்கள் கரங்களை உயர்த்தியவர்கள், இந்தப் பாதைக்குள் வந்து, இந்த வழியாகச் செல்லட்டும், அப்போது நாங்கள் அவர்களை பாதை பாதையாக எடுத்துக் கொள்வோம்-நாற்பத்தைந்து அல்லது நாற்பத்து ஏழு பேர் மட்டுமே. அது அதிக நேரம் பிடிக்காது. என்னுடன் கீழே இறங்கி வரக்கூடுமா என்று சகோதரன் நெவில் அவர்களை கேட்டுக்கொள்ளப் போகிறேன். நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். முதலாவது, நடைபாதைக்குள் வருகிறவர்கள், ஒவ்வொருவரும் நாங்கள் உங்கள் மீது கரங்களை வைத்து உங்களுக்காக இங்கே ஜெபிக்கத்தக்கதாக இப்போது ஒரு நிமிடம் எழுந்திருங்கள். இப்பொழுது, அது சரி. அந்த ஜெப வரிசையில் வரப்போகிற ஒவ்வொருவரும் - ஜெப வரிசையில் வரப்போகிறவர்கள். இப்பொழுது, பாருங்கள், நாம் அதை நிச்சயமாய்ப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக நேரத்தை நஷ்டமாக்காமல் பாதுகாத்த வண்ணம், நாங்கள் இப்பொழுது உங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். 186கவனியுங்கள். நண்பர்களே, இப்பொழுது நான் இதை உங்களுக்கு விவரித்துக் கூறட்டும். இயேசுகிறிஸ்து இதைக் கூறினார் “இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களைப் பின்தொடரும்........” இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் அவர்களுக்காக ஜெபித்தால் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்கள் வியாதியஸ்தர்கள் மீது கைகளை வைத்தால், அவர்கள் சுகமடைவார்கள்' தன்னில் தானே விசுவாசிக்கக் கூடாதவளாய், நிச்சயமாய் இரத்தத்தில் புற்று நோய் உடையவளாய் இருந்த ஒரு சிறு பெண்ணை தேவன் எடுத்து அவளுக்கு பரிபூரண சுகம் கொடுக்கக் கூடுமென்றால்...... அடுத்ததாக அவர் ஒரு சிறு பையனை எடுத்து, அவனுக்கிருந்த கீல்வாத ஜுரத்தை அவனுடைய இரத்தத்திலோ அல்லது வேறு எதிலுமே மருத்துவர்கள் கண்டுபிடிக்கவும் முடியாதபடி அவர் அவனை சுகப்படுத்தக் கூடுமானால்-அவர் உங்களுக்கு என்ன செய்யக்கூடும்? இப்போதும் அந்தச் சிறிய பிள்ளைகள், ஜெபம் என்னவாய் இருக்கும் என்றும் அறியமாட்டார்கள். நான் அவர்கள் மீது கரங்களை மட்டும் வைத்தேன். அது காரியத்தை முடித்துவிட்டது. நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது, நீங்கள் ஜெபிப்பதற்காக நிற்கும்போது. 187பரலோகப் பிதாவே, தேவரீருடைய மகத்துவமான சமூகம் மகத்தான பரிசுத்த ஆவியானவராக இங்கிருக்கும்போது, யாருடைய படத்தை நாங்கள் வைத்திருக்கிறோமோ, யாரைக் குறித்து வேதத்தில் நாங்கள் வாசிக்கிறோமோ அவர் இப்போது இங்கே பிரசன்னமாயிருக்கிறார். அவர் தம்மை மானிட மாம்சத்தின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அநேக ஆண்டுகளாக அவரை ஒரு முறைகூட தவறாதவராக நாங்கள் கண்டிருக்கிறோம். மானிட இருதயத்தின் எண்ணங்களையும் வெளிப்படுத்த வல்லவராக, அவர்கள் செய்த பாவத்தை வெளிப்படுத்த என்ன நடந்ததென்பதை அப்படியே சரியாக அவர்களுக்குக் கூறி, என்ன நடக்கும் என்பதையும் ஒருமுறைகூட தவறாதபடி கூறியதைக் கண்டிருக்கிறோம். அப்படியானால் ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் என்பவர்களின் தேவன் இன்னும் தேவனாக இயேசு கிறிஸ்துவாகிய நபரில் இருக்கிறார். இப்பொழுதும், அவருடைய ஆவியானவர் கல்வாரியில் சிந்தப்பட்ட இரத்தத்தின்கீழ் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, உலகமானது எரிந்து போகுமுன்னே, மக்கள் மத்தியிலே இறங்கி வந்து தம்மை மானிட மாம்சத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறார். அந்த மகத்துவமான பரிசுத்த ஆவியானவர் மானிட மாம்சத்தில் பிரதிநிதித்துவம் பெறுவது. இரத்தத்தினால் உண்டாகும் பரிகாரத்தையும், பரிசுத்த ஆவியையும் ஏற்றுக் கொண்ட அருமையான மக்கள் மானிட மாம்சத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுக்கொண்ட தேவனை தங்களுக்குள் பெற்றுக் கொள்கிறார்கள். 188ஆகவே, அது மானிட மாம்சமல்ல, அது அந்த கிரியை நடப்பிக்க மட்டுமே. ஞானஸ்நானம் முதலிய காரியங்களில் நடப்பது போல, “...இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களைப் பின்தொடரும்...” என்ற கட்டளையுடன் வியாதியஸ்தர் மீது கைகளை வைப்பதன் மூலம், அவர்கள் விசுவாசித்தால், அவர்கள் சுகமடையத்தக்கதாக பரிசுத்த ஆவியானவர் பார்த்துக்கொள்வார். இப்பொழுது பிதாவே, இந்தக் காரியங்கள் உண்மையானவை என்பதை நாங்கள் அறிவோம். நின்று கொண்டிருக்கும் இந்த ஜனங்கள்- இந்த பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கும் ஊழியக்காரர்களின் கரங்களின் கீழாக நடந்து போகவும் கர்த்தாவே ஊழியக்காரர்கள் வியாதியஸ்தர் மீது கரங்களை வைக்கவும் ஆயத்தமாயிருக்கின்றனர். பிதாவே, இந்த மக்கள் மட்டும் விசுவாசித்தால், தேவரீர் வாக்குத்தத்தம் பண்ணின ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறுவதுபோல இதுவும் நிறைவேறும் என் அறிந்திருக்கிறோம். பிதாவே... விசுவாசமில்லாமல் இது நடக்க முடியாது. ஏனெனில் விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். எங்களால் அதைச் செய்யவே முடியாது. இப்பொழுதும், விசுவாசத்தோடு நம்பி, எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் இந்த வாக்குத்தத்தத்தோடு, வேதத்திலுள்ள முத்திரைகள் திறக்கப்பட்டிருப்பது தேவன் தம்முடைய வார்த்தையைக் காப்பாற்றுகிறார் என்பதைக் காட்டுகிறது. கர்த்தாவே அவர்களுடையதைப் போன்று அழிவுக்குரிய ஒரு சரீரத்தில் இருக்கும் எனக்கு வியாதியாயிருக்கும் அந்த அருமையான மக்களைப் பற்றிய உணர்வெல்லாம், கர்த்தாவே எங்களுக்குள் வசிக்கும் அதே பரிசுத்த ஆவியானவர் தாம் அவர்களுக்குள்ளும் வசிக்கிறார் என்பதாகும். நாங்கள் ஒருவருக்காக ஒருவர் மனம் வருந்துகிறோம். புதிய இரத்தத்திலுள்ள புதிய உடன்படிக்கையை அறிந்தவர்களாய்.... பழையதே சுகத்தைத் தருமானால், புதியதாகிய இது எவ்வளவு அதிகமாக மேன்மையானதாக இருக்கும்? பிதாவே, இந்த ஜனங்கள் தவறிப் போய்விடாமல் உம்முடைய ஊழியக்காரர்களின் கரங்களின்கீழ் கடந்து போகும்போது தங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளட்டும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாய், ஆமென். 189இப்போது, நாம்... இந்தப் பக்கத்திலிருப்பவர்கள் வரும்போது இந்தப் பக்கத்திலிருப்பவர்கள் அமர்ந்திருப்பார்கள், பிறகு இவர்கள் திரும்பிப் போவார்கள், மற்றப் பக்கத்திலிருப்பவர்கள்... இப்போது இங்கு நிற்கப் போகிறவர்களாகிய சகோதரர்களில் சிலர்... இங்கிருப்பவர்கள் ஊழியக்காரர்கள் என்று நம்புகிறேன். டாக்டர், சகோதரர் நெட் எங்கேயிருக்கிறார்? நீங்கள் அந்த ஜெப வரிசையில் போகவிருந்தீர்களா? (சகோதரர் நெட் அவர்கள் “ஆம், நான் வெறொவருக்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்'' என்று கூறு கிறார் - ஆசி). சகோதரர் நெட் உங்களுக்காக ஜெபிக்கப்பட்டவுடனே, ஜெபிக்கிறவர்களின் வரிசையில் வந்து சேருங்கள். இப்பொழுது, இந்தப் பக்கத்தில் இங்கேயிருப்பார்கள், ஒருகணம் அமர்ந்திருங்கள். இந்தப் பக்கத்திலிருப்பவர்களை வரவழைக்கிறேன். பிறகு நாங்கள் வந்து நடுப்பாதையிலுள்ளவர்களுக்காக ஜெபித்து அவர்களை இந்தப் பக்கம் அனுப்புவோம். பிறகு இந்த உட்பாதையிலுள்ளவர்களுக்காக ஜெபித்து அவர்களை இந்தப் பக்கமாக அனுப்புவோம். நாம் ஒவ்வொருவருக்காவும் ஜெபிப்போம். நான் சகோதரர் டெட்டி அவர்களை கேட்டுக் கொள்ளப்போகிறேன். அவர் எங்கே? (சகோதரன் டெட்டி அர்னால்ட், ''சரியாக இங்கே,'' என்று கூறுகின்றார் -ஆசி) சரி. 'அந்த மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகாமையில் இருக்கிறார்' என்ற பாட்டை இசைக்கருவியில் நீங்கள் வாசிக்க விரும்புகிறேன். பியானோ வாசிப்பவரும், அவர்கள் எங்கிருந்தாலும், உங்களுக்கு விருப்பமானால், அவருடன் சேர்ந்து வாசியுங்கள், 190கேளுங்கள், அந்தப் பாடல் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அந்தச் சிறு பையன் மேடைக்கு கொண்டு வரப்பட்ட வேளையை நினைவில் கொள்ளுங்கள். அச்சிறு ஏமிஷ் பெண்பிள்ளை ''மகத்தான வைத்தியர் அருகில் இருக்கிறார்“ என்ற இப்பாடலை இசைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நீண்ட கறுத்த முடியிருந்தது...... அல்லது வெண்மையான முடி. (மென்னோனைட் அல்லது ஏமிஷ் வகுப்பைச் சேர்ந்த பெண் பிள்ளை, ஒருத்தி) தலையைப் பின்னாக வைத்து படுத்திருந்தாள். கைகளை வைத்த மாத்திரத்தில் பரிசுத்த ஆவியானவர் அச்சிறு பையனைத் தொட்டார். அவன் கால்கள் முடமாயிருந்தன. அவன் என் கரங்களிலிருந்து துள்ளிக் குதித்து மேடையில் நெடுக ஓடினான். அவன் தாய் தன் இருக்கையிலிருந்தெழுந்து மயங்கி விழுந்தார்கள்- துவக்கத்தில் அவர்கள் மென்னோனைட் வகுப்பைச் சேர்ந்த ஒரு சகோதரி, என்று நம்புகிறேன். தேவனுடைய ஆவியானவர், அச்சிறு பெண்ணைத் தொட்டார். மென்னோனைட் வகுப்பைச் சேர்ந்த அல்லது ஏமிஷ் வகுப்பைச் சேர்ந்த, ஏதோ ஒரு வகுப்பைச் சேர்ந்தவளாயிருந்த அவளுடைய தகப்பனாரும் மற்றவர்களும் மென்னோனைட் வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலவோ அல்லது மற்ற ஏதோ வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலவோ உடையுடுத்தியிருந்தனர். அவள் பியானோ வாசிப்பதை விட்டு தன் கரங்களை ஆகாயத்தில் விரித்தவளாக குதித்தெழுந்தாள்; அவளுடைய அழகிய முடியானது அவள் முகத்தின்மீது குறுக்காக விழுந்தது. அவள் ஒரு தூதனைப்போல காட்சியளித்தாள். ஆவியில் பாட ஆரம்பித்தாள். அவள் அப்படி எழுந்து கரங்களை உயர்த்தி ஆவியில் பாடினபோது, பியானோவானது தொடர்ந்து. “மகத்தான மருத்துவர் இப்போது அருகில் இருக்கிறார். இரங்குகிற இயேசு'' என்ற அந்தப் பாடலை இசைத்துக் கொண்டேயிருந்தது. 191ஒவ்வொருவரும் அங்கே நின்றுக் கொண்டு, ஆயிரக்கணக்கான பேர்கள், பியனோ கட்டைகள் தானாக மேலும் கீழும் போவதைக் கண்டனர். ''அந்த மகத்தான மருத்துவர் இப்போது அருகில் இருக்கிறார், இரங்குகிற இயேசு...'' என்ற அந்தப் பாடல் இசைக்கப்பட்டது. ஜனங்கள் சக்கரமுள்ள நாற்காலிகளிலிருந்தும், கட்டில்களிலிருந்தும், நோயாளிகளை தூக்கிச் செல்லும் சாதனங்களிருந்தும் எழும்பி நடந்து சென்றார்கள். அதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று காலையிலே இங்கேயே இருக்கிறார், அந்த அறையில் இருந்தது போலவே. இப்போது நம்ப மட்டும் செய்யுங்கள். அந்தப் பாடலை இசையுங்கள், உங்களால் கூடுமானால் “அந்த மகத்தான மருத்துவர்”, இப்பொழுது, ஒவ்வொருவரும் ஜெபிப்போமாக. அவர்கள் அறையின் ஊடே நடந்து செல்லட்டும், இந்தப் பக்கமாக சென்று, உங்களுடைய இருக்கைக்கோ, நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்களோ, அங்கே போகலாம், பின்பக்கம் காலியாகிவிட்டதா? சரி இப்பொழுது உங்களுடைய இருக்கைகளுக்குச் செல்லுங்கள், பிறகு நாம் எழுந்து நிற்போம். 192இப்பொழுது கேளுங்கள், இவர்களுக்காக ஜெபிக்கும்போது நீங்களும் அவர்களுக்காக ஜெபியுங்கள். அப்போது உங்களுக்காக ஜெபிக்கப்படும்போது அவர்கள் உங்களுக்காக ஜெபிப்பார்கள். இப்பொழுது, இங்குள்ள ஊழியக்காரர்களே, எழுந்திருங்கள். அவர்கள் வரும்போது அவர்கள் மீது கரங்களை வைக்க விரும்புகிறேன். இப்பொழுது, ஒவ்வொருவரும் தலைகளை வணங்கி, உங்கள் தலைகளைத் தாழ்த்தியிருங்கள், ஜெபித்துக் கொண்டிருங்கள். நீங்கள் கடந்து செல்லும்போது, அப்பொழுது... உங்கள்மீது கரங்கள் வைக்கப் பட்டிருக்கும்போது, தம்முடைய புஸ்தகத்திலுள்ள இரகசியங்களை வெளிப் படுத்துகிறவரும், மானிட இருதயத்தின் அந்தரங்கங்களையும் வெளிப்படுத்துகிற தேவனின் வாக்குத்தத்தம் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசிப்பீர்களானால் அதை உறுதிப்படுத்துகிற தேவனாக அவர் இருக்கிறார். பாருங்கள்? நாம் எப்பொழுதுமே இப்பொழுது ஜெபத்தில் தரித்திருப்போம். இப்பொழுது, ஊழியக்கார சகோதரரே, நீங்கள் விரும்பினால் எழுந்து நில்லுங்கள். சரி. நாம் தலைவணங்குவோமாக. 193இப்பொழுது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, இந்த ஜனங்கள் வரும்பொழுது, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல்லமையானது அவர்கள் கடந்து செல்லும்போது அவர்களுடைய விசுவாசத்தை உடனே உயிர்ப்பிக்கட்டும், இயேசுவின் நாமத்தில். இப்பொழுது, நல்லது, ஜெப வரிசையானது இந்த வழியில் ஆரம்பிக்கட்டும். ஊழியக்காரரே, அவர்கள் கடந்து செல்லும்போது, ஒவ்வொருவரும் அவர்கள்மீது தங்கள் கரங்களை வைக்கச் சொல்லுங்கள். இசைப்பவர் தொடர்ந்து அந்த மகத்தான வைத்தியர் என்ற பாடலை இசைத்துக்கொண்டிருக்கையில், (சகோதரன் பிரான்ஹாமும் ஊழியக்காரரும், ஜெபவரிசையில் கடந்து வருகிற ஒவ்வொருவருக்காவும், ஜெபிக்க தங்கள் கரங்களை வைக்க ஆரம்பிக்கின்றனர்- ஆசி). கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே, என் கரங்களை என் சகோதரன் மீது வைக்கிறேன். தேவனே, என் சகோதரியாகிய ரோஸல்லாவிற்கு அதை அருளும், இயேசுவின் நாமத்தினாலே. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. (சகோதரன் பிரான்ஹாம் ஒருவரிடம், ''நீங்கள் அங்கே தங்கி, வரிசை முடியும்வரை கவனியுங்கள்'' என்று கூறுகின்றார் - ஆசி) கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே...?... அவர் தாழ்மையுள்ளவர் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள், தாழ்மையாய் வாருங்கள். (சகோதரன் பிரான்ஹாமின் வார்த்தைகளின் ஒரு பகுதி மட்டுமே கேட்கப்படுவதால், அவர் பேசியது முழுமையாக அச்சிட முடியாமல் உள்ளது. இங்கே ஜெப வரிசையானது ஆறு நிமிடம், இருபத்தைந்து விநாடிகள் தொடர்கிறது - ஆசி). (ஒலிநாடாவில் காலியிடம். சகோதரன் பில்லி பால் பிரான்ஹாம் ஒலி பெருக்கியிடம் வந்து, “ஜனங்களே, நீங்கள் தயவுசெய்து பின்னால் போகமுடியுமா? இந்தப் பாதையில் உள்ளவர்களே, நீங்கள் பாதையை விட்டுப் பின்புறம் செல்வீர்களா? தயவுசெய்து, பின்புறம் சென்று கொண்டேயிருங்கள். உமக்கு நன்றி. நடுப்பாதையில் உள்ளவர்களே, நீங்களும் சுற்றி வருவீர்களா?'' - ஆசி). 194(சகோதரன் பிரான்ஹாமின் வார்த்தைகளின் ஒரு பகுதி மட்டுமே கேட்கப்படுவதால், அவர் பேசியது முழுவதும் அச்சிட முடியாமல் உள்ளது. இங்கே ஜெபவரிசையானது இரண்டு நிமிடம், இருபது விநாடிகள் தொடர்கின்றது- ஆசி). சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரன் மிஷெல், உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். என் சகோதரனே, சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். என் சகோதரியே, உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே...?... உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே...?... உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே...?... உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே......... உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே...?... இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சுகத்தைப் பெற்றுக்கொள். சுகத்தைப் பெற்றுக்கொள்....?... சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சுகத்தைப் பெற்றுக்கொள்....?... சகோதரியே...?... சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அந்த சுகத்தைப் பெற்றுக் கொள். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அந்த சுகத்தைப் பெற்றுக் கொள். ஆமென். சுகத்தைப் பெற்றுக்கொள். சுகத்தைப் பெற்றுக்கொள். உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். 195(சகோதரன் பில்லி பால் பிரான்ஹாம் ஒலிபெருக்கியினிடம் வந்து, “இன்னும் யாராவது ஜெப வரிசையில் வர விரும்புகிறீர்களா? தயவு செய்து நீங்கள் வரிசைக்கு வருவீர்களா? ஜெப வரிசையில் வர யாராவது விரும்பினால், நீங்கள் தயவுசெய்து வருவீர்களா?'' என்று கூறு கிறார்-ஆசி). என் சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரி உட்ஸ் (Woods) இயேசு கிறிஸ்துவின் கரத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப்பெற்றுக்கொள். உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள்....?... சுகத்தைப் பெற்றுக்கொள்...?... சகோதரி ராபர்சன் இயேசு கிறிஸ்துவின் கரத்தினாலே சுகத்தைப் பெற்றுக்கொள். என் சகோதரனே, இயேசு கிறிஸ்துவின் கரத்தினாலே சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே...?... இயேசு கிறிஸ்துவின் கரத்தினாலே சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இவரை குணமாக்குவீராக. சகோதரியே...?... சுகத்தைப் பெற்றுக்கொள். மகனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரன், வீர்ட்ஸ் (Weerts) சகோதரனே இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரன்...?... உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பெற்றுக் கொள்...?... இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே..?... இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே....?... நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். என் சகோதரனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன்னு டைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே...? சகோதரியே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே...? 196(சகோதரன் பில்லிபால் பிரான்ஹாம் ஒலிபெருக்கியினிடம் வந்து, ''ஜெபிக்கப்பட விரும்பினவர்கள் இவர்கள் மட்டுமா?'' என்று கேட்கிறார்- ஆசி). (சகோதரன் லீ வெயில், சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார்ஆசி) சகோதரன் லீ வெயில், நீர் நேசிக்கின்றவருக்கான இந்த வேண்டுகோளை கர்த்தராகிய இயேசுவின் கரம்தாமே உமக்கு அருளுவதாக. இயேசுவின் நாமத்தில். சகோதரன், பில்லிபால் பிரான்ஹாம், சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகின்றார் -ஆசி). பில்லி பால், நீ எத்தனையோ ஜெப அட்டைகளைக் கொடுத்திருக்கின்றாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இப்பொழுது உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் இருக்கிறார் மனதுருக்கமுள்ள இயேசு சோர்வுற்ற இருதயத்திற்கு அன்பாதரவாய் அவர் பேசுகிறார் ஓ, இயேசுவின் சத்தத்தைக் கேளுங்கள் நாம் எல்லோருமாக: சேராபின் பாட்டிலே மிக இனிமையான நாமம் அழியும் மனித நாவில் மிக இனிமையான நாமம் என்றும் பாடப்படாத மிக இனிமையான மகிழ்ச்சிப்பாடல் தேவனே, இந்த அன்பான தம்பதிகள், உலகத்தில் கொண்டு வந்துள்ள ஒன்றான...?. கர்த்தாவே அவர்கள் வேண்டுகோளை அவர்கள் பெற்றுக்கொள்வார்களாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. ....?... இயேசு கிறிஸ்துவினுடைய, இப்பொழுது, எங்களுடைய சகோதரியின் எண்ணத்திலுள்ள அந்த நபரைக் குறித்த அந்த விண்ணப்பத்துடன், தேவனுடைய வல்லமை செல்வதாக. அவள் விடுவிக்கப்படுவாளாக. கர்த்தாவே, அதை அருளும். ஆமென். தேவனாகிய கர்த்தாவே, இயேசுவின் நாமத்திலே இந்த மனிதனின் விண்ணப்பத்தை அருளும். இவருக்காக நான் ஜெபிக்கின்றேன், கர்த்தாவே, என்னுடைய ஜெபத்துடன், ஆமென். 197ஓ, இது அற்புதமானதல்லவா! (சபையார் களிகூர்ந்து, “ஆமென்” என்று கூறுகின்றனர்- ஆசி) இன்று காலையிலே, இங்கே, இந்த மகத்தான அபிஷேகத்தின் கீழே வந்த ஒவ்வொருவரும் விசுவாசிப்பார்களானால்... இப்பொழுது, பெரிய மகத்தான ஏதோ ஒன்றிற்காக நோக்கிப் பார்க்க வேண்டாம். அவர் என்ன வாக்குத்தத்தம் செய்தாரோ, அந்த எளிமையான காரியத்தை மட்டும் விசுவாசிக்கவேண்டும் என்றும் நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லுவோம். நாம் (சபையார் “நாம் என்கின்றனர்'') மகத்தான ஏதோ ஒன்றை (''மகத்தான ஏதோ ஒன்றை'') நோக்கவில்லை (”நோக்கவில்லை''). ஆனால் இயேசுவின் நாமத்தினால் (“ஆனால், இயேசுவின் நாமத்தினால்'') நாம் அவருடைய வாக்குத்தத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம் (நாம் அவருடைய வாக்குத்தத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம்''). அது முடிவுபெற்றுவிட்டது. அது அதை முடிவு பெறச் செய்கிறது. (சபையார் “ஆமென்” என்று கூறி, மிகுந்த சத்தமாய் களிகூறுகின்றனர்-ஆசி) ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சபை ஒழுங்கு Jeffersonville, Indiana, USA 63-1226 Cod-18 1சகோதரரே, ஜீவனுள்ள தேவனுடைய சபையை எவ்விதம் இயக்குவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்துக்காக இன்றிரவு இக்கூட்டத்தை நாம் கூட்டியுள்ளோம். இந்த சபை அதன் ஒரு பாகம் என்பதை நாம் விசுவாசிக்கிறோம். முதலாவதாக இதைக் கூற விரும்புகிறேன். நான் உலகம் முழுவதும் செய்த பயணங்களில், எனக்குத் தெரிந்தமட்டில், இது மிகச் சிறந்த ஆவிக்குரிய இடங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. எனக்குத் தெரிந்த மற்றெல்லா இடங்களைக் காட்டிலும் இங்கு தேவனுடைய ஆவியை நீங்கள் அதிகமாக உணரலாம். இதைப் போன்றிருந்த இரண்டு இடங்கள் என் நினைவுக்கு வருகிறது. ஆனால் இப்பொழுது இந்த இடங்களை நாம் காண்பதில்லை. அவைகளில் ஒன்று ஸ்தாபனமாகிவிட்டது. மற்றது ஒருவகையில் விழுந்துவிட்டது. எனவே நேற்று என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, இந்த சபையில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்த இந்த கேள்விகளை என்னிடம் கேட்பதற்காக ஒரு கூட்டத்தை நீங்கள் விரும்புவதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் .... அதற்காகவே இன்றிரவு நான் இங்குள்ளேன். அதாவது சபையை ஒழுங்குபடுத்துவதற்காக, அல்லது இந்த சபையை தொடர்ந்து நடத்த அவசியமானவை என்று நான் கருதும் உண்மைகளை உங்களுக்கு எடுத்துரைக்க. 2சகோதரரே, இது ஆவிக்குரிய இடம்என்று நான் குறிப்பிட்டதன் அர்த்தத்தை நீங்கள் உணருகிறீர்கள் என்னும் உறுதி கொண்டவனாயிருக்கிறேன். இது உலகில் மிகப் பெரிய இடம் அல்ல, அல்லது இங்கு அதிகமான பாடல்கள் பாடுவதோ, அதிகமாக கூச்சலிடுவதோ, அதிகமாக சத்தம் போடுவதோ அதிகமாக பாஷைகள் பேசப்படுவதோ கிடையாது. அதுவல்ல, ஆனால் இந்த கூடாரத்தில் இயங்கும் ஆவியின் தரமே முக்கியம் வாய்ந்தது. நான் சகோ. நெவிலுக்கும் இங்குள்ள சகோதரராகிய உங்களுக்கும், தர்மகர்த்தாக்களுக்கும், டீக்கன்மார்களுக்கும், ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளருக்கும், இவ்விதமாக நடப்பதற்கு நீங்கள் செய்த உதவிக்காக, என் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் இளைஞனாயிருந்த முதற்கொண்டு, இந்த சபை ஒழுங்குபடுத்தப்பட்டு, அந்த ஒழுங்கில் வைக்கப்பட்டுள்ளதை காண வேண்டுமெனும் ஆவல் என் இருதயத்தில் குடிகொண்டுள்ளது, என் நீண்ட நாள் ஜெபமும் அதுவே. 3இந்த சபையை நாம் பிரதிஷ்டை செய்தபோது, ''சில நாட்கள் கழித்து உங்களிடம் சிலவற்றை கூற விரும்புகிறேன்'' என்று நான் உங்களிடம் கூறினேன் - அதாவது, இதை எவ்வாறு ஒழுங்குபடுத்த வேண்டுமென்றும், இதை எப்படி நடத்த வேண்டுமென்றும். அதன் பிறகு.... நீங்கள் தொடங்கி நடத்தினீர்கள் - நமக்கு போதகர்களும் மற்றவர்களும் இருந்தனர். இப்பொழுது, சகோ. நெவில், நமது மத்தியில் வந்து, இளமை பருவம் கொண்டிருந்ததால், நான் இப்பொழுது கூறப்போகின்ற இந்தக் காரியங்கள் கூறப்படுவதற்கு முன்பாக சகோதரன் நெவில் விசுவாசத்தில் ஸ்திரப்படுவது அவருக்கு நலமானதாயிருக்கும் என்று நான் எண்ணினேன். தற்பொழுது அவர் விசுவாசத்தில் மிகவும் ஸ்திரப்பட்டுள்ளதையும், உபதேசம் என்னவென்று அவர் விளங்கிக் கொண்டு, கிறிஸ்துவுக்கு உண்மையுள்ள சாட்சி என்னும் பாகத்தை அவர் வகித்து, நாம் சத்தியம் என்று விசுவாசிப்பதை அவர் பற்றிக் கொண்டிருப்பதால், இந்த ஒழுங்குகளை அவரும், மூப்பர்களும் சபையிலுள்ள மற்றோரும் கடைபிடித்து நினைவு கூருவதற்கு அதை அளிக்க இதுவே ஏற்ற மணி நேரம் என்று கருதுகிறேன். என் அறிவுக்கு எட்டினமட்டில், தேவனுக்கு முன்பாக இவைகளே அந்த ஒழுங்குகள். நான் கூறின விதமாகவே நீங்கள் இவைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறேன். ஏனெனில் யாராகிலும் ஒருவர் இங்கு தலைவராக இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு.... 4இப்பொழுது, நான் அதிகாரத்தைக் கைப்பற்றவோ, அவ்விதம் ஏதாவதொன்றை செய்யவோ நினைக்கவில்லை. ஆனால், பாருங்கள், இரண்டு தலைவர்களுடைய மனிதனுக்கு எந்த பக்கம் போவதென்று தெரியாது. தேவன் தமது சபைக்கு இரண்டு தலைவர்களை எக்காலத்தும் வைக்கவில்லை. அவர் அவ்விதம் செய்ததேயில்லை, ஒரே தலைவன் தான். நாம் வேதாகமத்தை ஆராய்ந்த போது கண்டது போல், ஒவ்வொரு சந்ததியிலும் அவர் ஒரு நபருடன் மாத்திரமே ஈடுபட்டு வந்துள்ளார். ஏனெனில், இரு மனிதர் இருந்தால், இரு கருத்துக்கள் இருக்கும், அது முடிவான முற்றிலுமான ஒன்றுக்கு வரவேண்டும். என்னுடைய முற்றிலுமானது (absolute) வார்த்தையே, வேதாகமமே. இந்த சபையின் போதகர் என்னும் முறையில், எனக்கு முற்றிலுமானது வார்த்தையே. நான் விரும்புவது... சகோதரராகிய நீங்கள் என்னை உங்கள் முற்றிலுமானவனாக (absolute) கருதுகிறீர்கள் என்பதை அறிவேன். நான் தேவனைப் பின்பற்றும் வரைக்கும் பவுல் வேதத்தில் கூறியுள்ளது போல், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல், நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்'' 5சகோதரரே, நான் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது என்னவெனில், இந்த வேத சத்தியத்திலிருந்து நான் எப்பொழுதாவது விலகிப் போய் விட்டதை நீங்கள் காண்பீர்களானால், நீங்கள் என்னிடம் தனியாக வந்து நான் எங்கு தவறு செய்து விட்டேன் என்பதை என்னிடம் கூற வேண்டுகிறேன். நீங்கள் தர்மகர்த்தாக்களில் ஒருவராயிருந்தாலும் அல்லது நீங்கள் வாயிற்காப்போனாயிருந்தாலும், யாராயிருந்தாலும் பரவாயில்லை. நான் கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு ஒரு சகோதரன் என்னும் முறையில், வேதப் பிரகாரமாக நான் எங்கு தவறாயிருக்கிறேன் என்பதை என்னிடம் எடுத்துரைக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். எதாகிலும் கேள்வி இருக்குமானால், நாம் ஒருமித்து உட்கார்ந்து அதற்கு விடை காணுவோம். இன்றிரவு நீங்கள் என்னிடமாக வந்துள்ள காரணம். அந்த காரணத்திற்காகவே நீங்கள் என்னை இங்கு அழைத்து வந்தீர்கள். இங்கு என்னிடம் நீங்கள் எழுதி வைத்துள்ள கேள்விகள் உங்கள் மனதில் எழும்பிய கேள்விகளே. இப்பொழுது சகோதரரே, இதை நினைவில் கொள்ளுங்கள். எனக்குத் தெரியாது... இவைகளில் பெயர்கள் எதுவும் கையொப்பமிடப்படவில்லை. ஆனால்... கேள்விகள் மட்டுமே எழுதி வைக்கப்பட்டுள்ளன. இவைகளை யார் எழுதினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இவை உங்கள் மனதில் எழுந்த கேள்விகள். என் அறிவுக்கு எட்டின வரைக்கும், இவைகளுக்கு விடையளிக்க நான் இங்குள்ளேன். 6ஞாபகம் கொள்ளுங்கள், நான் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டுமென்று தேவன் என்னை எதிர்ப்பார்க்கிறார். நீங்கள் இந்த சபையில் வார்த்தையைக் கடைபிடிக்க வேண்டுமென்று நான் உங்களை எதிர்ப்பார்க்கிறேன், பாருங்கள், பாருங்கள். இதை ஆவிக்குரியதாக நீங்கள் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் கர்த்தரில் வளரத் தொடங்கும் போது, சாத்தானின் அந்தகார ராஜ்யத்தின் சக்திகள் உங்களுக்கு கெதிராக திருப்பி விடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பயிற்சி பெற்ற போர் வீரர்களாக இருக்க வேண்டும், புதிதாக சேர்ந்தவர்களாய் அல்ல. நீங்கள் இப்பொழுது அனுபவம் வாய்ந்த போர் வீரர்கள். சண்டையிட நீங்கள் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள். சாத்தான் உங்கள் நடுவில் வந்து, கூடுமானால் ஒருவருக்கொருவர் சச்சரவை உண்டாக்க முனைவான். அவனை உடனே விரட்டுங்கள். நீங்கள் சகோதரர், அவனோ சத்துரு. உலகம் இருளடைந்து சபை இராஜ்யம் முழுவதுமே உலக சபைகளின் ஆலோசனை சங்கத்துக்குள் சென்று கொண்டிருக்கும் இந்த சாயங்கால வெளிச்ச நேரத்தில், நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கவே இங்குள்ளோம். வெகு விரைவில் அவர்கள் இந்த கதவின் மேல் ''மூடப்பட்டது'' என்று எழுதப்பட்டுள்ள அட்டையை தொங்க விடுவார்கள். அப்பொழுது நாம் வேறு இடங்களில் கூட வேண்டியதாயிருக்கும். ஏனெனில், நாம் மிருகத்தின் முத்திரையை தரிக்காமல் போனால், இந்நாட்களில் ஒன்றில் அவர்கள் நிச்சயமாக இந்த சபைகளை மூடி விடுவார்கள். மரணம் நம்மை விடுவிக்கும் வரைக்கும், நாம் தேவனுக்கு உண்மையாய் நிலைத்திருந்து அவர் பேரில் சார்ந்திருக்கிறோம். அதைத்தான் நாம் செய்யத் தீர்மானித்துள்ளோம். 7இப்பொழுது நேரடியாக எந்த நேரத்திலாவது இவைகளைக் குறித்து கேள்வி எழுமானால், உங்கள் கூட்டங்களில், அல்லது கூட்டத்துக்கு முன்னால், கூட்டம் தொடங்குவதற்கு முன்னால், இந்த சபை அங்கத்தினர்களுக்கு இந்த ஒலிநாடாவை போடுங்கள்! இந்த மனிதர் இந்த கொள்கைகளைக் கடைபிடிக்க, அவர்கள் இந்த சபையில் அளித்த உறுதி மொழியின்படி தேவனுக்கு கடமைப்பட்டவராயிருக்கின்றனர் என்பதை இங்குள்ள சபையோர் அறிந்து கொள்ளட்டும். ஒருவேளை நீங்கள் அவர்களுடன் இணங்காமல் போகலாம். ஆனால் நீங்கள் சபையை நடத்த நான் விட்டுக் கொடுத்தால், உங்களுடன் நான் இணங்காமல் இருப்பேன். நமக்கு எங்காவது முடிவான ஆதாரம் ஒன்று இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்தமட்டில், பரிசுத்தஆவி என் முடிவானவராக இருக்க நான் இடங்கொடுத்து, அவருடைய அபிஷேகத்தின் கீழ் இவைகளுக்கு விடையளிக்கிறேன். இந்த கேள்விகளுக்கு இந்த ஒலிநாடா உங்கள் முடிவாக இருப்பதாக! 8இப்பொழுது முதலாவது கேள்வி: உணவுக்கும் துணிக்கும்... பொருளாதார உதவிக்கென வேண்டுகோள்கள் வரும்போது சபை எவ்விதம் செயல்பட வேண்டும்? என்ன - என்ன செயலை, சபை என்ன செய்ய வேண்டும்? சபையானது தனக்கு சொந்தமானவர்களுக்கு உத்திரவாதமாயிருக்க வேண்டுமென்பதை நாம் உணருகிறோம். இங்குள்ள சபை அங்கத்தினர்களுக்கு ஏற்படும் தேவைகளை அளிப்பதற்கு நாம் முழுவதும் உத்திரவாதமுள்ளவர்களாயிருக்கிறோம். இந்த கூடாரத்துக்கு நிலையாக, எப்பொழுதும் வந்து நம்முடன் தொழுது கொள்ளும் அங்கத்தினர்களுக்கு - நாம் உத்திரவாதமுள்ளவர்களாயிருக்கிறோம். இங்கு கூடிவரும் நமது சபையின் அங்கத்தினர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, நமது சகோதரரும் சகோதரிகளும் என்னும் முறையில், அவர்களுக்கு உதவி செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம். உண்ண உணவும் உடுக்க துணியும் இல்லாத கோடிக் கணக்கானோர் இன்றிரவு உள்ளனர் என்பதை நாம் உணருகிறோம். அவர்கள் அனைவருக்கும் உதவி செய்ய, நம்மால் முடிந்த அனைத்தும் செய்ய நமக்கு ஆவல் உள்ளது. ஆனால் அவ்விதம் நாம் செய்ய நமக்கு பணவசதி இல்லை; முழு உலகத்துக்கும் நம்மால் உதவி செய்ய முடியாது. ஆனால் நமக்கு சொந்தமானவர்களுக்கு உதவி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். அதன் பிறகு ஏதாகிலும் மீதமிருந்து இந்த சபையின் அங்கத்தினர் அல்லாதவர்க்கு நீங்கள் எதையாகிலும் கொடுக்க விரும்பினால் டீக்கன்மார் குழு அதற்கான தீர்மானம் எடுக்க வேண்டும் என்பது என் கருத்து. 9இந்த எதிர்ப்பு அல்லது இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டியவர் டீக்கன்மார்களே, ஏனெனில் வேதத்தில், அப்போஸ்தலருடைய நடபடிகளில், உணவு உடைகளைக் குறித்து வாக்குவாதம் உண்டானபோது, அவர்கள் அப்போஸ்தலர்களை வரவழைத்தனர். அவர்கள், “பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழு பேரை உங்களில் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் இந்த வேலையை கவனித்துக் கொள்வார்கள். நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்” என்றனர். எனவே உணவு போன்ற விஷயத்தை கவனித்துக் கொள்வது மேய்ப்பனின் வேலையல்ல. அது டீக்கன்மார்களின் வேலை. அது தர்மகர்த்தாக்களின் வேலையும் அல்ல. அதை செய்ய வேண்டியது டீக்கன்மார்களே, பிறகு இது.... வேதத்தில் அவர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்காக பணம் கொடுத்தார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அப்பொழுது கிரேக்கர்களுக்கும், யூதர்களுக்குமிடையே, ஒருவருக்கு மற்றவை விட அதிகம் கிடைக்கிறது என்னும் விஷயத்தில், வாக்குவாதம் உண்டாயிற்று. ஆனால் ஜனங்கள் தங்களுக்குண்டான யாவற்றையும் விற்று சபைக்கு கொடுத்து அதை தாங்கினர். அது அவர்கள் நடுவே சமமாகப் பங்கிடப்பட வேண்டும். அப்பொழுது ஒரு சிறு சச்சரவு எழுந்தது. அங்கு தான் நாம் முதன் முதலாக டீக்கன்மார்களைப் பெற்றோம். அதை செய்வது அவர்களுடைய வேலைகளில் ஒன்றாகும். 10என் கருத்து என்னவெனில் நமக்கு சொந்தமானவர்களை, நமது சொந்த ஜனங்களை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏதாகிலும் புகார் வரும் பட்சத்தில், அதை டீக்கன்மார் குழுவின் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதைக் குறித்து என்ன செய்ய வேண்டுமென்று டீக்கன்மார் குழு முடிவு எடுக்க வேண்டும். இவையனைத்தும் - துணிகள், உணவு, பண உதவி, அது என்னவானாலும் - டீக்கன்மார் மூலம் வரவேண்டும். இந்த டீக்கன்மார்கள், தாங்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தீர்மானம் எடுத்த பிறகு, இந்த பண உதவியைச் செய்ய அல்லது துணிகளை வாங்க, அல்லது வேறெதாவதை செய்ய பணம் கொடுக்க முடியுமா என்று அறிந்து கொள்ள, இதை பொருளாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் டீக்கன்மார் குழு மாத்திரமே கூடி இந்த விஷயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும். இதை தர்மகர்த்தாக்கள் அல்லது மேய்ப்பனிடம் கொண்டு போகக்கூடாது. இது முழுவதும் டீக்கன்மார்களைப் பொறுத்த விஷயம். 11இப்பொழுது இரண்டாம் கேள்வி: அந்நிய பாஷைகள் பேசுதலும் அர்த்தங்கள் உரைத்தலும் ஆராதனைக்கு முன்பு நடைபெறும் கூட்டத்தில் செய்யப்பட வேண்டும் என்று பிரசங்க பீடத்திலிருந்து பகிரங்கமாகக் கூறினால் போதுமா? இது என்னிடமுள்ள இந்த காகிதத்துண்டில் உள்ள இரண்டாம் கேள்வி, இது ஒரு சிறு அட்டை. இது இங்குள்ள மேய்ப்பருக்கு சம்பந்தமானது, பாருங்கள். ஏனெனில் ஆவிக்குரிய பாகத்துக்கு அவரே தலைவர். ஒழுங்கை நிலைநாட்ட, ஏழைகளுக்கு உணவளிக்க, இத்தகைய காரியங்களை கவனித்துக்கொள்ள டீக்கன்மார்கள் சபையின் போலீஸ்காரராயுள்ளனர். தர்மகர்த்தாக்கள் பணம் சம்பந்தமான காரியங்களையும் கட்டிடத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஆவிக்குரிய பாகத்தை மேய்ப்பர் மேற்பார்வையிடுகின்றார். சகோ. நெவில், இது உங்களுடன் சம்பந்தப்பட்டது. 12இப்பொழுது, அங்கே.... சில நாட்களுக்கு முன்பு, சபையில் ஒழுங்கு நிலை நாட்டப்பட்ட போது, நான் அந்நிய பாஷைகள் பேசுவதிலும், அர்த்தம் உரைப்பதிலும், தேவன் சபைக்கு அளித்துள்ள எல்லா அருமையான ஆவிக்குரிய வரங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் நாம் வேதாகம காலத்துக்கு ஒத்த ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அங்கு சபைகள்... நீங்கள் பவுலைக் கவனிப்பீர்களானால், அவன் எபேசுவில் எபேசு சபையை நிறுவினான். அது நன்றாக நிறுவப்பட்ட ஒரு சபை. நீங்கள் கவனித்தீர்களா? பவுல் அநேக பாஷைகளை பேசினான் என்றும், அவன் பாஷைகள் பேசும் வரத்தைப் பெற்றிருந்தான் என்றும் நாமறிவோம். அதை பவுலே கூறியுள்ளான். அது அவன் கற்ற பாஷைகள் அல்ல, அது ஆவிக்குரிய பிரகாரமாய் அவனுக்கு அளிக்கப்பட்டவை. அதைக் குறித்து அவன் எவ்விதம் கொரிந்தியர் நிருபத்தில் கூறுகிறான் என்று பாருங்கள் நேரத்தை வீணாக்காமலிருக்க நான்.... வேதத்திலிருந்து அதை படிக்கப் போவதில்லை. ஏனெனில் அவ்விதம் செய்தால், இன்றிரவு நாம் அதிக நேரம் தங்க வேண்டியதாயிருக்கும். எனக்கு நேரம் அதிகமில்லை. இப்பொழுது.... நீங்கள் அதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக. 13இப்பொழுது, பவுல் ஒரு முறையாவது ஆவிக்குரிய வரங்களைக் குறித்தோ அல்லது அதை எவ்விதம் ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதைக் குறித்தோ எபேசு சபைக்கு, அல்லது ரோமர் சபைக்கு அல்லது வேறெந்த சபைகளுக்கும் கூறவில்லை. ஆனால் அதைக் குறித்து அவன் கொரிந்தியர்களுக்கு அடிக்கடி கூறி வந்தான், ஏனெனில் அவர்கள் அதை ஒரு பிரச்சனையாக எந்நேரமும் செய்துவிட்டனர். பவுல் அவர்களிடம் வந்த போது ஒருவனுக்கு அந்நிய பாஷை பேசும் வரமும், வேறொருவனுக்கு சங்கீதம் பாடும் வரமும் இருப்பதைக் கண்டு, அவர்களுடைய அருமையான வரங்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுத்ததாக கூறுகிறான். நீங்கள் கவனிப்பீர்களானால், கொரிந்தியர் முதலாம் அல்லது இரண்டாம் அதிகாரத்தில், கிறிஸ்துவில் அவர்களுடைய ஸ்தானம் என்னவென்பதை குறித்து பவுல் அவர்களிடம் கூறுகிறான், எவ்விதம் அவன் அவர்கள் எவ்விதம் கிறிஸ்துவில் ஸ்தானத்தை பெற்றுள்ளனர் என்பதைக் குறித்து. அவர்களுக்கு இதை எடுத்துக் கூறின பிறகு, அவன் ஒரு தகப்பனைப் போல் அவர்களுக்கு சவுக்கடி கொடுத்து, ''உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன். கர்த்தருடைய பந்தியில் நீங்கள் குடித்து வெறிப்பதாக கேள்விப்படுகிறேன்'' என்கிறான். அவன் அவர்களை கிறிஸ்தவரல்லாதவர்களாக ஆக்கிவிடவில்லை. சகோதரராகிய நீங்கள் அவ்விதம் செய்ய வேண்டும், அவர்களை கிறிஸ்தவரல்லாதவர்களாக ஆக்கிவிட வேண்டாம். ஆனால் அவர்கள் தேவனுடைய வீட்டில் நடந்து கொண்ட விதம் அது. அங்கு தான் அது அடைகிறது. 14இதை நான் கூற விரும்புகிறேன். முந்தின காலத்து பவுல் கூறினது போல, “நீங்கள் கூடி வந்திருக்கிற போது, ஒருவன் அந்நிய பாஷையிலே பேசினால், ஒருவன் அர்த்தத்தைச் சொல்ல வேண்டும். அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், அமைதியாயிருங்கள். ஆனால் அர்த்தம் சொல்லுகிறவன் இருந்தால்...'' இப்பொழுது, இங்குள்ள சபையை நான் கவனித்து, நீங்கள் வளருவதைக் கண்டிருக்கிறேன். உங்கள் மத்தியில் அநேக ஆவிக்குரிய வரங்கள் கிரியை செய்வதை நான் கண்டிருக்கிறேன். வெளிப்படையாகக் கூறினால், ஒன்றைக் குறித்து நான் கர்த்தரிடமிருந்து வார்த்தையை பெற்று நான் சகோதரன் நெவிலிடம் வந்து அவர் செய்து கொண்டிருந்த ஒன்றின் பேரில் நான் திருத்துதலை செய்ய வேண்டியதாயிற்று. நான்... கர்த்தர். என்னை... பரிசுத்த ஆவி என்னை இந்த மந்தைக்கு கண்காணியாக வைத்திருப்பாரானால், உங்களுக்கு சத்தியத்தை எடுத்துரைப்பது என் மேல் விழுந்த கடமையாகும். நான் சகோ. நெவிலுக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவர் சத்தியத்துக்கு செவி கொடுத்தார். தேவன் என்னிடம் கூறுவதை மாத்திரமே உங்களுக்கு நான் எடுத்துரைக்க முடியும். 15இப்பொழுது... இந்த விஷயத்தில், உங்கள் சபை வளர்ந்து வருவதை நான் கவனித்துக் கொண்டு வந்தபோது, இதை கவனித்தேன். சபையில் இவ்விதம் தான் நாம் முதலில் செய்து கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுது இவ்விதம் செய்ய விரும்புகிறோம். இப்பொழுது, நீங்கள் கவனிக்காமல் போனால், குழந்தைகள்... ஒரு குழந்தைக்கு பேச முடியாதபோது, அது பேசுவதற்கு முயற்சி செய்கிறது. பாருங்கள்? அது வாயில் அதின் நுரையை தள்ளிக்கொண்டு அதிக சத்தம் போட்டு... பிரசங்கியின் சத்தத்தை விட அதிக சத்தமிடலாம் என்று நினைத்துக் கொள்கிறது. நல்லது, அது இயற்கை வாழ்க்கையில் மாத்திரமல்ல. ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அவ்விதமே என்று நாம் காணலாம். அது சிறு பிள்ளை. அந்த குழந்தை 'கூ' என்று சத்தமிட்டு பேச முயற்சிப்பதால், அவனை அடித்து திருத்த முயன்றால், நீங்கள் பிள்ளையைப் பாழாக்கி விடுவீர்கள். பாருங்கள், அவனுக்கு தீங்கு விளைவிப்பீர்கள். அந்த குழந்தை தன் சொற்களை சரியாக பேசும் பருவம் வரைக்கும் அவனை வளர விட்டு, அதன் பிறகு, அப்பா, அம்மா பேசும் போது, அவன் குறுக்கே பேசக்கூடாதென்றும், குறித்த நேரம் வரும்போது, அவன் பேசலாம் என்றும் அவனுக்கு சொல்லிக் கொடுக்கலாம். நான் கூறுவது விளங்குகிறதா? அவன் பேசுவதற்கு நேரம் வரும்போது, அவன் பேசலாம். 16வெளியில் நடக்கும் கூட்டங்களில், எனக்கு ஒன்று என் மாம்சத்தில் முள்ளாக இருந்திருக்குமானால், அது நான் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நிய பாஷை பேசி, ஆவியைக் கெடுத்து விடுதலே. நியூயார்க் பட்டினத்திலும் மற்றும் வெவ்வேறு இடங்களிலும் நடந்த கூட்டங்களில் நான் பங்கு கொண்டு இப்பொழுது தான் திரும்ப வந்தேன். அங்கு போதகர்கள் இதை பலமுறை அனுமதிக்கின்றனர். அது குழப்பத்தை விளைவிக்கிறதேயன்றி வேறல்ல. பாருங்கள், தேவன் ஒருவகையான கருத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்... அது... அவர் சபையோரின் மூலம் மற்றொரு வகையான கருத்தை நுழைத்து பீட அழைப்பை கொடுப்பாரானால், அவரே தமது நோக்கத்தை குலைத்து விடுவார். உதாரணமாக, அது இது போன்றது. நாம் மேசையில் உட்கார்ந்து கொண்டு கர்த்தரைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது மகன் மேசைக்கு வேகமாக ஓடி வந்து நம் கவனம் அனைத்தையும் கவர்ந்து, அப்பா அம்மா! என்னே! என்னே! 'பேஸ்பால்' விளையாட்டில் என் குழுவுக்கு நான் ஜெயிக்கும் ரன் எடுத்தேன். நாங்கள் இதை, அதை, மற்றதை செய்தோம்'' என்று உரக்க சத்தமிட்டால் நாம் புனிதமான பொருளின் மேல் உரையாடிக் கொண்டிருக்கும்போது, அவன் பேஸ்பால் விளையாட்டில் ஜெயிக்கும் 'ரன்' எடுப்பது நல்லது தான். ஆனால் நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தில் குறுக்கே நுழைந்து இதை கூறுவது ஒழுங்கற்ற செயல். அவனுடைய நேரம் வரும் வரைக்கும் அவன் காத்திருந்து, 'பேஸ் பால்' விளையாட்டில் என்ன செய்தான் என்பதை நம்மிடம் கூறியிருக்க வேண்டும். 17இன்றைக்கு வரங்களைக் குறித்த விஷயத்திலும் அதையே நாம் காண்கிறோம். அதன் காரணமாகத்தான் தேவன் அதிகமான ஆவிக்குரிய வரங்களை ஜனங்களுக்கு நம்பி கொடுப்பதில்லை. ஏனெனில் அவைகளை எவ்விதம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. இன்றுள்ள விஷயம் அதுவே, நாம் பெற்றிருப்பதை விட அதிகமாக பெறாமலிருக்கும் காரணம். பிறகு, ஆவிக்குரிய வரங்களில் நிறைய போலிகளை நாம் காண்கிறோம். நமது சபையில் அவ்வாறில்லை, அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவை போலிகள் அல்ல, நமக்கு உண்மையான வரங்கள் உள்ளன என்று நான் நம்புகிறேன். ஆனால் இவ்வரங்களை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பது நமக்குத் தெரிந்திருப்பது அவசியம். 18நீங்கள் நன்மையான ஒன்றை செய்து கொண்டிருக்கும்போது.... நீங்கள் முதன் முறையாக ஒரு முதலாளியின் கீழே வேலைக்கு அமர்ந்து அவர் கொடுக்கும் கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமுள்ளவர்களாயிருந்தால், முதலாளிக்கு உங்கள் மேல் நம்பிக்கை பிறந்து உங்களுக்கு உத்தியோக உயர்வை அவ்வப்போது கொடுத்து கொண்டே வருகிறார். தேவன் நமக்கு அளித்துள்ள வரங்களை விட இன்னும் அதிகமான வரங்களை நமக்கு நம்பி அளிப்பதற்கு... பிரன்ஹாம் கூடாரத்திற்கு நேரம் வந்துவிட்டதென்று நம்புகிறேன். ஆனால் நாம் இப்படியே சென்று கொண்டிருக்கக்கூடாது. அதாவது ஒரு மனிதனுக்கு நாம் எப்பொழுதும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் என்னும் நிலையில் இருக்கக்கூடாது. ''தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது'' என்று வேதம் உரைக்கிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஒரு மனிதன் அல்லது ஸ்திரீயை நீங்கள் வேதப் பிரகாரமான சத்தியத்தை உரைத்து திருத்தி, அந்த நபர் ஒழுங்கை மீறினால், அவர்கள் மேல் தங்கியுள்ளது தேவனுடைய ஆவி அல்லவென்பதை அது காண்பிக்கிறது. ஏனெனில் வேதம், ''தீர்க்கதரிசிகளுடைய ஆவி,'' அல்லது ''தீர்க்கதரிசனம் உரைப்பது,'' அதாவது சாட்சி கூறுதல், பிரசங்கம் செய்தல், அந்நியபாஷை பேசுதல் அல்லது எதுவாயிருந்தாலும் சரி. ஏனெனில் அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் தீர்க்கதரிசனமாகும். எனவே அது தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது. வார்த்தையே தீர்க்கதரிசி. ஒரு மனிதன் அல்லது ஸ்திரீ, பிரசங்கிட பிரசங்க பீடத்திலிருக்கும் போது, எழுந்து குதித்து தீர்க்கதரிசனமாக செய்தியை அளிப்பது ஒழுங்கை மீறும் செயல் என்பதை நாம் காண்கிறோம். 19இதை நான் பிரன்ஹாம் கூடாரத்துக்கு ஆலோசனையாக கூறுகிறேன், நமக்குள்ள நமது வரங்கள்... இங்கு மிகவும் சிறந்த வரம் பெற்றவர் நமக்குள்ளனர். இந்த வரங்கள் ஒவ்வொன்றும் தன்னில் தானே ஊழியமாக அமைந்துள்ளன. அவை வரங்கள், உதாரணமாக பிரசங்கம் செய்தல் ஒரு வரம், சுகமளித்தல் ஒரு வரம். மற்றவை போலவே இவைகளும் வரங்கள். இவை தம்மில் தாமே ஊழியங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த ஊழியத்தில் நிலைத்திருக்க கட்டளை பெற்றிருக்கிறான். எனவே பிரன்ஹாம் கூடாரம் இவ்விதம் இயங்கட்டும், முக்கியமாக இந்நாளில் (இதை நான் கூற விரும்பவில்லை, ஆனால் நம்மிடமாக மிக அதிகமாக பாவனைகள் - நம்பிக்கை இருந்தது. நமக்கு பாவனைகள் வேண்டாம். எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு நேர்மையான நபரும் அதிகமாக பாவனைகளைப் பெற்றிருக்க விரும்பமாட்டார். நாம் நமக்கு உண்மையானது இல்லாமற்போனால், எதையுமே பெற்றுக் கொள்ளாமல் இருப்போம், உண்மையானதைப் பெறும் வரைக்கும் நாம் காத்திருப்போம். இப்பொழுது மனிதராகிய நீங்கள் நான் கூறுவதை ஒத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். பாவனை எதுவும் வேண்டாம். சகோதரரே, ஏதாவதொன்றை நாம் செய்து, இவ்வுலகை விட்டுச் செல்லக்கூடாது. நாம் உண்மையானதை மற்றும் நம்பத்தகுந்ததை பெற்றிருக்க வேண்டும். அது நமக்கு இல்லாமல் போனால், அதை நாம் பெறும் வரை காத்திருந்து, அதன் பிறகு அதைக் குறித்து பேசுவோம். பாருங்கள்? 20இதைக் கூற விரும்புகிறேன், அந்நிய பாஷை பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, செய்திகளை அளிக்கும் மனிதரும் ஸ்திரீகளும்.... அவை உண்மையானவை என்று மனிதராகிய உங்களுடன் நானும் விசுவாசிக்கிறேன். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று வேதம் உரைக்கிறது. மேலும் ஏசாயாவின் புத்தகத்தில், ''பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன். இதுவே நீங்கள் பிரவேசிக்க வேண்டும் என்று நான் உரைத்த இளைப்பாறுதல்'' என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரகாரத்தில் (Sanctuary) ஒரு நேரத்தில் ஒரே வரம் கிரியை செய்ய வேண்டுமென்று நான் ஆலோசனை கூறுகிறேன். அப்பொழுது அது, நான் குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒழுங்குக்கு நம்மை மறுபடியும் கொண்டு வரும். ஒருவர் பேசிக் கொண்டிருந்தால், தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கட்டும். உங்களுக்கு புரிகிறதா? இப்பொழுது, கிறிஸ்துவின் சரீரத்துக்கு ஊழியத்தைப் பெற்றுள்ளார். இவ்வளவு நான் கூறி வந்தது இப்பொழுது செயல் முறைக்கு கொண்டு வரப்படட்டும். கிறிஸ்துவின் சரீரத்துக்கு ஊழியத்தைப் பெற்றுள்ளோர் தங்கள் ஊழியத்துக்கான தருணம் வரும் வரை காத்திருக்கட்டும். ஏனெனில் அது கிறிஸ்துவினிட மிருந்து சபைக்கு அளிக்கப்படும் ஊழியமாகும். நீங்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் ஊழியம் செய்ய முடியாது. ஒரு நேரத்தில் ஒருவர் என்பதாக அது இருக்க வேண்டும். 21பிரன்ஹாம் கூடாரம் இவ்வாறு இருக்க வேண்டும். அந்நிய பாஷை பேசுவோர், பாஷைக்கு அர்த்தம் உரைப்போர், சபைக்கு அளிக்கப்படவிருக்கும் தீர்க்கதரிசனம் உரைப்போர், இவர்கள் அனைவரும் நேரத்தோடே... ஆராதனை துவங்குவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட அறையில் ஒன்றுகூடி, கர்த்தருடைய ஊழியத்துக்காக காத்திருக்க வேண்டும். மேய்ப்பர் சபையோரின் முன்னிலையில் வருவதற்கு முன்பு, தனிமையில் வேதத்தை எடுத்து, அமைதி நிலவும் அவருடைய அறையில் ஆவியில் படித்து, சபையோரிடம் பேசுவதற்கு வெளியே வருவதற்கு முன்பு அபிஷேகம் பண்ணப்பட வேண்டும். இல்லையென்றால், அவர் வெளியே வரும்போது குழப்பத்தில் இருப்பார் (ஆவியின் வரம் பெற்ற ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஸ்திரீயும் கர்த்தருக்கு முன்பாக வரக்கடவர்கள்). மேய்ப்பருக்கு ஒரே ஊழியம் மட்டும் இருப்பதால் - அவர் ஒரு தீர்க்கதரிசி. 'பிரசங்கி' (a preacher) என்னும் அர்த்தமுடைய ஆங்கிலச் சொல் “தீர்க்கதரிசி'' என்று பொருள்படும். அதாவது, வார்த்தையை எடுத்துரைப்பவர். 22வேறொருவருடன் ஒரு பாகமாக ஊழியங்களைக் கொண்டிருப்பவர்கள் - உதாரணமாக ஒருவர் அந்நிய பாஷை பேசுதல், மற்றொருவர் அதற்கு அர்த்தம் உரைத்தல் - ஒருமித்து தங்கள் ஊழியத்திற்காக காத்திருப்பார்களாக. ஒருவர் தனியறையில் தங்கி அந்நிய பாஷை பேசி விட்டு, அதன் பிறகு வெளியே வந்து மற்றவரிடம் அதன் அர்த்தம் என்னவென்று உரைக்கக்கூடாது. அப்படி ஒருவர் செய்வாரானால், அவருக்கு அந்நிய பாஷை பேசும் வரம், அதற்கு அர்த்தம் உரைக்கும் வரம் இரண்டும் இருக்க வேண்டும். பாருங்கள்? அவருக்கு இருக்குமானால், மிகவும் நல்லது, அதை அவ்வாரே நாம் ஏற்றுக் கொள்வோம். நமது சபையிலுள்ள இந்த வரங்களினால் சபையோர் பயனடைய வேண்டுமென்று விரும்புகிறோம். தேவன் அவைகளை நமக்கு அனுப்பினார். அது... இந்த ஆவியின் வரங்களினால் நமது சபை பயனடைய வேண்டுமென்று விரும்புகிறோம். எனவே அந்நிய பாஷை பேசுபவரும், பாஷைக்கு அர்த்தம் உரைப்பவரும் தீர்க்கதரிசனம் உரைப்பவரும், சபை கூடுவதற்கு முன்பாக ஒன்று கூடட்டும். அவர்கள் மாத்திரம் ஒரு அறையில் கூடி, சபைக்கு கர்த்தருடைய ஊழியத்துக்காக காத்திருப்பார்களாக. இது புரிகிறதா? 23பிறகு, இது இப்படி சகோ. நெவில்..... நல்லது, இப்பொழுது இதை நான் .... மன்னியுங்கள், இதை கூற விரும்புகிறேன். சகோ. காலின்ஸ் அந்நிய பாஷை பேசி, சகோ. ஹிக்கர்ஸன் அதற்கு அர்த்தம் உரைப்பாரானால், இருவரும் ஒருமித்து சபைக்கு ஒரு ஊழியத்தைப் பெற்றுள்ளனர். அது சகோ. நெவிலின் ஊழியம் அல்ல, அது சபைக்கு உங்களுடைய ஊழியம். இதை ஒரு உதராணமாகக் கூறினேன். போதகர் தேவனுடைய வீட்டில் தன் ஊழியத்தைச் செய்ய எவ்வளவு சிரத்தை கொண்டுள்ளாரோ, உங்களுக்கும் உங்கள் ஊழியத்தை செய்ய அவ்வளவு சிரத்தை இருக்க வேண்டும். அதை நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் உங்கள் சொந்த அறையில் அதை நீங்கள் தனியாக செய்யக்கூடாது. ஒருவர் அந்நிய பாஷை பேசி மற்றவர் அர்த்தம் உரைத்தால், நீங்கள் இருவரும் ஒன்று கூட வேண்டும். நீங்கள் சபையிலுள்ள ஒரு அறையில் ஒன்று கூடுங்கள். ஏனெனில் இது தனியான ஊழியம், இது பகிரங்கமான ஊழியம் அல்ல. இது சபைக்கு உதவுவதற்காக பாருங்கள்? இது சபைக்கு உதவுவதற்காக, ஆனால் இதை சபையோரின் மத்தியில் செய்யக்கூடாது. நான் உங்களுக்கு சொல்லும் விதமாகவே அது செய்யப்பட வேண்டும். உதாரணமாக, சகோ. காலின்ஸ் அந்நிய பாஷை பேசி, அதற்கு சகோ. ஹிக்கர்ஸன் அர்த்தம் உரைப்பாரானால், வேறொரு சகோதரன் அதை எழுதிக் கொள்ளட்டும். அதன் பிறகு, அது... 24கர்த்தர் வரப்போகிறார் என்று நம்மெல்லாருக்கும் தெரியும், அது நாமனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு இரவும் சகோ. நெவில் எழுந்து நின்று, “இதோ, கர்த்தர் வருகிறார். இதோ, கர்த்தர் வருகிறார்!'' என்றுரைத்தால், அதில் தவறொன்றுமில்லை, பாருங்கள். அவர் போதகர் என்னும் முறையில் மேடையிலிருந்து அதை உரைக்கிறார். அதை ஆதரிக்க அவரிடம் வசனம் உள்ளது. அவர் சபைக்கு போதகராக, தீர்க்கதரிசியாக இல்லை, போதகராக இருப்பாரானால், அவர் கர்த்தருடைய வார்த்தையை நன்றாக படித்து, கர்த்தருடைய வருகையைக் குறித்து கர்த்தருடைய வார்த்தையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதன் மூலம் நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். ஆனால் இதனுடன் அவர் சம்பந்தப்படாத சபையிலுள்ள மற்ற ஊழியம் என்னவென்றால் அந்நிய பாஷை பேசுதல் அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் (அது தீர்க்கதரிசனமாகும்) அல்லது ஒரு தீர்க்கதரிசி பேசுவது, அது வார்த்தையில் எழுதப்பட்டிராத ஒன்றாகவும் அது இருக்கும். போன்றவை - வார்த்தையில் எழுதியுள்ளதை போதகர் உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்; ஆனால் வார்த்தையில் எழுதப்பட்டிராததை அவருக்கு நீங்கள் கூற வேண்டும். உதாரணமாக நீங்கள் ''சகோ. வீலரிடம் என்று கூறுங்கள், கர்த்தர் உரைக்கிறதாவது நாளை அவருடைய மண் நிலத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறுங்கள் ஏனெனில் அங்கு ஒரு லாரி கவிழ்ந்து விடும்,'' அப்படி ஏதோ ஒன்று. அது அப்படி செய்யப்பட வேண்டும். நீங்கள் அந்நிய பாஷை பேசினீர்கள், அவர் அதற்கு அர்த்தம் உரைத்தார். உங்கள் ஊழியம் முடிவடைந்தவுடன் அதை எழுதி மேடையின் மேல் வைத்து விடுங்கள். அன்றிரவு, சபை ஆராதனைக்கு பிறகு.... பாடல்கள் பாடத் தொடங்கிய பிறகு, உங்கள் ஊழியம் முடிவடைந்துவிட்டால், என்ன தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதென்று மற்றவர்கள் கூறட்டும். 25நம்மிடம் அப்படிப்பட்டவர்கள் இல்லையென்று எண்ணுகிறேன். உங்கள் மத்தியில் இருப்பார்களானால், இதை அங்கு வைத்து விடுங்கள். இந்த ஜனங்கள் ஒன்று கூடும்போது, ஞானமுள்ளவன் முதலில் வரக்கடவன். ஏனெனில் வேதாகமத்தின்படி, ஒருவன் அந்நிய பாஷை பேசி, வேறொருவன் அதற்கு அர்த்தம் உரைத்தால், அது இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் நிலை வரப்படாமல் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அது கர்த்தருடைய வார்த்தையென்று இரண்டு அல்லது மூன்று பேர்கள் (பாருங்கள்?) சாட்சியுரைக்க வேண்டும். மற்ற ஊழியங்களைப் போல் இந்த சிறுபான்மை ஊழியங்களில் தவறான ஆவிகள் நுழைந்து விடுகின்றன. பாருங்கள், அவை பறந்து அங்கு வந்து விடுகின்றன. அது நமக்கு வேண்டாம். இப்படிப்பட்ட ஊழியங்கள் தவறு என்று நாம் அம்பலப்படுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில் தேவனுடையதாயுள்ள எதுவும்... அதை அம்பலப்படுத்துவதில் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் அது தேவனுடையதாயிருக்குமானால், அது பரீட்சைக்கு நிற்கும். போதகர் செய்வது போல், யாராகிலும் அவருக்கு வார்த்தையின் பேரில் சவால் விட்டால், அவர் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை. அவர் என்ன பேசுகிறார் என்பதை நன்கு அறிந்தவராய் சவால் விடுபவனிடம் “இங்கே வாருங்கள்'' என்பார். பாருங்கள்? அவ்வாறே இந்த மற்ற ஊழியங்களும் அதேவிதமாக அமைந்திருக்க வேண்டும். 26இப்பொழுது, ஒருவன் அந்நிய பாஷை பேசி ஒரு செய்தியை அளித்தால்.... சிலர் தங்களுக்கு பக்திவிருத்தி உண்டாவதற்காக அந்நிய பாஷையில் பேசி நல்ல ஒரு தருணத்தை அனுபவிப்பதாக வேதம் கூறுகிறது. அவர்கள் உணர்ச்சியோடு அந்நிய பாஷை பேசுகின்றனர். அவர்கள் அந்நிய பாஷை பேசுவது உண்மையே, அவர்கள் உண்மையில் அந்நிய பாஷை பேசுகின்றனர், ஆவியானவரே அதை செய்கிறார். ஆனால் அவர்கள் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு தங்களுக்கு பக்தி விருத்தி உண்டாக அந்நிய பாஷை பேசுவார்களானால், அது சபைக்கு பிரயோஜனமற்றதாக இருக்கும். ஒரு மனிதன் அல்லது ஒரு ஸ்திரீ - யார் அந்நிய பாஷை பேசினாலும் - அவர்கள் தங்களுக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறார்கள். பாருங்கள்? அந்நிய பாஷை பேசுதல் என்பது பக்திவிருத்தி உண்டாவதற்காக தேவனால் அளிக்கப்பட்ட வரம். பவுல் வேதாகமத்தில் கூறியுள்ளது போல், அது சபைக்கு பக்திவிருத்தி உண்டாவதற்காக அளிக்கப்பட்டது. எனவே அது, வேதாகமத்தில் எழுதப்பட்டதற்கு புறம்போயுள்ள, தேவனிடத்திலிருந்து சபைக்கு நேரடியாக வரும் ஒரு செய்தியாக இருக்க வேண்டும். அது ஏதோ ஒரு.... 27நீங்கள் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே, நான் எவ்வகையில் ஞானஸ்நானம் பெற வேண்டும்?'' என்று கேட்பீர்களானால், நான் உடனே உங்களுக்கு பதிலுரைக்க முடியும். நீங்கள் அந்நிய பாஷையில் பேசி அதை எனக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அதை எவ்விதம் பெற வேண்டுமென்று வேதாகமத்தில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. பாருங்கள்? எனக்கு அவசியமில்லை..... நீங்கள் என்னிடம் அந்த கேள்வி கேட்டு, வேறு யாராகிலும் அந்நிய பாஷை பேசி அதை உங்களுக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. பாருங்கள், அது ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, நான் என்ன செய்ய வேண்டும், நான் இந்த சபைக்கு செல்ல வேண்டுமா அல்லது வேறொரு சபைக்கு செல்ல வேண்டுமா என்னும் தீர்மானத்தை செய்ய வேண்டியவனாயிருக்கிறேன்,'' அப்படி ஏதோ ஒன்று, அல்லது, ''நான் இதை செய்ய வேண்டுமா, அதை செய்ய வேண்டுமா?'' என்று கேட்பீர்களானால், அதற்கான பதில் தேவனிடத்திலிருந்து வர வேண்டும். பாருங்கள், தேவன் அதை நமக்கு அறிவிக்க வேண்டும். ஆனால், அது வேறொரு ஊழியத்தின் வழியாக வரவேண்டும். ஏனெனில் வார்த்தை, ''ஆர்மன் நெவில் பிரன்ஹாம் கூடாரத்தை விட்டு விட்டு போர்ட் வேயின் காஸ்பல் கூடாரத்திற்கு செல்லட்டும்'' என்று கூறுவது கிடையாது. பாருங்கள், அது இந்த வார்த்தையில் கூறப்படவில்லை, பாருங்கள், அதற்காகத்தான் இந்த வரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 28உதாரணமாக, ஒரு மனிதன் இங்கு வந்து, ''உங்களுக்கு தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கையுண்டா?'' என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் பிரசங்கிக்கிறோம், அதை நாம் விசுவாசிக்கிறோம், நாம் எண்ணெய் பூசி ஜெபம் செய்வதில் விசுவாசம் கொண்டுள்ளோம். ஆனால் ஒருவர் வந்து, ''எனக்கு சுகம் கிடைக்கவில்லை, காரணம் என்ன?' என்று கேட்பாரானால், அந்நிய பாஷை, அர்த்தம் உரைத்தல், தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்ற ஏதாவதொன்றின் மூலம் தேவன் அவருடைய வாழ்க்கையை ஊடுருவி, அவர் செய்த காரியத்தை வெளியே கொண்டு வந்து அதை அவரிடம் கூறுகிறார். அந்த ஊழியம் போதகரைச் சேர்ந்ததல்ல, அது இந்த வரங்களைச் சேர்ந்தது. ஆனால் அவை கூட்டத்தில் செய்யப்படக் கூடாது. புரிகின்றதா? 29பவுலுக்கு ஒரு முறையாவது இதைக் குறித்து எபேசு சபைக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் ஒழுங்கைக் கடைபிடித்தனர். ரோமர் சபைக்கோ வேறெந்த சபைக்கோ அவன் இதைக் குறித்து கூறவில்லை, கொரிந்து சபைக்கு மாத்திரமே. அவர்களால் ஒழுங்கைக் கடைபிடிக்க முடியவில்லை.... அந்நிய பாஷை பேசுவதில் பவுல் நம்பிக்கை கொண்டிருந்தான். எபேசுசபை அந்நிய பாஷை பேசினது, அவ்வாறே கொரிந்து சபையும் (பாருங்கள்), ஆனால் அவனால் எபேசியர்களுக்கு, அந்நிய பாஷை பேசுதல், பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் போன்றவைகளை விடமேலான காரியங்களைப் போதிக்க முடிந்தது. அந்நிய பாஷை பேசுதல், தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்றவைகளின் மூலம் அளிக்கப்பட்ட செய்தியை யாராகிலும் ஒருவர் எழுதி மேடையின் மேல் வைத்தால், இதை பேசி அர்த்தம் உரைத்த மக்களின் ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்னும் செய்தியை போதகர் பிரசங்கத்திற்கு முன்பு படிக்க வேண்டும். அர்த்தம் உரைக்கப்பட்ட விதமாகவே அது நடந்தேறினால், அவருடைய ஆவி நமது மத்தியில் இருப்பதற்காக நாம் கரங்களை உயர்த்தி தேவனுக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். அது நடக்காவிட்டால், அந்த பொல்லாத ஆவி உங்களை விட்டுப் போகும் வரைக்கும் அதை செய்யாதீர்கள். தேவன் பொய் சொல்லமாட்டார், அவர் எப்பொழுதுமே உண்மை பேசுகிறவர். பிறகு, பாருங்கள், நீங்கள் புருஷரைப்போல் நடந்து கொள்ள போதிய வயதுடையவர்களாயிருக்கின்றீர்கள். நீங்கள் ''கூ,கூ,கூ'' என்று சத்தமிடும் குழந்தைகள் அல்ல. நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அர்த்தம் இருக்க வேண்டும். 30இப்பொழுது ஒழுங்குக்கு வந்து கொண்டிருக்கும் சபை, இந்த ஒழுங்கைக் கடைபிடிக்கட்டும். ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்தால்... கல்லாதவன் ஒருவன் உங்கள் மத்தியில் வந்திருக்கும் போது, நீங்கள் அந்நிய பாஷை பேசினால், அவனுக்கு நீங்கள் விளங்காத பாஷை பேசும் காட்டு மனிதனாக இருப்பீர்கள். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று அவனுக்கு விளங்காது. பாருங்கள்? இதைக் குறித்து இந்நாளில் அதிக குழப்பம் இருக்கும் போது, இது இடறலை விளைவிக்கிறது. ஒருவர் அந்நிய பாஷை பேசட்டும். வேறொருவர் அதற்கு அர்த்தம் உரைத்து செய்தியை அளிக்கட்டும். என்ன நடக்கப் போகிறதென்பதைக் குறித்து அது மேடையின் மேல் வாசிக்கப்படட்டும். அது நடக்கும்போது, என்ன நடக்கிறதென்று நீங்கள் காணலாம். ''நாளை குறிப்பிட்ட நேரத்தில் அல்லது அடுத்த வாரம் குறிப்பிட்ட நாளில் ஒருகுறிப்பிட்ட காரியம் நடக்கும்'' என்று அவர்களிடம் கூறுங்கள். அப்பொழுது அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் அவிசுவாசி, நடக்கப் போவதை முன்னறிவிப்பதைக் கேட்கட்டும். அப்பொழுது உங்கள் மத்தியில் என்ன விதமான ஆவி உள்ளதென்று அவர்கள் அறிந்து கொள்வார்கள், அது தேவனுடைய ஆவியாயிருக்கும். பவுல் அதைத்தான் கூறினான்: “ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து இருதயத்தின் அந்தரங்கங்களை வெளிப்படுத்தினால், சபையோர் எல்லாரும் அல்லது அந்த அவிசுவாசி முகங்குப்புற விழுந்து, ''தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறார்'' என்று அறிக்கையிடுவான் அல்லவா?'' என்றான். அவன் பாருங்கள்? ஏனெனில் அது தவறாயிருக்க வழியில்லை.... 31ஆனால் இப்பொழுது நமக்கு வேண்டாம்.... பவுல் கொரிந்தியர்களிடம், ''நான் குழந்தையாயிருந்த போது, குழந்தையைப் போல நடந்து கொண்டேன், குழந்தையைப் போலப் பேசினேன்.'' அவனுக்கு குழந்தையின் மனம் இருந்தது. “நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்து விட்டேன்'' என்றான். இப்பொழுது, உங்கள் எல்லோருக்கும் கூறுகிறேன். பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்த வரங்களையுடைய குழந்தைகளாய் இங்கும் அங்கும் விளையாடிக் கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் நீண்ட காலமாய் பள்ளிக் கூடத்தில் பயின்று வந்திருக்கிறீர்கள். நீங்கள் புருஷராகும் நேரம் இது, எனவே இவைகளை விளையாடுவதற்கென்று உபயோகிக்கக் கூடாது. இந்த வரங்கள் புனிதமானவை, இவை தேவனுடையவை, இவைகளைக் கொண்டு நீங்கள் விளையாடாதீர்கள். தேவன் இவைகளை உபயோகிக்க நாம் இடம் கொடுப்போம். அவ்வாறே உங்கள் ஊழியம் இருக்க வேண்டுமென்று விரும்புவோம், அந்த வழியில் தான் பிரன்ஹாம் கூடாரத்தை நாம் ஊழியத்தில் கொண்டுவர வேண்டும். இதைக் குறித்து எப்பொழுதாகிலும் கேள்வி எழும்பினால், இந்த விதமாகத்தான் பிரன்ஹாம் கூடாரத்தில் செய்யப்பட வேண்டும் என்பதற்கு இந்த ஒலிநாடா சாட்சியாக இருக்கட்டும். இங்கு அந்நியர் வருவார்களானால் இது சபை பாகுபாடற்ற கூடாரம் என்பதால் அந்நியர் எல்லா நேரத்திலும் இங்கு வருகின்றனர். இங்கு வருபவர்களுக்கு இதைக் குறித்த சரியான பயிற்சி அளிக்கப்படாமல் இருக்க வகையுண்டு. அவர்களுக்கு அதிகம் தெரியாது. அவர்களுடைய போதகரின் முன்னிலையில் அவர்கள் குதித்து அவருடைய செய்தியையும் பீட அழைப்பையும் பாழாக்கி, அந்நிய பாஷை பேசி எல்லாவற்றையும் செய்கின்றனர். அவர்களைக் காட்டிலும் நீங்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். பாருங்கள்? ஆராதனை தொடங்கின பிறகு அவர்கள் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டால், அவர்களிடம் செல்ல வேண்டியது டீக்கனின் கடமையாகும். உங்கள் போதகர் அதை செய்ய வேண்டாம். உங்கள் சபையில் டீக்கன்மார்கள் இல்லாமல் போனாலொழிய, இதை கவனித்துக் கொள்ள வேண்டியது ஒரு டீகனே. பாருங்கள்? 32இப்பொழுது, ஆராதனையின் போது.... ஒருவர் எழுந்து நின்று ஒரு செய்தியை அளித்தால், அதற்காக போதகர் ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டு அவரைப் பேச அனுமதிப்பாரானால், நல்லது, பாருங்கள், அது போதகரைப் பொறுத்தது. ஆனால் உடனே டீக்கன், அந்த நபர் கட்டிடத்தை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு, அவரை ஒரு புறம் அழைத்துச் சென்று இதைக் குறித்து சொல்ல வேண்டும். அவர் கேள்வி கேட்கத் தொடங்கினால், உடனே அவரை இந்த ஒலி நாடாவுக்கு அழைத்து சென்று, ''இப்படித்தான் இந்த சபையின் பேராயர் அல்லது கண் காணிப்பாளர்...'' கண்காணிப்பாளர் தான் பேராயர். பாருங்கள், அவ்வாறே வேதத்தில் கூறப்பட்டுள்ளது, ''கண்காணிப்பு'' (bishopric), பாருங்கள். எனவே அவர் சபையின் பொதுவான கண்காணிப்பாளர்...“ இதுவே ஒழுங்கு. இதைத் தான் சபை கடை பிடிக்கிறது. உங்கள் செய்தியை அளிக்க வேண்டுமென்பதே எங்கள் வாஞ்சையாயுள்ளது. நீங்கள் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியை பெற்றிருந்தால்.... அது அளிக்கப்பட்டு, மேடையின் மேல் எழுதிவைக்கப்படட்டும். எங்கள் போதகர் அந்த செய்தியை சபையோருக்கு படித்து காண்பிப்பார்'' என்று கூறுங்கள். ஆனால் அது வேத வசனங்களை மீண்டும் கூறுவதாய் அமைந்திருக்கலாகாது. அது ஏதோ ஒன்று நடக்கப்போவதைக் குறித்தோ, அல்லது அவர்கள் செய்ய வேண்டிய ஒன்றைக் குறித்தோ ஜனங்களுக்கு நேரடியாக வரும் செய்தியாக இருக்க வேண்டும். இதை புரிந்து கொண்டீர்களா? சரி. 33சபையில் ஒழுங்கைக் கடைபிடிக்க, டீக்கன்மார்கள் ஜனங்களை அதைக் குறித்து அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும் முறையைக் காட்டிலும் சிறந்தமுறை வேறெதாகிலும் உண்டா? இல்லை, இப்பொழுது தான் நான் விளக்கினேன். இது மூன்றாம் கேள்வி. டீக்கன்மார்களே, சபையில் தயவாயும் நட்புத்தன்மையோடும் ஒழுங்கைக் காத்துக் கொள்வது உங்கள் கடமையாகும். சபையில் யாராகிலும் ஒழுங்கை மீறினால், அல்லது குடித்து விட்டு சபைக்கு வந்தால், நீங்கள் தான் அதை கவனிக்க வேண்டும். அன்று இரவு மேடையின் மேல் நின்று கொண்டிருந்த போதகர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த குடிகாரன் இரட்டை குழாய் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து அவனுடைய மனைவி எங்கே என்று அலறினான். அவன் போதகரிடம் சென்று அவன் மனைவி எங்கே என்று கேட்டான். போதகர் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அவனுடைய மனைவியைக் காண்பித்தார். போதகர் அவனுடன் ஈடுபடத் தொடங்கினார். அதற்கு பதிலாக துப்பாக்கியைவைத்திருந்த அந்த மனிதன் திரும்பி பிரசங்க பீடத்தில் நின்று கொணிருந்த போதகரை சுட்டு கொன்று விட்டு, தன் மனைவியையும் சுட்டுக் கொன்று விட்டு, தன்னையும் சுட்டுக் கொண்டான். அந்த மனிதன் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த போது ஒரு கூட்டம் டீக்கன்மார்கள் இருந்திருப்பார்களானால் அவர்கள் அவனை இறுகப்பிடித்து அவனுடைய கையிலிருந்து துப்பாக்கியை பிடுங்கியிருப்பார்கள். பாருங்கள்? அவர்களே ஒழுங்கை காக்கும் டீக்கன்மார்கள். இவை எல்லை மீறி நடந்து கொண்டிருப்பதால், நீங்கள் எதையும் எதிர்ப்பார்க்கலாம். ஆனால், ஞாபகம் கொள்ளுங்கள், யார் என்ன நினைத்தாலும், தேவனுடைய சபையில் தேவனுடைய போலீஸ்காரர்கள் டீக்கன்மார்களே. சில நேரங்களில், ஒரு போலீஸ்காரன் தன் நண்பரில் ஒருவனை கைது செய்ய விருப்பங் கொள்ள மாட்டான். ஆனால் அவன் தன் உத்தியோகக் கடமையை நிறைவேற்றுவதாக ஆணையிட்டுள்ளபடியால், அதை எப்படியும் செய்தாக வேண்டும். அது அவன் தன் நகரத்துக்காக நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். பாருங்கள்? 34அவ்வாறே ஒரு டீக்கனும் தன் சபையில் செய்ய வேண்டிய கடமையுண்டு. போதகர் செய்தியை அளித்துக் கொண்டிருக்கும் போது, யாராகிலும் குதிக்கவோ அல்லது அப்படிப்பட்ட வேறொதாவதையோ செய்து போதகரைத் தடை செய்தால், இரண்டு அல்லது மூன்று டீக்கன்மார்கள் அவரிடம் நடந்து சென்று, “சகோதரனே, உம்மிடம் சிறிது பேசலாமா?'' என்று கூறி, பாருங்கள், அவரை சபையிலிருந்து வெளியே இங்குள்ள அலுவலகத்துக்கு, அல்லது வேறொதாவது அலுவலகத்துக்கு, அழைத்து வந்து, ''நீங்கள் தடை செய்யக்கூடாது'' என்று ஆலோசனை கூற வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, ஆராதனை நடப்பதற்கு தடையாயிருந்தால் நாட்டின் சட்டபடி அதற்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். பாருங்கள்? சிலர், உதாரணமாக குற்றம் புரிந்தவர்கள், உங்கள் மத்தியில் வரும்போது, அல்லது மூடமதாபிமானம் கொண்டவர்கள் வந்து இவ்வாறு நடந்து கொள்ளும் போது, டீக்கன்மார்கள்.... டீக்கன்மார்களால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தர்மகர்த்தாக்களில் ஒருவர் அல்லது சபையிலுள்ள வேறு யாராகிலும் சென்று அவர்களுக்கு உதவி செய்யலாம். அது உங்களுக்குத் தெரியும். 35இந்த கேள்வியை நான் மறுபடியும் படிக்கிறேன். சபையில் ஒழுங்கைக் கடைபிடிக்க, மக்கன்மார்கள் ஜனங்களை அதைக் குறித்து அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும் முறையைக் காட்டிலும் சிறந்தமுறை வேறெதாகிலும் உண்டா? இப்பொழுது, எப்பொழுதாகிலும், நான் நினைக்கிறேன். போதகர் அடிக்கடி.... அல்லது இந்த ஒலிநாடாவைப் போடுங்கள். இது சாட்சியாக நிற்கட்டும். டீக்கன்மார்கள் போலீஸ்காரர்கள். அவர்களுடைய சொற்கள் சட்டமும் ஒழுங்குமாம். பாருங்கள்? தேவனுடைய வீட்டை சரியான முறையில் வைத்திருக்க அவர்கள் சபையிலிருந்தும் நாட்டின் சட்டங்களின் மூலமாகவும் அதிகாரம் பெற்றுள்ளனர். டீக்கனின் சொல்லுக்கு முரணாக நடப்பவர் எவருமே இரண்டு ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வகையுண்டு. டீக்கன்மார்கள் அவர்களைப் போகச் சொல்லி அவர்கள் போகாமல் ஒழுங்கற்ற விதத்தில் நடந்து கொண்டால், அவர்களுக்கு என்ன நடக்குமென்று அவர்கள் அறியாமலிருக்கின்றனர்.... அப்படிப்பட்டவருக்கு எல்லா விதமான அபராதமும் விதிக்கப்பட வகையுண்டு. இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படுமானால்... உதாரணமாக யாராகிலும் குதித்து ஒழுங்கை மீறினால் அல்லது அந்நியபாஷை பேசினால், அவர்களை நான் ஒன்றும் செய்யமாட்டேன். பாருங்கள், அவர்கள் செய்யட்டும், ஏனெனில் அவர்கள் அந்நியர். ஆனால் அவர்கள் நமது சொந்த ஜனங்களாயிருந்தால், அப்பொழுது.... அடுத்த நாள் இரவு டீக்கன் மார்களாகிய நீங்கள் இந்த ஒலிநாடாவை வெளியே எடுத்து, ''ஆராதனை தொடங்குவதற்கு முன்பு, சபையின் ஒழுங்கைக் குறித்த ஒலிநாடாவை நாங்கள் போடப்போகிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் அதை புரிந்து கொள்ள வேண்டும்,'' என்று கூறுங்கள். போதகர்களும் நீங்கள் அனைவரும் இவ்வாறு ஒத்துழைக்கலாம். 36இப்பொழுது, சகோ. பிரன்ஹாமே, ஞாயிறு பள்ளியைக் குறித்தென்ன? சகோ. பிரன்ஹாமே, ஞாயிறு பள்ளியைக் குறித்தென்ன? (சரி), அது பிரசங்க ஆராதனைக்கு முன்பு நடத்தப்பட வேண்டுமா? ஆம், அவ்விதம் தான் நாம் எப்பொழுதும் செய்து வருகிறோம். ஞாயிறு பள்ளியை பிரசங்க ஆராதனைக்கு முன்பு நடத்துங்கள். அப்பொழுத ஞாயிறு பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு, அவர்களுக்கு விருப்பமானால், வகுப்பு முடிவு பெற்று, தருணம் உண்டாயிருக்கும்... சிறுவர்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை. அவர்கள் பிரசங்க ஆராதனை முழுவதிலும் உட்கார்ந்து விட்டு அதன் பிறகு ஞாயிறு பள்ளிக்கு வருவார்களானால் களைத்து விடுவார்கள். ஞாயிறு பள்ளி முதலில் நடக்கட்டும். அதற்கென்று ஒரு நேரத்தை குறித்து விடுங்கள். ஞாயிறு பள்ளி நடப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அது குறிப்பிட்ட நேரத்தில் நடக்கிறதா என்று ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளர் கவனித்துக் கொள்ள வேண்டும். அது குறிப்பிட்ட நேரத்தில் முடிவு பெற வேண்டும். ஞாயிறு பள்ளிக்கென்று இவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டு, அதன் பின்பு முடிவு பெற வேண்டும். 37வயது வந்தவர் வகுப்பிற்கான (adult class) ஆசிரியராக, போதகரைத் தவிர வேறு யாராகிலும் இருக்க வேண்டுமா? அவ்வாறு ஒப்புக் கொள்ளப்பட்டால், போதகர் ஞாயிறு பள்ளியில் கற்றுத் தந்து அதன் பிறகு செய்தியை அளிக்க விரும்பினால், அது அருமையானது - அவர் இரண்டு சேவையும் செய்ய விரும்பினால், அவருக்கு விருப்பம் இல்லாவிட்டால், வயது வந்தவர் வகுப்பிற்கு வேறொரு ஞாயிறு பள்ளி ஆசிரியரை நியமியுங்கள் (பாருங்கள்?) போதகருக்கு யாராகிலும் மனதில் இருந்தால், அந்த நபர் ஆசிரியராக இருக்க விரும்பினால், அந்த பள்ளிக்கு முப்பது நிமிடங்கள் அளியுங்கள், அல்லது நீங்கள் அனுமதிக்க விரும்பும் அவ்வளவு நேரம் - முப்பது, அல்லது முப்பத்தைந்து, நாற்பது நிமிடங்கள், அது எவ்வளவானாலும். அங்கு ஒரு மணி வைக்கப்பட வேண்டும். அந்த மணி அடிக்கப்படும்போது, அதன் அர்த்தம் என்னவென்றால்.... அல்லது சபை மணி அடிக்கப்படும்போது, ஞாயிறு பள்ளியை முடித்து விட வேண்டும். அந்த மணி அடிக்கப்படும்போது, எல்லாமே அங்கு ஒழுங்குக்கு வந்து விட்டதென்று அர்த்தம். ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் பாட உங்களுக்கு போதிய நேரம் இருக்கும் - நீங்கள் பாட விரும்பும் பாடல்கள் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். ஜனங்களை நீண்ட நேரம் வைத்துக் கொண்டால் அவர்கள் களைத்து விடுவார்கள். பாருங்கள். மணியை அடித்து, ஒரு பாடலைப் பாடி, அல்லது நீங்கள் செய்யப் போவதை செய்து, பிள்ளைகளை அவர்களுடைய வகுப்புகளுக்கு அனுப்பிவிடுங்கள். நேரம் முடிந்தவுடன் - பத்து, பத்தரை அல்லது பத்தே கால் மணி ஆனவுடன் - மணியை அடியுங்கள். அப்பொழுது ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் வகுப்புகளை முடித்துக் கொண்டு, இங்குள்ள கூட்டத்துக்கு வந்து விடுகின்றனர். அதன் பிறகு... அறிக்கையை கொடுங்கள், ஞாயிறு பள்ளி அறிக்கையை. அதன் பிறகு வகுப்பை முடித்துக் கொள்ளுங்கள். பிரசங்க ஆராதனைக்கு தங்க விரும்புவோர் அனைவரும் அடுத்தபடியாக தங்கட்டும். பாருங்கள். அப்பொழுது அது ஒழுங்கில் அமைந்திருக்கும். 38கேள்வி? எத்தனை... (யாரோ ஒருவர் சகோ. பிரன்ஹாமிடம், ''அப்படியானால் வெவ்வேறு வகுப்புகள் இருக்க வேண்டும், அப்படித் தானே?'' என்று கேட்கிறார் - ஆசி). ஓ, ஆமாம். வெவ்வேறு வகுப்புகள் இருந்தாக வேண்டும். பதினான்கு வயது பையன் புரிந்து கொள்ளும் அளவுக்கு மூன்று வயது சிறுவன் புரிந்து கொள்ள முடியாது. அடுத்த கேள்வி அது தான் என்று நினைக்கிறேன். 39எத்தனை வகுப்புகள் இருக்க வேண்டும்? உங்கள் வகுப்புகளை வெவ்வேறாகப் பிரிக்க வேண்டும்.... உதாரணமாக வரைபடம் மூலம் (flannel graph) விளக்க வேண்டுமென்று விரும்பும் சிறு பிள்ளைகள் வகுப்பு. அதை பதினான்கு வயது பையன் அல்லது பெண் விரும்ப மாட்டார்கள். பாருங்கள்? இந்த சிறு குழந்தைகளுக்கு கற்றுத்தர ஒரு வயதான தாயை அல்லது அவர்களை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அறிந்திருக்கும் யாராகிலும் ஒருவரை அமர்த்த வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு வார்த்தையை எடுத்துரைக்க வல்ல ஒருவரை நியமிக்க வேண்டும். பாருங்கள்? வெவ்வேறு வகுப்புகள் இருக்க வேண்டும். இப்பொழுது கூறப்போனால்.... குறைந்தது மூன்று வகுப்புகளாவது இருக்க வேண்டும். சிறு பிள்ளைகள் வகுப்பு ஒன்று இருக்க வேண்டும், ஏறக்குறைய ஐந்துக்கும் அதற்கு மேற்பட்ட வயதுக்கும். அதற்கு கீழுள்ள குழைந்தைகள் தாயுடன் வைக்கப்பட்டு, அவசியமானால், பிரசங்கத்தின் போது, பாலூட்டும் அறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் - அவர்கள் அழ நேரிட்டால். அதற்காகத்தான் பாலூட்டும் அறை உள்ளது. வகுப்புகள் இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட வேண்டுமென்று எண்ணுகிறேன்: ஐந்து அல்லது ஆறு வயது முதல் எட்டு, ஒன்பது அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு வகுப்பு. பிறகு பத்து வயது முதல் பதினைந்து வயதுடையவர்களுக்கு - வாலிபப் பருவத்தினருக்கான வகுப்பு. பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயது வந்தவர்களின் வகுப்பு. ஏனெனில் அவர்கள். இப்பொழுதெல்லாம் அவ்வயதில் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. மேலும் அந்த வயதில் அவர்கள் வாக்குகள் அளிக்க (Vote, வோட்டு) விரும்புகின்றனர், ஆகவே அவர்கள் வார்த்தையை கேட்க முடிந்தவர்களாக உள்ளனர், அவர்கள் சபை கட்டிடத்துக்கு வந்து அதை பெற வேண்டும். 40யார் ஆசிரியர்களாக இருக்க வேண்டும்? பார்த்தீர்களா, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் உங்களைப் பொறுத்தது. நீங்கள் அதை செய்ய வேண்டும். அவர்களை அங்கு ஒன்று கூட்டி, யாரையாகிலும் தேர்ந்தெடுக்க வேண்டும். சபையை சந்தித்து, ''யார். இங்குள்ள யார் கர்த்தரால் ஏவப்படுகிறீர்கள்?'' என்று கேளுங்கள். அதன் பிறகு தகுதி பெற்ற ஒரு ஆசிரியரை தெரிந்து கொள்ளுங்கள். அது அவ்வாறு செய்யப்படட்டும். சகோதரரே, அது கிரமமாக செய்யப்பட வேண்டும். ஆசிரியருக்கு அதற்கான தகுதி இல்லாமல் போனால், அவரை மாற்றி விடுங்கள். ஆர்மன் நெவில் இங்கு போதகராக இனிமேல் இருக்கத் தகுதியில்லை என்று நான் நினைக்கும் நேரம் ஒன்று, தேவனுக்கு கீழ், வருமானால், அதை நான் சபைக்கு அறிவிப்பேன். டீக்கன் மார்களாகிய நீங்கள் டீக்கன்மார்களாக இருக்கத் தகுதியில்லை என்று என்னை நினைக்கத் தூண்டும் ஒரு காரியத்தை இங்கு நான் காண நேர்ந்தால், “இந்த டீக்கன் செய்யத்தகாத ஒன்றை இங்கு செய்து வருவதாகக் காண்கிறேன். அவருடைய கடமையில் அவர் சரியாக இல்லை'' என்று சபைக்கு அறிவிப்பேன். ஒரு தர்மகர்த்தாவையும் அல்லது வேறு யாரையும் நான் அவ்வாறு செய்வேன். அவர்களை நான் தேர்ந்தெடுக்கவோ அல்லது நீக்கம் செய்யவோ கூடாது, சபை அதை செய்ய வேண்டும். ஆனால் அதை நான் நிச்சயம் சபைக்கு அறிவிப்பேன். பாருங்கள், ஏனெனில் அதைத்தான் நாம் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நான் கண்காணிப்பாளனாக இருக்கிறேன், என்ன நடக்கிறதென்பதை நான் கண்டு அறிந்து கொள்ள வேண்டும். நாம் பரலோகத்துக்கு செல்லப் போகிறோம், இங்கு ஒரு கூட்டத்துக்கு சென்று, ஒருவரையொருவர் கேலி செய்து, கேளிக்கையில் கலந்து கொண்டு, 'பேஸ் பந்து' விளையாட்டு ஆடுவதற்கு அல்ல. பூமியிலேயே மிகவும் கிருபையுள்ள பொக்கிஷமாகிய தேவனுடைய வார்த்தையை நாம் பெற்றிருக்கிறோம். அதை தேவ பக்தியுள்ள ஒழுங்குடன் கடைபிடிக்க வேண்டும். 41யார் ஆசிரியார்களாக இருக்க வேண்டும்? அவர்களைத் தெரிந்து கொள்வது உங்களைப் பொறுத்தது. ஆனால் நான் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு திறம்பட கற்றுத்தரக் கூடிய ஒரு வயோதிப ஸ்திரீயை தெரிந்து கொள்வேன். இளைஞர்களுக்கு ஒழுக்கமுள்ள ஒரு ஆசிரியரை தெரிந்து கொள்வேன் - இங்கு வந்து வீரர் ரோஸ்ட் புசிக்கும் ஒருவரை அல்ல. அவர்கள் மனதை அதிலே செலுத்துவதென்பது... வார்த்தையில் மனதை செலுத்தி, வார்த்தையை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஒருவரை இந்த சபை எதற்கு உறுதியாய் நிற்கிறதென்றால்... 'வீனர் ரோஸ்ட்' நல்லது தான், நீங்கள் வனபோஜனத்துகாக (Picnics) ஒன்று கூடி ஐக்கியம் கொள்ள விரும்பும்போது, அது நல்லது, சிறு பிள்ளைகளை மகிழ்விக்க நீங்கள் அதை செய்ய வேண்டும். ஆனால் இந்த இடத்தில், தேவனுடைய வார்த்தை மட்டுமே. நீங்கள் வேறெங்காவது ஒன்று கூடும்போது 'வீனர் ரோஸ்ட்' புசிக்கலாம், ஆனால் தேவனுடைய வீட்டில் அல்ல. இங்குள்ள நமக்கு, நம்மைச் சுற்றும் நடைபெறும் விருந்துகளிலும் மற்ற கேளிக்கைகளிலும் நம்பிக்கையில்லை, அதை மூடத்தனமாகக் கருதுகிறோம். அதைக் குறித்து நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள். 42ஞாயிறு பள்ளியை ஒழுங்காக நடத்த அதற்கு யார் அதிகாரியாக இருக்க வேண்டும்? ஞாயிறு பள்ளி மேற் பார்வையாளர் (Sunday School Superintendent). அதுதான் அவருடைய வேலை. அவருக்கு டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், போதகர்கள், மற்றவர்களின் ஊழியத்தில் யாதொரு சம்பந்தமும் இருக்கக் கூடாது. அது அவருடைய தனிப்பட்ட உத்தியோகம். உங்கள் ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளர், எல்லா வகுப்புகளும் ஒழுங்காக நடக்கிறதா என்றும், எல்லா ஆசிரியர்களும் வந்திருக்கிறார்களா என்றும் கவனித்து, ஒரு நாள் ஒரு ஆசிரியர் வராமல்போனால், அவருக்கு பதிலாக வேறொரு ஆசிரியரை அந்த வகுப்புக்கு அனுப்ப வேண்டும். ஞாயிறு பள்ளி முடிவடைவதற்கு முன்பு.... பாடங்கள் நடத்தப்படும்போது, ஞாயிறு பள்ளி மேற் பார்வையாளர் அங்கு சென்று எடுக்கப்பட்ட காணிக்கைகளை (ஞாயிறு பள்ளி காணிக்கைகளை கொண்டு வந்து, எத்தனை பேர் பள்ளிக்கு வந்திருந்தனர், வகுப்பில் எத்தனை வேதாகமங்கள் இருந்தன போன்ற விவரங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை தயார் செய்து, பிரசங்க ஆராதனைக்கு முன்பாக நின்று, ஞாயிறு பள்ளி அறிக்கையை படித்து, எத்தனை ஆசிரியர்கள் வந்திருந்தனர், எத்தனை பேர் வகுப்புக்கு வந்திருந்தனர், அவர்களுடைய மொத்த எண்ணிக்கை எவ்வளவு, காணிக்கை தொகை எவ்வளவு போன்ற விபரங்களை அறிவிக்க வேண்டும். டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், போதகர்கள் அதை செய்யக் கூடாது. அவர்களுக்கு இதனுடன் யாதொரு சம்பந்தமுமில்லை. அது ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளரின் வேலை. ஞாயிறு பள்ளிக்கு சில தேவைகள் உள்ளன என்று மேற்பார்வையாளர் கண்டால், அதை அவர் தர்மகர்த்தாக்களின் குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும். முதலில் தர்மகர்த்தாக்கள் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்து இதைக்குறித்து பேச வேண்டும். அதன் பிறகு இதற்கு போதுமான பணம் உள்ளதா என்று பொருளாளர் மூலம் அவர்கள் அறிந்து கொண்டால், இவைகளை வாங்கிக் கொள்ளலாம். ஞாயிறு பள்ளிக்கு சில புத்தகங்கள் அல்லது வேறொதாவது வேண்டு மென்று மேற்பார்வையாளர் நினைத்தால், அல்லது வேதாகமங்கள் தேவைப்பட்டால்: வேதாகமத்திலிருந்து நிறைய வசனங்களை மனப்பாடம் செய்து உரைத்த ஒரு சிறுவனுக்கு வேதாகமத்தை பரிசாக வழங்க வேண்டுமென்று எண்ணி அதை சபையின் மூலம் வாங்க நினைத்தால், அதை அவர்கள் டீக்கன்மார்களிடம் தெரியப்படுத்த வேண்டும்..... அதன் பிறகு பணம் உள்ளதா என்று அவர்கள் அறிந்து கொள்ளட்டும். பாருங்கள்? அந்த ஐந்து கேள்விகளுக்கும் பதில் கூறப்பட்டுவிட்டதென்று நினைக்கிறேன். 43இப்பொழுது, அடுத்த கேள்வி: சகோ. பிரன்ஹாமே, சபை ஒழுங்கு விஷயத்தில், புது பிரதிஷ்டை பண்ணப்பட்டபோது எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒழுங்கைக் கடைபிடிக்க நாங்கள் முயன்று வருகிறோம். அவ்விதம் செய்ததனால் சிலர் கோபங்கொண்டு சபையை விட்டு விலகிச் சென்றனர். வேறு சிலர், முக்கியமாக பிள்ளைகள், நாங்கள் கூறுவதற்கு செவி கொடுக்க மறுக்கின்றனர். பிள்ளைகளைக் குறித்து அவர்களுடைய பெற்றோரிடம் நாங்கள் பேசினோம், அவர்களோ அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை. நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டோமா? அல்லது அதை தவறான விதத்தில் கடை பிடிக்கிறோமா? நன்றி. 44இதற்கு ஒன்றன் பின் ஒன்றாக பதிலளிப்போம். சபை ஒழுங்கு விஷயத்தில், புது சபை பிரதிஷ்டை பண்ணப்பட்டபோது எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒழுங்கைக் கடைபிடிக்க நாங்கள் முயன்று வருகிறோம். இப்பொழுது, அது சரி. நீங்கள் சரியாக செய்கிறீர்கள். இது டீக்கன்மார்களின் கேள்வி என்று நினைக்கிறேன். ஏனெனில் இது டீக்கன்மார்களின் வேலை. சரி. 45அவ்விதம் செய்ததனால் நாங்கள் அடிக்கடி... ஜனங்கள் எங்கள் மேல் அடிக்கடி கோபங்கொண்டனர். அவர்கள் என் மீதும் கோபங்கொள்கின்றனர். அவர்கள் எந்த மனிதனின் மீதும் கோபங்கொள்வார்கள். பாருங்கள்? ஒருவர் அவ்விதம் செய்வாரானால், அவரிடம் ஏதோ தவறுள்ளது, அவர்கள் தேவனுடன் சரியாக இல்லை. ஏனெனில் கிறிஸ்துவின் ஆவி கிறிஸ்துவின் போதனைக்கு, கிறிஸ்துவின் வீட்டுக்கு, கிறிஸ்துவின் ஒழுங்குக்கு கீழ்ப்பட்டுள்ளது. பாருங்கள்? எந்த மனிதனும் ஆலோசனை கூறும் தேவ பக்தியுள்ள டீக்கன் ஒருவரிடம் கோபங்கொள்ளும் எந்த மனிதனும், எந்த ஸ்தரீயும், பிள்ளைகளும்.... டீக்கனிடம் கோபங்கொள்ளும் பெற்றோர் எவரும்.... உண்மையில், எல்லோரும் இந்த சபைக்கு வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது எங்காவது தொல்லையை விளைவிக்குமானால், 'மரக்குவியலில் நுழைந்த முயல்' என்று நாம் கூறுவது போல், அந்த நபர் செய்வது சரியல்ல. அவர்கள் சபையை விட்டு விலகினால் செய்ய வேண்டியது ஒன்று மாத்திரமே. நீங்கள் சென்று அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். டீக்கன் மார்களில் சிலர் அவர்களுடைய சபைக்கு அவர்களுடைய வீட்டிற்கு எப்பொழுதாவது சென்று, அவர் சபையை விட்டுச் சென்ற காரணம் என்னவென்றும், என்ன தவறு நடந்துவிட்டதென்றும் அவர்களிடம் கேட்கலாம். அப்பொழுது அவர்களை... ஒப்புரவாக்க முடியுமா என்று பாருங்கள். உங்களால் முடியாமல் போனால், இரண்டு மூன்று சாட்சிகளை உங்களுடன் கொண்டு சென்று அவர்களுக்கு விளக்கித் தாருங்கள். அவர்கள் விளங்கிக் கொள்ளாமல் போனால், அவர்கள் இந்த சபையின் அங்கத்தினராயிருந்தால், அதை சபையோர் முன்னால் அறிவித்து விடுங்கள். அப்பொழுது அவர்கள்.... 46அவர்கள் சபையின் அங்கத்தினராயிராமல் போனால் - இந்த நமது சபையின் அங்கத்தினராயிராமல் போனால் அவர்கள் ஒழுங்காக இருக்கும்படி செய்ய வேண்டும். பாருங்கள், இங்குள்ள ஒழுங்குக்கு அவர்கள் செவி கொடுத்து கீழ்ப்படிய வேண்டும். ஏனெனில் இது இந்த சபையின் ஒழுங்கு. சில காரியங்களை செய்ய நாம் விரும்புவதில்லை, நான் செய்ய விரும்பாத சில காரியங்கள் இருக்கக் கூடும். ஆனால் இந்த காரியங்கள் செய்யப்பட வேண்டும். இதை நான் கூறுகிறேன் என்று இந்த ஒலிநாடாவின் மூலம் கூறி என்னை அம்பலப்படுத்துகிறேன். அப்பொழுது நான் பேசுவதைக் கேட்பவர்கள், இதை கூறினது நீங்கள் அல்ல, நான் என்பதை அறிந்து கொள்வார்கள். நீங்கள் இந்த கேள்வியை என்னிடம் கேட்டீர்கள். எனக்குத் தெரிந்தமட்டில் தேவனுடைய வார்த்தையிலிருந்து நான் சிறப்பாக பதிலுரைக்கிறேன். “சகோ. பிரன்ஹாமே, இந்த ஜனங்கள் கோபங்கொண்டு நம்மை விட்டுச் சென்றால், வேதம் இவர்களைக் குறித்து என்ன உரைக்கிறது?'' ''அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை. ஆகவே அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள். அதுதான் அதன் முடிவு. ''சபையை விட்டுப் போனார்கள், அதைத்தான் அவர்கள் செய்தார்கள்.'' 47வேறு சிலர், முக்கியமாக பிள்ளைகள், நாங்கள் கூறுவதற்கு செவி கொடுக்க மறுக்கின்றனர். பிள்ளைகள் ஒழுக்கம் அறிந்தவர்களாயிருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் அதைப் படிக்க வேண்டும். என் பிள்ளைகளும் கூட இங்கு வரும்போது ஒழுங்கற்றவர்களாகி விடுகின்றனர். நீங்கள் பட்சபாதம் காண்பிக்க வேண்டாம். அது சாராள், ரெபேக்கா, ஜோசப், பில்லி, யாராயிருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களால் ஒழுங்காக நடந்து கொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் ஒழுக்கம் கற்றுக் கொள்ளும் வரைக்கும் சபைக்கு வரக்கூடாது. இது ஒரு விளையாட்டு அரங்கமல்ல. இது தேவனுடைய வீடு. இது விளையாடுவதற்கோ, ஹாஸ்ய துணுக்குகள் எழுதி, சிரித்து விளையாடுவதற்கோ சறுக்கிக் கொண்டு ஓடுவதற்கோ இடமல்ல. இது தேவனுடைய வீடு, இங்கு தேவ பக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் தொழுது கொள்ள இங்கு வருகின்றீர்கள், ஒருவரையொருவர் சந்திக்க அல்ல. இது திறந்தவெளி இன்பப்பயண (picnic) இடமோ, சந்திக்கும் இடமோ அல்ல. இது பரிசுத்த ஆவி உங்களை சந்திக்கும் இடம்: அவர் என்ன கூறுகிறாரோ அதற்கு செவிகொடுங்கள். ஒருவருக்கொருவர் கூறுவதை அல்ல. இங்கு நாம் ஒருவரோடாருவர் ஜக்கியம் கொள்ளவரவில்லை, கிறிஸ்துவுடன் ஐக்கியங்கொள்ளவே வந்திருக்கிறோம். இது தேவனை தொழுது கொள்ளும் வீடு. பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாய் செய்ய வேண்டும்.... அவருடைய பெற்றோர்கள் செய்ய வேண்டும். இதை அறிந்து கொள்ளுங்கள் இந்த டீக்கன்மார்கள்... பிள்ளைகளின் பெற்றோர் டீக்கன்மார்கள் கூறுவதைக் கேட்காமல் போனால், பெற்றோர்களே திருத்தப்பட வேண்டும். 48பிள்ளைகளைக் குறித்து அவர்களுடைய பெற்றோரிடம் நாங்கள் பேசினோம், அவர்கள் அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை. அவர்கள் இந்த சபையின் அங்கத்தினராய் இருப்பார்களானால், நீங்கள் இரண்டு அல்லது மூன்று பேர்களை உங்களுடன் கூட்டிக்கொண்டு, அந்த பெற்றோரை அலுவலகம் ஒன்றிற்கு தனியே அழைத்துக் கொண்டு வந்து அவரிடம் பேச வேண்டும். அது யாராயிருந்தாலும் எனக்கு கவலையில்லை, அது நானோ, சகோ. நெவிலோ, அது பில்லிபாலும் அவனுடைய சிறுபையனும், அது சகோ. காலின்ஸும் அவருடைய பிள்ளைகளில் ஒருவனும், மற்றுமுள்ள உங்களில் யாராயிருந்தாலும் சரி. நாம்... நாம் ஒருவரிலொருவர் அன்பு கூருகிறோம், ஆனால் நாம் தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். அது 'டாக்'காயிருந்தாலும், அது யாராயிருந்தாலும், நாம் ஒருவரையொருவர் உள்ளே அழைத்து, ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் நேர்மையாயிராமல் போனால், தேவன் எவ்விதம் நம்முடன் ஈடுபட முடியும்? நாம் எவ்விதம் அவருடன் நேர்மையாக இருக்க முடியும்? பாருங்கள்? இந்த ஒழுங்கை நாம் தேவனுடைய வீட்டில் கடைபிடிக்க வேண்டும். அதை எவ்விதம் காக்க வேண்டுமென்று டீக்கன்மார்கள் அறிந்திருக்க வேண்டும். பாருங்கள்? ஆகையால் தான் இவைகளை நீங்கள் சீராக வைத்திருக்க வேண்டுமென்று இப்பொழுது கூறுகிறேன். நீங்கள் பெற்றோரிடம் கூறி அவர்கள் அதற்கு செவிகொடுக்காமல் போனால், நீங்கள் வேறொரு டீக்கனை, அல்லது தர்மகர்த்தாக்களில் ஒருவரை, அல்லது சபையிலுள்ள ஒரு நல்ல மனிதரை அழைத்துச் சென்று சந்தியுங்கள். உங்கள் தர்மகர்த்தா... உங்கள் டீக்கன்மார் குழுவிலுள்ள அனைவரையும் அழைத்து அவர்களிடம், ''சகோ. ஜோன்ஸ், சகோ. ஹெண்டர்ஸன், சகோ. ஜாக்ஸன்'' அது யாராயிருந்தாலும்,'' என்பவர்களுடைய பிள்ளைகள் தவறாக நடந்து கொள்கின்றனர். அவர்களிடம் இரண்டு மூன்று முறை அவர்களுடைய பிள்ளைகளைக் குறித்து சொல்லிப் பார்த்து விட்டோம். அவர்கள் கேட்க மறுக்கின்றனர் என்று சொல்லுங்கள். அதன் பிறகு சகோ. ஜோன்ஸ் அல்லது சகோதரன்: அது யாராயிருந்தாலும், அவரை தனியே அழைத்து, ''சகோ. ஜோன்ஸ், உங்களிடம் பேசுவதற்காக இங்கு அழைத்து வந்தோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள்... நீங்கள் எங்களுடைய ஒரு பாகமாக.... எங்களில் ஒருவராக இருக்கிறீர்கள். இந்த ஒலிநாடாவை நான் போடுகிறேன். இதைக் குறித்து சகோ. பிரன்ஹாம் கூறியுள்ளதை உன்னிப்பாக கேளுங்கள். பாருங்கள். உங்கள் பிள்ளைகள் சரிவர நடந்து கொள்ள நீங்கள் செய்யும்படி உங்களை நாங்கள் கேட்டுக் கொண்டோம். பாருங்கள்? அவர்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் சரியாக நடந்து கொள்ளச் செய்ய உங்களால் முடியவில்லை என்றால், தேவனுடைய வீட்டில் எவ்விதம் சரியாக நடந்து கொள்வது என்று அவர்கள் கற்றுக்கொள்ளும் வரைக்கும், நீங்கள் சபைக்கு வரும்போது அவர்களை யாரிடமாவது விட்டு விட்டு வாருங்கள்'' என்று சொல்லுங்கள். பாருங்கள்? இது ஒரு ஒழுங்கு. இதை கடைபிடித்தாக வேண்டும். பாருங்கள்? 49மற்ற கேள்வி இவ்விதம் உள்ளது: நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டோமா? இல்லை, ஐயா. நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை. அது சரியானது. இதை நான் மறுபடியும் கூறுகிறேன், இந்த கட்டளைகள். இராணுவத்தில் உங்களை, “இதை நீங்கள் செய்வீர்களா?'' என்று கேட்பதில்லை. நீங்கள் இராணுவத்தில் இருந்தால், அதை செய்ய பலவந்தம் பண்ணப்படுகிறீர்கள். பாருங்கள்? அப்படித்தான் இந்த... நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பலவந்தம் பண்ணப்படுகிறேன். மற்ற மனிதர் அல்லது சகோதரர் இதைக்குறித்து என்ன கூறினாலும், இதற்காக நிற்க நான் பலவந்தம் பண்ணப்படுகிறேன். நான் மனதுகளை நோகப்பண்ணவும், மனிதரை துண்டுகளாக வெட்டவும் வேண்டியதாயுள்ளது. நீங்கள் ஆஸ்வால்டைப் போல் ஆக விரும்பமாட்டீர்கள். பாருங்கள்? உங்களால் ஒரு மனிதனுடன் பகிரகங்மாக இணங்க முடியாமல், அவனுடன் கைகுலுக்கி, அப்பொழுதும் அவன் பேரில் வெறுப்பு கொண்டிருப்பீர்களானால், உங்களில் ஏதோ தவறுண்டு. ஒரு மனிதனுடன் நான் இணங்காமல், அவன் மீது கசப்புத்தன்மை கொண்டு, கிறிஸ்து அவனைக் கருதுவது போல் நான் கருதாமல் இருந்தால், என் ஆவியில் ஏதோ தவறுண்டு. எனக்கு கிறிஸ்துவின் ஆவி கிடையாது. பாருங்கள்? அவர், ''நல்லது, சகோ. பிரன்ஹாம், உங்கள் போதனை இப்படி, அப்படி உள்ளது'' என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். 'சரி, சகோதரனே, நீங்களும் நானும் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு விவாதிப்போம். நாம் தனிமையில் இதை விவாதிப்போம். அவர் என்னை துண்டம் துண்டமாக வெட்டுகிறார். நானும் திரும்ப அவரிடம் ஏதாவது கடுமையாக உரைக்க வேண்டியதாயுள்ளது. ஆனால் என் இருதயத்தில் அவன் என் சகோதரன், அவருக்கு உதவி செய்ய முயல்கிறேன்'' என்னும் அவரைக் குறித்து முன்பு கொண்டிருந்த அதே நல்லுணர்வைக் கொண்டிராமல் இருந்தால், அவருக்கு நான் உதவி செய்யவே முடியாது. அவருக்கு உதவி செய்ய எனக்கு ஒரு வழியும் இருக்காது. அவரை நான் நேசிக்காமல் இருந்தால், அங்கு போவதனால் என்ன பயன்? அவரிடம், ''சகோதரனே, முதற்கண் உம்மை நான் நேசிக்கவேயில்லை. அங்கு நாம் செல்வதற்கு முன்பாக, இந்த வெறுப்புணர்வை என் இருதயத்தை விட்டு இந்த இடத்திலேயே நான் எடுத்துப் போடட்டும். உம்மை நான் நேசிக்காமல் போனால், என்னால் உமக்கு உதவி செய்யவே முடியாது'' என்று கூறுங்கள். நீங்கள் செய்வது சரி. அது தான் செய்ய வேண்டிய முறை. பாருங்கள், அதை தொடர்ந்து செய்யுங்கள். அப்படித்தான் அது இருக்க வேண்டும். நீங்கள் அதை தவறாகப் புரிந்து கொள்ளவில்லை. 50அதை தவறான விதத்தில் கடைபிடிக்கிறோமா? இல்லை, நீங்கள் சரியான விதத்தில் தான் அதை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒழுங்கு கடைபிடிக்கப்படட்டும். ஏனெனில் அது தொடர்ச்சியாக.... இப்பொழுது, சிறு பிள்ளைகளும் தாய்மார்களும், சிறு குழந்தைகள் அழுவார்கள், அவர்கள் அதிகமாக அழுது உங்கள் போதகரை தொந்தரவு செய்தால், நீங்கள் தான் அவருடைய மெய்க்காவலர் (body guards) என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் சுவிசேஷத்தில் அவருடைய மெய்க்காவலர். பாருங்கள்? அது கர்த்தருடைய செய்திக்கு தடங்கலை விளைத்தால், டீக்கன்மார்களாயிருக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்நிய பாஷை பேசுகிறவன் தன் கடமையை நிறைவேற்ற வேண்டியவனாயுள்ளது போல அவ்வாறே பிரசங்கம் செய்கிறவன் வார்த்தைக்கு கடமைப்பட்டிருக்கிறான், இவைகளுக்கு கடமைப்பட்டிருக்கிறான். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு உத்தியோகத்தை செய்ய கடமைப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு உத்தியோகத்தை செய்ய கடமைப்பட்டிருக்கிறீர்கள். அதை செய்யத்தான் நாம் இங்கிருக்கிறோம். இதில் நீண்ட நேரம் நிலைத்திருக்க விரும்பவில்லை. இன்னும் சில நிமிடங்களில் நான் ஒருவரைச் சந்திக்க வேண்டும். எனவே என்னால் முடிந்த வரையில் வேகமாக முடிக்க முயல்கிறேன். 51சகோ. பிரன்ஹாமே... இந்த அட்டையில் மூன்று, இரண்டு கேள்விகள் உள்ளன. சகோ. பிரன்ஹாமே, ஜனங்களுக்காக சபையில் காணிக்கை எடுக்கும் விஷயத்தில் கைக் கொள்ளப்பட வேண்டிய கொள்கை என்ன? இதை எவ்விதம் செய்ய வேண்டும்? உங்கள் போதகருக்காக தவிர வேறு யாருக்காகவும் காணிக்கை எடுக்கக் கூடாது என்பது என் கருத்து. யாராகிலும் நன்கொடைக்காக வந்தால், அல்லது அப்படி ஏதாவதொன்று... அல்லது யாருக்காகிலும் அதிக தேவை இருக்கும் பட்சத்தில், உதாரணமாக, இங்குள்ள இந்த சபையின் ஒரு அங்கத்தினருக்கு; நமது சகோதரரில் ஒருவருக்கு தொல்லை ஏற்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அது மேடையிலிருந்து அறிவிக்கப்பட வேண்டும். போதகர் அதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டியது அவருடைய கடமை. ஏதாகிலும் தேவைப்படும் சகோதரர், சபை அதை தீர்த்து வைக்க வேண்டுமென்று விரும்பினால், அதை சபைக்கு தெரியப்படுத்த வேண்டும். யாருக்காகிலும் தேவையிருந்தால், தேவையுள்ள அந்த சகோதரனுக்கு நீங்கள் காணிக்கை எடுக்காதிருந்தால், அப்பொழுது குழுக்கள் ஒன்று கூடி ஆலோசித்து, சபை நிதியிலிருந்து அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க தீர்மானம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் சபை நிதியில் குறைவான பணம் இருந்து அவர்களால் உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அந்த விஷயத்தை விவாதித்து... குழு அதற்கான முடிவு எடுத்து போதகருக்கு அறிவிக்க வேண்டும். போதகர் தேவையைச் சந்திக்க சபையோரிடம் முறையிட வேண்டும். உதாரணமாக, ''நமது சகோ. ஜோன்ஸுக்கு பயங்கரமான விபத்து ஏற்பட்டு, அவருடைய வீடு தீக்கிரையானது. இன்றிரவு, கிறிஸ்தவர் என்னும் முறையில், சகோ. ஜோன்ஸ் தங்குவதற்கு வீட்டை மீண்டும் பெற நாம் ஒவ்வொருவரும் அவருக்கு எவ்வளவு தொகை அளிக்கப் போகிறோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்'' என்று கூற வேண்டும். பாருங்கள், அது வேறென்ன விஷயமாயிருந்தாலும், பாருங்கள், அவ்வாறு நாம் செய்வோம். அது மேடையிலிருந்து அறிவிக்கப்படட்டும். அப்படித் தான் அதை செய்ய வேண்டும். அதன் பிறகு உறுதிப் பணம் சபையின் பொருளாளரிடம் கொடுக்கப்பட்டு, அவர் மொத்த தொகையை அந்த நபரிடம் கொடுப்பார். அந்த நபருக்கு ஒரு ரசீதைத் தாருங்கள். இதற்கு வருமான வரிவிலக்கு உண்டா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒன்றுக்கு வரிவிலக்கு உண்டென்று நினைக்கிறேன். 52ஆனால் ஒரு அந்நியர் உள்ளே வந்து.... ஒரு மனிதன் உள்ளே வந்து, ''என்ன நடந்தது தெரியுமா? நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது, டயர் வெடித்து விட்டது. எனக்கு ஒரு புது டயர் தேவை. அதற்காக இன்றிரவு காணிக்கை எடுங்கள்'' என்று சொன்னால், அதை செய்யக்கூடாது. உதவி செய்ய அது தகுதி வாய்ந்தது என்று காணப்பட்டால், குழு ஒன்று கூடி ஆலோசித்து, அந்த மனிதன் டயர் வாங்க ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க பொருளாளரிடம் சிபாரிசு செய்ய வேண்டும். ஆனால் சபை நிதியில் பணம் குறைவாக இருந்து, அவருக்கு உதவி செய்ய வேண்டுமென்று குழு தீர்மானம் செய்தால் போதகர் இதனுடன் சம்பந்தம் கொள்ளக்கூடாது. டீக்கன்மார்கள் தான் இதை செய்ய வேண்டும், பாருங்கள், அல்லது குழுக்கள். இப்பொழுது இது... உதவி செய்ய வேண்டுமென்று தீர்மானம் எடுக்கப்பட்டால், அதை போதகரிடம் அறிவியுங்கள். அப்பொழுது போதகர் காணிக்கை எடுக்கலாம். ஆனால் கவனியுங்கள், அவர் ஒரு அந்நியராயிருந்து, அது ஒரு அவசர காரியமாயிருந்து, அவருக்கு சிறிது பணம் தேவைப்பட்டு, அது நியாயமான காரியம் என்று உங்களுக்கு தோன்றினால் (இது என் கருத்து), அது ஒரு நியாயமான காரியமாயிருந்தால், அது நியாயமான காரியம் என்று நீங்கள் அறிந்திருந்தால் மட்டுமே... 53நீங்கள் என் வீட்டிற்கு சென்று அங்குள்ள என் கணக்குப் புத்தகங்களை புரட்டிப் பார்ப்பீர்களானால்; ஜனங்கள் என்னிடம் வந்து, ''நான் இன்னின்ன சபையைச் சேர்ந்த சங்கை இன்னார் இன்னார். வழியில் எனக்குத் தொல்லை ஏற்பட்டது. எனக்கு புது டயர்கள் வேண்டும்,'' என்று கேட்கின்றனர். நான் அப்பொழுது தான் கூட்டங்களை முடித்துவிட்டு காணிக்கையுடன் திரும்பி வந்துள்ளேன் என்று அவர்கள் அறிந்து கொண்டுள்ளனர். டயர் வாங்குவதற்கு அவர் கேட்கும் பணத்தை நான் கொடுத்து விடுவேன். ஆனால் பார்க்கப்போனால், அப்படிப்பட்ட ஒரு போதகர் அந்த இடத்தில் இருந்திருக்கவேமாட்டார். இவ்வாறு இத்தனை ஆண்டுகளாக பத்தாயிரம் இருபதாயிரம் டாலர்களை நான், அவர்கள் யாரென்று எங்கிருந்து வருகிறார்கள் என்று அறியாமலேயே கொடுத்திருக்கிறேன். ஆனால் பிறகு பார்க்கும்போது மற்ற போதகர்களும், அவர் என்னையும் கூட வெவ்வேறு காரணத்துக்கு பணம் கேட்டு ஏமாற்றிவிட்டார்'' என்கின்றனர். சபை அந்நியர்களுக்கு பொறுப்பாளிகள் அல்ல. தங்கள் சொந்த அங்கத்தினருக்கு மாத்திரமே. அது உண்மை. அவர்கள் தங்கள் சொந்தமானவர்களுக்கு மாத்திரமே பொறுப்பாளிகள். 54ஆனால் தகுதியுள்ள காரணம் இருக்குமானால், உங்கள் தர்மகர்த்தாக்கள், ''நல்லது, ஒரு நிமிடம் பொறுங்கள். அங்குள்ள கார் இந்த மனிதனுடையதே. அது நடந்ததென்பது உண்மையே. அவர் நமது சபையைச் சேர்ந்தவர் அல்ல. பாருங்கள், ஆனாலும் அது நடந்துள்ளது'' என்று வெளி மனிதரைப் பற்றி விசேஷமாக சிபாரிசு செய்ய விரும்பினால்.... நமக்கு சொந்தமானவர்கள் அல்ல, பாருங்கள், நமக்கு சொந்தமான ஜனங்கள் அல்ல. நமக்கு சொந்தமான ஜனங்களின் தேவைகள், அவர்களுடைய சகோதரரின் மத்தியில் அறிவிக்கப்படலாம். ஆனால் வெளியிலிருந்து ஒருவர் வந்து அவர் பசியாயிருப்பதாகக் கூறினால்... உங்களில் யாராகிலும் பாக்கெட்டில் கைபோட்டு அவருக்கு பண உதவி செய்ய விரும்பினால் அது உங்களைப் பொறுத்தது. ஆனால் நான் சபையிலுள்ளவர்களைக் குறித்துக் கூறுகிறேன். சபையிலுள்ளவர்கள் நன்கொடை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டால்.... 55இங்கு பிரசங்கிக்க ஒரு சுவிசேஷகர் வந்தால், அப்பொழுது நீங்கள் எடுக்கலாம். நீங்கள்.... அவர் வருவதற்கு முன்பே அவருக்கு நீங்கள் காணிக்கை அளிப்பீர்கள். அல்லது சம்பளம் அளிப்பீர்கள், அல்லது அவர் எதை விரும்புகிறோரோ அதை செய்வீர்கள் என்று முன்கூட்டியே தீர்மானம் செய்து விடுகிறீர்கள். ஆனால் வெளியிலிருந்து வந்த ஒரு நபர் இங்கிருந்து, அது ஒரு நியாயமான காரணமாயிருந்தால் போதகர் குழுவும் உதவி செய்ய இணங்கி அதை போதகருக்கு தெரிவித்தால், போதகர், ''ஒரு குறிப்பிட்ட நபர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவரை நமக்குத் தெரியாது, அவர் இங்கு வந்து நம்மிடம் உதவி கேட்டிருக்கிறார். அவருடைய பிள்ளைகள் பசியால் வாடுவதாக அவர் கூறுகிறார். நமக்கு நேரமில்லை.... அவர் கூறுவதை விசாரித்து நோக்க நமக்கு நேரம் இருக்கவில்லை'' என்று கூற வேண்டும். பாருங்கள்? 56அப்படி ஏதாவது இருக்குமானால், அப்பொழுது நமது... நம்மைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு ஏதாவதொன்று எழுந்தால், நமது டீக்கன்மார்கள் சென்று விசாரிக்கலாம். பாருங்கள்? அது உதவிபெற தகுதி பெற்றிருந்தால், உதவி செய்யுங்கள். தகுதி இல்லாமல்போனால், உதவி செய்யாதீர்கள். நீங்கள் உதவி செய்ய வேண்டியதில்லை. ஆனால் அது வெளியிலிருந்து இங்கு வந்துள்ள ஒரு மனிதராயிருந்தால், போதகர் சபையோரிடம், “தர்மகர்த்தாக்கள் குழு இந்த நபரைத் தெரியாதென்று என்னிடம் கூறினார். அந்த மனிதன் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவருடைய பெயர் ஜிம் ஜோன்ஸ் என்பதாக அவர் கூறுகிறார். ''அல்லது அது வேறென்ன பெயரோ அது. அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். திரு. ஜோன்ஸ் அவர்களே, எழுந்து நிற்பீர்களா? திரு. ஜொன்ஸ், ஆராதனையின் முடிவில் நீங்கள் வெளியே செல்லும்போது, அங்கு பின்பக்க வாசலில் நில்லுங்கள். இந்த மனிதனுக்கு ஏதாவதொன்று செய்ய உங்கள் இருதயங்களில் ஏவப்பட்டால், நீங்கள் வெளியே செல்லும்போது அதை செய்யுங்கள்'' என்று கூறவேண்டும். இப்பொழுது புரிந்துவிட்டதா? இதை உங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டீர்களா... ஒலிப்பதிவு செய்பவர். ஒருவர். சகோ. காலின்ஸ் ஒலிப்பதிவு செய்யவில்லை. இதை மறுபடியும் கூறவிரும்புகிறேன். ஏனெனில் அவர் டீக்கன்மார்களில் ஒருவர். 57வெளியிலிருந்து யாராகிலும் ஒருவர் வந்து..... அவருக்கு அவசர உதவி தேவைப்பட்டு, சபையிலிருந்து காணிக்கை பெற விரும்பினால், தர்மகர்த்தாக்கள் அல்லது டீக்கன்மார்கள் ஒன்று கூடி ஆலோசித்து... தீர்மானம் எடுத்து, அதை இந்த விதமாக செய்யலாம் என்று போதகரிடம் கூறக்கடவர்கள். அவர்கள்.... அப்பொழுது போதகர் அந்த மனிதனின் பெயரைச் சொல்லி, ''இவரை நமக்குத் தெரியாது. நம்மைச் சேர்ந்தவர்களுக்கு காணிக்கை எடுப்பதற்கு முன்பாக, அதை நாம் விசாரித்து அறிவது நமது கொள்கையாகும். ஆனால் இங்குள்ள மனிதர் பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும், அவருக்கு ஒரு அவசரநிலை இருப்பதாகவும், பிள்ளைகள் வியாதிப்பட்டிருப்பதால் அவர்களுக்கு மருந்து வாங்க எதுவாயிருப்பினும், இவர் இங்கு இருக்கிறார். ''ஐயா, நீங்கள் நிற்பீர்களா?'' பாருங்கள், அவர் நிற்க பார்த்துக் கொள்ளுங்கள். ஆராதனை முடிந்தவுடன், இவர் முன் வாசலில் நிற்பார். நீங்கள் வெளியே செல்லும்போது, அவருக்கு உதவி செய்ய ஏவப்பட்டால், செய்யலாம். நாங்கள் சபையில் இதை அறிவிக்க மாத்திரம் செய்கிறாம்'' என்று கூறவேண்டும். நீங்கள் அதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை, நீங்கள் அதை அறிவிக்க மாத்திரம் செய்கிறீர்கள். பாருங்கள், அது அந்நியருக்கு அளிக்கப்படும் உபச்சாரம். பாருங்கள்? இப்பொழுது புரிகிறதா? சரி. அந்த கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு விட்டதென்று நினைக்கிறேன். 58ஒலிநாடாக்களைக் குறித்தென்ன? அது இப்படி: ஒலிநாடாக்களைக் குறித்தென்ன? (அது கேள்விக்குறியைக் கொண்டுள்ளது). ஏனெனில் அநேகர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, ஒலிநாடாக்களின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் குறித்து உங்களைக் குறை கூறுகின்றனர். மேலும் திரு. மக்கையர் ஒலிநாடாக்களின் விற்பனைக்கு உரிமை தொகை வழங்கிக் கொண்டிருக்கையில், மற்றவர்கள் சபையில் ஒலிநாடாக்களை விற்கின்றனர். சரி. ஒலிநாடாக்களின் பதிவு ஒரு ஒப்பந்தத்தின் பேரில். நான்.... அந்த ஒப்பந்தம் எப்பொழுது முடிவடைகிறது என்று எனக்குத் தெரியாது. அது தர்மகர்த்தாக்களின் பொறுப்பு; டீக்கன்மார்கள் அல்ல, தர்மகர்த்தாக்கள்; போதகர் அல்ல, தர்மகர்த்தாக்கள். நான் கேள்விப்பட்டபடி, தர்மகர்த்தாக்களே இந்த ஒப்பந்தத்தை எழுதுகின்றனர். நான் தவறாயிருந்தால், தர்மகர்த்தாக்களே என்னைத் திருத்துங்கள். ஒலிநாடா பதிவு செய்பவருடன் இந்த தர்மகர்த்தாக்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். ஒரு உரிமையின் (franchise) பேரில் ஒலிநாடாக்கள் பதிவு செய்யப்படுகின்றன. உரிமை பெற்றவரின் அனுமதியின்றி யாரும் ஒலிநாடாக்களைப் பதிவு செய்யவோ அவைகளை விற்கவோ கூடாது. ஏனெனில் சட்டம் அப்படித்தான் கூறுகிறது - அதாவது அது உரிமை பெற்றவரின் உரிமையென்று பாருங்கள்? உரிமை.... உரிமை பெற்றவர் இன்னார் இன்னாரை ஒலி பதிவு செய்ய அனுமதிப்பது அவரைப் பொறுத்த விஷயம். எல்லோரும் பொறுத்தது. ஒலிநாடாக்களை பதிவு செய்து விற்க, உரிமை பெற்றவர் அப்படிப்பட்டவர்களுக்கு கையொப்பமிட்ட அதிகாரம் எழுத்தில் வழங்க வேண்டும். அது சட்டப்படி சரியானது. அந்த மனிதன் அதிகாரம் பெறாமலிருந்தால், உரிமை பெற்றவர் அவரைத் தண்டனைக்குள்ளாக்க முடியும். அவர் தொல்லை விளைவிக்கக் கூடிய தீய மனிதராயிருந்தால், அவரால் அப்படி செய்ய முடியும். அந்த உரிமை பத்திரத்தை நீங்கள் படித்துப் பாருங்கள்... அது பதிப்புரிமை 'காப்பிரைட்' (copyright) போன்றது, பாருங்கள், அதே காரியம் தான். உங்களுக்கு அதை செய்ய அனுமதி கிடையாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும். 59ஒலிப்பதிவு செய்யும் மற்றவர்கள் ஒருக்கால் திரு. மக்கையருடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கக் கூடும். அவர் தான் ஒலிநாடாக்கள் பதிவு செய்வதற்கு உரிமைத் தொகை வழங்குபவர். இப்பொழுது.... இதைக் குறித்து எனக்குத் தெரியாது, ஏனெனில் இவை என்னவென்றும், இது யாரைக் குறிப்பிடுகிறதென்றும் அறிந்து கொள்ள நான் போதிய நாட்கள் உங்களுடன் தங்கியிருப்பதில்லை. திரு. மக்கையருக்கு இப்பொழுதும் அந்த உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் வசிக்கும் அரிசோனாவில் அவர்கள் இப்பொழுதும் கலிபோர்னியாவிலிருந்து இந்த ஒலிநாடாக்களை வாங்குவதாக கேள்விப்படுகிறேன். சகோ. சாத்மன் என்பவர் திரு. மக்கையரின் மாமனார், இங்குள்ள சபையின் நமது சகோதரர். திரு. மக்கையர் இப்பொழுதும் ஒலிப்பதிவுக்கான உரிமை பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன். இப்பொழுது, ஒலிநாடாக்கள் தயார் செய்யும் விஷயத்தில் சிலகாலமாக புகார்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த சபையின் பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஏதாகிலும் புகார் வருமானால், அதை சரிபடுத்த தர்மகர்த்தாக்கள் கடமைப்பட்டிருக்கின்றனர். பாருங்கள்? எக்காரணத்தைக் கொண்டும் எதுவுமே இருக்கக்கூடாது. 60நீங்கள் காணலாம், இந்த அட்டையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்றால்: அவர்கள் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி உங்களைக் குறை கூறுகின்றனர். வெளிப்படையாக கூறினால், இதைக் குறித்து எனக்கு பல கடிதங்கள் வந்துள்ளன. அவர்களால் ஏன் ஒலிநாடாக்களைப் பெற முடியவில்லை என்று நான் அறிய விரும்புகிறேன். அதற்காக உரிமை அளிக்கப்பட்டவருடன் நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிவேன், அதைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் அதனுடன் சம்பந்தம் கொள்ள நான் விரும்பவில்லை. சுவிசேஷத்தை மேலும் அறிவிக்க யாராகிலும் இந்த ஒலிநாடாக்களை உபயோகப்படுத்தக் கூடுமானால், “ஆமென்.'' முதலில், சகோ. ராபர்ஸனும் மற்றவர்களும் ஒலிநாடாக்களை பதிவு செய்தனர். பிறகு சகோ. பீலரும் இன்னும் அநேகரும் அவைகளைப் பதிவு செய்தனர். அதன் பிறகு அநேக ஆண்டுகளாய் இரண்டு பையன்கள், சகோ. மெர்ஸியரும் சகோ. கோடும் பதிவு செய்து வந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் புகார்கள் வந்துள்ளன. ஆனால் அண்மையில் ஒலிநாடாக்களைப் பெற முடியவில்லை என்று அதிகமான புகார்கள் வருவதாகத் தோன்றுகிறது. இதைக் குறித்து ஜனங்கள் நாடு முழுவதிலுமிருந்து தொலைபேசியின் மூலம் என்னிடம் புகார் செய்துள்ளனர். வேறொரு காரியம் என்ன வெனில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவின் மீது பதிவு செய்தல். அவைகளைக் கேட்கும் போது, ஒரு நிமிடம் ஒன்றும் மற்றொரு நிமிடம் வேறொன்றும் உள்ளது. அதன் விளைவாக உங்களால் ஒன்றுமே புரிந்து கொள்ள முடிவதில்லை. 61இந்த ஒலிநாடாக்களை விலை கொடுத்து வாங்குபவர்கள் தரமான ஒலிநாடாக்களை பெறுதல் அவசியம். அதை அவர்கள் பெற்றுக்கொள்ள, ஒலிநாடாக்களை பதிவு செய்து விநியோகம் செய்வோர் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் நமது வாடிக்கையாளர்களும் நமது சகோதரரும் (நமது சகோதரரே நமது வாடிக்கையாளர்கள்) முதல் தரமான ஒலிநாடாக்களைப் பெறுகிறார்களா என்பதில் நாம் கவனமாயிருக்க வேண்டும். ஜனங்களுக்கு திருப்தியா என்று தர்மகர்த்தாக்களாகிய நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு திருப்தி இல்லாமல் போனால், அவர்களுடைய பணம் உடனே திரும்ப செலுத்தப்பட வேண்டும். ஒருவர் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, இந்த ஒலிநாடாக்களுக்காக பல மாதங்களாக காத்திருப்பதாகக் கூறினார். இதற்கு திரு. மக்கையர் என்ன சொல்லுவார் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இதைக்குறித்து ஒன்றுமே தெரியாது. நான்.... இதைக்குறித்து அறிந்திருப்பது என்னுடைய வேலையில்லை. அது ஒலிநாடா விநியோகம் செய்பவரின் வேலையும் தர்மகர்த்தாக்களின் வேலையுமாம். இதில் நான் தலையிட முயலவில்லை, ஆனால் இதைக் குறித்த சட்டம் என்னவென்று உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். அதற்காக விண்ணப்பம் செய்யும் அன்றைய தினத்திலிருந்து இரண்டு, மூன்று, அல்லது நான்கு, ஐந்து நாட்களுக்குள் அவை தபாலில் அனுப்பப்பட வேண்டும். இந்த ஆர்டர்களை அதற்குள் நிறைவேற்றாமல் போனால், அளிக்கப்பட்ட உரிமையை எந்த நேரத்திலும் ரத்து செய்து விடலாம். பாருங்கள்? 62ஆறு மாதங்களுக்கு அல்லது ஓராண்டுக்கு ஒருமுறை இந்த உரிமை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் எப்பொழுது புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதோ, அந்த குறிப்பிட்ட தேதியில் அது புதுப்பிக்கப்பட வேண்டும். உரிமை பெற விண்ணப்பித்தவர்களுக்கு அந்த தேதியை முன் கூட்டியே அறிவித்து, அவர்களை வரும்படி செய்து, அவர்களுடன் பேசி முடிவெடுத்து உரிமை ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். இப்பொழுது, இந்த ஆர்டர்கள் நிறைவேற்றப்பட வேண்டும். பாருங்கள் புகார்கள் வந்துள்ளதால், அவை சரியான விதத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்கள் லியோவையும் ஜீனையும் குறித்து புகார் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் குறித்து புகார் செய்தனர், இப்பொழுது அவர்கள் சகோ. மக்கையரைக் குறித்து புகார் செய்கின்றனர். வேறோருவரையும் குறித்து அவர்கள் புகார் செய்யக்கூடும். அவர்கள் புகார் செய்யக் காரணம் என்னவென்பதை நாம் கண்டு பிடிப்போம். ஒலிநாடாக்களைக் கேட்டு டஜன் கணக்கில் கடிதங்கள் வந்து, அனுப்ப வேண்டிய ஒலிநாடாக்கள் பெட்டிகள் பெட்டிகளாய் குவிந்து போனால்... பாருங்கள், அதற்கான பழிச்சொல் ஒலி நாடாவைத் தயாரிப்பவர் மேல் அல்ல. அது என் மேல் விழுகிறது. இப்பொழுது, கிறிஸ்தவன் என்னும் முறையில், விலை கொடுக்கும் ஜனங்கள் அதைப் பெற்றுக் கொள்கின்றனரா என்று கவனிப்பது என் மேல் விழுந்த கடமையாகும். அதை தர்மகர்த்தாக்களாகிய நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஒலிநாடாக்களின் விலையை உயர்த்தி, தரமான ஒலிநாடாக்களையும், தரமான இயந்திரங்களையும் வாங்கினால் பரவாயில்லை. ஆனால் சரியான விதத்தில் ஒலிநாடாவை தயார் செய்யும் ஒருவர் நமக்கு அவசியம். அதுதான் நமது சிரத்தை. ஒலிநாடா சரியான விதத்தில் தயார் செய்யப்பட வேண்டும். வாடிக்கையாளர் திருப்தியடைய வேண்டும். இல்லையென்றால் முழுவதையும் நிறுத்தி விடுங்கள். நாம் ஒலிநாடாக்களை தயார் செய்ய வேண்டாம், விருப்பமுள்ளவர் எவரும் வந்து பதிவு செய்து கொள்ளட்டும். ஆனால் அவர்கள் அதற்காக ஒரு விலையைக் குறித்திருப்பார்களானால், அவர்கள் கொடுத்த விலைக்கு ஒலிநாடாக்களை பெறுகின்றனரா என்று கவனித்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் அதுவே கிறிஸ்தவ மார்க்கம். அதைக் காட்டிலும் நீங்கள்... 63அவர்கள் சுவிசேஷத்தைக் கேட்க இங்கு வரும்போது, எனக்குத் தெரிந்த மட்டில் சிறந்ததை அவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன். (பாருங்கள்?). அவர்கள் இங்கு வரும்போது, நீங்கள் எல்லோரும் எல்லாவற்றையும் சரிவர செய்ய வேண்டும்மென்று விரும்புகிறேன். ஆகையால் தான் டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், போதகர்களாகிய உங்களிடம் இன்றிரவு, இதன் ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்ற வேண்டுமென்று அறிவுரை கூறுகிறேன். ஏனெனில் தேவனைக் கண்டு கொள்ள ஜனங்கள் இங்கு வருகின்றனர். இவையனைத்தையும் நாம் ஒழுங்கின்படி வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த ஒலிநாடாக்களின் விவகாரத்தை சரிபடுத்த வேண்டும். அவர்கள் விலையை உயர்த்த வேண்டுமானால், இப்பொழுது இரண்டாம் தரம் ஒலிநாடாக்களில் பதிவு செய்து கொண்டிருந்தால், தரமான ஒலிநாடாக்களை வாங்குங்கள். அதற்காக விலையையுயர்த்தினாலும் பரவாயில்லை. அவர்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்றதை பெற்றுக் கொள்ளட்டும். உரிமை தொகையில் எனக்கு ஒரு பைசா பெற வேண்டுமென்று விருப்பமில்லை. அவ்வாறே இந்த கூடாரமும் விருப்பம் கொண்டிருக்கவில்லை. நீங்கள் விருப்பம் கொள்ளக்கூடாது. இந்த உரிமை தொகையில் விருப்பம் கொள்ளக்கூடாது. இந்த உரிமை தொகையில் விருப்பம் கொண்டிராதிருங்கள். அவர்கள் ஒலி நாடாக்களை இங்கு பதிவு செய்வதன் காரணமாக ஒரு சிறு உரிமை தொகையை வழங்கினால் அதை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். சட்டப்பிரகாரம், ஒரு குறிப்பிட்ட உரிமை தொகையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர் திரு. பில்லருக்கும் மற்றவர்களுக்கும் விளக்கினார். அதை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.... நீங்கள் கலந்தாலோசித்து இதை கவனித்துக் கொள்ளுங்கள். அது அனைத்தையும் என்னால் கவனித்துக்கொள்ள முடியாது. அதை நடத்தவேண்டிய முறையை உங்களுக்கு அறிவிக்கிறேன். ''நடத்தவேண்டிய முறை'' என்று நான் கூறினதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். அதை நாம் சரியான விதத்தில் நடத்த விரும்புகிறோம். 64ஒலிநாடாக்களை தயாரிக்க இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் நல்ல இயந்திரம் தேவைப்பட்டால், அதை வாங்குங்கள். அது.... நான் அவர்களிடம், ''நான் சுவிசேஷ ஊழியத்துக்கு வெளியே செல்வதற்கு முன்பாக, நான் என் பிரசங்கங்களை அங்கு பிரசங்கிக்கப் போகிறேன் என்று முன்கூட்டியே அறிவித்து விடுகிறேன். அவை ஏற்கனவே இங்கு...'' என்றேன். உங்கள் அனைவருக்கும் நான் வாக்களித்தேன், அதை நான் மறுபடியும் ஞாயிறு இரவு ஒலிப்பதிவு செய்யப் போகிறேன். அதாவது, “ஒரு புது செய்தியை நான் முதலில் இந்த கூடாரத்தில் தான் பிரசங்கிப்பேன். ஏனெனில் இங்கு அவர்கள் மற்ற இடங்களைக் காட்டிலும் சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்கின்றனர்'' என்றேன். உங்களுக்கு ஞாபக முள்ளதா? இங்கு நான் என் செய்திகளைப் பிரசங்கிக்க வரும் போது, ஒலிநாடா பதிவு செய்பவரிடம் எந்த ஆராதனைகளில் எதை பிரசங்கிப்பேன் என்பதை அறிவித்து விடுகிறேன். அவர்கள் என்னிடம், ''எவைகளை? நீங்கள் எவைகளை பிரசங்கம் செய்யப் போகின்றீர்கள்?'' என்று கேட்கின்றனர். நான் அவரிடம், ”இந்த இரவு இன்னின்னதின் பேரில் பிரசங்கம் செய்வேன்; இந்த இரவு இன்னின்னதின் பேரில்'' என்று கூறி விடுகிறேன். எனவே அவர்கள் ஆயத்தமாகி அதை தயார் செய்து, வெளியே நடக்கும் கூட்டங்களில் பதிவு செய்வதைக் காட்டிலும் சிறந்த முறையில் பதிவு செய்து, வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகின்றனர். இந்த கூடாரத்தில் ஒலி அமைப்பு நன்றாயுள்ளதால், இவை சிறந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன. 65ஆனால் இந்த பெரிய சுவிசேஷ ஊழியங்களுக்கு நான் செல்லும்போது, வெளிநாடுகளில் என்ன பிரசங்கம் செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து நான் திட்டவட்டமாக கூற முடியாது. இதுவே நான் பிரசங்கிக்கும் முதலாம் செய்தியாயிருக்கும் என்று என்னால் கூற இயலாது. ஏனெனில் நீங்கள் செய்திகளைப் பிரசங்கித்துக் கொண்டு வரும்போது, உங்களுக்கு சில... அது உங்களுக்கு பழையதாகி விடுகிறது, அதை கேட்பவர்களுக்கும் அது பழையதாகி விடுகிறது. எனவே நீங்கள் வித்தியாசமான ஒன்றை செய்து, அந்த இடத்துக்கு தேவையான செய்தியை அளிக்க வேண்டியதாயுள்ளது. அவர்கள் வெளிநாட்டு ஊழியத்திலும் இந்த கருவியை உபயோகித்தால், ஒலிநாடாக்கள் நன்றாக வரும். நீங்கள் நல்ல ஒலிநாடாக்களை தயாரித்து, அனுப்புவதற்கு முன்பு, அவைகளைப் போட்டு சரிபார்த்து அனுப்புங்கள். இல்லையென்றால் முழுவதையுமே நிறுத்தி விடுங்கள். நமக்கு அதனுடன் யாதொரு தொடர்பும் வேண்டாம். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த ஒலிநாடாக்களை பதிவு செய்து கொள்ளட்டும். பாருங்கள்? தொடர்ந்து செய்ய விரும்பினால், புகார் எதுவுமே இல்லாதபடி இதை சரிவர செய்யுங்கள், பாருங்கள். நமக்கு புகார்கள் எதுவும் இருக்கக்கூடாது. ஒரு புகார் இருக்குமானால், அதை கவனித்து, சரிபடுத்துவோம். நான் கூடுமான வரைக்கும் வேகமாக முடிக்கிறேன். பில்லியிடம் இரண்டு, இல்லை மூன்று கேள்விகள் உள்ளன. அதன் பிறகு நாம் முடித்து விடுவோம். 66சகோ. பிரன்ஹாமே, சபையில் ஒழுங்கை நிலை நாட்ட ஒரு டீக்கன் எவ்வளவு தூரம் செல்லலாம்? நாங்கள் ஒழுங்கை நிலை நாட்டலாமா? அல்லது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று சகோ. நெவில் எங்களிடம் கூறும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமா? அது சகோ. நெவிலின் வேலையல்ல. அது உங்களுடைய வேலை பாருங்கள்? நீங்கள் சகோ. நெவிலிடம், அவர் என்ன பிரசங்கிக்க வேண்டும், எப்படி பிரசங்கிக்க வேண்டும் என்று கூறுவது கிடையாது. பாருங்கள், அது உங்களுடைய வேலை. டீக்கன்மார்களாகிய நீங்கள் அதைச் செய்ய வேண்டும், அதை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். அது சகோ. நெவிலுடன் சம்பந்தப்பட்டதல்ல. அது உங்களுடைய வேலை. பாருங்கள்? தெருவிலுள்ள ஒரு போலீஸ்காரன், காரின் பின் பக்கத்திலுள்ள பொருளைத் திருடும் ஒரு மனிதனைக் காணும்போது, அவன் நகராண்மைக் கழகத் தலைவரை அழைத்து, ''நகராண்மைக் கழகத் தலைவரே, மதிப்பிற்குரியவரே, ஐயா, இந்த காவற்படையில் நான் உமக்காக வேலை செய்கிறேன். தெருவில் ஒரு மனிதன் நேற்றிரவு காலின் டயர்களைத் திருடுவதைக் கண்டேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று வியக்கிறேன், அதைக் குறித்து உம்முடைய கருத்து என்ன?'' என்று கேட்க வேண்டுமா என்ன? ஊ! பாருங்கள்? பாருங்கள், அது புத்திசாலித்தனம் அல்ல. அது அவ்வாறு இருக்குமா? இருக்காது, ஐயா! அவன் தவறு செய்தால், அவனைக் கைது செய்ய வேண்டும். அவ்வாறே சபையில் யாராகிலும் தவறு செய்வதை நீங்கள் காணும்போது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் நல்லவிதமாக பேசுங்கள், அதிகாரத் தோரணையில் பேச வேண்டாம். அவர்கள் செவி கொடுக்க மறுத்தால், நீங்கள் சொல்வதை அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் சொல்லுங்கள். பாருங்கள்? உதாரணமாக, ஒரு பிள்ளை தவறாக நடந்து கொள்வதைக் காணும்போது, ''நடந்து உன் இடத்துக்கு போ'' என்று சொல்லுங்கள். டீக்கன்மார்களே, உங்கள் இடத்தில் இருங்கள்! வையுங்கள். நீங்கள் நான்கு பேர். இரண்டு பேர் முன் பாகத்திலும், அல்லது அப்படி எங்காவது ஓரிடத்தில் உன்னிப்பாக கவனியுங்கள். ஏனெனில் குற்றவாளிகள் போன்றவர்கள் உள்ளே நுழைய வழியுண்டு, பாருங்கள். நீங்கள் ஜாக்கிரதையாயிருந்து, உங்கள் இடத்துக்கு சென்று, அங்கேயே இருங்கள், அதுவே உங்கள் இருக்கை அல்லது ஒருசுவரின் பக்கம் நின்று கொண்டு, உள்ளே வரும் ஒவ்வொருவரையும் ஜாக்கிரதையாக கவனியுங்கள். 67டீக்கன் தேவனுடைய வீட்டை பாதுகாக்கிறவர். யாராகிலும் உள்ளே வரும் போது, அவர்களுடன் பேசுங்கள். அவர்களை வரவேற்க அங்கு இருங்கள், அவர்களுடன் கை குலுக்குங்கள். நீங்கள் போலீஸ்காரர். ''உங்களுக்கு நாங்கள் கழியலறையை காண்பிக்கட்டுமா?'' அல்லது ''நீங்கள் தயவுசெய்து உட்காருவீர்களா? அல்லது ''நீங்கள் இங்கு கர்த்தருக்குள் களிகூர்ந்து ஜெபிக்க விரும்புகிறோம், நீங்கள் இன்றிரவு இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ''அவர்களை 'உட்காரப் பிரியமா, அல்லது பின்னால் உட்கார்ந்து கொள்கிறீர்களா?'' அல்லது எங்காவது, அது உபச்சாரம். ஒரு போலீஸ்காரன் (அதாவது டீக்கன்) இராணுவத்தினருக்கு உள்ள மிலிடரி போலீஸ்காரன் போன்றவர், மரியாதையுடனும் அவசியப்பட்டால் அதிகாரத்துடனும் நடந்து கொள்வது. பாருங்கள்? மிலிடரி போலீஸ் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். அவன் தன் அதிகாரத்தை பயன்படுத்தினால்; அது ஒரு இராணுவ குருவானவரைப் போல் என்று நினைக்கிறேன். பாருங்கள்? அது மரியாதையுடன் நடந்து கொள்ளுதல், மற்றெல்லாமே. ஆனால் அவருக்கு அதிகாரம் உள்ளது. பாருங்கள், நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். பாருங்கள், அவர் இந்த சிப்பாய்கள் குடித்து விட்டு வரும்போது, இராணுவ போலீஸ்காரன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களுடன் ஈடுபடுகிறான். அப்படித்தான் டீக்கனும் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களுடன் ஈடுபட வேண்டும். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், டீக்கன் ஒரு போலீஸ்காரன். டீக்கனின் உத்தியோகம் சபையிலுள்ள மற்றெல்லா உத்தியோகங்களைவிட மிக கண்டிப்பு வாய்ந்தது. டீக்கனின் உத்தியோகத்தைக் காட்டிலும் மிக கண்டிப்பான உத்தியோகத்தை நான் அறியேன். அது உண்மை, ஏனெனில் அவருடைய வேலை கடினமானது. அவர் தேவனுடைய மனிதன். போதகர் தேவனுடைய மனிதனாயிருப்பது போல், இவரும் தேவனுடைய மனிதன். நிச்சயமாக அவர் தேவனுடைய ஊழியக்காரன். 68தர்மகர்த்தாக்கள், ஒரே காரியம் என்னவெனில், அவர்கள் பொருளாதாரத்தை கவனித்துக் கொள்ள தேவனால், அந்த வேலையில் அமர்த்தப்பட்டவர்கள். நான் ஒலிநாடாக்களை குறித்து உங்களிடம் கூறினேன், இன்னும் நடந்து கொண்டிருக்கும் மற்ற காரியங்கள், கட்டிடங்கள் பழுது பார்த்தல், இவைகளுக்குப் பணம் வழங்குதல் சொத்துக்கள், பணம் போன்றவைகளை கவனித்துக்கொள்ளவே தர்மகர்த்தாக்கள் உள்ளனர். டீக்கன்மார்கள் இதில் சம்பந்தப்படக்கூடாது. அவ்வாறே தர்மகர்த்தாக்களும் டீக்கன்மார் உத்தியோகத்தில் தலையிடக்கூடாது. ஆனால் டீக்கன்மார்கள் வேண்டுமானால் தர்மகர்த்தாக்களின் உதவியை ஏதாவது ஒன்றில் நாடலாம், அவ்வாறே தர்மகர்த்தாக்களும் டீக்கன்மார்களின் உதவியை நாடலாம். நீங்கள் எல்லோரும் ஒருமித்து பணிபுரிகிறீர்கள், ஆனால் உங்களுக்கு தனித்தனியே உத்தியோகம் உண்டு. பாருங்கள்? சரி. 69இப்பொழுது, சகோ. நெவிலைக் கேட்காதீர்கள். சகோ. நெவில் ஏதாவதொன்றைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொண்டால், அவர் உங்கள் போதகர், நீங்கள் மரியாதையுடனும் அன்புடனும் அவர், ''சகோ. காலின்ஸ், சகோ. ஹிக்கர்ஸன், சகோ. டோனி, உங்களில் யாராகிலும் ஒருவர், பின்னால் மூலையில் என்ன நடக்கிறதென்று தயவு செய்து பார்ப்பீர்களா?'' என்று கேட்பாரானால், அவர் உண்மையான தேவனுடைய மனிதன் என்னும் முறையில் உங்கள் கடமையைச் செய்யுங்கள். நீங்கள் பிரன்ஹாம் கூடாரத்துக்கோ, அல்லது சகோ. நெவிலுக்கோ எனக்கோ ஊழியம் செய்யவில்லை. நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள்... நீங்கள் அவருக்கே ஊழியம் செய்கிறீர்கள். அவர் அந்த போதகரின் பற்றை மதிப்பது போல், ஊழியத்தில் நீங்கள் கொண்டுள்ள பற்றையும் மதிக்கிறார். அவர் உங்களிடமிருந்து அந்த பற்றை எதிர்பார்க்கிறார்! நமது பற்றை நாம் காண்பிப்போம். 70இப்பொழுது, சில நேரங்களில் அது கடினமாகி விடுகிறது. நான் என் முழு இருதயத்தோடு நேசிக்கின்ற ஒரு போதகர் அப்படி இருக்கிறதை காண்பது சற்று கடினமாக இருக்கிறது, அங்கு உட்கார்ந்திருக்கும் அவரிடம் வெளிப்படையாக கூற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் அன்பின் வழியில், நான் கரம் கொடுத்து அவருக்கு உதவ வேண்டும். பாருங்கள்? அவர்கள் என்னிடம் வந்து, ''சகோ. பிரன்ஹாமே, நீர் மிகவும் அருமையானவர். நீர் ஏன் ஞானஸ்நானம், இந்த, அந்த விஷயத்தில், நித்திய பாதுகாப்பு, சர்ப்பத்தின் வித்து போன்ற உபதேசங்களில் விட்டுக் கொடுத்து ஒத்துப்போகக் கூடாது?'' என்கின்றனர். நான், ''சகோதரனே, உம்மை நான் நேசிக்கிறேன்... நாம் இப்பொழுது வேதாகமத்தை எடுத்துக்கொண்டு, யார் சரி யார் தவரென்று காணலாம். என்னால் அதை...'' என்று கூறினால். அவர், ''ஓ, இல்லை. சகோ. பிரன்ஹாமே, நீர் கூறுவது அனைத்தும் தவறு என்று என்னால் கூறமுடியும்,'' என்று சொல்லி, பாருங்கள், கோபம் கொள்கின்றனர். நான், “ஓ, ஒருக்கால் இருக்கலாம். அப்படி இருந்தால் நீர் நிச்சயம் எனக்கு காட்ட முடியும்... நான் எங்கு தவறாயிருக்கிறேன் என்று உமக்கு தெரியுமல்லவா, அப்படியானால் அதை எனக்குத் காண்பியுங்கள். நான் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்'' என்கிறேன். அதே காரியம் தான், “ஏய், அந்த குழந்தையை உட்காரச் சொல்ல உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது.'' டீக்கன் தேவனுடைய வீட்டின் பாதுகாவலர். பாருங்கள்? இப்பொழுது நீங்கள்.... அவர் தேவனுடைய வீட்டைப் பாதுகாத்து அதை ஒழுங்காக வைக்கிறார். அப்படித்தான் வேதம் கூறுகிறது. டீக்கன் செய்ய வேண்டியது வேறொதாவது இருந்தால், என்னிடம் வந்து கூறுங்கள். பாருங்கள், அதே காரியம், அதை செய்வது உங்கள் வேலை, மற்றவர் அதற்கு ஆதரவு கொடுங்கள். நீங்கள் யாரையும் கேட்கத் தேவையில்லை. அது உங்களுடைய வேலை. நீங்கள் சகோ. நெவிலையோ அல்லது வேறு யாரையும் கேட்காதீர்கள். சபையானது கேட்க... அதாவது கூடாரத்துக்கு கூறை போட வேண்டுமென்று சகோ. நெவில் விரும்புகிறாரா என்று தர்மகர்த்தாக்கள் கேட்கத் தேவையில்லை. பாருங்கள்? இல்லை. இல்லை. அது சகோ. நெவிலுடன் சம்பந்தப்பட்டதல்ல. இது என்னுடனும் சம்பந்தப்பட்டதல்ல, அது உங்களுடைய விவகாரம். டீக்கன்கள் கேட்கத் தேவையில்லை.... 71அவ்வாறே நீங்கள் போதகரிடம், “நீங்கள் எதைக் குறித்து பிரசங்கம் பண்ணப் போக்கிறீர்கள்? நீங்கள் இதை செய்யக்கூடாது'' என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர் தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறார். பாருங்கள், உங்கள் போதகர். பிறகு நீங்கள்... தேவன் நமக்கு அளிக்கும் செய்தியை சகோ. நெவில் பிரசங்கிக்கிறார். நாம் அனைவரும் இதில் ஒன்றுபட்டிருக்கிறோம். நான் சகோ. நெவிலிடம் தவறான ஒன்றைக் கூறினால், அதற்கு தேவன் என்னைப் பொறுப்பாளியாக்குவார். அது உண்மை. பாருங்கள்? எனவே தேவனே இவையனைத்துக்கும் தலைவர். பாருங்கள்? நாம் அவருடைய ராஜ தூதர்களாக, பாருங்கள், இந்த உத்தியோகங்களில் ஈடுபட்டிருக்கிறோம். 72தயவு கூர்ந்து... இது அடுத்த கேள்வி. இன்னும் ஒரு கேள்வி உண்டென்று நினைக்கிறேன். அதன் பிறகு நாம் முடித்து விடுவோம். தயவு கூர்ந்து அந்நிய பாஷை பேசும் வரங்கள் நமது சபையில் எவ்வாறு இயங்க வேண்டும் என்று தயவு கூர்ந்து விளக்குங்கள். அதை நான் ஏற்கனவே செய்துவிட்டேன். சபை எப்பொழுது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அல்லது எப்பொழுது வரங்கள் இயங்க வேண்டும்? இப்பொழு தான் நாம் அதை விவரித்தோம். 73எத்தனை கி-றி-ஸ்-து-ம... உன்னால் இதை படிக்க முடிகிறதா? (பில்லிபால் ''வாத்தியக் கருவிகள் என்று சகோ. பிரன்ஹாமுக்கு படித்துக் காண்பிக்கிறார் - ஆசி). ஓ, வாத்தியக் கருவிகள். ஆர்கனையும் பியானோவையும் தவிர, சபையில் எத்தனை வாத்தியக் கருவிகள் இருக்கலாம்? அது நரம்பு வாத்தியக் கருவிகள் அல்லது என்ன வாத்தியக் கருவிகள் உள்ளதோ, அதை பொறுத்தது. உங்களிடம் என்ன உள்ளதென்றோ, இதன் அர்த்தம் என்னவென்றோ எனக்குப் புரியவில்லை. ஆர்கனும் பியானோவும் சபைக்குச் சொந்தமானவை. பாடல் தலைவர் ட்ரம்பட், கார்னட் போன்ற வாத்தியக் கருவிகள் இருக்க வேண்டும் என்று பிரியப்பட்டால், சபைக்கு வருபவர் யாராகிலும் இந்த வாத்தியக் கருவிகளை வாசிக்க நேர்ந்தால்.... அவர்கள் இந்த வாத்தியக் குழுவில் வாசிக்க இசைந்தால், தர்மகர்த்தாக்களிடம் வாத்தியக் கருவிகளை வாங்கப் பணம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். அது தான் அவர்களுடைய கேள்வி என்று நினைக்கிறேன். வாத்தியக் கருவிகள் வாசிப்பவர்களிடம் சொந்த வாத்தியக் கருவிகள் இருக்குமானால், மிகவும் நல்லது. அவர்களிடம் சொந்த வாத்தியக் குழுவின் உறுப்பினராக ஆக அவர்கள் விரும்பினால், இங்கு எப்பொழுதாகிலும் வந்து எப்பொழுதாகிலும் ஒருமுறை வாசித்துச் செல்பவர் அல்ல. அவர் சபையின் வாத்தியக் குழுவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இன்று இங்கு வாசித்து நாளை வேறெங்கோ வாசித்து, அதற்கு அடுத்த நான் வேறெங்கோ வாசித்து, இப்படியாக எப்பொழுதாகிலும் ஒருமுறை இங்கு வந்து சிறிது வாசிக்கும் ஒருவருக்கு சபை ட்டிரம்பட் வாங்கித் தரக் கூடாது. இல்லை, ஐயா. அவர் இங்குள்ள வாத்தியக் குழுவைச் சேர்ந்திருந்தால், வாத்தியக் குழுவின் தலைவர் வாத்தியக் கருவியை வாங்கிக் கொடுக்க தர்மகர்த்தாக்களிடம் கேட்டுக் கொள்ளலாம். 74டீக்கன்மார்களாகிய நாங்கள் ஜனங்களை பிரகாரத்தில் முன்பும் பின்பும்... தயவு செய்து விளக்குங்கள் (பில்லி பால் சகோ. பிரன்ஹாமுக்கு கேள்வியைப் படித்துக் காட்டுகிறார்: ''சபை ஆராதனைக்கு முன்பும் அதற்கு பின்பும் நாங்கள் ஜனங்களை பிரகாரத்தில் எவ்விதம் அமைதியாக வைத்திருப்பது?'' - ஆசி.) ஓ, சரி. சகோதரரே, இதை நான் ஆலோசனையாக கூற விரும்புகிறேன். இது ஒரு பெரிய காரியம், இதை விவரிக்க நமக்கு அதிக நேரம் இருந்தால் நலமாயிருக்கும். ஏனெனில் இது. இது நமக்கு முக்கியம் வாய்ந்தது, பாருங்கள். இப்பொழுது, சபையானது ஒரு... அவருக்கு விருப்பமானால்... ஜனங்கள் புரிந்து கொள்ள, என்றாகிலும் ஒரு இரவு கூட்டத்துக்கு முன்பு இந்த ஒலிநாடாவைப் போட விரும்பினால், இதைப் போடுங்கள். ஒலிநாடாவின் இந்த பாகத்தை மாத்திரம், முழு ஒலிநாடாவையும் அல்ல, இதை மாத்திரம். இந்த ஒலிநாடாவின் ஒரு குறிப்பிட்ட பாகத்தை ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக நீங்கள் கேட்க விரும்பும் போது, அந்த பாகம் வரும் வரைக்கும் ஒலிநாடாவை இயக்குங்கள். ஏனெனில், இது கேள்விகளைக் கொண்டதாயுள்ளது. இப்பொழுது, நான் கூறினது போன்று, சபையின் டீக்கன்மார்கள் சபையின் போலீஸ்காரர்கள், சபை என்பது பொதுவாகக் கூடி நட்பு கொள்வதற்கும் களியாட்டுகளில் ஈடுபடுவதற்குமான இடமல்ல. சபை என்பது தேவனுடைய பிரகாரம். நாம் இங்கு வரும் காரணம்... நாம் ஒருவரையொருவர் சந்திக்க விரும்பினால், நான் உங்கள் வீட்டிற்கு வரலாம், அல்லது நீங்கள் என் வீட்டிற்கு வரலாம். அல்லது நீங்கள் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் சென்று ஒருவரையொருவர் சந்திக்கலாம். ஆனால் சகோதரரே, சபையில் ஓடியாடி விளையாடி, சம்பாஷணை நடத்துவது சரியல்ல. இங்கு நாம் வரும் போது, நமது மனதிலுள்ள அனைத்தையும் அகற்றி விட்டு வரவேண்டும். அவ்விதம் நாம் இங்கு வருவோமானால்.... 75பல ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் என்ன செய்வது வழக்கம் என்பதை பாருங்கள். சகோதரி கெர்டி அப்பொழுது பியானோ வாசித்தாள். இங்கு நான் அக்காலத்தில் போதகராயிருந்த போது, நானே போதகர், டீக்கன், தர்மகர்த்தா எல்லாமாக ஒரே நேரத்தில் இருந்து, பாருங்கள். எல்லா வேலையும் ஒரே நேரத்தில் இருந்து, பாருங்கள். எல்லா வேலையும் செய்ய வேண்டியதாயிருந்தது. ஆனால் இப்பொழுது நீங்கள் அவ்விதம் செய்யவேண்டிய அவசியமில்லை, பாருங்கள், ஏனெனில் இவைகளைச் செய்ய உங்களுக்கு ஆட்கள் உள்ளனர். ஆனால்..... எனக்கு வாயிற்காப்போர் இருந்தனர். சகோ. சூவர்ட்டும் மற்றவர்களும் வாசல் கதவண்டையில் இருப்பார்கள். அவர்கள் புத்தகங்களை அங்கே வாசலருகில் நாற்காலியின் மேல் அல்லது வேறொதாவதின் மேல் அடுக்கி வைத்திருப்பார்கள். யாராகிலும் உள்ளே வரும்போது, அவர்களுடைய ''கோட்டை மாட்டும் இடத்தை அவர்களுக்குக் காண்பிப்பார்கள், அல்லது அவர்கள் உட்காருவதற்கு இருக்கைகளைக் காண்பித்து உதவுவார்கள். அவர்களிடம் ஒரு பாட்டுப் புத்தகத்தைக் கொடுத்து ஜெப சிந்தையில் இருக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்வார்கள். எல்லோரும் அமர்ந்து ஆராதனை துவங்கும் நேரம் வரைக்கும் அமைதியாக ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். துவங்கும் நேரம் வரும்போது, பியானோ இசைக்கும் சகோதரி கெர்டி எழுந்து சென்று இசையை துவங்குவார்கள். அப்பொழுது ஜனங்கள் ஒன்றாக சேருவார்கள். ஆர்கன் இசைப்பவள் அங்கு சென்று இனிய நல்ல இசையை இசைக்க வேண்டுமென்று உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். அவளால் வர முடியாமல் போனால், அருமையான, இனிய, புனிதமான இசைகொண்ட ஒலிநாடாவைப் போடுங்கள். எனவே ஜனங்களிடம் கூறுங்கள்.... ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தால், டீக்கன்மார்களில் ஒருவர் பீடத்திலுள்ள ஒலிபெருக்கியின் அருகில் சென்று, ''உஷ், உஷ், உஷ்'' என்று சொல்லட்டும். அவர், ''இங்குள்ள இந்த கூடாரத்தில் நீங்கள் வந்து ஆராதிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாம் சத்தம் போடாமல் இசையைக் கேட்போம். உங்கள் இருக்கைக்குச் சென்று, உட்கார்ந்து, பயபக்தியுடன் (பாருங்கள்?) ஜெபித்துக் கொண்டிருங்கள், அல்லது வேதத்தை வாசித்துக் கொண்டிருங்கள். இந்த பிரகாரத்தில் கர்த்தர் வாசம் செய்கிறார். எல்லாரும் பயபக்தியுடன் இருந்து ஆராதிக்க நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் ஆராதனைக்கு முன்பு இங்குமங்கும் ஓடிச் சென்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் ஒன்று கூடுங்கள். நீங்கள் கர்த்தரிடம் பேசவே இங்கு வந்திருக்கிறீர்கள். பாருங்கள், அமைதியாக ஜெபித்துக் கொண்டிருங்கள், அல்லது வேதத்தை வாசித்துக் கொண்டிருங்கள்'' என்று கூறட்டும். 76நான் மார்பிள் சபைக்கு சென்றிருந்த போது... நார்மன் வின்சன்ட் பீல், அவரைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், பாருங்கள். நான் அங்கு சென்றிருந்தேன்... அவர் பெரிய மனோதத்துவ ஆசிரியர் என்று உங்களுக்குத் தெரியும். அவருடைய சபைக்கு நான் சென்றபோது, “என் கூடாரமும் இப்படி செய்தால் நலமாயிருக்கும்'' என்று எண்ணினேன். நீங்கள் உள்ளே பிரவேசிக்கும் போது அந்த டீக்கன்மார்கள் கதவினருகில் நின்று கொண்டிருப்பதைக் காணலாம். அவர்கள் ஞாயிறு பள்ளித்தாளை உங்கள் கையில் கொடுத்து உங்களை உள்ளே அழைத்துச் செல்கின்றனர். உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் மூன்று முறை ஆராதனை நடத்துகின்றனர். அது நானூறு அல்லது ஐந்நூறு பேர்களை மாத்திரமே கொள்ளும். நியூயார்க் ஒரு பெரிய இடம். அவரும் பிரபலமானவர். அவர்கள் ஒரு வகுப்பை பத்து மணிக்கும் மற்றொரு வகுப்பை பதினொன்று மணிக்கும் நடத்தினர் என்று நினைக்கிறேன். அதே பிரசங்கம் மறுபடியும் செய்யப்பட்டது, அதே ஆராதனை, அதே காதிதத்தாள். ஒரு ஆராதனை முடிந்தவுடனே சபையோர் வெளியே செல்வதற்கு ஐந்து நிமிடங்கள் அளிக்கப்பட்டன என்று நினைக்கிறேன்... இவர்கள் வெளியே செல்லும் வரைக்கும் யாருமே உள்ளே வர முடியாது. அதன் பிறகு டீக்கன்மார்கள் கதவைத் திறந்துவிட்டனர், அடுத்த ஆராதனைக்கு சபையோர் நிறைந்தனர். அவர்களுக்கு பழைய ”பெட்டி இருக்கைகள் இருந்தன. கதவைத் திறந்தவுடன் அவர்கள் அப்படி உள்ளே சென்று, இருக்கைகளில் (pews) அமர்ந்தனர். பழைய காலத்து இருக்கைகள். அந்த மார்பிள் சபை இருநூறு ஆண்டுகளாக இருந்த வருகிறதென்று நினைக்கிறேன். 77ஒரு குண்டூசி கீழே விழுந்தால் அதன் சத்தத்தையும் நீங்கள் அந்த சபையில் கேட்கும் அளவுக்கு அது அமைதியாக இருந்தது. ஆர்கனில் முன்னிசை (prelude) இசைக்கப்படுவதற்கு முன்பு குறைந்தது அரைமணி நேரம் எல்லோரும் ஜெபத்தில் தரித்திருந்தனர். “இது எவ்வளவு நன்றாயுள்ளது” என்று நான் நினைத்துக் கொண்டேன். பிறகு அந்த போதகர்... அந்த முன்னிசை ஏறக்குறைய... அவர்கள் ''நீர் எவ்வளவு பெரியவர்'' என்னும் முன்னிசையை அல்லது வேறொதோ ஒரு பாடலை ஏறக்குறைய மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்கு ஆர்கனில் வாசித்தார்கள் என்று நினைக்கிறேன். அதை வாசிக்கத் தொடங்கினபோது, எல்லோரும் ஜெபம் செய்வதை நிறுத்திவிட்டு அந்த முன்னிசையை கேட்டுக் கொண்டிருந்தனர். பாருங்கள், அது ஜெபத்திலிருந்து முன்னிசைக்கு ஒரு மாற்றத்தை அளித்தது. அவர்கள் அதை வாசித்து முடிந்த பின்பு, பாடற்குழு, அதன் பிறகு சபையோரும் பாடற்குழுவும் சேர்ந்து ஒரு பாடலைப்பாடினர். அதன் பிறகு அவர்கள் ஞாயிறு பள்ளி வகுப்புக்கு ஆயத்தமாயினர். பாருங்கள்? பிறகு ஆராதனை முடிந்தது. அங்கு தெய்வீக வழிபாட்டைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. அதற்காகவே நாம் அங்கு செல்கிறோம். 78நமது சபையும் அதை பின்பற்றினால் நலமாயிருக்கும் என்று நினைக்கிறேன். இதைக்கூற விரும்புகிறேன். நாம் அவ்விதம் செய்யப் போகிறோம். பாருங்கள்? அதை நாம் செய்வோம். யாராகிலும் செய்யும் ஒன்று. அது நல்லதாயிருக்குமானால், நாமும் அதைச் செய்வோம். பாருங்கள்? நல்ல காரியம் எதையும் நாம் தள்ளிவிட விரும்பவில்லை, அதை நாம் எப்படியும் செய்வோம். பாருங்கள்?நீங்கள் சென்று அங்கு நின்று கொள்ளுங்கள். அவர்கள் காலையில் தொடங்கினால், ஜனங்கள் இங்குமங்கும் செல்லத் தொடங்கினால், யாராகிலும் ஒருவர் டீக்கன்மார்களில் ஒருவர் - அங்கு சென்று, ''இங்குள்ள கூடாரத்தின் சட்டதிட்டம் என்னவென்றால்...'' என்று கூறட்டும். அவர்கள் அவ்விதம் இங்கு செய்கின்றனரா என்று எனக்குத் தெரியவில்லை, அவர்கள் செய்யக் கூடும். நான் இங்கு இருப்பதில்லை, பாருங்கள், ஆகையால் எனக்குத் தெரிவதில்லை. ஆராதனைகள் தொடங்குவதற்கு முன்பு இங்கு நான் வருவதில்லை. அவர்கள் சபைக்குள் வந்து பேசத் தொடங்கினால் யாராகிலும் எழுந்து சென்று, ''உஷ், உஷ், உஷ், ஒரு நிமிடம் என்று சொல்ல வேண்டும். பாருங்கள்? ஒரு சகோதரியை அங்கு அனுப்பி இசை இசைக்கும்படி செய்யுங்கள். இசை இசைக்க யாரும் இல்லையென்றால், ஆர்கன் இசை பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவைப் போடுங்கள். நாம் இப்பொழுது... இந்த கூடாரத்தில் ஒரு புதிய நியமம்கைக் கொள்ளப்படுகிறது. ஜனங்கள் உள்ளே பிரவேசித்த பிறகு, குசுகுசுவென்றோ, உரக்க பேசுவதோ கூடாது. பாருங்கள்?'' இன்னும் சில நிமிடங்களில் ஆராதனை தொடங்கும். அதுவரைக்கும் நீங்கள் வேதத்தைப் படியுங்கள், அல்லது தலைகுனித்து மெளனமாக ஜெபியுங்கள்'' என்று கூறுங்கள். சில முறை அவ்விதம் செய்தால், அவர்கள் எல்லோரும் கற்றுக் கொள்வார்கள். பாருங்கள்? பாருங்கள். 79யாராகிலும் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் கேட்கும்போது.... சில முறை அவ்விதம் செய்த பிறகும் சிறிது நேரம் கழித்து யாராகிலும் ஒருவர் பாருங்கள், ஒருவர் மாத்திரம் பேசிக் கொண்டிருந்து, மற்றவர் எவருமே பேசாமலிருந்தால், டீக்கன்மார்களில் ஒருவர் அவரிடம் நடந்து சென்று, ''ஆராதனையின் போது நீங்கள் ஆராதிக்க வேண்டும், பாருங்கள்? என்று சொல்ல வேண்டும். பாருங்கள்,'' பாருங்கள், இது பேசும் வீடல்ல, ஆராதனை செய்வதற்கான வீடு. புரிகின்றதா? அவ்வளவு தான் என்று நினைக்கிறேன். தயவு செய்து விளக்குங்கள்... (ஆம், பார்ப்போம், ஆம்.) டீக்கன்மார்கள் எவ்விதம்... பிரகாரத்தில். ஆம், அவ்வளவு தான். அது உண்மை. அதுதான். 80சரி. இதோ கடைசி கேள்வி: சகோ. பிரன்ஹாமே, ஆராதனையின் துவக்கத்தில் எங்களுக்கு தருணம் இருந்த போது, நான் - நான்... புகா... அவர்களிடம், ''புகார்கள் வந்தன. இது மிகவும் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ''என்னிடம் புகார்கள் வந்தன.'' இல்லையா? (பில்லி பால் 'ஆம்' என்று சொல்லிவிட்டு, சிறு எழுத்துக்களில் எழுதப்பட்ட கேள்வியைப் படிக்க உதவி செய்கிறார் - ஆசி) புகார்கள் வந்தன. ஆராதனையின் துவக்கத்தில் எங்களுக்கு.... (பார்ப்போம்).... எங்களுக்கு பாடல்கள், சாட்சிகள், ஜெபியுங்கள், ஜெப விண்ணப்பங்கள், விசேஷித்த பாடல்கள்... அதன் பிறகு... செய்திக்கு வரும்போது பதினொன்று மணி... அல்லது அதற்கு அதிகமாகவும் ஆகிவிடுகின்றது. இதன் விளைவால் வார்த்தைக்கு அதிக நேரம் இருப்பதில்லை. சிலர் அமைதியற்ற நிலை அடைந்து ஆராதனை முடியும் முன்பே போய் விடுகின்றனர். எத்தனை பாடல்கள் பாட வேண்டும், செய்தியை எத்தனை மணிக்குத் தொடங்க வேண்டும் என்பதைக் குறித்து விவரித்துக் கூறுங்கள். சில நேரங்களில் எங்களுக்கு ஜெப விண்ணப்பங்கள் இருந்து, அது சாட்சி கூட்டமாக முடிவடைகிறது. சில காரியங்கள்... அந்த நேரத்துக்கு சரியென்றுபடவில்லை. 81இப்பொழுது, இதை சரியாகப் படித்தேன் என்று நம்புகிறேன். இதை படிக்க பில்லி எனக்கு உதவி செய்தான். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கேட்கும்போது நீங்கள்... நமது மத்தியிலுள்ள யாராகிலும்... கூட்டத்தில், பின்பு எப்பொழுதாகிலும் இந்த ஒலிநாடாவைக் கேட்க நேரிட்டால், இந்த கேள்வியைப் படிக்க பில்லி எனக்கு உதவி செய்வது தான் இது. ஏனெனில் இது மிகவும் சிறியதாக எழுதப்பட்டிருந்ததால் என்னால் அதைப் படிக்க இயலவில்லை. அது என்னவென்று பொதுவாக அறிந்து கொண்டேன். அதாவது, ''ஆராதனை துவங்குவதற்கு முன்பு எத்தனை பாடல்களைப் பாட வேண்டும்? ஆராதனை எத்தனை மணிக்கு துவங்க வேண்டும்?'' முதலாவதாக நானே என் தவறை இங்கு அறிக்கையிட விரும்புகிறேன். நான் தவறு செய்யும்போது, ''நான் தவறு என்று ஒப்புக் கொள்ள விரும்புகிறேன். இதை நானே முன்னின்று செய்பவன் என்பதை அறிக்கையிட விரும்புகிறேன். ஏனெனில் இந்த நீண்ட ஆராதனைகளை நான் நடத்தினால், சபையும் அந்த பழக்கத்துக்கு ஆளானது, (பாருங்கள், ஆனால் அப்படியிருக்கக் கூடாது. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நான்... நான் .... “ஞாயிறு இரவு முதற்கொண்டு; இங்கு நான் ஒருவாரம் தங்க நேரிட்டால், என் பிரசங்கத்தை நான் முப்பது அல்லது நாற்பது நிமிடங்களுக்கு மேல் செய்யப் போவதில்லை'' என்று உங்கள் அனைவரிடமும் கூறினேன். 82ஏனெனில் இதை நான் கண்டு கொண்டேன், அதாவது ஒரு பிரசங்கம் .... வல்லமையோடு செய்தி அளிக்கப்படும்போது, அது நல்ல பலனை அளிக்கிறது. ஆனால் நீங்கள் நீண்ட நேரம் பிரசங்கம் செய்தால், ஜனங்களைக் களைப்படையச் செய்து விடுகிறீர்கள், அவர்கள் அதை கிரகித்துக் கொள்வதில்லை. நான் நீண்ட நேரம் பிரசங்கம் செய்யும் காரணம். இதை நான் எப்பொழுதுமே அறிந்திருக்கிறேன். பாருங்கள்? மிகவும் வெற்றி கண்ட பேச்சாளர்கள் குறைந்த நேரம் பேசினவர்களே... இயேசு சொற்ப வார்த்தைகளைப் பேசுபவராயிருந்தார், அவருடைய பிரசங்கங்களை கவனியுங்கள். பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு நிகழ்த்தின பிரசங்கம் ஒருக்கால் பதினைந்து நிமிடங்களே இருந்திருக்கும். ஆனால் அவன் வல்லமையுடன் பிரசங்கித்தது. அதே இடத்தில் மூவாயிரம் ஆத்துமாக்களை தேவனுடைய ராஜ்யத்தில் சேர்த்தது. பாருங்கள்? இந்த விஷயத்தில் நான் குற்றவாளியே. இவ்வாறு நான் செய்யக் காரணம், இதை நான் அறியாமல் இல்லை, ஆனால் நான் பிரசங்கத்தை ஒலிநாடாக்களில் பதிவு செய்கிறேன். இந்த ஒலிநாடாக்கள் வீடுகளில் மணிக்கணக்காக போட்டு கேட்கப்படும். ஆனால் வரும் ஞாயிறன்று, இதை நான் செய்த காரணத்தை; வரப்போகும் இந்த ஞாயிறன்று இவைகளை நான் செய்த காரணத்தை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதை இப்பொழுதே இந்த ஒலிநாடாவில் கூறிவிடுகிறேன். இதை நான் செய்யக் காரணம் இந்த மணி நேரத்தின் செய்திக்காக நான் கொண்டிருந்த மிகுந்த பாரமே. அதை வெளியே அனுப்பிவிட வேண்டுமென்று முனைந்தேன். இப்பொழுது புத்தாண்டு தொடங்கி என் கூட்டங்களில் நான் முப்பது நிமிடங்கள் மாத்திரமே எடுத்துக் கொள்வேன். நான் எங்கு சென்றாலும். நான் கடிகாரத்தை, முப்பது நிமிடங்களுக்கு பிறகு மணி அடிக்கும்படியாக அதை பொருத்திக் கொண்டு, அல்லது மிஞ்சினால் நாற்பது நிமிடங்களுக்கு அதிகமாக இல்லை; அந்த செய்தியை அந்த நேரத்துக்குள் இருதயத்தில் ஊடுருவும்படியாக பிரசங்கித்து, பீட அழைப்பை.... அல்லது நான் என்ன செய்யப்போகிறேனா அதை, ஜெப வரிசையை அழைக்கப் போகிறேன். நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. ஏனெனில் அது ஜனங்களைக் களைப்படையச் செய்கிறது, அது உங்களுக்குத் தெரியும். 83ஆனால் இங்கு பாருங்கள், இந்த ஆண்டு, எழுந்து வெளியே நடந்து சென்ற ஜனங்களின் எண்ணிக்கை ஒரு டஜன் இல்லை என்று நினைக்கிறேன், நான் ஜனங்களை சில சமயங்களில் இரண்டு மூன்று மணி நேரம் பிடித்து வைத்திருக்கிறேன். பாருங்கள்? அது உண்மை. ஏனெனில் உலகம் பூராவும் செல்லும் பிரசங்க ஒலிநாடாக்களை நாம் இங்கு தயாரிக்கிறோம். அங்குள்ள ஜனங்கள் மணிக் கணக்காக உட்கார்ந்து அதைக் கேட்கின்றனர்; ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆப்பிரிக்கா, ஆசியா, இன்னும் மற்ற இடங்களில்லுள்ள போதகர்களும் மற்றவர்களும், பாருங்கள், அதைக் கேட்கின்றனர். ஆனால், பாருங்கள், பிரகாரத்துக்கும், சபைக்கும்... அது பரவாயில்லை. இங்கு நீங்கள் பிரசங்க ஒலிநாடாவை தயாரிக்க நினைத்து, உங்களிடம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய ஒலிநாடா இருக்குமானால், அதில் இரண்டு மணி நேரம் செய்தியை பதிவு செய்யுங்கள்; ஆனால் ஏதாவது ஒரு நோக்கத்துக்காக நீங்கள் பிரசங்க ஒலிநாடாவை தயாரிக்கவில்லை என்றால், செய்தியை சுருக்கிக் கொள்ளுங்கள். ஏன் என்று கூறுகிறேன், சிலர் வேகமாக திருப்தி கொள்வார்கள், ஆனால் சிலர் இப்படிப்பட்ட நீண்ட பிரசங்கங்களில் மட்டுமே திருப்தி கொள்வார்கள், எனவே நீங்கள் இவ்விரண்டிற்கும் இடையே உள்ள நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 84இப்பொழுது, சில நேரங்களில், நாம் சாட்சி கூட்டத்தை நீட்டி நமது ஆராதனைகளை பாழாக்கி விடுகிறோம், நானும் கூட இவ்விதம் செய்து, அதற்கு குற்றவாளி என்பதை அறிந்திருக்கிறேன். நாங்கள் தெருக்கூட்டம் முன்பு நடத்தினபோது, ஒரு வயோதிப சகோதரனிடம் ஜெபம் செய்யக் கேட்டுக் கொள்வோம். அவர் நகராண்மைத் தலைவருக்கும், மாகாண ஆளுநருக்கும், நாட்டின் ஜனாதிபதிக்கும், சுற்றியுள்ள போதகர்களுக்கும், அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் சொல்லி ஜெபம் செய்வார், பிறகு மருத்துவமனையிலுள்ள சகோதரி ஜோன்ஸக்காக, இப்படி பலருக்காக, கூட்டத்திற்கு வந்த தெருவிலுள்ள ஜனங்கள் நடந்து சென்று விடுவார்கள். பாருங்கள். பாருங்கள், அவர் அவர்களைக் களைப்படையச் செய்து விடுவார். நல்லது, ஒரு ஜெபம் மட்டுமே... பாருங்கள், முக்கியமான காரியம் என்னவெனில், உங்கள் ஜெபம் அந்தரங்கத்தில் செய்யப்பட வேண்டும் - உங்கள் முக்கியமான, நீண்ட ஜெபம். உங்கள் ஜெபம் அனைத்தும்... நீங்கள் அறைக்குச் சென்று கதவையடைத்துக் கொள்ளுங்கள், அங்கு தான் நீங்கள் பகல் முழுவதும், இரவு முழுவதுவும், அல்லது இரண்டு மணி நேரம் ஜெபிக்க வேண்டும். ஆனால் இங்கு, உங்களிடம் ஜனங்களின் கவனம் உள்ளபோது, சுருக்கமாக, ஜெபம் செய்யுங்கள். உங்கள் ஆராதனை அனைத்தையும்.... பெரும்பாலான உங்கள் ஆராதனை நேரத்தை அந்த வார்த்தையை பிரசங்கிப்பதில் செலவிடுங்கள். அது தான் முக்கியமான காரியம்! அந்த வார்த்தையை உங்களால் கூடுமானவரைக்கும் ஊடுருவும் வல்லமையுடன் பேசி, பாருங்கள், ஜனங்களுக்கு வார்த்தையை எடுத்துரையுங்கள். 85இப்பொழுது, இதுவே நான் கூறும் ஆலோசனை. இப்பொழுது, இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இந்த குற்றத்தை நானே செய்திருக்கிறேன் என்று அறிக்கையிட்டேன். நான் ஏன் இதை செய்தேன் என்றும் உங்களுக்கு எடுத்துக் கூறினேன். வெளிநாடுகளில் எல்லாவிடங்களுக்கும் அனுப்ப நான் இரண்டு மணி நேரம் பிரசங்கிக்கப்பட்டு ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுவதை மாதிரியாக எடுத்துக் கொண்டு அதை பின்பற்றக் கூடாது. இப்பொழுது, இதுவே நீங்கள் கடைபிடிக்கும் ஒழுங்காக இருக்க வேண்டும். ஒரு உதாரணத்தை அளிக்க விரும்புகிறேன். நான் ஒரு ஆலோசனை கூறினால் பரவாயில்லையா? சபையானது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டு, சபையோர் உள்ளே வரவேண்டும். பாடல்கள் இசைக் கருவியில் வாசிக்கப்படட்டும். எல்லோரும் தொழுது கொள்ள இங்கு வரட்டும், ஒருவரையொருவர் சந்திக்க அனுமதிக்காதீர்கள். ''நீங்கள் வெளியே செல்லுங்கள். ஒருரையொருவர் இங்கு சந்திக்காதீர்கள். சந்திக்க விரும்பினால், உங்களுக்கு சபைக்கு வெளியே உள்ள ஸ்தலம் முழுவதும் உள்ளது. ஆனால் இது தேவனுடைய பிரகாரம், இது சுத்தமாக வைக்கப்படட்டும்,'' என்று கூறுங்கள். இங்கு கர்த்தருடைய ஆவி நம்முடன் இடைபடுமானால், அந்த ஆவியை நாம் காத்துக் கொள்வோம். பாருங்கள்? அது அசைவாடிக் கொண்டிருக்கும். நீங்கள் காத்துக் கொள்ளவில்லையென்றால், அது போய்விடும். அது நிச்சயமாக போய்விடும். அதை நாம் காத்துக் கொள்வோம், அது நம்முடைய கடமை. அதற்காவே இன்றிரவு நான் இங்கு வந்திருக்கிறேன். இவைகளை ஒழுங்கின்படி கடைபிடிப்போம். 86இப்பொழுது பாருங்கள், இதைக் கூற விரும்புகிறேன். வழக்கமாக, நாம் விசேஷித்த பிரசங்கம் செய்தாலொழிய... ஒரு செய்தியை நீங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்யப் போவதாக அவர்களிடம் கூறுங்கள். பாருங்கள்? சகோ. நெவிலிடம் ஒரு செய்தி இருக்கும் பட்சத்தில்... அந்த செய்தியை ஒலிநாடாவில் பதிவு செய்து அவர் ஜனங்களுக்கு அனுப்ப விரும்பினால், ''அடுத்த ஞாயிறு இரவன்று நாங்கள் இரண்டு மணி நேரம் ஒலிநாடாவில் செய்தியை பதிவு செய்யப் போகிறோம், ''மூன்று மணி நேரம் அல்லது எதுவானாலும், ''அடுத்த ஞாயிறு இரவு'' என்று ஜனங்களுக்கு அறிவித்து விடுங்கள். அப்பொழுது அவர்கள் அறிந்து கொள்வார்கள். அதன் பிறகு ஜனங்கள் வரும் போது, “இன்றிரவு நாங்கள் ஒரு செய்தியை ஒலிநாடாவில் பதிவு செய்யப் போகிறோம். இங்கு என்னிடம் ஒரு செய்தி உள்ளது. அதை ஒலிநாடாவில் பதிவு செய்து அனுப்ப நான் ஏவப்படுகிறேன். நான்... இந்த செய்தியை வெளியே அனுப்ப நான் ஏவப்படுகிறேன். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படும். இது இரண்டு மணி நேரம் எடுக்கும், அல்லது மூன்று மணி நேரம் அல்லது எதுவானாலும், அதை கூறி விடுங்கள். ஆனால், வழக்கமாக, வர்த்தகரின் கூட்டங்களைப் போன்ற இடங்களுக்கு செல்லும்போது நான் செய்வது போல், அல்லது ஜெபவரிசை அமைக்கவிருக்கும் கூட்டங்களில் நான் செய்வதுபோல; வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதற்கு முன்பு அன்றிரவு நான் மூன்று மணி நேரம் செய்தி ஒன்றை அளித்தால், அது என்னை என்ன நிலையில் ஆழ்த்தி விடும் என்று பாருங்கள். பாருங்கள்? அடுத்த நாள் இரவு சபையோரில் பாதி பேர் மாத்திரமே வருவார்கள். பாருங்கள்? ஏனெனில் அவர்களால் முடியாது, அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், மற்றவைகளைச் செய்ய வேண்டும். 87இதை ஆலோசனையாகக் கூறுகிறேன். வழக்கமாக நேற்றிரவு சகோ. நெவில் பிரசங்கித்த போது கவனித்தேன். இப்பொழுது, நானறிவேன் நாமெல்லோரும்.... அது திடுக்கிடச் செய்யும் ஒரு செய்தி. நான் குறிப்புகள் எழுதிக் கொண்டேன், அது இங்கு என் சட்டைப்பை, பாக்கெட்டில் உள்ளது, அதை என் செய்திகளில் உபயோகிக்கலாம். அது உண்மை. தப்பிக்க வழி, பாருங்கள், அது ஒரு அற்புதமான செய்தி. அதை அவர் எவ்வளவு வேகமாக முடித்து விட்டார், பார்த்தீர்களா? பாருங்கள், ஏறக்குறைய முப்பத்தைந்து நிமிடங்கள், பாருங்கள், அதை முடித்து விட்டார். பாருங்கள்? அது மிகவும் நல்லது. சகோ. நெவிலின் செய்திகள் வழக்கமாக அவ்விதமாகவே உள்ளன. பாருங்கள், அது நீண்ட செய்தியல்ல. பாருங்கள்? ஆனால் உங்கள் கூட்டத்தை நீங்கள் எங்கு கொன்றுபோட்டு விடுகிறீர்கள் என்றால், செய்திக்கு வருவதற்கு முன்பு உள்ள நீண்ட ஆராதனையே. பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் அவ்விதம் செய்யும் போது... இப்பொழுது, எனக்குத் தெரியும், இப்பொழுது பாருங்கள், உங்கள் தர்மகர்த்தாக்களையோ, டீக்கன்மார்களையோ அல்லது போதகரையோ அவமானப்படுத்த இதை நான் கூறவில்லை. ஆனால் உண்மை எதுவோ அதையே உங்களிடம் கூறுகிறேன். இப்படித்தான் அது இருக்க வேண்டும். இப்பொழுது, நீங்கள்... அதை செய்வது எதுவென்றால், இப்பொழுது, நீங்கள் அனைவரும் நல்ல சுபாவம் படைத்தவர்கள். அப்படி இல்லாமல் போனால் நான், ''சகோ. இன்னார் இன்னார் நல்ல சுபாவம் படைத்தவர் அல்ல, மற்றவர் அனைவரும் நல்ல சுபாவம் கொண்டவர்கள். அவருக்காக நாம் அனைவரும் ஜெபிப்போம்'' என்று கூறியிருப்பேன். ஆனால் நீங்கள் நல்ல சுபாவம் கொண்டவர்கள். உங்களுக்கு நீடிய பொறுமை, சாந்த குணம், அமைதியான குணம் போன்றவை உள்ளன. ஆனால் அதன் காரணமாக பெண்மைத்தனம் படைத்தவர்களாய் இருக்க வேண்டாம். 88இயேசு நல்ல சுபாவம் படைத்தவராயிருந்தார். ஆனால் தருணம் வந்தபோது, அவர், “என்னுடைய பிதாவின் வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறதே, நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்,'' என்றார் பாருங்கள்? அவர் எப்பொழுது பேச வேண்டும், எப்பொழுது பேசாதிருக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தார். அதைத்தான் நாமும் செய்ய வேண்டும். பாருங்கள்? இயேசுவைப் போல் எவருமே இருந்ததில்லை. அவர் தேவன். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அவர் சபையிலுள்ள டீக்கன் உத்தியோகத்தை அவர் வகித்தார். அவர் சில கயிறுகளைப் பின்னினார். அவர் இனிமையாகப் பேசி அவர்களை வெளியே அனுப்பவில்லை, அவர் காத்திருக்க அவர்களை சாட்டையால் அடித்து தேவனுடைய வீட்டிலிருந்து வெளியே துரத்தினார் (பாருங்கள்?). அவர் டீக்கனின் உத்தியோகத்தை அப்பொழுது வகித்து, டீக்கன்மார்களாகிய உங்களுக்கு உதாரணமாயிருந்தார். பாருங்கள், அவரே உங்களுக்கு மாதிரி. ''என்னுடைய பிதாவின் வீடு ஜெபவீடு என்று எழுதியிருக்கிறதே. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், இயேசு அங்கு டீக்கனாக இருந்தார், அது உங்களுக்குத் தெரியும். அவர் டீக்கனின் பாகத்தை அப்பொழுது வகித்தார். அவர் போதகரின் பாகத்தை வகித்த போது என்ன கூறினார்? “குருடரான பரிசேயரே, குருடருக்கு வழி காட்டும் குருடர்களே” என்றார். பாருங்கள், அப்பொழுது அவர் போதகரின் பாகத்தை வகித்தார். நடக்கப் போவதை அவர் அவர்களுக்கு முன்னுரைத்த போது, அவர் தீர்க்கதரிசியின் பாகத்தை வகித்தார். பாருங்கள்? வரிப்பணம் செலுத்தப்பட வேண்டும் என்னும் நிலை ஏற்பட்ட போது, அவர் தர்மகர்த்தாவின் பாகத்தை வகித்து, “பேதுருவே, நீ போய் ஆற்றில் தூண்டிலைப் போடு. நீ பிடிக்கும் முதல் மீனின் வாயில் ஒரு நாணயம் இருக்கும். அதை எடுத்து உன் நியாயமான கடன்களை அவர்களுக்கு செலுத்திவிடு என்றார். அவர் ''இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்'' என்றும் கூறினார். 89அவர் ஒருங்கே போதகர், தீர்க்கதரிசி, தர்மகர்த்தா, டீக்கனாக இருந்தார். அவர் நிச்சயமாக இருந்தார்! எனவே பாருங்கள், அவர் என்ன செய்தாரோ அதுவே பிரன்ஹாம் கூடாரத்துக்கு உதாரணமாக அமைந்திருக்கட்டும். இந்த ஜெப வீடு எல்லா வகையிலும், எல்லா உத்தியோகத்திலும், எல்லா விதங்களிலும், எவ்வித ஒப்புரவாகுதலுமின்றி அவருக்கு கனத்தைச் செலுத்தும் வீடாக இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். இங்கு சாந்த குணம், இனிமை, தயவு காணப்பட வேண்டும். இருப்பினும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கடமையைச் சரிவர செய்யக்கடவன். பாருங்கள்? அவ்விதமாக இருக்க வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். அவர் தயங்கவேயில்லை. எது எதுவென்று நேரடியாக கூற வேண்டிய தருணம் வந்த போது அவர் கூறினார். சாந்த குணம் காண்பிக்க வேண்டிய நேரம் வந்தபோது, அவர் சாந்த குணம் காண்பித்தார். அவர் இனியவராயும், தயவுள்ளவராயும், புரிந்து கொள்ளும் தன்மையுடையவராயும் இருந்தார். ஆனால் அதே சமயத்தில் அவர் கண்டிப்பாக இருந்தார். எல்லாமே அவருக்கு கிரமமாக செய்யப்பட வேண்டும். அவர் அதை உங்களுக்கு திருஷ்டாந்தமாக செய்து காண்பித்தார். பரிசுத்த ஆவியானவர் அந்த கருத்தை இப்பொழுது தான் எனக்களித்தார். இதற்கு முன்பு, அவர் டீக்கனாக இருந்தார் என்பது என் சிந்தனையில் எழவில்லை. அவர் டீக்கனாக இருந்தார். பாருங்கள்? அவர் டீக்கனின் உத்தியோகத்தை வகித்தார். 90இதைக்கூற விரும்புகிறேன். உங்கள் ஆராதனை ஏழரை மணிக்கு தொடங்கினால், உங்கள் சபையை அரை மணி நேரத்துக்கு முன்பு, ஏழு மணிக்கே திறந்து விடுங்கள். பியானோ இசைப்பவர்... ஆர்கன் இசைப்பவர்களிடம் கூறுங்கள்... அவளுக்கு நீங்கள் சம்பளம் கொடுக்கிறீர்களா? நீங்கள் ஆர்கன் இசைப்பவளுக்கு சம்பளம் கொடுக்கிறீர்களா? அவளுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறதா, அந்த பியானோ இசைப்பவளுக்கு. அவள் இலவசமாக அதை செய்கிறாள். அவளை தயவாய் கேட்டுக் கொள்ளுங்கள். அவள் சம்பளம் பெறவிரும்பினால், அவளுக்கு சம்பளம் ஏதாவது கொடுங்கள். ஆராதனை தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு வரும்படி அவளிடம் கூறுங்கள். அவள், ''என்னால் முடியாது'' என்று சொல்லிவிட்டால், அவளை இங்கு அழைத்து வந்து, இனிமையான ஆர்கன் இசையை ஒலிநாடாவில் பதிவு செய்து கொள்ளுங்கள். பாருங்கள்? அது.... ஒலிநாடாவைப் போடுங்கள்... அவள் ஒவ்வொரு முறையும் இங்கு இருக்க வேண்டியதில்லை, உங்கள் ஒலிநாடாவை போடுங்கள். பாருங்கள்? டீக்கன்மார்களில் ஒருவர், அல்லது வாயிற்காப்போன், அந்த ஒலிநாடாவைப் போடட்டும். ஜனங்கள் உள்ளே வரும்போது, அந்த ஒலிநாடா இயங்கிக் கொண்டிருக்கட்டும். பாருங்கள்? இதைச் செய்ய டீக்கன்மார்கள் இங்கு இல்லையென்றால், தர்மகர்த்தாக்கள், அல்லது வேறுயாராகிலும் அதை செய்யட்டும். அவர்கள் அதை அரை மணி நேரம் இயக்கட்டும். ஆனால் சரியாக ஏழரை மணிக்கு, சபை கட்டிடத்தின் மேலுள்ள மணி ஒலிக்கட்டும். பாருங்கள்? மணி இப்பொழுதும் அங்குள்ளதா? ஆம். சரி. உங்கள் மணி சரியாக ஏழரை மணிக்கு ஒலிக்கட்டும். அதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் சபையில் மேலும் கீழும் நடந்து சென்று ஜோன்ஸ் குடும்பத்தாரிடமும் மற்றவர்களிடம் கைகுலுக்கக் கூடாது என்பதே. பாடல் தலைவர் அவர் வேலையை செய்யட்டும். அங்கு பாடல் தலைவர் இல்லையென்றால், டீக்கன்மார்கள்.... அல்லது.... மணி ஒலிக்கும்போது பாடல்களை முன்னின்று நடத்த யாரையாகிலும் ஆயத்தம் செய்யட்டும். ''இப்பொழுது நாம் பாடல் புத்தகத்தில் இந்த எண்ணுக்கு திருப்புவோம்'' பாருங்கள்? அது சரியாக ஏழரை மணிக்கு தொடங்கட்டும். 91சரி, அதன் பிறகு சபையோர் ஒரு பாடலை பாடட்டும், வேண்டுமானால், சபையோர் இன்னும் ஒரு பாடலும் பாடலாம். அதன் பிறகு ஜெபம் செய்ய நீங்கள் முன்கூட்டியே அறிவித்த ஒருவர் (உங்களால் முடிந்தால்) ஜெபத்தில் நடத்தட்டும். போதகர்... போதகர் அங்கிருக்கக் கூடாது, பாடல் தலைவர் அதை செய்யவேண்டும். அது சகோதரன் காப்ஸ் என்று நினைக்கிறேன், பாருங்கள். என்ன செய்ய வேண்டுமென்று அவருக்குத் தெரியும். அவர் யாரிடமாவது முன்கூட்டி அறிவித்து... அல்லது அவரே ஜெபத்தில் நடத்தலாம். ஜெபம் செய்யும்போது, சபையோர் நிற்கும்படி கூறுங்கள், பாருங்கள், அவர்கள் எழுந்து நிற்கட்டும். யாராகிலும் ஒருவர் ஜெபத்தில் நடத்தட்டும். இப்பொழுது, நீங்கள் கவனமாயிராவிட்டால்..... எல்லோரும் தேவனுடைய வீட்டுக்கு வந்து ஜெபிக்கவேண்டும் என்று நாம் விசுவாசிக்கிறோம். அது ஜெபவீடு. ஆனால் நீங்கள் அந்த பிரகாரத்தில் இருக்கும் போது, உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள். பாருங்கள்? ஜெபத்திற்கென நீங்கள் அழைப்பவர் யாராகிலும் பதினைந்து இருபது நிமிடங்கள் எடுத்துக்கொண்டால், உங்கள் நேரம் ஓடிவிடும். 92உங்கள் பாருங்கள், உங்கள் ஜெபம் வீட்டில் செய்யப்பட வேண்டும். இயேசு, 'நீ ஜெபம் பண்ணும்போது, மாயக்காரரைப் போல் நின்று கொண்டு... நீண்ட ஜெபம் பண்ணி, இதை, அதை, மற்றதை கூறாதே. அவர்கள் மனுஷர் காணும்படியாக அவ்விதம் செய்கிறார்கள். நீ ஜெபம் பண்ணும்போது... உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து இரகசிய அறைக்குள் கதவைப்பூட்டி, உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார்“ என்றார். இப்பொழுது, அவ்விதமாகவே அந்தரங்க ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும். அவ்விதம் செய்யவே அவர் கூறினார். ஆனால் நீங்கள்; யாராகிலும் ஜெபம் பண்ண வரும்போது, பாடல் தலைவர், ''சரி...'' என்று கூறட்டும். முதலாம் பாடல் பாடி முடிந்த பின்பு, யாராகிலும் ஒருவர் ஜெபம் செய்யட்டும் - சுருக்கமான ஜெபம். அங்கு நின்று கொண்டு ஆளுநர்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஜெப விண்ணப்பங்கள் ஏதாகிலும் இருக்குமானால், அதை தெரியப்படுத்துங்கள். அதை எழுதி, ''இதோ என் ஜெப விண்ணப்பம்'' என்று அனுப்புங்கள். “இன்றிரவு, நாம் ஜெபிக்கும் இந்த நேரத்தில், சகோதரி இன்னார் இன்னாரை, மருத்துவமனையிலுள்ள சகோ. இன்னார் இன்னாரை, இன்னார் இன்னாரை, இன்னார் இன்னாரை மற்றும் இன்னார் இன்னாரை நினைவு கூருவோம். நீங்கள் ஜெபிக்கும்போது, உங்கள் ஜெபத்தில் இவர்களை நினைவு கூருங்கள். சகோ. ஜோன்ஸ், எங்களை இப்பொழுது ஜெபத்தில் நடத்துவீரா? நாம் எழுந்து நிற்போம்.'' பாருங்கள்? ஜெப விண்ணப்பங்கள் மேடையின் மீதுவைக்கப்பட வேண்டும். அவர்களிடம் அதைப்பற்றி கூறுங்கள், அவர்களிடம் அதைப்பற்றி கூறுங்கள், அவர்களுக்கு அந்த பழக்கம் வரட்டும். ”உங்களுக்கு ஜெப விண்ணப்பம் இருக்குமானால், அதை எழுதி இங்கு வையுங்கள். நீங்கள் அதை பேசி தெரிவிக்கும்படி செய்யாதீர்கள். இப்பொழுது உங்களுக்கு ஜெப விண்ணப்பம் இருந்தால், அதை எழுந்து தெரிவியுங்கள்...'' என்று கூறுவீர்களானால், முதலாவதாக, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று, “தேவனுக்கு மகிமை! உங்களுக்குத் தெரியுமா...'' என்று தொடங்கி, சில நேரங்களில் அரை மணிநேரம் எடுத்துக்கொண்டு அதன் பிறகு உட்காருகின்றனர். பாருங்கள்? நாமே இந்த சபைக்கு பொறுப்பாளிகள், மற்றவர் அல்ல. இது தேவனுக்கு நாம் கொண்டுள்ள பொறுப்பு. நீங்கள் வகிக்கும் இந்த உத்தியோகங்கள் தேவனிடம் உங்களை பொறுப்பாளிகளாகச் செய்கிறது. பாருங்கள்? இன்றிரவு இங்கு நான் நின்று கொண்டு இதைக்கூறக் காரணம், தேவனுக்கு எனக்குள்ள பொறுப்பே. இதை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பு. பாருங்கள்? 93இப்பொழுது, அப்படி ஏதாவதொன்று.... யாராகிலும் ஒருவர் ஜெபத்தில் நடத்தட்டும், அது நல்லது. அவர்கள் ஜெபத்தில் நடத்திவிட்டு, பிறகு சென்று உட்கார்ந்து கொள்ளட்டும். உங்களுக்கு விசேஷித்த... இதைக்கூறி, ஆராதனையை நீட்ட விரும்பவில்லை... யாருக்காகிலும் விசேஷித்த பாடல்கள் பாட விருப்பம் இருக்கக் கூடும். சபையில் இவ்வாறு அறிவியுங்கள். “விசேஷித்த பாடல்கள் பாட விரும்புவோர், ஆராதனை தொடங்குவதற்கு முன்பு பாடல் தலைவரிடம் தெரியப்படுத்துங்கள்.'' அதைக் குறித்துக் கொண்டு.... ''சகோதரனே, நான் வருந்துகிறேன். எனக்குப் பிரியம் தான்.... அதை செய்ய எனக்கு நிச்சயம் பிரியம். ஆனால் இன்றைய இரவுக்கான விசேஷித்த பாடல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டது. ஒரு குறிப்பிட்ட இரவு நீங்கள் வருவீர்கள் என்று கூறினால், அன்றைய நிகழ்ச்சி நிரவில் உங்கள் பெயரை சேர்த்துக் கொள்கிறேன். பாருங்கள், இன்றைக்கான நிகழ்ச்சி நிரல் எழுதப்பட்டுவிட்டது'' என்று கூறுங்கள். 94சகோ. காப்ஸ் அல்லது பாடல் தலைவர் யாராகிலும் பாடல் தலைவர் ஒருவர் இருக்க வேண்டும், அது யாராயிருந்தாலும் பரவாயில்லை. போதகர் அங்கு நின்று கொண்டு .... பாடல்களை அறிவித்து அதிக பொறுப்புகளை வகிக்க வேண்டாம். அவர் போதகர், பாருங்கள், பாடல் தலைவர் அங்கு நின்று கொண்டு பாடல்களை நடத்தட்டும். அது அவருடைய வேலை. போதகரின் வேலை பிரசங்கம் செய்வது, பாருங்கள், பாடல்களை நடத்துவதல்ல. அவர் பாடல்களை நடத்தக்கூடாது, பாடல் தலைவர் பாடல்களை நடத்த வேண்டும். போதகர் செய்தியை அளிக்கும் பொறுப்பை பெற்றுள்ளவர். அவருடைய நேரம் வரும்போது, அவர் அலுவலகத்திலிருந்து அல்லது வேறெதாவது இடத்திலிருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவராய் புத்துணர்ச்சியுடன் வரவேண்டும். பாடல்கள் பாடும்போது, அவர் மேடையின்மேல் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர் அங்கே அலுவலகத்தில், அல்லது இங்கே எங்காவது ஓரிடத்தில் தங்கியிருக்கட்டும். அறைகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகள் (intercoms) ஆராதனையில் நடந்து கொண்டிருப்பதை அவரிடம் கொண்டு வரும். பாருங்கள்? நேரம் வரும்போது, அவர் கடைசி பாடலைக் கேட்கும் போது... மூன்றாவது பாடலாக ஒரு விசேஷித்த பாடல், உதாரணமாக தனியாகப்பாடுதல், அல்லது இரண்டு பேர் பாடுதல், பாடப்படும் போது. பாருங்கள்? சபையோர் இரண்டு பாடல்களைப் பாடுகின்றனர், ஜெபம், காணிக்கை (நீங்கள் எடுப்பீர்களென்றால்). ஒவ்வொரு மனிதனும் தன் வேலையில் நிலை கொண்டிருக்கட்டும். இந்த கடைசி பாடலை நாம் இப்பொழுது பாடும்போது, மாலை காணிக்கை எடுக்க வாயிற்காப்போர் முன் வாருங்கள்'' என்று கூறுங்கள். பாருங்கள்? முதலாம் பாடல் பாடி முடிந்தவுடன், வாயிற்காப்போர் தங்கள் இடங்களில் நின்று கொண்டிருக்கின்றனர். சரி, இப்பொழுது நாம் ஜெபம் செய்யப்போகிறோம்'' என்று அறிவியுங்கள். “நாம் இன்னார் இன்னார், இன்னார் இன்னாரை நினைவுகூர விரும்புகிறோம்'' என்று சொல்லி அந்த பெயர்களைப் படியுங்கள். ''சரி, எல்லோரும் எழுந்து நில்லுங்கள். சகோதரனே, எங்களை ஜெபத்தில் நடத்துவீரா?'' பிறகு அது முடிந்து விடுகிறது. 95பிறகு அவர்கள் இரண்டாம் பாடலைப் பாடும்போது, அல்லது நீங்கள் எவ்விதமாகப் பாடினாலும்... நீங்கள் காணிக்கை எடுக்க விரும்பினால், காணிக்கை எடுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள்... அல்லது முதலில் பாடல், அதன் பிறகு மாலை காணிக்கை, பிறகு இரண்டாம் பாடல், இப்படியாக நடத்துங்கள். பிறகு உங்கள் கடைசி பாடல்.... உங்கள் கடைசி பாடல், பாருங்கள், போதகருக்கு அழைப்பாக அமையட்டும். கடைசி பாடல் பாடி முடிந்தவுடன், ஆர்கன் மாத்திரம் இசைத்துக் கொண்டிருக்கட்டும். அப்பொழுது போதகர் வருகிறார். பாருங்கள், எல்லாமே ஒழுங்காக அமைந்துள்ளது, எல்லோருமே அமைதியாயுள்ளனர். வேறொன்றுமே அங்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு டீக்கனும் தன் இடத்தில் நின்று கொண்டிருக்கிறார். போதகர் அங்கு நின்று கொண்டிருக்கிறார். அவர் உள்ளே வந்து, சபையோருக்கு வாழ்த்துதல் கூறி, வேதாகமத்தை திறந்து, “இன்றிரவு நாம் வேதாகமத்திலிருந்து ஒரு பாகத்தை வாசிக்கப் போகின்றோம். ''பாருங்கள், அவ்வாறு கூறி அந்த பாகத்தை எடுத்த பின்பு, ''தேவனுடைய வார்த்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில், வேத வசனத்தைப் படிக்கும்போது நாம் எழுந்து நிற்போம்,'' என்று சொல்வது நல்லது. பாருங்கள், ”இன்றிரவு நான் சங்கீதங்களின் புத்தகத்திலிருந்து படிக்கிறேன்'' அல்லது எந்த பாகமோ அதை அறிவியுங்கள். அல்லது வேறு யாராகிலும், பாடல் தலைவரோ அல்லது உங்களுடன் இருக்கும் கூட்டாளி எவராகிலும் வேத பாகத்தை வாசிக்கலாம். ஆனால் நீங்கள் அதை வாசித்தால் மிகவும் நல்லது. அதை படித்த பின்பு, பிரசங்கத்துக்கான உங்கள் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். பாருங்கள்? அவ்வளவு நேரம், நீங்கள் மொத்தம் முப்பது நிமிடங்கள் செலவழித்திருப்பீர்கள். அப்பொழுது ஏறக்குறைய எட்டு மணி ஆயிருக்கும். 96எட்டு மணி தொடங்கி ஏறக்குறைய எட்டே முக்கால் மணி வரை முப்பது நிமிடங்களிலிருந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை பரிசுத்தஆவி உங்களுக்கு அளிக்கும் விதமாக (பாருங்கள்?) வார்த்தையைப் பிரசங்கியுங்கள். அபிஷேகத்தின் கீழ் அவர் என்ன செய்யக் கூறுகிறாரோ, அதே விதமாக அதை சபையோருக்கு அளியுங்கள். அதன் பிறகு பீட அழைப்பைக் கொடுங்கள். ''சபையிலுள்ள யாராகிலும் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்பினால், பீடத்தண்டை வரும்படி உங்களை அழைக்கிறோம், எழுந்து நில்லுங்கள்,'' என்று கூறுங்கள். பாருங்கள்? யாரும் எழுந்து நிற்காவிட்டால், ''ஏற்கனவே மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம்பெற்றுக்கொள்ள தங்களை ஞானஸ்நானத்துக்கு ஒப்புக் கொடுக்க விரும்புவோர் யாராகிலும் உண்டா? நீங்கள் வர விரும்பினால், உங்களுக்கு இப்பொழுது நாங்கள் தருணம் அளிக்கிறோம். ஆர்கன் இசைத்துக் கொண்டிருக்கும் போது, வாருங்கள்,'' என்று சொல்லுங்கள். பாருங்கள்? யாரும் வராமல்போனால், “பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமலிருந்து, அதைப் பெற்றுக் கொள்ள நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று விருப்பமுடையோர் இன்றிரவு யாராகிலும் உண்டா?'' என்று கேளுங்கள். ஒருக்கால் யாராகிலும் வரக்கூடும். அப்பொழுது இரண்டு அல்லது மூன்று பேர் அவர்கள் மேல் கைகளை வைத்து அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்களை அங்குள்ள அறைகளில் ஒன்றுக்கு அனுப்பிவிடுங்கள், யாராகிலும் ஒருவர் அவர்களுடன் கூடசென்று, பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக் கொள்வது என்பதைக் குறித்து உபதேசிக்கட்டும். சபையோர் இவர்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். 97கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புவோர் யாராகிலும்... ஜெபித்துக் கொள்ள பீடத்தண்டை நின்றிருந்தால் நீங்கள்... அவர்களுக்காக ஜெபியுங்கள். ஜெபிக்கும் தருணத்தில், உங்கள் தலைகளை இப்பொழுது வணங்குங்கள். நாங்கள் ஜெபிக்க போகின்றோம்'' என்று சொல்லுங்கள். ''நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?'' என்று அவர்களைக் கேளுங்கள். ஏதாகிலும் ஒரு வகையில் சபையோரைத் தாமதப்படுத்தும் ஒரு சிறு காரியம் நடக்க வேண்டுமென்றால், அவர்களை ஜெப அறைக்கு அனுப்பிவிடுங்கள், நீங்களும் அவர்களுடன் செல்லுங்கள், அல்லது வேறு யாரையாகிலும் அனுப்புங்கள். சபையோர் தொடர்ந்து ஆராதனையில் பங்கு கொள்ளட்டும். பாருங்கள், அவ்விதம் செய்வதனால், நீங்கள் எவ்வகையிலும் அவர்களைத் தாமதப்படுத்த மாட்டீர்கள். பாருங்கள்? அதன் பிறகு... அதற்கு முன்பு.... இன்னும் சில நிமிடங்களில் யாரும் வராமல்போனால், ''வியாதிக்காக எண்ணெய்ப்பூசி ஜெபம் செய்யப்பட விரும்புவோர் யாராகிலும் உண்டா? நாங்கள் வியாதியஸ்தருக்காக இங்கு ஜெபிக்கிறோம்,'' என்று அறிவியுங்கள். ''சகோ. நெவில், உங்களைத் தனியாக காண விரும்புகிறேன்''... ''நல்லது, என்னை அலுவலகத்தில் வந்து காணுங்கள். டீக்கன்மார்களில் ஒருவர் இந்த விஷயத்தை கவனித்துக் கொள்வார்கள்.'' பாருங்கள்? ''சகோதரனே, உங்களிடம் சிலவற்றை கூறவேண்டும்.'' ''நல்லது, டீக்கன்மார்களில் ஒருவர் உங்களை அலுவலகத்துக்கு அழைத்து வருவார், நாம் ஆராதனை முடிந்தவுடனே உங்களை சந்திக்கிறேன்.'' 98“இப்பொழுது ஆராதனையை முடிக்க நாம் எழுந்து நிற்போம்.'' பாருங்கள், முழுவதுமே ஒன்றே முக்கால் மணி நேரத்துக்கு மேல் எடுக்காது. பாருங்கள்? பாருங்கள், ஒன்றரை மணி நேரத்தில் உங்கள் ஆராதனை முடிந்து விடுகிறது. நீங்கள் ஒரு செய்தியை வேகமாக ஊடுருவும் வல்லமையோடு பேசுகிறீர்கள். நீங்கள் அவ்விதம் செய்யும்போது, எல்லோருமே திருப்தியடைந்தவர்களாய் நல்லுணர்வுடன் வீடு திரும்புகின்றனர். பாருங்கள்? நீங்கள் அவ்விதம் செய்யாமல்போனால், பாருங்கள், நீங்கள்.... பாருங்கள், நீங்கள் நல்லெண்ணத்துடன் தான் செய்கிறீர்கள். பாருங்கள், ஆனால் பாருங்கள்.... பாருங்கள், நான் இந்த மேடையின் மேலும், உலகம் முழுவதிலும் ஏறக்குறைய முப்பத்து மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்திருக்கிறேன். இந்த நீண்ட காலத்தில் நிச்சயமாக சிறிதளவாவது கற்றுக்கொள்ள முடியும். பாருங்கள்? அவ்விதம் கற்றுக்கொள்ளாமல் போனால், இதை விட்டு விலகுவது நலம். எனவே, பாருங்கள், இதை நான் கண்டு கொண்டேன். நீங்கள் பரிசுத்தவான்களுடன் மாத்திரம் தொடர்பு கொள்ள நேரிட்டால், வேண்டுமானால், இரவு முழுவதும் கூட அதில் நிலைத்திருக்கலாம். ஆனால் நீங்கள்.... பாருங்கள், அவர்களுடன் மாத்திரம் நீங்கள் ஈடுபடுவதில்லை, வெளியிலுள்ள மற்றவர்களையும் நீங்கள் பிடிக்க முயல்கிறீர்கள். அவர்களை பிடிக்க நீங்கள் அவர்களுடைய ஊழியத்தில் பணிபுரிய வேண்டும். பாருங்கள்? அவர்களை இங்கு கொண்டு வந்து, வார்த்தை அவர்களுக்கு அளிக்கப்பட்டால், பாருங்கள், குறை சொல்ல ஏதுவிராது. ஏதாவது ஒன்றிற்காக அவர்கள் உங்களைக் காண விரும்பினால், அவர்களை அலுவலகத்துக்கு கொண்டு வாருங்கள். அதற்காக சபையோரைப் பிடித்து வைக்க வேண்டாம். 99பிறகு, உங்களுக்குத் தெரியுமா, ஜனங்கள் எழுந்து, ''நல்லது, நான் சொல்லுகிறேன், ஒரு நல்ல சாட்சி கூட்டம் வைக்கலாம்'' என்பார்கள். பாருங்கள்? இதை குற்றப்படுத்துவதாக எண்ண வேண்டாம், உங்களிடம் உண்மையையே எடுத்துரைக்கிறேன். பாருங்கள்? நான் கண்டது என்னவெனில்... இந்த சாட்சி கூட்டங்கள்... சில நேரங்களில் நன்மையைக் காட்டிலும் அதிக தீங்கு விளைவிக்கின்றன. பாருங்கள், அவை உண்மையில் அவ்விதம் செய்கின்றன. எழுப்புதல் கூட்டத்தின்போது யாருக்காகிலும் ஒரு சூடான சாட்சி இருந்தால்; எழுப்புதல் கூட்டம் ஒன்று நடக்கிறதென்று வைத்துக் கொள்வோம், அதில் யாராகிலும் இரட்சிக்கப்பட்டு ஓரிரண்டு வார்த்தைகளைக் கூறவிரும்பினால், நல்லது தேவனுக்கு ஸ்தோத்திரம், அவன் தன் ஆத்துமாவிலுள்ள பாரத்தைக் கூறி தீர்த்துக் கொள்ளட்டும். பாருங்கள், அவன்.... அவன் அதைச் செய்ய விரும்பினால்; ''கர்த்தர் எனக்கு செய்த நன்மைக்காக அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன். சென்ற வாரம் அவர் என்னை இரட்சித்தார். தேவனுடைய மகிமையினால் என் இருதயம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தேவனுக்கு ஸ்தோத்திரம்'' என்று சுருக்கமாக சொல்லி உட்கார்ந்து கொள்ளலாம். ஆமென் அது நல்லது, அதை செய்யுங்கள். பாருங்கள், அதனால் பரவாயில்லை. 100ஆனால் நீங்கள், ''வாருங்கள், அடுத்தது யார்? அடுத்தது யார்? நாம் ஒரு சாட்சியைக் கேட்போம், நாம் ஒரு சாட்சியைக் கேட்போம்'' என்று நீட்டிக் கொண்டே போனால், அதற்கென்று ஒரு குறிப்பிட்ட இரவு கூட்டத்தை ஒதுக்கிவைத்து விடுங்கள். “இன்றிரவு.... அடுத்த புதன் இரவு, ஜெபக் கூட்டத்துக்குப் பதிலாக சாட்சி கூட்டம் இருக்கும்'' என்று அறிவியுங்கள். சாட்சிகளைக் கூற அவர்கள் கூட்டத்துக்கு வரும்போது, வேதத்தில் ஒரு பாகத்தைப் படித்து, ஜெபம் செய்து, அதன் பிறகு, ''இது சாட்சிக் கூட்டமாக இருக்குமென்று ஏற்கனவே உங்களுக்கு அறிவித்தோம்'' என்று கூறுங்கள். ஜனங்கள் ஒரு மணிநேரம் அல்லது நாற்பது நிமிடங்கள், அல்லது முப்பது நிமிடங்கள் - அது எதுவானாலும் - தொடர்ந்து சாட்சி உரைக்கட்டும். நான் கூறுவது விளங்குகிறதா? நீங்கள் இந்த முறையைக் கடைபிடித்தால், அது சபையோருக்கு உதவியாயிருக்கும், எல்லாவற்றிற்கும் உதவியாயிருக்கும். 101இப்பொழுது, நேரமாகி விட்டது, எனவே... சகோதரனே, சகோதரர்களே, இது எனக்கு தெரிந்த மட்டும் சிறந்த பதில்கள். உங்கள் இருதயத்தில் எழுந்த கேள்விகளுக்கு இவை எனக்குத் தெரிந்த வரைக்கும் சிறந்த பதில்கள். இப்பொழுது முதல் என்ன செய்வதென்று உங்களுக்குத் தெரியும். உங்கள் மனதில் சந்தேகங்கள் எழுந்தால், இந்த ஒலிநாடாவிடம் வாருங்கள்... இதைப்போட்டு கேளுங்கள். அது டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், யாராயிருந்தாலும், இந்த ஒலிநாடாவைப் போட்டுக் கேளுங்கள். சபையோர் கேட்க விரும்பினால், அவர்களுக்கும் இந்த ஒலிநாடாவைப் போடுங்கள். இது எனக்குத் தெரிந்த வரைக்கும், எய்த் அண்டு பென தெருவிலுள்ள இந்த கூடாரத்துக்கு தேவனுடைய சித்தமாக உள்ளது. சகோதரரே, இதை பரிசுத்த ஆவியின் வழிநடத்தலுடன் தயவாயும் அன்புடனும் கடை பிடித்து, உங்கள் கிருபையை ஜனங்களுக்கு முன்பாக காண்பித்து நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அறியச் செய்ய உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கிறிஸ்தவர்கள் என்றால் எல்லாவிடங்களிலும் தள்ளப்படக்கூடிய குழந்தை என்று அர்த்தமல்ல. அது அன்பினால் நிறைந்த மனிதனை, தேவன் பேரிலும் சபையோர் பேரிலும் நிறைந்த அன்பைக் கொண்ட மனிதனைக் குறிக்கிறது. நான் கூறுவது புரிகிறதா? 102வேறெதாகிலும் கேள்வி உண்டா ?ஒலிநாடா முடியப்போகிறது. ஒருவர் எனக்காக அங்கு காத்துக் கொண்டிருக்கிறார். அவர் எந்த நேரத்தில் இங்கு வருவதாக கூறப்பட்டது? (பில்லி பால், இப்பொழுதே'' என்கிறார் - ஆசி.) இப்பொழுதே. அவரே இங்கு வருகிறாரா? (நான் அவரை அழைத்துக் கொண்டு வர வேண்டும்'' என்கிறார் - ஆசி.) சரி, ஐயா. வேறு கேள்விகள் எதுவுமில்லை என்றால் நாங்கள் போகின்றோம். சரி, நாம் முடித்துவிடலாம். ஆம். என்ன சகோ. காலின்ஸ்? (இந்த ஒலிநாடாவை அணைத்து விடலாம்'' என்று சகோ. காலின்ஸ் கூறுகிறார் -ஆசி). சரி (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). 103நல்லது, சகோதரரே, இன்றிரவு உங்களுடன் இருந்ததற்காக மகிழ்ச்சி யடைகிறேன். சகோ. நெவிலுக்கும், டீக்கன்மார்களுக்கும், தர்மகர்த்தாக்களுக்கும், ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளருக்கும், உங்கள் எல்லோருக்கும் என் பாராட்டுதலைக் தெரிவித்துக் கொள்கிறேன். தேவனுடைய இராஜ்யத்துக்கென்று இந்த ஒழுங்குகளைக் கடைபிடிக்க தேவன் உங்களுக்கு உதவி செய்வார் என்று நம்புகிறேன். இதை நான் கூறக்காரணம், நீங்கள் குழந்தை பருவத்திலிருந்து வளர்ந்த வயது வந்தவர் பருவத்தை அடைந்து விட்டீர்கள். நீங்கள் குழந்தையாயிருந்த போது, குழந்தையைப் போல் பேசினீர்கள், குழந்தையைப் போல் புரிந்து கொண்டீர்கள். இப்பொழுது நீங்கள் புருஷராகி விட்டீர்கள். எனவே தேவனுடைய வீட்டில் நாம் வயது வந்தவர் போல நடந்து கொண்டு, நமது உத்தியோகங்களை, ஒவ்வொரு உத்தியோகத்தையும் கனப்படுத்துவோம். தேவன் நமக்கு அளித்துள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நாம் ஒழுங்கில் அமைத்து, நமது வரங்களினாலும் உத்தியோகங்களிலும் தேவனை கனப்படுத்துவோமாக. ஜெபம் செய்வோம்: 104பரலோகப் பிதாவே, ஜெபர்ஸன் வில்லிலுள்ள இந்த சபையில் கர்த்தருடைய வேலையைச் செய்வதற்கென வெவ்வேறு உத்தியோகங்களை வகிக்கும் இந்த மனிதர் இன்றிரவு ஒன்று கூடியுள்ளதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவனே, உமது கரம் அவர்கள் மேல் தங்கியிருந்து, அவர்களுக்கு உதவி செய்து அவர்களை ஆசீர்வதிப்பீராக. தேவனுடைய ராஜ்யத்தின் மேன்மைக்காவே இவை செய்யப்படுகின்றன என்பதை சபையோரும் மக்களும் அறிந்து கொள்வார்களாக. நாங்கள் தேவனுடைய ஆவியை அறிந்து கொண்டவர்களாய், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளும் மக்களாக இருப்போமாக. பிதாவே, இதை அருளும். உமது ஆசீர்வாதங்களுடன் எங்களை அனுப்பும். பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் மேல் கவனமாயிருந்து, எங்களை வழி நடத்திப் பாதுகாப்பாராக. எங்கள் கடையில் நாங்கள் எப்பொழுதும் விசுவாசமுள்ளவர்களாய் காணப்படுவோமாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். கேள்விகளும் பதில்களும் Jeffersonville, Indiana, USA 64-0823M Cod-19 1சற்று நேரம் நாம் நின்ற வண்ணமாக, ஜெபத்துக்காக தலை வணங்குவோம். கிருபையுள்ள பிதாவாகிய தேவனே, எங்கள் இருதயத்தின் ஆழங்களிலிருந்து இக்காலை வேளையில் உமக்கு நன்றி செலுத்துகிறோம், ஏனெனில் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நீர் வல்லவராயும் சித்தமுள்ளவராயும் இருக்கிறீர். நீர் ஏற்கனவே எங்களுக்கு செய்துள்ளவைகளுக்காக எங்கள் நன்றியறிதலை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இக்காலை வேளையில் எங்களுக்கு நீர் உதவி செய்வீர் என்று மிகுந்த எதிர்நோக்குதலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த கட்டிடத்தின் வாசலை விட்டு நாங்கள் செல்லும் போது, நாங்கள் உள்ளே வந்ததைக் காட்டிலும் வித்தியாசமான ஒரு நபராக வெளியே செல்வோமாக. பரிசுத்த ஆவியானவர் தாமே இக்காலை வேளையில் எங்களை - எங்கள் தன்மைகளை - வனைந்து, உமது ராஜ்யத்தின் பிரஜைகளாக எங்களை ஆக்குவாராக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (உட்காரலாம்). 2சற்று தாமதித்து இங்கு வந்ததற்காக வருந்துகிறேன், இக்கட்டிடத்துக்கு வருவதற்கு முன்பு, எனக்கு சில காரியங்கள் செய்ய வேண்டியிருந்தது. நிறைய நோயாளிகள். பேட்டிகள். எனவே இக்காலை வேளையில் இங்கு வந்து, அருமையான உங்கள் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுக்கு அருமையான பொருட்களை அனுப்பித் தந்த அந்த மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் - என் மனைவிக்கு வெகு மதியும் எனக்குத் தன்னுடைய மான் துப்பாக்கியை அனுப்பித் தந்த அந்த சகோதரனுக்கும். கர்த்தர் அவரை ஆசீர்வதிப்பாராக. அவருக்கு வயதாகி விட்டதென்றும் அந்த துப்பாக்கியை அவர் இனி உபயோகிக்கப் போவதில்லை என்றும் கூறி, அதை நான் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார். எனவே அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். என் உயிருள்ள வரைக்கும், சகோதரனே, என்னால் உபயோகிக்க முடியும் வரைக்கும், அதை நான் வைத்திருப்பேன். உங்களை நினைத்து உங்களுக்காக ஜெபம் செய்யாமல், அதை நான் கையில் எடுக்க மாட்டேன். 3இப்பொழுது. நாம்... இன்றைக்கு அநேக காரியங்கள் செய்ய வேண்டியதாயுள்ளது. இங்கு நான் உள்ள போது, சில கேள்விகளைப் பெற்றுக் கொண்டு, என் சபையோரின் இருதயங்களில் என்ன உள்ளது என்பதைக் கண்டு கொள்ளலாம் என்று எண்ணினேன் - வெவ்வேறு நபர்களின் இருதயங்களில் நான் நிச்சயம் கேள்விகளைப் பெற்றுக் கொண்டேன்! ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கும் வரைக்கும் பதிலளிக்க போதுமான கேள்விகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன! இத்தனை கேள்விகளைப் பெற்றுக் கொள்வேன் என்று நான் நினைக்கவேயில்லை. இங்கு ஏறக்குறைய நூறு கேள்விகள் உள்ளன, இன்று காலையில் நூற்றுக்கும் அதிகமான கேள்விகள் வந்துள்ளன. எனவே அவைகளுக்கு சரியான விதத்தில் பதில் சொல்ல முடியாது என்று எண்ணுகிறேன்.... அவை நல்ல கேள்விகள், உண்மையிலேயே நல்லவை. இப்பொழுது, சில கேள்விகளை பகிரங்கமாக எல்லோர் முன்னிலேயும் படிக்க இயலாது. எனவே, உங்களுக்குத் தெரியும் அவர்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்... என்னால் சுற்றி வளைத்து சொல்ல முடியாதவைகளை ... அவை குடும்ப பிரச்சினைகள். ... நீங்கள் புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இருவரையும் என்னைத் தனியாக பேட்டிக் காண கேட்டுக் கொண்டிருக்கிறேன், அப்பொழுது நான் இவ்விஷயங்களைக் குறித்து அவர்களுடன் தனியாகப் பேசலாம். அவை கெட்ட காரியங்கள் அல்ல, அவை குடும்பத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள், அது மனித இயல்பு , நாம் போய்க் கொண்டிருக்கிற இந்த வாழ்க்கை ஓட்டத்தில் .... நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த காலம் இவைகளை விளைவிக்கிறது, அதனுடன் இப்பிரச்சினைகள் தொடர்பு கொண்டுள்ளன. மானிட குடும்பத்தில்; அத்தகைய கேள்விகளுக்கு பதில் கூறியாக வேண்டும். எனவே, சிறந்த முறையில் அவைகளுக்கு பதிலளிக்க என்னாலான யாவையும் செய்வேன். 4சில நேரங்களில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், நீண்ட நேரம் ஆகிவிடுகின்றது; இவை ஒன்றையும் விட்டுவிட எனக்கு மனதில்லை. அவை ஒவ்வொன்றுக்கும் என்னால் முடிந்த வரைக்கும் விவரமாக பதில் கூறுவேன். இக்கேள்விகளை நான் ஒரு பையில் அடைத்து வைத்திருக்கிறேன். அவைகளுக்கு பதிலளிக்க, எனக்குத் தேவைப்பட்டால், ஒரு வேதவசனத்தை அதில் குறித்து வைத்து அதை திரும்பவும் அந்த பையில் போட்டு விட்டேன். நேற்று பகல் பூராவும், நேற்றிரவு இரவின் பெரும்பகுதியிலும், அதன் பிறகு இன்று காலை விடியும் வரைக்கும் அவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்..... இன்று காலையில் அவைகளுக்கு இரண்டு மடங்கு கேள்விகள் எனக்கு வந்து சேர்ந்துள்ளன. எனவே, கர்த்தருக்கு சித்தமானால், நாம் என்ன செய்வோமென்றால், என்னால் முடிந்த வரை நடுப்பகல் வரைக்கும் அவைகளுக்கு பதிலளித்து விட்டு, அதன் பிறகு நாம் கலைந்து விட்டு, மறுபடியும் இன்று மாலையில் வந்து, என்னாலான வரைக்கும் அவைகளை இன்றிரவு முடிக்கப் பார்க்கிறேன் - நாம் முடித்துவிட முடியுமா என்று பார்ப்போம். ஒரேயடியாக இக்கேள்விகள் அனைத்துக்கும் பதிலளித்து உங்களை நான் தண்டிக்க வேண்டியதில்லை. நீங்கள் சென்று, உங்களால் முடியுமானால் நீங்கள் மறுபடியும் மாலையில் வரலாம். உங்களால் வர முடியாமல் போனால், சகோ. ஃபிரட் சாத்மன் இதை ஒலி நாடாவில் பதிவு செய்கிறார் என்று நினைக்கிறேன். இது ஒலிநாடா வில் பதிவு செய்யப்படுகிறதா? சரி, அது மிகவும் நல்லது. ஆம், அவர்கள் அந்த அறையில் ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு விருப்பமானால், இந்த ஒலிநாடாவை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அது விற்பனைக்காக வைக்கப்பட்டு, கேள்விகளும் பதில்களும் என்று அழைக்கப்படும். சில கேள்விகள் மிகவும் கடினமானவை. அவைகள் பெரும்பாலும் சபையின் உபதேசங்கள் பேரில் கேட்கப்பட்ட கேள்விகள். 5சில நேரங்களில் இக்கேள்விகளுக்கு பதிலுரைக்கையில், அவை கடினமானவை என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இங்கு நிற்பதற்கு அதிகமான கிருபை அவசியமாயுள்ளது. நீங்கள் மட்டும் ஜனங்களாகிய உங்கள் பேரில் நான் கொண்டுள்ள அன்பை அறிந்திருந்தால் என்னால் அதை தெரிவிக்க இயலாது. அதை நான் என் பிள்ளைகளுக்கும் கூட தெரிவிப்பதில்லை. என் மனைவியிடம் நான் கொண்டுள்ள ஆழமான அன்பை நான் தெரிவிக்க வேண்டிய விதத்தில் தெரிவிப்பதில்லை, ஏனெனில் நான் அத்தகைய மனோபாவம் கொண்டவன், ஒரு நேர்க்கோட்டில் நான் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கிறேன். என் முழு அன்பையும் நான் ஒருவருக்கு மாத்திரமே தெரிவிப்பேன், அவர் தான் சர்வவல்லமையுள்ள தேவன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் அவரையே நேசிக்கிறேன். மற்றவர்களையும் நான் நேசிக்கிறேன், ஆனால் நான் அவர் பேரில் கொண்டுள்ள அன்பை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை; அதுவே முதன்மை ஸ்தானம் வகிக்கட்டும். எனவே உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில், என் இருயத்தில் உங்கள் பேரில் அன்பைக் கொண்டவனாய் நான் பதிலளிக்கிறேன். ஆனால் எல்லா நேரத்திலும், ஒருவர் மட்டுமே எனக்கு முன்பாக உள்ளார், அவர்தான் இயேசு கிறிஸ்து (பாருங்கள்?), அவர் அதற்கு பதில் கூறும் விதத்தில். 6சில நேரங்களில் நான் பதில் கூறுகையில்.... அது புண்படுத்தக் கூடும், அவ்விதம் செய்ய நினைத்து நான் செய்வதில்லை. நான் கூறினது போன்று, கிறிஸ்துவை எனக்கு முன்பாக வைத்து ஒரு நோக்கத்துடன் நான் பதிலளிக்கிறேன். என் நினைவில் நான் கொள்ள வேண்டியது என்னவெனில், அவரை மாத்திரமே நான் .... அவருக்கு நான் கணக்கொப்புவிக்க வேண்டும். எனவே என் முதல் அன்பு அவருக்கே , என் இரண்டாவது அன்பு ஜனங் களாகிய உங்களுக்கு - தம்முடைய சொந்த இரத்தத்தினால் அவர் கிரயத்துக்கு கொண்ட அவருடைய சபைக்கு. அவர் தம்மில் அன்புகூருகிறதை விட அதிகமாக உங்கள் பேரில் உண்மையில் அன்புகூருகிறார். ஏனெனில் அவர் தம்மையே உங்களுக்காக கொடுத்தார். நீங்கள் அவருடைய இரத்தத்தினால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள். அதை நான் எனக்குத் தெரிந்த வரையில் மிகவும் கவனமாகவும் உத்தமமாகவும் கையாளுகிறேன். அவ்விதம் செய்யும்போது, சில நேரங்களில் நீங்கள், “அது மிகவும் கடூரமான குறிப்பு, அது நேரடியான தாக்குதல்” என்று நினைக்கக் கூடும்.அவரை என் மனதில் கொண்டவனாய் (பாருங்கள்?), அது அவ்விதமாகத்தான் இருக்க வேண்டும் என்று மற்றவர் - எல்லோரும் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதைச் செய்கிறேன். அது புண்படுத்துவதற்காக அல்ல, ஜனங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்னும் உறுதி கொள்வதற்காகவே. ஒவ்வொருவரும் அதை அந்த வகையில் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இப்பொழுது, இங்குள்ள கேள்விகளின் மூலம், நமது மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்கிறோம். இன்று காலையில் நீங்கள் எல்லோரும் கூடி வந் துள்ளதை நான் காண்கிறேன், எல்லாவிடங்களிலும் ஜன நெருக்கம் உள்ளது. மற்றுமொரு சபையில் ஜனங்கள் நிரம்பி வழிகின்றனர் என்று நினைக்கிறேன். நம்முடன் தொடர்பு கொண்டுள்ள அந்த சபை வானொலி அல்லது தொலைபேசி இணைப்பை பெற்றுள்ளனர். அது... அந்த சபை இன்று காலையில் ஜனங்களால் நிரம்பி வழிந்து கொண் டிருக்கிறது. நான் கேள்விப்படுகிறேன் சகோதரன் ... வேறொரு சகோதரனின் சபையில், இங்கிருந்து ஜனங்கள் அங்கு சென்றுள்ளதால் இவ்விதமான நிரம்பி வழிதலை அவர் பெற்றிருக்கிறார். அதன் விளைவாக, இங்குள்ள நீங்கள் சுவற்றின் அருகில் நின்று கொண்டிருக்க வேண்டியதில்லை. 7இன்றிரவு, கர்த்தருக்கு சித்தமானால், நாம் நேரத்தோடே தொடங்குவோம். போதகரையும் நிர்வாகக் குழுவினரையும் நான் அனுமதி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்... இன்றிரவு சிறிது நேரத்தோடே தொடங்குவோம். ஏனெனில் இங்கு வந்துள்ள சிலர் வீடு திரும்ப நீண்ட தூரம் காரோட்டிச் செல்ல வேண்டும். கூடுமானால் ஒரு மணி நேரம் முன்பு தொடங்கி சீக்கிரம் முடித்து விடலாம். அப்பொழுது நீங்கள்... நீங்கள் உண்டு முடித்த பிறகு, 6 மணிக்குப் பிறகு நாம் தொடங்கி விடலாம். பாருங்கள்? நீங்கள் வழக்கமாக 7.30க்கு தொடங்குகிறீர்கள், இல்லையா? நான் 7.00 மணிக்கெல்லாம் மேடையின் மேல் வந்து விடட்டும். பாருங்கள்? அப்பொழுது 8.00 அல்லது 8.30க்கு முடித்துவிடுவோமானால், நீங்கள் நேரத்தோடே வீடு திரும்பி நாளைய வேலைக்காக ஆயத்தப் படலாம், நாளை என்று ஒன்று இருக்குமானால். இப்பொழுது, கர்த்தர் உங்களோடு இருந்து, உங்களை அபரிமிதமாக ஆசிர்வதிப்பாராக. இந்த ஆராதனை முடிந்தவுடன் நான் உள்ளே சென்று மற்ற கேள்விகளுக்கு விடை கண்டு உங்களுக்கு அறிவிக்க முயல்வேன். நான் சிறு காகிதத் துண்டுகளில் குறிப்பு எழுதிக் கொள்கிறேன்... வேத வசனங்கள் மறந்து விடுகின்றன. நான் அறையில் படித்துக் கொண்டிருக்கும்போது, (அதை எங்காவது குறிப்பிட வேண்டுமென்றால்) அதை ஒரு காகிதத் துண்டில் எழுதி வைத்துக் கொள்கிறேன். அதை நான் கலைக் களஞ்சியத்திலிருந்து (encyclopedia)எடுத்துக் கொண்ட ஒரு பகுதியோ, அல்லது ஏதோ ஒரு சொல் அல்லது பெயராக இருக்குமானால், அது எனக்கு முன்பாக எழுதி வைக்கப்பட்டுள்ளதால், நிறைய புத்தகங்களை நான் கொண்டு வர வேண்டிய அவசியம் இருப்பதில்லை, அவைகளை எழுதி இங்கு வைத்திருக்கிறேன். 8இப்பொழுது, கேள்விக்கான விடை உங்களுக்கு திருப்தி அளிக்காமல் போனால், நல்லது. ஒருக்கால் நான் தவறு செய்திருக்கக் கூடும். பாருங்கள்? ஒருக்கால் நான் தவறு செய்திருக்கக் கூடும், ஏனெனில் என் அறிவுக்கு எட்டின வரைக்கும் இவைகளுக்கு விடையளிக்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கான விடைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதகர்கள், அல்லது குறிப்பிட்ட சபையின் சபையோர் இதை அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இதை நான் விரும்பவில்லை. இது உங்கள் போதகத்துக்கோ அல்லது உங்கள் சபையாருக்கோ பாதகம் விளைவிக்குமானால்; சபையோர் இதை தெளிவாக புரிந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது இது இந்த கூடாரத்தில் எங்கள் போதகமாயுள்ளது. இதை நான் எந்த குழுவினரின் மேலும் சுமத்த விரும்பவில்லை. என் இருதயத்தில் நான் கிறிஸ்தவனாயிருக்க விரும்புகிறேன், நான் விசுவாசிப்பதைப் போதிக்கிறேன். நான் எதை உறுதியாய் விசுவாசிக்கிறேனோ, அதில் நிற்கிறேன். அதன் பேரில் நான் ஒப்புரவானால், நான் கிறிஸ்துவுக்கு துரோகியாகவும், உங்களுக்கு மாய்மாலக்காரனாகவும் இருப்பேன். சத்தியம் எது என்று நான் விசுவாசிப்பதன் பேரில், நான் விசுவாசமுள்ளவனாய் நின்று கொண்டிருப்பது அவசியம். மற்ற ஒவ்வொருவருக்கும், அவ்விதமே செய்ய உரிமையுண்டு. தேவன் நம்மெல்லாருக்கும் நியாயாதி பதியாயிருக்கிறார். 9இப்பொழுது, நாம் தொடங்குவதற்கு, முன்பு ஒரு அருமையான வரலாற்றாசிரியரைக் குறிப்பிடலாம் என்று எண்ணினேன் - பால் பாய்ட். உங்களில் பலருக்கு அவரைத் தெரியும். அவர் இக்கூடாரத்துக்கு வருபவர். அவர் எருசலேமுக்குச் சென்றுஉலக சந்தையைக் கண்டு விட்டு, இப்பொழுது தான் திரும்பி வந்தார். அவர் தீர்க்கதரிசனப் போதகர், வரலாற்றாசிரியர், மிகச் சிறந்தவர்களில் ஒருவர். அவர் மென்னோனைட் குழுவைச் சேர்ந்த சகோதரன். அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராகி விட்டார். நான் தீர்க்கதரிசனத்தைக் குறித்து கூறுபவைகளை மிகவும் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு, அது நிறைவேறுகிறதா என்று கவனித்து வருகிறார். அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் (அவர் மறுபடியுமாக இப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வந்திருக்கிறார்), அது இன்று காலையில் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அவர் தலைசிறந்த தீர்க்கதரிசனங்களைக் குறித்து ஒரு செய்தித்தாளில் வெளியிட்டுள்ளதில், நான் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்ட தரிசனங்களில் ஐந்தாம் தரிசனமாக கண்ட, விஞ்ஞானத்தின் சாதனை அல்லது முன்னேற்றத்தைக் குறித்து அவர் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். நான் கண்ட தரிசனங்கள் உங்களுக்கு நினைவிருக்கும், அவைகளை நீங்கள் எழுதி வைத்திருக்கிறீர்கள். அவைகளை நான் புத்தகங்களில் எழுதி வைத்திருக்கிறேன். கர்த்தர் என்னிடம் உரைக்கும் முக்கியமான, அல்லது ஜனங்களுக்கு கூறத்தக்க ஒவ்வொன்றையும் நான் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். 10இன்று காலையில் நான் நினைத்தேன், நாம் தொடங்குவதற்கு முன்பு.... இது பிரசங்கம் அல்ல, நமது இருதயங்களில் என்ன உள்ளதென்று ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக் கொள்ள, இங்கு நாம் கூடி வந்திருக்கிறோம், சபை காலங்களின் வழியாக வந்துள்ள நாம். இவைகளை அலசிப் பார்த்து தெளிவுபடுத்திக் கொள்வோம். இப்படிப்பட்ட ஓரிரண்டு கூட்டங்களுக்காக இங்கு தங்கியிருந்து, ஜனங்களின் இருதயங்களில் என்ன உள்ளது என்பதைக் கண்டுகொள்வது நலமென்று எண்ணுகிறேன். பாருங்கள்? அதன் பிறகு நாம் தொடர்ச்சியான ஆராதனைகளுக்கு திரும்பிச் செல்லலாம். கர்த்தருக்கு சித்தமானால், கூடிய சீக்கிரத்தில், நீண்ட தொடர்ச்சியான ஆராதனைகளை இந்த கூடாரத்தில் வைக்க விரும்புகிறேன். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்கும் - அதாவது வெவ்வேறு பொருள்களின் பேரில். அவர் எனக்காக வரும் வரைக்கும், அல்லது அவரைச் சந்திக்க நான் செல்லும்வரைக்கும், இவ்விதம் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கலாம். பாருங்கள்? நான் 1993ம் ஆண்டில் கண்ட அந்த ஏழு தரிசனங்களைக் குறித்து பால் பாய்ட் இங்கு எழுதியிருக்கிறார். அவர் வரலாற்றாசிரியராதலால், அதை தொழில் நுட்பமாக, உன்னிப்பாக கவனித்து வருகிறார். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதையும் அவர் கவனிக்கிறார். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக உரைக்கப்பட்டவை நிறைவேறி வருவதையும் அவர் காண்கிறார். எவ்விதம் முசோலினி... அவனுக்கு என்ன நேரிடுமென்றும், ஹிட்லரைக் குறித்தும், அவனுக்கு என்ன நேரிடுமென்றும்; கம்யூனிஸம் எவ்வாறு பாசீசத்தையும் மற்றவைகளையும் மேற் கொள்ளும் என்றும்; சீக்ஃபிரிட் எல்லை எவ்வாறு கட்டப்பட்டு, அமெரிக்கர்கள் அங்கு படு தோல்வியடைவார்கள் என்றும் (இரண்டு ஆண்டுகள் முன்பு வரைக்கும் அவர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை, அந்த முற்றுகையைக் குறித்து ஜெர்மானிய படங்கள் உள்ளன; அவர்கள் உண்மையில் படுதோல்வி அடைந்தனர். அங்கு முழு சேனையையும் அவர்கள் இழந்தனர்); இன்னும் நடை பெற்ற மற்ற காரியங்களைக் குறித்தும். 11மேலும், “முடிவு காலம் வருவதற்கு முன்பு, மோட்டார் வாகனங்கள் முட்டை வடிவில் காணப்படும், அவை முட்டையைப் போல் அதிகமாகக் காணப்படும்” என்று உரைக்கப்பட்டது. ஒரு அமெரிக்க குடும்பம் நெடுஞ்சாலையின் வழியாக காரில் செல்வதைக் கண்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் முகமுகமாய் உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஒரு மேசை இருந்தது, அவர்கள் 'செக்கர்ஸ்' விளையாட்டு, அல்லது சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த காருக்கு 'ஸ்டியரிங்' சக்கரம் இருக்கவில்லை. அது ஏதோ ஒரு சக்தியினால், 'ஸ்டியரிங்' சக்கரம் இல்லாமலேயே ஓடிக் கொண்டிருந்தது. இங்குள்ள எத்தனை பேர் அதை நான் தீர்க்கதரிசனமாக உரைத்ததை நினைவில் வைத்திருக்கிறீர்கள். இப்பொழுது, அந்த உலக சந்தையில், அவர்கள் அந்த விதமான காரை விற்பனைக்கு வைத்துள்ளனர். அது இப்பொழுது விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெரிய நிர்வாகம் அப்படிப்பட்ட அநேக கார்களை வாங்கியுள்ளது. அந்த கார், இதோ இங்குள்ளது. பால் பாயிட்டுக்கு அந்த தீர்க்கதரிசனம் ஞாபகத்தக்கு வந்தது. நான் உரைத்ததை அவர் எழுதி வைத்துக் கொண்ட புத்தகத்தில்படித்து பார்த்தார். அவர் அந்த காரை புகைப்படம் எடுத்தார். அது அப்படியே முட்டை வடிவத்தில் உள்ளது. இரண்டு இருக்கைகள் இந்த பக்கமும், இரண்டு இருக்கைகள் அந்த பக்கமும் வைக் கப்பட்டு,. சீட்டு விளையாடுவதற்கு ஒரு மேசை நடுவில் வைக்கப்பட்டுள்ளது. 12கர்த்தருடைய வார்த்தை முற்றிலும் பிழையற்றது. அது 1933ல். அப்படியானால்... பார்ப்போம், கணக்கிட்டால் எத்தனை ஆண்டுகள்? முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இல்லையா? இது 1964ம் ஆண்டு. ஆம், முப்பத்து ... ஆம், முப்பத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு. முப்பத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு தேவன் அதை என்னிடம் கூறினார், இதோ அது இங்குள்ளது. இங்குள்ள நிர்வாகம் ஏற்கனவே அவைகளுக்கு 'ஆர்டர்' செய்து விட்டது. லாரி ஓட்டும் நிறுவனங்கள், அவைகளைப் போன்று லாரிகள் செய்து கொடுக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளன. அவர்கள் தங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டே அவைகளை இயக்கலாம். அவைகளுக்கு ஓட்டுநர் தேவையில்லை. இதோ அத்தகைய கார் ஏற்கனவே தயாராக்கப்பட்டு, மற்ற கார்களுடன் வைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் பின்னால் உள்ள அறிவிப்பு பலகையில் வைக்கப் பட்டுள்ளது. நீங்கள் தரிசனத்தைப் படித்து, நம்முடைய தேவன் எவ்வளவு பிழையற்றவர் என்று காணலாம். எவ்விதம் அவருடைய வார்த்தை ... “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தை ஒருபோதும் தவறுவதில்லை” என்று அவர் கூறியுள்ளார். பாருங்கள், முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. உங்களுக்கு 1931 மாடல் கார் காண்பதற்கு எப்படியிருக்குமென்று தெரியும்; அது ஒரு நினைவுச் சின்னம் (relic) போல் காணப்படும். அந்த தரிசனத்தில், “அது முட்டையைப் போல் காணப்படும் முட்டையைப் போல் இருக்கும்” என்று உரைக்கப்பட்டது. நான் அப்பொழுது கூறினதைக் கேட்டவர்களில் எவருமே இங்கில்லை, அவர்கள் உயிரோடிருக்கவில்லை என்று நினைக்கிறேன். அது... காலங்கள் தோறும் நான் இதைக் குறித்து கூறி வந்ததை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஆனால்... ஆம், இங்கு ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், திருமதி வில்ஸன், உன்னை அங்கு நான் பார்க்கவில்லை. அது எப்பொழுது நடந்ததென்று ஞாபகமுள்ளதா? அந்த சமயத்தில் தான் அவள் சுகமடைந்தாள், அவள் காச நோயினால் மரித்துக் கொண்டிருந்தாள் (அந்த ஸ்திரீயும், அவள்கணவரும் மகளும் அவளுக்காக ஜெபம் செய்ய என்னிடம் வந்திருந்தனர்). அவள் இரத்தம் கக்கி, மூலையில் இரத்தம் தோய்ந்த தலையணை உறைகளும் மற்றவைகளும் நிறைந்திருந்தன. மருத்துவர் “அவளை பிழைக்க வைக்க ஒரு வழியும் இல்லை” என்று கூறிவிட்டார். அவள் மரிப்பதற்கு முன்பு ஏதோ ஒன்றை என்னிடம் கூற முயன்றாள், அப்பொழுது அவளுக்கு இருமல் உண்டாகி போர்வைகளின் மேலும் படுக்கை விரிப்புகளின் மேலும் இரத்தம் பீச்சிட்டு வெளி வந்தது. அவளை நான் படுக்கையிலிருந்து குளிர்ந்த நதிக்கு கொண்டு சென்று - அங்கு தண்ணீர் மிகவும் 'சில்லென்று இருந்தது - அவளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேன். அது முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. எத்தனையோ திடகாத்திரமான, ஆரோக்கியமுள்ள பிள்ளைகள் இவ்வுலகை விட்டு போய்விட்ட போது. அவள் இன்னும் உயிரோடிருந்து இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். பார்த்தீர்களா? “திகைப்பூட்டும் கிருபை அதன் தொனி எவ்வளவு இனிமையானது. என்னைப் போன்ற ஈனனை அது இரட்சித்தது! அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று இருக்குமானால், அது எவ்வளவாக பிழையின்றி நிறைவேறுகிறது என்பதைக் காண்பிக்கிறது. 13(சபையிலிருந்து ஒரு ஸ்திரீ சகோ. பிரான்ஹாமிடம் பேசுகிறாள் - ஆசி). ஆம், அது உண்மை , சகோதரியே. ஆம், ஐயா! ஸ்திரீகள்... கடைசி நாட்களில் ஸ்திரீகள் ஒழுக்கங்கெட்டவர்களாகி விடுவார்கள் என்று நான் கூறினேன். முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எவ்விதம் உடுத்தனர் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் மிகவும் ஒழுக்கங்கெட்டவர்களாகி, முடிவில் அவர்கள் தெருக்களில் உள்ளாடைகள் மட்டும் அணிந்து நடப்பார்கள் என்று கூறினேன். மேலும் நான், “அவர்கள் மிகவும் அவ லட்சணமாகி, அத்தியிலையைப் போல் காணப்படும் ஒன்றை அணிந்து கொள்வார்கள்' என்றேன். அதை நான் கண்டேன், அவர்களுக்கு அது உள்ளது. அவர்கள் அதை அணிகின்றனர். பெண்களின் ஒழுக்கம் மிகவும் தாழ்ந்து, கீழ்த்தரமாகி... இதைக் காட்டிலும் இப்பொழுது நாம் தாழ்வடைய முடியாது; இதைக் காட்டிலும் நீங்கள் மோசமாக ஆக முடியாது. அவள் முடிவுக்கு வந்து விட்டாள். பாருங்கள், அவர்கள் முழுவதும் நிர்வாணிகளாக மாட்டார்கள். இல்லை, அவர்கள்.... ஒரு சிறு துணியும் உடுத்திராத பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு நான் பிரசங்கித்திருக்கிறேன் - வாலிப ஆண்களுக்கும், வாலிப் பெண்களுக்கும், அவர்கள் எல்லோருக்கும். ஆனால் அவர்கள் நிர்வாணிகளென்று அறிந்திருக்கவில்லை. பாருங்கள்? அவர்களுக்கு அது தெரியவில்லை. இன்று ஸ்திரீ நடந்து கொள்ளும் விதத்தைக் காணும்போது... 14அன்றொரு இரவு நான் என் நண்பர்களில் சிலருடன் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் மலை பிரதேசத்தில் அப்பொது இருந்தோம். அங்கு ஒரு ஸ்திரீ... அவளுடைய குழந்தைக்கு அப்பொழுது தான் நான் ஜெபித்தேன், அதற்கு வலிப்பு இருந்தது. அது சுகமடைந்தது. ஒரு சிறு, ஏழை குடும்பம்; ஒரு பள்ளத்தில், வீட்டைச் சுற்றிலும் புகையிலை பயிரிடப்பட்டிருந்தது. அந்த வீட்டில் இரண்டு அறைகள் - ஏழு எட்டு பிள்ளைகள். அந்த ஸ்திரீ வேலை செய்கிறாள் (ஓ, என்னே!) - ஒரு பரந்த கோடாலியை வைத்துக் கொண்டு மரங்களை வெட்டுவதும், தோட்டங்களைப் பண்படுத்து வதும், பழங்களை டப்பியில் அடைப்பதும். அந்த ஏழை ஸ்திரீயை நான் பார்த்தேன் - ஒரே உடுப்பை அவள் ஓரிரண்டு ஆண்டுகளாக உடுத்தியிருக்கிறாள். அது கிழிந்து போயிருந்தது.... மேடாவின் உடைகள் சிலவற்றை அடுத்த வாரம் அவளுக்கு கொண்டு போகலாம் என்றிருக்கிறேன். ஒரு சில சகோதரர்களும் நானும் அங்கு நின்று கொண்டு, அந்த பெண் குழந்தைக்கு பாலூட்டுவதை கவனித்தோம். அவள் ஆடையிலிருந்து தன் மார்பகத்தை வெளியே எடுத்து, குழந்தைக்குப் பாலூட்டினாள். ஒரு நிமிடத்துக்கு அது எங்களுக்கு ஆச்சரியமாயிருந்தது; அவ்விதம் தான் என் தாய் எனக்குப் பாலூட்டினார்கள்! அது முற்றிலும் உண்மை . 15பட்டை போல் ஒன்றை உடுத்திக் கொண்டு மார்பகங்களை வெளியே தள்ள வைக்கும் ஸ்திரீகளைக் காட்டிலும் அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீயின் மேல் எனக்கு மதிப்பு அதிகம் உள்ளது. அவ்விதம் அவர்கள் செய்வதனால், மானிடரைப் போலவே காட்சியளிப்பதில்லை; அவ்விதம் செய்ய அவர்களுக்கு ஒரு நோக்கம் உண்டு; அது இன உணர்ச்சியை தூண்டுவதாயும், தேவபக்தியற்ற செயலாகவும் உள்ளது. இப்படிப்பட்டவைகளை ஒரு பெண் உடுத்தி, தனக்கு இல்லாததை இருப்பது போல் காட்சியளிப்பதென்பது... நான்..... உண்மையில் பெண்களுக்கு அவ்விதம் இருப்பதில்லை; அது ஒருவிதமான ஹாலிவுட் செயல். இன உணர்ச்சியின் மூலம் மனிதரைக் கவர செய்வதற்கென பிசாசின் ஆவிஇப்படிப்பட்ட ஸ்திரீகளின் மேல் இறங்குகின்றது. குழந்தைக்கு பாலுட்டவே பெண்களுக்கு மார்பகங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அது முற்றிலும் உண்மை . நாங்கள் கண்ட ஸ்திரீ பழங்குடியினர் வம்சத்தில் வந்தவள், ஆனால் அவள் சரியான முறையைக் கடைபிடிக்கிறாள். அத்தகைய ஒன்றுக்கு எனக்கு அதிக மதிப்புண்டு - அவ்விதம் செய்யும் ஒரு பெண்ணின் மேல். ஏனெனில் அவள் அப்படித் தான் அவள் தாய் அவளை வளர்த்தாள்.... அவர்கள் அதற்கு எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. நீங்கள் மடோனா படத்தில் காண்பதைப் போல் குழந்தைக்கு அங்கு பாலூட்டப்பட்டது. ஜனங்கள் மாத்திரம் தங்கள் சிந்தையை அவ்விதம் சரியாக்கிக் கொள்வார்களானால், அது வித்தியாசமாயிருக்கும். 16ஆனால் நீங்கள் அவ்வளவு ரவிக்கைகளையும் பட்டைகளையும் உடுத்து, அவைகளின் அளவை மிகைப்படுத்தி வெளியே செல்வீர்களானால், அது தேவபக்தியற்ற செயலாகவும் மனிதரைக் கவர்ச்சிக்கிறதுமாயிருக்கிறது... அது உன் மேல் தங்கியுள்ள பிசாசின் ஆவி என்பதை உணருகிறாயா? ஓ, ஆமாம்! சகோதரியே, அப்படி செய்ய விரும்பாதே. அவ்விதம் செய்யாதே; அது ஹாலிவுட்டின். செயலும் பிசாசின் கண்ணியுமாயுள்ளது. நீங்கள் அவ்விதம் செய்யும் போது, மனிதர் உங்களைக் குறித்து தவறான அபிப்பிராயம் கொள்ளும்படி அது செய்கிறது. நீங்கள் அவ்விதம் செய்யும்போது. அந்த மனிதனுடன் நீங்கள் விபச்சாரம் செய்த குற்றத்துக்கு ஆளாகின்றீர்கள். ஏனெனில் உங்களை நீங்கள் அந்த விதமாக அவனுக்குக் காண்பித்தீர்கள். உங்களுக்கு இயற்கையாகவே அந்த விதமான உருவமைப்பு இருக்குமானால், உங்களால் அதைக் குறித்து ஒன்றும் செய்ய முடியாது. தேவன் உங்களை உண்டாக்கின விதமாகவே இருங்கள். பாருங்கள்? நீங்கள் இல்லாத ஒன்றை இருப்பது போல் காண்பிக்காதீர்கள். மானிடரைப் போல இருங்கள். அது பயங்கரமானது! நல்லது. இது சிலர் கேட்டுள்ள கேள்விகளுக்கு ஒருக்கால் பதிலாக இருக்கக் கூடும். 17எங்கள் பிதாவே, நாங்கள் இயேசு கிறிஸ்துவுக்காகவும், நேராக உள்ள வார்த்தைக்காகவும், இன்று உமக்கு நன்றி செலுத்துகிறோம். அந்த வார்த்தைகளை நீர் பிழையின்றி நிறைவேற்றிக் கொண்டு வருவதை நான் காணும்போது, சத்தியத்திலும் சத்தியத்தின் ஒவ்வொரு வார்ததையிலும் நிலைத்திருக்க நான் அதிகமாக தீர்மானம் செய்யும்படி என்னைத் தூண்டுகிறது. எனவே பிதாவே, இக்காலை வேளையில் எங்களை, இந்த அருமையான ஜனங்களை, ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன். இந்த ஒலிநாடா பலவிடங் களுக்கும் செல்லவிருக்கிறது என்றும், சற்று முன்பு நான் குறிப்பிட்டதை அவர்கள் கேட்பார்கள் என்றும் அறிந்தவனாய் .... அது முன்கூட்டியே தீர்மானம் செய்து குறிப்பிடப்பட்ட ஒன்றல்ல; என் இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர்... அது அப்பொழுது தான் என் சிந்தையில் எழுந்தது. அதை நான் கூறவேண்டுமென்று நீர் விரும்பினீர் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை நான் கூறி விட்டேன், அது இப்பொழுது முடிந்து விட்டது. அது என் உறுதியான கருத்தும், நான் கூற வேண்டுமென்று நீர் விரும்பின் ஒன்றும் என்று முற்றிலும் விசுவாசிக்கிறேன். இதை இந்த தேசத்தின் எல்லாவிடங்களிலும், உலகம் முழுவதிலுமுள்ள தேசங்களிலும் கேட்கும் ஒவ்வொரு ஸ்தீரியும், தன் செயலைக் குறித்து வெட்கப்பட்டு, என்ன நடந்து விடுகிறது என்பதை அறிந்தவளாய், நற்பண்புள்ள பெண்ணைப் போல் உடுத்து, விபச்சாரம் செய்த குற்றத்துக்கு ஆளாகாதிருப்பாளாக! மனிதனைக் கவரும்படியாக அவளை நீர் அழகுள்ளவளாய் சிருஷ்டித்து, இரு வரும் ஒன்றாகும்படி நீர் செய்கிறீர், ஏனெனில் அவள் மனிதனிலிருந்து தோன்றியவள். ஸ்திரீயும் தன் அழகும் அவளுக்குள்ள தெல்லாம் தன் கணவருக்கே சொந்தம் என்பதை உணர வேண்டு மென்று வேண்டிக் கொள்கிறேன். பிதாவே, இதை அருளுவீராக. 18கேள்விகளுக்கு நாங்கள் இப்பொழுது விளக்கம் அளிக்கையில், எங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்கிறோம். இவைகளைக் குறித்து எங்களுக்கு போதிய அறிவு இல்லை. ஆனால் கர்த்தாவே, எங்களுக்கு போதுமானவராயிருக்கிற அந்த மகத்தான ஆவி வந்து அநேகருடைய இருதயங்களில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பீராக! நீர் எங்களுக்கு இதுவரை கொடுத்துள்ளவை களுக்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; சபை காலங்கள், முத்திரைகள் போன்றவைகளுக்காக... ஓ, அந்த மகத்தான காரியங்களில் நீர் எங்களுடன் எவ்வளவாக ஈடுபட்டீர்! கர்த்தாவே, அவை எங்களுக்கு மகத்தானதாய் உள்ளது, ஏனெனில் முடிவு காலம் நெருங்குவதை நாங்கள் காண்கிறோம். ஜனங்களின் இருதயங்களை நான் சோதனையிட்டால், அது உம்முடைய ராஜ்யத்துக்கு செழிப்பான செயலாயிருக்கு மென்று எண்ணினேன், அநேக சமயங்களில், சிந்தனைகளைப் பகுத்தறியும் போது, வெவ்வேறு காரியங்களைக் காண்பதால், அவர்களில் ஒருவர் பேரில் கவனம் செலுத்த முடிவதில்லை. எனவே அவர்கள் தங்கள் இருதயத்தில் உள்ளவைகளை எழுதி, அவர்கள் எழுதி அனுப்பும் காகிதத் துண்டில் உள்ளதை நான் உமக்கு அறிவித்தால், நீர் அவைகளுக்கு சரியான விடையளிப்பீர் என்று எண்ணினேன். கர்த்தாவே, நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம். கர்த்தாவே, எங்கள் சமுகத்தில் நீர் வந்து, உட்பாதையில் மேலும் கீழும் நடந்து, ஒவ்வொரு கேள்வியுடனும் உமது சித்தத்தின்படி ஈடுபடுவீராக. இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். (ஒலிநாடாவில் பதிவு செய்வதைக் குறித்து சகோ. பிரான்ஹாம் ஒரு சகோதரனுடன் பேசுகிறார் - ஆசி). 19நாம் தொடங்குகையில் மறுபடியுமாக இதைக் கூறுகிறேன், ஊழியக்காரர் அல்லது நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்கள், இந்த ஒலிநாடாவைக் கேட்க நேர்ந்தால் (ஒலிநாடா சரியாயிருக்குமானால்), இவை இந்த கூடாரத்தைச் சேர்ந்த மக்களின் இருதயங்களில் எழுந்த கேள்விகள். இங்கு எங்களுக்கு ஸ்தாபனம் என்பதே கிடையாது, ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்ளுதல் மட்டுமே. நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்ட பிறகு, நாம் என்ன செய்ய வேண்டுமென்றும், நாம் இன்னும் சிறப்பாக எவ்விதம் வாழ வேண்டுமென்றும் அறிந்து கொள்ள இவை நமது சிந்தனைகளைத் தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன். இந்த கேள்விகளை நான் படிக்கையில். அவை எனக்கு ஆசீர்வாதமாக இருந்தன என்பதை அறிந்திருக்கிறேன். கேள்விகள் இங்கு குவியலாக வைக்கப்பட்டுள்ளன. நான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்து, 12.00 மணிக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக முடித்து விடுகிறேன். அதன் பிறகு நாம் இன்று பிற்பகல் 6.30 மணிக்கு திரும்பவும் இங்கு வரலாம். 20என்னிடமுள்ள முதல் கேள்வி, ஐந்து கேள்விகள் வரிசையாக மஞ்சள் காகிதத்தில் தட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். மத்தேயு 24:19ல் உரைக்கப்பட்டுள்ள, “அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ” என்பதன் அர்த்தம் என்ன? வினோதமான காரியம் என்னவெனில், இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்பதை அறியாதவனாய், ஸ்தீரியைக் குறித்தஇதைப் பற்றி கூற வேண்டுமென்றிருந்தேன். இது இப்பொழுது முதலாம் கேள்வியாக அமைந்து விட்டது. இப்பொழுது மத்தேயு 24:19. இயேசுவிடம் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. இவையே அந்தக் கேள்விகள்: ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு இடிக்கப்படுதல் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? என்ற மூன்று கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அவர் மூன்று வெவ்வேறு விதங்களில் இவைகளுக்கு பதிலளிக்கிறார். ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு எப்பொழுது சம்பவிக்குமென்றும், அவருடைய வருகையின் அடையாளம் என்னவென்றும், உலகத்தின் முடிவைக் குறித்தும் அவர் அவர்களிடம் கூறுகிறார். அவர் எவ்வாறு பதிலளிக்கிறார் என்று நீங்கள் கூர்ந்து கவனிக்காமல் போனால், நீங்கள் குழப்பமடைந்து, இவையனைத்தையும் ஒரே காலத்தில் பொருத்தி விடுவீர்கள். அதன் விளைவாக உங்களுக்கு குழப்பம் உண்டாகும். 21இது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஒரு சம்பவம் என்று கருதும் ஏழாம் நாள் ஆசரிக்கும் நமது சகோதரரை அவமதிக்கும் வண்ணம் இதை நான் கூறவில்லை. ஏழாம் நாள் ஆசரிப்பு என்னும் பொருளுக்கு வருவோமானால்; “நீங்கள் ஓடிப்போவது மாரிக் காலத்திலாவது, ஓய்வு நாளிலாவது சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்” (மத். 24:20) என்னும் போது, அவர்கள் ஓய்வு நாளை ஆசரித்துக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. அந்த சகோதரரை குற்றப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, அவ்விதம் செய்வது கிறிஸ்தவ பண்பாய் இராது. இதை தெளிவுபடுத்து தற்காகவே. பாருங்கள்? முழு கிறிஸ்தவ உலகமும் ஒரு மதிலுக்குள் எவ்விதம் ஒன்றாக கூடியிருக்க முடியும், அன்று போல் அவை திறக்கப் படாமலும் மூடப்படாமலும் எப்படி இருந்திருக்க முடியும்? பாருங்கள்? வெப்ப மண்டலத்தில் வாழ்பவர்களுக்கு அது கோடைகாலமானாலும் மாரி காலமானாலும், அதனால் என்ன வித்தியாசம்? பாருங்கள், அது இஸ்ரவேலருக்கு மட்டுமே. அந்த காலத்தில் தான் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராமல் போகும்.... “அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ” (மத் 24:19). ஏனெனில் கர்ப்பவதிக்கு (பாருங்கள்?) ஓடிப்போவது கடினமாயிருக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடிப்போவது கடினம். ஏனெனில் அவர்கள் எருசலேம் நகரத்தை விட்டு வெளி வந்து யூதேயாவின் மலைகளுக்கு ஓடிப் போக வேண்டும். 22இப்பொழுது, இதை தெளிவாக்க, இந்த ஒரு பொருளின் பேரில் நான் காலை முழுவதும் நிலைத்திருக்கக் கூடும். ஆனால் ஜனங்கள் புரிந்து கொள்ள முக்கியமான விஷயங்களை மட்டும் சொல்லி விட்டு, அதன் பிறகு அடுத்த கேள்விக்கு சென்றுவிடுகிறேன். இப்பொழுது, இயேசு அவர்களிடம் என்ன கூறினார் என்றால்... “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு நகரத்துக்கு திரும்பாதிருக்கக் கடவன்; அவனுடைய வீட்டிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ள நகரத்துக்கு திரும்பாதிருக்கக்கடவன், அவன் யூதேயாவுக்கு ஓடிப் போகக்கடவன்; ஏனெனில் உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராத மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” என்றார். அவையனைத்தும் ரோம தளபதியான தீத்து எருசலேமை முற்றுகையிட்டபோது நிறைவேறினது. அவர்கள் நகரத்தை சுட்டெரித்து, ஜனங்களைக் கொன்று போட்டு, இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து வாசல்களின் வழியாய் ஓடி, தெருக்களை அடைந்தது. அவன் அதை முற்றுகையிட்டான். அவன் எத்தனை ஆண்டுகளாக தன் சேனைகளுடன் நகரத்தைச்சுற்றிலும் பாளையமிறங்கி இருந்தான் என்று எனக்குத் தெரியவில்லை. ஜனங்கள், ஸ்திரீகள், தங்கள் சொந்த குழந்தைகளை சமைத்து தின்றனர். அவர்கள் மரங்களின் பட்டையையும், தரையில் விளைந்த புல்லையும் தின்றனர். அவர்கள் வார்த்தையை புறக்கணித்ததன் நிமித்தம் இது நடந்தது. அதுதான் அதற்கு காரணமாயிருந்தது. அதன் பிறகு... 23ஆனால் வார்த்தையை ஏற்றுக் கொண்டவர்கள் அந்த மகத்தான வரலாற்றாசிரியர் ஜோசியஸ் எழுதியுள்ளது போல... அவன் அவர்களை நரமாம்ச பட்சணிகள் (cannibals)என்றழைத்தான். அவர்கள் பிலாத்து சிலுவையில் அறைந்த நசரேயனாகிய இயேசு என்றழைக்கப்படும் ஒரு மனிதனின் உடலைத் தின்று கொண்டிருந்தனர் என்று கூறியுள்ளான். அவர்கள் இரவில் அவருடைய உடலைத் திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்றும், அதைதுண்டுகளாக வெட்டிப் புசித்தனர் என்றும் அவன் கூறுகிறான். (அவர்கள் இராப்போஜனம் ஆசரித்தனர், பாருங்கள். அது அவர்களுக்குத் தெரியவில்லை). இன்று நம்மைக் குறித்தும் மற்ற கிறிஸ்தவர்களைக் குறித்தும் கட்டுக் கதைகள் நிலவி வருவதைப் போல், அக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கதை பரவியிருந்தது. பாருங்கள்? அவர்கள் இத்தகைய காரியங்களைக் கூறுகின்றனர். ஆனால்.... ஆனால், அந்த ஜனங்கள்... “நீங்கள் ஓடிப்போவது மாரிக்காலத்தில் சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டதன் காரணம், யூதேயா அப்பொழுது பனியினால் மூடப்பட்டிருக்கும். பாருங்கள். கிறிஸ்துமஸ்? பனி மூடியிருந்த அந்த மலைப் பிரதேசத்தில் இயேசு எவ்விதம் அக்காலத்தில் பிறந்திருக்க முடியும்? “நீங்கள் ஓடிப்போவது மாரிக்காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்”. ஏனெனில் ஓய்வு நாளில் எருசலேமின் வாசல்கள் மூடப்பட்டிருக்கும், அவர்கள் உள்ளே அவர்களுடைய கண்ணியில் அகப்பட்டுக் கொள்வார்கள். தீத்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் அங்கு அடைந்திருப்பான் என்றால், ஓய்வு நாளன்று அவர்கள் முற்றுகையிடப் பட்டிருப்பார்கள், ஏனெனில் வாசல்கள் மூடப்பட்டிருக்கும். வாசல்கள் ஓய்வு நாளில் மூடப்பட்டு அன்று திறக்கப்படாது. ஓய்வு நாளில் நகரத்துக்கு உள்ளே வருவதும் வெளியே போவதும் முடியாது. 24இப்பொழுது, என்ன நடந்ததென்று பார்த்தீர்களா? அவர், “அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ” என்று கூறினார் (பாருங்கள்?), ஏனெனில் தப்பித்து ஓடுவதென்பது... வரலாற்றின்படி, இயேசுவையும் வார்த்தையையும் விசுவாசித்த ஒருவராவது. அது எப்பொழுது நடக்கப் போகிறது என்பதை கவனிக்காமல் இருக்கவில்லை. அவர்கள் தப்பித்து, எருசலேமிலிருந்து யூதேயாவுக்குச் சென்றனர். அவர்கள் ஜீவன் தப்ப ஓடினர். அவர்களில் ஒருவராவது. ஏனெனில் அவர் கள் தங்கள் மேய்ப்பரால் எச்சரிக்கப்பட்டு, அந்த நேரம் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தனர். தீத்து வருகிறான் என்று அவர்கள் கேள்விப்பட்டவுடனே, அவர்கள் ஜீவன் தப்ப ஓடி, நகரத்தை விட்டு வெளியேறினர். 25இப்பொழுது, அடுத்த கேள்வி தொடர்கிறது. மத்தேயு 24:24: “கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இவர்களை நாம் எவ்விதம் அடையாளம் கண்டு கொள்ளலாம்? “எழும்புவார்கள்...' அப்பொழுது நீங்கள் வேறொரு காலத்துக்கு வருகிறீர்கள். பாருங்கள்? ”கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி....“ கள்ளக்கிறிஸ்து கள்ள அபிஷேகம் பெற்றவன், ஏனெனில் கிறிஸ்து அபிஷேகம் பண்ணப் பட்டவர். ”கிறிஸ்து என்றால் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? கள்ள அபிஷேகம் பெற்றவர்கள் இருப்பார்கள், அவர்கள் தங்களை தீர்க்கதரிசிகள் என்று அழைத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களை நீங்கள் எவ்விதம் அடையாளம் கண்டு கொள்வீர்கள்? வார்த்தையினாலேயே; அவர்கள் சரியா என்று வார்த்தையினால் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அவர்களை நாம் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது? வார்த்தையினால் தான். அவர்கள். அவர்கள் வார்த்தையைக் கொண்டுள்ளதாக கூறிக் கொண்டு வார்த்தையை மறுதலிப்பார்களானால், அவர்கள் பிணியாளிகளை சொஸ்தமாக்கலாம். குருடரின் கண்களைத் திறக்கலாம். ஆனால் அவர்கள் வார்த்தையை மறுதலிப்பார்களானால், அதிலிருந்து விலகியிருங்கள். அது என்னவாயிருந்தாலும் கவலையில்லை, அந்த வார்த்தையில் நிலைத்திருங்கள் (பாருங்கள்?), ஏனெனில் “வூடு”, இன்னும் மற்ற மாந்திரீக சக்தியினால் சுகமாக்கப்படுதல் நடப்பதை நான் அநேக முறை கண்டிருக்கிறன். 26இக்காலை வேளையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ள சகோ. சிட்னி ஜாக்சனும், சகோதரி ஜாக்சனும், இங்கு உட்கார்ந்திருக்கின்றனர். அவர் இங்கு நின்று கொண்டு அந்த பொருளை எடுத்துக் கொண்டு. மாந்திரீக சக்தியினால் நடைபெறும் சிலவற்றை உங்களுக்கு எடுத்துக் கூற முடியும். ஏன், நிச்சயமாக, ஜனங்கள் விக்கிரகங்களிடம் வந்து சுகமடைகின்றனர். பாருங்கள், ஏன்? அன்றொரு நாள் நான் பிசாசினால் சுகமளிக்க முடியாது என்று கூறினதைக் கேட்டு டாக்டர் ஹகர் என்பவர் என்னைப் பார்த்து கூச்சலிட்டார். அவர், “எத்தனையோ ஜனங்களுக்கு முன்பாக நிற்கும் நீர் பிசாசு சுகமளிக்க முடியாதென்று கூறுகிறீர். என் வீட்டின்அருகில் ஒரு ஸ்திரீ இருக்கிறாள். அவள் இடுப்பைச் சுற்றி ஒரு துணியைக் கட்டிக் கொண்டு அங்கு செல்கிறாள். அவளிடம் வரும் ஜனங்கள் அந்த துணியில் காசு போட வேண்டும். அவள் அவர்களைக் கையினால் தேய்த்து, அவளுடைய தலையிலிருந்து ஒரு மயிரைப் பிடுங்கி, அவர்களுடைய இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தத்தை எடுத்து அந்த மயிரில் பூசி, அவளுக்குப் பின்னால் அதை எறிந்து விடுகிறாள். அவள் பின்னால் பார்ப்பதில்லை, ஏனெனில் அவ்விதம் செய்தால் ஜனங்களுக்கு வியாதி திரும்ப வந்து விடுமாம். அவர்களில் முப்பது சதவிகிதம் குணமடைகின்றனர். அப்படியிருக்க பிசாசினால் சுகமளிக்க முடியாது என்று நீர் கூறுகிறீர்” என்றார். 27நான், “ஓ, என்னே!' என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கு நான் இவ்விதம் கடிதம் எழுதினேன்: ”அன்புள்ள ஐயா, ஒரு லூத்தரன் கல்லூரியின் தலைவர் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஒரு அனுபவத்தின் பேரில் தனது வேதசாஸ்திரத்தை ஆதாரமிடுவது விசித்திரமாயுள்ளது. பாருங்கள்? “சாத்தான் சாத்தானைத் துரத்துவதில்லை என்று வேதம் கூறுகிறது (மத்.12:26). அத்துடன் அது முடிவு பெறுகிறது. இயேசு அவ்விதம். கூறியுள்ளார். சாத்தான்... அப்படியானால் இந்த ஜனங்கள் அதன் மூலம், அந்த மந்திரவாதியின் மூலம் எவ்விதம் சுகம் பெறுகின்றனர் என்று நீங்கள் வியக்கலாம். ஏனென்றால், ஜனங்கள் அந்த மந்திரவாதியின் மூலம் தேவனை அணுகுவதாக எண்ணுகின்றனர். சுகம் பெறுதல் விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்ட ஒன்றேயல்லாமல், நீங்கள் எவ்வளவு நீதியுள்ளவர்கள் என்பதையோ, எவ்வளவு நல்லவர்கள் என்பதையோ, நீங்கள் எவ்வளவாக கற்பனைகளைக் கைக் கொள்கிறீர்கள் என்பதையோ ஆதாரமாகக் கொண்டதல்ல, அது விசுவாசத்தையே ஆதாரமாகக் கொண்டது. 'விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்'. பாருங்கள்? நீங்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதை அது ஆதாரமாகக் கொண்டதல்ல. வேசிகள் மேடைக்கு வந்து உடனே சுகம் பெறுவதையும், பரிசுத்தவாட்டி ஒருத்தி மேடைக்கு வந்து அதை இழந்து போவதையும் நான் கண்டிருக்கிறேன். நிச்சயம்மாக, அது விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டது. நீ விசுவாசித்தால், நீதியின் அடிப்படையில் அல்ல”. பிரான்சு நாட்டில் பாருங்கள், அவர்கள் அந்த ஸ்திரீயின் கோவிலுக்கு சக்கர நாற்காலிகளில் சென்று சுகமடைந்து. நடந்து திரும்பி வருகின்றனர். அது முழுவதும் மூடநம்பிக்கையைஆதாரமாகக் கொண்டது. இறந்து போன ஒருத்தியை தொழுது கொள்ளுதல் என்பது, இறந்தவரின் ஆவியுடன் தொடர்பு கொள்ளும் செயலாகும் (spiritualism).பாருங்கள்? இருப்பினும், அவர்கள் சுகமடைகின்றனர். ஏனெனில் அவர்கள் தேவனை அணுகுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது, கத்தோலிக்க மக்களை நான் தரம் குறைவாக பேசுவதாக எண்ண வேண்டாம், நான் கத்தோலிக்க முறையையே தரம் குறைவாகப் பேசுகிறேன், நான் பிராடெஸ்டெண்டு முறையையும் (பாருங்கள்?) மற்றவைகளையும், செய்வது போல. 28இப்பொழுது ஊழியக்காரரே, இது புண்படுத்தக் கூடும் என்று அறிகிறேன், ஆனால் நான் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் என் இருதயத்திலிருந்து சத்தியத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் - கிறிஸ்துவுக்கு முன்பாக என் அறிவுக்கு எட்டின வரை. பாருங்கள்? அவையனைத்தும் மார்க்க முறைகளே. இந்த முறைகள் ஜனங்களை கட்டிப் போட்டுள்ளன. ஜனங்கள் சென்று மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே, கத்தோலிக்க ஸ்தாபனங்களை சேர்ந்து கொள்கின்றனர். இவ்விதமான ஒரு முறையின் மூலம் அவர்கள் தேவனை அணுகுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். தேவன் அதை சில வேளைகளில் மதித்து, அவர்களுடைய விக்கிரகங்களின் மூலமாக அவர்களுடைய வியாதியை அவர்களை விட்டு எடுத்துப் போடுகிறார். நல்லது, ஆப்பிரிக்காவின் பழங்குடி மக்கள் விக்கிரங்களின் மூலம் சுகம் பெறுகின்றனர் (பாருங்கள்?) ஆனால் அவர்கள் தேவனை அணுகுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி, ஒரு கெட்ட ஸ்திரீயாயிருக்க விரும்பி, கத்தோலிக்க கன்னிமடத்தை சேருகிறாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவள் ஒரு நல்ல ஸ்தீரியாயிருப்பதற்கே அந்த கன்னிமடத்தை சேர்ந்து கொள்கிறாள். ஒரு மனிதன் கெட்ட மனிதனாக இருப்பதற்காக கத்தோலிக்க சபையைச் சேர்ந்து கொள்வதில்லை; ஒரு நல்ல மனிதனாக இருப்பதற்காகவே அங்கு போய் சேர்ந்து கொள்கிறான். நீங்கள் அவ்விதம் செய்வதில்லை. நல்லது. அது என்ன? என்று நீங்கள் கேட்கலாம். இந்தியாவிலுள்ள இந்தியர் கெட்டவர்களாக இருப்பதற்காக இந்து மதத்தைச் சேர்ந்து கொள்வதில்லை. 29நான் ஜைனரின் கோயிலுக்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த பூசாரி என்னைப் பேட்டி கண்டார். அவர் போப்பைப் போல், ஒரு பெரிய தலையணையின் மேல் உட்கார்ந்து கொண்டு, கால்களை மடக்கிக் கொண்டு, கால்விரல்களை கைகளினால் பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு நல்ல கண்பார்வை இருந்தது. அவர் கண்ணாடி இல்லாமலேயே தன் சொந்த கண்களால் 23ம் சங்கீதத்தை ஒப்பிட்டு, கால் அங்குலம் பரப்புள்ள இரும்புத் துண்டில் எழுதியுள்ளார். அதை எழுதுவதென்பது மனித புத்திக்கு எட்டாத ஒரு செயலாகும். அவர் தமது இயற்கை கண்களை உபயோகித்து அதை செதுக்கியுள்ளார். அவருக்கு நாற்பது வயது அல்லது அதற்கும் சற்று அதிகமாக இருக்கும். பாருங்கள்? ஏன் நிச்சயமாக, நீங்கள்... நீங்கள், இங்கேயே இருந்து கொண்டு, மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் செய்பவைகளைக் கேள்விப்படுகிறீர்கள். நீங்கள் ஒரு முறை மிஷன் ஊழியக் களங்களுக்கு சென்று காண வேண்டும். உங்கள் கண்கள் திறக்கப்பட நீங்கள் காண வேண்டும். பாருங்கள், 30இப்பொழுது, அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற ஜைன மத சகோதரிகளை எண்ணிப் பாருங்கள்; அவர்கள் சமைப்பதில்லை; அவர்கள் உண்பதில்லை; அவர்கள் பிச்சையெடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் கைகளினால் சிறு துடைப்பானை (mop)உண்டாக்கி, தெருக்களிலிருந்து எறும்புகளையும் மற்றவைகளையும் பெருக்கித் தள்ளி விடுகின்றனர். ஏனெனில் அவர்கள் மறுஜென்மத்தில் (reincarnation)நம்பிக்கை கொண்டுள்ளனர்; ஒரு வேளை அவர்கள் தங்கள் பந்துக்களை மிதித்து விடக்கூடும். அவர்கள் எறும்புகளை மிதித்து விட மாட்டார்கள், ஈக்களை கொல்ல மாட்டார்கள், ஒன்றையும் செய்ய மாட்டார்கள். விரலுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவர்கள் ஒரு கத்தியை கூட தண்ணீரில் கொதிக்க வைக்க (Sterilizc)மாட்டார்கள். ஒரு கிருமியைக் கொல்லாமல், மனிதன் சாகும்படி விட்டு விடுவார்கள். அந்த கிருமி ஒருவேளை வேறு ஜென்மம் எடுத்த அவர்களுடைய உறவினனாய் இருக்கக் கூடும். பாருங்கள்? நீங்கள் மேலான , மேலான, மேலான ஜென்மம் எடுத்து முடிவில் மனிதனாகப் பிறந்து, பிறகு நல்ல மனிதனாக, நல்ல மனிதனாக ஆகி தெய்வமாகி விடுகிறீர்கள். இவ்விதம் மேலும், மேலும், மேலும் ஜென்மம் எடுக்கிறீர்கள். அவர்கள் கெட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்விதம் செய்வதில்லை. அவர்கள் உத்தமமாக அதைச் செய்கின்றனர்; ஆனால் பாருங்கள், “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு” (நீதி. 14:12). ஜனங்களே, இன்று காலையில் இந்த கேள்விகளின் பேரில் வகுப்பாக கூடியுள்ள உங்களிடம் எனக்குக் கூறத் தெரிந்த ஒரே ஒரு காரியம் உண்டு, அது வார்த்தை, தேவனுடைய வார்த்தை. அப்பொழுது நீங்கள், இயேசு கிறிஸ்துவே அந்த வார்த்தை என்றும், அந்த வார்த்தை இப்பொழுது நமது மத்தியில் மாம்சமாகி, இந்தக் காலத்தில் அவர் என்ன செய்வாரென்று உரைத்துள்ளாரோ, அதை அப்படியே நிறைவேற்றிக் கொண்டு வருகிறார் என்பதை விசுவாசிப்பீர்கள். சரி, இப்பொழுது, அவ்விதம் தான் அவர்களைக் கண்டு கொள்வீர்கள், அவர்களுடைய சபையினால் அல்ல, அவர்களுடைய கோட்பாடுகளினால் அல்ல, அவர்களுடைய அடையாளங்களினால் அல்ல, அவர்களுடைய ஸ்தாபனங்களினால் அல்ல, எந்த சுகமாக்குதலினாலும் அல்ல, ஆனால் வார்த்தையினால். பாருங்கள்? 31மத்தேயு 24:26 (அடுத்த கேள்வி) “அறைவீட்டையும்” “வனாந்தரத்தையும் குறிப்பிடுகிறதே. அதன் அர்த்தம் என்ன? அதன் அர்த்தம் என்னவென்றால், அந்தக் கிறிஸ்துக்களும், கள்ள அபிஷேகங்களும் இருக்கும். இவர்கள் வார்த்தைக்கு விரோதமாய் இருப்பார்கள். இவர்கள் வனாந்திரத்தில் இருப்பார்கள், அறைவீட்டுக்குள் இருப்பார்கள். “அவர்கள் பின்னே போகாதிருங்கள். அவர்களிடமிருந்து விலகியிருங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. பாருங்கள்? 32இப்பொழுது நான்காம் கேள்வி: மத்தேயு 24:28 (அந்த நபர் தொடர்ந்து கீழே வந்து கொண்டிருக்கிறார். அவர் கையொப் பமிடவில்லை; ஆம், அவர் கையொப் பமிட்டிருக்கிறார். உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன். இந்தப் பெயர்களை நான் அறிவிக்கப் போவதில்லை, ஏனெனில் அது அவசியமில்லை. பாருங்கள்?) மத்தேயு 24:28: “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். பிணம் யார்? கழுகுகள் யார்? இப்பொழுது, அது ஒரு நல்ல கேள்வி, அதில் ஒன்றும் தவறில்லை. பிணம் என்பது எது? கழுகுகள் தின்பது தான் பிணம்.வேதத்தில் தீர்க்கதரிசி கழுகாகக் கருதப்படுகிறான். தீர்க்கதரிசி தான் கழுகு. தேவன் தம்மை கழுகென்று அழைத்துக் கொள்கிறார். விசுவாசிகளாகிய நாம் கழுகுக் குஞ்சுகள். பாருங்கள்? அவர்கள் தின்னும் பிணம் எது? வார்த்தை. வார்த்தை எங்கெல்லாம் உள்ளதோ, அங்கு பறவையின் இயல்பு வெளியரங்கமாகும். பாருங்கள்? கழுகுக்கு புது மாம்சம் தேவை. அது ஒரு பருந்து அல்ல (பாருங்கள்?), அது ஒரு கழுகு. அதற்கு நீங்கள் ஸ்தாபன பொருளை தின்னக் கொடுக்க முடியாது; அதற்கு கழுகின் ஆகாரம் தேவைப்படுகிறது. அதுதான் மிகவும் புதிய மாம்சம், மோசே செய்தது அல்ல, வேறு யாரோ செய்தது அல்ல, சாங்கி, ஃபின்னி, நாக்ஸ், கால்வின் ஆகியோர் செய்தது அல்ல, ஆனால் இப்பொழுது. இந்த நாளுக்கென கொல்லப்பட்ட மாம்சம். அதுதான் இந்த வார்த்தையை உறுதிப்படுத்துவதற்கென்று மரித்த கிறிஸ்துவின் ஒரு பாகமாயுள்ளது. அதை தான் அவர்கள் புசிக்கின்றனர். புரிகிறதா? பாருங்கள், பாருங்கள்? 33நோவா செய்தது அல்ல, மோசே செய்தது அல்ல, அவை திருஷ்டாந்தங்கள். அவர்கள் என்ன செய்தனர் என்று நாம் படித்துக் கண்டு கொள்கிறோம். ஆனால் அவர் இப்பொழுது என்ன செய்வதாக வாக்களித்துள்ளார் என்பதே காரியம். அவர் முன் காலத்தில் அங்கு வார்த்தையாயிருந்தார்; அது அந்நாளுக்கான பிணம். வெஸ்லியின் காலத்தில் அது அந்நாளுக்கான பிணமாயிருந்தது. லூத்தரின் காலத்தில் அது அந்நாளுக்கான பிணமாயிருந்தது. ஆனால் நாம் அதற்கு செல்வதில்லை. அது ஏற்கனவே கெட்டுப்போய் விட்டது. மீதமுள்ளது சுட்டெரிக்கப்பட வேண்டும், இராப்போஜனப் பொருட்களும் கூட, அதை அடுத்த சந்ததிக்காக விட்டு வைப்பதில்லை. நீங்கள் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளும் போது, மீதியானதை அடுத்த நாள் காலை வரைக்கும் கூட விட்டு வைக்கக் கூடாது. அதை சுட்டெரிக்க வேண்டும் என்று வேதம் உரைக்கிறது. எனவே முன்பு நடந்ததைக் குறிப்பிடுவதா? இல்லை, ஐயா! நமக்கு இன்று புது ஆகாரம் உள்ளது. அது தான் இந்நேரத்துக்கென வாக்களிக்கப்பட்டு இந்நேரத்தில் வெளிப் பட்டுள்ள வார்த்தை . அங்கு தான் கழுகுகள் கூடுகின்றன, அங்கு தான் பிணம் உள்ளது. அதன் பேரில் நாம் நீண்ட நேரம் நிலைத் திருக்க முடியும், ஆனால் நான் கூறுவதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். 34சரி, ஐந்தாம் கேள்வி. எடுத்துக் கொள்ளப்படுதலின் போது மணவாட்டி ஓரிடத்தில் ஒன்றாக கூடியிருப்பாளா, அது மேற்கு பாகத்தில் இருக்குமா? 55, இல்லை, அது அங்கு இருக்க வேண்டியதில்லை. ஆம், மணவாட்டி ஓரிடத்தில் ஒன்றாக கூடியிருப்பாள் என்பது உண்மையே, ஆனால் உயிர்த்தெழுதல் வரைக்கும் அது நடக்காது - பாருங்கள் “கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம். எபேசியர் 2 தெசலோனிக்கேயர் 5ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். ”கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் (உலகம் பூராவிலும்) நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை (அவர்களைத் தடை செய்வதில்லை). தேவ எக்காளம் முழங்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் அவர்களோடே கூட எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம்“ (1 தெச. 4:15-17). எனவே, கர்த்தரைச் சந்திக்கச் செல்லும் போது, மணவாட்டி ஒன்று கூடியிருப்பாள். பாருங்கள்? அவள் ஒன்று கூடியிருப்பாள். ஆனால் அவர்கள் எல்லோரும் இது போல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் மணவாட்டி உலகம் சுற்றிலும் - ஆர்டிக் பிரதேசம் தொடங்கி வெப்பமான தேசம் வரையிலும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், வடக்கிலிருந்து தெற்கு வரையிலும் - பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருக்கிறாள் 35“மனுஷகுமாரன் வரும் போது, அது கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிற மின்னல் போல் இருக்கும்” என்று இயேசு கூறியுள்ளார். முழு விஷயமே, உயிர்த்தெழுதல் இருக்கும், எடுத்துக் கொள்ளப்படுதல் இருக்கும். அவள் இங்கிருந்து போய் விடுவாள். அவரைச் சந்திக்க அவள் போவதற்கு முன்பு... கர்த்தருடைய ஞானத்தைக் கவனியுங்கள். இப்பொழுது, உதாரணமாக, இதை கூறும் போது... கிருபையின் நினைவுகள் மூலமாகவும், வார்த்தையில் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலமாகவும், நான் “நாம்” என்று கூறுகிறேன். நான் உங்களோடு கூட என்னையும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவின் சரீரத்துடன் இணைத்துக் கொள்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன். நான் “நாம்” என்று கூறும் போது கிருபையினால் அதை விசுவாசிக்கிறேன். அவருடைய கிருபையினால், எடுத்துக்கொள்ளப்படும் அந்த மக்களில் நாமும் இருப்போம் என்று நான் விசுவாசிக்கிறேன். 36நாம் உயிர்த்தெழும் போது, முதலாவது நடப்பது என்னவெனில்.. உயிரோடிருப்பவர்கள் இங்கிருப்பார்கள். முதலாவதாக உயிர்த்தெழுதல் நிகழும், நித்திரையடைந்தவர்களின் உயிர்த்தெழுதல். நித்திரையிலுள்ளவர்களை தட்டி எழுப்பும் நேரம் ஒன்றிருக்கும். இப்பொழுது பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்கள் - பாவத்தில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்கள் அல்ல, அவர்கள் தொடர்ந்து நித்திரை செய்து கொண்டிருப்பார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டு காலம் வரைக்கும் அவர்கள் தொடர்ந்து நித்திரையிலிருந்து எழும்புவதில்லை. ஆனால் கிறிஸ்துவுக்குள் மரித்து பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்கள் முதலில் நித்திரையிலிருந்து எழுப்பப்படுவார்கள். அவர்கள் - இந்த அழிவுள்ள சரீரங்கள் கர்த்தருடைய எடுத்துக்கொள்ளப்படும் கிருபையினால் அழியாமையைத் தரித்துக் கொள்ளும். அதன் பிறகு நாம் எல்லோரும் ஒன்று கூடுவோம். அவர்கள் ஒன்று கூடத் தொடங்கும் போது, உயிரோடிருக்கிற நாம் மறுரூபப்படுவோம். இந்த அழிவுள்ள சரீரங்கள் மரணத்தைக் காண்பதில்லை. ஆனால் சடுதியாக, நம்மை வேகமாக அடித்துக் கொண்டு செல்வது போன்ற ஒன்று உண்டாகும். அப்பொழுது நீங்கள் மறுரூபமடைவீர்கள். நீங்கள் ஆபிரகாமைப் போல், வயோதிபனிலிருந்து வாலிபனாகவும், வயோதிப ஸ்திரீயிலிருந்து வாலிப ஸ்திரீயாகவும் மாறி விடுவீர்கள். இந்த சடுதியான மாற்றம் என்ன? சற்று கழிந்து நீங்கள் சிந்தனையைப் போல் பிரயாணம் செய்வீர்கள். அப்பொழுது நீங்கள் ஏற்கனவே உயிர்த்தெழுந்தவர்களை காண முடியும். ஓ, என்ன ஒரு நேரம்! அதன் பிறகு நாம் அவர்களுடன் ஒன்று சேர்ந்து, அவர்களோடு கூட எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம். 37உங்கள் 'அங்கிள்' தென் கென்டக்கியில் அடக்கம் பண்ணப்பட்டிருந்தால், அவர் இந்தியானாவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றோ, அல்லது இந்தியானாவில் அடக்கம் பண்ணப்பட்டிருந்தால், தென் கென்டக்கிக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றோ அவசியமில்லை. அவர் எங்கிருந்தாலும்... கடலில் மரித்தவர் கடலிலிருந்து எழுந்திருப்பார்கள். விளையாட்டு அரங்கத்தில் சிங்கங்களினால் புசிக்கப்பட்டு அழிக்கப்பட்டவர்களும், அக்கினி சூளையில் போடப்பட்டு எலும்புகளும் கூட சாம்பலானவர்களும், உயிரோடெழும்புவார்கள். அவர்கள் ரோமாபுரியில் இருந்திருந்தாலும், ரோமாபுரியிலுள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்திருந்தாலும், அல்லது தென் பாகத்திலுள்ள வெப்பமான காடுகளில் இருந்திருந்தாலும், அல்லது பனி உறைந்துள்ள வடக்கு பாகத்தில் இருந்திருந்தாலும், அவர்கள் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, மருரூபமடைந்து மேலே கொண்டு வரப்படுவார்கள். உயிரோடிருப்பவர்கள் ஒரு நொடிப் பொழுதில், ஒரு கண் இமைப் பொழுதில் மறுரூபமடைந்து, அவர்களோடு கூட எடுத்துக் கொள்ளப்படுவார்கள். 38ஆப்பிரிக்காவின் ஊழியக்களத்தில் மரித்துப்போன மிஷனரிமார்களைப் பாருங்கள். வடக்கிலுள்ள பனி உறைந்த இடங்களில் மரித்துப் போனவர்களைப் பாருங்கள். விளையாட்டு அரங்கங்களிலும், உலகம் முழுவதிலும், காங்கோ பிரதேசத்திலும் மரித்துப் போனவர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லாவிடங்களிலும் மரித்தனர் - சீனாவில், ஜப்பானில், உலகெங்கிலும், கர்த்தருடைய வருகை உலகம் முழுவதற்கும்; எடுத்துக் கொள்ளப்படுதல் உலகம் முழுவதும் சம்பவிக்கும். நேரம் மாற்றத்தைக் கவனியுங்கள். படுக்கையில் இரண்டு பேர் இருப்பார்கள்; நான் ஒருவனை எடுத்துக் கொண்டு மற்றவனை விட்டு விடுவேன். அதே நேரத்தில், “இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்: நான் ஒருவனை எடுத்துக் கொண்டு மற்றவனை விட்டு விடுவேன். ஒன்று பூமியின் இருளான பக்கம், மற்றது பூமியின் வெளிச்சமான பக்கம். பாருங்கள்? அது உலகம் முழுவதும் நடக்கப் போகும் எடுத்துக் கொள்ளப்படுதல். ஆம், சபையானது ஒன்று கூடியிருக்கும். ஆனால் அது உயிர்தெழுதலும் எடுத்துக் கொள்ளப்படுதலும் நிகழ்ந்த பிறகு. நீங்கள் அந்த விதமாக அதை காணவில்லை என்றால், அதனால் பரவாயில்லை. அதை நான் சரியாக கூறவில்லை; இதை நாம் ஒலிநாடாவில் பதிவு செய்கிறோம். பாருங்கள்? வேறு ஊழியக்காரர்கள் இதனுடன் ஒருவேளை இணங்காமலிருக்கலாம். அதனால் பரவாயில்லை. 39அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, என் கேள்வி ஞானஸ்நானத்தின் பேரில் ஒருவன் எப்பொழுது இரட்சிக்கப் படுகிறான்? ஒருவன் விசுவாசிக்கும் போது தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நாம் தண்ணீர் ஞானஸ்நானம் பெறாமலிருந்தாலும், அப்.10:47ல் கொர்நேலியுவின் விஷயத்தில் நடந்தது போல, நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வோமானால் இரட்சிக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். தமஸ்குவுக்குப் போகும் வழியில் பவுல் இரட்சிக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர், ஆனால் அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகும் அவனுடைய பாவங்கள் அவனில் குடி கொண்டிருந்ததாக அப். 22:16 உரைக்கிறது. கொர்நேலியுவைப் போல ஒருவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவன் தண்ணீர் ஞானஸ்நானம் பெறாததால் அவனுடைய பாவங்கள் அவனில் நிலைத்திருக்க வாய்ப்புண்டா? ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெற்றும் கூட தண்ணீர் ஞானஸ்நானம் பெறாமல் பரலோகத்துக்குப் போக முடியாதா? இப்பொழுது, என் விலையேறப் பெற்ற நண்பரே... இப்பொழுது இந்த சகோதரன் கையொப்பமிட்டிருக்கிறார். இவரை எனக்குத் தெரியாது, ஆனால் அவர் கையொப்பமிட்டிருக்கிறார். நான் பெயர்களை அறிவிக்கப்போவதில்லை, ஏனெனில் அது அவசியமில்லை; பெயர்களை அறிவித்தால், மற்றவர்கள் அவர்களிடம் சென்று, “நல்லது. நான் இதில் அதில் உங்களுடன் இணங்க முடியாது” என்று கூறுவார்கள். பாருங்கள்? நான் எந்த ஒரு பெயரையும் அறிவிக்கமாட்டேன். பெரும்பாலான கேள்விகளில் கையொப்பமிடப்பட்டுள்ளது, ஆனால் அது நான் யாரென்று அறிந்து கொள்வதற்காக மட்டுமே. பாருங்கள்? இவைகளை நான் வைத்துக் கொள்ள, இங்கு வைத்து விடுகிறேன். சில கேள்விகள் நீல நிறத் தில் எழுதப்பட்டுள்ளன, சில கேள்விகள் தட்டெழுத்தில் உள்ளன, வெவ்வேறு விதங்களில் இங்கு முதலாவது கேள்வி: “நீங்கள் எப்பொழுது இரட்சிக்கப்படுகிறீர்கள்?' அதை தொடர்ந்து, ”தண்ணீர் ஞானஸ் நானம் பெறாமல் பாவங்கள் போக்கப்படக் கூடுமா, ஏனெனில் கொர்நேலியுவும் அவன் வீட்டாரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட போது, அவர்கள் அப்பொழுது ஞானஸ்நானம் பெற்றிருக்கவில்லையே“ பவுல் தமஸ்குவுக்குப் போகும் வழியில் தன் அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட பிறகும், அவன் தண்ணீர் ஞானஸ்நானம் பெறும் வரைக்கும் அவனுடைய பாவங்கள் அவனில் குடி கொண்டிருந்தது; ஏனெனில் வசனம் என்ன கூறுகிறதென்றால் (நான் உறுதியாக அறிந்து கொள்வதற்காக இந்த வசனங்களையெல்லாம் படித்துப் பார்த்தேன்). அது அப்படித்தான்... அனனியா பவுலிடம் ”நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படும் என்றான், 40அதன் பிறகு, “பரிசுத்த ஆவியின் அபிஷேகம்... ஒருவன் அதைப் பெற்றுக் கொண்டு, தண்ணீர் ஞானஸ்நானம் பெறாததால் அவனுடைய பாவங்கள் அவனில் நிலைத்திருக்க வாய்ப்புண்டா?” “ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த போதிலும் பரலோகத்துக்கு செல்வதை நிச்சயப்படுத்திக் கொள்ள தண்ணீர் ஞானஸ்நானம் பெற வேண்டுமா?” இப்பொழுது, நான் நினைக்கிறேன். ... இப்பொழுது, இந்த சகோதரனை எனக்குத் தெரியாது, இது மிகவும் நல்ல, புத்திசாலித்தனமான கேள்வி. இதை நாம் விரிவாகக் காண வேண்டும், ஏனெனில் இவைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். பாருங்கள்? 41இப்பொழுது, நான் நம்புவது என்னவெனில், இந்த சகோதரன் இது தான் உண்மை என்று என்னிடம் கூறுகிறார். அல்லது அது உண்மையென்று என்னைக் கூற வைக்கிறார். (அவர் ஒருக்கால் அவ்விதம் விசுவாசிக்கக் கூடும், எனக்குத் தெரியாது). இது வார்த்தையின் பேரில் உள்ள உண்மையான விசுவாசத்துக்கு சிறிது முரணாக உள்ளதென்று நினைக்கிறேன். நான் ... இந்த சகோதரன் அவ்விதம் கூறுவது போல் தோன்றுகிறது - இப்பொழுது, அதனால் பரவாயில்லை, சதோதரனே; நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கக்கூடும்; அது அருமையானது. இது ஒரு நல்ல கேள்வி என்று எண்ணுகிறேன். இதை நீங்கள் எழுதிக் கேட்டதற்காக எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்பொழுது, பாருங்கள்? மறு ஜென்மத்துக்காக (regeneration)தண்ணீர் ஞானஸ்நானம் கொடுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை (பாருங்கள்?), ஏனெனில் நீங்கள் அவ்விதம் செய்யும் போது, அது இரத்தத்தை அகற்றி விடுகிறது. பாருங்கள்? மறு ஜென்மம் நடந்துள்ளது என்பதைக் காண்பிக்கவே நீங்கள் தண்ணீர் ஞானஸ்நானம் பெறுகிறீர்கள். பாருங்கள்? அது மறுஜென்மம் அடைந்ததற்கு வெளிப்படையான அடையாளம். முழுகாரியமே முன் குறித்தலை ஆதாரமாகக் கொண்டுள்ளது. பாருங்கள்? ஆனால் யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று நமக்குத் தெரியாது; எனவே நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறோம். 42மறு ஜென்மம் அடைதல் என்னும் விஷயத்தில், எனக்கு ஒருத்துவ சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டு. இந்த கேள்விகளின் ஒலி நாடாவை கேட்கும் ஒருத்துவ சகோதரரே, இது உங்கள் அலுவலகத்திலோ, அல்லது உங்கள் வீட்டிலோ, அல்லது ஒருத்துவ சகோதரரின் மத்தியிலோ கிடைக்க நேரிட்டால், என்னைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் இவ்விஷயத்தில் நாம் கருத்து வேற்றுமை கொண்டுள்ளோம். 69, எனக்கும் என் மனைவிக்குமிடையே கருத்து வேற்றுமை உண்டு; நிச்சயமாக எங்களுக்கு உண்டு. அவளை நேசிப்பதாக நான் அவளிடம் கூறினால், அவள் அதை நம்ப மாட்டேன் என்கிறாள். எங்களுக்கிடையே நிச்சயம் கருத்து வேற்றுமை காணப்படுகிறது, ஆனால் நாங்கள் நன்றாகத்தான் ஒன்று சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது கவனியுங்கள், அவளை நான் நேசிக்கிறேன் என்பதற்கு நான் போதுமான அறிகுறிகளை அவளுக்கு காண்பிக்காமல் இருக்கக் கூடும்... நான் வெளியே சென்று பிரசங்கித்து, பின்பு வீடு திரும்பி, தூண்டிலை எடுத்துக் கொண்டு, மீன் பிடிக்கச் சென்று விடுகிறேன். பாருங்கள்? ஆனால் என் இருதயத்தின் ஆழத்தில் அவளை நான் நேசிக்கிறேன்; அவளை விட்டு பிரிந்திருக்க எனக்கு நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அவ்வளவுதான். இப்பொழுது, இதை கவனிப்பீர்களானால்... நமக்கு கருத்து வேற்றுமை இருக்குமானால், அதனால் பரவாயில்லை. ஆனால் பாருங்கள். தண்ணீர் பாவங்களைப் போக்குவதில்லை; அது நல் மனச்சாட்சியை வெளிப்படுத்தும் ஒன்றாயுள்ளது. 43இப்பொழுது, நான் நினைக்கிறேன், பவுல் அங்கு ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதன் காரணம் என்னவெனில், வேதத்தின்படி, நாம் அதிகாரப்பூர்வமாக ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இந்த சம்பவத்துக்கு உங்களைக் கொண்டு செல்ல விரும்புகிறேன்; கள்ளன் சிலுவையில்தொங்கின போது... அவன் ஞானஸ்நானம் பெறாமலேயே மரித்தான், இருப்பினும் இயேசு அவனை அந்த நாளில் பரதீசில் சந்திப்பார் என்னும் வாக்குத்தத்தத்தை அவன் பெற்றுக் கொண்டான் - இழக்கப் பட்டோரின் இடத்தில் அல்ல! ஏனெனில் முதன் முறையாக அவனுக்கு அந்த தருணம் அளிக்கப்பட்டது. கொர்நேலியுவின் வீட்டில் இருந்தவர்கள் வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டபோது, அவர்களுடைய இருதயங்கள் அதே நிலையில் இருந்தன என்று நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை உயிர்ப்பித்தார். அது அவர்களுக்கு உயிர்ப்பிக்கப்பட்டது. ஆகையால் தான் பரிசுத்த ஆவியானவர் அந்நிய பாஷையில் பேசவும் தீர்க்கதரிசனம் உரைக்கவும் செய்கிறார். ஏற்றுக் கொள்ள விருப்பமுள்ள ஜனங்களின் இருதயங்களில் வார்த்தை விழுந்தது - அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டவைகளைக் கண்ட பிறகு. அது தான் இன்றைக்கு நாம் வாழும் இந்த நேரத்தில் எனக்கு புதிராக உள்ளது. அங்கு கூடியிருந்த ரோமர்களும் கிரேக்கர்களும், தரிசனம் நிச்சயமாக நிறைவேறினதை அவர்கள் கண்ட பிறகு, பரிசுத்த ஆவி அவர்களுடைய இருதயங்களில் உணர்ச்சியூட்டி, பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண் டிருக்கையில், பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழுந்தார். பாருங்கள்? 44உதாரணமாக... பாருங்கள், கொர்நேலியுவிடம், “சீமோனை அழைப்பி' என்று கூறப்பட்டது. அவன் நூற்றுக்கு அதிபதி. அவன் நூறு பேர்களுக்கு மேல் அதிகாரம் வகித்தான். அவன் ரோம் நூற்றுக்கதிபதி. அவன் ஜெபித்துக் கொண்டிருந்த போது ஒரு தரிசனத்தைக் கண்டான். ஒரு தேவதூதன் அவனிடத்தில் வந்தான். அவன் ஒரு நல்ல மனிதன். அந்த தூதன் அவனிடம், ”நீ யோப்பா பட்டினத்துக்குப் போ. அங்கே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்பவனிடத்தில் சீமோன் பேதுரு என்னும் பெயர் கொண்ட ஒருவன் தங்கியிருக்கிறான். அவன் மேல் வீட்டில்... அவனை அங்கு காண்பாய். அவன் வந்து வார்த்தையை உனக்குச் சொல்லுவான்“ என்றான். நல்லது. அந்த தரிசனம் மிகவும் தத்ரூபமாக இருப்பதாக அவன் எண்ணினான். “நான் உறங்கிய நிலையில் இருந்திருக்க முடியாது. நான் அந்த தேவதூதனை நேருக்கு நேராக கண்டேன்” என்று எண்ணினான். எனவே அவன் மிகவும் விசுவாசமுள்ள தனது போர்ச்சேவகரில் சிலரை அங்கு அனுப்பினான். அங்கே தேவன் அந்த அப்போஸ்தலனை வரிசையின் மறுபக்கத்தில் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் “எழுந்திரு” என்றார். அவன் சொன்னான்.... அவன் மேல் வீட்டில், இருந்து கொண்டு திருமதி பேதுரு இரவு உணவு ஆயத்தம் பண்ணுவதற்காக காத்துக் கொண்டிருந்தான். அவன் அங்கு மேல் வீட்டில் இருந்த போது... அவன் வனாந்தர வழியாக ஒருக்கால் நடந்து வந்த காரணத்தால் அந்த அப்போஸ்தலனுக்கு மிகவும் பசித்தது. அவன் இரவு உணவுக்கு சற்று முன்பு மேல் வீட்டில் படுத்திருப்பது வழக்கம். இப்பொழுதும் அவ்விதம் செய்வது வழக்கமாயுள்ளது. அவர்கள் ஏணியின் மேலேறி கூரைக்குச் சென்று குளிர்ச்சியான மாலை வேளையில் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். 45இந்த அப்போஸ்தலன் உறங்கி விட்டான். அவன் உறங்கிக் கொண்டிருந்த போது, உறக்கத்தையும் கடந்து ஞானதிருஷ்டியடைந்தான். அப்பொழுது அசுத்தமான ஜீவன்கள் நிறைந்த ஒரு துப்பட்டி இறங்கி வருகிறதைக் கண்டான். அவன் “எழுந்திரு, அடித்துப் புசி” என்று சொல்லும் ஒரு சத்தத்தைக் கேட்டான். அவன், “அப்படியல்ல, ஆண்டவரே, அசுத்தமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை” என்றான். இப்பொழுது, பாருங்கள், அங்கு ஒரு தரிசனம் உண்டானது. இப்பொழுது, கவனியுங்கள்! அதற்கு அர்த்தம் உரைத்தாக வேண்டும். பேதுரு வேட்டை பயணம் மேற்கொண்டு, அவன் முன்பு புசித்திராத ஏதோ ஒரு வகை மிருகத்தைக் கண்டு, அவன் அதை புசிக்க முயற்சி செய்வது போல் அது தோன்றினது. அவன், “அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை” என்றான். அவரோ, “நான் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என்றார். அவர், “எழுந்திரு, மூன்று பேர் உனக்காக வாசலில் காத்திருக்கிறார்கள். ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் போ” என்றார். அதே நேரத்தில் அவர்கள் கதவைத் தட்டிக் கொண்டிருந்தனர் (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார் - ஆசி). 46இப்பொழுது. பார்த்தீர்களா? விசுவாசமுள்ள அந்த போர்ச்சேவகர் இந்த மனிதனை, அந்த தரிசனத்தின்படியேகண்டபோது... அவர்கள் தேவன் தரிசனத்தில் உரைத்த அதே மனிதனுடன் திரும்பி வருகின்றனர், முன் பின் தெரியாதவன், ஒரு சிறு. அதிகம் அறிந்திராத, செம்படவன். ஆனால் அந்த சிறு கூட்டத்திற்கோ, இவனைக் கண்டு பிடித்தது மிகவும் முக்கியமான செயலாக இருந்தது. அவன் தரிசனத்தில் கண்ட அதே வீட்டுக்கு வருகிறான். கொரிநேலியு எல்லா ஜனங்களையும் வரவழைத்து அங்கு கூட்டியிருந்தான். பேதுரு, “நான் கண்ட அதே விதமாக உள்ளதே” என்றான். பின்பு பேதுரு எழுந்து நின்று, அவர்கள் எவ்விதம் பரி சுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர் என்பதைக் குறித்து பிரசங்கிக்கத் தொடங்கினான். அவன் பேசிக் கொண்டிருக்கையில்...! அவர்கள் ஒரு தரிசனம் கிரமமாகவும் பரிபூரணமாகவும் நிறை வேறுகிறதைக் கண்டனர். ஒரு கூட்டம் புறஜாதி மக்கள் ஒரு தரி சனம் நிறைவேறுகிதைக் கண்டு, அவர்கள் எவ்விதம் ஜீவனைப் பெற வேண்டும் என்னும் சத்திய வசனத்தைக் கேட்டனர். அப் பொழுது அவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார். 47அது இக்கூடாரத்துக்கு இக்காலை வேளையில் என்ன செய்ய வேண்டும்! வியாதியஸ்தர், அவதியுறுவோர், குருடர், செவிடர், ஊமையர் , பாவி எல்லோருமே... பல்லாயிரக் கணக்கான காரியங்களில், ஒரு முறையாவது ஒரு அணு கூட தவறினதில்லை என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்! அது நமது இருதயங்களை அனல் மூட்ட வேண்டும்! இப்பொழுது. இப்பொழுது, அவன் இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அப்பொழுது பேதுரு, “நம்மைப் போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறுதபடிக்கு நாம் தண்ணீரை விலக்கலாமா? அவர்களுடைய பாவங்கள் ஏற்கனவே போய் விட்டன என்று நான் விசுவாசிக்கிறேன், இல்லையெனில், பரிசுத்த ஆவி யானவர் உள்ளே வந்திருக்க மாட்டார்; அது முன்குறிக்கப்பட்ட ஒரு பாண்டமாய் இல்லாமல் போயிருந்தால், அவர் உள்ளே வந்திருக்கவே மாட்டார்' என்றான். அவர்கள் பின்தொடருவார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அறிந்திருந்தான்.... 48நான் நினைக்கிறேன், பவுல் மறுபடியுமாக ஞானஸ்.நானம் பெற வேண்டிய காரணம் என்னவெனில், அவன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினான். அது உண்மை . அவன் - தேவன் அறிந்திருந்தார். ஏனெனில் அவர், “நான் அவனைத் தெரிந்து கொண்டேன்” என்று அனனியாவிடம் கூறினார். சவுல் ஒரு அறையில், கறுப்படைந்த முகத்துடனும், இருளடைந்த கண்களுடனும், அவன் மேல் முழுவதும் தூசி படிந்தவனாய் ஊக்கமாய் ஜெபித்துக் கொண்டிருப்பதை அவர் கண்டபோது; அவன் போகும் வழியில் அவனுக்கு பிரத்தியட்சமான அக்கினி ஸ்தம்பத்தினால் அவன் பார்வையிழந்தான், அவர், “அவன் புறஜாதிகளுக்கென்று நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்” என்றார். மூன்று நாட்கள் கழித்து தமஸ்கு நதியில் அனனியா அவனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பான் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் அவனுடைய பாவங்கள் ஏற்கனவே போக்கப்பட்டன என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் உலகத்துக்கு காண்பிக்க அவன் இதை செய்ய வேண்டியதாயிருந்தது. ஆகையால் தான் நாமும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று நான் விசுவாசிக்கிறேன், முன் குறிக்கப்பட்ட வித்து இதை கண்டு கொள்ளும், அவர்கள் மாத்திரமே இதை கண்டு கொள்வார்கள். 49இப்பொழுது, திரித்துவ விசுவாசத்தில் உள்ள சகோதரரே, உங்களை நான் குற்றப்படுத்துவதாக எண்ண வேண்டாம், என் அருமை சகோதரனே, நான் கேள்விகளுக்குத் தான் பதில்ரைத்துக் கொண்டிருக்கிறேன். என் உண்மையான அபிப்பிராயத்தை மாத்திரமே அறிவிக்கிறேன். இந்த ஒலிநாடா என்றாவது ஒரு நாளில் ஆப்பிரிக்காவை அடையக் கூடும். அவருடைய வருகையின் நிழல்களில் நாம் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் எல்லோருமே அதை விசுவாசிக்கிறோம். எனக்கு தென் ஆப்பிரிக்காவில் பல விலையுயர்ந்த நண்பர்கள் உள்ளனர் - டூப்ளெஸில், ஷோமான்ஸ், ஏகர் போன்றவர். அருமையான சகோதரர்கள். ஆனால் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மற்றெல்லாரை விட சிறப்பு ஸ்தானம் வகிப்பவர் ஒருவர் எப்பொழுதும் உண்டு. அவர்கள் எல்லோரையும் நான் இந்த சகோதரனைப் போலவே அருமையாய் நேசிக்கிறேன். ஆனால் சகோ. ஜாக்சனும் அவருடைய மனைவியும் என் வாழ்க்கையில் எப்பொழுதுமே சிறப்பான ஒரு ஸ்தானம் வகித்து வருகின்றனர். ஏனென்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. அங்கு என் நெருங்கிய நண்பர். ஜஸ்டிஸ் டூப்ளெஸிஸ், இன்னும் பல அருமையான ஆப்ரிக்கான்ஸ் சகோதரரும் சகோதரிகளும் உள்ளனர். நல்லது. சகோ. ஜாக்சனும் அவருடைய மனைவியும் எனக்கு ஏன் சிறப்பாக உள்ளனர்? அவர் வேட்டையாடுபவர் என்னும் காரணத்தினாலா? இல்லை! ஏனெனில் எனக்கு அங்கே பல அருமை. யான வேட்டைக்கார நண்பர் உள்ளனர். அவர் ஏன் சிறப்பாக இருக்கிறார்? ஏன்? இவையனைத்துக்கும் பின்னால் உள்ள இரகசியம் மட்டும் உங்களுக்கு தெரிந்திருக்குமானால்! எனக்குத் தெரிந்த எல்லா இரகசியங்களையும் நான் ஜனங்களிடம் கூறுவதில்லை. கர்த்தர் சிட்னி ஜாக்சனிடம் இங்கு வரும்படியாக கூறின அதே நேரத்தில் “தென் ஆப்பிரிக்காவில் சிட்னி ஜாக்சனிடம் தொடர்பு கொள்” என்று என்னிடம் ஏன் கூற வேண்டும்? சென்ற ஞாயிறன்று அவரும் அவருடைய மனைவியும், நிழலின் நேரத்தில், இங்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். பாருங்கள், அந்த நோக்கத்துக்கென்று முன் குறிக்கப்படுதல். பாருங்கள்? 50நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதனால் இரட்சிக்கப்படுகிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். உள்ளில் ஏதோ ஒன்று நடந்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதே தண்ணீர் ஞானஸ்நானம். தண்ணீருக்கு எந்த குணமும் இல்லை; அது ஒரு அடையாளம் மட்டுமே. நீங்கள் எப்பொழுது இரட்சிக்கப்படுவதாக நான் விசுவாசிக்கிறேன் என்றால்... இப்பொழுது, அநேகர் உள்ளனர் (இதை அந்த சகோதரனுக்கு தெளிவாக்க விரும்புகிறேன்)... இரட்சிக்கப்பட்டதாக கூறிக் கொள்ளும் அநேகர் உள்ளனர்; அநேகர் இயேசுவின் நாமத் தினால் ஞானஸ்நானம் பெற்றுள்ளனர்; அநேகர் அந்நிய பாஷையில் பேசி, பரிசுத்த ஆவியின் எல்லாவிதமான அடையாளங்களும் பெற்று. அதே சமயத்தில் இரட்சிக்கப்படாமல் உள்ளனர். அது உண்மை . “அந்நாளில் அநேகர் என்னிடம் வந்து, 'கர்த்தாவே, உமது நாமத்தினாலே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன் அல்லவா?' - பிரசங்கி - 'உமது நாமத்தினாலே நான் பிசாசுகளைத் துரத்தி, அநேக அற்புதங்களைச் செய்தேன் அல்லவா?' என்பார்கள். அவர், நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே. என்னை விட்டு அகன்று போங்கள்' என்பேன்” (மத். 7:22-23). பாருங்கள்? எனவே இக்காரியங்கள் அனைத்தும், இருப்பினும் அது - அது - அது தேவன்; அது அவருடைய கரங்களில் உள்ளது. ஆனால் அதை நான் காணும் போது... நீங்கள், “நல்லது. அப்படியானால் மறுபடியும் ஞானஸ் நானம் பெற்றுக் கொள்ளும்படி நீங்கள் ஏன் ஜனங்களை அழைக்கிறீர்கள்?” எனலாம். ஏனெனில் நான் தொடக்கத்தில் இருந்த மாதிரியைப் பின்பற்றுகிறேன். நாம் அந்த கட்டிடத்தின் வரை படத்தை இழந்து போகக் கூடாது. 51இப்பொழுது நாம் அப்போஸ்தலனாகிய பவுலை எடுத்துக் கொள்வோம். அவன் சில சீஷர்களை, அற்புதமான ஜனங்களைக் கண்டான். அவர்கள் இரட்சிக்கப்பட்டிருந்தனர் என்று நான் நம்புகிறேன், இருப்பினும் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்கவில்லை, அவர்கள் வேறு ஞானஸ்நானம் பெற்றிருந்தனர் (அப். 19)பவுல் எபேசுவின் மேல் கரை வழியாக சென்றபோது, சில சீஷர்களைக் கண்டான். அவன் அவர்களிடம், “நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அவர்கள், “எங்களுக்கு பரிசுத்த ஆவியைக் குறித்து தெரியாது, பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றார்கள். அவன், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “நாங்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் தான் எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்” என்றார்கள். அது மிகவும் நல்ல ஒரு ஞானஸ்நானமே. இந்த கண்டிப்பான அப்போஸ்தலனைக் கவனியுங்கள். அவன், “யோவான் உங்களுக்கு மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தை தான் கொடுத்தான்” என்றான். பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் அல்ல, ஏனெனில் பலியானது அப்பொழுது கொல்லப்படவில்லை, அதற்கு ஏற்ற ஞானஸ்நானம். அதைக் கேட்ட போது அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றார்கள். பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். 52இப்பொழுது, இது என்ன செய்தது? ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டவர்கள் வேதவாக்கிய சத்தியத்தைக் கண்டவுடனே, அவர்கள் சத்தியத்துக்குள் நடந்து விசுவாசிக்கேற்ற பலனைப்பெற்றுக் கொண்டனர் என்பதை இது காண்பிக்கிறது. பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். அவர்கள் அந்நிய பாஷையில் பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, தேவனை மகிமைப்படுத்தினார்கள். இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? அவர்களுக்கு ஏற்கனவே மிகுந்த களிப்பும், சத்தமிடுதலும், தேவனைத் துதித்தலும் இருந்த பிறகு இதைச் செய்தனர். வேதத்திலே, அவர்களுக்கு அங்கே ஒரு பாப்டிஸ்டு பிரசங்கி இருந்தான், அவனும் ஞானஸ்நானம் பெற்றிருந்தான். அவன் வேதவாக்கியங்களைக் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்துக் கொண்டு வந்தான். ஜனங்களுக்கு மிகுந்த களிப்புஉண்டாயிருந்தது. அவர்கள் அதைக் குறித்து மிகவும் களிப்புறறிருந்தனர். இருப்பினும் அவர்களுக்கு பரிசுத்த ஆவி இல்லை. அவர்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிற்று. பவுல் கலா. 1:8ல் “நான் உங்களுக்குப் பிரசங்கித்த இந்த சுவிசேஷத்தை யல்லாமல், வானத்திலிருந்து வருகிற தூதன் வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்ட வனாயிருக்கக் கடவன்” என்கிறான். அது என்னவாயிருந்தாலும் கவலையில்லை. 53எனவே, இக்காரியங்களை அறிந்தவர்களாய்.... இதை நீங்கள் ஒருக்கால் அறியாமலிருக்கலாம், என் சகோதரரே. ஆனால் இவைகளை அறிந்திருக்கும்போது. முதலாம் அஸ்திபாரத்தின் திட்டத்தை நிறைவேற்ற நான் தேவனுக்கு கடமைப்பட்டவனாயிருக்ககிறேன். ஏனெனில் போடப்பட்ட அஸ்திபாரமேயல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. அது தான் அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளின் அஸ்திபாரம். தீர்க்கதரிசிகள் அதை முன்னுரைத்தனர். அப்போஸ்தலர் அதை நிறைவேற்றினர். கட்டிடம் முடிவு பெறும் வரைக்கும் அதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, நான் நம்புவது என்னவெனில், ஒரு மனிதன் தன் முழு இருதயத்தோடும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால், அவன் இரட்சிக்கப்படுகிறான் - அவனுடைய இரு தயத்திலிருந்து, வெளிப்புறமான மனச்சாட்சியிலிருந்து அல்ல. 54பாருங்கள், நீங்கள் இரட்டை தன்மையுள்ளோர் - மூன்றை ஒன்றில் அடக்கியிருக்கிறீர்கள் - ஆத்துமா, ஆவி, சரீரம். நான் நம்புவது என்னவெனில் உங்கள் வெளிப்புறமான புலன்கள் -உங்கள் ஆத்துமா - உங்கள் ஆத்துமா அல்ல, உங்கள் வெளிப்புற மனச்சாட்சி, உங்கள் புலன்கள் ... வேறு விதமாகக் கூறினால், நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஐம்புலன்களினால் இயக்கப்படுகிறீர்கள்: பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல். உங்கள் பூமிக்குரிய வீட்டுடன் தொடர்பு கொள்வதற்கு அவை உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன, பரலோக வீட்டுடன் தொடர்பு கொள்ள அவை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. மானிட சரீரத்தில் உண்மையில் ஆறு புலன்கள் உள்ளன, ஏனெனில் அவன் வேதத்தில் ஆறு என்னும் எண்ணாக இருக்கிறான். அவன் ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப்பட்டான், அவன் ஆறு என்னும் எண்ணாக இருக்கிறான் - ஒரு மனிதன் அவ்வாறு இருக்கிறான். அவனுக்கு பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல், விசுவாசம் என்பவை உள்ளன. அவனுடைய விசுவாசமே அவன் போய் சேர வேண்டிய இடத்தை நிர்ணயிக்கிறது, அவன் எதை நோக்கிச் செல்கிறான் என்பதை. விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் ருசிக்கப்படாதவைகளின், உணரப்படாதவைகளின், முகரப்படாதவைகளின், கேட்கப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. விசுவாசத்தினால், அவன் வார்த்தையை. கிரகித்துக் கொள்ளும் போது, அது அவனை ஒரு பரிமாணத்துக்கு கொண்டு சென்று (பாருங்கள்?) அதை மிகவும் உண்மையுள்ள ஒன்றாக அவனுக்குச் செய்து, அது அவன் கையில் இருக்கும் ஒன்றைப் போல் செய்து விடுகிறது. அது நிறைவேறும் என்று அவன் அறிந்து கொள்கிறான். 55இப்பொழுது. - தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்த இந்த கேள்விக்கும் அதே காரியம் தான். பாருங்கள்? இந்த ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவார்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார். பவுல் இந்த அறிக்கையை விடுத்தான், அதாவது, அவனுக்குப் போதிக்கப்பட்ட உபதேசமேயல்லாமல், வேறெந்த உபதேசத்தையும், எந்த மனிதனும், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனும் கூட போதிக்கக் கூடாது என்று. எனவே நான் பிரசங்கியாக, ஒரு ஊழியக்காரனாக, ஒரு தீர்க்கதரிசியாக, அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தூதனாக இந்த அப்போஸ்தலன் செய்த ஒன்றுக்கு முரணான ஒன்றை போதிப் பேனானால், ஜனங்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று நான் கட்டளையிடாமல் போனால், நான் விசுவாசிப்பதாக உரிமை கோருபவைகளுக்கு வேதத்தின்படி ஒரு கள்ளச் சாட்சியாயிருப்பேன். 56எனவே மாதிரியானது கொடுக்கப்பட்டு விட்டதென்று நான் நம்புகிறேன். வேதத்தில் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். ஒரு முறையாவது யாருமே பிதா, குமாரன் , பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. பாருங்கள்? யாருமே ஒருக்காலும் தெளிக்கப்படவில்லை; அவர்கள் அனைவரும் தண்ணீரில் முழுக்கப்பட்டனர். எனவே நான் நம்புவது என்னவெனில், நீங்கள் உண்மையில்...... உங்கள் கேள்விக்கு, விலையேறப் பெற்ற சகோதரனே, தேவன் உங்கள் இருதயத்தை அறியும் போது... ஆயிரக்கணக்கானோர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருப்பார்கள். நீங்கள் உலர்ந்த பாவியாய் தண்ணீருக்குள் சென்று, ஈரமுள்ள பாவியாய் வெளியே வரக்கூடும். பாருங்கள், பாருங்கள்? ஆனால் உத்தமமான, உண்மையுள்ள விசுவாசியாய், நீங்கள் எல்லா விசுவாசத்திலும், தேவனுக்கு முன்பாக நல்மனச் சாட்சியிலும் நடந்து, அதைக் காணும்போது, நீங்கள் ஞானஸ்நானம் பெறுகின்றீர்கள்! உள்ளில் கிருபையின் கிரியை நடந்து விட்டது என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்துவதே ஞானஸ்நானம் என்று நான் விசுவாசிக்கிறேன். 57தேவன் பேழையைக் கட்டினது போன்று. அவர், “நோவா. அதற்குள் நீயும் உன் வீட்டாரும் உன் குடும்பத்தினரும் போங்கள்” என்று சொன்னார். அவர்கள் அதற்குள்ளே பிரவேசித்தனர். ஒரு பேழை இல்லாமல் போயிருந்தால், தேவன் நோவாவை ஒரு மரக்கட்டையின் மேல் உட்காரச் செய்திருப்பார். அல்லது தண்ணீரின் மேல் நடக்கச் செய்திருப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? ஆனால் அவன் உள்ளே பிரவேசிப்பதற்காக அவன் ஒரு பேழையை உண்டாக்கச் செய்தார். அதை செய்வதற்கு அது ஒன்றே வழி. அது தேவனால் அருளப்பட்ட வழி. தேவன் ஒரு மனிதனை கிருபையினால் இரட்சிக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை வெளிப்படையாக தெரிவிப்பதின் மூலம் அதற்குள் பிரவேசிப்பதே தேவனால் அருளப்பட்ட வழியாயுள்ளது. ஏனெனில் அவர்கள் அனைவரும் அந்த விதமாகத்தான் ஞானஸ்நானம் பெற்றார்கள். நான் மற்றவரை குற்றப்படுத்தவில்லை, ஆனால் அது வெறும்.... அதுதான் அது என்று நான் நினைக்கிறேன். தண்ணீர் ஒரு மனிதனை இரட்சிப்பதில்லை, அவன் இரட்சிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அது காண்பிக்கிறது; அது வெளிப்படையாக தெரியப் படுத்துதல். இப்பொழுது, அது ஒரு வேளை சரியில்லாமல் இருக்கலாம், சகோதரனே. அப்படி இருக்குமானால், நல்லது, அதை வேறொரு சமயம் பார்க்கலாம், அல்லது... சரி. 58ஆதியாகமம் 6:4ல், 'ஜலப்பிரளயத்துக்குப் பிறகு இராட்சதர் எங்கிருந்து வந்தனர்? அது ஒரு நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி. அது ஒரு புத்திசாலித்தனமான கேள்வி. இந்த இராட்சதர் எங்கிருந்து வந்தனர்? நமக்குத் தெரிந்த வரையில், ஆதாம் ஒரு இராட்சதன் அல்ல. அவன் இராட்சதனாயிருந்தால், வேதம் கூறியிருக்கும். அவன் ஒரு சாதாரண மனிதன். இராட்சதர் எங்கிருந்து வந்தனர்? இது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விஷயம். இப்பொழுது தான் இது என் கையில் கொடுக்கப்பட்டது. அது ஒரு பெரிய கறுப்பு தாளில் உள்ளது, இல்லை, வெள்ளைத் தாளில் பெரிய கறுப்பு எழுத்துக்களில். 59இப்பொழுது, இந்த இராட்சதர்... நான் நினைக்கிறேன் அண்மையில் யாரோ ஒருவர் இங்கு .... அது ஜோசியஸாக இருக்கக்கூடும். என் ஊழியக்கார சகோதரர்களே, அது ஜோசியஸ் என்று நான் நிச்சயமாக கூறவில்லை. அது அவராக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது, அல்லது டாக்டர் ஸ்கோஃபீல்ட், அல்லது வேறு யாரோ, தேசத்திலிருந்த இந்த இராட்சதர் பரலோகத்தில் சாத்தான் சொன்ன கதையைக் கேட்டு விழுந்து போன தேவனுடைய ஆவிகள் என்று கூறியுள்ளார். அது மிகாவேல்... பரலோகத்தில் மிகாவேலுக்கு எதிராக யுத்தம் செய்து... கீழே தள்ளப்பட்டனர். இந்த தேவபுத்திரர் மனுஷகுமாரத்திகளைக் கண்டனர். அவர்கள் அந்த சமயத்தில் இராட்சதர்களாக மாம்ச உருவெடுத்து வந்தனர் என்கின்றனர். அவ்விதம் நீங்கள் செய்தால், நீங்கள் சாத்தானை சிருஷ்டிகராக ஆக்கிவிடுவீர்கள். நீங்கள் அவ் விதம் செய்ய முடியாது. 60ஏழாம் நாள் ஆசரிப்பு கூட்டத்தாரைச் சேர்ந்த டாக்டர் ஸ்மித் பலி ஆட்டைக் குறித்துக் கூறினது போல. அவர் சொன்னார் ஒரு ஆடு... அவர்கள் பலியிடும் நாளில் - அதாவது பாவநிவிர்த்தி நாளின்போது - ஒரு ஆடு கொல்லப்பட்டது. மற்ற ஆடு அவிழ்த்துவிடப்பட்டது. கொல்லப்பட்ட ஆடு நமது பாவங்களைச் சுமந்து மரித்த இயேசுவுக்கு அடையாளமாயுள்ளது என்றும், அவிழ்த்து விடப்பட்ட ஆடு பிசாசைக் குறிக்கிறதென்றும், அது நமது பாவங்களை சுமந்து கொண்டு அதனுடன் நித்தியத்துக்கு செல்கிறதென்றும் அவர் கூறினார். இப்பொழுது, பாருங்கள், எந்த ... என் கருத்தின்படி ... இது ஏழாம் நாள் ஆசரிப்பு சகோதரனுக்கு கிடைக்க நேர்ந்தால், நான் அந்த மேதை டாக்டர் ஸ்மித்தைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. ஓ, அவர் சாமர்த்தியமுள்ள, புத்திசாலியான, அருமையான, பண்புள்ள கிறிஸ்தவர், ஒரு விசுவாசி; ஆனால் என்னைப் பொறுத்த வரையில், பாருங்கள், அது அர்த்தமற்றது. அவ்விதம் நீங்கள் செய்வீர்களானால், நீங்கள் பிசர்சுக்கு பலி யிடுகின்றீர்கள். அந்த இரண்டு ஆடுகளுமே கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளன. அவர் நமது பாவங்களுக்காக மரித்து, நமது பாவங்களை வெகு தூரம் சுமந்து சென்று விட்டார்; இரண்டுமே கிறிஸ்துதான். 61எனவே இந்த இராட்சதர் மாம்ச உருவெடுத்து இங்கு தோன்றினவர்கள் அல்ல. அவர்கள் காயீனின் புத்திரர், காயீனின் தகப்பன் சர்ப்பம். அவன் எல்லா வகையிலும் மனிதனைப் போலவே காணப்பட்டான். ஆனால் அவன் மிகப் பெரிய உருவம் கொண்டவன், மனிதனைக் காட்டிலும் பெரிய உருவம் படைத்தவன். அங்கிருந்து தான் அந்த குமாரர் தோன்றினர், அவர்கள் காயீனின் புத்திரர். அவர்கள் கானான் தேசத்திலிருந்த கானானியர். அங்கிருந்து தான் அவர்கள் தோன்றினர். அங்குதான் காயீன் சென்றான். அது பாருங்கள், அது சர்ப்பத்தின் வித்தையும் நிரூபிக்கிறது. அவர்கள் முற்றிலும் வித்தியாசமான ஜாதியார். அவர்கள் சர்ப்பத்தின் வித்துக்கள். பாருங்கள்? சர்ப்பத்தின் வித்தைப் பற்றிய ஒரு கேள்வி இங்குள்ளது. எனவே அதற்கு நாம் வரப்போகிறோம். இதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். பாருங்கள்? இது உங்களுக்கு ஒரு பின்னணியை அளிக்கும். 62பாருங்கள், அவர்கள் கானானியர், இந்த இராட்சதர்; அவர்கள் காயீனின் புத்திரர், காயீன் சர்ப்பத்தின் குமாரன். சர்ப்பம் ஒரு இராட்சத மனிதன், பெரிய பயங்கரமான உருவம் படைத்தவன், அவன் ஊரும் பிராணி, அல்ல, அழகுள்ளவன். அவன் எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் மிகவும் தந்திரமுள்ளவனாயிருந்தான். அவன் ஒருவன் மாத்திரமே.... பாருங்கள், ஒரு மிருகத்தின் மரபு அணுக்கள் (genes)ஒரு ஸ்திரீயில் செலுத்தப்பட்டால், அது கருத்தரிக்காது. அவர்கள் மீண்டும் மீண்டும் முயன்று பார்த்து விட்டனர்; அது ஸ்திரீயின் முட்டையுடன் சேர முடியாது. இப்பொழுது, அவர்களால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வாலில்லாக் குரங்கை (chimpanZcc)எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஒரு மனிதக் குரங்கை (go) - Tilla):அவை மனித உருவுக்கு மிகவும் நெருங்கினவைகளாக உள்ளன். தேவன் தமது மகத்தான படிப்படியான சிருஷ்டிப்பில், 'முதலில் மீனை உண்டாக்கினார்; அதன் பிறகு பறவைகளை உண்டாக்கினார்; அதன் பிறகு மிருகங்களை உண்டாக்கினார். அவை படிப் படியாக உயர்ந்து கொண்டே வந்து, வாலில்லாக் குரங்கு, பிறகு மனிதக் குரங்கு, அதன் பிறகு சர்ப்பத்தின் உருவம், பிறகு சர்ப்பத்திலிருந்து மனிதன். 63மனிதனுக்கு அடுத்தபடியாக இருந்த இந்த மிருகம் எது என்று கண்டறிய மனிதகுலம் - விஞ்ஞானம் - எலும்புகளை தேடிப் பார்க்க முயன்றது. மனிதனும் ஒரு மிருகமே. மனிதனின் மாம்ச பாகம் மிருகத்தின் மாம்சமே. அது நமக்குத் தெரியும். நாம் குட்டிப் போட்டு பாலூட்டும் மிருக இனத்தை (marmmal)சேர்ந்தவர்கள். அது சூடான இரத்தம் கொண்ட மிருகம். அது நமக்குத் தெரியும். ஆனால் வித்தியாசத்தை உண்டு பண்ணுவது எது? மிருகத்துக்கு உள்ளில் ஆத்துமா கிடையாது, ஆனால் மனிதனுக்கோ உண்டு. மிருகத்துக்கு நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் தெரியாது. ' ஒரு பெண் நாய்க்கு அது உடை உடுக்க வேண்டுமென்று தெரியாது. அப்படி தெரிந்திருந்தாலும் அது குட்டை கால் சட்டையை உடுக்காது. அப்படியே ஒரு பெண் பன்றியும். நாமோ விழுந்து போன மானிட வர்க்கம். பாருங்கள்? 64இப்பொழுது, அங்கிருந்து தான் அது வருகிறது. அங்கிருந்து தான் இந்த இராட்சதர் தோன்றினர். அவர்கள் சர்ப்பத்தின் புத்திரர். பாருங்கள், அவன் ஏவாளை அந்த நிலையில் கண்டபோது, சாத்தான் சர்ப்பத்துக்குள் புகுந்து அதை செய்யத் தூண்டினான். பாருங்கள், ஆதாம் அதை அதுவரைக்கும் கண்டுபிடிக்கவில்லை. இந்த சொற்களை எவ்விதம் உபயோகிப்பதென்று எனக்குத் - தெரியவில்லை. இங்குள்ள உங்கள் மத்தியில் அதை கூறினால்பாதகமில்லை, ஆனால் யாராகிலும். ஒருவர் அதை குறை கூற வாய்ப்புண்டு. பாருங்கள், குறை கூற அவர்கள் ஏதாகிலும் ஒன்றைக் கண்டுபிடிக்க எப்பொழுதும் முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் பாருங்கள், ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறியவில்லை. அவன் அந்த இடத்துக்கு வரவில்லை. சாத்தான் அங்கே அவனை மடங்கடித்தான். பாருங்கள்? அவள் கர்ப்பம் தரித்த பிறகு, ஆதாம் அவளை அறிந்தான். அடுத்த கேள்வியில், அல்லது இக்கேள்விகளில் ஒன்றில், அதற்கு நாம் வருவோம். அந்த கேள்வி எங்குள்ளதென்று எனக்குத் தெரியவில்லை; அதை இப்பொழுது இங்கு சற்று முன்பு கண்டேன். ஆனால் அதிலிருந்து தான் இராட்சதர் தோன்றினர். 65அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, உண்மையான, மறுபடியும் பிறந்த விசுவாசிகளின் குமாரர் குமாரத்திகள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்களா? இல்லை, சகோதரனே; இல்லை, நிச்சயமாக இல்லை. பாருங்கள், “தேவனுக்கு பேரப்பிள்ளைகள் கிடையாது (பாருங்கள்?), குமாரரும் குமாரத்திகளும் மாத்திரமே” என்று டேவிட் டூப்ளெஸிஸ் குறிப்பிட்டதை நான் அடிக்கடி எடுத்துக் கூறுவது வழக்கம். பாருங்கள், அவர்களும் தங்கள் தாய் தந்தையர் ஆவியில் பிறந்தது போலவே பிறக்க வேண்டும். பாருங்கள்? அதுதான் ஒருவனை புது மனிதனாக்குகிறது - அவன் மறுபடியும் பிறப்பதனால். அவனுடைய முதல் பிறப்பு மாம்ச மனிதனை பூமிக்கு கொண்டு வருகிறது; அவனுடைய இரண்டாம் பிறப்பு பரலோகத்தின் ஆவிக்குரிய மனி “தனை அவனுக்கு கொண்டு வருகிறது. பாருங்கள்? அது அவனை மாற்றுகிறது, அவனுடைய ஆத்துமாவை, அவனுடைய வெளிப்புற மனச்சாட்சியையோ, வெளிப்புறத் தோற்றத்தையோ, அவனுடைய புலன்களையோ அல்ல. அவன் இன்னும் உணருகிறான், முகர்கிறான், ருசிக்கிறான், கேட்கிறான். ஆனால் அவனுடைய உள்ளான பாகங்கள், அவனுடைய விருப்பங்கள், அவனை இயக்குபவை, தேவனுக்காக மாறி விடுகிறது. பாருங்கள்? 66இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இது நடக்கக் கூடிய ஒரே வழி இதுதான்; ரோம் நூற்றுக்கதிபதியின் காலத்தில்; தேவன் சிறைச் சாலையை பூமியதிர்ச்சியினால் அசைத்த காரணத்தால், அந்த ரோமப் போர்ச்சேவகன் கத்தியை உருவி தன்னைக் கொலை செய்து கொள்ள முயன்ற போது, பவுல் - பவுலும் சீலாவும் - அவனிடம், “உனக்கு கெடுதி ஒன்றும் செய்து கொள்ளாதே, நாங்கள் இங்கே தான் இருக்கிறோம், எழுந்திரு” என்று சொன்னது போல. அவன் என்ன செய்ய வேண்டுமென்று அறிய விரும்பினான். அப்பொழுது பவுல், “நீ எழுந்து ஞானஸ்நானம் பெற்று, கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடு. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றான். பாருங்கள்? வேறு விதமாகக் கூறினால், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப். 16:31). இப்பொழுது, எப்படி? உன் வீட்டார் நீ விசுவாசிக்கும் விதமாகவே விசுவாசிப்பார்களானால். பாருங்கள்? நீங்கள் ஜெபித்து உங்கள் பிள்ளைகளை தேவனிடத்தில் ஒப்புவித்து, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று விசுவாசித்து தேவனைப் பற்றிக் கொண்டிருங்கள். 67என் மகள் ரெபேக்காள் விஷயத்தில் சற்று முன்பு தான் அந்த அனுபவத்தைக் கடந்து வந்தேன். பாருங்கள்? தேவனிடத்தில் ஒப்புவியுங்கள். அவளுக்கு பதினேழு வயதான போது, அவள் வேறொரு பெண்ணுடன் மற்றொரு பெண்ணின் வீட்டுக்குச் சென்று இசை பயின்று வந்தாள். இந்த பெண்... ஒரு நாள் வீட்டுக்கு வந்த போது, இந்த பெண் பியானோவில் 'ராக் அண்டு ரோல்' இசை வாசித்துக்கொண்டிருந்தாள். அது ஒன்று எனக்கு போதுமானதாயிருந்தது. எனவே நான் ரெபேக்காளிடம் இனிமேல் அங்கு போகக் கூடாது என்று சொல்லிவிட்டேன். பாருங்கள்? அப்பொழுது அவள், “இசை பயில அது ஒரு இடம் தான் உள்ளது” என்றாள் (இளம் பருவத்தினர் எப்படி உணர்ச்சிவசப்படுவார்கள் என்று உங்களுக்குத் தெரியும்). நான் சொன்னேன்... ஒவ்வொரு வாலிபப் பிள்ளையும் அதை கடக்க வேண்டியவர்களாயுள்ளனர். ஏறக்குறைய நாம் எல்லோருமே அந்த வயதை கடந்து வந்திருக்கிறோம். நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள், நானும் கடந்து வந்திருக்கிறேன். அந்த வயதில் அவர்களுக்குள்ள சிந்தனைகள் என்னவென்று நாம் சிந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். 68எனவே, இது நடந்து சில நாட்கள் கழித்து அவள் தாய் அவளை ஏதோ ஒன்றுக்காக அதட்டினாள். அது ரெபேக்காளின் குணமே அல்ல. அவள் கதவை படாரென்று மூடி, பொருட்களை சுவற்றிலிருந்து கீழே தள்ளி பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டாள். நான் என் பெல்ட்டைக் கழற்றி அவளுக்குப் பின்னால் முற்றத்துக்கு சென்று, அவளை இழுத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். பாருங்கள்? ஆனால் நான் நினைத்தேன், “ஒரு நிமிடம். பொறு, பதினெட்டு வயது பெண்ணின் சிந்தனைகளை நான் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று பாருங்கள்? மேடா அழத் தொடங்கினாள். நான் அவளிடம், “உன்னால் முடிந்த எல்லாவற்றையும் நீ செய்து விட்டாய். நானும் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டேன். அது நம்முடைய கைகளை மீறிப் போய்விட்டால், நாம் அடுத்த நடவடிக்கை தான் எடுக்க வேண்டும்” என்றேன். அன்றொரு நாள் ஒரு அம்மணி மிகவும் இனிமையாக எழுதியிருந்தார்கள் (அது இங்குள்ள கேள்விகளில் ஒன்று. அவர்கள், “சகோ. பிரான்ஹாமே, நீர் மேசியா அல்லது அல்லவா?” என்றார்கள். நான், “இல்லை, அம்மணி” என்றேன். - அவர்கள், “நீர் எங்கள் மேய்ப்பன் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆனால் நீர் எப்பொழுதுமே அந்த மகத்தான மேய்ப்பரை சுட்டிக் காட்டுகிறீர்” என்றார்கள். நான், “அது உண்மை , அது உண்மை ” என்றேன். நான் மேடாவிடம், “நல்லது, தேனே, பார், நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். அவ்விதம் செய்வது உனக்குக் கடினம்; நான் உன் கணவன். ஆனால் சில ஆலோசனையான வார்த்தைகளுக்காக ஜனங்கள் தேசம் எங்கிலுமிருந்து காரோட்டி வருகின்றனர். இப்பொழுது, நீ... அன்றொரு நாள் நான் அவளிடம் பேசினேன், அவளோ என்னிடமிருந்து நடந்து சென்று விட்டாள்” என்றேன். 69இப்பொழுது, பெக்கி அவ்விதம் என்னிடம் நடந்து கொண்டதேயில்லை. பாருங்கள்? அவளுடைய தாய் அதைக் குறித்து ஏதோ ஒன்றை சொன்னபோது, அவள், “என் வாழ்நாள் முழுவதும் நான் சுவற்றில் வைக்கப்பட்டுள்ள மலரைப் போல் இங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?” என்று சொல்லிவிட்டு கதவை படாரென்று மூடினாள். அவள் படாரென்று கதவை மூடிவிட்டு வெளி நடந்தாள். அது பிசாசு. அவள் இரண்டு வயது வரைக்கும் அழுது கொண்டேயிருப்பது எனக்கு ஞாபகம் வருகிறது. நாங்கள் உண்பதற்கு உணவு விடுதிக்குப் போனால், மேடா உண்ணும்போது, நான் அவளைதெருவில் நடக்க வைத்துக் கொண்டிருப்பேன். நான் உண்ணும் போது, மேடா அவளைத் தெருவில் நடக்க வைத்துக் கொண்டிருப்பாள். அவள் எப்பொழுதும் அழுது கொண்டேயிருப்பாள். ஒரு நாள் கனடாவில் அவள் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள், எனக்கு ஓய்வெடுக்க முடியவேயில்லை; நான் அங்கு நின்று கொண்டு .... ஏதோ ஒன்று என்னிடம், “அது உன் ஊழியத்தை கெடுக்க வந்த பிசாசு” என்றது, நான், “அந்த குழந்தையை என் கையில் கொடு” என்று சொல்லி அவளைக் கையில் வாங்கிக் கொண்டு, “சாத்தானே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன் கரங்களை அவளை விட்டு நீக்கிப் போடு” என்றேன். அவள் உடனே அழுகையை நிறுத்தினாள், அதன் பிறகு அவள் அழுவதேயில்லை. எனக்கிருக்கும் மிகவும் அமைதியான பிள்ளை அவளே. அந்த நேரம் முதற்கொண்டு அது போய் விட்டது. நீங்கள் அதை செய்ய வேண்டும். நீங்கள் அதை செய்வதற்கு முன்பு அதை உங்களுக்குள் பெற்றிருக்க வேண்டும். அதன் பிறகு அவள் - அவள் அதை தொடங்கினாள். நான் மேடாவை ஒரு மணிநேரம் தனியே அழைத்துச் சென்றேன். நான், “மேடா, அதை நிறுத்து” என்றேன். “நானா? அவள் என் மகள்” என்றாள். நான், “அவள் என் மகளும் கூட அல்லவா? சரி, அவள் இக்காலை வேளையில் மரணத்தருவாயில் இருந்தால் அவள் போய் சேர வேண்டிய நித்திய ஸ்தலத்துக்காக அவளை நீ தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்திருப்பாய் அல்லவா? அவள் உலகத்தில் செய்ய வேண்டிய பயணத்துக்காக தாம் ஏன் அவளை தேவனிடம் இப்பொழுது ஒப்புவிக்கக் கூடாது?” என்றேன். அவள், “நல்லது. அவள் என் மகள்” என்றாள். நான், “அவள் என் மகளும் கூட” என்றேன். நான், “இப்பொழுது நீ உன்னுடைய...”என்றேன். அவள், “நான் அவளிடம் ஒன்றும் சொல்லக் கூடாதா என்ன? என்றாள். நான், “நான் அப்படிச் சொல்லவில்லை. அவளைத் திட்டுவதை நாம் நிறுத்தி விடுவோம். அவளுக்கு புத்திமதி மட்டும் கூறுவோம். அவளுக்கு ஒரு நண்பர் தேவை. நீயும் நானும் தான் அவளுக்கு நண்பர்கள். நாம் அவளுடைய பெற்றோர்” என்றேன். 70இந்த பிள்ளைகளுக்கு இன்று தேவை நண்பர்கள். அவர்களுக்கு ஒரு தாயாரும், இரவு முழுவதும் மதுக்கடைகளுக்கு ஓடுவதற்கு பதிலாக வீட்டில் தங்கி அவர்களைப் பேணிக் காக்கும் தந்தையும் இருப்பார்களானால், இளைஞர்களின் குற்றம் (juvenile delinquency)என்று ஒன்று இருக்கவே இருக்காது. பாருங்கள்? அவர்கள் வேதத்தை விட்டு விலகி விட்டனர்; அவர்கள் எல்லோரும் ஆலயத்துக்குச் சென்று 'பங்கோ' விளையாட்டுகள் போன்றவைகளை விளையாடுகின்றனர்... பாருங்கள்? நீங்கள் சாத்தானின் இருப்பிடமாகிய ஹாலிவுட்டைப் போல் உங்களை மெரு கேற்றிக் கொள்ள விரும்புகிறீர்கள். நீங்கள் ஹாலிவுட்டை சபைக்குள் கொண்டு வரக் கூடாது. அதாவது நீங்கள் சபையை ஹாலிவுட் உள்ள நிலைக்குக் கொண்டு வரக்கூடாது, ஹாலிவுட்டை உங்கள் நிலைக்குக் கொண்டு வரவேண்டும். பாருங்கள்? அவர்களுடைய நிலைக்கு நீங்கள் செல்லக் கூடாது, அவர்கள் உங்கள் நிலைக்கு வரட்டும். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாத ஒன்று நம்மிடம் உள்ளது. - 71எனவே நாங்கள் அங்கேயே முழங்கால்படியிட்டு, அவளை தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்தோம், நான், “அவளுக்கு இன்னும் சில நாட்களில் பதினெட்டு வயதாகிறது, அந்த வயதுள்ள ஒரு பெண் ஆண் நண்பர்களை (boy friends)குறித்து சிந்திக்கத் தலைபடுவாள். நாமோ அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறோம். அவள் இப்பொழுது மணம் புரிந்து கொள்ள நான் விரும்பவில்லை. அவளை இங்குள்ள அலுவலகத்தில் சேர்த்து, அவள் வேலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அவள் ஆவியில் நிறைந்திருப்பதைக் காண விரும்புகிறேன் - அவ்விதமாக வாழ” என்றேன். - அவள்... நல்லது, நாங்கள் எல்லோரும் அதையே விரும்பினோம். மேடா, “அவள் அதைச் செய்ய மாட்டாள். அவள் கேட்க மாட்டாள்” என்றாள். நான், “ஒரு நிமிடம் பொறு! நம்மால் முடிந்த வரை அவளை நாம் வளர்த்து வந்தோம். இப்பொழுது அவளைத் தேவனுடைய கரங்களில் வைப்போம் - அவளை அவரிடம் ஒப்புக் கொடுப்போம். அவள் ஏதாவதொன்றைச் செய்தால் நீ அவளிடம், 'பெக்கி, அன்பே, நீ அதைச் செய்வதை உன் அம்மா விரும்பவில்லை, இருந்தாலும் நான் உனக்கு சிநேகிதி; நான் உன் கூடவே இருப்பேன்' என்று சொல். பார்? நீ அவளை நேசிக்கிறாய் என்பதை அவள்அறியட்டும். அவள் வேறு யாரையாகிலும் நேசிக்கத் தலைப்பட்டால், அது ஒருவேளை தவறான ஸ்திரீயாக இருக்கக் கூடும். பார்? அவளை சிநேகிக்கும் ஸ்திரீ நீயாக இருக்கட்டும். தேனே, இது கொடூரமாக, தொனிக்கலாம், ஆனால் ஜனங்கள் எல்லாவிடங்களிலுமிருந்து வந்து தனிப்பட்ட விதத்தில் பேட்டி காண்கின்றனர். நான் உனக்கு மிகவும் பழகினவனாகி விட்டேன். நாம் கணவனும் மனைவியுமாயிருப்பதால், நாம் ஒருவருக்கொருவர் மிகவும் பழகினவர்களாகி விட்டோம். ஆகவே நாம் ஆலோசனை கேட்பதில்லை. இது கர்த்தருடைய நாமத்தில் என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும்” என்றேன். அவள், “சரி” என்றாள். நாங்கள் முழங்கால்படியிட்டு அவளைத் தேவனிடம் ஒப்புக் கொடுத்தோம். அவளை நாங்கள் இனிமேல் ஒன்றும் செய்யப் போவதில்லை என்று கூறினோம். அன்று பிற்பகல் அவள் உள்ளே வந்தாள். அவள், “நல்லது, அங்கே நான் போகக் கூடாது என்று நீங்கள் இப்பொழுதும் சொல்லுகிறீர்களா?” என்று கேட்டாள். அதற்கு மேடா, “இல்லை, நான் அதைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. நீ அதை செய்வது உன் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அந்த பெண்ணுடன் நீ ”பூகி ஓகி“ இசை வாசித்துக் கொண்டிருந்ததை உன் அப்பா கேட்ட போது, அது அவரை கொன்று விட்டது என்று உனக்குத் தெரியும். அதை நீ செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை, எங்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை. ஆனால், பெக்கி, அதை நாங்கள் கர்த்தரிடம் சமர்ப்பித்து விட்டோம். நாங்கள் உன்னை நேசிக்கிறோம் என்பதை நீ அறிய வேண்டும். நீ என்ன செய்த போதிலும், நாங்கள் உன்னை அப்பொழுதும் நேசிப்போம்” என்றாள். பொக்கி, “நான் எப்படியும் போகத்தான் போகிறேன்” என்றாள். மேடா, “சரி, அன்பே” என்றாள். பெக்கி போகப் புறப்பட்டாள். மேடா, “சரி, நீ திரும்பி வரும்போது, இரவு உணவை ஆயத்தமாக வைத்திருக்கிறேன்” என்றாள். அவள் போகவேயில்லை. இல்லை, அன்று முதல் அவள் போகவேயில்லை. பாருங்கள்? அதற்கு பிறகு சற்று கழிந்து அவள் ஜார்ஜை சந்தித்தாள்; ஜார்ஜ் ஒரு கிறிஸ்தவன். அத்துடன் அது முடிவு பெற்றது. அன்றொரு நாள் பெக்கி அதைக் குறித்து திருமதி உட்டிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள், “ஓ, எனக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. அப்பாவும் அம்மாவும் என்னைக் கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்தார்கள். மிகுந்த கோபம் வந்து விட்டது” என்றாள். அது எங்களுக்கு மிகுந்த கோபமாக காணப்பட்டது. அதைக் காட்டிலும் நாங்கள் அதிக கோபமடைய விரும்பவில்லை. பாருங்கள்? அதை அப்படியே விட்டு விட்டோம். சரி. 72சகோ. பிரான்ஹாமே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... (ஓ, ஓ! இந்த கேள்வியை நான் படித்த ஞாபகம் உள்ளது. நான்... அதற்கு பிறகு பதிலளிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், ஆனால் அதை இப்பொழுதே படித்து விடுவது நல்லது. அது ஏதோ ஒரு ஸ்திரீயின் கையெழுத்து. அவள் கென்டக்கியிலிருந்து வந்தவளாக இருக்க வேண்டும். ஏனெனில் அவளிடம் இங்கு காஸ்மாஸ் போர்ட்லாண்டு சிமெண்டு டிக்கெட் உள்ளது). சகோ. பிரான்ஹாமே, சபையிலுள்ள நமது சகோதரிகள் இப்படிப்பட்ட குட்டை உடைகளை உடுத்துவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது நமது சாட்சியைக் குலைப்பதுடன் நமது சபையிலுள்ள இளைஞர்களுக்கு ஒரு தவறான உதாரணமாயிருக்குமல்லவா? வளர்ந்த ஒரு ஸ்திரீ அவ்வளவு குட்டை உடை உடுத்தினால், அவள் நடக்கும்போது அவளுடைய முழங்கால் காணப்படுகிறது. நீங்கள் யாராயிருந்தாலும், சகோதரியானாலும், சகோதரனானாலும், நீங்கள் யாராயிருந்தாலும், நீங்கள் கூறுவதை நான் நூறு சதவிகிதம் ஆமோதிக்கிறேன். அது அவமானம்! அதைக் குறித்து நான் என்ன செய்ய முடியுமென்று சொல்லுங்கள்! எனக்குத் தெரிந்தவரையில் அதைக் குறித்து நான் மிகவும் கடினமாக போதிக்கிறேன். எனவே அது அவர்களுக்கு நியாயத்தீர்ப்பா யிருக்கும், ஏனெனில் வார்த்தை புறப்பட்டு சென்றுவிட்டது. ஆம், நான் நிச்சயமாக சருமத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த உடைகளுக்கு எதிராயிருக்கிறேன்... நான் என் மகள்கள் பெக்கி, சாராளிடம் கூட கூச்சலிடுவதுண்டு. அவர்கள் எவ்வளவு சிறியவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர்களும் கூட அவர்களுடைய உடைகளை ... மேடா ஒவ்வொரு நாளும் அதைக் குறித்து பொக்கியை தனியாக அழைத்துச் செல்கிறாள். பாருங்கள்? மேலே ஏறியிருக்கும் உடுப்புகள்... சிறு பிள்ளைகளிடம் அதை நீங்கள்எதிர்பார்க்க முடியாது, அவர்களை நீங்கள் திருத்த வேண்டும்; ஆனால் ஒரு ஸ்திரீ அவ்விதம் செய்யும்போது, அங்கு ஏதோ தவறுள்ளது. பாருங்கள்? 73உங்கள் மனது இப்பொழுது நோக்க வேண்டாம். நான் கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்கள் இருதயத்திலிருந்து என்னைக் கேட்கிறீர்கள்; நான் என் இருதயத்திலிருந்து உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களுக்கு இதற்கு ஒரு தீர்வுகாண முடியுமென்றால், தயவு கூர்ந்து என்னிடம் சொல்லுங்கள், நான் நிச்சயம் செய்வேன், அதைக் குறித்து ஏதாகிலும் என்னால் செய்ய முடியுமானால். அன்றொரு நாள் ஒருவர் என்னிடம், “நல்லது, சகோ. பிரான்ஹாமே, ஆதாமும் ஏவாளும் என்ன புசித்தார்கள் என்று உங்களுக்குச் சொலலுகிறேன். அவர்கள் ஆப்பிள் பழத்தைத்தான் புசித்தார்கள்” என்றார். அவர்கள் இப்பொழுது அதை மாற்றி விட்டதாகக்காண்கிறேன். அவர்கள் என்ன புசித்தார்கள் என்று சொல்லுகிறார்கள்? அதற்கு ஏதோ ஒரு பெயருண்டு (சபையோரில் ஒருவர் 'ஏப்ரிகாட் என்கிறார் - ஆசி). ஏப்ரிகாட், ஆம். அவர்கள் ஏப்ரிகாட் பழத்தைப் புசித்ததாக கூறுகின்றனர். ஏப்ரிகாட் பழம் அவர்கள் நிர்வாணமாயிருப்பதை உணர வைக்குமானால், அவர்களுக்கு ஏப்ரிகாட் பழத்தைக் கொடுக்க நேரம் வந்து விட்டது. பாருங்கள்? 74சகோ. பிரான்ஹாமே, இந்நாளுக்கான தேவனுடைய செய்தியை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன், எங்கள் மகனும் கூட. நாங்கள் இருவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். என் கணவர் செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை, அவர் இந்த செய்தியை எதிர்த்துப் போராடுகிறார். எங்கள் மகனை அவர் வசீகரித்து அவனை மெதோடிஸ்டு சபைக்குக் கொண்டு செல்கிறார். நமது கூடாரத்தில் ஆராதனை இல்லாத போது அவருடன் நான் அந்த சபைக்குச் செல்ல வேண்டும் என்கிறார். அவருடன் நான் செல்வது சரியா, அல்லது அந்த ஸ்தாபனத் திலிருந்து விலகியிருத்தல் நலமாயிருக்குமா? நல்லது. இப்பொழுது, அருமை சகோதரியே... அவள் கையொப்பமிடவில்லை, ஒருக்கால் உன் கேள்விக்கான பதிலை நீகேட்டுக் கொண்டிருக்கலாம்; இல்லையென்றால் நீ அதை ஒலி நாடாவில் கேட்பாய். உன் கணவருடன் போ, ஆனால் அவர்கள் செய்வதில் நீ பங்கு கொள்ளாதே. பார், உன் கணவரை நீ நேசிக்க வேண்டியவளாயிருக்கிறாய், அன்பு தான் அதைச் செய்கிறது. நீ உண்மையில் உப்புத்தன்மை கொண்டவளாயிரு; அவருக்குள் ஏதாகிலும் இருக்குமானால், அவர் தாகமடைவார். அவர்களுடைய ஸ்தாபனத்தைச் சேராதே. “அந்த ஸ்தாபனத்திலிருந்து விலகியிருக்கலாமா” என்று நீ கேட்டிருக்கிறாய், அதை சேராதே; அங்கு போ. உனக்கு முழு ரொட்டி கிடைக்க வில்லையென்றால், பாதி ரொட்டியைப் பெற்றுக் கொள்; பாதி ரொட்டி கிடைக்கவில்லையென்றால், ஒரு 'ஸ்லைஸ்' ரொட்டி பெற்றுக் கொள். பார், பார்? அவ்விதம் செய்வதன் மூலமாகவே உன் கணவரை நீ வெல்ல முடியும். கர்வமாக இராதே. அப்பொழுது உன்னைப் போலவே அவருக்கும் கர்வம் உள்ளதென்று அவர் காண்பிப்பார். பார்? ஆனால் அவருக்கு இல்லாதது ஒன்று உனக்கு உள்ளதாக! நீ காண்பிக்க முடியுமானால், உன்னைப் போல் இருப்பதற்காக அது அவரைத் தாகமடையச் செய்யும். புருஷன் பரிசுத்தமாக்கப்பட்ட தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான் (1 கொரி. 7:14). இது ஒரு புத்திமதி மட்டுமே. இதன் பேரில் என்னால் நீண்ட நேரம் பேச முடியும், ஆனால் எத்தனை கேள்விகளுக்கு நம்மால் பதிலளிக்க முடியுமோ, அத்தனைக்கும் பதிலளிக்க விரும்புகிறோம். எனக்கு இன்னும் இருபத்திரண்டு நிமிடங்கள் மட்டுமே உள்ளதாகக் காண்கிறேன். சரி. 75சகோ. பிரான்ஹாமே, நீர் போதிக்கும் செய்தியை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். அது என் ஆத்துமாவை சிலிர்க்க வைக்கிறது; எனினும், என் மனைவியும் மகனும் வார்த்தையில் களிகூருவதில்லை. அவர்களுடைய உலகப்பிரகாரமான பழக்கங்களிலிருந்து தங்களைப் பிரித்துக் கொள்ள அவர்களுக்கு மனமில்லை. நமது குடும்பங்களை நாம் உரிமை கோரி தேவனிடம் கேட்க வேண்டுமென்று நீர் கூறினீர். அவர்கள் வார்த்தைக்காக அல்லது வார்த்தையில் வாழாமலிருப்பதைக் காணும்போது, அதை செய்வது எனக்கு கடினமாயுள்ளது. நான் கடைபிடிக்க வேண்டிய வழி எது, ஐயா? அவர்களை நான் உரிமை கோரி விசுவாசிப்பதா, கேள்விகளும் பதில்களும் அல்லது“பிதாவே, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று ஜெபித்து, இப்பொழுது நான் இருக்கும் இந்த நிலையில் திருப்தியடைவதா? உம்முடைய புத்திமதியை நான் பாராட்டுவேன், சகோ. பிரான்ஹாமே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரனே அல்லது சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும். அவர்களை நான் கர்த்தரிடத்தில் ஒப்புவித்து விடுவேன். நான்..... பாருங்கள், ஏனெனில் “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” பாருங்கள்? ஜனங்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் 76அந்த தங்கும் விடுதி (motel) ஆட்களை நான் சென்று சந்தித்த போது, அது என் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கும் படி செய்தது. நான் திரு. பெக்கரிடம் சென்றிருந்தேன். அவர், “பில்லி, உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் உங்கள் சபையோர் அனைவருக்கும் நான் உணவளிக்கிறேன்” என்றார் - 'ப்ளூ போர்' (Blue Boar)என்னும் அந்த உணவு விடுதி ஒவ்வொரு ஞாயிறன்றும் ஏறக்குறைய முன்னூறு பேர்களுக்கு உணவு அளிக்கிறது. பாருங்கள்? நான் இங்கு சென்றிருந்தேன், இங்குள்ள அந்த ஆள், 'ரான்ச் ஹவுஸ்ஸில் உள்ள நற்பண்பு கொண்ட அவர், மிகவும் அருமையானவர். நான் அவரைச் சந்தித்தேன்; நான், “நல்லது. அது உண்மையில் மிகவும் நல்லது. நீங்கள் அந்த ஆபாசமான காரியங்களையும், மற்ற காரியங்களையும் விலக்கியிருப்பதைக் குறித்து உங்களைப் பாராட்டுகிறேன்” என்றேன். அவர், “ஆம், ஐயா, சகோ. பிரான்ஹாமே” என்றார். நான், “அவருக்கு என்னை எப்படித் தெரியும்?” என்று நினைத்தேன். பாருங்கள்? நான் அவரிடம், “என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டேன். அவர், “உங்களை எனக்குத் தெரியும். உங்கள் சபையோர் அனைவருக்கும் நான் ஒவ்வொரு ஞாயிறன்றும் உணவு தருகிறேன். உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்: அவர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் அருமையானவர்கள்” என்றார். பாருங்கள், அது எனக்கு நல்லுணர்வை அளித்தது. நீங்கள் என் பிள்ளைகள். பாருங்கள்? என் பிள்ளைகள் மிகவும்நல்லவர்களாக உள்ளனர் என்றும், அவர்கள் மிகவும் நல்ல விதமாக நடந்து கொள்கின்றனர் என்றும் நான் கேட்கும் போது, அது அப்பாவுக்கு மிகுந்த நல்லுணர்வைத் தருகிறது. பாருங்கள்? எனவே நீங்கள் புரிந்து கொள்வீர்கள். 77இப்பொழுது, இப்பொழுது, அம்மா... என் சகோதரியே, உன் கணவர் உன்னை மெதோடிஸ்டு சபைக்கு அவருடன் கூட செல்ல அழைப்பாரானால், நீ போ. உனக்கு ஒருக்கால் முழு ரொட்டியும் கிடைக்காது, ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதாக கூறினால், அதை விசுவாசி, ஏனெனில் நாமும் கூட அதை விசுவாசிக்கிறோம். அவர் கள் வழி விலகி வேறு காரியங்களுக்குச் செல்வார்களானால், அவர்கள் போகட்டும். ஆனால் நீ அவ்வளவு ரொட்டியை மாத்திரம் சாப்பிடு. பார்? அதன் மூலம் உன் வாழ்வின் இனிமையையும் மற்றவர்கள் பேரில் நீ கொண்டுள்ள அக்கறையையும் காண்பிக்கிறாய். இந்த நற்பண்புகள் உனக்கு இல்லாமல் போனால், அருமை சகோதரியே, அது உனக்குக் கிடைக்கும் வரைக்கும் ஜெபித்துக் கொண்டிரு. நீ ஒன்றையும் செயற்கையாக பாவனை செய்து கொள்ள வேண்டாம். ஏனெனில் நீ அவ்விதம் செய்யும் போது, அது உண்மையான ஒன்றாக இருக்காது. உன் கணவரால் அதை கண்டு பிடித்து விட முடியும். நீ உண்மையில் ஜெபித்து உன் வாழ்க்கை இரட்சகரின் உப்பினால் நிறைந்திருக்கும் நிலையை அடையும் போது, அது தொடர்பை உண்டாக்கும். “நான் உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன்” (யோவான் 12:32), நான் போவேன்; ஆனால் மிகவும் ஜாக்கிரதையாயிரு. அவர்களுடைய சபையை சேர்ந்து விடாதே! தயவு செய்து அதை மட்டும் செய்து விடாதே; அவர்களுடைய சபையை சேர்ந்து விடாதே, ஆனால் அங்கு போ! 78சகோ. பிரான்ஹாமே, இந்த கேள்வி இங்குள்ள எங்கள் பலருக்கு ஒருவிதம் குழப்பமாயுள்ளது. சில ஒலி நாடாக்களில், மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு யூதர்கள் மட்டும் இரட்சிக்கப்படுவதாக நீர் கூறியிருக்கிறீர் (அது கோடிடப்பட்டிருக்கிறது). எடுத்துக் கொள்ளப்படுதலில் போகாதிருக்கிற புறஜாதிகளைக் குறித்து தயவுகூர்ந்து முழுவதுமாக விளக்கவும். எடுத்துக் கொள்ளப்படுதலில் விடப்பட்ட புறஜாதிகள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சென்றுதங்கள் ஜீவனை இயேசுவின் காட்சியினிமித்தம் கொடுத்தார்கள் என்று நீர் கூறினீர் என்று எண்ணினேன். அவர் புறஜாதிகளிலிருந்து யூதரிடம் திரும்பும்போது புறஜாதிகள் இரட்சிக்கப்பட இனி வேறு தருணமே இராதா, இரட்சிக்கப்பட்டு ஆனால் கடைசி கால சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சென்று முடிவில் இரட்சிக்கப்படுவார்கள். இது சரியா? தயவு செய்து விளக்குங்கள். ஏனெனில் மிகவும் சிறிய எண்ணிக்கையே எடுத்துக்கொள்ளப் படுதலில் செல்வார்கள். என்று கூறியிருக்கிறீர். கர்த்தரை விசுவாசித்து, ஆனால் நீர் பிரசங்கிக்கும் விதமாக இந்த கடைசி காலச் செய்தியை விசுவாசிக்காத ஜனங்களைக் குறித்தென்ன? அவர்கள் இரட்சிக்கப்படுவார்களா? அந்த சகோதரி தன் பெயரைக் கையொப்பமிட்டிருக்கிறாள். இப்பொழுது. இது மிகவும் நல்ல கேள்வி. இப்பொழுது முதலாவதாக, உபத்திரவ காலத்தின் போது புறஜாதியாரின் நாட்கள் முடிவடைந்திருக்கும் என்று நான் கூறியதன் பேரில் தான் குழப்பம் நேர்ந்துள்ளது. இப்பொழுது, நான் காணமுடியாதது என்னவெனில், வேதத்திலுள்ள புறஜாதியினர்... புறஜாதி மணவாட்டி , மணவாட்டி, புறஜாதி சபை அல்ல, புறஜாதி சபை உபத்திரவ காலத்தின் வழியாக செல்லும் (பாருங்கள்?), ஆனால் அவர்களுடைய ... பாருங்கள், மணவாட்டி தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டம்; அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வதைத் தவிர, வேறு எதன் வழியாகவும் செல்வதில்லை. அவர்கள் மறுரூபமடைந்து, இவ்வுலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். பாருங்கள்? இப்பொழுது. இதை நான் இங்குள்ள மற்றொரு கேள்வியில் விளக்கி, லூத்தரிலிருந்து படிப்படியாகக் கொண்டு வருகிறேன், அப்பொழுது அதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அது சரீரம் முதிர்வடைவது. பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, விடப்பட்ட யூதர்களுக்கு தான், எலியா, மோசே ஆகிய இரண்டு தீர்க்கதரிசிகளும் பிரசங்கிக்கின்றனர். 79இப்பொழுது, ஊழியக்கார சகோதரரே, இது என் சொந்த கருத்து, பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினதாக நான் உணருகின்ற என் சொந்த முறை. இப்பொழுது, அடுத்தபடியாக நடக்கவிருப்பது. தெரிந்து கொள்ளப்பட்ட புறஜாதி மணவாட்டி, காலங்கள் தோறும் தெரிந்து கொள்ளப்பட்ட புறஜாதி மணவாட்டியுடன் கூட ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுதலே - ஆகாயத்தில் கிறிஸ்துவின் சமுகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுதல். மரித்தோர் உயிர்த்தெழுகின்றனர்; உயிரோடிருப்பவர் மறுரூபமடைகின்றனர்; அவர்கள் ஒன்று சேர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டு கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்கின்றனர். பிறகு, ஏனெனில்... மகிமையில் கலியாண விருந்துக்குப் பிறகு, இயேசு - அவர்கள் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, இயேசு பூமிக்குத் திரும்பி வந்து தமது ஜனங்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார், யோசேப்பு தன் சகோதரருக்கு தன்னை வெளிப்படுத்தினது இதற்கு முன்னடையாளமாயுள்ளது. அவனுடைய மனைவி - யோசேப்பைத் தவிர வேறு எந்த புறஜாதியும் அங்கிருக்கவில்லை, யோசேப்பு தன்னை தன் சகோதரருக்கு வெளிப்படுத்தின போது. இதை எல்லோரும் புரிந்து கொண்டீர்களா? 80அவன் அனுப்பி விட்டான். அவனுடைய மனைவியும் கூட அப்பொழுது அரண்மனையில் இருந்தாள், அந்த நேரத்தில் மணவாட்டி மகிமையில் அரண்மனையில் இருப்பாள் என்பதற்கு இது எடுத்துக்காட்டாய் உள்ளது. கலியாண வைபவமாகிய 31/, ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு தம்மை யூதர்களுக்குத் தெரியப்படுத்துகிறார் - யாக்கோபின் இக்கட்டுக்காலம், அந்த 3', ஆண்டுகள், தானியேலின் எழுபதாம் வாரத்தின் முடிவு. மேசியா அந்த வாரத்தின் நடுவில் சங்கரிக்கப்பட வேண்டும்... அவர் 3'/, ஆண்டுகள் தீர்க்கதரிசனம் உரைத்து அதன் பிறகு சங்கரிக்கப்பட்டார். பிறகு மோசேக்கும் எலியாவுக்கும் 3'/, ஆண்டுகள் விடப்பட்டுள்ளன. தானியேல் கூறின வண்ணமாக, ஜனங்களின் மேல் குறிக்கப்பட்ட அந்த எழுபது நாட்கள் முடிவடைந்த பிறகு, இயேசு அவர்களுக்கு தம்மை வெளிப்படுத்த வேண்டும். அவர் யூதர்களுக்கு வரவேண்டிய அதிபதி. பாருங்கள்? 81பிறகு, அந்த நேரத்தில்... பாருங்கள், புறஜாதி மணவாட்டி பரலோகத்தில் இருக்கிறாள், நித்திரையடைந்துள்ள கன்னிகை, புறஜாதி கன்னிகை: அந்த நேரத்தில் இரட்சிக்கப் படுவதில்லை; அவள் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டு விட்டாள், ஆனால் மணவாட்டியில் இராதபடிக்கு அவள் புறக்கணிக்கப்பட்டாள்.அவள் சுத்திகரிப்புக்காக உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்கிறாள், ஏனெனில் அவள் தனக்கு சுத்திகரிப்பு அளிக்கும் வார்த்தையாகிய கிறிஸ்துவை புறக்கணித்து விட்டாள். அவளுடைய செய்கைகளுக்காக அவள் பாடுபட வேண்டும், ஆனால் வார்த்தையாகி விட்ட மணவாட்டியோ; கிறிஸ்து முழுவதுமாக அவளுக்காக பாவநிவிர்த்தி செய்து விட்டார், ஏனெனில் அவரே வார்த்தையாயிருக்கிறார். சரீரம் கிழிக்கப்பட்டது; அந்த சரீரம் கிழிக்கப்பட்ட போது, மணவாட்டி அந்த சரீரத்தில் இருந்தாள், ஏனெனில் அது எல்லாமே வார்த்தையாயுள்ளது! ஆமென்! உங்களுக்கு விளங்குகிறதா? 82152: இயேசு அந்த சரீரத்தில் பாடுபட்டபோது, அவர் பாடு பட்டார். ஏனெனில் மனுஷனும் மனுஷியும் ஒரே நபர். ஏவாள் ஆதாமிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாள், சபையும்.... என்ன நடந்தது? தேவன் ஆதாமின் விலாவைத் திறந்து, அவனுக்கு உதவியாயிருக்க மணவாட்டியை வெளியே எடுத்தார். அவ்வாறே தேவன் கல்வாரியில் இயேசுவின் விலாவைத் திறந்து மணவாட்டியை வெளியே எடுத்தார். பாருங்கள்? இயேசு கல்வாரியில் மரித்த போது. . சரீரம் மரிக்கும் வரைக்கும், மணவாட்டி அந்த சரீரத்திலிருந்து வெளியே எடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவர் ஏற்கனவே மரித்து விட்டார், அவருடைய கால்களை அவர்கள் முறிக்கவிருந்தனர். தீர்க்கதரிசி “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று சொன்னான் (சங். 34:20). எனவே அவருடைய கால்களை முறிக்க அவர்கள் ஒரு சுத்தியலைக் கையில் லெடுத்தனர். அப்பொழுது ஒரு மனிதன் ஒரு ஈட்டியுடன் சென்று அவருடைய இருதயத்தில் குத்தினான்; அப்பொழுது தண்ணீரும் இரத்தமும் வெளி வந்தது. அவர் ஏற்கனவே மரித்திருந்தார். அவருடைய சரீர மரணத்தின் மூலமாய் அவள் ஏற்கனவே மீட்கப் பட்டு விட்டாள், எனவே மணவாட்டிக்கு பாடனுபவிக்கும் உபத்திரவ காலம் ஒருக்காலும் இருப்பதில்லை. பாருங்கள்? அவள் உள்ளே சென்று விடுகிறாள். ஆனால் அவர் பேரில் விசுவாசம் கொண்டு ஸ்தாபன கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ள புறஜாதி சபை ... 83இந்த ஏழை நபர், “என் கணவனும் மகனும் இன்னும் உலகத்தின் காரியங்களில் அன்பு கொண்டுள்ளனர்” என்று கூறினது போல... பாருங்கள், அவர்கள் அந்த மீட்பை ஏற்றுக் கொள்ளவில்லை.நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளும் போது, அது உங்களைத் தானாகவே சுத்திகரித்து விடுகிறது. “தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான்” (1 யோவான் 3:9). அவனுக்கு உலகத்தின் காரியங்களின் பேரில் வாஞ்சையே இல்லை. “ஒருவன் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால், அவனிடத்தில் தேவனின் அன்பு இல்லை” என்று இயேசு கூறியுள்ளார் (1 யோவான் 2:15). அப்படிப்பட்டவனுக்கு மணவாளனின் மேல் அன்பில்லை. பாருங்கள்? எனவே அவள் தண்டனையை அனுபவிக்க வேண்டியதாயுள்ளது.... அவள் அந்த நேரத்தில் இரட்சிக்கப்படுவதில்லை; அவள் நித்திய மரணத்திலிருந்து இரட்சிக்கப்படுகிறாள்; ஆனால் சுத்திகரிப்புக்கென்று அவள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். நான் கூறுவது விளங்குகிறதா? இப்பொழுது. இப்பொழுது, அந்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு விட்டதென்று எண்ணுகிறேன். வேறெதாவது இங்குள்ளதா என்று பார்ப்போம். 84“தயவுகூர்ந்து விளக்குங்கள், ஏனெனில் ஒரு சிறு எண்ணிக்கையே எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லும் என்று நீர் கூறியிருக்கிறீர்”. அதாவது இவர்கள் பூமியில் உயிரோடிருந்து மறுரூபமடையப் போகின்றவர்கள். “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்” என்று இயேசு கூறியுள்ளார் (மத். 7:14). “இப்பொழுது கர்த்தரை விசுவாசித்து, நீர் பிரசங்கிக்கும் விதமாக விசுவாசியாதவர்களைக் குறித்தென்ன?” அவர்கள் இதை விசுவாசிக்க வேண்டியதில்லை. நான் பிரசங்கிக்கும் விதமாக அவர்கள் விசுவாசிக்க வேண்டியதில்லை. பாருங்கள்? அவர்கள் அதை விசுவாசிக்க வேண்டியதில்லை... கடைசிக் காலச் செய்தியை விசுவாசியாதவர்கள். அவர்கள் இரட்சிக்கப்படுவார்களா?“ ஆம், அவர்கள் கர்த்தரை விசுவாசிப்பார்களானால். பாருங்கள்? அவர்கள் இணங்காமல், ”அவர் வார்த்தை என்று நான் விசுவாசிக்க மாட்டேன். இது சரியென்று நான் விசுவாசிக்க மாட்டேன். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் பேரில் எனக்கு நம்பிக்கை இல்லை“ என்பார்களானால், அவர்கள் எதை நோக்கிச்செல்கின்றனர் என்பதை அது காண்பிக்கிறது - உபத்திரவ காலத்தை நோக்கி. ஆனால் வார்த்தையை அதன் முழுமையில் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள், அதை நான் பிரசங்கிப்பதனால் அல்ல, வேதம் அவ்விதம் உரைக்கிறது. அதை ஏற்றுக் கொள்கிறவர்கள் விடுதலையடைகின்றனர், ஏனெனில் வார்த்தை ஏற்கனவே நியாயந் தீர்க்கப்பட்டு விட்டது. 85ஏற்கனவே ஒன்றுக்கு தண்டனைக்கான கிரயம் செலுத்தப்பட்டிருந்தால், நீதியுள்ள நியாயாதிபதி அதற்காக ஒரு மனிதனை இரு முறை நியாயந்தீர்க்க முடியுமா? நான் அடகு கடையில் இருந்து, நீ அங்கு வந்து, “இவனை நான் மீட்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு, என் மீட்புக்கான கிரயத்தை நீ செலுத்தி விடுவாயானால் (அதுவே நான் அடகு கடையிலிருந்ததனால் உண்டான தண்டனை), அடகு கடையின் சொந்தக்காரன் அதை எப்படி மறுபடியும் கேட்க முடியும்? நான் மறுபடியும் என்னை விற்றுப் போட்டாலொழிய. பார்த்தீர்களா? வார்த்தையின் பரிபூரணத்தை நான் புறக்கணிக்கும் போது, நான் மீண்டும் அடகு கடைக்குச் சென்று விடுகிறேன். பாருங்கள், பாருங்கள். அதன் பிறகு, என்னால் கூடுமானால், போராடிக் கொண்டு வெளியே வருவேன். ஆனால் அவர் என்னை மீட்டுக் கொண்டார். சரி, நான் நம்புகிறேன், அது... இன்னும் எத்தனையோ கேள்விகள் இங்குள்ளன, அவைகளைப் பார்க்க விரும்புகிறேன் (ஒலிநாடாவின் முதல் பக்கம் முடிகிறது. இரண்டாம் பக்கத்தில் கேள்வியின் ஒரு பாகம் இல்லை - ஆசி). 86... இந்த மூன்றாம் இழுப்பு வார்த்தையை உரைத்தல். நீர் வார்த்தையை உரைப்பீரென்றால், ஒருவன் முழுவதுமாக சரீர மீட்படைந்து, உயிர்த்தெழுதலில் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வதற்கு முற்றிலும் ஆயத்தமாயிருக்க சாத்தியம் உண்டு என்பது போல் தோன்றுகிறது, மனுஷ குமாரன். இது அப்படித்தானா, இல்லையா? நீங்கள் சரியான விதத்தில் நெருக்கப்பட்டால் இதை செய்வீர்கள். “இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்பீர்கள் அல்லவா? (லூக். 21:36). இப்பொழுது, என் - என் அருமை நண்பனே. பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் - நீங்கள் - நீங்கள் ஒரு நல்ல வாக்கியத்தை சொல்லியிருக்கிறீர்கள். ஆம், ஐயா! ஆம், ஐயா! இப்பொழுது, அது அப்படி இருக்கும். நீங்கள் “சகோ. பிரான் ஹாம்...' என்று கூறியிருக்கிறீர்கள். வேறு விதமாகக் கூறினால், இது தான் நான்... நான் நினைக்கவில்லை அது... என்னால் கூடுமென்று... நான் நம்புவது, நான் . ... நீர் கூறினதை மெருகேற்றவில்லை, ஆனால் இதை ஜனங்களுக்கு சிறிது அதிகமாக தெளிவுபடுத்த முடியுமென்று நம்புகிறேன். பாருங்கள்? நீங்கள் இவ்வாறு விசுவாசிக்கும் காரணம், அவர் என்னிடம் கூறி உரைக்கப்பட்ட வார்த்தைகளினால் நிகழ்ந்தவை களைக் கண்டதனாலே. நீங்கள் எல்லாரும், அணில்கள் சிருஷ்டிக்கப்பட்டதையும், மற்ற காரியங்கள் செய்யப்பட்டதையும் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் அது தேவன் தமது இராஜ்யாதிபத்தியத்தினால் அளித்த ஒன்று என்பதை கவனித்தீர்களா? நான் அவரிடம், “கர்த்தாவே, இதை நான் செய்யட்டும், வார்த்தையை இவ்விதம் உரைத்து இவைகளைச் செய்யட்டும்” என்று ஒருபோதும் கேட்கவில்லை. அவரை நான் கேட்கவேயில்லை. அவர் தமது தெய்வீக சித்தத்தின்படி என்னிடம் வந்து, “நீ போய் இதை செய்” என்றார். பாருங்கள்? நான் அதைக் குறித்து ஒன்றுமே கேட்கவில்லை. மோசே எகிப்துக்கு போக வேண்டுமென்று கேட்கவில்லை, தேவன் தான் அவனை எகிப்துக்கு அனுப்பினார். பாருங்கள்? 87பரிசுத்த ஆவியானவர் என்னிடம் ஒரு தரிசனத்தில் வந்து, “இந்த குறிப்பிட்ட நபரிடம் சென்று, அவர்கள் குறிப்பிட்ட ஒன்றை மேற்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர், அவர்களால் முடியாது (அவர்கள் புகைபிடிக்கின்றனர், குடிக்கின்றனர், பொய் சொல்கின்றனர், திருடுகின்றனர், அல்லது விபச்சாரம் செய்கின்றனர், அது எதுவாயிருந்தாலும்; அல்லது அவர்களுக்கு இச்சையின் ஆவி உள்ளதென்று வைத்துக் கொள்வோம்). நீ அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று, 'ஆவியே, அங்கிருந்து வெளியே வா. சிறைப்பட்ட இவரை விடுதலையாக்குகிறேன் என்று சொல்” என்று சொல்வாரானால்! அது நடக்குமா? நிச்சயமாக. ஆம், அது நிச்சயமாக நடக்கும். ஆனால், நானே என் சொந்த ஊகத்தினால். ... 'ஊகித்தல்' (presuming)என்பது “அதிகாரம் பெறாமல் செய்யத் தைரியப்படுவது என்று பொருள்படும். பாருங்கள்? இந்த நபருக்கு உதவி செய்ய நான் அங்கு செல்கிறேன்; அது சரியாயிருக்கும் என்று நான் ஊகிக்கிறேன். பாருங்கள்? ஆனால் எனக்குத் தெரியாது, அவர்கள் மேல் நான் கர்த்தருடைய நாமத்தை சொல்லி அழைக்க முடியாது; அவர்களுக்காக நான் ஜெபிக்கலாம், எனக்கு விருப்பமான எதையும் செய்யலாம். 88இன்று காலையில் விருப்பமானதைச் செய்ய எனக்கு அனுமதி இருக்குமானால்... சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கிற இந்த ஸ்திரீயுடன் சற்று முன்பு தான் எனக்கு பேட்டி ஒன்று இருந்தது. இந்த கூட்டத்துக்கு இன்று வருவதற்காக, அவளை சிக்காகோவிலுள்ள அவளுடைய வீட்டிலிருந்து கொண்டு வருவதற்காக, தீயணைக்கும் பிரிவினரின் உதவியை அவர்கள் நாட வேண்டியதாயிருந்தது; அப்படியிருக்க தெருவின் மறுபக்கத்திலுள்ளவர்கள் கூட்டங்களுக்கு வருவதில்லை. பாருங்கள்? நான் என்ன செய்வேன்? எனக்கு அதிகாரமிருக்குமானால்... அது... அதைச் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அதைச் செய்வதற்கான கட்டளைக்காக நான் காத்திருக்க வேண்டும், பாருங்கள்? அதைச் செய்ய நான் தேவனிடத்திலிருந்து அதிகாரம் பெற்றிருக்கிறேன்; ஆனால் இப்பொழுது, அவர் கட்டளை கொடுக்கும் போது, அவள் குணமடைந்து வீடு செல்வாள். பாருங்கள்? அது உண்மையென்று எனக்குத் தெரியும். அதன் பேரில் இன்று காலை நான் மரிக்கவும் சித்தமுள்ளவனாயிருக்கிறேன். பாருங்கள்? அது உண்மை . ஆனால் முதலாவதாக, பாருங்கள், அது எல்லாமே... இருவருமே செய்ய முடியாது, இயேசுவும் கூட, “குமாரன் தாமாய் எதையும் செய்ய முடியாது. பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” என்று கூறியுள்ளார். அது நமக்குத் தெரியும், பரி. யோவான் 5:19, சரி, “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அவையேயன்றி வேறென்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்”. சரி. 89பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தரிசனத்தில் இந்தியானாவரிலுள்ள காரிடன் அருகில் பெரிய அற்புதம் நடக்கும் என்று கண்டீர்களே, அது நிறைவேறி விட்டதா? இந்த கேள்வி எனக்குக் கிடைத்த போது என் புத்தகத்தில் நான் தேடிப் பார்த்து ஒரு கேள்விக்குறியை இட்டேன், இந்த கேதுரு மரங்கள் எங்கிருக்கும் என்று நான் கவனிக்க வேண்டிய நேரம் ஓன்றிருந்தது... நீங்கள் அங்குள்ள மலையிலிருந்து தொடங்கி, மறுபக்கத்தில், காரிடனுக்குப் போகும் வழியில், நீங்கள் நியூ ஆல்பனியிலுள்ள மலையின் உச்சியை விட்டு வந்த பிறகு. எனக்கு நேரிட வேண்டிய ஒரு பயங்கர விபத்துக்காக நான் அந்த கேதுரு மரங்களை கவனிக்க வேண்டும் என்பதாய் இருந்தது. ஆனால்தேவனுடைய கிருபையினால் நான் அதிலிருந்து தப்பித்துக் கொண்டேன். அப்பொழுது விஸ்கியை ஒரு குப்பியிலிருந்து குடித்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் கொல்லப்பட்டாள். அந்த குப்பி அவள் வாயிலிருந்தவாறே அவளுடைய தொண்டை அங்கேயே அறுபட்டது - பதினாறு வயது பெண். அந்த நேரத்தில் நான் அங்கிருந்தேன். பாருங்கள்? நீங்கள் குறிப்பிட்டது ஒருக்கால் அதுவாக இருக்கக் கூடும். அதை நான் படித்தேன். 90மேலும், சகோ. பீன்ப்ளாஸ்ஸம் என்பவரின் இடத்தில் எனக்கு அந்த கூட்டம் இருந்தபோது... அது ஒருக்கால் அதுவாக இருக்கலாம், அல்லது ஜார்ஜி கார்டர் என்பவரின் இடத்தில் நடந்த கூட்டமாயிருக்கலாம். பாருங்கள்? அங்கு வேறொன்று நடந்தது. அங்கு நான்கைந்து பேர் இருந்தனர். நிறைவேறாத ஒன்றையும் நான் கண்டதில்லை. இதை எழுதின நபர் எனக்கு மறுபடியும் எழுதி, அந்த நேரத்தில் நான் என்ன கூறினேன் என்று தெரிவிப்பாரானால், அதை நான் படித்து அறிந்து கொள்வேன். பாருங்கள்? அந்த தரிசனத்தைக் குறித்து நான் என்ன சொன்னேன் என்று எனக்குத் தெரிவிப்பீர்களானால்... ஏனெனில் நான் புத்தகத்தில் எழுதி வைத் திருப்பவைகள் நான் தரிசனத்தில் கண்டவைகளையே. இங்கே அது இவ்விதம் நடந்தது. அதைத் தவிர எனக்குத் தெரியாத வேறொன்றையும் நான் எழுதி வைக்கவில்லை 91பிறகு வேறொன்றும் நடந்தது; அது அந்த நேரத்தில் எனக்கு விரோதமாக மிகவும் குற்றம் கண்டுபிடித்த ஓமர் ப்ரைஸ் என்பவரின் மனமாற்றமாகும். உங்களுக்குத் தெரியும், அவர் இந்த கூடாரத்துக்கு வந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ் நானம் பெற்றுக் கொண்டார். ஓ, அதன் பேரில் அவர் என்னை கடுமையாக எதிர்த்தார்; இரவு நேரத்தில் அவருடன் நான் தங்கினேன். அவருடன் தங்கியிருந்து அவரை நேசித்துக் கொண்டேயிருந்தேன். முடிவில் அவர் வந்தார், ஏனெனில் அவர் வருவாரென்று கர்த்தர் என்னிடம் உரைத்திருந்தார். எனவே நான் அதிலே நிலை கொண்டிருந்தேன். பாருங்கள்? எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற இந்த பிரசங்கியாரின் விஷயத்திலும் அதே தான். ஒரு முறை நான் க்ளார்க்வில்லில் அவர் போதகராயிருந்த அந்த மெதோடிஸ்டு சபையில் பேசுவதற்காக சென்றிருந்தேன். அவர் முழுக்க முழுக்க மெதோடிஸ்டாக இருந்தார் - நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரியும். நான் இங்கு திரும்பி வந்தேன். “என்றாகிலும் ஒரு நாள் அவருக்கு நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பேன்” என்றேன். நான் அவ்வாறே ஞானஸ்நானம் கொடுத்தேன்; அது சகோ. நெவில். 92அழகுபடுத்தும் கடை ஒன்றை நான் வைத்து நடத்துவது தவறா? நான் அழகுபடுத்தும் தொழிலை செய்பவள், கிறிஸ்தவ பெண்கள் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வதை நான் ஆதரிப்பதில்லை; நான் மற்றவர்களின் தலை மயிரைக் கத்தரித்து அதற்கு சாயமும் போடுகிறேன். அருமை சகோதரியே, உனக்கு என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. கவனி, ஸ்திரீகள் தங்கள் தலைமயிருக்கு சாயம் போடுவதைக் குறித்து என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. அதற்கு விரோதமான வேதவசனம் எதுவும் எனக்கில்லை. நான் வேதவசனத்தில் மட்டுமே நிலைகொண்டிருக்க வேண்டும். பார்? அவ்விதம் அவர்கள் செய்யக் கூடாது என்று வேதம் உரைக்கவில்லை. அவள் நீண்ட தலைமயிரை உடையவளாயிருக்க வேண்டும் என்று தான் வேதம் போதிக்கிறது. அதற்கு பிறகு, எங்கே போவதென்று எனக்குத் தெரியவில்லை. பார்? அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. 93எனக்கு நெருங்கிய நண்பரான ஒரு போதகர் இங்கு எங்கோ இருக்கிறார். அன்றொரு நாள் நாங்கள் ப்ளூ போர் என்னும் விடுதிக்கு நடந்து சென்று உணவு அருந்தினோம். அவர் என்னிடம், “என் மனைவி உமக்கு முன்னால் வர வெட்கப்படுகிறாள்' என்றார். அவள் பரிசுத்தமுள்ள, தேவபக்தியுள்ள ஸ்திரீ, நற்பண்பு கொண்டவள், பாட்டியாகி விட்டவள். அவள் நல்லவள், சுத்தமுள்ளவள், உண்மையிலேயே... என் மனைவிக்கு இவள் மேல் அலாதி பிரியம். அவள்... அவள் இங்கு உட்கார்ந்திருக்கிறாளோ என்று எனக்குத் தெரியாது; அவள் இங்கிருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவளுடைய கணவர் இங்கிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் என்னிடம், ”உங்கள் பிரசங்கத்தைக் கேட்ட பிறகு அவள் தலைமயிரை நீளமாக வளர்க்கத் தொடங்கி விட்டாள். அது சரியென்று அவள் அறிந்து கொண்டாள். ஆனால் அவள் தலைமயிருக்கு சில சாயங்களை உபயோகித்து வந்தாள். அவள் உமக்கு முன்பாக வருவதற்கு முன்பு அதையெல்லாம் போக்கிவிட்டு வரவேண்டுமென்று மிகவும் பிரயாசப்படுகிறாள்' என்றார். 94இப்பொழுது பார், அருமை சகோதரியே, அதை நான் மிகவும் மதிக்கிறேன். அவ்விதம் செய்யும் ஸ்திரீயின் மேல் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. சில ஸ்திரீகள் தங்கள் தலைமயிரை எல்லா விதங்களிலும் அலங்கரித்துக் கொண்டு, உங்கள் கால்களில் துப்பி கர்வம் கொண்டவர்களாய், எந்த மரியாதையும் கொடுக்காமல் நடக்கின்றனர். இயேசு, “அவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்' என்றார். பாருங்கள்? உன் மனப் பான்மையை நான் மதிக்கிறேன், அதற்காக தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். ஆனால், சகோதரியே, தலைமயிருக்கு சாயம் போடும் விஷயத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அதை வேத வசனத்தைக் கொண்டு என்னால் ஆதாரப்படுத்த முடியாது. எனவே அது உன்னை பொறுத்தது. பார்? அதை நீ செய்ய விரும்பினால், அதனால் எனக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை. எனக்குத் தெரிந்த வரையில், என் சபையில் அந்த வழக்கம் கிடையாது. நீ செய்ய விரும்பினால்.... வேதத்தில் இல்லாத எந்த ஒன்றும், நல்லது, நீ... அது உன்னைப் பொறுத்த விஷயம். பார்? ஆனால் என் ஆலோசனையை உனக்குத் தருவேன், பார் , எனக்குத் தெரிந்த வரையில் ... அழகாகக் காணப்பட வேண்டு மென்பது ஸ்திரீயின் இயல்பு என்று உனக்குத் தெரியும்; அவள் அந்த விதமாக இருப்பதாக கருதப்படுகிறாள். 95மானிட வர்க்கத்தைத் தவிர மற்றெல்லா வர்க்கத்திலுமே, ஆண் தான் மிகவும் அழகுள்ளது என்று உனக்குத் தெரியும். பறவை, பசு, எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். மாடு இனத்தை எடுத்துக் கொள்வோம். எது மிகவும் அழகுள்ளது? சுருங்கிப் போன கொம்பையுடைய பசுவா அல்லது பெரிய காளையா? மானை எடுத்துக் கொள், எது மிகவும் அழகுள்ளது, பெண் மானா? ஆண் மானா? கலைமானை எடுத்துக் கொள்வோம், எது மிகவும் அழகுள்ளது? ஆணா? பெண்ணா? நீர் எருமை, எதை வேண்டு மானாலும் எடுத்துக் கொள். பறவை இனத்தை எடுத்துக் கொள். சேவலா, கோழியா, எது மிகவும் அழகுள்ளது? பார்? வர்க்கங்கள் அனைத்திலும் எப்பொழுதும் ஆண்தான் மிகவும் அழகுள்ளது. ஆனால் மானிட வர்க்கத்தில் மாத்திரம் பெண் தான் மிகவும் அழகுள்ளவள். ஏன்? அவள் தான் வீழ்ச்சி உண்டாக காரணமாயிருந்தாள். சாத்தான் அவளை அங்கேயே தெரிந்து கொண்டான், அழகு பிசாசினால் உண்டானது. பார்? 96சாத்தான் தான் தேவதூதர்களிலேயே மிகவும் அழகுள்ளவன். அவன் சிங்காசனத்தை மூடிக் கொண்டிருந்த கேரூபின், ஸ்திரீ முன்னைக்காட்டிலும் இப்பொழுது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறாள் என்று பார். எத்தனை பேர் பெர்ல் ஓப்ரயனைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? மக்கள் கரங்களைப் பார்ப்போம், முதியோரில் சிலர். நிச்சயமாக. பாருங்கள்? அவள் அமெரிக்காவிலேயே மிகவும் அழகுள்ள பெண் என்று கருதப்பட்டவள். ஆனால் இன்று தெருவில் காணும் எந்த ஒரு இளம் பெண்ணும் அவளைக் காட்டிலும் இரட்டிப்பாக அழகுள்ளவளாயிருக்கிறாள். என்? அதை தான் வேதம் உரைத்துள்ளது. “தேவ குமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு... அந்த துரோகிகளின் கூட்டம் தான் பூமிக்கு ஜலப்பிரளயம் அனுப்பப்பட காரணமாயிருந்தனர், தேவன் மானிட வர்க்கம் முழுவதையும் அழித்து போட்டார். பாருங்கள்? இன்றைக்கு எல்லாமே ஹாலிவுட்டையும், அழகையும், அது போன்றவைகளையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆனால் அழகு என்பது இருதயத்தில் மறைந்திருக்கிற ஒன்றேயன்றி (பாருங்கள்?) அது வெளிப்புற தோற்றம் அல்ல. ”அவர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளட்டும், ஆனால் புறம்பான அலங்கரிப்பினால் அல்ல, உள்ளான அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக் கடவது' (1 பேதுரு 3:3-4), அதுதான் கிறிஸ்தவன். எனவே இப்பொழுது, உன் கேள்விக்கு, சகோதரியே, உனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த கேள்வியுடன் நான் நிறுத்திக் கொள்ளலாம், அல்லது இன்னும் முப்பது நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். முப்பது நிமிடங்கள்... எத்தனை பேருக்கு இன்னும் முப்பது நிமிடங்கள் தங்கியிருக்க முடியும், அப்படியானால் அது இன்றிரவு நமக்கு இன்னும் சிறிது நேரம் தரும். நல்லது. நான் விரைவாக முடிக்கிறேன். 97சகோ. பிரான்ஹாமே. 1 தீமோத்தேயு 2:9ன்படி, ஒரு ஸ்திரீ மயிரைப் பின்னக்கூடாதா? 'பிராய்ட்' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மயிரைப் பின்னுதல் (braid) என்று அர்த்தமா? இப்பொழுது பார், சகோதரியே, இப்பொழுது இது... போன கேள்வியைத் தொடர்ந்து இது வந்ததைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அதை நான் அந்த இடத்தில் பொருத்தவில்லை. அது தானாகவே தொடர்ந்தது நல்லது. கவனியுங்கள், அந்நாளில், பின்னப்பட்ட தலைமயிர் ஒரு தெருப் பெண்ணுக்கு (வேசிக்கும் அடையாளமாயிருந்தது. அவள் அதை தான் செய்தாள். தன் தலைமயிரைப் பின்னினாள். பவுல் கிறிஸ்தவர்களுக்கு “மயிரைப் பின்னுதலினால் உங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டாம்...' என்றான். ஏனெனில் அது உலகில் உள்ள மற்றவர்களைப் போல் காட்சியளித்தது. இப்பொழுது, நீங்கள் உலகத்தாரைப் போல் காணப் படவோ அல்லது நடந்து கொள்ளவோ கூடாது. பாருங்கள்? ஸ்திரீகள் அவர்களை விட வித்தியாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். பாருங்கள்? இல்லை, இப்பொழுது, பின்னிய தலைமயிர்... இப்பொழுது, இன்றைக்கு பின்னிய தலைமயிர் அழகாயும், உலகத்தின் நாகரீகத்துக்கு மிகவும் அப்பாற்பட்டதாயும் உள்ளது. ஸ்திரீகள் இன்று தங்கள் தலைமயிரை அலங்கரித்துக் கொள்ளும் விதத்தை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். உங்கள் தலைமயிரை நீங்கள் எந்த விதத்திலும் வைத்துக் கொள்ளுங்கள்; ஆனால் உலகத்தாரைப் போல் மட்டும் காணப்படாதீர்கள்! உலகத்தாரைப் போல் காணப்படாதீர்கள், அவர்களைப் போல் உடுத்திக் கொள்ளாதீர்கள்! அவர்கள் குட்டை கால் சட்டைகளை அணிந்து கொண்டால், நீங்கள் உடைகளை அணிந்து கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் தலைமயிரை கத்தரித்துக் கொண்டால், அல்லது வேறெதாகிலும் செய்து கொண்டால்... நீங்கள் உங்கள் தலைமயிரை வளரும்படி விட்டு விடுங்கள். பாருங்கள்? 98மயிரைப் பின்னுதல்.... கேள்வி என்னவென்றால், 'ப்ராய்ட்டும் (broid), 'ப்ரேய்ட்டும் (braid)ஒரே அர்த்தமுடையதா? ஆம், அது சரி. இப்பொழுது, தெருவில் ..... 'ப்ரேய்ட்' செய்யப்பட்ட தலைமயிர் என்றால் என்ன அர்த்தம் என்பதை கண்டுபிடிக்க நான் பல ஆண்டுகளுக்கு முன்பே அகராதியைத் தேடினேன். பாருங்கள்? ஸ்திரீ, உண்மையில், முன் காலத்து ஸ்திரீகள் தங்கள் தலைமயிரை பின்னால் இழுத்து அதைக் கட்டினார்கள், ஏறக்குறைய இன்று அவர்கள் 'போனி டேய்ல் (pony tail)கட்டுவதைப் போல. அவர்கள் எல்லாவிடங்களுக்கும் அவ்விதமே சென்றனர். அவர்கள் அங்கிகளை உடுத்திக்கொண்டனர், ஆனால் ஒரு தெரு வேசியோ தன் தலைமயிரை தலையிலிருந்து பின்னி, அதை இப்படி சுற்றி விட்டு, தலையில் பூ வைத்துக் கொள்வது வழக்கம் - ஒரு விதமான வேசி. இன்றைக்கு நாம் ஒரு வேசியை காண்பது போல, அவள் உடுத்தும் விதம். நான் வேசியை ஃப்ளாப்பர் (flapper)என்று அழைக்கிறேன், ஏனெனில் நான் வயதானவன். என் காலத்தில் அவர்கள் அவ்விதம் தான் அழைப்பார்கள். இன்றைக்கு அவர்கள் என்னவென்று அழைக்கின்றனர்? நான்... எனக்குத் தெரியாது. 'சிக்ஸ்' (chicks),அப்படி ஏதோ ஒரு பெயரால். எனவே... அது என்னவானாலும். அவர்களுக்கு நீங்கள் என்ன பெயர் கொடுத்தாலும், அவர்கள் அதை விரும்புவார்கள் 99சகோ. பிரான்ஹாமே, உங்கள் ஒலிநாடாக்களில் ஒன்றில் நோவா தன் குடும்பத்தாரை இரட்சித்தான் என்று கூறியிருக்கிறீர்கள். ஒரு தாய் தன் குடும்பத்தினருக்காக அதே விசுவாசம் கொள்ளலாம் என்பது அதன் அர்த்தமா? நான் விசுவாசித்தால் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப் படுவார்கள் என்று அர்த்தமா? இப்பொழுது அது - ஆம், அது ஒருவிதத்தில்... இதற்கு நான் இப்பொழுது எவ்விதம் பதில் கூறுகிறேன் என்பதை நீ கவனமாய் கேட்க வேண்டும். பார்? முதலாவதாக, “நீங்கள் கூறியிருக்கிறீர்கள்...' (நான் சரியாகக் கூறுகிறேனா என்று பார்ப்போம்.....) ”உங்கள் ஒலிநாடாக்களில் ஒன்றில், நோவா தன் குடும் பத்தாரை இரட்சித்தான் என்று கூறியிருக்கறீர்கள். ஏன்? ஏனெனில் அவர்கள் விசுவாசித்தனர். அதுதான். ஏனெனில் அவர்கள் அவனுடைய செய்தியை விசுவாசித்தனர். “ஒரு தாய் தன் குடும்பத்தினருக்காக அதே விசுவாசம் கொள்ளலாம் என்பது அதன் அர்த்தமா? ஆம், சகோதரியே! ஒரு தாயின் இருதயம் தன் மக்களுக்காக கூக்குரலிடுவதை என்னால் காண முடிகிறது. ”நாம் விசுவாசித்தால் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று அர்த்தமா? ஆம், அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களானால், அது உண்மை. 100அந்த பிலிப்பு பட்டினத்து சிறைச்சாலைக்காரனை ஞாபகம் கொள். உங்கள் இருவருக்குமாக விசுவாசி.... உன் சொந்த இரட்சிப்புக்காக உனக்கு போதிய விசுவாசம் இருக்குமானால், உன்ஜனங்களின் மேல் கிரியை செய்வதற்கென அதே விசுவாசம் உனக்கு ஏன் இருக்கக் கூடாது? விசுவாசம் என்பது என்ன? அது காணக் கூடாத ஒரு சக்தி. பார்? அது என்ன - அது ஆவி. பரிசுத்த ஆவி விசுவாசத்தைக் கொண்டு வருகிறது. பார்? அது காணக்கூடாத ஒரு சக்தி. நான் ஏன் வியாதியஸ்தரின் மேல் கைகளை வைக்கிறேன்? பார்? அந்த நபருக்குள் இருக்கும் அந்த ஆவியுடன் என்னால் தனிப் பட்ட விதத்தில் தொடர்பு கொள்ள முடியுமானால், ஏதாவதொன்று நிகழும். பார்? இங்கு பரிசுத்த ஆவியானவர் நின்று கொண்டிருக் கிறார்; அவர் இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துவார். கடைசி காலத்தில் அவர் என்ன செய்வதாக வாக்களித்துள்ளாரோ, அவர் அதை அப்படியே செய்வார். ஜனங்கள் அதை விசுவாசிக்கின்றனர்; அவர்கள் அதைக் கண்டு, “ஆம், ஐயா, அதை நான் விசுவாசிக்கிறேன்” என்கின்றனர். இப்பொழுது, உனக்கு நான் மிகவும் சாதாரணமாக ஆகி விடாமல் போனால் (பார்?) - இது சாதாரண ஒன்றாக ஆகிவிடுகிறது. நீங்கள் ஒரு நாள் ஜெபவரிசையில் கடந்து வருகிறீர்கள், அடுத்த நாளும் கடந்து வருகிறீர்கள். பாருங்கள்? அது தற்செயலாய் நடந்தால் நல்லது என்பதைப் போல. பாருங்கள்? நீங்கள் முதலாவதாக அதையே விசுவாசிப்பது கிடையாது (பாருங்கள்?) ஏனெனில் நீங்கள் உண்மையாக விசுவாசித்த உடனே... அந்த ஸ்திரீ “ நான் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் முழுவதும் சொஸ்தமாவேன்” என்றாள். அவள் அதைச் செய்தாள். பாருங்கள்? “நான் மறுபடியும் முயற்சி செய்யட்டும்” என்று அவள் சொல்லவில்லை. பாருங்கள்? அவள் அதை விசுவாசித்தாள். பாருங்கள்? அது-அது.... 101இப்பொழுது, உன்னிலுள்ள எல்லாவற்றோடும் நீ மட்டும் உன் குடும்பத்துக்காக விசுவாசிப்பாயானால்.... இப்பொழுது, இங்குள்ளது போல, என்னை உந்துவது எது? என் கையிலுள்ள பலம் எது? அது நிச்சயமாக என் தசைகள் அல்ல, அது என் ஆவி. நிச்சயமாக, அந்த ஆவியை எடுத்துப் போடுங்கள், அப்பொழுது தசை என்ன செய்ய முடியும்? அது செத்ததாய் இருக்கும். பார்? அது அழுகிப்போகும், ஆனால் அது .... பார் , ஆவிதான் பலத்தை அளிக்கிறது. சிம்சோனைப் பாருங்கள். இந்த இரண்டு கம்பங்களுக்கும் இடையே இருக்கக் கூடிய அவ்வளவு பெரிய கதவுகளை உங்களில் அநேகர் கண்டிருப்பீர்கள். சகோ. ஜாக்சன், அவ்வளவு திடகாத்திரமுள்ள மனிதன், ஒரு சிங்கத்தை சுக்குநூறாகக் கிழிக்கக் கூடிய பலமுடையவன். தானியக் களஞ்சியத்தின் கதவைப் போல் அவ்வளவு அகலமுள்ள தோள்களைக் கொண்டிருந்த ஒரு மனிதனின் மேல் சிங்கம் குதித்தது. அவன் அதை பீறிப் போட்டான். அது ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அதிசயம் என்னவென்றால் அவன் சுருண்ட தலைமயிர் கொண்ட, பெண்மைத்தனம் கொண்ட அம்மாவின் மகனாயிருந்தான். பெண்ணின் மயிர் சுருள்கள் போல் ஏழு சுருள்கள் அவனுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனால் கவனித்தீர்களா, கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கும் வரைக்கும், அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கினபோது, அந்த சிங்கம் அவனை நோக்கி ஓடி கெர்ச்சித்த போது, அதை துண்டு துண்டாக கிழித்துப் போட்டான். அது சிம்சோன் அல்ல. அது கர்த்தருடைய ஆவி. 102அவன் எவ்விதம் அந்த வனாந்தரத்தில் உலர்ந்து வெளுத்துக் கிடந்த கழுதையின் தாடையெலும்பை எடுத்து... அந்த பெலிஸ்தியரின் தலைச்சீராக்கள் ஒரு அங்குலம் கனம் பித்தளையினால் செய்யப்பட்டிருந்தன. அந்த தாடையெலும்பை நீங்கள் எடுத்து அந்த தலைச்சீராக்களின் ஒன்றின் மேல் அடித்தால், அது ஆயிரம் துண்டுகளாக நொறுங்கி விடும். அது உங்களுக்கு தெரியும். அவர்கள் அந்த தாடையெலும்பைக் கொண்டு அடிப்பார்களானால்... ஆனால் அங்கே பாருங்கள், அவன் அந்த தாடையெலும்பைத் தன் கையில் பிடித்து அங்கு நின்று கொண்டு ஆயிரம் பெலிஸ்தியரை மடங்கடித்தான்; மற்றவர்கள் மலைக்கு ஓடிப் போய் விட்டனர். அவன், “வாருங்கள், உங்களுக்கும் இந்த கதி வேண்டுமா?” என்று கேட்டான். அப்பொழுதும் அவன் அந்த தாடையெலும்பை கையில் பிடித்துக் கொண்டிருந்தான். அது என்ன? கர்த்தருடைய ஆவி அவன் மேல் இறங்கினது. பாருங்கள்? எனவே அது கர்த்தருடைய ஆவியே. உன் சொந்த இரட்சிப்புக்காக விசுவாசிக்க உனக்குள் கர்த்தருடைய ஆவி இருக்கும் போது, அதை உன் குடும்பத்தின் மேல் வைத்து, “இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அவர்களை உரிமை கோருகிறேன்; அதைநான் உரிமை கோருகிறேன்! தேவனே, அவளை நீர் எவ்விதம் அதை செய்ய வைக்கப் போகிறீர் என்று எனக்குத் தெரியாது, அவனை நீர் எவ்விதம் அதை செய்ய வைக்கப் போகிறீர் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அதை நான் விசுவாசிக்கிறேன்; அதை விசுவாசிக்கிறேன், கர்த்தாவே! என் அவிசுவாசம் நீங்க உதவிச் செய்யும்” என்று சொல். அதை உரிமை கோரி என்ன நடக்கிறதென்று கவனி. அது அதை செய்யும். 103மணவாட்டிக்கு - இயேசு வருவதற்கு முன்பு மணவாட்டி, பின் மாரி காலத்திலிருந்தது போல, அற்புதங்களைச் செய்வதற்கும், மரித்தோரை உயிரோடெழுப்புவதற்கும் மற்றவைகளைச் செய்வதற்கும் பரிசுத்த ஆவியின் அனைத்து வல்லமையையும் பெற்றிருப்பாளா? அல்லது இந்த பின்மாரி 144,000 யூதர்களுக்கு மாத்திரமா? எல்லா ஊழியக்காரர்களும் இதைப் பெற்றிருப்பார்களா, அல்லது அவருடைய வருகைக்காக மட்டும் நாம் காத்திருக்கிறோமா? ஆம். பாருங்கள், நண்பனே. நான் ஒரு வேதசாஸ்திர பண்டிதன் அல்ல. எனவே வேதத்தைக் குறித்து எனக்குத் தெரிந்த அனைத்தையும் நான் நிழல்களையும் முன்னடையாளங்களையும் கொண்டு போதிக்க வேண்டியவனாயிருக்கிறேன். நீங்கள் என்னை. “முன்னடையாளக்காரன்' (typologist)என்று அழைக்கலாம். நான் சுவற்றை நோக்கிக் கொண்டிருக்கிறேன், என்னை நான் கண்டதேயில்லை என்று வைத்துக் கொள்வோம். நான் சுவற்றில் என் நிழலைக் காணும்போது, எனக்குத் தலை, காதுகள், கைகள் உள்ளதாக அறிந்து, என்னை நான் கண்டால், நான் எப்படியிருப்பேன் என்பதை அறிந்து கொள்கிறேன். பாருங்கள்? ஒரு கண்ணாடியில் என் உருவம் பிரதிபலிப்பதை நான் காணும்போது, நான் நின்று கொண்டு என்னையே நான் காணமுடிந்தால் எப்படியிருப்பேன் என்பதை அறிந்து கொள்கிறேன். வேதத்தையும் நான் அவ்விதமாகவே கருதுகிறேன். “இவையனைத்தும் நமக்கு திருஷ்டாந்தங்களாக வைக்கப்பட்டுள்ளன” என்று வேதம் உரைக்கிறது (1 கொரி. 10:11). நாம் பின்னோக்கிப் பார்த்து, சந்திரன் சூரியனைப் பிரதிபலிப்பது போல, அது என்ன - வென்று நாம் அறிந்து கொள்ளலாம். நான் சூரியனைக் கண்ட தேயில்லை என்றால், அது எப்படியிருக்கும் என்று நாம் அறிந்துகொள்கிறோம். நாம் சந்திரனை நோக்கி, சூரியன் அதைக் காட்டிலும் பெரிதாயிருக்கும் என்று அறிகிறோம். நல்லது, அது போன்று பழைய ஏற்பாட்டின் சம்பவங்களை நீங்கள் காணும்போது, அவை புதிய ஏற்பாட்டின் சம்பவங்களைப் பிரதிபலிப்பதாயுள்ளன. 104இப்பொழுது, இங்கே, என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிப்பது என்னவெனில், நான் - நாம், அல்லது இந்த நாட்கள்... நாம் இல்லையென்றால், வேறு யாரோ இருக்கிறார்; அப்படித்தான் இருக்க வேண்டும். காலம் முடிவடைந்து விட்டது; நாம் முடிவில் இருக்கிறோம். ஒவ்வொன்றும். உலகமானது... தேவன் உலகத்தை ஆறாயிரம் ஆண்டுகளில் சிருஷ்டித்து, ஏழாயிரம் ஆண்டில் ஓய்ந்திருந்தார். ஒரு மனிதன் அத்தனை ஆண்டுகளாக உயிர் வாழ மாட்டான் என்று அவர் கூறினார். “நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'. வேதத்தின்படி மெத்தூசலா தான் மிகவும் நீண்ட காலம் வாழ்ந்தவன். அவன் 969 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான். அவன் அந்த ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழவில்லை. ஆனால் மனிதன் தண்டனைக்கான கிரயம் செலுத்தப்பட்டாகி விட்டது என்பதைக் காண்பிக்க, ஆயிரம் வருட அரசாட்சியின் போது, ஆயிரம் ஆண்டு காலம் உயிர் வாழ்வான். மனிதன் அப்பொழுது என்றென்றைக்கும் உயிர் வாழ்வான்; நாள் என்பது முடிவடைந்திருக்கும்; காலம் என்பது முடிவடைந்திருக்கும்; அவர்கள் நித்தியத்தில் இருப்பார்கள். 105இரண்டு மூன்று ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்பு நான் அளித்த “பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால இருப்பிடம்' என்னும் செய்தியின் பேரில் எனக்கு பல கடிதங்கள் வந்துள்ளன. அது நிச்சயம் அநேகருக்கு பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது.... எனக்கும் கூட. அதிலிருந்து நான் மீளவில்லை . 106இப்பொழுது கவனியுங்கள். இதன் பேரில் (பாருங்கள்?) ஆபிரகாம் கண்டான். இப்பொழுது, அவர் ஆபிரகாமுடன் ஈடுபட்ட விதமாக, அவனுடைய சந்ததியுடனும் ஈடுபட வேண்டும். இப்பொழுது, இந்நாட்களில் ஒன்றில், நான் எப்பொழுதாகிலும் திரும்பி வரும்போது, அதை இன்னும் விரிவாக எடுத்து, ஆபிரகாமின் வாழ்க்கையில் இருந்த வெவ்வேறு கட்டங்களை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அவர் ஆபிரகாமுடன் ஈடுபட்ட விதமாகவே, லூத்தருடனும், வெஸ்லியுடனும், வழிவழியாக இக்காலம்வரையிலும் உண்டாயிருந்த சபைகளுடன் ஈடுபட்டிருக்கிறார். அவர் எவ்வாறு ஆபிரகாமுக்குப் பிரத்தியட்சமானார்; எவ்வாறு சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் அவர் அவனுடன் உடன்படிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார் - அது பிலதெல்பியா சபையின் காலம். ஆம், ஐயா, அது இரத்தத்தின் காலம் - வெஸ்லியன் காலம். அதன் பிறகு பெந்தெகொஸ்தே காலத்தை கவனியுங்கள். அவர் அங்கு வந்த பிறகு, அவர் எல்ஷடாய்' அதாவது “என் மார்பகத்தின் பாலைக் குடி” என்னும் வாக்குத்தத்தத்தை அருளினார். கேள்வி என்னவெனில்: உன்னால் பாலைக் குடிக்க முடியுமா? அது பெந்தெகொஸ்தேயினருக்கு முன்பாக வைக்கப் பட்டது. பாருங்கள்? உன்னால் பாலைக் குடிக்க முடியுமா? அவர்கள் அதைச் செய்யவில்லை; அவர்கள் வெளி வந்த ஸ்தாபனத்தின் மார்பகத்தைப் பிடித்து அதன் பாலைக் குடித்தனர். ஆனால் வித்தோ, உண்மையான வித்தோ, தேவனுடைய மார்பகத்தின் பாலைக் குடிக்கும். 107அத்தனை ஆண்டுகளாக அவர்கள் காத்திருந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு அவர்கள் பெற்றுக் கொண்ட கடைசி அடையாளம் என்ன? தேவன் ஒரு மனித உருவில் அங்கு நின்று கொண்டு சாராளின் இருதயத்திலுள்ள சிந்தனைகளைப் பகுத்தறிந்தாரா? (சாராள் சபையாக, சபைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறாள்) அவருக்குப் பின்னால் இருந்த சபையின் சிந்தனைகளை அவர் பகுத்தறிந்தார். அது சரியா? அதற்கு பின்பு உடனே, சாராள் ஒரு வாலிப ஸ்திரீயாகவும், ஆபிரகாம் ஒரு வாலிபனாகவும் மாறினான்; வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனாகிய ஈசாக்கு காட்சியில் கொண்டு வரப்பட்டான். எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு சபைக்கு நிகழ வேண்டிய கடைசி காரியத்தை நீங்கள் கண்டு கொண்டிருக்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அது முற்றிலும் உண்மை. அதை நான் விசுவாசிக்கிறேன். மாரி முடிந்து விட்டது. வெளிப்படுத்தின விசேஷம் முதல் மூன்று அதிகாரங்களைப் படியுங்கள், சபைக்கு என்ன வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். அதுதான் சபைக்கு அங்கே வாக்களிக்கப்பட்டுள்ளது - சபை காலங்களுக்கு. அன்றொரு நாள் நாம் எக்காளங்களைப் பிரசங்கிக்கத் தொடங்கின போது, பரிசுத்த ஆவியானவர், “அது இதைச்சேர்ந்ததல்ல என்று உரைத்ததை நீங்கள் கவனித்தீர்கள். பாருங்கள், பாருங்கள்? 108இப்பொழுது, பின் மாரி, 144,000 யூதர்கள், இல்லை, அதுவல்ல, அவர்கள் மாட்டார்கள். அது எலியாவும் மோசேயும் வரும் போது... அப்பொழுதுதான் அற்புதங்கள் நடக்கும். ஜனங்கள் - பெந்தெகொஸ்தேயினர் - எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அற்புதங்கள், அவர்கள் கீழ் தான் நடக்கும். பாருங்கள், அது எலியாவினுடையதும், மோசேயினுடையதும். அவர்கள் தங்களுக்கு வேண்டும் போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளால் வாதிப்பார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாளிலே மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைப்பார்கள். தேவன் முன்பு செய்தது போல, நின்று கொண்டு அவர்களுக்காக யுத்தம் பண்ணுவார். அவர் எகிப்தில் செய்த விதமாகவே, அவர்களை பலத்த கரத்தினால் உலகத்தின் “தத்துவங்களிலிருந்து” (isms)வெளியே கொண்டு வருவார். அவர் அதைச் செய்வார், ஆனால் அதுவல்ல.... 109நாம் கர்த்தருடைய வருகைக்கு காத்திருக்க மட்டும் செய்ய வேண்டும். காத்திருக்க மட்டும் செய்யுங்கள்; உங்கள் தீவட்டிகளை சுத்தம் பண்ணி வைத்திருங்கள், அதை எண்ணெயினால் முழுவதும் நிரப்புங்கள். ஒவ்வொரு மணி நேரமும் ஜெபித்துக் கொண்டிருங்கள், ஒவ்வொரு நாளும் அல்ல, ஒவ்வொரு மணி நேரமும். உங்களை ஆயத்தமாக வைத்திருங்கள்; ஆயத்தமாயிருங்கள்: இனிமையாயிருங்கள், விழித்துக் காத்திருங்கள்....ஓ, அந்த மகிழ்ச்சியான ஆயிரம் வருடஅரசாட்சியின் நாள் வரக் காத்திருக்கிறோம் அப்பொழுது, நமது ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தர் வந்துகாத்திருக்கும் தம் மணவாட்டியை எடுத்துக்கொள்வார் ஓ, என்னே - ஓ , நான் உழைத்து, விழித்து, ஜெபித்துக் கொண்டிருக்கையில் என் இருதயம்மகிழ்ச்சியினால் பொங்குகிறது, ஏனெனில் நமதாண்டவர் மறுபடியும் பூமிக்கு வருகிறார். அதுதான்; அதுதான் இந்நேரத்தில் சபையின் நம்பிக்கை. 110ஞானஸ்நானத்துக்கு “இயேசு கிறிஸ்துவின் நாமம் சரியா, அல்லது அது ”கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம். என்றிருக்க வேண்டுமா? இரண்டில் ஏதாவதொன்றை உபயோகிக்கலாம். நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தை உபயோகிக்கிறேன் (பாருங்கள்?) ஏனெனில் அவர் நம்முடைய கர்த்தர் என்பது என் கருத்து. இப்பொழுது, சில சகோதரர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதைக் குறித்து எனக்கு கருத்து வேறுபாடு உண்டு (பாருங்கள்?), ஏனெனில் இயேசு என்னும் பெயர் கொண்ட பல நண்பர்கள் எனக்குள்ளனர் - மெக்ஸிகோவிலும், இத்தாலியிலும் இன்னும் மற்றவிடங்களிலும் பல போதகர் நண்பர்கள். அவர்கள் அவர்களை இயேசு என்ற பெயரால் அழைக்கின்றனர். எனவே ஞானஸ்நானத்தில் இயேசு என்னும் நாமம் போதாது. அவர் கிறிஸ்துவாகிய இராட்சகராகப் பிறந்தார். அவர் இரட்சகராகப் பிறந்தார், கிறிஸ்துவாக அபிஷேகம் பண்ணப்பட்டார். அவர் பிறந்து எட்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு இயேசு என்னும் நாமம் பெயரிடப்பட்டது. பாருங்கள்? அப்படியானால் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அப்படித்தான் அவர் இருந்தார். சரி. 111சகோ. பிரான்ஹாமே, விவாகமும் விவாகரத்தும் என்னும் பிரச்சினையின் பேரில் இந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்த கர்த்தர் உமக்கு அனுமதி அளிப்பாரா? கேள்வி: ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை விவாகம் செய்து கொண்ட பிறகு, அவள் அவனை விவாகரத்து செய்து விட்டு வேறொருவரை மணந்து கொள்ளலாமா? இருவருமே வேறொருவரை விவாகம் செய்து கொண்டால், அவர்கள் இருவருமே விபச்சாரம் செய்கிறவர்களாகி விடுவார்களா? இது சர்ப்பத்தின் வித்துடன் இணையும் என்று நீர் கூறினீர். அது எப்படி? நமக்குள்ள இந்தக் கேள்வித் தொகுப்பிலேயே இது மிகவும் வஞ்சகமான கேள்விகளில் ஒன்றாகும். இது இன்றைக்கு உலகில் அதிகமாக பிரச்சினைக்குரிய கேள்வியாகும். இப்பொழுது. நான் சொல்வதைக் கேளுங்கள். இதற்கு எனக்கு ஒரு காரணம் உண்டு. இன்று காலையில் விவாகமும் விவாகரத்தும் என்பதை குறித்து சரியான காரியத்தை இந்த சபைக்குக் கொண்டு வந்து அது ஒலிநாடாவில் பதிவாகி மற்றவர்கள் கேட்பார்களானால், அது தேசத்திலுள்ள ஒவ்வொரு சபையையும் உடைத்துப் போடும். பாருங்கள்? அது உண்மை. 112இப்பொழுது, எனக்குதவி செய்யும், வேதாகமம் என் முன்னில் இதோ வைக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியின் பேரில்கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் பெற்றிருக்கிறான். இதைக் குறித்து தர்க்கம் செய்யும் இரு சாராருமே தவறாயிருக்கின்றனர். ஏற்கனவே விவாகமானவர்களை மறுபடியும் விவாகம் செய்கிறவர்கள், இருவருமே தங்கள் செயலில் தவறு செய்கின்றவர்களாயிருக்கின்றனர். ஆனால் இதற்கு இடையில் - பாதையின் நடுவில் - சத்தியம் உள்ளது. நான் விரும்பவில்லை... நான் ஒரு செய்தி ஒலிநாடாவை தயாரிக்கப் போகின்றேன், எனக்கு ஏதாவது நேரிடும் பட்சத்தில் நான் போய்விட்ட பிறகு (பாருங்கள்?) அதை சகோதரர்கள் சபைகளுக்கு போட்டுக் காட்டலாம். நான் அதன் பேரில் ஒரு ஒலிநாடாவை தயாரித்து, அது எங்குள்ளது என்பதை உங்களுக்கு சபையில் காண்பிக்க விரும்புகிறேன்; ஆனால் நான் கர்த்தரால் ஏவப்படும் வரைக்கும், அதைக் குறித்து ஒன்றையும் சொல்ல மாட்டேன். இப்படிப்பட்ட காரியங்களில் நான் கர்த்தரால் ஏவப்பட வேண்டுமென்று உணருகிறேன்; நான் ஏவப்படாமல் போனால், நான் நன்மை செய்வதைக் காட்டிலும் அதிக சேதத்தை விளைவிப்பேன். பாருங்கள்? 113இப்பொழுது இதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். கேள்வி: “ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை விவாகம் செய்து கொண்ட பிறகு, அவள் அவனை விவாகரத்து செய்து விட்டு வேறொருவரை மணந்து கொள்ளலாமா? இருவருமே வேறொருவரை விவாகம் செய்து கொண்டால், அவர்கள் இருவருமே விபச்சாரம் செய்கிறவர்களாகி விடுவார்களா?” இப்பொழுது, என் நண்பனே, உங்கள் மனதை நோக வைக்க நான் விரும்பவில்லை, ஆனால் அதுதான் உண்மை . “தள்ளி விடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்” என்று இயேசு கூறியுள்ளார் (மத். 5:32). பாருங்கள்? அதை நான் கூற விரும்பவில்லை, ஆனால் அதுதான் உண்மை... “இது சர்ப்பத்தின் வித்துடன் இணையும் என்று நீர் கூறினீர்”. பாருங்கள்? நான் அவ்விதம் கூறினதாக எனக்கு ஞாபகமில்லை. நான் ஒருக்கால் எங்காவது கூறியிருக்கக் கூடும், அதைக் குறித்து ஏதாவது கூறியிருக்கக் கூடும். 114அன்றொரு நாள், நான் ஒன்றைக் குழப்பிக் கொண்டது போல, அதை நான் கேட்க நேர்ந்தது. அது... அதை நான் அந்த நேரமே கண்டுபிடித்து விட்டேன்; அது ஒலிநாடாவில் பதிவாகியுள்ளது. அதை நான் ஒருக்கால் கேட்பேன். நான் ஏழு எக்காளங்களைக் குறித்து பேசிக் கொண்டிருந்த போது, அதை நான் ஏழு எக்காளங்கள் என்று சொன்னேன். நான் பெந்தெகொஸ்தே பண்டிகையை குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன். பெந்தெகொஸ்தே பண்டிகையிலிருந்து எக்காளப் பண்டிகை வரைக்கும் இடையே ஏழு ஓய்வு நாட்கள். பஸ்கா பண்டிகைக்கும் பெந்தெகொஸ்தே பண்டிகைக்கும் இடையே (பாருங்கள்?) அது ஐம்பது நாட்கள். அதை நான் குறிப்பிட்ட போது, “அது ஏழு சபை காலங்கள்” என்றேன். ஒலிநாடாவில் (நீங்கள் அந்த ஒலிநாடாவைப் பெற்றுக் கொள்ள நேர்ந்தால்) - அந்த ஒலிநாடாவில் அது அதற்கு பிறகு ஏழு மாதங்கள் கழித்து எக்காளப் பண்டிகை வருகிறது, அது ஏழு சபைக் காலங்களைக் குறிக்கிறது என்று இருக்க வேண்டும் - ஏழு மாதங்கள், ஏழு ஓய்வு நாட்கள் அல்ல. ஏழு ஓய்வு நாட்கள் என் பது... அதை நான் அங்கு விளக்கியிருக்கிறேன். நான் ஏழு ஓய்வு நாட்கள் என்று கூறினேன். ஆனால் நான் அதே கருத்தை பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு ஏழு மாதங்களுக்கு பிறகு என்பதற்கும் கொண்டு சென்று விட்டேன். அந்த பண்டிகையின் போது கதிர் கொண்டு வரப்பட்டு அசைவாட்டப்படுகிறது. அப்படியானால் பாருங்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், அந்த நேரத்துக்குப் பிறகு கதிர் அப்பமாக மாறுகிறது. ஒரு கதிர், அதன் பிறகு எல்லாமே அப்பத்துக்குள் சென்று விடுகிறது. ஓ, அதில் பெரிய போதகம் அடங்கியுள்ளது; அதன் ஓரத்தைக் கூட நான் தொட வில்லை. அதை நீங்கள் ஒலிநாடாவில் கேட்க நேர்ந்தால், உங்கள் வேதத்தை திறந்து பாருங்கள் (லேவியராகமம் 23ம் அதிகாரம் - தமிழாக்கியோன்). பாருங்கள், அதற்கு பிறகு ஏழு மாதங்கள் கழித்து. ஏழு மாதங்களை எண்ணுங்கள்: ஜனவரி, பெப்ருவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை - அது ஜூலை மாதம். ஏழு மாதங்கள், அது . ஏழு சபை காலங்கள் முழுவதையும் குறிக்கிறது. ஏதாவதொரு போதகர் அதை கண்டு பிடிக்கக் கூடும், அப்பொழுது குறை கூறப்படுவேன். அங்கு பார்த்தீர்களா? சரி. 115இப்பொழுது, இதன் பேரில், நாம் ஒருவாறு... நீங்கள்... இதை நான் கூறுகிறேன். இதை நான் கூறட்டும், கர்த்தர் அல்ல, இதை நான் கூறுகிறேன். இந்த நேரத்தில் உங்களுக்கு மறுபடியும் விவாகமாயிருந்து, நீங்கள் இருவருமே இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றிருப்பீர்களானால் (இப்பொழுது. இது நான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தர் அல்ல, பாருங்கள்), நீங்கள் தொடர்ந்து ஒன்றாக வாழுங்கள்; சந்தோஷமாயிருங்கள்; ஏனெனில் உங்கள் முதல் மனைவியுடன் நீங்கள் வாழ முடியாது, வாழ முடிந்திருந்தால் இவளை நீங்கள் விவாகம் செய்து கொண்டிருந்திருக்க மாட்டீர்கள். இவளை நீங்கள் விட்டு உங்கள் முதல் மனைவியிடம் செல்வீர்களானால், நீங்கள் முதலில் செய்ததை விட இன்னும் மோசமான காரியத்தை செய்பவராகி விடுவீர்கள். பாருங்கள்? எனவே பாருங்கள், நீங்கள் எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள், அதிலிருந்து மீள வழியேயில்லை. நான் வேதத்திலிருந்து உண்மையில் ஒரே ஒரு வழியைத் தான் எடுத்துக் கூற முடியும்; நீங்கள் இருவருமே தனியாக வாழுங்கள். பாருங்கள்? இப்பொழுது, ஆனால்... இந்த ஒரு வழியைத் தான் இப்பொழுது நான் கூற முடியும், ஆனால் வேறொரு காரியம் அதில் உள்ளது, அதை இப்பொழுது என்னால் உங்களிடம் கூற முடியாது. “இது கர்த்தர் அல்ல, நான், தொடர்ந்து வாழுங்கள்” என்று நான் கூறக் காரணம். இதை நீங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்ய நேர்ந்து என்றாகிலும் ஒரு நாள், இதைக் குறித்து நான் மறுபடியும் பேச நேர்ந்தால், இதை நான் கூறிய விதத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், அதை நான் எவ்விதம் அப்பொழுது கூறினேன் என்பதை நீங்கள் கேட்டு அறிந்து கொள்ள முடியும் (பாருங்கள்?), அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 116சகோ. பிரான்ஹாமே, நம்முடன் வேற்றுமை கொண்டிருக்கும், மற்ற சபைகளுக்கு நாம் போகலாமா? நிச்சயமாக, ஆம்! அவர்கள் இயேசுவுடன் வேற்றுமை கொண்டிருந்த போதிலும், அவர் அங்கு சென்றார். போங்கள். “நம்முடன் வேற்றுமை கொண்டிருக்கும் மற்றொரு சபைக்கு நாம் செல்லலாமா?” என்று கேட்கப்பட்டுள்ளதை இங்கு நாம் கவனிக் கிறோம். நிச்சயமாக, நான்... நான் கடற்கரையில் உள்ள ஒரே ஒரு கூழாங்கல் அல்ல, உங்களுக்குத் தெரியும். தேவபக்தியுள்ள மற்ற மனிதர் எல்லாவிடங்களிலும் உள்ளனர். அவர்களில் நானும் ஒருவன் என்று நம்புகிறேன். பாருங்கள்? ஆனால் நீங்கள் இங்கு வந்து... அன்றொரு நாள் இது போன்ற ஒன்றைக் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. அரிசோனாவிலுள்ள ஒரு குழு இதைக்குறித்து என் கவனத்தை ஈர்த்தது. போதகர் குழு ஒன்று என்னிடம், “சகோ, பிரான்ஹாமே, உங்களுக்கு விரோதமாக எங்களுக்குள்ள ஒரே ஒரு காரியம் (பல காரியங்களில் ஒன்று என்னவெனில், உங்களுடன் இங்கு வரும் மக்களை, வேறெந்த சபைக்கும் போக வைக்க எங்களால் முடியவில்லை. அவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர், ஆனால் அவர்கள் சபைக்குச் செல்ல மறுக்கின்றனர்; எங்கள் சபைக்கு வருவதற்கு அவர்கள் வரவேற்கப்படுகின்றனர் என்று நாங்கள் சொன்னபோதிலும்' என்றனர். 117நீங்கள் அவர்களுடைய சபைகளில் சேர்ந்து கொள்ள உங்களை வற்புறுத்துகின்றனர் என்பதை அறிவேன், ஆனால் நீங்கள் சேரவேண்டிய அவசியமில்லை; உங்கள் பிள்ளைகளை எங்காவது ஞாயிறு பள்ளிக்கு அனுப்புங்கள். நீங்கள் சபைக்குச் செல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கவோ, மீன் பிடிக்கவோ, வேட்டைக்கோ செல்லாதீர்கள். நீங்கள், “நல்லது. நான் சட்டதிட்டங்களை கடைபிடிக்கும் ஒருவன் அல்ல (legalist)” எனலாம். நல்லது, நீங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அவமதிக்காமல், சிறிது காலம் அவ்விதம் இருப்பது நல்லது. நீங்கள் எங்காகிலும் சபைக்குச் செல்லுங்கள். நான் போவேன் என்றால்... எனக்குக் கிடைக்கவில்லை என்றால். நான் விசுவாசிப்பவைகளில் ஒரே ஒரு காரியத்தை மாத்திரம் கூறுவதாக நான் அறிந்துள்ள ஒரு குறிப்பிட்ட சபைக்கு நான் செல்வேன் என்றால் - அவர்கள் இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதாக கூறுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். நான் அங்கு சென்று அவர்கள் அதைக் கூறுவதைக் கேட்பேன். ஒருக்கால் நீங்கள் சொல்லல... அது இந்த சபை, 'அடுத்த சபை பாப்டிஸ்டைப் போல் ஏதோ ஒரு சபை. அவர்கள், “ஆம், உங்களுக்கு அனுபவம் உண்டாயிருக்க வேண்டும் என்பது எங்கள் விசுவாசம்” என்று சொன்னால், அதை நான் ஏற்றுக் கொள்வேன். அப்பொழுது நான் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறேன்; அத்துடன் எனக்கு அனுபவம் உண்டாயிருக்க வேண்டும் என்றும் நான் விசுவாசிக்கிறேன். சரி. அதன் பிறகு, அங்கு அசெம்பிளீஸ் ஆப் காட் சபை உள்ளதென்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, அவர்கள்விசுவாசிப்பது என்னவெனில்... பாருங்கள், நான் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து இப்பொழுது மூன்று அல்லது நான்கு 'ஸ்லைஸ்' ரொட்டி சாப்பிட என்னால் முடிகிறது. பாருங்கள்? ஏனெனில் அவர்களால் விசுவாசிக்க முடிந்தது .... 118அன்றொரு நாள் இதே நபர் என்னிடம் வந்து அதைக் குறித்து அறிய விரும்பினது போல. அவர், “நீங்கள் சொன்னீர்கள்...' என்றார் (அங்குள்ள இந்த போதகர். அங்குள்ள இந்த ஆள் அதை விவாதிக்க விரும்பினார். பாவம் சகோதரன், அவர் அப்படிப்பட்ட ஒரு மாயையில் இருக்கிறார்). அவர், ”நல்லது. சகோ. பிரான்ஹாம் அசெம்பிளில் ஆப் காட் சபையாகிய உங்களுக்கு விரோதமாய் இருக்கிறார்' என்றார். இதை அசெம்பிளீஸ் போதகர் யாராகிலும் கேட்க நேர்ந்தால், நான் எப்பொழுது அசெம்பிளீஸ் ஆப் காட் மனிதருக்கு விரோதமாகவோ, அல்லது வேறெந்த மனிதருக்கும் விரோதமாகவோ இருந்திருக்கிறேன் என்று நீங்கள் என்னிடம் கூறும்படி விரும்புகிறேன். ஏன் அவ்விதமான கருத்து? நான் கிறிஸ்துவுக்காக பெற்றெடுத்த என் ஏழரை லட்சம் பிள்ளைகளை உங்களிடம் அனுப்பியிருக்கிறேன் என்று உங்கள் தலைமை அலுவலகமே ஒப்புக் கொண்டுள்ளதே. அப்படியிருக்க, நான் அசெம் பிளீஸ் ஆப் காட் சபைக்கு விரோதமாயிருக்கிறேன் என்று கூறுவது எப்படி? நான் ஏன் ஒருத்துவக்காரருக்கு விரோதமாக இருக்கப் போகிறேன்? நான் ஒருத்துவக்காரருக்கோ, அசெம்பிளீஸ் ஆப் காட் சபைக்கோ , சர்ச் ஆப் காட் சபைக்கோ விரோதமானவன் அல்ல! மனிதரைப் பிரிக்கும் ஒவ்வொரு முறைமைக்கும் நான் விரோதமானவன்! 119பாருங்கள், நான் அசெம்பிளீஸ் சபைக்கு அவர் களுடைய எண்ணிக்கையின்படியே, என் பிள்ளைகளில் ஏழரை லட்சம் பேரை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அவ்வளவு கெட்டவர்களாக இருந்தால், நான் ஏன் அதை செய்ய வேண்டும்? ஏன்? அவர்களை ஒருத்துவக்காரரிடமோ அல்லது பெந்தெகொஸ்தே விசுவாசம் கொண்டுள்ள யாரிடமோ அனுப்புவதே மிகவும் சிறந்தது என்று எண்ணுகிறேன். ஏனெனில் அவர்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டுள்ளனர், இயற்கைக்கு மேம்பட்டவைகளில் அவர்கள் விசுவாசம் கொண்டுள்ளனர், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் அவர்கள் விசுவாசம் கொண்டுள்ளனர். அதுவே சிறந்தது. அவர்கள் எல்லோரையும் என்னால் இங்கு கொண்டு வரமுடியாது; அவர்கள் உலகெங்கிலும் உள்ளனர். எனக்கு உலகம் முழுவதிலும் நண்பர்கள் உள்ளனர் - நான் கிறிஸ்துவுக்காக . பெற்றெடுத்த பிள்ளைகள். அவர்களை மிகச் சிறந்த சபைக்கு அனுப்புகிறேன்... நான் பீட அழைப்பு கொடுக்கும் போது, நான் கூறுவதைக் கேட்டிருக்கிறீர்களா? நான் கூறுவது என்னவெனில்.... அவர்களை எழுந்து நிற்கச் செய்து, அவர்களை இரட்சிப்படையச் செய்த பிறகு, நான், “உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஏதாகிலும் ஒரு நல்ல' முழு சுவிசேஷ சபைக்குச் சென்று அதை உங்கள் சபையாக்கிக் கொள்ளுங்கள்' என்று கூறுவது வழக்கம். அவ்விதம் நான் கூறுவதை உங்களில் எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? நிச்சயமாக, நிச்சயமாக நல்லது. அப்படியானால் நான் ஏன் அவர்களை அங்கு அனுப்ப வேண்டும்? என் சொந்த பிள்ளைகளை மரணத்துக்கு அனுப்ப நான் என்ன மாய்மாலக்காரனா? அது எனக்கு தூரமாயிருப்பதாக. இல்லை, ஐயா! 120உங்களால் போக முடியாவிட்டால்... உங்களால் இந்த கூடாரத்துக்கு வர முடியாவிட்டால் எங்காவது ஒரு சபையைத் தெரிந்து கொண்டு அங்கு போங்கள். அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ரொட்டியின் எந்த பாகத்தைப் பரிமாறுகிறார்களோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் அவர்களுக்கு பூண்டு (garlic)இருக்குமானால், அதை விட்டு விடுங்கள். பாருங்கள்? அது உண்மை. அவர்களைச் செய்ய வைக்க என்னால் முடியாது, ஆனால் அது தான் முற்றிலும்... நிச்சயமாக, நீங்கள் சபைக்குப் போங்கள். சபை கதவு எங்கு திறவுண்டாலும், நீங்கள் முடிந்த வரையில் அங்கு விரைந்து செல்லுங்கள். அவர்கள் விசுவாசிக்காமல் போனால், நல்லது... இப்பொழுது. நீங்கள் பங்கு கொள்ள வேண்டியதில்லை. அவர்களைச் சேராதீர்கள், அந்த சபைகளில் ஏதொன்றையும் சேர்ந்து கொள்ளாதீர்கள்; ஆனால் அவர்களிடம் செல்லுங்கள்; அவர்களிடம் ஐக்கியம் கொள்ளுங்கள். அது கர்த்தருடைய சித்தம் அல்ல என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக செய்வாரென்று அவர் கூறியுள்ளார். ஒருக்கால் இரட்சிக்கப்பட வேண்டிய ஒரு ஆத்துமா அங்கு இருக்கக் கூடும். அப்படிப் பட்டவர்களுக்கு நீங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யலாம். பாருங்கள்? அங்கு செல்லுங்கள். அப்பொழுது ஜனங்கள், “அவள் மிகவும் நல்ல கிறிஸ்தவ பெண்மணி, அவர்கள் மிகவும் ஒரு நல்ல கிறிஸ்தவ தம்பதிகள்; அவன் மிகவும் ஒரு நல்ல கிறிஸ்தவ பையன், அவள் மிகவும் நல்ல கிறிஸ்தவ பெண்” என்று சொல்ல முற்படுவார்கள். “என்னே, அவர்களுடன் சம்மந்தம் கொள்ள எனக்குப் பிரியம். அவர்களுக்கு ஏதோ ஒன்று உள்ளது போல் அவர்கள் உண்மையில் நடந்து கொள்ளுகிறார்கள். அது என்ன? என்பார்கள். அப்பொழுது நீங்கள் “இதுதான் அது” என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் உப்பாயிருங்கள், அப்பொழுது அவர்களுக்கு தாகமுண்டாகும். 121அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, பரிசுத்த ஆவி உள்ள அனைவரையும் அடையாளங்கள் தொடர வேண்டு மென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு அவ்வாறு உரைத்துள்ளார், மாற்கு 16ம் அதிகாரம். அப்படியானால், தங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றைக் கொண்டும் செய்தியை விசுவாசித்தும், இந்த அடையாளங்களைப் பெற்றிராத மக்களைக் குறித்தென்ன? அவர்கள் அவிசுவாசிகளா, அல்லது அவர்களுக்கு பரிசுத்த ஆவி தேவையா? அப்படியானால், பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக் கொள்வதென்று தயவுகூர்ந்து இன்றைக்கு எங்களுக்கு அறிவுரை கூறுங்கள். எங்கள் நாளுக்கு நீர் தேவனுடைய வாயாக இருக்கிறீர் என்று விசுவாசிக்கிறோம். உங்கள் சகோதரன். என் சகோதரனே, என்னை உங்கள் சகோதரனாக பாவிப்பதற்காக உமக்கு நன்றி. அது மிகவும் நல்ல ஒரு கேள்வி என்று நான் நினைக்கிறேன். நண்பர்களே, ஆம், இந்த விஷயத்தில் நாம் சிறிது தளர்ந்திருக்கிறோம். கூடுமானால் இதைக் குறித்து சற்று நீண்ட நேரம் பேச எனக்கு விருப்பமுண்டு. பாருங்கள்? அது தளர்ந்துள்ளது. பாருங்கள்! உங்களில் சிலர். பாருங்கள்? ஒரு அனுபவத்தை பெறாமல், நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. இப்பொழுது, நீங்கள் வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தின் உறுப்பையும் விசுவாசிப்பீர்களானால்... நீங்கள் ஒவ்வொரு எழுத்தின் உறுப்பையும் விசுவாசிப்பதாகக் கூறுகிறீர்கள். அப்படியானால் வார்த்தையானது அங்கு கிடந்து பரிசுத்த ஆவி அதை செயல்படுத்துவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது; அந்த மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க வேண்டியதாயுள்ளது. இங்கு திரியுடன் கூடிய மெழுகுவர்த்தி உள்ளது. மெழுகுவர்த்திக்கு வேண்டிய மெழுகும் அதற்கு தேவையான அனைத்தும் அதில் உள்ளது. ஆனால் நெருப்பு அதன் மேல் வைக்கப்பட்டு அது கொளுத்தப்படும் வரைக்கும், அது எந்த ஒளியையும் தராது. அந்த மெழுகுவர்த்தி எவ்வளவு முழுமையாக இருந்தாலும், அது எவ்வளவு நன்றாக எரியக் கூடியதாயிருந் தாலும், அது கொளுத்தப்பட வேண்டும், அப்பொழுது அது எரி கிறது. நீங்கள் விசுவாசித்து, பரிசுத்த ஆவி என்னவென்றும் அது கொடுக்கக் கூடிய கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம் ஆகியவைகளைக் குறித்து நீங்கள் போதிக்கப்பட்டு அறிந்திருந்த போதிலும், அக்கினி அனுபவத்துடன் பரிசுத்த ஆவி இறங்கி வந்து அந்த மெழுகுவர்த்தியை பற்ற வைக்காவிட்டால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வில்லை. பாருங்கள்? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க, அந்த அனுபவத்தைக் கொண்டவர்களாயிருக்க வேண்டும். 122நான் ஒரு தொழிற்சங்க உறுப்பினன். ஒரு கிறிஸ்தவன் அதில் சேர்ந்திருப்பது தவறா? “சத்தியம் பண்ணாதே” என்று வார்த்தை உரைக்கிறது. தொழிற்சங்கத்தின் சட்டப்பிரமாணத்தை கடைபிடிப்போமென்று நாங்கள் ஆணையிட வேண்டும். நான் கிறிஸ்தவனான முதற்கொண்டு, நான் தீவிரமாக அதில் ஈடுபடவில்லை, ஆனால் என் சந்தாவை இப்பொழுதும் செலுத்திக் கொண்டு வருகிறேன், 123யூதாஸ்காரியோத்தின் பெயர் ஆட்டுக்குட்டியான வரின் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டதா? அது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் முதற்கண் இடம் பெற்றிருந்ததா? சரி. தொழிற்சங்கத்தைக் குறித்து: உங்கள் வேலையைக் குறித்து எனக்குத் தெரியும்... உங்களுக்கு தொழிற்சங்கங்களும் மற்றவைகளும் உள்ளன. நீங்கள் வேலையில் நிலைத்திருக்க வேண்டுமானால், அதில் சேர்ந்திருக்க வேண்டும். அது முற்றிலும் உண்மை. அதை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால் கவனமாயிருங்கள் (பாருங்கள்?), ஏனெனில் இந்நாட்களில் ஒன்றில் அது தொழிலிலிருந்து மதத்துக்கு வந்துவிடும். பாருங்கள்? எல்லாமே 'யூனியன்' ஆவதற்கு அது ஒரு முன்னோடி என்பதை ஞாபகம்கொள்ளுங்கள். உங்களால் வேலை செய்ய முடியாது; நீங்கள் வேலையில் நிலைத்திருக்க அவர்கள் விடமாட்டார்கள். நீங்கள் இந்த யூனியனில் சேர்ந்திருந்தாலொழிய, நீங்கள் அவர்கள் வேலை நிறுத்தம் செய்யும்போது மட்டும் வேலை செய்பவராக (scab)ஆகி விடுவீர்கள். இப்பொழுது. இளைஞர்களே, சகோ. பிரான்ஹாம் கூறுவதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என் சொற்கள் இரும்பு பேனாவில் இரும்பு மலையின் மேல் பொறிக்கப்படட்டும். கர்த்தர் உரைக்கிறதாவது, அதே காரியம் மத விஷயத்திலும் நிகழும். நீங்கள் ஏதோ ஒரு விதமான ஸ்தாபனத்தைச் சேர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் கொள்ளவோ விற்கவோ முடியாது. எனவே மிகவும் ஜாக்கிரதையாயிருங்கள், சகோதரனே. அது தொழிலோடு மட்டும் இருக்கட்டும். அதை கவனித்து வாருங்கள். இது ஒரு எச்சரிக்கை ! 124“யூதாஸ்காரியோத்தின் பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டதா? அது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் முதற்கண் இடம் பெற்றிருந்ததா?” ஆம், அது இடம் பெற்றிருந்து, பின் கிறுக்கப்பட்டது. பாருங்கள்? ஏனெனில் மத்தேயு 10ம் அதிகாரத்தில் இயேசு யூதாஸையும் மற்றவர்களையும் அழைத்து அவர்களுக்கு அசுத்த ஆவிகளின் மேல் அதிகாரம் கொடுத்தார். அவர்கள் சென்று பிசாசுகளைத் துரத்தினார்கள். இயேசு, “சாத்தான் வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்” என்றார் (லூக் 10:18). அது சரியா? அந்த சீஷர்கள் அனைவரும் சந்தோஷத்தோடே திரும்பி வந்தனர். அவர், “பிசாசுகள் உங்களுக்குக் கீழ்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” என்றார் (லுக் 10:20). பாருங்கள்? அது உண்மை. யூதாஸ்காரியோத்தும் அவர்களுடன் கூட இருந்தான். பாருங்கள்? எனவே ஞாபகம் கொள்ளுங்கள், நியாயத்தீர்ப்பின் போது, கவனியுங்கள். நியாயாசனத்தில், “நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகம் திறக்கப்பட்டது. அதன்படியே ஒவ்வொரு மனிதனும் நியாயத்தீர்ப்படைந்தான் (தானி. 7:10; வெளி, 20:12). 125இப்பொழுது பார்த்தீர்களா, சற்று முன்பு நாம் பார்த்த கேள்வி. பாருங்கள்? நியாயாசனத்தில் இயேசு - மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்டு மகிமையில் பிரவேசித்து. கலியாணம்செய்தவளாய் பூமிக்குத் திரும்ப வந்து, ஆயிரம் வருடம் வாழ்கிறாள். ஆயிரம் வருடம் முடிவடையும் போது, சாத்தான் தன் காவலிலிருந்து கட்டவிழ்க்கப்பட்டு விடுதலையாகிறான். அவன் ஒரு தேவதூதனால் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான் - இரும்பு சங்கிலியினால் அல்ல, சூழ்நிலை என்னும் சங்கிலியினால், அவனுடைய பிரஜைகள் அனை வரும் நரகத்தில் இருந்தனர். பூமியில் உயிரோடெழுப்பப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டு இயேசுவோடு கூட இருப்பார்கள். இந்த ஆயிர வருட காலத்தில், சாத்தானால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதன் முடிவில், இரண்டாம் உயிர்த்தெழுதல்... முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தமுள்ளவனுமாயிருக்கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை “ (வெளி. 20:6). இப்பொழுது கவனியுங்கள், இந்த இரண்டாம் உயிர்த்தெழுதலில் அவர்கள் உயிரோடெழுகையில், சாத்தான் தன் காவலிலிருந்து கொஞ்சக் காலம் விடுதலையாக்கப்படுகிறான்; பிறகு நியாயசங்கம் உட்கார்ந்தது. இப்பொழுது கவனியுங்கள், இயேசு மணவாட்டியுடன் கூட, ராஜாவும் ராணியுமாய் சிங்காசனத்தில் அமருவார்கள், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன - பாவிகளின் புத்தகங்கள். ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது. அப்பொழுது ஒவ்வொருவரும் அதன்படி மணவாட்டியினால் நியாயத்தீர்ப்படைகின்றனர். “அறியீர்களா (சட்டத்திற்கு முன்பாக இந்த சிறு விவகாரங்களை கொண்டு போய்) பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?” (1 கொரி 6:2). பாருங்கள், பாருங்கள்? சரி. 126வெளிப்படுத்தின விசேஷம் 20:4ல் குறிக்கப் பட்டுள்ள கூட்டத்தினர் யாரென்று தயவுகூர்ந்து விளக்கு வீர்களா? அவர்கள் முன் காலத்தில் இருந்த மணவாட்டியின் பாகமா, அல்லது வருங் காலத்தில் உள்ளவர்களா? அவர்கள் முன்காலத்திலும் இப்பொழுதும் உள்ள மணவாட்டி முழுவதுமே - அவர்கள் மணவாட்டி முழுவதுமே, ஏனெனில் அவர்கள் ஆயிரம் வருட காலத்தில் வாழ்கின்றனர். சரி.) 127நீங்கள் தயவுகூர்ந்து (நல்லது. இதுவும் சரியாக அதே கேள்வி தான்)... வெளிப்படுத்தின விசேஷம் 20:4, இவர்கள் மிருகத்தையாவது, அதின் சொரூபத்தையாவது வணங்காமல் அவனுடைய முத்திரையைத் தரித்துக் கொள்ளாமல், இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் சிரச்சேதம் பண்ணப் பட்ட ஆத்துமாக்களா? (ஓ, அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பதை நான் காண்கிறேன். இப்பொழுது தான் இது என்னிடம் கொடுக்கப்பட்டது, என் கையில் கொடுக்கப்பட்டது).... அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளதே. துன்புறுத்தப்படுவது மணவாட்டி என்பதால் இது குழப்பமாக உள்ளது. இல்லை யென்றால், வேறு யார் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாள முடியும்? இவர்கள் 144,000 பேர்களாக இருக்கக் கூடுமா? இல்லை, இல்லை. அவர்கள் மணவாட்டியே. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், ஞாபகம் கொள்ளுங்கள், அவர்கள்... நீங்கள், “அவர்கள் இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்கள்” என்று கூறுகிறீர்கள், இப்பொழுது, நீங்கள், “இவர்கள் மிருகத்தை வணங்கவில்லை” என்று கூறுகிறீர்கள். நிச்சயமாக! நீங்கள், “மிருகம் இனியல்லவா வரப் போகிறான்” என்று கேட்கிறீர்கள். மிருகம் எப்பொழுதுமே இருந்து வருகிறான். மிருகம் தான் அவர்களை கெபியிலும் ரோமாபுரியிலிருந்த அரங்கத்திலும் சிங்கங்களுக்கு இரையாகக் கொடுத்தான். அது அந்திக்கிறிஸ்து; அங்கு மிருகம் ஒருவிதமான மதத்தை உருவாக்கினான். அது சரியாக ஏறக்குறைய ஒரு மாதிரி. ரோம சபையானது வேதத்திலிருந்து விலக்கப்பட்டது. அதன் பிறகு... அவர்கள் அதை செய்தபோது, அவர்கள் அதை ஒரு ஸ்தாபனமாகச் செய்து, ஒரு நிறுவனத்தை உண்டாக்கி, அதை உலகம் முழுவதுமுள்ள ஸ்தாபன சபையாக் கினார்கள். அதை வணங்காத அனைவரும் நிர்மூலமாக்கப்பட்டனர். பாருங்கள்? அதுதான். அவர்கள் அப்பொழுது இருந்த மணவாட்டியின் ஒரு பாகம்... இப்பொழுது சரீரமானது ஒரு மரத்தைப் போல் வளர்ந்து, தலைக்கு வந்துவிட்டது. பாருங்கள்? எல்லோருமே - துன்புறுத்தப்பட்டு இரத்த சாட்சிகளாக மரித்தவர்களும் மற்றவர்களும்... ஆனால் இயேசு நதியின் இக்கரையில் நமக்கு சமாதானத்தை அருளியிருக்கிறார், அந்த கோத்திரங்களுக்கு செய்தது போல.... அவர்கள் (பாருங்கள்?) கடந்து செல்லவில்லை. இப்பொழுது. 128அவருக்கு நான் என்ன செய்ய வேண்டும்? பண்ணையில் தந்தைக்கு தொடர்ந்து (ஓ!) உதவி செய்ய வேண்டுமா? என் ஜீவனத்துக்கு நான் என்ன செய்வேன்..? அவன் தன் பெயரைக் கையொப்பமிட்டுள்ளான். ஆம், என் சகோதரனே... அவன் பெயர் அங்கு எழுதப் பட்டுள்ளது. யாரென்று எனக்குத் தெரியவில்லை... இந்த கேள்வி, “சகோ. பிரான்ஹாமே...' என்று தொடங்கி, ”அவருக்கு நான் என்ன செய்ய வேண்டும்?“ என்று கேட்கிறது. இது ஏதோ ஒரு பையன் தன் தந்தையைக் குறித்து கேட்ட கேள்வி. பார், என் அருமை சகோதரனே, உன் தந்தையை நீ கவனித்துக் கொண்டால் பாக்கியவானாயிருப்பாய், ஏனெனில் உன்னை கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் நீ இருந்த போது, உன் தந்தை உன்னை கவனித்துக் கொண்டார். முதலாம் கற்பனை ஒரு வாக்குத்தத்தத்தைக் கொண்டுள்ளது: “பூமியில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு - கர்த்தர் நீடித்த நாட்களை உனக்குக் கொடுப் பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக”. பார்? உன்னால் முடிந்த எந்த விதத்திலாவது உன் தந்தைக்கு உதவியாயிரு. அவர் மிகச் சிறந்ததைப் பெற்றுக் கொள்கின்றாரா என்பதைப் பார்த்துக் கொள். 129காயீன் சர்ப்பத்தின் வித்து என்று நீங்கள் கூறினீர்கள். அப்படியென்றால் ஏவாள், “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என்று கூறக் காரணம் என்ன? இதற்கு பதிலளிக்க பகல் உணவு முடியும் வரைக் காத்திருப்பது நல்லது. ஆம், பகல் உணவு வரைக் காத்திருந்து பிறகு இதற்கு பதிலளிக்கிறேன். ஓ, இதை விளக்க சிறிது நேரம் எடுக்கும். சரி. 130அன்புள்ள சகோ. பிரான்ஹாமே. “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள்' என்று ஏசாயா 2:2ல் கூறப்பட்டுள்ள வசனத்தை எனக்கு விளக்குவீர்களா? ஆம், போன ஞாயிறுக்கும் முந்தின ஞாயிறு அதை விளக்கினேன். பாருங்கள்? கர்த்தருடைய ஆலயம் பர்வதங்களின்கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படும், எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள். பெரிய ... உங்களிடம் இல்லாமல் போனால்.... மணவாளன் மற்றும் மணவாட்டியின் வருங்கால இருப்பிடம் என்னும் ஒலிநாடா உங்களிடம் இருந்தால், அது இதை சரியாக விளக்குகின்றது. ஓ, என்னே! இப்பொழுது நான் முடித்து விடுவது நலம். ஏனெனில், என்னே, ஓ என்னே, சகோதரனே, இங்குள்ள கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்லி முடிக்க முடியாது. வயூ! 131சகோ. பிரான்ஹாமே... (இது என்னவென்று பார்ப்போம்) சகோ. பிரான்ஹாமே, உமது செய்தியைப் பின் பற்றுபவர்கள், நீரே இந்நாளின் மேசியா என்று பொதுவாக விசுவாசிக்கின்றனர். அது அப்படித்தானா? இல்லை, ஐயா!சகோ. பிரான்ஹாமே, எங்களுக்கு வெளிப்படையாகக் கூறும். நீர் யாரென்று உம்மைத் தெரியப்படுத்த நீர் தயங்குவதாக தோன்றுகிறது. தேவன் உமக்கு அளித்துள்ள இத்தனை மகத்தான ஊழியத்தில், நீர் வேதத்தில் எங்காவது அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டுமென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். 132இரண்டாம் கேள்வி: முதல் முறை நீர் அரிசோனாவுக்குச் சென்ற நோக்கத்தை எங்களிடம் கூறினீர். ஏனென்று எங்களிடம் கூறினீர், அது நிறைவேறினது, நீர் மறுபடியும் ஏன் அங்கு சென்றீர் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. முதலாவதாக, நான் மேசியா அல்ல! பாருங்கள்? மேசியா இயேசு கிறிஸ்துவே. ஆனால் நாம் “குட்டி மேசியாக்கள்' (Messiahottes),நாம் ஒவ்வொருவரும். மேசியா என்றால் ”அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது; எனக்குள்ளோ அவருடைய ஆவியின் ஒரு பாகமே வாசமாயுள்ளது. அதுவே உங்களுக்குள்ளும் வாசமாயுள்ளது. சில காரியங்களை அறிந்து கொள்ள, முன்கூட்டியே காண எனக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டுள்ளது. நான் இன்னும் உங்கள் சகோதரனே. பாருங்கள் நான் மேசியாஅல்ல; நான் உங்கள் சகோதரன் (பாருங்கள்?), மந்தைக்கு ஒரு மேய்ப்பன் மாத்திரமே. நான் மேசியாவென்று உங்களிடம் கூறுவேனானால், நான் ஒரு பொய்யனாயிருப்பேன். பாருங்கள்? நான் பொய்யனாயிருக்க விரும்பவில்லை. “முதல் முறை நான் ஏன் அரிசோனாவுக்குச் சென்றேன்?” அதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நான் கர்த்தருடைய நாமத்தில் அங்கு சென்றேன், ஏனெனில் ஒரு தரிசனத்தின் மூலமாக அங்கு நான் அனுப்பப்பட்டேன். நான் இரண்டாம் முறை அங்கு சென்றது ஒரு நோக்கத்துக்காகவே. அதை பற்றி ஒன்றும் கேட்காமல் தனியே விட்டு விடுங்கள். நான் எதற்காகப் போனேன் என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் என்னால் கூற இயலாது. நீங்கள் - பிசாசுக்குத் தெரியாது - என் இருதயத்திலுள்ளதை அவனால் அறிந்து கொள்ள முடியாது. அதை நான் வெளிப்படையாகக் கூறினால், அப்பொழுது அவனால் அறிந்து கொள்ள இயலும், ஆனால் என் இருதயத்தில் உள்ள வரைக்கும் அவன் அறிந்து கொள்ள மாட்டான், அவனால் அறிந்து கொள்ள இயலாது. “அது நிறைவேறும் வரைக்கும் காத்திருங்கள்” என்று கூறுவேனானால்... ஞாபகம் கொள்ளுங்கள், இந்த ஒலிநாடாவை வைத்திருங்கள்; ஒரு நோக்கத்துக்காகவே நான் அரிசோனா சென்றிருக்கிறேன். என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள் செய்ய நான் கூறுவதை மட்டும் செய்யுங்கள் (பாருங்கள்?), நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள். பாருங்கள்? ' 133சகோ.பிரான்ஹாமே, உங்களிடம் கேட்க விரும்பும் சில கேள்விகள் எனக்குண்டு. எல்லாவற்றையும் விற்க நீர் ஜனங்களுக்கு ஆலோசனை கூறினதாக ... ஜனங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்... (அதையும் நான் தனியே விட்டு விடுவது நலமாயிருக்கும். நாம் பார்ப்போம். நல்லது, முடிக்க வேண்டிய நேரம் ஏற்கனவே கடந்து விட்டது. பகல் உணவுக்குப் பிறகு இதை நாம் பார்ப்போம். இதற்கு நான் பதிலளிக்கிறேன், அல்லது என்னால் முடிந்த வரையில் இதற்கு பதிலளிக்க முயல்கிறேன். எனக்குத் தெரியாது; இது இப்பொழுது தான் என் கையில் கொடுக்கப்பட்டது. பாருங்கள்? பில்லி சில கேள்விகளை கதவண்டையில் என்னிடம் கொடுத்தான். பாருங்கள்?) ஜனங்கள் தங்கள் வீடுகள் அனைத் தையும் விற்று உம்மை அரிசோனாவுக்குப் பின் தொடரவேண்டுமென்றும், இல்லையென்றால் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் போகமாட்டார்கள் என்றும் நீர் ஆலோசனைக் கூறினதாக ஜனங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது உண்மையா? அது பொய். பாருங்கள்? உ.- ஊ!... அல்லது நாங்கள் எங்கள் வீடுகளை விற்க வேண்டுமா நீர் எப்பொழுதாவது இதைச் சொன்னீரா? 134இல்லை, ஐயா! நான் சொல்லவேயில்லை! அவ்விதம் செய்ய வேண்டாம் என்று நான் ஜனங்களுக்கு ஆலோசனை கூறினேன். ஊ - ஊ . நான் அங்கு சென்ற சமயத்தில் “ஜூனி” ஜாக்சன் கண்ட சொப்பனம் ஞாபகம் உள்ளதா? “ஜூனி” இதை சொப்பனத்தில் கண்டதாக... எத்தனை பேருக்கு அந்த சொப்பனமும் தேவன் எவ்விதம் அதன் அர்த்தத்தை உரைத்தார் என்பதும் ஞாபகமுள்ளது? அந்த பெரிய மலை, நாங்கள் அதன் மேல் நின்று கொண்டிருந்தோம், அங்கு கலைந்து போன எழுத்துக்கள் இருந்தன. அதற்கு நான் அர்த்தம் உரைக்க முயன்றேன், என்னால் முடியவில்லை. நான் - அவர்களுக்கு நான் அதன் அர்த்தத்தை உரைத்துக் கொண்டிருந்தேன். அதன் அர்த்தம் அனைத்தையும் நான் உரைத்து முடித்த பின்பு, என் கையை நீட்டி (அவருடைய சொப்பனத்தில்) ஒரு வித மான கடப்பாறையை எடுத்து மலையின் உச்சியை உடைத்து உள்ளே பார்த்தபோது, அது பனி வெண்மையாய் இருந்தது, சலவைக் கல் போல். அதில் ஒன்றும் எழுதப்படவில்லை. நான், “நீங்கள் எல்லோரும் இங்கு தங்கியிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருங்கள், நான் போகிறேன்” என்றேன். 135அப்பொழுது “ஜூனி... எல்லோரும் மேலே சென்றனர். எல்லா சகோதரர்களும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வேறொருவர்... அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள். ”நல்லது. உங்களுக்கு என்ன தெரியும்? அதில் ஒன்றுமே எழுதப்பட்டிருக்கவில்லை, அவர் வெளியே எழுதப்பட்டிருந்ததை படித்தார். இதில் ஏன் ஒன்றும் எழுதப்பட்டிருக்கவில்லை? எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை“ என்றனர். ஜூனியர் திரும்பி பார்த்த போது, நான் மேற்கே, சூரிய அஸ்தமனத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். நான் ஒரு மலையைக் கடந்து, மற்றொரு மலையைக் கடந்து, மிகவும்வேகமாக சென்று கொண்டிருந்தேனாம். பின்பு அவர்கள் திரும்பிப் பார்த்து நான் போய் விட்டதாக கண்டனர்; அவர்களிடம் நான் அங்கு தங்கியிருக்க கூறியிருந்த போதிலும், அவர்களில் ஒரு பெரிய கூட்டம் நான் சென்ற வழியை நோக்கிப் புறப்பட்டு, அவர்கள் அங்கு சென்று அதை செய்ய வேண்டுமென்று விரும்பினர். நான் அவர்களிடம் “அங்கேயே தங்கியிருங்கள், அங்கேயே தங்கியிருங்கள்; இதுவே அந்த இடம் என்று கூறியிருந்தேன். 136அதன் பிறகு, அதை நான் செய்த போது, பிறகு - நான் சரியாக சென்றேன். அதன் பிறகு சிறிது கழிந்து. கர்த்தருடைய தூதன் எனக்குப் பிரத்தியட்சமாகி, அரிசோனாவுக்குப் போ' என்றார். அந்த வெடிச் சத்தம் அங்கு உண்டானதைக் கேட்டு அங்கு சென்றேன். அது என்ன? அந்த பையன் சரியாக அப்படியே அந்த சொப்பனத்தைக் கண்டு, கர்த்தரும் சரியான ... “நான் ஏதோ ஒன்றுக்காக அங்கு செல்கிறேன்” என்று நான் கூறினதை நினைவில் கொள்ளுங்கள். அங்கு நான் சென்ற போது, அது கர்த்தருடைய பர்வதத்தின் உள்ளே முத்தரிக்கப்பட்டிருந்த ஏழு முத்திரைகளின் இரகசியமாயிருந்தது. ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு, நான் திரும்பி வந்தேன். பாருங்கள்? இல்லை, நீங்கள் அவ்விதம் செய்யக் கூடாது. நீங்கள் போக விரும்பினால், அது உங்கள் விருப்பம். ஆனால் நான் .... நீங்கள் எங்கு சென்றாலும் எனக்கு அக்கறையில்லை, ஆனால் மணவாட்டி அங்கிருந்து போகப் போகிறாள் என்று எண்ணி, அதற்காக அங்கு செல்வீர்களானால் நீங்கள் தவறு செய்கின்றீர்கள். 137“மேலும் ஜனங்கள் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ... நான் (அந்த கேள்வியை நான் பார்க்கட்டும்... அதை எங்கோ தவறாக கூறிவிட்டேன். அதை பார்க்கட்டும்)... எடுத்துக் கொள்ளப் படுதல். அது உண்மையா? நாங்கள் எங்கள் வீடுகளை விற்க வேண்டுமா, நீர் எப்பொழுதாவது இதைச் சொன்னீரா? இல்லை, நான் ஒருபோதும் கூறவில்லை. நான் கூறவில்லை... ஜனங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கியிருந்து... இயேசு வரும் வரைக்கும் தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்க நான் ஜனங்களுக்கு எப்பொழுதும் ஆலோசனை கூறினதுண்டு. நான் உங்களிடம் அநேக முறை இதை கூறினதற்கு, இந்த ஒலிநாடா ஒரு ஞாபகச் சின்னமாக இருக்கட்டும். இந்த நாள் ஒரு ஞாபகார்த்தமான நாளாயிருக்கட்டும். என் சொல் ஞாபகமூட்டுவதாயிருக்கட்டும். நான் ஒரு முறையாவது நிர்ப்பந்தம்பண்ணினதேயில்லை. நான் ஒருக்காலும் செய்யவில்லை. அவர்கள் தங்கள் சொந்த சபையை விட்டு, தங்கள் பொருட்களை விற்கும் படி நான் கூறினதேயில்லை. தேவன் அதை அறிவார். நான். ஜனங்களிடம், தேவன் அவர்களை அழைக்கும் வரைக்கும். அவர்கள் கிறிஸ்தவராக நிலைத்திருந்து, அவர்கள் உள்ள இடத்திலேயே தங்கியிருக்க நான் எப்பொழுதும் ஆலோசனை கூறி வந்திருக்கிறேன்; அது எல்லோருக்கும் தெரியும். அங்கேயே தங்கியிருங்கள்! ஆனால் இப்பொழுதோ, நான் ஜனங்களிடம் இவ்விதம் கூறுவேனானால்.... யாராகிலும் ஒருவர், ”நான் அங்கு வரவேண்டுமென்று விரும்புகிறேன். அங்கு தங்க வேண்டுமென்று...“என்கிறார். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், அதனால் பரவாயில்லை. நீங்கள் எங்கு சென்றாலும் எனக்கு அக்கறையில்லை; அது என் வேலையல்ல. ஆனால் இப்பொழுது, இவ்விதம் எண்ணுவது... பாருங்கள், அது என்ன செய்கிறது? அது ஒரு பிரத்தியேக கொள்கையை (cult)துவக்குகிறது (பாருங்கள்?), அப்பொழுது நான் தொல்லையில் அகப்பட்டுக் கொள்கிறேன். அங்கு ஒரு கூட்டத்தினர் விரைவில் தர்மத்தை நம்பியிருக்கப் போகின்றனர். அது என்னவாயிருக்கும்? “நாங்கள் மணவாட்டியின் எடுத்தக் கொள்ளப்படுதலுக்காக இங்கு வந்திருக்கிறோம்”. அதற்காகவே செய்தித்தாள்கள் காத்துக் கொண்டிருந்தன. அவர்கள் தர்மத்தை நம்பியிருக்கத் தொடங்கி தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையை அடைவதை வெளியிட அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப் பொழுது அவர்கள் என்ன செய்யப் போகின்றனர். 138“நல்லது. நாங்கள் சகோ. பிரான்ஹாமை பின் தொடர்ந்து இங்கு வந்தோம். அவ்விதம் கருதப்பட்டது. அதைக் குறித்து நான் மிகவும் குற்றமற்றவனாயிருக்கிறேன். அருமையான, இனிமையான ஜனங்கள், அவர்களை நான் நேசிக்கிறேன் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர் - அவர்கள் தவறு செய்த போதிலும். அவர்கள் ... ஏன், அது அவர்கள். அவர்களை எப்படியும் நான் நேசிக்கிறேன். பாருங்கள்? அவர்களை நான் நேசிக்கிறேன்; அவர்கள் என் பிள்ளைகள்; ஆனால் அவர்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை - அவர்களிடம் நான் சொல்ல முயல்வதை. நான் கர்த்தருடைய நாமத்தில் ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்று விரும்புகி றேன். அவர்களோ அதை நான் செய்ய விடுவதில்லை. பாருங்கள்? அவர்கள் என் சார்பில் இருப்பதற்கு பதிலாக உண்மையில் எனக்கு விரோதமாக சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் செய்வது... எப்பொழுதாகிலும் ஒரு செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டுமென்றால், இது இந்த கூடாரத்தில் தான் பிரசங்கிக்கப் படும்; நான் எதைச் செய்ய வேண்டுமென்றாலும், நான் இங்கு வந்து, உங்களுக்கு முதலில் இந்த கூடாரத்திலிருந்து எடுத்துரைப்பேன் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? அது என் வாக்குறுதி! 139மேலும், நான் கேள்விப்பட்டது, அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ அப்பத்தைக் குறித்து நீர் எழுதின ஒரு புத்தகத்தின் பேரில் ஒரு போதகம் பரவியுள்ளது... அதாவது, நாங்கள் எல்லோரும் உம்முடன் இருக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் நாங்கள் எடுத்தக் கொள்ளப்படுதலை இழந்து விடுவோம் என்றும் அவர்கள் அதை வியாக்கியானம் செய்கின்றனர். நல்லது, அந்த புத்தகம் தவறு. ஜீவ அப்பம் என்னும் தலைப்பு கொண்ட அந்த புத்தகம், அது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது. அது உலகம் முழுவதும் உள்ள சபையை போஷிப்பதற்காக, எல்லாவிடங்களிலும் பாருங்கள், தொல்லை என்னவெனில். ... இப்பொழுது, இப்பொழுது, ஜனங்களாகிய நீங்கள் திடமாயிருக்கிறீர்கள், ஆனால் இது நடக்க வேண்டும், அது ஒவ்வொரு கூட்டத்தையும் தொடர்கின்றது. அண்மையில் நான் மார்டின் லூத்தரைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன், நம்மை அதனுடன் ஒப்பிடுவதற்காக அல்ல; அதைப் போன்று இதுவும் ஒரு சீர்த்திருத்தமே. கேள்வி என்னவெனில்... வரலாற்று ஆசிரியர்கள், “மார்டின் லூத்தர் கத்தோலிக்க சபையை எதிர்த்துப் போராடி வெற்றி காண முடிந்தது ஆச்சரியமான ஒரு செயல்தான். ஆனால் அதைக் காட்டிலும் மிகவும் ஆச்சரியமான செயல். அவருடைய கூட்டங்களைத் தொடர்ந்த மூட பக்தி வைராக்கியத்துக்கு (fanaticism)மேல் தன் தலையை உயர்த்தி, எப்படி வார்த்தைக்கும் அவருடைய அழைப்புக்கும் அவரால் உண்மையாயிருக்க முடிந்தது என்பதே” என்று எழுதியுள்ளனர். பாருங்கள்? இல்லை, ஐயா! உங்கள் சொந்த கருத்தை... நான். கூறினதில் எந்த மனிதனாவது ஸ்திரீயாவது எதையாகிலும் நுழைத்தால், அதை விசுவாசிக்காதீர்கள். அவர்களுக்குத் தெரிவதில்லை... அவர்கள் சொல்கின்றனர்... அவர்கள்... 140மேலும் விற்று அரிசோனாவிலுள்ள சியரா விஸ்டாவில் குடியேறின குடும்பங்கள், “சிறு பெத்லகேம்” என்னும் தலைப்பு கொண்ட உம்முடைய ஒலிநாடாவிலிருந்து, எடுத்துக் கொள்ளப்படுதல் அரிசோனாவில் நிகழும் என்று ஊகித்துக் கொண்டனராம். அங்கு செல்ல அவர்களுக்கு நீர் ஆலோசனை கூறினீரா? நிச்சயமாக நான் அவ்விதம் செய்யவில்லை. அவர்கள் அதைக் குறித்து எனக்கு கடிதம் எழுதினபோது - கனெக்டிகட்டி லுள்ள யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒரு இடம் - “நீங்கள் உங்கள் வாழ்நாளிலேயே மிகவும் மோசமான தீர்மானத்தை செய்திருக்கிறீர்கள். அப்படி ஒன்றும் செய்து விடாதீர்கள்” என்று அவர்களுக்கு பதில் கடிதம் எழுதினேன். பாருங்கள், உங்களால் முடியாது. நல்லது, இதை ஞாபகம் கொள்ளுங்கள், ஜனங்களாகிய நீங்கள்... இப்பொழுது, அவ்விதம் செய்ய நான் ஜனங்களிடம் கூறுகிறதில்லை என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்; அவ்விதம் செய்ய வேண்டாமென்று அவர்களிடம் நான் கூறுகிறேன். ஆனால் பாருங்கள், அது கூட்டத்தை தொடர வேண்டியதாயுள்ளது. ஜனங்கள் என்னை மேசியா என்று ஏன் அழைக்கின்றனர்? ஜனங்கள் ஏன்... அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு... அங்குள்ள ஒருவர் அன்றொரு நாள் என்னிடம் ஒன்றைக் காண்பித்தார், அவரிடம் ஒரு சிறு காரியம் இருந்தது, அவர் தொடர்ந்து செய்து கொண்டு, எல்லோரும் என் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று ஜனங்களிடம் கூறினார். அது என்னை அந்திக்கிறிஸ்துவாகச் செய்து விடும்! இத்தகைய காரியங்களை நான் ஆதரிப்பவன் அல்ல, ஜனங்களாகிய நீங்கள் அனைவரும் அதை அறிந்திருக்கிறீர்கள். ஆனால் பாருங்கள், இது வரவேண்டியதாயுள்ளது. அது செய்தி உண்மையென்பதை அடையாளம் காட்டுகிறது. அவர் கள் கிறிஸ் துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியான யோவானிடம் வந்து, “நீர் மேசியாதானே” என்று கேட்கவில்லையா? அவன், “நான் மேசியா அல்ல. அவருடைய பாதரட்சைகளை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரன் அல்ல. அவரை நோக்கிப்பார்ப்பதற்கும் கூட நான் பாத்திரன் அல்ல” என்றான். பாருங்கள்? ஆனால் அவன், “எனக்கு பின் ஒருவர் வருகிறார்...” என்றான். 141சகோ. பிரான்ஹாமே, நாங்கள் ஏதாவதொன்றை இழந்து விட்டிருக்கிறோமா? நீர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று நம்புவதாக இந்த ஜனங்கள் உரிமை கோருகின்றனர்' (ஆனால் அவர்கள் அவ்விதம் செய்வதில்லை! அவர்கள் நம்புவதில்லை. அவர்களுடைய செய்கைகள் அவர்கள் நம்புவதில்லை என்பதைக் காண்பிக்கிறது). இந்தக் காரியங்களைக் குறித்து ஆமாம். அல்லது இல்லை என்னும் உம்முடைய நேரடியான விடையை நான் அறிய விரும்புகிறேன் (நீர் பெற்றுக் கொள்வீர்! சரி). அது உண்மையானால், நாங்கள் ஆயத்தமாகி அங்குள்ள மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்த கேள்விகளுக்கான உம்முடைய விடைகளுக்காக உமக்கு நன்றி, கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால், இந்த ஞாயிறன்று இந்த விடைகளைக் கேட்பதற்காக காத்திருப்பேன். ஓ, என்னே! நல்லது, சகோதரனே, சகோதரியே, நான் அவ்விதம் கூறினதில்லை, கூறுவதுமில்லை என்பது புரிந்து கொள்ளப் பட்டு விட்டதென்று நம்புகிறேன். இப்பொழுது, ஜனங்கள்... நீங்கள் அரிசோனாவுக்கு வந்து வாழ விரும்பினால், ஓ, நிச்சயமாக..... ஒருக்கால் இந்த முதலாம் 'செமஸ்டரின் போது, நான் அரிசோனாவில் தங்கியிருப்பேன். நான் இங்கு திரும்பி வர வேண்டும். நான் .... அங்கு தங்க எனக்கு விருப்பம்; பிள்ளைகளின் உடல் நலம் தேறி யுள்ளது, மற்றெல்லாமே. அங்கு சிறிது காலம் தங்க விரும்புகிறேன். அங்கு தங்குவதற்கு எனக்கு ஒரு நோக்கமுண்டு. ஞாபகம் கொள்ளுங்கள், இது ஒலிநாடாவில் பதிவாகிறது. கர்த்தர் உரைக்கிறதாவது. இப்பொழுது நான் செய்து கொண்டிருப்பதைச் செய்வதற்கு எனக்கு ஒரு நோக்கம் உண்டு; எனக்கு நோக்கமுண்டு என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஆனால் அது என்னவென்று உங்களிடம் நான் கூறமாட்டேன். வீடுகளை விற்க வேண்டாம் என்று நான் ஏன் கூறுகிறேன் என்றால், நீங்கள் அங்கு வந்து ஏதோ ஒன்றை இழந்து விட்டதாகக் காண்பீர்கள், நீங்கள் கயிற்றின் சிறிய முனைக்கு வந்து விடுவீர்கள். அப்படிச் செய்யாதீர்கள். நான் சிறிது காலம் மட்டுமே அரிசோனாவில் தங்கியிருப்பேன்; நிரந்தரமாக அல்ல. ஏன்? இப்பொழுது என்னால் அங்கிருந்து வெளியே வர இயலாது. 142அங்கு ஜனங்கள் தங்கி தர்மத்தில் வாழ நான் செய்து விட்டால், என்ன நடக்கும்? அதைதான் ஸ்தாபனங்களும் மற்றவைகளும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. “ஆஹா, அவருடைய நோக்கம் என்னவென்று நான் உங்களிடம் சொன்னேன் அல்லவா, மற்றுமொரு தீர்க்கதரிசிகளின் கூட்டம், அப்படி ஏதோ ஒன்று என் பார்கள். பாருங்கள்? அதை தான் அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஜனங்களுக்கு நான உத்திரவாதி; நான் செய்யச் சொன்னதை அவர்கள் செய்யவில்லை என்றாலும். அவர்கள் அதற்கு மாறாகச் செய்து விட்டனர். நீங்கள், ”அவர்கள் எப்படியோ போகட்டும், நீர் செய்ய வேண்டாம் என்று சொன்னதை அவர்கள் செய்து விட்டனர்“எனலாம். ஆனால் என் இருதயம் அதற்கு இடம் கொடுக்காது. நான் இன்னும் அவர்களை பின்தொடர விரும்புகிறேன். அவர்கள் என் பிள்ளைகள்; அவர்களை நான் திரும்பப் பெற்றுக் கொள்ளும்போது, அவர்களை ஒருவேளை நான் சிறிது அடிக்கக்கூடும். ஆனால் நான் நிச்சயம் அவர்களை பின் தொடரப் போகிறேன். நான் எப்படி அதை அங்கு செய்யப் போகிறேன். அவர்கள், “வார்த்தையைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்” என்றனர். அவர்களை அனுப்புவதற்கு எனக்கு சபை கிடையாது. அவர்கள் அங்கு செல்லும் சபைகள், மற்ற இடங்களில் நீங்கள் விட்டுப் பிரிந்த சபைகளைப் போலவே இருக்கும். சொல்லப்போனால் இன்னும் மோசமாக இருக்க வகையுண்டு. பாருங்கள்? அவர்கள் எப்படியும் அந்த சபைகளுக்கு செல்ல மாட்டார்கள். அவர்களுக்குப் பிரசங்கிக்க எனக்கும் ஒரு சபையும் இல்லை. அதுவுமல்லாமல் என் பிள்ளைகளை நான் அரிசோனாவுக்கு வெளியே கொண்டு செல்ல தகப்பன் என்னும் முறையில் நான் கடமைபட்டிருக்கிறேன். 143உங்களை ஒன்று கேட்கிறேன். சென்ற வருடம் இந்த சபையில் முப்பதுக்கும் அதிகமான செய்திகளை பிரசங்கித்தேன். இந்த ஐந்து ஆண்டுகளில், வெளியே இருந்தபோது. நான் அரிசோனாவுக்கு சென்ற முதற்கொண்டு, மற்ற நேரங்களில், நான் ஐந்து ஆண்டுகளில் பிரசங்கித்ததைக் காட்டிலும், ஒரு ஆண்டில் இந்த சபையில் அதிகம் பிரசங்கித்திருக்கிறேன் (நிச்சயமாக!). இதுவேஎன் வீடு; இதுவே என் தலைமை அலுவலகம்; இங்குதான் எங்கள் அமைப்பு உள்ளது. என்ன நடந்த போதிலும், அதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், ஒன்றை கிரகித்துக் கொள்வீர்கள். என்ன நடந்தபோதிலும், அதுதான் எங்கள் தலைமை அலுவலகம், இந்த இடம் தான். அதை மனதில் கொண்டவர்களாய், என்றாகிலும் ஒரு நாள் இந்த ஒலிநாடாவைத் திரும்பவும் கேட்டு, நான் தீர்க்கதரிசனம் உரைத்ததை நீங்கள் கேட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சரி, அதை ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் விட்டு வந்து, சபைக்கு வருவீர்களானால், அதை கண்டு பிடிக்க அங்கு செல்லாதீர்கள், ஏனெனில் அங்கு நான் இருக்க மாட்டேன். எனக்குப் போக இடமில்லை; எனக்குப் பிரசங்கம் செய்ய இடமில்லை. அவர்களுடைய சபைகளில் நான் பிரசங்கிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. எனக்கு எந்த ஒரு இடமுமில்லை. அந்த மனிதனிடம் நான் வாக்குக்கொடுத்தேன், அங்கு நான் வரும்போது... இங்கு வந்து நான் ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டி, அவர்களுடைய சபைகளை காலியாக்கி விடுவேன் என்று அவர்கள் அனைவரும் பயந்தனர். ஆனால் அதுவல்ல என் வாழ்க்கையின் நோக்கம். பாருங்கள்? நான் ஜனங்கள் இரட்சிப்படைய உதவி செய்கிறேன். அதன் பிறகு அது அவர்களைப் பொறுத்தது. அந்த சமாரியன் அந்த மனிதனை சத்திரத்துக்கு கொண்டு சென்றது போல். அதன் பிறகு அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ளட்டும். நான் சபைகளை உடைப்பதற்காக இங்கில்லை. கிறிஸ்துவுக்காக மனம் மாறினவர்களைப் பெறவே நான் இங்குள்ளேன். பாருங்கள்? அவர்கள் தங்கள் சொந்த வழியில் வியாக்கியானம் செய்து நான் கூறுவதை கூறாதபோது, அது ஜனங்களிடையே என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளும்படி செய்கிறது. பாருங்கள்? 144அந்த தரிசனம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எத்தனை பேருக்கு ஜூனியர் ஜாக்சனின் சொப்பனம் ஞாபகமுள்ளது? நீங்கள் எல்லோரும் அதை அப்படியே பின்பற்றுங்கள். அது என்ன? நான் அங்கு போயிருக்கும்போது, இங்கு தங்கியிருங்கள்! பாருங்கள்? அர்த்தத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பி வந்தேன். என் இருதயத்தில் ஏதோ ஒன்றுள்ளது. அதைச் செய்ய நான் கர்த்தரால் எச்சரிக்கப்பட்டிருக்கிறேன். அது இந்த சபையைக் குறித்து, இந்த கூடாரத்தைக் குறித்து செய்யப்பட வேண்டிய ஒன்று; நான் அங்கு அல்லது வேறெங்காவது சிறிது காலத்துக்குச்செல்ல வேண்டும். அது ஒரு நோக்கத்துக்காக, பெரிய நோக்கத்துக்காக. அந்த நோக்கத்தைக் குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாது, நான் சுற்றித் திரிந்து கொண்டிருக்கவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் அவ்விதம் நடந்து கொள்வதாக எண்ண வேண்டாம். நான் கர்த்தருடைய சித்தத்தின்படி செயல்படுகிறேன். எனக்குத் தெரிந்த வரைக்கும் நான் செயல்பட்டு வருகிறேன். பாருங்கள்? ஆகையால் தான், நான் சொல்வதை நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நான் செய்யச் சொல்வதை செய்யுங்கள் (பாருங்கள்?), நான் சொல்வதற்கு செவிகொடுத்து, நான் உங்கள் சகோதரன் என்று நம்புங்கள். நான் தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், என் சொற்களுக்கு தவறான அர்த்தம் உரைக்காதீர்கள்! ஏதாவதொன்று இருக்குமானால், எனக்கு உதவி செய்வாராக, நீங்கள் அறிய வேண்டியது ஏதாவதொன்றை தேவன் என்னிடம் கூறுவாரானால், அதை நான் அப்படியே உங்களுக்கு எடுத்துரைப்பேன் என்பதை தேவன் அறிவார். அதனுடன் எதையும் கூட்டாதீர்கள், அதிலிருந்து எதையும் எடுத்துப் போடாதீர்கள். நான் சொன்னவிதமாகவே அதை செய்யுங்கள் (பாருங்கள்?), ஏனெனில் என் இருதயத்திலுள்ளதை எனக்குத் தெரிந்த வரைக்கும் சிறப்பாக உங்களிடம் கூறுகிறேன். பாருங்கள்? அதை நீங்கள் விசுவாசியுங்கள். அதைக் குறித்து நான் என்ன கூறுகிறேனோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டு. அதை அப்படியே போக விட்டு விடுங்கள். சரி. என் பிள்ளைகள் ஏதாவது உண்ண, அவர்களை நான் இங்கே கொண்டு வரவேண்டும். அவர்கள் அந்த வனாந்தரத்தில் பட்டினி கிடக்கின்றனர். 145அன்றொரு நாள் ஒரு போதகர் என்னிடம் வந்து, “சகோ. பிரான்ஹாமே, இதுவரை கண்டிராத மிகவும் மோசமான கொள்கையை (cult)அவர்கள் உடையவர்களாயிருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலையிலும் வெளியே செல்கின்றனர். அவர்கள் வேலைக்குப் போகமாட்டோம் என்கின்றனர், ஏனெனில் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு மிகவும் அருகாமையில் உள்ளனராம்' என்றார். அவர்கள் வேலைக்கு செல்வதில்லை. நல்லது, நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவேயில்லை என்பதை அது காண்பிக்கிறது. பாருங்கள்? உண்மை (இந்த ஒலிநாடா அங்கும் செல்கின்றது). எனவே, ஆம். ஐயா! நீங்கள் எறும்பிடமிருந்துஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று வேதம் உரைக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் வேலை செய்யாவிட்டால், சாப்பிடக் கூடாது. எனவே அது முற்றிலும் உண்மை . அதை போன்ற கேள்விகளில் ஒன்றை இப்பொழுது கையிலெடுத்தேன். 146இது... (எனக்குத் தெரியவில்லை. பாருங்கள், இது வித்தியாசமாயுள்ளது - இது மற்ற கேள்விகளைக் காட்டிலும் வித்தியாசமான கையெழுத்தைக் கொண்டுள்ளது. உங்களுக்கு காண்பிக்க இது போன்ற எட்டு அல்லது பத்து கேள்விகள் உள்ளன என்று எண்ணுகிறேன். பாருங்கள்?) மிகவும் பரிபூரணமான சபை அரிசோனாவிலுள்ள டூசானில் இருக்கப் போகின்றதா? நான் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறேன். நாங்கள் டூசானுக்கு வந்துவிடலாமா? இது மற்ற கையெழுத்து அல்லவே அல்ல. அது... நான். ... இங்கு பாருங்கள். இந்த ஒரு விஷயத்தின் பேரில் எத்தனை கேள்விகள் உள்ளதென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன். எனக்குத் தெரியவில்லை... என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையென்று நினைக்கிறேன். இங்கு... இவைகளில் சிலவற்றில், “உங்களுக்கு நான் தெரியப்படுத்துகிறேன்” என்று எழுதி வைத்திருக்கிறேன். 147சகோ. பிரான்ஹாமே, தயவுகூர்ந்து... (இதைப் பார்ப்போம்) நாம் வாழும் இந்நேரத்துக்கான தீர்க்கதரிசி நீர் என்பதை அறிந்துள்ளோம் (அதுதான் அது). தேவனுடைய மக்கள் உம்முடன் அரிசோனாவுக்கு ஓடிப்போக வேண்டிய நேரம் ஒன்று வருமா? அப்படியானால், அந்த நேரம் வரும்போது எங்களுக்குத் தெரிவிப்பீரா? நிச்சயமாகத் தெரிவிப்பேன், உங்களுக்குத் தெரிவிப்பேன். இப்பொழுது பாருங்கள், இங்கு இரண்டு வெவ்வேறு கையெழுத்துக்கள் உள்ளன, வித்தியாசமான இருவர். பாருங்கள்? இது ஒரு கையெழுத்து, இது வேறொரு கையெழுத்து. பாருங்கள்? இதுவே சபையின் மனதில் உள்ள ஒன்றாக இருக்க வேண்டும். பாருங்கள்? நல்லது, இதை நாம் தீர்த்து விடுவோம். என்னால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம்... நாம் பார்ப்போம். 148சகோ.பிரான்ஹாமே... (இது வேறொன்று. முற்றிலும் வித்தியாசப்பட்டது). சகோ. பிரான்ஹாமே, “மணவாட்டி மற்றும் மணவாளனின் வருங்கால இருப்பிடம் என்னும் செய்தியில் அந்த இடம் கூடாரத்திலிருந்து ஆயிரத்தைந்நூறு மைல்கள் இருக்குமென்றும், அது ஒவ்வொரு பக்கமும் எழுநூறு மைல் கொண்ட சதுரமாயிருக்கும் என்றும் நீர் சொன்னதாக சிலர் புரிந்து கொண்டுள்ளனர் (வேறு விதமாகக் கூறினால், நடுவில் உள்ள கூடாரம், ஒவ்வொரு பக்கமும் எழு நூறு மைல்கள் இருக்கும் - ஆயிரத்தந்நூறு மைல்கள். ஓ!). அது உண்மையா? நான் இந்த இடத்துக்கு வெளியே வாழ்கிறேன். அதற்குள்ளே நான் வந்து விட வேண்டும்.) இல்லை, தேனே, அதை செய்யாதே. பார்! ஜனங்கள் தவறாகப் புரிந்து கொள்வது எவ்வளவு எளிதாயுள்ளது! அந்த செய்தியை நான் பிரசங்கித்த போது, எத்தனை பேர் இங்கிருந்தீர்கள்? நான் என்ன சொன்னேன் என்றால், நான் புதிய எருசலேமை அளந்து கொண்டிருந்த போது, அது ஆயிரத்தைந்நூறு மைல் சதுரமாக இருக்கும் என்றேன். அது ஏறக்குறைய மேய்ன்னிலிருந்து பிளாரிடா வரைக்கும். பசிபிக்குக்குமேற்கே அறநூறு மைல் பரப்பாயிருக்கும் என்றும், அந்த பரப்பு ஆயிரத்தைந்நூறு மைல் சதுரமாயிருக்கும் என்றேன். என் கருத்தின்படி அது ஆபிரகாம் அந்த நகரத்தை தேடிக்கொண்டிருந்த அந்த இடத்தில் இருக்குமென்றும், அப்பொழுது சமுத்திரம் இனி இராதென்றும் சொன்னேன். சமுத்திரம் இனி காணப்படாது என்று வேதம் கூறுகிறது. பூமியின் முக்கால் பாகம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சமுத்திரம் இனி இராது; எனவே அது அப்படிப்பட்ட ஓரிடத்தில் இருக்கும் மிகப் பெரிய நகரமாயிராது. அது அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறதும், தேவன் பிறந்த இடமுமாகிய பெத்லகேமில் இருக்கும் என்று நம்புகிறேன். அது பாலஸ்தீனாவில் இருக்குமென்றும், அது அங்கு பூமியிலிருந்து எழும்பி அந்த மலையாயிருக்குமென்றும் நம்புகிறேன். 149ஆனால், அருமை நண்பரே, அதற்கும் இந்த கூடாரத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. பார்? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு. பவுல், பரிசுத்தவான்கள் அனைவரும் உலகம் முழுவதும் மரித்தனர். அவர்கள் சுட்டெரிக்கப்பட்டனர். தண்ணீரில் முழுக்கி கொல்லப்பட்டனர், சிங்கங்களுக்கு இரையாயினர், எல்லா விதத்திலும் மரித்தனர். அவர்கள் உலகத்தின் ஒவ்வொரு முட்டு முனையிலிருந்தும் எழும்பி வருவார்கள். நான் அங்கிருப்பேன் என்று நம்புகிறேன். நான் எங்கிருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது எங்கிருந்தாலும், நான் அந்த கூட்டத்தில் இருப்பேனென்றால், அங்கு நான் இருப்பதற்கு எதுவும் என்னை தடை செய்ய முடியாது. பாருங்கள்? நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நான் இருக்க வேண்டிய ஒரே இடம் கிறிஸ்துவுக்குள். கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை தேவன் அவரோடு கூட கொண்டு வருவார். அது எங்கிருந்தாலும் எனக்கு கவலையில்லை, அவர் கொண்டு வருவார். என்னை இயேசுவுக்குள் அடக்கம் செய்யுங்கள். 150முன்காலத்து தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். அவர்கள் முதலாம் உயிர்த்தெழுதல் - முதற்பலன்கள் - பாலஸ்தீனாவில் இருக்கும் என்று அறிந்திருந்தனர். ஆபிரகாம் ஒரு இடத்தை வாங்கி அங்கு சாராளை அடக்கம் செய்தான். அவன் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு அவனுடைய பெற்றோர் பக்கத்தில் அடக்கம் செய்யப் பட்டான். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு எகிப்தில் மரித்தான், ஆனால் பாலஸ்தீனாவுக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டான் . யோசேப்பும் அங்கு மரித்தான். அவர்கள் அவனுடைய எலும்புகளை இங்கு கொண்டு வந்தனர். ஏனெனில் அவன் ... யோசேப்பு யாக்கோபை எகிப்தில் அடக்கம் பண்ணக் கூடாதென்றும் அவனை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவனை ஆணையிடுவித்தான். யோசேப்பு, “என்றாவது ஒரு நாள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை சந்திப்பார். அப்பொழுது என் எலும்புகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு என் தகப்பனுடன் அடக்கம் பண்ணப் படட்டும்” என்றான். அவர்கள் அவ்விதமே செய்தனர். ஏனெனில், அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியால், உயிர்த்தெழுதலின் முதற்பலன்கள் பாலஸ்தீனாவில் இருக்கும் என்பதை அறிந்திருந்தனர். 151இப்பொழுது, வேதம் என்ன கூறுகிறதென்றால்... நீங்கள் என்னைத் தீர்க்கதரிசி என்று அழைப்பீர்களானால் - நான் அவ்விதம் என்னைக் கூறிக் கொள்ளவில்லை - ஆனால் நீங்கள் என்னைத் தீர்க்கதரிசியென்று அழைப்பீர்களானால், ஞாபகம் கொள்ளுங்கள், இதை உங்களுக்கு தீர்க்கதரிசியின் நாமத்தினால் உரைக்கிறேன் (பாருங்கள்?). உயிர்த்தெழுதலும் எடுத்துக்கொள்ளப்படுதலும் பொதுவாக உலகம் முழுவதிலும் நிகழுமென்று தீர்க்கதரிசியின்நாமத்தினால் உரைக்கிறேன். நீங்கள் எங்கே இருந்தபோதிலும், அந்த நேரம் வரும்போது, அவரைச் சந்திக்க நீங்கள் எடுத்துக் கொள்ளப் படுவீர்கள். அவ்வளவுதான்! நீங்கள் எங்கிருந்தபோதிலும், உங்களை எதுவும் நிறுத்த முடியாது. நான் அவர்களில் ஒருவனாக அங்கிருப்பேன் என்று நம்புகிறேன், அது போன்று நீங்கள் ஒவ்வொருவரும் அங்கிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நமக்கு இன்னும் ஒரு கேள்விக்கு நேரமுண்டா? இப்பொழுது ஏறக்குறைய 1.00 மணி ஆகப் போகிறது. 152அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, என் மனைவியும் நானும் பிரிந்து விட்டோம். அவள் என் மேல் விவாகரத்து வழக்கு தொடுத்திருக்கிறாள். அவள் கிறிஸ்தவள் அல்ல. நான் செய்தியை விசுவாசிக்கிறேன், அவள் இரட்சிக்கப்பட்டு விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் (அது இனிமையானது அல்லவா? அது தான் உண்மையான கிறிஸ்தவ மனப்பான்மை. பாருங்கள்?) நான் என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு இரண்டு பையன்கள் இருக்கின்றனர் (பெயரைக் கையொப்ப மிட்டுள்ளார்). சகோதரனே, பாருங்கள், இதை உங்களிடம் கூற விரும்புகிறேன், அவள் உங்கள் மேல் விவாகரத்து வழக்கு தொடுத்தால் அது பிசாசு. பாருங்கள்? அவள் அதை செய்யக் கூடாது. ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருந்து, அந்த ஸ்திரீக்கு இடறலாக நீங்கள் இவ்வுலகில் ஒன்றுமே செய்யவில்லை என்றால், அதைச் செய்வது சாத்தானே. உங்களைப் பிரிக்க அவன் முயற்சி செய்கிறான். இப்பொழுது, அவள் தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களில் ஒருத்தியாக இருந்தால், அவள் அவரிடம் வருவாள். இல்லையென்றால், அவளைக் குறித்து கவலைப்படுவதனால் பிரயோஜன மில்லை. அது அப்படி செய்யுமானால்... நீங்கள் கவலைப்பட்டால் அது உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கும், அதைதான் சாத்தான் செய்ய விரும்புகிறான். அவன் உங்களுக்கு எதிராக கிரியை செய்கிறான் என்று நான் அறிகிறேன். எனவே நீங்கள் எல்லாவற்றையும் தேவனிடத்தில் ஒப்புவித்து, உங்களால் முடிந்த வரைக்கும் சந்தோஷமாக தேவனுக்கு சேவை செய்து கொண்டிருங்கள். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” (யோவான் 6:37). முழங்கால்படியிடுங்கள். நான் உங்களுடன் ஜெபிப்பேன், எதையும்செய்வேன். இந்த விஷயத்துக்காக நானும் ஜெபிக்கிறேன். நீங்கள். “தேவனாகிய கர்த்தாவே, அவளை நான் நேசிக்கிறேன்; அவள் என் பிள்ளைகளுக்குத் தாய்' (அவள் அந்த பிள்ளைகளுக்கு தாயாக இருப்பாளானால்). ”கர்த்தாவே, எல்லாவற்றையும் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்; அதை நீர் அறிந்திருக்கிறீர்; ஆனால் இதற்கு மேல் என்னால் செல்ல முடியவில்லை. அவள் எப்படியும் என்னை விவாகரத்து செய்து விடப்போகிறாள். நான் ஒன்றுமே செய்யவில்லை; நான் எதையாகிலும் செய்திருந்தால், அதை எனக்கு வெளிப்படுத்தும். நான் சென்று அதை சரி செய்து கொள்கிறேன், நான் எதையும் செய்யத் தயார்' என்று ஜெபித்து, அதை கர்த்தரிடம் ஒப்புவித்து, அதை தனியே விட்டு விடுங்கள். ஒன்றுமே நடக்காதது போல் நீங்கள் தொடர்ந்து வாழுங்கள். தேவன் மற்றவைகளைப் பார்த்துக் கொள்வார். - 153சகோ. பிரான்ஹாமே, ஜனங்கள் அரிசோனாவில் குடியேற வேண்டுமாமே (ஓ; மறுபடியும்!), இதெல்லாம் என்ன? இதை விளக்குங்கள். இது வேறு விதமான கையெழுத்து. பாருங்கள், பாருங்கள்? நல்லது, நாம் ஏற்கனவே அது என்னவென்று விளக்கி விட்டோம். 154சகோ. பிரான்ஹாமே, ஆதி அப்போஸ்தல திருச்சபையைப் போல, மணவாட்டி உபத்திரவத்தின் வழியாக கடந்து செல்வாளா? இல்லை, சில நிமிடங்களுக்கு முன்பு அதை விளக்கி னேன். இல்லை, அடுத்தபடியாக எடுத்துக்கொள்ளப்படுதல். ஞாபகம் கொள்ளுங்கள். நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இருக்கிறோம், அதன் எல்லையில். இஸ்ரவேல் அணிவகுத்து சென்றது உங்களுக்கு விளங்குகிறதா? ( 155எந்தவிதமான குடும்பக் கட்டுப்பாட்டு முறையையும் கையாளுவது நியாயமா? இதை நான் பிற்பகல் வரை விட்டு வைப்பது நல்லது (பாருங்கள்?), ஏனெனில் அது. அதைக் குறித்து நான் சிறிது பேச விரும்புகிறேன். 156சகோ. பிரான்ஹாமே, நான்... (கூடுமானால் இன்னும் மூன்று நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்வேன். சிறியது ஏதாவதொன்றை நான் எடுத்துக் கொள்கிறேன்). என்னை இயேசுவுக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுக்க இயலவில்லை: எனக்குப் பொல்லாத ஆவி உள்ளதா? மீதியான நேரத்தை நான் இதன் பேரில் செலவிட விரும்புகிறேன். உங்களை இயேசுவுக்கு முழுவதுமாக ஒப்பு கொடுக்க இயலவில்லை. அவர்கள்... பாருங்கள், அது ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை; அது யாரென்று என்னால் கூற முடியவில்லை. தேவன் அதை அறிவார். உங்களை இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க முடியவில்லை. ஏன்? என்ன விஷயம்? நீ ஸ்திரீயானால், மனைவியாயிருக்க உன்னை முழுவதும் உன் கணவருக்கு சமர்ப்பிக்க வேண்டுமல்லவா? உனக்கு விவாகமான போது நீ நற்பண்பு கொண்ட இளம்பெண்ணாய் இருந்தாய். நீ நற்பண்பு கொண்டவளாயிருந்து, அவ்விதம் நிலைத்திருக்க உன் வாழ்க்கையில் போராடி வந்தாய். பிறகு ஒரு நாள் நீ நேசிக்கும் ஒரு மனிதனைக் கண்டுபிடித்தாய். நீ முழுவதும் அவருடையவளாகி விட்டாய். நீ வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் எதிராக போராடி, நற்பண்பு கொண்டவளாய் சுத்தமாக வாழ முயன்றாயே, அது அனைத்தையும் ஒரு மனிதனிடம் சமர்ப்பித்து விடுகிறாய். அது சரியா? உன்னை முழுவதுமாக அவருடைய கரங்களில் ஒப்படைத்து. நீ அவருடையவளாகி விடுகிறாய். நீ நாணயத்திலும் ஒழுக்கத்திலும் உறுதியாக நின்றிருந்த இவ்வனைத்தையும் ஒரு மனிதனிடம் கொடுத்து விடுகிறாய். அதையே நீ இயேசு கிறிஸ்துவுக்கு செய்யக்கூடாதா என்ன? அந்த விதமாக உன்னை சமர்ப்பித்து விடு - உனக்குள்ள எல்லாவற்றையும், என் சிந்தையை, என் எண்ணங்களை நிச்சயமாக. நீ பொல்லாத ஆவியால் பீடிக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால், அந்த விதமான எண்ணங்களினால் அந்த பொல்லாத ஆவி உன்னை அபிஷேகித்து, நீ தேவனுக்கு உன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுக்க முடியாது என்று நினைக்கும்படி செய்கிறது. அப்பொழுது... உனக்கு ஒன்றை நான் காண்பிக்கட்டும். நீ ஏன் உன்னை அவருக்கு ஒப்புக் கொடுக்க விரும்புகிறாய்? ஏனெனில் நீ ஒப்புக்கொடுக்க வேண்டும் மென்று ஏதோ ஒன்று உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறது. நீ ஒப்புக்கொடுக்க வேண்டுமென்பதற்கு அது ஒரு நல்ல அடையாளம். 157இப்பொழுது, நீ செய்ய வேண்டியதெல்லாம் சகோ தரனே, சகோதரியே (ஒருக்கால் வாலிபமாக அல்லது வயோதிபமாக இருக்கலாம்), நீ கூறியிருக்கிறாய். முழுவதுமாக ஒப்புக் கொடுக்க இயலவில்லை என்று. உன்னைச் சமர்ப்பித்து, “கர்த்தாவே, என் சிந்தனையையும், எனக்குள்ள எல்லாவற்றையும் உமக்குக் கொடுக்க விரும்புகிறேன். என் ஜீவியத்தை, சேவிக்கும் ஜீவியமாக் கொடுக்கிறேன். கர்த்தாவே, என்னை எடுத்து, நான் உள்ளவாறே என்னை உபயோகிப்பீராக” என்று சொல். அது மிகவும் எளிதான காரியம். சபை இதை உணருவது நலம். இந்த கூடாரத்திலுள்ள வர்கள் இந்தக் கேள்விகளினால் பயனடைகிறீர்கள் என்று நம்புகிறேன். இவைகள் உங்களுக்குப் பிடிக்கிறதா? சரி. அது சிறிது உதவியாயிருக்கும். இப்பொழுது பாருங்கள், சபையோர் இதை செய்ய லாமா அதை செய்யலாமா என்று கேட்கும் பட்சத்தில் (பாருங்கள்?) என்னால் முடிந்த வரைக்கும் அவைகளுக்குப் பதிலளிக்க நான் பிரயாசப்படுகிறேன். உங்களுக்கு நான் தவறான ஆலோசனை அளித்திருந்தால், அவ்விதம் செய்ய வேண்டுமென்று என் இருதயத்தில் நான் எண்ணவில்லை. என் சொந்த கருத்துக்களை நான் ஆதரிக்க - அது தவறென்றும் அறிந்தும் கூட - உங்களுக்கு நான் எடுத்துரைத்திருந்தால், நான் மிகவும் மோசமான மாய்மாலக்காரனாயிருப்பேன். அது உண்மை . நான் தவறாயிருந்தால், என் இருதயத்திலுள்ள எல்லாவற்றைக் கொண்டும் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க அவ்விதம் செய்தேன் என்பதை தேவன் அறிவார். 158இந்த ஒலிநாடா செல்லவிருக்கும் தேசத்திலுள்ள போதகர்களே, உங்களைப் புண்படுத்துவதற்காக இவைகளை நான் கூறவில்லை. உங்களை நான் நேசிப்பதால் இவைகளைக் கூறினேன். பாருங்கள்? உண்மையாக, என் இருதயப்பூர்வமாக .... அது.... இப்பொழுது, உங்களுக்குத் தெரியாத ஒன்று எனக்குத் தெரியும் என்று காண்பிக்க நான் முயலவில்லை. அதுவல்ல என் நோக்கம், சகோதரனே. உங்களை நான் நேசிக்கிறேன் என்பதனால் தான் இவைகளைச் செய்கிறேன். நீங்களும் என்னை நேசிக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது நாம் இருக்கின்ற இந்த கூடாரத்துக்கு அருகிலுள்ள இந்த நதியில், இந்த ஒஹையோ நதியில், நான் ஒருபழைய படகில் செல்கிறேன் என்றும், அதில் வெள்ளப்பெருக்கு உள்ளதென்றும், எனக்கு கீழே நீர்வீழ்ச்சி உள்ளதென்றும் வைத்துக் கொள்வோம். இந்தப் படகு அந்த நீர்வீழ்ச்சியில் செல்ல முடி யாதென்று உங்களுக்குத் தெரியும். அதனால் செல்லவே முடியாது. நான் தலையை பின்னால் சாய்த்துக் கொண்டு, பாடிக் கொண்டு, இளைப்பாறிக் கொண்டு, மெதுவாக அந்த நீர் வீழ்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறேன். அந்த இடத்தை அடைந்தவுடனே, படகு சேதமடைந்து விடுமென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்னை நேசிப்பீர்களானால், நீங்கள் கூச்சலிடுவீர்கள் அல்லது ஒரு படகில் குதித்து, வேகமாக என்னை அடைந்து, என் தலையை ஏதாவ தொன்றைக் கொண்டு அடித்து, அதிலிருந்து என்னைக் காப்பாற்று வீர்கள். “சகோ, பிரான்ஹாமே, உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்ன? நீர்வீழ்ச்சி அங்கு உள்ளது” என்பீர்கள். அப்பொழுது நான், “ஓ, வாயை மூடுங்கள்! என்னை விட்டு விடுங்கள்” என்பேனானால்; நீங்கள் என்னை அப்பொழுதும் நேசிப்பதால், என்னைக் காப்பாற்ற உலகிலுள்ள எதையும் நீங்கள் செய்வீர்கள்; என்னை நீங்கள் பிடித்துக் கொள்வீர்கள்; நீங்கள் படகை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதையும் செய்து, என்னை அதி லிருந்து வெளியே தூக்கிக் காப்பாற்றுவீர்கள். ஏனெனில் நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள். என்ன நடக்கப் போகிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 159சகோதரனே, ஸ்தாபனத்துக்கு அதுதான் நடக்கப் போகிறதென்பதை நான் அறிந்திருக்கிறேன். அவள் அந்த பேரலையிலிருந்து தப்ப முடியாது. பாருங்கள்? நீங்கள் நேராக உலக சபை களின் ஆலோசனை சங்கத்துக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது இப்பொழுது நாங்கள் உள்ளதுபோல அதை விட்டு வெளி வர வேண்டும். எனவே நீங்கள் இவ்விரண்டில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்... நான் படகை உடைக்க விரும்புகிறேன், நான் எதையும் செய்ய விரும்புகிறேன் - உங்களைப் புண்படுத்த அல்ல, சகோதரனே, அதை செய்யாதீர்கள், நீங்கள் செய்வது தவறென்று உங்களைத் தட்டியெழுப்பி உணர்த்த. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் குறித்து உலகிலுள்ள எந்த மனிதனும் வேதவாயிலாக அது தவறென்று குற்றப்படுத்த முடியாது. எந்தமனிதனுமே அதை குற்றப்படுத்த முடியாது. வேதவசனம் எதுவுமே... ஜனங்களே, சகோதரரே, வேதத்தை ஆராய்ந்து, புதிய ஏற்பாட்டின் காலத்தில் ஒருவராவது இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயன்றி, வேறெந்த வகையிலாவது ஞானஸ்நானம் பெற்றதாக எனக்குக் காண்பியுங்கள். (பழைய ஏற்பாட்டின் காலத்தில் அவர்கள் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, புதிய ஏற்பாட்டின் காலத்தில்தான்). அல்லது வரலாற்று நூல்களைத் தேடிப் பார்த்து. கடைசி அப்போஸ்தலனுடைய மரணத்துக்குப் பிறகு நூறு ஆண்டுகள் வரைக்கும் அவர்கள் எந்த விதமான ஞானஸ்நானம் கொடுத்து வந்தனர் என்பதைக் கண்டறியுங்கள்... கத்தோலிக்க சபைதான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் தொடங்கினது. அவர்களுடைய பிரமாண புத்தகம் அவ்விதம் செய்யக் கூறுகிறது. 160இங்கு புனித இருதய ஆலயத்திலுள்ள குருவானவர் என்னைப் பேட்டி கண்டபோது அவர் அதைதான் கூறினார். இந்த ப்ரேஸியர் பெண்ணுக்கு எந்த விதத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று பேராயர் அறிய விரும்புவதாக அவர் கேட்டபோது, நான் அவரிடம் கூறினேன். அவர், கத்தோலிக்க சபை முன்காலத்தில் அவ்விதம் ஞானஸ்நானம் கொடுத்து வந்தது என்று கூறினார். அவர், “இந்த வாக்குமூலத்தின் பேரில் சத்தியம் பண்ணுவீர்களா? என்று கேட்டார். “நான் சத்தியம் பண்ணுவதில்லை” என்றேன். அவர், “பேராயர் நீங்கள் சத்தியம் பண்ணவேண்டும் என்கிறார்” என்றார். நான், “பேராயர் என் வார்த்தையை நம்பினால் நம்பட்டும், நம்பாவிட்டால் போகட்டும். சத்தியம் பண்ணக்கூடாது என்று வேதம் உரைக்கிறது” என்றேன். அவர், “நல்லது. உ...”என்றார். நான், “அவளுக்கு நான் கிறிஸ்தவ தண்ணீர் ஞானஸ்நானத்தைக் கொடுத்தேன். அவளை நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்பிரிங் தெருவின் கீழே தண்ணீரில் முழுக்கினேன் ” என்றேன். குருவானவர் அதை எழுதிக் கொண்டு, அந்த விதமாகத்தான் கத்தோலிக்க சபை முன்பு ஞானஸ்நானம் கொடுத்தது என்றார். “எப்பொழுது?” என்று கேட்டேன். “அப்போஸ்தலர்களின் நாட்களில்” என்றார். “அவர்களை கத்தோலிக்கர் என்றா அழைக்கிறீர்?” என்றேன். “நிச்சயமாக, அவர்கள் கத்தோலிக்கரே” என்றார். அப்படியானால் உம்மை விட நான் மேலான கத்தோலிக்கன். அவர்களுடைய உபதேசத்தை நான் பின்பற்றுகிறேன்' என்றேன். அது உண்மை . பாருங்கள், பாருங்கள்? அவர்கள் அவ்விதம் உரிமை கோருகின்றனர், ஆனால் அது அப்படியல்ல. கத்தோலிக்க சபை ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் கான்ஸ்டன்டைன் அரசனின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. அப்பொழுது சபையும் நாடும் ஒன்றாக இணைந்தன. நாடு சபைக்கு சொத்துக்களையும் மற்றவைகளையும் கொடுத்தது; அவர்கள் உண்மையில் ஆயிரம் வருட அரசாட்சியின் காலத்தில் இருப்பதாக எண்ணினர். அது சாத்தானின் ஆயிர வருட காலம். அது முற்றிலும் உண்மை . அதை நம்பாதீர்கள். ஆம், ஐயா! 161இப்பொழுது, ஆனால்... அவர்களிடையே சமரசம் ஏற்பட்ட போது. அஞ்ஞான விக்கிரகங்களை அவர்கள் வைத்துக் கொள்வதற்கு பதிலாக, அவர்கள் வீனஸ் சிலையை எடுத்துப் போட்டு, மரியாளின் சிலையையும், ஜூபிடர் சிலையை எடுத்துப்போட்டு, பவுல் அல்லது பேதுருவின் சிலையையும் அவைகளுக்குப் பதிலாக வைத்துக் கொண்டனர். ரோமாபுரியிலுள்ள அந்த வாடிகனில், இப்பொழுது பத்தொன்பது அடி உயரமுள்ள பேதுருவின் சிலை உள்ளது. அவர்கள் அதை முத்தமிட்டு, மூன்று கால்விரல்களை அந்த சிலையிலிருந்து எடுத்துவிட்டதாகக் கூறுகின்றனர். பாருங்கள்? எல்லாமே... கீழே சென்றோம். ஒரு நாள் காலை நானும் பில்லியும் அங்குள்ள ஒரு ஆலயத்துக்குச் சென்றோம். நாங்கள் அடித்தளத்துக்குச் சென்றோம். அங்கு அவர்கள் சாமியார்களை (monks)புதைத்து அவர்களுடைய சரீரங்கள் மண்ணில் அழுகும்படி விட்டு விடுகின்றனர். அவர்கள் அந்த எலும்புகளை எடுத்து விளக்கு அமைப்புகளை உண்டாக்குகின்றனர். அந்த கையெலும்பு இப்படி தொங்கிக் கொண்டிருக்கிறது. மண்டை ஓடுகளும் கூட. ஜனங்கள் அங்கு வந்து, மரித்தோரின் மண்டை ஓடுகளின் மூலம் ஆசிர்வாதம் பெற எண்ணி, அவைகளைத் தேய்த்து வெண்மையாக்கியுள்ளனர்.அது ஒரு வகையில் மரித்தோரின் ஆவியுடன் தொடர்பு கொள்ளுதல் (spiritualism):பாருங்கள்? 162அது அங்குதான் - ரோமாபுரியில் - தொடங்கினது. அங்குதான் மிருகத்தின் சிங்காசனம் உள்ளது. அதிலிருந்து தான் தாய் வேசி தோன்றினாள். அவளுடைய குமாரத்திகளும் அவளைப் போலவே வேசிகளே. ஏனெனில் அவள் உலகம் முழுவதற்கும் உக்கிர கோபமாகிய மதுவை - அவளுடைய சாட்சியைக் குடிக்கக் கொடுக்கிறாள். அது பூமியின் கசப்புடன் கலந்துள்ளது. அவளுக்கு ஒரு சாட்சி உள்ளது. அவள், “நான் கன்னிகையாக - இல்லை, நான் விதவையாக உட்கார்ந்திருக்கிறேன், எனக்கு ஒரு குறைவுமில்லை” என்கிறாள். அவள் பரிதபிக்கப்படத்தக்கவளும், நிர்ப்பாக்கிய முள்ளவளும், குருடாயும், தரித்திரமாயும் இருப்பதை அறியாமல் இருக்கிறாள். அதுதான். அது கத்தோலிக்க சபைக்கு மட்டுமின்றி ஒவ்வொரு பிராடெஸ்டெண்டு ஸ்தாபனத்துக்கும் பொருந்தும். ஆனால் இந்த குழப்பம் அனைத்தின் மத்தியிலும் தேவனாகிய கர்த்தரை தங்கள் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் சிந்தையோடும் அன்புகூரும் விலையேறப்பெற்ற ஜனங்கள் உள்ளனர். அவர்கள் சரியென்று நினைக்கின்றனர். அவர்கள் செய்வது சரியென்று நினைக்கின்றனர். தேவனே உன்னத நியாயாதிபதியாயிருப்பார். 163என்னைப் பொறுத்தவரையில், கத்தோலிக்க சபை கூறுவது போல், தேவன் உலகத்தை சபையைக் கொண்டு நியாயந் தீர்ப்பாரானால்! என்னை பேட்டி கண்ட மனிதனிடம் நான் கேட்டேன், . அவர், “தேவன் உலகத்தை சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பார்” என்றார். நான், “எந்த சபையைக் கொண்டு?” என்று கேட்டேன். அவர், “கத்தோலிக்க சபையைக் கொண்டு' என்றார். நான், “எந்த. கத்தோலிக்க சபையைக் கொண்டு? அவர்கள் ஒருவரோடொருவர் வேறுபாடு கொண்டுள்ளனரே” என்றேன். எந்த சபையைக் கொண்டு? கிரேக்க வைதீக சபையைக் கொண்டா, அல்லது ரோம சபையைக் கொண்டா? எந்த சபையைக் கொண்டு அவர் நியாயந்தீர்க்கப் போகிறார்? அவர் பிராடெஸ்டெண்டு சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரானால், அது எந்த பிராடெஸ் டெண்டு சபை? மெலோடிஸ்டா, பாப்டிஸ்டா, லுத்தரனா, பெந்தெ கொஸ்தேயினரா? அவர் உலகத்தை இயேசு கிறிஸ்துவைக் கொண்டுநியாயந்தீர்ப்பார் என்று. வேதம் உரைக்கிறது, இயேசு கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். எனவே என்னைப் பொறுத்த வரையில் அவர் உலகத்தை தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்ப் பார். அது உண்மை . அவருடைய நியாயத்தீர்ப்புகள் இப்பொழுது பூமியில் உள்ளதென்று நான் நம்புகிறேன். இந்த அவிசுவாசம் கொண்ட உலகத்தின் மேல் ஊற்றப்படவிருக்கும் தேவனுடைய கோபாக்கினையினின்று தப்பித்துக் கொள்ள நம்முடைய முழு இருதயத்தோடும் அவரைத் தேடுவோமாக. அதிலிருந்து தப்ப ஒரு வழியும் இல்லை. 164இவ்வுலகத்துக்கு இரட்சிப்பு இனி வரவே வராது. அவர்கள் கிருபைக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையே உள்ள கோட்டை தாண்டி விட்டனர். அது... நீங்கள் அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒரு ஆபிரகாம்லிங்கனை வைக்கலாம், இருப்பினும் இந்த 'ரிக்கிகளையும் 'எல்விஸ்'களையும் தேவனிடம் திருப்ப முடியாது. நீங்கள் செய்தித்தாளை பார்த்தால் (அது என்னிடம் உள்ளது. நீங்கள் இன்றிரவு அதைக் காண விரும்பினால், அதை பிற்பகல் கொண்டு வருகிறேன்), ஒரு பஸ்டபிடேரியன் சபையில் (நீங்கள் அதை செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள்) ராக் அண்டு ரோல் இசையோடு அவர்கள் இராப்போஜனத்துக்கு செல்கின் றனராம். போதகர் அங்கு நின்று கொண்டு இசைக்கேற்ப இப்படி கைகொட்டுகிறாராம். அவர்கள் சிலுவையில் அறைதல் போன்ற வைகளை ராக் அண்டு ரோலாக செய்து காட்டுகின்றனராம். இது பிரஸ்பிடேரியன் சபையில் நடக்கிறது. இந்த கீழ்த்தரமான, கூச்சலிடுகின்ற, அசுத்தமான, 'பீட்டல்ஸ்' (Beatles)என்று அழைக்கப்படுகின்றவர். அவர்கள் மனிதரை விட கீழ்த்தரமாகி வண்டுகளாகி (beetles)விட்டனர். ஒரு வாரத்துக்கு முன்பு அவர்கள் செயின்ட் லூயியில் ஒரு லட்சம் டாலர்கள் ஒப்பந்தத்தை வேண்டாமென்று தள்ளி விட்டனர். அத்துடன் அவர்கள் நிறுத்திவிடவில்லை. அவர்கள் இங்கு வந்திருக்கின்றனர் - ஒரு கூட்டம் ஆங்கிலேய துரோகிகள் தங்கள் தலை மயிரை வளர்த்து கண்களின் மேல் விட்டுக் கொண்டுள்ளனர். இப்பொழுது அவர்களுக்கு சொந்தமான மார்க்கம் ஒன்றை தொடங்கவிருக்கின்றனர். அதை நீங்கள் 'லுக்' (Look)பத்திரிகயில் கண்டிருப்பீர்கள். பாருங்கள்? 165ஓ, இவ்வுலகம் எவ்வளவாய் கறைபட்டுள்ளது. அதற்கு எந்த நம்பிக்கையும் கிடையவே கிடையாது; அவர்கள் விவேகத்தையும் பொதுவான அறிவையும் பிரிக்கும் கோட்டை கடந்து விட்டனர். மனிதனால் நிதானித்துப் பார்க்க முடியவில்லை. நமக்கு முன்பிருந்த மனிதர்களைப் போல இப்பொழுது நமக்கில்லை. பாட்ரிக் ஹென்றி எங்கே? ஆபிரகாம் லிங்கன் எங்கே? அவர்கள் தங்கள் உறுதிப்பாட்டில் திடமாயிருந்தனர். மனிதருக்கு முன்பாக உடைகளைக் களைந்து நிர்வாணமாக அவர்களுக்கு முன் காட்சியளிக்கும் இந்த பைத்தியம் பிடித்த பெண்களை எழுந்து அடக்க முடியும் ஆண்கள் இன்றைக்கு எங்கே? ஏதாவதொரு பையன் அவர்களில் ஒருத்தியை அவமதித்தால் அவனை சிறைச்சாலையில் போடுகிறார்கள். உங்கள் விவேகம் எங்கே? சாதாரண அறிவு என்றால் என்ன? அவள் அவ்விதம் நிர்வாணமாயிருந்தால், அவளை ஒரு நாய் போல் போகவிட்டு விடுகிறீர்கள். ஆம், ஐயா! அவளுக்கு சாதாரண ஒழுக்கம் கூட இல்லையே. அதை நிறுத்த நாட்டின் சட்டங்கள் எங்கே? 166295, இங்கே கென்டக்கியிலுள்ள லூயிவில்லில், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஸ்திரீ தன் பெயர் செய்தித்தாளில் வரவேண்டுமெனும் நோக்கத்துடன் ஒரு ப்ளாஸ்டிக் 'பிக்கினியை' (bikini)உடுத்துக் கொண்டு, ப்ரவுன் ஹோட்டலிலிருந்து வெளியே நடந்து வந்தாள், ஒரு போலீஸ்காரன் அவளை நிறுத்த முயன்றான், அவளோ நிற்காமல் அவனைப் பார்த்து சிரித்தாள். அவளை நிறுத்த அவன் ஒரு துப்பாக்கியை அவளை நோக்கி நீட்டி, அவளைக் காருக்குள் தள்ளி, ஒழுக்கங்கெட்ட விதத்தில் உடுத்தியிருந்ததற் காக, அவளை காவல் நிலையத்தில் சந்திக்கும்படி செய்தான். அவள் போய் சந்தித்து .... அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? போலீஸ்காரனை வேலையை விட்டு நீக்கினார்கள். அழுகிப்போன இந்த தேசத்துக்கு தேவன் உதவி புரிவாராக. நீங்கள் தவறு செய்யாமல் மீள முடியாது. நாம் ஒருக் கால் மீளாமல் இருக்கக் கூடும், ஆனால் நம்மால் மேலே ஏறிச் செல்ல முடியும். நாம் தலைவணங்குவோம். 167கர்த்தராகிய இயேசுவே, அந்த மகத்தான மேய்ப்பர் வந்து இதிலிருந்து எங்களைக் கொண்டு செல்லட்டும், கர்த்தாவே. நாங்கள் அவருக்காக காத்திருக்கிறோம். அந்த நேரத்துக்காக நாங்கள் விழித்திருக்கிறோம். உலகம் இவ்வளவு இழிவான நிலையில் உள்ளதை நாங்கள் காணும்போது, அது அவ்விதம் இருக்கும் என்று நீர் உரைத்துள்ளதை நினைவுகூருகிறோம். அந்த நேரம் வரும் என்று உம்முடைய மகத்தான தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளனர். நாங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறோம், கர்த்தாவே; நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். இப்பொழுது, தேவனே, இந்த வார்த்தையை எங்களுக்கு வியாக்கியானம் செய்ய, தீர்க்கதரிசிகளை எங்களுக்குத் தரவேண்டும் மென்று ஜெபிக்கிறோம். அப்பொழுது நாங்கள் அது சரியா தவறாவென்று அறிந்து கொள்வோம். கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவதை நாங்கள் காண்கிறோம். அவர்கள் வனாந்தரங்களில், எல்லா விதமான வனாந்தரங்களிலும், எல்லாவிதமான இரகசிய அறை வீடுகளிலும்; எல்லாவிதமான தெய்வீக பிதாக்கள் எல்லாவிடங்களிலும் உள்ளனர். இந்த ஏழை கறுப்பு நிற சகோதரர்களையும் சகோ தரிகளையும் இப்பொழுது அங்கு காண்கையில்; அவர்கள் ஒருமைப் பாடு (integration)வேண்டும் என்றனர். அவர்களுக்கு அது கிடைத்தவுடனே... அது உண்மை ; அது அவர்களுக்கு கிடைக்க வேண்டும்; அவர்கள் சகோதரரும் சகோதரிகளுமாவர். இப்பொழுது, அவர்களுக்கு அது கிடைத்துவிட்ட பிறகு, அவர்கள் முன்னைவிட மோசமாகி விட்டனர். அது கம்யூனிஸ்டுகளால் ஊக்கு விக்கப்பட்டது என்பதை அது காண்பிக்கிறது. ஓ, தேவனே, அந்த ஏழை மனிதர்களால் அதை காண முடியவில்லையா? அது மாத்திரம் செய்யப்பட்டால்... நல்லது, அது செய்யப்பட வேண்டும், கர்த்தாவே. 168வாரும், அதுதான் எங்களுக்கு வேண்டும். பிதாவே, நீர் வருவீராக. நாங்கள் காத்திருக்கிறோம். வாரும், கர்த்தாவே. எங்களை உமது கரங்களில் அணைத்துக் கொள்ளும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். இந்த உலகத்தில் நியாயம் என்பதே இல்லை. ஒன்று மற்றொன்றுக்கு விரோதமாக இழுக்கிறது, இருப்பினும் அது பூச்சிகளால் அரிக்கப்பட்டு சாரமில்லாததாய் இருக்கிறது. சரீரம் முழுவதுமே நொதிக்கிற இரணமாய் உள்ளது என்று நீர் கூறியிருக்கிறீர். உண்மையாகவே, ஒவ்வொரு போஜன பீடமும் வாந்தியினால் நிறைந்திருக்கிறது. நீர், “யாருக்கு உபதேசத்தை உணர்த்துவேன்? யாருக்கு அந்நாளில் அறிவை உணர்த்துவேன்?” என்று கேட்பீர். போஜன பீடம் முழுவதும் வாந்தியினால் நிறைந்திருக்கிறது, அதை நாங்கள் காண்கிறோம், கர்த்தாவே. அந்த நேரம் இங் குள்ளதைக் காண்கிறோம். தயவுகூர்ந்து எங்களுக்கு உதவி செய்வீராக. அன்புள்ள தேவனே, ஜனங்கள் அரிசோனாவுக்கு வரு வதைக் குறித்து அநேக கேள்விகள் இங்கிருந்தன. ஓ, அன்புள்ள தேவனே, அந்த அருமையான, விலையேறப்பெற்ற ஜனங்கள். மற்ற விடங்களில் அவர்கள் இந்த ஒலிநாடாவைக் கேட்பார்கள். அவர்கள் எங்கு வாழவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிட நான் சர்வாதிகாரியல்ல என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக. அவர்கள் அதை தெளிவாக புரிந்து கொள்ளட்டும். அவர்கள் அந்த தேசத்தை நேசிக்கின்றனர் என்றால், நானும் கூட நேசிக்கிறேன், அவர்கள் அங்கேயே இருக்கட்டும், பிதாவே. ஆனால் எடுத்துக்கொள்ளப்படுதல் அங்குதான் நிகழ வேண்டுமென்றும், அவர்கள் என்னுடன் கூட இருக்க வேண்டும் என்றும் அவர்கள் போதிக்கும்போது! நான் தகுதியற்ற, அசுத்தமான பாவி, தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டவன் - அப்படிப்பட்ட என்னுடன் கூட இருக்க வேண்டுமாம். கர்த்தாவே, நான் பவுலுடன் கூட இருக்க விரும்புகிறேன், அவன் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வான் என்று எனக்குத் தெரியும். மற்றும் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருடன். அவர்கள் பாலஸ்தீனாவில் எங்கோ அடக்கம் பண்ணப்பட்டுள்ளனர். என் பெயரை உலகத்தோற்ற முதல் அந்த புத்தகத்தில் நீர் எழுதியிருப்பீரானால், நான் அவர்களுடன் செல்வேன் என்று அறிந்திருக்கிறேன். தேவனே, இவர்கள் ஒவ்வொருவரும் அங்கிருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இவர்களையெல்லாம் நான் ஓரிடத்தில் கூட்டிச் சேர்க்க எனக்குதவி செய்யும், அங்கு அவர்கள். மகத்தான போதகர்களாகிய சகோ. நெவில், சகோ. காப்ஸ் மற்றும் இங்குள்ள சகோதரர்களாகிய “ஜூனி”, சகோ. ரட்டல், ஓ, ஜே. டி., சகோ. காலின்ஸ், சகோ. பீலர் மற்றும் சகோ. பாமர் ஆகியோரின் செய்திகளை கேட்க வேண்டுமென்று விரும்புகின்றனர். தேவனே, இதை இவர்களுக்கு அருளுவீராக. அவர்கள் உண்மையில் செய்தியைக் கேட்கும் இந்த இடத்துக்கு வருவார்களாக - அவர்கள் அதைக் கேட்க விரும்பினால், அந்த வனாந்தரத்துக்கு அவர்கள் ஓடிப்போக வேண்டாம். அவர்கள் செய்யக் கூடாது என்று வேதம் கூறியுள்ளதை அவர்கள் அப்படியேசெய்ய முயல்கின்றனர். “அதோ வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், நம்பாதீர்கள். இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள் . என்னால் முடிந்த வரைக்கும் அவர்களை எச்சரிக்க முயல்கிறேன், ஆனால் இவை யெல்லாம் அந்த நேரம் அருகாமையிலுள்ளது என்பதை காண்பிக்கிறது. 169நான் இரக்கத்துக்காக ஜெபிக்கிறேன், கர்த்தாவே. என்மேல் இரங்கும்; எனக்குதவி செய்யும்படி ஜெபிக்கிறேன். என் ஜீவனை முத்தரிக்க... இங்கு நான் செய்த வேலை அனைத்தும், ஏதோ ஒரு மதவெறி கொண்டவன் ஒரு கூட்டத்தை அல்லது ஒரு கொள்கையினரை (cult)எங்காவது ஒரு வனாந்தரத்துக்கு கொண்டு செல்லும்படி செய்து விடுமோ என்று பயப்படுகிறேன். என் பெயர் அவ்விதம் கெட்டுப் போக விடாதேயும். என்னால் முடிந்த வரையில் நான் உத்தமமாய் இருந்து வந்திருக்கிறேன். தேவனே, அது நடக்க விடாதேயும். எனக்கு எந்த விதத்திலாவது உதவி செய்யும். எனக்கு . என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் உம் பேரில் சார்ந்திருக்கிறேன், எனக்கு உதவி செய்யும். நீர் என்ன சொன்னாலும் நான் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன். நான் உம்முடைய ஊழியக்காரன், இவர்கள் உம்முடைய பிள்ளைகள். கர்த்தாவே, இந்த... இந்த ஜனங்களில் பெரும்பாலோர், நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது பேர், கர்த்தாவே, உண்மையில் திடமானவர்கள். அவர்கள் விசுவாசிக்கின்றனர்; அவர்கள் அறிந்திருக்கின்றனர்; அவர்கள் புரிந்து கொள்கின்றனர். அது நானல்ல என்று அவர்களுக்குத் தெரியும்; ஆனால் ஒவ்வொரு எழுப்புதலையும் இக்காரியங்கள் தொடரவேண்டிய தாயுள்ளது என்பதை நான் அறிகிறேன், இது அதற்கு விலக்கு அல்ல. எனவே எங்களுக்கு இப்பொழுது உதவி செய்ய வேண்டு மென்று ஜெபிக்கிறேன், நாங்கள் சிறிது பகல் உணவு அருந்த இன்று செல்லும்போது, எங்களுக்கு உதவி செய்வீராக. நாங்கள் ஒருமித்து ஐக்கியம் கொள்வதை ஆசீர்வதிப்பீராக. பிற்பகலில் நேரத்தோடு எங்களை மறுபடியும் இங்கு கூட்டிச் சேரும். அநேகர் இப்பொழுது தங்கள் வீட்டுக்கு போகவேண்டும், கர்த்தாவே, அவர்களுக்கு உதவி செய்யும்படி ஜெபிக்கிறேன். அவர்களுடைய மற்ற கேள்விகளுக்கு அளிக்கப்படுகின்ற பதில்களைக் கேட்க அவர்கள் எப்படியாகிலும் அந்த ஒலிநாடாவைப் பெற்றுக் கொள்வார்களாக. ஒருக்கால்அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படாமல் இருக்கலாம். அவர்களுக்கு உதவு செய்யுமாறு ஜெபிக்கிறேன், கர்த்தாவே. இந்த கேள்விகளுக்கு இன்றிரவு நான் வேகமாக பதிலளிக்கவும், என்னால் முடிந்தவரை அவை ஒவ்வொன்றையும் எடுத்து பதிலளிக்க எனக்கு உதவி செய்வீராக. நாங்கள் மறுபடியும் பிற்பகல் இங்கு சந்திக்கும் வரையில், எங்களை ஆசீர்வதிப்பீராக. இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 170எனக்கு முன்பாக இது எப்பொழுதும் இருப்பதற்காக “இந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில், கிறிஸ்து எனக்கு முன்னால் இருக்கிறார்” என்று நான் எழுதி வைத்திருக்கிறேன். என் இருதயத்திலிருந்து இதை கூறினேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு உதவி செய்ய எல்லாமே என் இருதயத்திலிருந்து எழுகிறது. அவர்களில் சிலர் தங்கள் பார்சல்களைப் பெற்றுக் கொள்ள இங்கு வரக்கூடும். 171அன்புள்ள தேவனே, இங்கு உறுமால்கள், பார்சல்கள் கிடக்கின்றன. இது வியாதிப்பட்டோரிடமும் அவதியுறுவோரிடமும் செல்கின்றது. வார்த்தையை எழுதியவரும் அதன் மகத்தான வியாக்கியானியுமான பரிசுத்த ஆவியானவர் தாமே, ஆராதனையின் இந்த பாகத்தின் போது இப்பொழுது அருகில் வந்து, இந்த துணிகளை ஆசீர்வதிப்பாராக. கர்த்தாவே, என்னைக் குறித்து நான் சிந்திக்கையில், அநேகருக்கு மரணத்துக்கும் ஜீவனுக்கும் இடையே நிற்கின்ற இந்த உறுமால்களின் குறுக்கே என் அசுத்தமான சரீரத்தை வைக்க நான் எம்மாத்திரம்? ஓ. தேவனே, எனக்கு நடுக்கம் உண்டாகிறது. ஆனால் அதே நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கையில்... நீர் என்னைக் காண்பதில்லை, என் சத்தத்தை மட்டுமே கேட்கிறீர். அது கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் மூலம் அங்கு வருகிறது. அவருக்கு நீர் உத்தரவு அருளினது போலவே எனக்கும்அருளுவீர் என்று விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவர் எனக்கு முன்பாக சென்று உன்னதமானவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவருடைய இரத்தம் பாவநிவிர்த்திக்காக அங்கு கிடக்கின்றது. அந்த இரத்தத்தால் நான் மூடப்பட்டிருக்கிறேன். அவர்களை நீர் சுகமாக்குவீர் என்று நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே, ஏனெனில் அவர்கள் தேவையுள்ளவர்களாய் இருக்கின்றனர். இல்லையென்றால் அவர்கள் இவைகளை இங்கு வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் குணமாக்கும் படி வேண்டிக்கொள்கிறேன். என்னை நான் அவைகளுக்கு குறுக்கே வைக்கையில் .... அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து எடுத்ததாக கூறப்பட்டுள்ளது... அவனும் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவியே. அவன் ஜனங்களைக் கடிந்து கொண்ட போதிலும், அவர்கள் அவனை விசுவாசித்தனர். அவன் மேய்ப்பன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவன் உம்மிடத்திலிருந்து அனுப்பப்பட்டவன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், ஏனெனில் அவனுடைய ஊழியத்தின் மூலம் நீர் உம்மை நிரூபித்தீர். தேவனே, இந்த ஜனங்கள் இன்றைக்கு அதே காரியத்தை விசுவாசிக்கின்றனர். அவர் களுக்கு இப்பொழுது நீர் உதவி செய்து அவர்கள் ஒவ்வொரு வரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் சுகமாக்குவீராக. ஆமென். 172உங்களுக்கு பசிக்கின்றதா? நான் இன்னும் அநேக கேள்விகளுக்காக பசியுள்ளவனாயிருக்கிறேன். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். இப்பொழுது, நான் ஒருக்கால்... இந்த கேள்விகளில் சிலவற்றிற்கு, நான் ஒருக்கால் சரியாக பதில் அளித்திருக்க மாட்டேன். ஆனால் என்னால் முடிந்த வரையில் நான் சிறப்பான பதில்கள் அளித்தேன். இன்றிரவு நான் 7.00 மணிக்கு தொடங்க முயற்சி செய்கிறேன். நல்லது, ஆராதனை 6.30 மணிக்கு தொடங்கும். உங்களால் தங்க முடியுமானால்... நீங்கள் தங்க முடியாவிட்டால், உங்கள் நிலைமை எங்களுக்குப் புரிகிறது; அதனால் பரவாயில்லை. இன்றிரவு என்னால் முடிந்த வரையில் இவை ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்க முயற்சி செய்கிறேன். இப்பொழுது, நாம் எழுந்து நின்று, கூட்டத்தை முடிக்க நாம் வழக்கமாக பாடும் இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் என்னும் அந்த பழமையான பாடலைப் பாடுவோம். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரமும் துக்கமும் உள்ள பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும் நீ எங்கு சென்றாலும் அதைக் கொண்டு செல் விலையுயர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம். ஓ, என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் 173இந்த அறிவிப்பைச் செய்ய விரும்புகிறேன். இன்று காலை அன்பின் காணிக்கை எடுத்ததாக பில்லி இப்பொழுது என்னிடம் கூறினான் (பாருங்கள்?), நிறைய அன்பின் காணிக்கை கிடைத்துள்ளதாக அவன் கூறினான். அவன் சென்று கட்டிடத்தின் பின்னால் நிற்கும்படி சொல்லியிருக்கிறேன். ஆயத்தமாக வராதவர்களுக்கு, உங்கள் பகல் உணவுக்கு பணம் இல்லாதவர்களுக்கு, பில்லி பகல் உணவுக்காகவும், நீங்கள் விடுதியில் தங்குவதற்காக செலுத்த வேண்டிய தொகைக்காகவும் பணம் கொடுப்பான். அதை பெற்று செலுத்தி விடுங்கள். நீங்கள்... உங்களால் தங்க முடியும்மானால்... பில்லி உங்களை பின்பாகத்தில் சந்தித்து, உங்கள் பெயரையும் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்பதையும் குறித்துக் கொள்வான். இன்று காலை எடுக்கப்பட்ட அன்பின் காணிக்கையில்லிருந்து நாங்கள் உங்கள் பகல் உணவுக்காகவும், விடுதியில் தங்கினதற்காகவும் பணம் செலுத்தி விடுவோம். நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! இயேசுவின் பாதங்களில் நாம் சந்திக்கும் வரை; *****